அணுவின் அகத்தை அறிந்தவர் “அகத்தியர்” – ஐந்து புலனறிவு

5-senses

அணுவின் அகத்தை அறிந்தவர் “அகத்தியர்” – ஐந்து புலனறிவு

 

பூமி சுழலும் போது வட துருவத்திற்கு நேராக எது எல்லாம் பிரபஞ்சத்தில் மிதந்து கொண்டிருக்கின்றதோ அந்தச் சத்தையெல்லாம் நமது பூமி கவர்ந்து வட துருவத்தில் உறையச் செய்கிறது என்பதை அகஸ்தியர் கண்டுணர்ந்தார்.

அதே சமயம் வெப்பத்தால் கரைந்து நீராகப் பல வகையில் சென்றாலும் அதிலிருந்த சத்தின் தன்மைகள் ஆவியாகப் படரப் படும் போது நமது பூமிக்குள் மீண்டும் வரும் வெப்ப காந்தங்கள் அதைக் கவர்ந்து அதனதன் நிலைகள் கொண்டு இயக்கச் செய்கிறது.

1.நமது பூமியில் வெளிப்படும் ஒவ்வொன்றையும் இந்தக் காந்தம் கவரும் போது

2.எத்தகைய சத்தோ அதை அந்த அணுவுடன் இயக்கப்படும் போது மணம் அது ஞானமாக மாறுகிறது.

3.அதற்குப் பெயர் சரஸ்வதி என்று வைக்கின்றார் அகஸ்தியர்.

வெப்பம் காந்தம் விஷம் மணம் என்று நான்கு நிலை அடைந்த பின் இவை அனைத்தையும் சேர்த்துக் கூட்டாக வரும் போது ஐந்தாவது “உணர்வு…” ஐந்து நிலைகள் கொண்டு ஐந்து விதமான செயல்களைச் செய்யும்.

1.கண்களால் பார்க்கின்றோம் அதிலிருக்கக் கூடிய  காந்தம் இழுத்து மற்றதை நுகர்ந்து அறியச் செய்கிறது.

2.காதால் கேட்கின்றோம்  அந்த ஒலிக்கு உண்டான உணர்வின் அலைகளை இயக்கச் செய்து அந்த உணர்வைத் தட்டியெழுப்புகிறது.

3.அந்த உணர்ச்சிகளை சுவாசிக்கச் செய்து கண்ணின் நிலைகளை இயக்கி அதைத் திரும்பிப் பார்த்து அந்த உணர்வைக் கவருகிறது.

நாம் எடுத்துக் கொண்ட இந்த உணர்வுகள் அனைத்தும் உடலிலே படும்போது அந்த உணர்வின் தன்மையை அது உணர்த்துகின்றது.

இப்படி நம் புலனறிவுகள் அதாவது

1.மணமாக வரும் போது நுகரச் செய்கின்றது.

2.வாயில் போடும் போது சுவையாகத் தெரிகின்றது.

1.ஒவ்வொரு அணுவிற்குள்ளும் ஐந்து புலனறிவுகள் தான்

2.மனிதனுக்கும் இதே ஐந்து புலனறிவுகள்

3.மிருகங்களுக்கும் இதே ஐந்து புலனறிவுகள்.

4.பாம்பிற்கு மட்டும் நான்கு புலனறிவுகள் அதற்குக் காது இல்லை.

விஷத்தின் தன்மை ஆற்றல் மிக்கதாக அங்கே பாம்பிற்கு இருக்கிறது.

இந்த உண்மையின் நிலைகளை ஒரு அணுவின் ஆற்றல் எப்படிப்பட்டது என்றும் அணுவிற்குள் அணுவின் இயக்கத்தையும்  அன்று அகஸ்திய மாமகரிஷி தெளிவுறத் தெரிந்திருந்தார்.

அகம் என்ற நிலையில் அணுவிற்குள் இருக்கும் உள் நிலைகளை (அகம்) “அகத்தை…” அறிந்து வெளிப்படுத்தியதால் தான் அகத்தியர் என்று காரணப் பெயர் பெற்றார்.

இன்று அணு விஞ்ஞானிகள் என்று சொல்கிறார்கள். ஆனால் முதல் மெய் ஞானியான அந்த அகஸ்தியன் தான் அணுவின் இயக்கத்தை அறிந்தவன்.

அந்த அணுவின் ஆற்றலைத் தனக்குள் வளர்த்து உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக துருவ நட்சத்திரமாக உள்ளான். அவன் உணர்வைக் கவர்ந்தால் நாமும் நம் அகத்தை அறியலாம். அகண்ட அண்டத்தையும் அறியலாம்.

Leave a Reply