மலரில் உருவாகும் மதுரத்தைப் போல மகிழ்ச்சியும் பேரானந்தமும் கொண்ட மதுரத்தைப் பெறுங்கள்

Honey bee flower

மலரில் உருவாகும் மதுரத்தைப் போல… “மகிழ்ச்சியும் பேரானந்தமும் கொண்ட மதுரத்தைப் பெறுங்கள்”

 

செடியிலோ மரத்திலோ மலர் மலர்ந்து விட்டால் மீண்டும் மீண்டும் மலர்ந்து அதிலிருந்து அதனின் மணம் கமழ்கிறது.

 

மலராக உருவான பின்

1.அதில் மதுவான இனிமை கொண்ட மதுரத்தைத் தனக்குள் நுகர்ந்து

2.அந்தத் தேனினை இணைத்து அதற்குள் கருவுற்று

3.கருவுற்ற நிலைகள் கொண்டு தன் வித்தாக உருவாக்குகின்றது.

 

அதைப் போல நாம் எடுத்துக் கொண்ட மகரிஷிகளின் உணர்வின் தன்மை மலரின் மணம் போன்று அருள் மணமாகக் கமழ்கின்றது.

 

1.மகரிஷிகளின் மணத்தை நுகர்ந்தால் அது மதுரமாகி

2.மகிழ்ச்சியான அலைகளாக நம் ஆன்மாவாக மாறி

3.அந்த உணர்வின் தன்மையை நாம் சுவாசிக்கும்பொழுது

4.நமக்குள் வளர்ந்து அருள் ஞான ஒளியின் வித்தாக

5.முழுமை பெறும் தன்மையினை நாம் நிச்சயம் அடைய முடியும்.

 

ஆகவே என்னமோ ஏதோ என்ற நிலையில் யாம் உபதேசிக்கும் அருள் உணர்வுகளை அலட்சியப்படுத்தாது மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளை நீங்கள் பெற வேண்டும். குருவின் அருளால் நீங்கள் தெளிந்திடும் நிலை வேண்டும்.

 

அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நீங்கள் பெற்று உங்களுக்குள் தெளிந்த மணம் பெற வேண்டும் என்று விரும்புகின்றேன். உங்களை நான் பார்க்கும் பொழுது எனது குருவின் அருளை உங்களிடம் பார்க்க விரும்புகின்றேன்.

 

உங்களை அறியாது வந்த இருள்களை நீங்கள் போக்கும் நிலை பெறவேண்டும். அப்பொழுது மகிழ்ந்திடும் பேரானந்த நிலையான அந்த மதுரம் உங்களுக்குள் வரும்.

 

அந்த உணர்வின் தன்மையை நான் நுகரும் போது எனக்குள்ளும் மதுரமாகின்றது. உயிரான ஒளியுடன் ஒன்றி என்றும் நிலையாக நிலைக்கும் நிலைகளை நாம் அனைவரும் பெறுகின்றோம்.

 

சூரியன் எவ்வாறு இந்தப் பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டு தனக்குள் கலந்து வரும் நஞ்சினைப் பிரித்து விட்டு உணர்வின் ஒளியாக மாறுகின்றதோ இதே போல

1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பேரொளியாக மாற்றினார்.

2.அவர் வழியில் நான் பெற முடிகின்றது.

3.அதன் வழி நீங்கள் அனைவரும் பெறமுடியும்.

4.இதில் கடினம் எதுவும் இல்லை.

 

அனைவரும்  இந்த முறைப்படுத்தி வாருங்கள். பிறர் தீமையான நிலைகளில் செயல்பட்டாலும் அதை நீங்கள் கேட்டறிந்தாலும் அடுத்த கணம் ஒரு 50 முறையாவது மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

 

இந்த உணர்வின் தன்மை கொண்டு உங்களை அறியாது வரும் அவர்களுக்குள் (பிறரின் இருளான உணர்வுகள்) பட்ட இருள் உங்களை மறைத்திடாது தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் உணர்வை ஒளியாக மாற்றுங்கள்.

 

அந்த வலுவின் துணை கொண்டு

1.மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவீர்கள்.

2.உங்கள் பிணிகள் அகலும். உடல் நலம் பெறுவீர்கள்.

3.மகரிஷிகளின் அருள் ஒளியால் உங்கள் நோய்கள் நீங்கும்.

4.உங்கள் குடும்பம் நலமாக இருக்கும்.

5.உங்கள் தொழில்கள் வளரும்.

6.உங்கள் குடும்பங்களில் அனைவரும் ஒன்று சேர்ந்து இருப்பீர்கள் என்று

7.உங்கள் வாக்கை மற்றவர்களுக்குள் அருள் ஞான வித்தாகப் பதிவு செய்யுங்கள்.

 

இதன் வழி கொண்டு மெய் வழியில் தொடர்ந்து நீங்கள் செய்து வாருங்கள்.

 

1.தீமைகள் அகன்று தீமைகளை அகற்றும் உணர்வுகள் அனைவரது உடல்களிலும் விளைந்து

2.அந்த உணர்வலைகள் வெளி வரும்போது

3.சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு

4.இந்தப் பரமான பூமியில் பரமாத்மாவாகப் பரவச் செய்யும்.

5.இந்த அருள் உணர்வுகள் பரவப்படும் போது கடவுளாக – இந்தப் பரமாத்மாவுக்குள்

6.தீமையை அகற்றும் அலையின் தொடராக

7.யார் எண்ணி ஏங்கினாலும் அடுத்த கணம் அவர்கள் தீமைகளை அகற்றும்.

8.அந்தக் கடவுளாக மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் சிருஷ்டிக்கும் தன்மை வரும்.

 

ஆனால் இன்றைய மனித வாழ்க்கையில் நாம் எதை இந்தப் பரமாத்மாவில் கலந்து கொண்டிருக்கின்றோம்?

 

பஸ்சில் போனால் பயம்; வீட்டில் இருந்தால் பயம்; அதிகமான காசு கொண்டு போனால் பயம்; ஏதாவது வாய் திறந்து பேசினால் பயம் என்ற நிலையில் அஞ்சியே வாழ்ந்து கொண்டிருக்கும் உணர்வுகளை ஒவ்வொருவரும் வெளிப்படுத்துகின்றோம்.

 

இந்த உணர்வலைகள் படரப் படர அலைகளாக மலர மலர மகரிஷிகளின் அருள் ஒளியை அந்த மெய் ஒளியை இங்கே நாம் பெற முடியாது இருள் சூழும் நிலையே வருகின்றது.

 

அந்த இருளான உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்திகள் கவர்ந்து பரவச் செய்யும்போது அச்சுறுத்தும் உணர்வின் தன்மை கொண்ட கடவுளாக – அதைத்தான் பரமாத்மாவாக மாற்றுகின்றோம்.

 

அத்தகைய உணர்வுகளை நாம் நுகர்ந்தால் நமக்குள் வந்து அஞ்சி வாழும் நிலைகளைத்தான் நம்மை இயக்கச் செய்யும்.

 

இதைப் போன்ற நிலைகளை அகற்றுங்கள். உயர்ந்த நிலைகள் பெற அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நுகரப் பழகிக் கொள்ளுங்கள்.

 

உலக மக்கள் அனைவரும் பூரண நிலா போல ஒளியின் சுடராக மாறித் தெளிந்த நிலைகள் கொண்டு மனிதன் என்ற முழுமை அடையுங்கள்.

 

இந்த உடலை விட்டு அகன்றால்

1.என்றுமே நிலைத்திருக்கச் செய்யும்

2.அழியாத ஒளியின் சரீரங்கள் நாம் அனைவரும் பெற வேண்டும் பெறுவோம் என்று

3.ஏகோபித்த நிலைகளில் நாம் வாழ்வோம் வளர்வோம்.

Leave a Reply