“வேதனை…வேதனை…வேதனை… என் வாழ்க்கையே வேதனை…” என்று எண்ணினால் பல விதமான பாம்புகளாகத்தான் அடுத்து உடல் பெறுவோம் – மீளும் மார்க்கம் என்ன?

Spiritual Third eye

“வேதனை…வேதனை…வேதனை… என் வாழ்க்கையே வேதனை…” என்று எண்ணினால் பல விதமான பாம்புகளாகத்தான் அடுத்து உடல் பெறுவோம் – மீளும் மார்க்கம் என்ன?

 

 

உயிரணு தோன்றி எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து மனிதனாக நாம் வந்த பின் விஷத்தை மலமாக மாற்றி நல்ல உணர்வுகளைக் கொண்டு வந்தது இந்த உடல்.

 

அவ்வாறு நல்ல உடலாக நாம் பெற்று வந்தாலும் இன்றைய வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் நாம் நுகரும் உணர்வுகள் நம்மை வேதனைப்படச் செய்கின்றது.

 

ஆனால் வேதனை என்ற உணர்வுகளைச் சுவாசித்துச் சுவாசித்து எல்லா அணுக்களிலும் இந்த விஷத்தைச் சேர்த்துச் சேர்த்து வளர்த்து விட்டால் என்ன சொல்வோம்?

 

எம்மா…! என்னாலே முடியவில்லையே… அவன் அப்படிச் செய்கின்றான்… இவன் இப்படிச் செய்கின்றான்… என்று கடும் வேதனையாக நாம் பேசத் தொடங்குவோம்.

 

அப்பொழுது நம் நண்பரிடம் சொல்லி உதவி கேட்கலாம் என்று செல்கிறோம். அவரிடம் கடுமையான நிலைகளில் வேதனைப்பட்டதைப் பற்றி விவரித்துச் சொல்லும் பொழுது அவரும் உற்றுக் கேட்கின்றார்.

 

அப்பொழுது அவருக்குள் அந்த வேதனை உணர்ச்சிகள் அதிகமான பின் அவருக்கு மயக்கமாகி விடுகின்றது.

 

நாம் எந்த எதிர்பார்ப்பில் இருப்போம்? வேதனையைச் சொல்லி அவர்களிடம் ஏதாவது காசு வாங்கலாம் என்று எண்ணிக் கஷ்டத்தை அதிகமாகச் சொல்வோம்.

 

இந்தக் கஷ்டமான உணர்வுகள் அவர்களுக்குள் பாய்ந்து அவர்களுக்கு வருமானம் வருவதையும் தடுக்கும். கடைசியில் அவர்களையும் (மயக்கம்) நோயாக்குகின்றது.

 

அப்பொழுது அந்த நேரத்தில் கேட்டால் “பணம் இல்லை…” என்பார்..

 

நாம் என்ன நினைப்போம்…! இந்த நண்பர் எனக்கு உதவி செய்கிறேன் என்று நேற்று சொன்னார். இன்று இப்படி இல்லை என்கிறாரே…! என்போம். ஆனால்

1.நம்முடைய உணர்வு தான்

2.அவரை இப்படிச் சொல்ல வைக்கின்றது என்று

3.நமக்குத் தெரிவதில்லை.

 

நமக்கு அவர் எந்த உதவியும் செய்யவில்லை என்று மீண்டும் இந்த உணர்வின் தன்மை வேதனையாகி நம் உடலுக்குள் வரப்படும் போது  விஷங்கள் அதிகமாக வளர்ந்து விடுகின்றது.

 

அப்பொழுது நம் உடலுக்குள் என்ன நடக்கின்றது?

 

எல்லா அணுக்களுக்குள்ளும் வேதனை படர்கின்றது. விஷத்தின் தன்மை நல்ல அணுக்களைக் கொன்று சாப்பிட ஆர்ம்பிக்கின்றது.

 

ஒரு விஷம் கொண்ட பாம்பு தன் விஷத்தைப் பாய்ச்சித்தான் மற்ற உயிரினங்களை விழுங்கித் தன் உடலாக மாற்றுகின்றது.

 

அதைப் போல வேதனப்படும் இந்த விஷமான அணுக்கள் மனித உடலை உருவாக்கிய நல்ல அணுக்களைக் கொன்று சாப்பிடுகிறது.

 

நம் உடல் அப்படியே நலிந்து போய்விடும். ஐய்யய்யோ…, அம்மம்மா என்று சொல்லத் தொடங்குவோம்.

 

கேன்சர் நோயுடன் இருப்பவர்கள் எல்லாம் எப்படி இருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? நாளுக்கு நாள் நாளுக்கு நாள் வேதனையைத் தான் சேர்க்கின்றார்கள்.

 

சரவாங்கி நோயோ மற்ற நோய்களோ வரப்படும் போது மூட்டுக்கு மூட்டு வலிக்கின்றது. வேதனை வெறுப்பு கோபம் இதெல்லாம் சேர்த்தவுடனே நம் உடலில் உள்ள நல்ல அணுக்களை அது கொன்று சாப்பிடுகிறது.

 

1.விஷத்தைப் பாய்ச்சி தனக்கு இரையாக்கிவிடும்.

2.அதனுடைய மலம் நம் உறுப்புகளைத் தின்றுவிடும்.

3.அதனுடைய மலம் உறுப்புகளைத் தின்றால் உடல் உறுப்புகள் குறையத் தொடங்குகிறது.

4.கடைசியில் மனிதன் வாழ்க்கையைக் குறைக்கச் செய்துவிடுகின்றது.

 

இந்த உடலை விட்டுப் போன பிற்பாடு எங்கே போகிறது? பாம்பின் உடலுக்குள் சென்று பாம்பின் உடலைத்தான் பெறுகின்றது.

 

கேன்சர் நோய் உள்ளவர்கள் இறந்தார்கள் என்றால் அடுத்துப் பாம்பின் நிலைக்கே போகிறார்கள்.

 

வேதனை வெறுப்பு கோபம் என்று வரப்படும் போது கட்டுவீரியன் பாம்பாகத்தான் போகவேண்டும். விஷத்தின் தன்மை அளவு கோல் எப்படி இருக்கின்றதோ அதற்குத்தக்க கண்ணாடிவீரியன் பாம்பாகப் போகிறார்கள்.

 

உடல் பெற்ற நிலைகளில்

1.எந்தெந்த உயிரினங்கள் ஊர்ந்து செல்கிறதோ

2.அது போல கை கால் எல்லாம் இழந்து

3அத்தகைய உயிரினங்களின் உடலாக ஆக்கிவிடும் நம் உயிர்.

4.இதுவும் உடல் சிவம் தான்.

 

ஆனால் இருளுக்குள் வேதனை என்ற உணர்வு வரும் போது சிந்திக்கும் தன்மை இழந்து அதற்குத்தக்க உடலை இந்த உயிர் தான் உருவாக்குகின்றது.

 

காரணம் “சந்தர்ப்பம்… தான்”.

 

வேதனைப்படுவோர்களுக்கு எல்லாம் அடிக்கடி ஏதாவது வரும். வந்தது என்றால் அது சந்தர்ப்பம் தான்.

 

ஐயோ… “நல்ல மனிதன்… இப்படி இருக்கின்றானே…!” என்று நீங்கள் எண்ணுவீர்கள்.

 

இந்தச் சந்தர்ப்பம் நம் உடலில் வேதனை அதிகமாகச் சேர்த்தவுடனே என்ன செய்கிறது? வேதனை என்ற விஷம் உள்ளுக்குள் போய் நல்ல குணங்கள் அனைத்தையும் சாப்பிட்டு விழுங்குகின்றது.

 

நான் எல்லாருக்கும் உதவி செய்தேனே… பண்பாக இருந்தேனே… பரிவாக இருந்தேனே… என்று நாம் சொல்லலாம்.

 

யானை தேய்ந்து கட்டெறும்பாகப் போன மாதிரி “அம்மா… தாங்க முடியவில்லையே… என்றைக்குத் தான் இந்த உடலை விட்டுப் போகப் போகிறேனோ?” இது… வந்துவிடும்.

 

நான் இத்தனை பேருக்கு உதவி செய்தேனே…! என்று எண்ணுவோம்

 

ஆனால் கடைசியில அதைக் கூட மறந்துவிட்டு “எப்படா… (உடலை விட்டு) என்னை வெளியில் கொண்டு போகப் போகிறாய்?” என்று சொல்லிப் புலம்புவோம்.

 

இந்த உணர்வுதான் தோன்றும். வெளியில் போனவுடன் என்ன செய்யும்?

 

அதற்குத்தக்க பாம்பின் ஈர்ப்புக்குள் போய் அதனின் கருமுட்டையாக அமைந்து அமைதியாகி பாம்பாகப் பிறக்கும். பாம்பாகப் பிறந்த பிற்பாடு விஷத்தைப் பாய்ச்சி சந்தோஷமாக இருக்கும் நிலை வருகிறது.

 

பாம்பு தன் உணவுக்காக ஒரு சுண்டெலியையோ அல்லது பெரிய எலியையோ பார்க்கிறது. விஷத்தால் தீண்டியவுடன் எலி இறந்து போகின்றது.

 

தன் விஷத்தைப் பாய்ச்சிக் கொன்ற பிற்பாடு வாயைத் திறந்து அந்த எலியை விழுங்குகிறது. உள்ளுக்குள் செல்லும் நிலையில் உடல் உப்புசமாகி பாம்பு நரக வேதனைப்படுகின்றது.

 

1.முதலில் (மனித உடலில்) அதிகமான வேதனைப்பட்டது.

2.அடுத்தாற் போல பாம்பாகப் பிறந்து

3.விஷத்தைப் பாய்ச்சிச் சந்தோஷமாக இருக்கின்றது.

4.பாம்பான பின் தன் இரையை விழுங்கும் போது இத்தனை நரக வேதனைப்படுகிறது.

 

உடலுக்குள் கொண்டு போய்ச் சேர்ப்பதற்குள் அது படும் பாடு பார்த்தால் அது எத்தனை நரக வேதனைப்படுகிறது?

 

பாம்பு தன் இரையை முழுங்கிய நிலையில் இருக்கும் பொழுது அதை நீங்கள் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். அது எத்தனை அவஸ்தைப்படுகிறது என்று.

 

கேன்சர் நோய் உள்ளவர்கள் சாப்பிடும் போது எத்தனை வேதனைப்படுகிறார்கள்? அதே மாதிரி

1.பாம்பின் உடல் பெற்ற பிற்பாடும்

2.அதே வேதனை தான் வருகின்றது.

3.இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

 

நாம் என்னமோ… “கடவுள் எங்கேயோ இருந்து இயக்குகின்றார்…! அவர் தான் எல்லாவற்றிற்கும் காரணம்…!” என்று எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.

 

ஆனால் ஞானிகள் சொன்னது.

 

1.உள் நின்று இயக்கும் நம் உயிர் தான் கடவுள்.

2.நம் சந்தர்ப்பம் நாம் எதை நுகர்கின்றோமோ

3.அதனின் இயக்கமாக சுவாசித்ததை நம் உயிர் இயக்கி

4.எண்ணம் சொல் செயல் என்று செயல்படுத்துகின்றது.

 

நாம் நுகரும் உணர்வுகள் தான் அனைத்திற்கும் காரணம்.

 

அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நுகரும் பக்குவ நிலை நாம் பெற்றுவிட்டால் இந்த உடலுக்குப் பின் இனி ஒரு பிறவி இல்லை என்ற நிலையில் அழியாத உடலாக ஒளியின் சரீரம் பெறலாம்.

 

1.நஞ்சை வெல்லலாம்.

2.நஞ்சை ஒளியாக மாற்றலாம்.

3.என்றுமே அகண்ட அண்டத்தில் நிலைத்திருக்கலாம்.

 

ஆகவே மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் அடைய வேண்டிய எல்லை சப்தரிஷி மண்டலம் தான்.

Leave a Reply