கோவில்களில் தெய்வத்தின் மேல் “பூ வைத்து ஜோதிடம் பார்ப்பதன்” உண்மை நிலைகள்

Tap root respiration

கோவில்களில் தெய்வத்தின் மேல் “பூ வைத்து ஜோதிடம் பார்ப்பதன்” உண்மை நிலைகள்

 

கோவில்களில் ஜோதிடம் பார்ப்பார்கள். நல்ல நேரம் வருகின்றதா கெட்ட நேரம் வருகின்றதா என்று பூ வைத்துக் கேட்பார்கள்.

 

இவர்கள் எந்த எண்ணம் கொண்டு வைக்கின்றார்களோ அந்த நிலையில் வைத்துப் பூவைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். பார்த்தவுடனே

1.இவர்கள் உணர்வுகள் அங்கே செல்லும்.

2.அந்த உணர்வலைகள் என்ன செய்யும்?

 

உதாரணமாக கல்யாணப் பெண் சம்பந்தமாகப் பார்க்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

 

கெட்ட நேரம் வர வேண்டும் என்றால் சிவப்புப் பூ வரட்டும் நல்ல நேரமாக இருந்தால் வெள்ளைப் பூ வரட்டும் என்று முதலில் எண்ணிக் கொள்வார்கள்.

 

1.கேட்ட நேரம் என்று எண்ணும் பொழுது (இவர்களின் எண்ணம்)

2..அழுத்தமாக எண்ணும் பொழுது

3.அங்கே சிவப்புப் பூ விழுகும்.

 

விழுந்தவுடனே கெட்ட நேரம் வந்துவிட்டது இந்தப் பெண் வேண்டாம் என்பார்கள்.

 

ஒரு காரியத்திற்குப் போக வேண்டும் என்றால் இந்த உணர்வின் அலைகள் கண்களில் படரப்படும் பொழுது எதிர் நிலையான உணர்வு வரப்படும் பொழுது உணர்வுகள் எப்படி இயக்குகின்றது என்று நாம் தெரிந்து கொள்ளலாம்.

 

சாமி மேல் உள்ள பூ விழுகின்றதா விழுகவில்லையா என்று பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

 

பெண்ணைக் கொடுப்போர் ஒரு பக்கமும் மாப்பிள்ளை கொடுப்போர் ஒரு பக்கமும் இருப்பார்கள். “எப்படியோ…” வெள்ளைப் பூ விழுந்தால் பரவாயில்லை என்று ஒரு சாரார் (பெண்ணைக் கொடுப்போர்) நினைக்கின்றார்கள்.

 

அந்த வேதனையும் மகிழ்ச்சியும் இருந்தாலும் மற்றவர்கள் என்ன செய்கிறார்கள்?

 

மாப்பிள்ளை வீட்டில் அவர்கள் சார்புடைய பெண்கள் அந்தப் பெண் வீட்டுக்கு வந்தால் சரியில்லை. இந்தத் தெய்வம் அதற்குத் தகுந்த மாதிரிச் சொல்ல வேண்டும் என்ற இந்த உணர்வுகளை எண்ணிப் பார்க்கப்படும் பொழுது என்ன நடக்கும்?

 

1.அங்கே எதிர்மறையான நிலைகள் உருவாகும்.

2.இத்தகைய உணர்வு வரப்படும் பொழுது

3.எவருடைய உணர்வின் எண்ணங்கள் வலுவாகின்றதோ

4.அந்த எண்ணத்திற்குத் தக்கவாறு தான் இந்த உணர்வுகள் இயக்கும்.

5.வலுவான உணர்வுகள் இயக்கி “அந்தப் பூவை விழுகச் செய்யும்”

 

அந்தத் தெய்வத்தின் மேல் உள்ள பூ விழுகும் நேரத்தில் இந்தப் போராட்ட முறைகளைப் பார்க்கலாம்.

 

ஆனால் நாம் என்ன எண்ணுகின்றோம்…!?

 

“தெய்வம் அருள் சக்தி கொடுக்கின்றது… வரம் கொடுக்கிறது…” என்று இப்படித்தான் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.

 

ஆனால் நாம் எண்ணக்கூடிய உணர்வின் எண்ணங்கள் தான் இயக்குகின்றது. இதைத் தெளிவாக நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

 

நம் வாழ்க்கையில் எத்தனையோ செயல்கள் இதைப் போன்று தான் நடக்கிறது.

 

ஒரு மனிதன் அரிப்பின் காரணமாக மேலில் அரித்துக் கொண்டிருக்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். உற்று நாம் அதைப் பார்த்தால் போதும்.

 

பார்க்கலாம்…! உடனே நம்மை அறியாமலே நம் உடலில் எங்கேயாவது கையை வைத்துத் தேய்க்க (அரிக்க) ஆரம்பிப்போம். அந்த உணர்வின் உணர்ச்சிகள் நம்மை அறியாமலே அதே உணர்ச்சிகளைத் தூண்டச் செய்யும்.

 

ஏனென்றால் இது இயற்கையின் உணர்வுகள்.

 

1.நாம் எதை உற்றுப் பார்க்கின்றோமோ

2.அது நம் சுவாசத்திற்கு வருகின்றது. அதை நுகர்கின்றோம்.

3.”அதே உணர்வு” நம்மை அறியாமலே அந்தச் செயல்களைச் செயல்படுத்துகின்றது.

 

ஒருவர் தன் தலையைச் சொறிவதைப் பார்த்துக் கொண்டேயிருந்தால் போதும். நம்மை அறியாமலே நம் கை என்ன செய்யும்? தலையைச் சொறியப் போகும்.

 

காரணம் அந்த உணர்வின் எண்ணங்கள் நாம் நுகரப்படும் பொழுது அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது.

 

கண்களால் பார்க்கின்றோம் தெரிந்து கொள்கிறோம். காதால் கேட்கிறோம் அறிகிறோம். உடலால் உணர்ச்சிகளை அறிகின்றோம். வாயில் சுவையை அறிகின்றோம்.

 

ஒவ்வொரு நொடிப்பொழுதும் நாம் சுவாசிக்கும் உணர்வின் தன்மைகளை நாம் யாரும் அறிவதில்லை. அதைப் பற்றிச் சிந்திப்பதுமில்லை.

1.மனிதனுடைய ஆணிவேர்

2.அவனுடைய சுவாசம் தான்.

 

சுவாச நிலையைச் சீராக்குவதற்காகத்தான் மகரிஷிகளின் அருள் மணங்களை உங்களுக்கு உபதேச வாயிலாக நுகரும்படிச் செய்கின்றோம்.

 

அருள் மணங்களை நுகர்ந்தால் அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்கி மெய் வழிக்கு அழைத்துச் செல்லும்.

Leave a Reply