மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் விண் சென்ற உணர்வுகள்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் விண் சென்ற உணர்வுகள்

 

 

நமது குருநாதர் அவர் தீமைகளை அகற்றி மெய்யுணர்வைத் தனக்குள் வளர்த்து உயிருடன் ஒன்றி ஒளியாக மாறி இன்றும் விண்ணுலகில் சஞ்சரித்து கொண்டிருக்கின்றார்,

 

இப்பொழுது தற்காலத்தில் (1971) சப்தரிஷி மண்டலத்தில் இணைந்தவர் தான் நமது குருநாதர் “மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர்”.

 

அவர் உடலில் விளைந்த அந்த உணர்வின் எண்ணங்களை உபதேச வாயிலாகப் படிக்கும் பொழுது ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகின்றது.

 

பதிந்த நிலைகளை மீண்டும் எண்ணும்போது நமது குருநாதர் காட்டிய அருளுணர்வு இங்கே படர்ந்திருப்பினும் அவர் நினைவு கொண்டு அங்கே விளைந்த உணர்வை நாம் கண்டுணர முடிகின்றது. நுகர முடிகின்றது.

 

நுகர்ந்த உணர்வுகள் – ஒரு வித்து எவ்வாறு தனக்குள் சுவாசித்து தன் தாய் மரத்தின் சத்தைக் கவர்ந்து அதே மரமாக விளைகின்றதோ இதைப் போல குருநாதர் உடலில் விளைந்த

1.அந்த மெய்ஞானியின் மெய்யுணர்வின் ஆற்றல்

2.நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்று ஒளியின் சரீரமாக இருக்கும் அந்த உணர்வின் ஆற்றல்

3.நமக்குள் அது வளரும் தன்மை பெறுகின்றது.

 

ஒரு வித்து தாய் மரத்தின் சத்தைக் கவருவது போல் மெய் ஞானிகள்  விளைவித்த மெய் ஞான உணர்வுகளை நாம் பெற வேண்டும்

 

இதைப் படித்துப் பதிவாக்கும் அனைவரும் மெய் வழி நடந்து மெய் ஞானம் பெற்று மெய் ஞானிகளாக வளர்ந்து “என்றென்றும் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டும்” என்று எல்லா மகரிஷிகளையும் வேண்டுவோம் பிரார்த்திப்போம்.

 

ஓம் ஈஸ்வரா குருதேவா…!

 

உடலையே காக்க முடியாது உடலை விட்டுப் போகின்றோம் – சேர்த்து வைக்கும் பணமும் பொருளும் யாரைக் காக்கப் போகின்றது…! சேர்க்க வேண்டிய சொத்தைச் சேர்த்தால் “பறக்கும் நிலை பெறலாம்…”

 

 

இந்த வாழ்க்கையில் நாம் எப்படியும் வாழ வேண்டும் என்று வேகத் துடிப்புடன் பல இலட்சங்களையும் கோடிகளையும் இணைத்துப் பொருளாகச் சம்பாரித்து வைக்கின்றோம்.

 

1.இவ்வளவு வைத்திருக்கின்றேன்… ஆண்டவன் என்னை ஏன் சோதிக்கின்றான் என்று தெரியவில்லை…!

2.இந்த வேதனையைத்தான் எடுக்கின்றார்கள்.

3.இதற்கும் அதற்கும் உடலுக்கும் மனதிற்கும் சீரற்ற நிலைகள் ஆகி

4.கடைசியில் மன நிம்மதியற்ற நிலையில் தான் இருக்கின்றார்கள்.

 

பல ஆயிரம் கோடி ரூபாயைச் சம்பாரித்த பின்

1.இன்றைக்குப் பொய் சொல்லி “எப்படிடா தப்பிக்கலாம்…” என்று ஷேர் மார்க்கெட்டிலோ

2.மற்ற தெரியாத வகைகளிலோ கொண்டு போய் அந்தக் கோடிகளைப் போடுகிறார்கள்.

 

இவ்வளவும் இருந்தாலும் “மன நோய்க்கு…” மருந்து வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.

 

சொத்துக்களைக் காக்க வேண்டும் என்று சென்றாலும் இந்த மனதிற்கும் உடலுக்கும் நிம்மதி இல்லை. நிம்மதியற்ற உணர்வே நஞ்சாக மாறுகின்றது.

 

உடலை விட்டுச் சென்றால் இந்தக் கோடிச் சொத்து எங்கே வருகின்றது? வருமா…!

 

நாட்டிற்கு முதல் மந்திரியாக இருக்கலாம். அதிகாரத்தின் நிலைகளில் தட்டிக் கேட்கும் நிலையும் இங்கே இருக்கலாம். ஆனால் இவருக்கு நிம்மதி ஏது?

 

அதைப் போலத்தான் இன்றைய நிலைகள் கொண்டு பெரிய பதவிகளில் இருப்போருக்குப் பேரும் புகழும் இருக்கலாம்.

1.ஆனால் அதன் மறைவிலே நஞ்சு கொண்ட உணர்வின் தன்மைகள்

2.”இணைந்தே” இருக்கின்றது.

3.இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்

 

அந்த நஞ்சற்ற நிலையாக நாம் திகழ வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் சேர்க்கும் தன்மையை நாம் பழக வேண்டும்.

 

ஆகவே அத்தகைய நஞ்சின் தன்மை வரும் நிலையிலிருந்து தப்ப “தனி மனிதன் – எதுவும் செய்ய முடியாது”,

 

அதற்குத்தான் ஆலயங்களிலே விநாயகரை முன்னிறுத்திக் காட்டினார்கள் ஞானிகள்.

 

நம் வாழ்க்கையில் எத்தகைய கஷ்டம் வந்தாலும் அந்த விநாயகரைப் பார்த்தவுடனே மண்ணுலகில் நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்ற அந்த அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

 

அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் எங்கள் உடலிலுள்ள உறுப்புகள் முழுவதும் படர்ந்து அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் எல்லாம் பெறவேண்டும் என்று உயிருடன் ஒன்றச் செய்து உணர்வின் ஆற்றலை உடலுக்குள் உள் செலுத்துதல் வேண்டும்.

 

நாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை உள் செலுத்தும் பொழுது உள் நின்று வரும் குழம்பின் தன்மை இந்தத் தீமைகளைப் பிளக்கச் செய்யும்.

 

கோடிப் பணம் நம்மை ஒரு பொழுதும் காக்காது.

1.நம் உடலையே நம்மால் காக்க முடியவில்லை என்கிற பொழுது

2.சேர்த்து வைத்த செல்வம் நம்மைக் காக்குமா…!

 

அருளைச் சேர்த்தால் ஞானம் வரும். “ஞானத்தால் தான்…” செல்வத்தைக் காக்க முடியும். இந்த வாழ்க்கையில் மகிழ்ந்து வாழவும் முடியும்.

1.உடலுக்குப் பின் இனி பிறவி இல்லை என்று

2.கல்கி – ஒளியின் சரீரமாக

3.பறக்கும் நிலை அடைய முடியும்.

Leave a Reply