காட்டிற்குள் குருநாதர் எமக்குக் கொடுத்த அனுபவங்கள் – பாம்பு மிரட்டி “வேர்..” – கேன்சர் நோயை நீக்கும் இரத்தத்தை உறிஞ்சும் “கொடி…”

Gnanaguru-Saamigal

காட்டிற்குள் குருநாதர் எமக்குக் கொடுத்த அனுபவங்கள் – பாம்பு மிரட்டி “வேர்..” – கேன்சர் நோயை நீக்கும் இரத்தத்தை உறிஞ்சும் “கொடி…”

 

 

குருநாதர் என்னைக் (ஞானகுரு) காட்டிற்குள் அழைத்துக் கொண்டு போகின்றார். அப்போது என் கையில் ஒரு வேரைக் கொடுக்கின்றார். அந்த வேரைக் கொடுத்துக் கையில் கட்டிக் கொள்ளச் சொல்கின்றார்.

 

கட்டிக் கொண்டேன்.

 

ஒரு இடத்தைக் காண்பித்து அங்கே ஒரு பெரிய “புதையல்…” இருக்கின்றது. அதை எடுத்துக் கொண்டு வாடா… என்கின்றார்.

 

என்ன புதையல் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் “நீ போ…!” என்றார்.

 

பார்த்தால் ஒரு மலைப் பாம்பைப் போலக் கரு நாகம் – ஒரு காளிங்கராயன் பாம்பு அங்கே அது படுத்திருக்கின்றது.

 

பார்த்தவுடனே… … …! எனக்குப் பயமாகி விட்டது.

 

எனக்குப் பயம் வந்தாலும் என்னைக் கண்டவுடனே அந்தப் பாம்பு ஒன்றும் சீறவில்லை. ஏன்…!

 

குருநாதர் என்னிடம் கொடுத்த வேர் என்ன செய்கின்றது?

 

அந்தப் அப்படியே பதும்பச் செய்கின்றது. அங்கே போனவுடனே குருநாதர் அதைத் தூக்கிக் கொண்டு வாடா என்று என்னிடம் சொல்கிறார்.

 

எனக்குப் பயமாக இருக்கின்றது. ஆனால் தூக்கினால் அது  வரவில்லை. அந்தப் பாம்பைத் தூக்கிச் சுமக்க நான்கு பேர் வேண்டும் போல் இருந்தது.

 

என் ஒருவனால் தூக்க முடியவில்லை. சரி விட்டு விட்டு… வாடா… என்றார்.

 

இது எதனால் பாம்பு பதும்புகிறது?

 

இயற்கையில் விளைந்த உணர்வுகள் இந்த விஷத்தின் தன்மையாக்கப்படும் போது அதனுடைய செயலாக்கங்கள் எப்படி இருக்கின்றது என்று

1.விஷத்தை ஒடுக்கும் சக்தி அந்த வேரிலே இருப்பதால்

2.அந்தப் பாம்பு அமைதியாக இருக்கின்றது என்று காட்டுகின்றார்

3.காட்டிற்குள் அனுபவரீதியிலே கொண்டு வருகின்றார் குருநாதர்.

 

காட்டிற்குள் இன்னொரு இடத்திற்கு அழைத்துச் செல்லுகின்றார்.

 

அங்கே பார்த்தால் ஒரு புலி செத்துக் கிடக்கின்றது. உயிர் போனவுடனே புலியினுடைய உடல் அழுகிக் கிடக்கின்றது. புழுக்களாக அரிந்து கொண்டிருக்கின்றது.

 

அழுகிய அந்தப் புலியின் உடலுக்குப் பக்கத்திலே போய் “உட்காருடா…! என்றார். நாற்றமோ சகிக்க முடியவில்லை.

 

சாமி… ஒரே நாற்றமாக இருக்கின்றது…! என்று சொன்னேன்.

 

நான் சொல்வதைச் செய்கிறேன் என்று சொன்னாய் அல்லவா…! அதனாலே “உட்கார்ந்து பார்…!” என்று சொல்கிறார்.

 

உட்கார்ந்து பார்த்துக் கொண்டே இருந்தேன். எத்தனை நாள்…? ஒரு நாளா… இரண்டு நாட்களா…! ஒரு பத்துப் பதினைந்து நாட்கள் உட்கார்ந்து பார்த்தேன்.

 

பத்து பதினைந்து நாட்கள் வேறு எதுவும் சாப்பிடவே முடியவில்லை. இரண்டு பச்சிலையைக் கொடுத்தார். அதை மென்று சாப்பிட்டுக் கொள் என்றார்.

 

அதையெல்லாம் எனக்கு விபரமாகக் கணக்குச் சொல்ல வேண்டும் என்கிறார். நான் எந்தக் கணக்கைச் சொல்லட்டும்….?

 

புலியின் உடலில் உள்ள புழுக்கள் அந்த உடல் முழுவதையும் சாப்பிட்டு விடுகின்றது. கடைசியில் எலும்பும் தோலாகவும் தான் இருக்கிறது.

 

புலி உயிருடன் இருக்கும்போது எத்தனை வகையான உயிரினங்களைக் கொன்றதோ அந்த உணர்வெல்லாம் உடலுக்குள் அணுக்களாக இது புலியாக உருவாகின்றது.

 

இந்தப் புலியின் உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் முதலில் ஜீவ அணுக்களாக இருந்தது. புலியின் உயிர் வெளியே சென்ற பின் ஜீவஅணுக்கள் உயிரணுக்களாக மாறுகின்றது. புழுக்களாக ஆகின்றது.

 

புழுக்களாக இருந்ததெல்லாம் புலி உடலைத் தின்றவுடன் அடுத்து ஆகாரம் இல்லை என்றால் மடிந்து விடுகின்றது. அந்தப் புழுக்களின் உயிர்களும் வெளி வருகின்றது.

 

புலி தன் பசிக்காக மாட்டையோ மற்ற எதை எதை அடித்துச் சாப்பிட்டதோ அதன் உடலுக்குள் இந்தப் புழுவின் உயிர்கள் உயிரணுக்களாக விளைகின்றது.

 

அதாவது உயிரணுக்கள் என்றால் புலியின் உடலில் முதலில் ஜீவ அணுக்களாக இருக்கின்றது. பின் உயிரணுக்களாக மாறுகின்றது.

 

உயிரணுக்களாக மாறியவுடனே மாடு ஆடு மற்ற உயிரினங்களில் பட்டபின் “உன்னி… ஈ…” போன்ற நிலைகளில் உருவாக்கி அந்த உடலிலுள்ள இரத்தத்தை உறிஞ்சி வாழும் தன்மை வருகின்றது.

 

இரத்தத்தை உறிஞ்சி உடல் வளர்த்த அந்தப் புலியின் உணர்வுகள் உயிர் சென்ற பின் அதே அணுக்கள் உயிரணுவாக மாறி மீண்டும் மற்ற உடல்களில் என்னென்ன செய்கின்றது என்பதனை உற்றுப் பார்க்கச் சொல்லுகின்றார்.

 

புலியின் ஒரு உயிர் போனது. உயிர் போனபின் அந்த உடலில் பல உயிர்களின் தன்மை வளர்க்கப்பட்டு ஆடு மாடுகளில் உன்னியாகவும் ஈ ஆகவும் செல்லுகின்றது.

 

அதே சமயத்தில் புலி ஒரு உயிரினத்தைக் கடித்துக் குதறும் போது இரத்தங்கள் சிந்துகின்றது? இரத்தங்கள் சிந்தியபின் இரத்தத்திலே மின்னல்கள் தாக்கப்படும் போது இதில் ஜீவக்கருக்கள் உருவாகி அதன் நிலைகள் “அட்டைகளாக…” வளர்கின்றது.

 

நாம் நடந்து போனால் போதும். அந்த அட்டை தவ்வி நம் உடலிலே அமர்ந்த்னு நம் இரத்தத்தைக் குடிக்கின்றது.

 

இதைப்போல ஒரு உடலிலிருந்து எத்தனை வகையான நிலைகள் அது உருவாகிறதென்று குருநாதர் காட்டுகின்றார்.

 

அந்தப் புலியின் உடலிலிருந்து வெளிப்படும் அழுகிய ஆவிகள் காற்றிலே போகின்றது. இதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துக் கொள்ளுகின்றது. அது அலைகளாக மாறுகின்றது.

 

அதே சமயத்தில் விஷச் செடியில் இருந்தும் பல மற்ற தாவர இனங்களில் வரக்கூடிய சத்தையும் சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றிப் பரமாத்வில் சுற்றிக் கொண்டிருக்கின்றது.

 

அழுகிய புலியின் உணர்வைக் கவர்ந்த அலைகளைக் கண்ட பின் மற்ற செடி கொடிகளின் சத்துக்களை கவர்ந்து கொண்ட அலைகள் ஓடுகின்றது.

 

இவ்வாறு அது ஓடும் பாதையில் இன்னொரு பக்கம் பிற விஷச் செடியில் இருந்து உமிழ்த்தும் உணர்வுகள் மோதிய பின் “கிறு..கிறு..” என்று சுற்றுகின்றது.

 

அது சுற்றி ஒன்றோடொன்று மோதி அந்த மோதலில் ஆவியின் தன்மை மேலே செல்கின்றது. மூன்றும் இரண்டறக் கலந்த உணர்வுகள் பூமியில் படர்கின்றது.

 

1.புலி ரிக். அழுகிய புலி உடலில் இருந்து வரக்கூடிய மணம் சாம இசை. இந்த நாற்றம் நமக்கு வருகின்றது.

2.செடி கொடி ரிக். அதில் இருந்து வரக்கூடிய மணம் சாம இசை.

3.ஒரு விஷச் செடி ரிக். அதில் இருந்து வரக்கூடிய மணங்கள் சாம இசை.

4.இது மூன்றும் ஒன்றுக்கொன்று மோதல் ஏற்பட்ட பின் மோதலில் ஒன்றாகக் கலக்கப்படும் போது அதர்வண.

5.ஒன்றோடொன்று மோதி அதன் உணர்வுகள் ஒன்றாக இணைந்த பின் யஜூர்.  ஒரு வித்தாகி விடுகின்றது.

 

பல விதமான உணர்வுகளைச் சேர்த்து நாம் ஒரு பலகாரத்தை வேக வைத்தால் அது ஒன்றாகி சுவையாக மாறுகின்றது.

 

இதைப் போல பல உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதி அது ஒன்றாக அமைகின்றது. மோதியதால் ஏற்படும் ஆவியாக மேலே செல்லுகின்றது.

 

இரண்டறக் கலந்தது தரையிலே படுகின்றது. தரையிலே பட்டபின்  எதிர் நிலையான நட்சத்திரங்களிலிருந்து துகள்கள் நம் பூமிக்குள் மின்னலாகத் தாக்கப்படும் போது

1.இதில் கலந்த நிலைக்கு எதிர் நிலையாக வரும் போது

2.அதிலே தாக்கப்பட்டு இழுக்கும் சக்தியாக வருகின்றது

3.அப்போது அது செடியாக வளர்கின்றது.

4.அவ்வாறு அது செடியாக வெளியில் வரையிலும் என்னைக் குருநாதர் அங்கே உட்கார வைத்துக்கொண்டு இருந்தார்.

 

பக்கத்திலேயே இருக்கச் சொல்கிறார். வெளியில் போய்ச் சாப்பிடக் கூட விடவில்லை. பட்டினியாகத்தான் உட்கார வேண்டும். பச்சிலையை மெல்ல வேண்டியது அதைச் சாப்பிட வேண்டியது புலியைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியது.

 

இந்த இயற்கை எப்படி மாறுபடுகின்றது என்பதனைத் தெரியச் செய்கின்றார். பின் அந்தச் செடி முளைத்து வந்தது. அந்தச் செடியின் அருகில் அடையாளம் தெரிவதற்காகக் கோடு போடச் சொல்கின்றார்.

 

அந்த இடத்தை விட்டுப் போய் விட்டு ஒரு இரண்டு மாதம் கழித்து வருகிறோம். அந்தச் செடி கொடியாக வளர்ந்திருக்கிறது.

 

கையில் நீ் கத்தியை எடுத்துக் கொண்டு போடா என்றார்.

 

கத்தி எதற்கு சாமி…? என்றேன்.

 

கத்தியைக் கொண்டு போ என்றார்.

 

அங்கே ஒரு மரம் அருகில் அந்தக் கொடி விளைந்திருக்கிறது. அத்ற்கு எதிரிலே உட்கார் என்றார். நான் உட்கார்ந்தவுடனே என்னை நோக்கி அந்தக் கொடி நைசாக நகர்ந்து இருக்கின்றது.

 

அந்தக் கொடி நகர்ந்து வந்து உன்னைத் தொட்டுவிட்டது என்றால் எப்படிக் கரண்ட் பாய்கின்றதோ அதே மாதிரி பாய்ந்து புத்தியில்லாமல் போய்விடும். உன் இரத்தத்தை உறிஞ்சிவிடும் என்றார் குருநாதர்.

 

கொடி உன்னைத் தொடும் பொழுது “சுரீர்…” என்று வரும். உடனே கத்தியால் அதை “வெட்டுடா…” என்றார்.

 

நான்கைந்து தரம் வெட்டிய பிற்பாடு அப்புறமும் நீண்டு வருகிறது. வெட்டியபின் அது  எட்டாத நிலை ஆகும் போது அடுத்து ஒன்றும் செய்யவில்லை.

 

பார்த்தயா…! அன்றைக்கு அந்தப் புலி எந்தெந்த உயிரினங்களின் இரத்தத்தை உறிஞ்சியதோ அதனின் உணர்வு செடியுடன் கலந்தது. கொடியாக விளைந்தது.

 

இப்பொழுது மனிதனின் இரத்தத்தை உறிஞ்சும் தன்மை அந்தக் கொடிக்கு வந்துவிட்டது என்று காட்டுகிறார்.

 

நம் மனித வாழ்க்கையில் வேதனை வேதனை என்ற உணர்வுகள் எடுத்துக் கொண்ட பின் உடலில் விஷமான அணுக்கள் பெருகியபின் நல்ல அணுக்களைக் கொன்றுவிடும்.

 

விஷமான அந்த அணுக்கள் பெருகி விட்டால் அதைத்தான் கேன்சர் நோய் என்று சொல்கிறோம். மற்ற அணுக்களுக்குள் இருக்கும் இயக்கச் சக்தியையும் அது கவர்ந்து கொள்ளும்.

 

உடலிலுள்ள நல்ல அணுக்கள் இயங்காது. இந்தக் கேன்சர் என்ற நிலை வந்துவிட்டால் எதுவுமே செயல்படுத்த முடியாது போய்விடும்.

 

அதைக் கொல்ல வேண்டும் என்றால் இதற்கு மருந்து இல்லை.
ஏனெனில் அதைக் கொல்ல வேண்டும் என்றால் வீரியத் தன்மை மருந்தை ஊட்ட வேண்டும்.

 

வீரியமான மருந்தை ஊட்டினால் நம் உடலிலுள்ள சாந்தமாக இருக்கக்கூடிய அணுக்களெல்லாம் மடிந்து விடும். மருந்து கொடுத்தும் பயன் இல்லை.

 

கேன்சர் போன்ற நிலைகளுக்கு இந்தக் கொடியை எடுத்து அதில் வேறு சில பச்சிலைகளை இணைத்துப் பக்குவப்படுத்திக் கொடுத்தால் அந்தக் கேன்சர் விஷத்தின் தன்மையை இது உறிஞ்சிவிடும்.

 

கேன்சர் நோயை இந்தக் கொடியை வைத்து நீக்கி விடலாம் என்று காட்டுகிறார் குருநாதர்.

 

காடுகளில் உயிரினங்கள் ஒவ்வொன்றும் தன்னிச்சையாக மடிந்த பின் மடிந்த உடலிலிருந்து வரக்கூடிய ஆவிகளும் மற்ற தாவர இனத்தில் ஒன்றோடொன்று மோதும் போதும் புதுப் புது விதமான செடிகள் எப்படி உருவாகின்றது?

 

செடிகளைத் தின்று ஒன்று வளர்ந்தாலும் அந்த உயிரினங்களைக் கொன்று வாழ்ந்த இந்த உடல்கள் அது மடிந்து விட்டால் அந்த உணர்வுகள் எப்படிச் சேர்கின்றது?

 

மீண்டும் ஜீவ அணுக்களாக மாற்றி அது மனிதனுக்கு மருந்தாக உபயோகப்படுத்தும் தன்மை எப்படி வருகின்றது?

 

ஏனென்றால் பல உயிரினங்களின் தன்மையானால் இதே மருந்தைச்  சேர்க்கப்படும்போது

1.நம் உடலில் உள்ள விஷத்தின் தன்மைகளை அது மாற்றி

2.நம் உடலை எப்படி நலமாக்குகின்றது என்பதனைக் குருநாதர் அங்கே காட்டுகின்றார்.

3.இயற்கையின் உண்மைகள் எப்படியெல்லாம் செயல்படுகின்றது?

4.இதிலிருந்தெல்லாம் மனிதன் எப்படித் தப்ப வேண்டும் என்ற   நிலையை

5.காட்டுக்குள் என்னை அழைத்துச் சென்று இவ்வாறு பல உண்மைகளைக் காட்டினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

Leave a Reply