தாய் தந்தையர் முன்னோர்கள் குலதெய்வங்கள் உயிராத்மாக்களை “விண் செலுத்த வேண்டியதன் அவசியம்”

தாய் தந்தையர் முன்னோர்கள் குலதெய்வங்கள் உயிராத்மாக்களை “விண் செலுத்த வேண்டியதன் அவசியம்”

 

 

ஒரு சிலர் குடும்பத்தில் அவர்கள் தாய் தந்தையரின் கடைகிக் காலங்களில் சரியாகக் கவனிக்காது விட்டுவிடுகின்றார்கள். பின்னாடி அவர்களும் வேதனைப்பட்டுக் கொண்டே இருக்கின்றார்கள்.

 

என்ன காரணம்?

 

தாய் தந்தையைப் பற்றி நினைவு கொள்ளாமல் விட்ட நிலைகளில் அவர்கள்

1.”என் வயதான காலத்தில் இப்படிக் கவனிக்காது விட்டு விட்டானே” என்று எண்ணும் பொழுது

2.இந்தத் தாய் தந்தையின் வேதனை உணர்வுகள்

3.அங்கே அவருக்குள் வேலை செய்ய தொடங்கி விடுகிறது.

4.என்னென்ன நிலைகளில் அவஸ்தைப் பட்டார்களோ அதே உணர்வு இங்கே இவர்கள் உடலில் வேலை செய்கின்றது.

 

குருநாதர் காட்டிய அருள் வழியில் ஏற்கெனவே யாம் சொல்லி வந்த முறைப்படி உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து விண் செலுத்தினால் இத்தகைய துன்பங்கள் வராது மாற்றலாம்.

 

நோயான பின் டாக்டரிடம் போய்ப் பணம் செலவு செய்கின்றார்கள். அந்த பூஜை; இந்த பூஜை; லெட்சுமி நாராயணன் பூஜை என்று அதைச் செய்தால் தான் சரியாகும் என்று செய்கிறார்கள்.

 

அம்மா அப்பா உடலை விட்டுப் பிரிந்தால் அந்த உயிராத்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று இதைச் செய்ய மாட்டேன் என்கிறார்கள்.

 

நாங்கள் எங்கள் அம்மா அப்பாவிற்கு வருடத்திற்கு ஒரு முறை எல்லாம் செய்கின்றோம். அவர்கள் சாப்பிடுகிற ஆகாரம் எல்லாம் வைத்து அவர்கள் ஞாபகார்த்தமாகப் படைக்கின்றோம் என்ற இந்த நிலையில் தான் இருக்கின்றார்கள்.

 

சாதாரண வாழ்க்கையில் இதைச் செய்கின்றார்களே தவிர ஞானிகள் சொன்ன வழியில் செய்யவில்லை.

 

அவர்களுடைய ஞாபகார்த்தம் என்ன?

1.தாய் தந்தையர் அவர்கள் துன்பப்பட்டதையும் நோய்வாய்ப்பட்டதையும்

2.மீண்டும் மீண்டும் எண்ணி அதை நுகரும் பொழுது

3.அந்தத் துன்பங்கள் இங்கேயும் நோயாக மாறுகின்றது.

 

எங்கள் தாய் தந்தையர் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். எங்களை வளர்ப்பதற்காகப் பட்ட தீயவினைகளிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும்.

 

எங்கள் தாய் தந்தையரின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிராத்மாகள் ஒளி நிலை பெற வேண்டும் என்று எண்ணப்படும் பொழுது அவர்கள் துன்பப்பட்டது வெறுப்படைந்தது எல்லாம் குறையும்.

 

நமக்குள் துன்பமாகவோ நோயாகவோ அது மாறாது.

 

இந்த முறைப்படி செய்யுங்கள் என்று சொல்கிறோம். இது எல்லாம் வியாசகர் கொடுத்த தத்துவத்தில் இருக்கின்றது. அதை யாருமே எடுத்துக் கொள்வதில்லை.

 

தனக்குள் படித்ததை மட்டுமே எடுத்துக் கொள்கின்றார்களே தவிர அவர்கள் உள் உணர்வுகளைப் பற்றிச் சொன்னால் யாரும் கேட்டுக் கொள்வதில்லை.

 

தாய் தந்தையத் துன்பப்பட்டதை நினைக்கிறவர்கள் ஞானிகள் சொன்ன முறைப்படி நினைப்பதற்கு என்ன?

1.காற்றிலே மகரிஷிகளின் உணர்வுகள் பரவியுள்ளது.

2.அதை எடுத்து அந்த மகரிஷிகளின் உணர்வால் விண் செலுத்த முடியும்.

 

நாம் இந்த உடலில் எத்தனை வருடங்கள் இருக்கப் போகின்றோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

எந்த மகான் எத்தனை சக்தி பெற்றிருந்தாலும் எவ்வளவு பெரிய அரசனாக இருந்து நாட்டையே ஆட்சி புரிந்தாலும் உலகையே அவர்கள் கீழ் கொண்டு வந்தாலும் கடைசியில் அவருடைய உடல்கள் என்ன ஆனது?

 

அவர்கள் எடுத்துக் கொண்ட வேகத்தின் நிலையில் அதிகமான எண்ண உணர்வுகள் அவர்கள் சீக்கிரமாக உயிரை இழக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.  அந்த அரசர்களும் இருந்ததில்லை. மகான்களும் இருந்ததில்லை.

 

மகான்கள் என்ன செய்கிறார்கள்? உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிக் கொண்டு விண்ணுலகம் போகின்றார்கள்.

 

1.நாம் இந்தப் புவி ஈர்ப்பின் பற்றோடு வாழ்ந்து

2.உடலுடன் சேர்த்துக் கொண்ட உணர்வுகளை வைத்து

3.மீண்டும் இந்த மனிதக் கூட்டுக்குள்ளே தான் வருகின்றோம்.

நாம் இதிலிருந்து மீண்டிடல் வேண்டும்.

 

நம் உணர்வுகளை எல்லாம் ஒளியாக்கி

1.மூதாதையர்களின் உயிராத்மாக்களை விண் செலுத்தி விட்டு

2.நாமும் அதன் தொடர் கொண்டு அவர்கள் சென்ற பாதையில்

3.விண் செல்லும் நிலையை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.

Leave a Reply