22.10.17 கூட்டுத் தியானத்தில் கருத்துப் பரிமாற்றம் – ஞானிகளின் உணர்வுடன் ஒட்டிக் கொள்ள வேண்டும் (ஒட்டுச் செடி போல்)

22.10.17 கூட்டுத் தியானத்தில் கருத்துப் பரிமாற்றம்

 

3.ஞானிகளின் உணர்வுடன் ஒட்டிக் கொள்ள வேண்டும் (ஒட்டுச் செடி போல்)

 

இன்று ஒட்டுச் செடிகளை வைத்து விவசாயத்தில் தேவையான மகசூலைப் பெறவும் விதம் விதமான உணவுப் பொருள்களையும் உருவாக்கியுள்ளனர்.

 

அதே போன்று உயிரினங்களிலும் ஒரு கருவுக்குள் மற்ற உயிரினங்களின் ஜீன்களை எடுத்துப் புதுப் புது உயிரினங்களையும் உருவாக்கியுள்ளார்கள்.

 

அதே போல் குளோனிங் (CLONING) முறையிலும் ஒரே மாதிரி மனிதனையே உருவாக்க முடியும் என்றும் கண்டுபிடித்துள்ளார்கள்.

 

நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி ஞானிகளின் உணர்வை நாம் நமக்குள் (ஒட்டுச் செடி போல்) ஒட்ட வைத்துக் கொள்ள வேண்டும்.

 

ஒட்ட வைத்துக் கொள்வது என்றால் நமக்குள் உள்ள எல்லா குணங்களுக்குள்ளும் ஒட்ட வைக்க வேண்டும்.

 

நல்லது, கெட்டது, பிடித்தது, பிடிக்காதது, வேண்டியது வேண்டாதது என்று எதையும் பார்க்காமல்

1.எல்லா எண்ணங்களுக்குள்ளும்

2.எல்லா உணர்வுகளுக்குள்ளும்

3.ஞானிகளின் உணர்வை ஒட்ட வைக்க வேண்டும்.

 

அதாவது ஞானிகளின் உணர்வை நமக்குள் (நமக்குள் என்றால் எல்லாம் சேர்த்துத்தான் “நாம்”) கலக்கும் பருவத்தை ஏற்படுத்த வேண்டும்.

 

ஒவ்வொரு அணுக்களிலும் இவ்வாறு ஞானிகளின் உணர்வை இணைத்துவிட்டால் ஞானிகளின் உணர்வுகள் கலந்து

1.புதுப் புதுக் கருக்களாகி

2.திரும்பத் திரும்ப எண்ணினால் முட்டையாகி

3.ஞானிகளையே எண்ணிக் கொண்டிருந்தால் அடை காத்தது போல் ஆகிவிடும்.

 

ஞானிகள் அவர்கள் உடலில் விளைய வைத்தது போல் நமக்குள்ளும் விளைந்து அதனின் பெருக்கம் அதிகமாகி நம் செயல்கள் ஞானிகளின் செயலாக மாறும்.

 

என்னிடம் அடிக்கடி ஈஸ்வரபட்டர் “நீ… கட்சி மாற வேண்டும்’ என்பார்.

 

கட்சி மாற வேண்டும் என்றால் நாம் தவறு செய்தாலும் (தெரிந்தோ அல்லது தெரியாமலோ) உடனடியாக ஞானிகளின் உணர்வுடன் ஒட்டிக் கொள்ள வேண்டும்.

 

(அந்த ஞானிகளின் கட்சியாக மாற வேண்டும் என்பார்.)

 

அதை ஒட்டிய செயலாக நாம் மாற்றிப் பேச வேண்டும். செயல்பட வேண்டும்.

 

உதாரணமாக – நான் தவறு செய்துவிட்டேன். அந்தத் தவறு தேவையில்லை. அதனால் நான் ஞானிகள் சொன்னபடி நல்லதாக மாற்றிக் கொள்கிறேன் என்று அடுத்த கணமே என் மனதை என் எண்ணத்தை என் உணர்வை என் செயலை அப்படியே ஞானிகளுடன் ஒட்டிக் கொள்வது.

 

1.தவறு செய்ததில் அதிகம் நினைவைச் செலுத்தாதபடி

2.தவறு நடந்ததை வைத்து அல்லது தவறு செய்ததை வைத்து

3.ஞானிகள் அருள் சக்தியை மிகவும் அதிகமாக ஒட்டிக் கொள்வது.

 

அப்படியே அவர்கள் செயலாகவே நான் இருக்க வேண்டும் என்று

1.எந்த அளவுக்கு அழுத்தமாகப் புருவ மத்தியில் எண்ணி

2.விண்ணிலே நினைவைச் செலுத்த முடியுமோ

3.அந்த அளவிற்கு உறிஞ்சி எனக்குள் சேர்த்துக் கொள்வது.

 

இது என்னுடைய அனுபவம்

Leave a Reply