துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து “ஆத்ம சுத்தி” செய்ய வேண்டிய முறை

Souls cleaning

துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து “ஆத்ம சுத்தி” செய்ய வேண்டிய முறை

எப்படிப் பிரபஞ்சத்தில் வரும் சக்திகளைச் சூரியன் தன் அருகிலே வரும் பொழுது பாதரசத்தால் மோதி விஷத்தை பிரிக்கின்றதோ இதே போல மனித உடலில் நாம் உணவாக உட்கொள்ளும் உணவுகளிலே கலந்து வரும் நஞ்சினை உடல் மலமாக மாற்றுகின்றது.

நஞ்சை விலக்கிச் செல்லும் ஆற்றல் மிக்க உணர்வைக் கார்த்திகேயா என்று ஞானிகள் காட்டினார்கள். மனிதனின் ஆறாவது அறிவு தான் கார்த்திகேயா.

நாம் வெறுப்பென்றோ வேதனை என்றோ கோபம் என்ற உணர்வுகளை நுகர்ந்தால் இந்த ஆறாவது அறிவால் “அறிந்து கொள்கிறோம் – கார்த்திகேயா…” என்று நமது சாஸ்திரத்தில் தெளிவாகக் கூறப்படுகிறது.

பூமியில் மனிதனாகத் தோன்றியவன்
1.தன் ஆறாவது அறிவின் துணை கொண்டு
2.நஞ்சென்ற நிலையை நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றி
3.விண் சென்ற முதல் மனிதன் அகஸ்தியன் இன்றும் துருவ நட்சத்திரமாக உள்ளான்.

அந்த ஆற்றலை நாமும் பெற்று விண் செல்ல வேண்டும்.

புருவ மத்தியில் வீற்றிருக்கும் உயிரை “ஈஸ்வரா..” என்று நாம் எண்ண வேண்டும். கண்ணின் நினைவால் அங்கே இணைக்கப்பட்டுத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினைப் பெறவேண்டும் என்று ஈர்க்க வேண்டும். அவ்வாறு
1.புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை ஈர்க்கும்போது
2.நம் உடலுக்குள் தீமைகளை விளையச் செய்யும் விஷத் தன்மையான அணுக்களுக்கு
3.ஆகாரம் செல்லாது தடைபடுகின்றது.
4.(புருவ மத்தியில் – உயிரில் பட்டால் தான் எதுவும் இயக்கமாகும்)

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று அதே கண்ணின் நினைவலைகளை நம் இரத்த நாளங்களில் கலக்கச் செய்ய வேண்டும்.

நம் உடல் முழுவதும் பரவி வரும் இரத்தங்களில் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்க்கப்படும் பொழுது இரத்தங்கள் தூய்மையாகின்றது.

நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் பெறவேண்டும் என்று நினைவினைச் செலுத்தினால் அது வீரியத் தன்மை அடைந்து இதற்கு முன் நாம் நுகர்ந்த விஷத் தன்மைகளை நுகராது தடைப்படுத்திவிடுகின்றது.

அப்பொழுது உடலுக்குள் விஷத்தை உருவாக்கி அதை உணவாக எடுத்து வளரும் தீமையான அணுக்களுக்கு ஆகாரம் இல்லாது தடைபடுத்துகின்றது.

நம் ஆன்மாவில் இருக்கும் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த வெறுப்பு வேதனை சலிப்பு சஞ்சலம் கோபம் குரோதம் போன்ற உணர்வுகள்
1.உடலுக்குள் போகாமல் தடுத்து நிறுத்தப்படுகின்றது
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை இணைக்கப்படும் பொழுது
3.அவைகள் எல்லாம் அனாதையாகின்றது.
4.அடுத்த கணம் அனாதையான தீமையின் உணர்வுகளைச் சூரியன் கவர்ந்து சென்றுவிடுகின்றது.
5.நம் ஆன்மா சுத்தமாகின்றது – இது தான் ஆத்ம சுத்தி என்பது.

ஒவ்வொரு நாளும் சலிப்பு சஞ்சலம் வேதனை வெறுப்பு குரோதம் போன்ற உணர்வுகளைக் கேட்க நேர்ந்தாலோ பார்க்க நேர்ந்தாலோ இவ்வழியில் அவைகளை நீக்கி பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம் உடலில் உள்ள எல்லா அணுக்களும் வீரியம் அடைந்து உடலை விட்டுச் செல்லும் நம் உயிரான்மா எதிலும் சிக்காது துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து விடுகின்றது.
1.தொக்கியுள்ள விஷங்கள் அங்கே கரைக்கப்பட்டுப் பிறவியில்லா நிலை அடைகின்றோம்
2.என்றுமே ஏகாந்த நிலையாக எதிர்ப்பே இல்லாத நிலையில் பேரானந்த நிலையை அடைகின்றோம்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரத்திரமான அதனைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் இதன் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

ஆறாவது அறிவு கொண்டு அவ்வாறு ஏழாவது நிலையைப் பெற்றவர்களைத் தான் சப்தரிஷி மண்டலம் என்பது.

அது தான் மனிதனின் கடைசி முடிவான நிலை.

Leave a Reply