ஆதிசங்கரர் 2000 ஆண்டுகளுக்கு முன் “நிரூபித்துக் காட்டிய அத்வைதத்தின் (சூட்சமத்தின்) பேருண்மைகள்”

Adi Sankara Advaitam

ஆதிசங்கரர் 2000 ஆண்டுகளுக்கு முன் “நிரூபித்துக் காட்டிய அத்வைதத்தின் (சூட்சமத்தின்) பேருண்மைகள்”

காசியில் இருக்கும் விநாயகருக்கு நீ யாகங்கள் செய்து வந்தால்தான் நல்லது என்று ஆதிசங்கரரிடம் சொல்கிறார்கள் துவைதவாதிகள்.

ஆதிசங்கரர் நாம் அதைச் செய்ய வேண்டியதில்லை என்றார். இந்த உடலுக்குள் உணர்வின் எண்ணங்கள் உண்டு. அதை எண்ணத்தாலே எடுத்துச் சுவாசிக்கும்போது எண்ணிய சக்திகளைப் பெற முடியும் என்றார்.

1.நம் உயிரின் துடிப்பைக் கூட்டி
2.எண்ணத்தின் வலு கொண்டு
3.மெய் ஞானியின் அருள் உணர்வைச் சுவாசிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டினார்.

அன்றிருக்கக்கூடிய துவைதவாதிகள் அரசர்கள் இவருக்கு எதிர்ப்பு நிலை ஆகின்றனர். ஜைன மதம் ஒரு பக்கம் தாக்குகிறது. இந்து மதம் ஒரு பக்கம் தாக்குகிறது.

இவர் போகும் பக்கமெல்லாம் எதிர்ப்பு. இந்த உண்மையை எடுத்துச் சொல்லும்போது எதிர்ப்பு தான் அதிகமாகிறது.

அந்தத் துவைதவாதிகள் அனைவருமே மனித உடலில் விளைந்த அந்த மந்திரத்தை எடுத்து வேலை செய்கின்றார்கள்.

ஒருவனுக்கு வயிற்று வலி வரவேண்டுமா…! வயிற்று வலியுடன் இறந்தவன் எந்த மந்திரத்தாலே இறந்தானோ அந்த உணர்வின் தன்மையை மந்திரத்தால் எடுத்து அடுத்தவர் உடலில் செருகினால் போதும். அவனுக்கும் வயிற்று வலி வரும்.

வாத நோயால் இறந்தவனுடைய உடலில் இருந்து பிரித்து மற்றொருவனுக்கு அந்த மந்திரத்தைச் செருகினால் அவனுக்கு வாத நோய் வந்துவிடும். “இதுதான் ஏவல்…!”

தெய்வத்திற்கு சக்தி இருக்கிறது என்ற நிலையில் இங்கே சிலைகள் செய்து உருவங்களாக அமைத்து கதைகளாகச் சொல்லி அவர்கள் எடுத்துக் கொண்ட நிலைகளுக்குச் செயல்படுத்தினார்கள்.

(நாம் இன்றும் இன்னென்ன செயல்களுக்கு இன்னென்ன மந்திரத்தை ஜெபித்தால்தான் நல்லது என்று தவறான பாதையில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்)

அன்று அத்வைதத்தின் உண்மையினுடைய நிலைகளை அன்று ஆதிசங்கரர் வெளிப்படுத்தி அதை ஸ்தாபித்துக் காட்டினார்.

ஆனால் அன்றைய துவைதவாதிகள் நீ வேள்விகள் செய்யாவிட்டால் அவஸ்தைப்படுவாய் என்று ஆதிசங்கரரிட்ம் சொன்னார்கள். சொன்னதோடு மட்டுமல்லாது ஏவல் செய்து இவருக்கும் வயிற்றுவலி வர வைத்துவிட்டார்கள்.

வயிற்று வலி வந்தபின் ஆதிசங்கரர் கடும் நிலைகளில் சுவாசித்து அத்வைத நிலைகளில் தன் வயிற்று வலியை நிவர்த்தி செய்தார். நிவர்த்தி செய்து அந்தத் தத்துவத்தைத் தன் நிலையை நிலைநாட்டிக் காட்டுகின்றார்.

வேதியர்கள் அன்று துவைதத்தின் தத்துவத்தை இவரிடத்தில் வாதிட்டு பல எத்தனையோ வேலைகளைச் செய்தார்கள். அதையெல்லாம் மாற்றித் தன் நிலைகளை அங்கே வெளிப்படுத்தினார் ஆதிங்கரர்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் 2000 ஆண்டுகளுக்கு முன் அன்று நடந்த அந்த உணர்வின் அலைகளை எடுத்து எமக்குக் (ஞானகுரு) நேரடியாகவே காட்டினார்.

இப்படி ஆதிசங்கரர் அதைச் செயல்படுத்தும்போது அன்று அரசர்கள் சிலைகளுக்கு முன்னால் யாகங்கள் வளர்ப்பதும் சிலைகளுக்கு அபிஷேகம் செய்வதும் பால் ஊற்றிப் பிற நிலைகள் செய்வதும் தான் உண்மையான பக்தி என்ற நிலைகளில் அவர்கள் வாதிட்டனர்.

ஆனால் ஆதிசங்கரர் சொன்னது நம் உயிர் தான் நெருப்பு. நாம் எண்ணும் எண்ணங்கள் சுவாசமாகி உயிரான ஈசனிடத்தில் (நெருப்பில்) அந்த சுவாசங்கள் பட்டு அது உடலாக உறைகின்றது.

நாம் எந்தெந்தக் குணங்களை எண்ணுகிறோமோ அந்தக் குணமே நம் உயிரில் பட்டு அந்த அபிஷேகங்கள் நடக்கின்றது. அவ்வாறு அபிஷேகம் செய்யும்போது நம் உடலிலுள்ள நல்ல குணங்களுக்குப் போய் சேருகின்றது. நல்ல குணங்களுக்கு மகிழ்ச்சி ஊட்டுகின்றது.

ஆலயங்களின் தத்துவமே அது தான் என்று தெளிவாகக் காட்டினார்.

Leave a Reply