“தப்பிக்கலாம்…” என்று நினைத்துத் தற்கொலை செய்து கொண்டாலும் அந்த இம்சைப்பட்ட உணர்வுகள் அடுத்த உடல்களிலும் தொடர்ந்து வரத்தான் செய்யும் – உயிரிடமிருந்து யாரும் தப்ப முடியாது

Eye lights

“தப்பிக்கலாம்…” என்று நினைத்துத் தற்கொலை செய்து கொண்டாலும் அந்த இம்சைப்பட்ட உணர்வுகள் அடுத்த உடல்களிலும் தொடர்ந்து வரத்தான் செய்யும் – உயிரிடமிருந்து யாரும் தப்ப முடியாது

 

 

மனிதனின் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தில் ஆத்திரம் தாங்காமலோ பிறருடைய கடும் சொல்லை ஏற்க முடியாமலோ கடுமையான சூழலில்  தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விஷத்தைக் குடிக்கின்றனர். (சிலர் தூக்குப் போட்டு இறக்கின்றனர்).

 

அப்பொழுது மனிதனின் எண்ணங்கள் போய்விடுகின்றது. உடலை அழித்து விடுகின்றது. விஷத்தைக் குடிப்பவர்கள் உயிரை விட்டுப் பிரிந்த உயிரான்மா எங்கே செல்லும் தெரியுமா?

 

எந்த விஷத்தைக் குடித்தார்களோ அதன் நிலை கொண்டு பாம்பாகவோ தேளாகவோ இதைப் போன்ற விஷம் கொண்ட சரீரமாகத்தான் அடுத்து பிறப்பார்கள்.

 

வேறு எங்கும் போகமாட்டார்கள்.

 

இந்த மனித உடலை விட்டுப் போன பின்

1.வேறு உடலுக்குள் போனாலும்

2.அவர்களையும் இதே போன்று விஷத்தைக் குடித்துச் சாக  வைப்பார்கள்.

 

இதில் விளைந்த விஷம் அந்த உயிருடன் – அவனுடன் ஒன்றிக் கொண்டே தான் இருக்கும். வேறு எங்கும் போகாது. நாம் இந்த உடலில் இம்சைப்பட்டிருந்தால் அடுத்த உடலில் அதுவும் அதே இம்சையைத்தான் படும்.

 

1.விஷத்தைச் சாப்பிட்டுவிட்டு எத்தனை துடி துடித்தாரோ

2.அது உயிரிலே கலந்து கொண்டு

3.அதே துடிப்பு நிலையிலேயே இருந்து கொண்டிருக்கும்.

 

இந்தத் துடிப்பான உணர்வுகள் உடலுக்குள் போனவுடனே அது வேலை செய்யத் தொடங்கி விடுகின்றது.

 

சில பேர் தற்கொலை செய்து கொண்டு… “இந்த உலகத்தை விட்டே நான் போய் விடுகிறேன் என்பார்கள்..! எங்கே போவது…?

 

அவனிடமிருந்து (உயிரிடமிருந்து) தப்பிக்கவே முடியாது.

1.தப்பு செய்தால் தப்பு தான்.

2.சரியாகச் செய்தால் சரி தான்.

3.மார்க் போட்டுக் கொண்டே இருக்கும் நமது உயிர்.

 

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் கீதையிலே வியாசகர் சொன்னது “நீ எதை எண்ணுகிறாயோ.. நீ அதுவாகின்றாய்…!

 

ஒருவரைக் கோபத்துடன் சண்டையிட்டு நான் உன்னைச் சுட்டுப் பொசுக்கி விடுவேன்… பார்…! என்று நினைக்கலாம். சுட்டுப் பொசுக்கும் எண்ணம் முதலில் என்னிடம் தான் வருகின்றது எனக்குள் வளர்கின்றது.

 

சுடப்பட்ட பின் அவன் துடித்த உணர்வு அதே எண்ணத்தை நாம் எண்ணிக் கொண்டிருந்தால் நேராக என்னிடம் வந்துடுவான். என் உடலுக்குள் வந்த பின்னாடி

1.நான் சுட்டுப் பொசுக்கிய உணர்வின் தன்மை என்ன செய்யும்…?

2.என்னைச் சுட்டு பொசுக்கிக் கொண்டேயிருக்கும்.

3.இந்த உயிருடன் ஒன்றி அந்த இம்சைப் படுத்திக்கொண்டே இருக்கச் செய்யும்.

 

உயிரிடம் இருந்து யாரும் தப்ப முடியாது.

 

உயிரோடு ஒன்றிய அந்த நிலைகள் நீ தவறு செய்தாய்…
அதனால் வேதனைப்படு என்று இந்த உயிர் செய்யும்.  ஏனென்றால் அவன் கடவுள்.

 

பெரும் பகுதியானவர்கள் நாம் இந்த உடலை விட்டுப் போய் விட்டால் எல்லாம் முடிந்தது என்று நினைக்கின்றோம்.

 

தற்கொலை செய்து கொள்ளும் உயிரான்மாக்கள் எங்கே போகின்றது? அடுத்த உடலுக்குள் புகுந்து அந்த உடலையும் எப்படி அல்லல்படுத்துகின்றது? கடைசியில் விஷமான உயிரினங்களுக்குள் சென்று அடைவதையும் நேரடி அனுபவமாகக் குருநாதர் காண்பித்துத் தெரிய வைத்தார்.

 

அதைத்தான் உங்களிடம் சொல்கின்றோம்.

 

வாழ்க்கையில் கடுமையான இன்னல்கள் ஏற்படும் பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்?

 

ஓ…ம் ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் எண்ணத்தைச் செலுத்தி.

1.மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிருடன் தொடர்பு கொள்ள வேண்டும்.

2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று உடலுக்குள் நினைவைச் செலுத்த வேண்டும்

3.என்னை அறியாது வந்த தீமைகள் அனைத்தும் அகன்றிட அருள்வாய் ஈஸ்வரா என்று

4.அந்த மெய் உணர்வுகளை நம் உயிர் வழியாகச் சுவாசிக்க வேண்டும். அதை நம் உடலாக ஆக்க வேண்டும்

5.இதை நாம் சிருஷ்டித்தால் மெய் உணர்வைத்தான் உயிர் நமக்குள் கொடுக்கும்.

 

அடுத்து உடலைவிட்டு போய் விட்டால் உயிர் நம்மை எதுவாகப் படைக்கும்? நம்மை அந்த மெய் ஞானியாகப் படைத்துவிடும். ஏனென்றால் முழு முதற் கடவுள் – நாம் சிருஷ்டிக்கும் உடல் பெற்றவர்கள்.

 

ஆனால் இந்த மனிதப் பிறவியில் இதை இழந்து விட்டால் அடுத்து மீண்டும் தேய் பிறை என்ற நிலைக்கே நம்மை உயிர் அழைத்துச் செல்லும்.

 

ஆகவே

1.விஜயதசமி – பத்தாவது நிலை பெறும் அந்தப் பாதையிலே

2.ஞானிகள் சென்ற பாதையிலேயே நாம் செல்வோம்.

3.நம்மை அறியாது வந்த எத்தகைய இருளையும் போக்குவோம்.

4.”கல்கி…” என்ற அழியா ஒளியின் சரீரம் பெறுவோம்.

Leave a Reply