“உன்னைத் தொலைத்துவிடுகிறேன் பார்…!” என்று பழி தீர்க்கும் உணர்வை எடுத்தால் அதனின் முடிவு என்ன ஆகும்…?

“உன்னைத் தொலைத்துவிடுகிறேன் பார்…!” என்று பழி தீர்க்கும் உணர்வை எடுத்தால் அதனின் முடிவு என்ன ஆகும்…?

 

 

காளி மற்ற கொடூரமான தெய்வங்கள வணங்கி வருபவர்களைப் பாருங்கள்.

1.கோபம் பயங்கரமாக வரும்.

2..எதை எடுத்தாலும் அவர்கள் சொல்லக்கூடிய… பேசக்கூடிய பேச்சு… என்ன செய்யும்?

3.அவர்கள் சொல் மற்றவர்களை மடங்கச் செய்யும்.

4..அப்பொழுது இவர்கள் ஜெயித்த மாதிரிப் போவார்கள்.

5..உன்னைத் “தொலைத்துக் கட்டிவிடுகிறேன் பார்…” என்பார்கள்

 

அவர்களிடம் யாராவது பேச முடியுமா என்றால் முடியாது. எல்லோரும் ஒதுங்கிக் கொண்டே போவார்கள். இந்த உணர்வுகள் கடைசியில் என்ன செய்யும் என்று அவர்களுக்கே தெரியாது.

 

“உன்னைத் தொலைத்துக் கட்டுகிறேன்” என்று எண்ணும் பொழுது அந்தத் தொலைத்துக் கட்டும் உணர்வுகள் நல்ல குணத்தைத் தொலைத்துக் கட்டி அந்தக் காளியின் ரூபமாகக் கொதிப்படைந்து இரத்தக் கொதிப்பாக மாற்றி “என்னால் முடியவில்லையே தலை சுற்றுகிறதே…” என்ற நிலை தான் வருகிறது.

 

உடலுக்குப் பின் புலியின் ரூபம் தான் பெற முடியும். மற்றவர்களைத் தொலைத்துக் கட்டலாம். அடக்கி ஆளலாம். ஆனால் நம் உயிர் நமக்குள் அந்த அசுர சக்தியாகப் படைத்துவிடும். இதிலிருந்து யாரும் தப்ப முடியாது.

 

கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய் என்ற நிலையைத் தெளிவாகக் காட்டப்படுகின்றது.

 

நாம் எதுவாக ஆக வேண்டும்? எத்தனையோ கோடிச் சரீரங்கள் எடுத்து இன்று மனிதனாக இன்று வந்திருக்கின்றோம். இதையெல்லாம் எங்கே கொண்டு போய் மாற்றும்?

 

சற்று சிந்தித்துப் பாருங்கள்.

 

நாம் நுகர்ந்த உணர்வுகள் எவ்வாறு இயக்குகிறது என்றும் நம் உயிரின் வேலை என்ன என்றும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

அறியாமல் வரும் தீமைகளிலிருந்து விடுபட நம் நினைவாற்றலைத் துருவ நட்சத்திரத்துடன் நேரடியாக இணைக்க வேண்டும். அதிலிருந்து வரும் ஆற்றல் மிக்க சக்திகளை நாம் நுகர வேண்டும்.

 

குடும்பத்தில் கணவனும் மனைவியும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானித்து அந்த உணர்வுகளை ஒருவருக்கொருவர் பாய்ச்ச வேண்டும்.

 

கணவன் மனைவி இரண்டு உணர்வும் இவ்வாறு ஒன்றாகின்றது. உயிரின் உணர்வில் ஒளி பெறவேண்டும் என்று எண்ணும்பொழுது “ஒளியாகின்றது”. அதாவது

1.இரண்டு உடல்களிலிருந்து கருவாக்குகின்றது.

2.இரண்டு உயிரும் ஒன்றாகின்றது.

3.ஒன்றான பின் ஒளியாக மாறும் திறன் பெறுகிறது.

 

இப்படிச் சென்றவர்கள் தான் மகரிஷிகள். ரிஷி – ரிஷி பத்தினி என்று காட்டியிருப்பார்கள்.

 

 

Leave a Reply