பதினெட்டாம் நாள் போர்

பதினெட்டாம் நாள் போர்

 

 

நம் வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வேதனையான எண்ணங்கள் உணர்ச்சியைத் தூண்டும் பொழுதெல்லாம் அடுத்த நிமிடமே அதை அடக்கிப் பழகுதல் வேண்டும்.

எதை வைத்து…?

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் பெறவேண்டும் என்ற உணர்வினைக் கலந்து கலந்து நம் உணர்வின் அறிவுகளை மாற்றப்படும் பொழுது

1.இந்த உணர்வின் ஒளிச் சுடராகத் தனக்குள் வளர்ச்சி பெற்று எட்டாவது நிலை அடைந்து

2.ஒன்பதாவது உயிருடன் ஒளிச் சரீரமாகச் சேர்கின்றது.

இந்த உடலை விட்டு உயிராத்மா வெளி வரும் பொழுது எந்த உடலும் தன்னைக் கவராத வண்ணம் தீமையை நீக்கி ஒளிச் சுடராகி

1.எட்டாவது எந்த விஷத்தன்மை வந்தாலும் அதனின் ஈர்ப்பின் சக்தியை இழக்கச் செய்து

2.உணர்வை ஒளியாக வளர்க்கச் செய்து விண்ணின் தன்மை எட்டுவது விஜய தசமி.

3.ஆக “ஈரெட்டு பதினாறு – என்றும் பதினாறு”.

உடலுக்குள் விஷத்தின் தன்மை எட்டு. உடலை விட்டு வெளியில் சென்ற பின் எட்டு. மற்ற கோள்களின் சக்திகள் எதையும் தன்னை நாடாவண்ணம் இந்த உணர்வின் தன்மை கொண்டு ஒளியாக மாறி விண் செல்வதே கடைசி நிலை.

அதுதான் பத்தாவது நிலை.

மகாபாரதத்தில் பதினெட்டாம் நாள் போர் என்று காண்பித்திருப்பார்கள்.

நம் உடலுக்குள் நின்று பத்தானாலும் வெளியில் வந்து எட்டுக் கோள்களின் எதிர்ப்பு சக்தியான விஷத்தின் தன்மையை முறியடித்து தன் உணர்வின் தன்மை ஒளியாகச் சேர்த்துக் கொண்டால் என்றும் பதினாறு ஈரெட்டு பதினாறு.

உடலுக்குள் வரும் தீமையை மாய்த்து ஒளியின் உணர்வை வளர்த்து வெளியில் சென்றபின் தீமை தன்னை அணுகாத நிலைகள் கொண்டு அந்த உணர்வின் ஒளியின் சுடராகச் செல்வது பதினெட்டு.

பதினெட்டாம் நாள் போர் என்று மகாபாரதப் போரின் தத்துவத்தில் அந்தப் போரை வென்றவன் தான் விண்ணை அடைகின்றான். பத்து + எட்டு = பதினெட்டு

இந்தப் பூமிக்குள் விளைந்த உணர்வின் ஆற்றல்மிக்க நிலை ஒவ்வொன்றையும் மனிதனான பின் சிருஷ்டிக்கும் தன்மையாக மனித உடலுக்குள் நாம் பெறும் ஆற்றல் மிக்க சக்திகளை அன்று ஞானிகள் உணர்த்தினார்கள்.

 

 

தரையிலிருந்து விண்ணிலிருப்பதை இயக்கும் மனிதனால் தனக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் உயிருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை

 

பல டன் எடை கொண்ட செயற்கைக் கோள்களை விண் வெளி ஆய்வுக் கூடங்களையும் இன்று விண்ணிலே ஏவி வைத்துள்ளார்கள்.

1.இயந்திரத்தில் எட்ட முடியாத தூரமாக இருந்தாலும் லேசர் புலனின் இயக்கம் கொண்டு

2.கதிரியக்கச் சக்திகளாக இருந்தாலும்

3.ரேடார் (RADAR) என்ற ஒலி அலைகளைத் தனக்குள் இயக்கச் செய்து

4.தரையிலிருக்கும் ரேடார் விண்ணிலிருப்பதைத் தனக்குள் அந்த நுண்ணிய அலைகளைக் கவர்ந்து இழுக்கும் நிலைக்கு வைத்துள்ளார்கள்

ஆனால் அதே சமயம் விண்ணில் அனுப்பும் இயந்திரத்திலேயும் ரேடார் என்று நுண்ணிய அலைகள் வைக்கும் பொழுது அந்த ரேடார் தன்னுடைய உணர்வின் ஒலி அலைகளைப் பிரித்தெடுத்து

1.இங்கே மனிதனால் ஒலியாக எழுப்பட்டதை

2.உணர்வின் ஒலிகள் உந்தி

3.அங்கே இயந்திரத்தை இயக்கித் திசை திருப்புகின்றது.

தொலை நோக்கிகளையும் செயற்கைக் கோள்களையும் இங்கிருந்து ஆணையிட்டுச் செயல்படுத்துகின்றார்கள் விஞ்ஞானிகள்.

“இவ்வளவு ஆற்றல் பெற்றவன் தான் மனிதன்”. அந்தச் சிந்தனைக்குரிய நிலைகள் வரும் பொழுதுதான் “மிக நுண்ணிய நிலைகளையும்” அறிகின்றான்.

இவ்வளவு ஆற்றல் பெற்றிருந்தாலும் தன் வாழ்க்கையில் வரும் தீமைகளை வென்று உணர்வை ஒளியாக மாற்றும் திறன் இல்லை என்றால் மறுபடியும் இன்னொரு உடலுக்குள் தான் செல்ல வேண்டும்.

எந்தச் சாமியும் காப்பாற்றாது, எந்தச் சாமியாரும் காப்பாற்ற முடியாது. நாம் எடுக்கும் உணர்வுகளை நமக்குள் “உள் நின்று” இயக்கும் உயிரான ஈசன் அது சமைத்து அணுக்களாக விளையச் செய்துவிடும்.

விளைந்த உணர்வுகளைத் தன்னுடன் இணைந்த உயிராத்மாவாக்கி அடுத்த நிலையை உயிர் உருவாக்கிவிடும். இதிலிருந்து யாரும் தப்ப முடியாது. இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த உடலுக்குப் பின் “நாம் எங்கே செல்ல வேண்டும்…! என்பதை உணர்ந்து சப்தரிஷி மண்டலத்துடன் இணைவதே நம் வாழ்க்கையின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

Leave a Reply