மகரிஷிகளின் அலைவரிசையை நாம் திருப்பி வைத்து அதனின் தொடர்வரிசையில் அவர்களின் அருள் ஒளி வட்டத்திலிருந்தே நம்முடைய வாழ்க்கையைச் செயல்படுத்த வேண்டும்

“மகரிஷிகளின் அலைவரிசையை நாம் திருப்பி வைத்து…” அதனின் தொடர்வரிசையில் (FREQUENCY) அவர்களின் அருள் ஒளி வட்டத்திலிருந்தே நம்முடைய வாழ்க்கையைச் செயல்படுத்த வேண்டும்

 

 

1.உலகில் ஆசையின் நிலைகளை இங்கே வைத்து

2.“சாமி செய்யும்… சாமியார் செய்வார்… ஜாதகம் செய்யும்… யந்திரம் செய்யும்…” என்று யாரோ செய்வார்கள்…!” எண்ண எண்ணத்தில்

3.அந்த “ஆசை” என்கிற அந்த ஸ்டேசனை வைத்துக் கொண்டிருந்தால்

4.ஞானிகளின் ஆற்றல்களைப் பெறும் தகுதியை இழந்துவிடுவோம்.

 

டி.வி ரேடியோ இவைகளில் ஒலி பரப்பச் செய்யப்படும் பொழுது எந்த ஸ்டேசனிலிருந்து எதை ஒலி பரப்புச் செய்கின்றார்களோ அதை எடுக்கவேண்டும் என்றால் அந்த ஸ்டேசனை வைத்தால் தான் அதைப் பெற முடியும்.

 

அதைப் போன்று தான் மெய் ஞானிகளின் அலை வரிசை இங்கே இருக்கின்றது. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அந்த ஸ்டேசனை வைத்தால் அந்த உணர்வுகளுடன் தொடர்பு கொள்ள முடியும். அது நமக்குள் வேலை செய்யும்.

 

இல்லை என்றால் நாம் இந்த மண்ணுலகின் பற்றைத்தான் வளர்க்க முடியுமே தவிர விண்ணுலகப் பற்றை எடுக்க முடியாது. எதிலுமே அந்த விண்ணுலகப் பற்றுதல் வந்து கொண்டேயிருக்க வேண்டும்.

 

எந்தக் காரியத்திற்குச் சென்றாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். எங்கள் உடல் முழுவதும் அது படரவேண்டும்.

 

நாங்கள் செல்லும் இடங்களெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி படரவேண்டும். நாங்கள் பார்ப்போரெல்லாம் நலம் பெறவேண்டும் என்று எண்ணிவிட்டுச் செல்ல வேண்டும்.

1.மகரிஷிகளின் அருள் உணர்வுகள் வளர்ந்து கொண்டேயிருக்கும்.

2.நம் வாழ்க்கைக்கு நல்ல வழியையும் அது காட்டும்.

3.இந்த நிலையிலிருக்கும்போது நமக்கு நல்ல வரவேற்பும் (செல்லும் இடங்களில்) இருக்கும்.

4.அங்கே அவர்கள் அறியாமல் தீமைகள் இருந்தாலும் அது மாறும்

 

சாமி (ஞானகுரு) உபதேசித்த உணர்வைப் பெற்றால் அந்த ஆற்றல்களைப் பெறமுடியும் என்ற இந்த நம்பிக்கை நமக்கு வர வேண்டும். நம்மை நாம் நம்பிப் பழக வேண்டும்.

 

ஒவ்வொரு நாளும் குரு உபதேசிக்கும் உணர்வுகளைப் பயன்படுத்தி இந்த வாழ்க்கையில் செயல்பட வேண்டும்.

 

இந்த மண்ணுலகில் வரும் தீமைகளை அகற்றுகின்றோம். அந்த மெய் ஞானிகளுடன் ஒன்றுகின்றோம்.

Leave a Reply