கர்ப்பமான தாய் கடைப்பிடிக்க வேண்டிய தியானம்

Bal Krishna

“கர்ப்பமான தாய் கடைப்பிடிக்க வேண்டிய தியானம்”

கருவுற்ற தாய் சண்டை போடுபவர்களையோ நோயாளிகளையோ ஆஸ்துமா நோய் உள்ளவர்களையோ பார்த்தால் அடுத்த நிமிடம் அவர்களைப் பார்க்காத நிலைகள் கொண்டு கீழ்க்கண்டவாறு ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

1.“ஓம் ஈஸ்வரா”… என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.என் கருவில் இருக்கக் கூடிய குழந்தையும் அதைப் பெற வேண்டும் என்று வலு ஊட்டிக் கொள்ள வேண்டும்.

அடுத்து நாம் யாரைப் பார்த்தோமோ
1.அவர் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும்
2.அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று மாற்றிட வேண்டும்.
3.இவ்வாறு கர்ப்ப காலங்களில் தொடர்ந்து இருக்க வேண்டும்.

கருவுற்றிருக்கிறோம் என்று தெரிந்தபின் ஒன்றிலிருந்து 90 நாள் TVயோ சண்டை போடுபவர்களையோ உற்றுப் பார்க்கக் கூடாது.
1.ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் ஆஸ்துமா நோயாளிகளைப் பார்த்தால் அதை நுகர்ந்தால் கருவிலே வளரும் குழந்தைக்கு அந்த ஆஸ்துமா நோய் வந்துவிடும்.
2.அதே போல் கண் ஊனமுற்றவர்களைப் பார்த்து அடப் பாவமே… இப்படி ஆக விட்டதே…! என்று நினைத்தால் போதும். கருவிலே இருக்கும் குழந்தைக்கு கண் ஊனம் ஆகும்.
3.கால் ஊனமுற்றவர்களை கருவுற்ற 90 நாட்களில் பார்த்தால் கருவிலிருக்கும் குழந்தைக்குக் கால் ஊனமாகும்.

தியானம் செய்யக்கூடிய அன்பர் தன் மகளுக்குத் திருமணம் முடித்தார். பெண்ணிற்குத் தாயார் இல்லை. திருமணம் முடிந்த பிறகு தந்தை பற்றிய கவலை பெண்ணிற்கு வந்துவிட்டது.

கட்டிக் கொடுத்த வீட்டில் உள்ளவர்கள் “உன் அப்பா என்ன… அடிக்கடி  இங்கே வருகிறார்…!” என்று கேட்டதனால் சங்கடமாகிவிட்டது.

கருவுற்றதால் இந்த மாதிரி உணர்வுகள் எடுக்கக்கூடாது. மிகவும்  ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று நான் (ஞானகுரு) ஏற்கனவே சொல்லியிருந்தேன்.

ஆனால் அந்தப் பெண் சங்கடப்பட்டு வேதனையான உணர்வுகளை எடுத்ததால் கருவில் இருக்கும் குழந்தைக்கு என்ன ஆகிவிட்டது. கை கால் கம்மியாகி விட்டது.

ஸ்கேன் எடுத்துப் பார்த்த போது “கை கால் இல்லாமல் இருக்கிறது…, பிறந்தபின் என்ன செய்வது…?” என்று அப்புறம் (Abortion) அபார்ஷன்  செய்து விட்டார்கள்.

கர்ப்பமான காலத்தில் இந்த மாதிரி எல்லாம் சங்கடப்படக் கூடாது. எப்படி இருக்க வேண்டும்…? என்றெல்லாம் நான் சொல்லி இருந்தேன்.

தன்னை அறியாமலே வேதனைப் பட்டு… வேதனைப் பட்டு… வேதனைப் பட்டு…, அந்தக் கருவின் வளர்ச்சி அவ்வாறு ஆகிவிட்டது.

கர்ப்ப காலத்தில் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெற வேண்டும் என்று அடிக்கடி எடுத்துப் பழக வேண்டும்.

“எந்தக் காரணத்தைக் கொண்டும்…” சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ வெறுப்போ வேதனையோ படாத நிலைகள் இருக்க வேண்டும்.

1.அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெற வேண்டும்
2.கருவில் விளையும் குழந்தைக்கு அந்த நிலை பெற வேண்டும்
3.அகஸ்தியன் பெற்ற சக்திகள் அனைத்தும் இந்தக் கருவிலே வளரும் குழந்தை பெற வேண்டும்
4.அகஸ்தியன் துருவனான அந்த அரும் பெரும் சக்தியைக் குழந்தை பெற வேண்டும்
5.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்
6.இன்றைய விஞ்ஞான உலகில் பேரழிவிலிருந்து மீட்கும் அந்தச் சக்தி என் குழந்தை பெற வேண்டும் என்று இப்படித்தான் எண்ணுதல் வேண்டும்.

இந்த மாதிரி ஒன்றிலிருந்து தொண்ணூறு நாள் எண்ணினால் பிறக்கும் குழந்தை ஞானியாகத் தோன்றும். அதனின் பார்வையில் குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் ஏற்படும்.

அந்தக் குழந்தையின் மூலமாக நாம் மகரிஷிகளின் அருள் சக்தியை எளிதில் பெற முடியும்.

ஆகவே கருவுற்ற தாய் அந்தப் பத்து மாதமும் ஞானத்தின் வழித் தொடரிலேயே இருத்தல் வேண்டும்.

Leave a Reply