மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் “பரிபாஷை”

வியாழன், குரு, ஈஸ்வரா

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் “பரிபாஷை”

 

நமது குருநாதர் போஸ்ட்டில் கல்லைக் கொண்டு தட்டுவார்.

 

தட்டிவிட்டு “ஹலோ… ஹலோ…, அது இந்த லைன்.., அது அந்த லைன்… ஹலோ…” என்று சொல்வார், நான் இங்கிருந்து ஃபோன் (Phone) பண்ணுகின்றேன்” என்று சொல்வார்.

 

ஏன் சாமி…! போஸ்ட் கம்பியில் கல்லை வைத்துத் தட்டுகின்றீர்கள்? என்று நான் கேட்பேன்.

 

நான் ஃபோன் செய்கின்றேன்டா…! என்று சொல்வார். நான் கடவுளுக்குப் ஃபோன் பண்ணுகின்றேன்டா…! என்று சொல்லுகின்றார்.

 

அப்பொழுது அந்தக் கல்லைக் கொண்டு தட்டுவதற்கும் இந்த உணர்வினுடைய நிலைகளையும்

1.நீதான்டா… “ஏன்?” என்று கேட்டாய்

2.”வேறு ஒருவரும்” என்னைக் கேட்கவில்லை என்று சொல்கின்றார்.

 

காரணம் இதிலே வரக்கூடிய நாதங்களைச் சுட்டிக்காட்டுகின்றார்.

 

விண்ணிலே நாதங்கள் எப்படி வருகின்றதென்று நீ பார். அந்த விண்ணுலகில் ஒவ்வொன்றையும் எடுத்தால் ஒன்றோடு ஒன்று மோதுகின்றது. மோதியவுடன் சுருதிகள் மாறுகின்றது.

 

அப்பொழுது அகண்டு போனவுடன் சேர்த்துக் கொண்ட உணர்வுக்குத் தக்க கூஜா மாதிரி ரதம் மாதிரி இப்படிப் பல உருவங்களில் இது மாதிரியெல்லாம் அந்த விண்வெளியில் உருவாகின்றது.

 

அப்படி அது விண்ணிலே உருவாகியபின் அதனுடைய வேகமாக வரும் பொழுது நாதம் எப்படி வருகின்றது பார்… என்றார்.

 

அதற்குத்தான் போஸ்டில் கல்லைக் கொண்டு தட்டிக் காண்பிக்கின்றேன்டா. “நாதத்தை நீ பார்…” என்று சொல்கிறார்.

 

இது எல்லாம் அனுபவப் பூர்வமாக அவருடைய சக்தி கொண்டு உலகம் எப்படி இருக்கின்றதென்று

1.அவர் கண்டறிந்த உணர்வு அவருக்குள் இருந்து வருகின்றது.

2.இதெல்லாம் நமது குருநாதருடைய “பரிபாஷைகள்”.

3.அகண்ட அண்டத்தின் இயக்கத்தின் உண்மையின் உணர்வுகளும்,

4..நாம் விண் செல்லும் உபாயங்களும்

5.அந்த உணர்வுகளுக்குள் உண்டு.

 

அதைத்தான் உங்களுக்குச் சொல்லி வருகிறோம்.

 

அவர் சொன்ன உணர்வுகளின் பதிவு கொண்டு புருவ மத்தியில் ஈஸ்வரா என்று தியானித்தால் அவர் பெற்ற 2000 சூரியக் குடும்பத்தின் தொடர்பலைகளும் கிடைக்கும்.

 

அந்தத் தொடர்புக்குள் சென்று விட்டால் இந்தப் பூமியின் ஈர்ப்பு வட்டத்திலிருந்து விடுபட்டு ஒளியின் சரீரமாகி

1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்று

2.நாம் அவருடன் ஐக்கியமாகலாம்.

Leave a Reply