கரையான் தன் மலத்தால் மரத்தை ஆவியாகக் கரைத்து தன் உணவாக எடுக்கும் ஆற்றல் பெற்றது – அது போல “தீமைகளைக் கரைக்கும் ஆற்றலை…” நாம் கவரவேண்டும்

Karaiyan _ Termites

கரையான் தன் மலத்தால் மரத்தை ஆவியாகக் கரைத்து தன் உணவாக எடுக்கும் ஆற்றல் பெற்றது – அது போல “தீமைகளைக் கரைக்கும் ஆற்றலை…” நாம் கவரவேண்டும்

 

கரையானைப் பற்றித் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

 

அது தன் உணவுக்காக தாவர இனச் சத்தை அனைத்தும் எடுத்துக் கொண்டு குவித்து தன்  மலத்தை அதன் மீது போடுகின்றது. அதாவது

1.இப்பொழுது நாம் சமையல் செய்வது போல

2.பல சத்தையும் ஒன்றாக ஆக்கி அது உணவாக உட்கொள்கின்றது.

 

கரையான் புற்றுக்களைப் பார்த்தால் மேலே மண்ணாக இருக்கும். மண்ணை எடுத்துத் தன் உணர்வின் தன்மை உமிழ்நீரைச் சுரந்து அது மேலே கூடாகக் கட்டிக் கொள்கிறது.

 

அதன் மூலம் வெளியிலேயிருந்து வரக்கூடிய உணர்வுகள் அனைத்தும் இது உள்ளுக்குள்ளிருந்து மற்ற தாவர இனச் செடிகளைக் கவர்கின்றது. கவர்ந்து உள்ளே சென்றாலும் அதிலே இதனுடைய மலத்தைப் பாய்ச்சிவிடும். அதைக் குவித்து வைத்துவிடும்.

 

குவித்து வைத்தபின் நாம் சமையல் செய்வது போல அதைக் கரைத்து அதனுடைய மணம் வெளிப்படாது கூட்டிற்குள் அடைத்து  உணவாக எடுத்துத் தன் இனக் குஞ்சுகளுக்கும் அதை உணவாகக் கொடுக்கின்றது.

 

கரையான் வெளிவந்த பின் ஓர் மரத்தின் மேல் இது பட்டுவிட்டால் அந்த மரத்தின் சத்தில் இதனுடைய மலம் பட்டபின் அதிலுள்ள சத்தைப் பூராம் ஆவியாக மாற்றித் தன் உணவாக உட்கொள்ளுகின்றது. பின் இந்த மரமே மண்ணாகப் போய் விடுகின்றது.

 

காலையில் கரையான் பிடித்தது என்றால் சாயங்காலம் பார்த்தீர்கள் என்றால் அந்த மரம் காணாமல் போகும.

 

நம் வீட்டு வாசலில் உள்ள நிலையில் (மரத்தினால் செய்யப்பட்டதை “நிலை” என்று சொல்வோம்) பத்து நாளைக்கு விட்டு விட்டோம் என்றால் போதும்.

 

பத்து நாள் கழித்துப் பார்த்தால் நிலை மாதிரித்தான் இருக்கும்.

1.மரத்தை எல்லாம் தின்று விட்டுக்

2.கடைசியில் உள்ளுக்குள் கூடாகத்தான் இருக்கும்.

3.மண்ணாகத்தான் இருக்கும்.

 

இதைப் போல அது உட்கொண்ட உணர்வின் சத்தை இதனுடைய மலத்தை இட்ட பின் இது கரைத்து விடுகின்றது.

 

இதைப் போன்று தான் இந்த உணர்வின் சத்து முதன் முதலிலே இது உருவானபின்

1.இதைப் போல அணுக்களின் தன்மை பிரிந்த அணுக்கள்

2.மீண்டும் மண்ணுக்குள் மறைந்து “கரையான்களாக…” மாறுகின்றது.

 

கரையானாக மாறியதை எது எது கொன்று புசித்ததோ இது வரப்படும் போது அதைத் தனது உணவாக உட்கொள்ளும் நிலையில் கரைக்கும் ஆற்றல் பெறுகின்றது.

 

(கரையானைத் தின்னாத உயிரினமே இல்லை என்று கூடச் சொல்லலாம்.)

 

1.கரையான் எப்படிக் கரைக்கின்றதோ

2.இப்படித்தான் (கரைக்கக்கூடிய) அமிலங்கள் மாறுவதும்

3.உணர்வின் சத்து இயக்கத்தின் தன்மை மாறுவதும் என்ற நிலையைத்

4.தெளிவாக எடுத்துக் காட்டுகின்றார் குருநாதர்.

 

ஏனென்றால் உயிரணு தோன்றிய பின் முதலிலே எப்படி இருந்தது என்ற நிலையை அறிவதற்காக வேண்டி என்னைக் கரையான் புற்றிலும் எறும்புப் புற்றிலும் அமர வைத்துக் காட்டினார்.

 

எறும்புகளும் கரையானைப் போன்றே செய்கிறது. அதிலேயும் ஒரு விதமான அமிலங்கள் உண்டாகும்.

 

அந்த அமிலத்தைச் சேர்த்துக் கொண்டபின் கரையான் எவ்வாறோ இதைப் போலச் சேமித்துச் செத்தை குப்பைகளை எல்லாம் பச்சையாகக் கொண்டு போய்ச் சேர்க்கும்.

 

குவியலாகப் போட்டு இது மலத்தை உருவாக்கிவிடும். அது குறிப்பிட்ட காலம் வந்தபின் எடுத்து உணவாக உட்கொள்ளுகின்றது. இது எல்லாம் இந்த உணர்வின் இயக்கம்தான்.

 

செடியின் சத்து மணம் என்று இருந்தாலும் அந்த செடிக்குள் சேர்த்த (செடியின் மணம்) இயக்கத்தின் தன்மை உணர்வாக இயக்குகின்றது.

 

அந்த மணத்தின் நிலைகள் எவ்வாறு இயக்குகிறதென்ற நிலை தான் என்னைக் கரையான் புற்றில் அமரச் செய்து எவ்வாறு இயற்கையின் நிலைகள் உருவாகின்றது என்ற நிலையைக் காட்டினார்.

 

இப்போது நீங்கள் டி.வி.யிலேயும் பார்க்கின்றீர்கள்.

 

கடலுக்குல் நீருக்கடியில் போகும்போது ஆழப்பகுதிகளில் அதற்கென்ற விஞ்ஞானக் கருவி கொண்டு டெலஸ்கோப்பை வைத்துக் காணுகின்றார்கள்.

 

நீருக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் உணர்வின் அணுக்களையும் நீருக்குள் நுண்ணிய அணுக்கள் (ORGANISMS – உயிரினங்கள்) உருவாகுவதையும் விஞ்ஞானிகள் கண்டுணர்கின்றார்கள்.

 

இதைப் போல மெய்ஞானி தனக்குள் சேர்த்துக் கொண்ட உணர்வின் சத்தைக் கொண்டு விண்ணின் ஆற்றலைப் பெற்று மற்றொன்றை உருவாக்கி அந்த ஆற்றல் மிக்க சக்தியைத் தனக்குள் உணர்ந்து கொள்கின்றான்.

 

1.இது தீயது இதை விலக்கவேண்டும்

2.இது நல்லதி இதை இணைக்க வேண்டும் என்ற நிலையில்

3.தன் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தனக்குள் இயக்கச் சக்தியினை மாற்றி அமைத்துக் கொள்கின்றான்.

 

1.உயிர் எப்படித் துடிக்கின்றதோ

2.அது உயிர் எப்படி இயக்குகின்றதோ அதைப் போல

3.உணர்வின் அணுக்களில் ஒருக்கிணைந்து

4.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமானவர்கள் அந்த மகரிஷிகள்.

5.சப்தரிஷிகளாக சப்தரிஷி மண்டலமாக வாழ்கின்றார்கள்.

 

கரையான் கரைக்கும் ஆற்றல் கொண்டது போல் இந்த வாழ்க்கையில் நம்மை அறியாது வரும் தீமைகளை அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்த்துக் கரைத்திடல் வேண்டும்.

 

உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக அந்த மகரிஷிகள் வாழும் எல்லையை அடைவதே நம்முடைய கடைசி எல்லை.

Leave a Reply