உடலை விட்டுச் சென்றால் விண்ணுலகம் செல்ல வேண்டும் – “நாம் இன்னொரு உடல் பெறக் கூடாது”

சப்தரிஷி மண்டலம்

உடலை விட்டுச் சென்றால் விண்ணுலகம் செல்ல வேண்டும் – “நாம் இன்னொரு உடல் பெறக் கூடாது”

 

 

இந்தச் சரீரத்திலே நாம் ரொம்ப நாட்கள் நீடித்து இருப்பதில்லை. உயிர்… “எந்த நிமிடம் இந்த உடலைவிட்டுச் செல்லும்” என்று சொல்ல முடியாது.

 

ஏனென்றால் நாம் முன்பு சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு அந்த உணர்வுக்குத் தக்கவாறுதான் இந்த உடலிலே நிலைத்திருக்கும். ஆனால்

1.உடலை விட்டுச் சென்றபின்

2.நாம் எப்படியும் விண்ணிற்கே செல்ல வேண்டும்.

3.இன்னொரு உடல் பெறக் கூடாது.

 

இன்னொரு உடல் பெற்றுவிட்டால் இதைப் போன்ற சந்தர்ப்பம் எப்பொழுது… எப்படி வரும்…? என்று சொல்ல முடியாது. அது வரை இந்த வேதனைப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

 

ஆகவே இதிலிருந்து மீள்வதற்குண்டான சரீர அமைப்பு நமக்குக் கிடைத்தபின் நாம் விண் செல்வதற்குண்டான வழிகளை இம்முறைப்படி நாம் செயல்படுத்திக் கொள்வோம்.

 

போகர் மற்றும் எல்லா சக்தி பெற்ற ஞானிகளும் நம்மைத் தேடி வந்து ஏன் இதைச் சொன்னார்கள்?

 

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கக் கூடிய ஆற்றல்களை அந்தத் துன்பத்தை விளைவிக்கக்கூடிய நிலையிலிருந்து துன்பத்தை நீக்கச் செய்தார்கள்.

 

என் “துன்பம் நீங்கியது…” என்று பெரு மகிழ்ச்சியான எண்ண அலைகளை அவர்கள் எண்ணிப் பார்க்கப்படும் பொழுது அவர்கள் நல்லவர்கள் ஆக வேண்டும் என்று எண்ணினார்கள்.

 

“நல்லதாக்கினார்” என்று அவரை எண்ணும் பொழுது நல்ல எண்ணங்கள் அவர் மேலே பாய்கின்றது.

 

அவருக்குள் வளர்த்துக் கொண்ட இந்தச் சக்தி நமக்குள் துன்பத்தைப் போக்க உதவுகின்றது.

 

ஆக இந்த நன்மையினுடைய நிலைகளை அவர் பெறுகின்றார்,

 

அவரை எண்ணும் பொழுது அந்த உயிராத்மாவினுடைய நிலைகளைச் சுலபமாக விண் செலுத்த ஏதுவாகின்றது.

 

அதைப் போன்று நாம் ஒவ்வொருவரும் இந்த முறைப்படி கூட்டுத் தியானங்களை எடுத்து ஆத்ம சுத்தி செய்து கொள்வோம்.

 

பிறர் நம்மிடம் துன்பத்தைச் சொன்னாலும் நாம் ஆத்ம சுத்தி செய்து கொண்டு இனி உங்கள் வியாபாரம் நல்லதாக இருக்கும் தொழில் நல்லதாக இருக்கும் என்று சொல்லுங்கள்.

 

வெறுமனே வாயில் சொல்ல வேண்டாம். ஆத்ம சுத்தி செய்யும் பொழுது உள்ளப் பூர்வமான உணர்வோடு இழுக்க வேண்டும்.

 

“ஓ…ம் ஈஸ்வரா…” என்று அந்த உணர்ச்சியைத் தட்டியெழுப்புவது போன்று “அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும், அது எங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா பெறவேண்டும் என்று தியானியுங்கள்.

 

தியானித்தபின் உங்கள் நண்பர்களுக்கு ஒரு நல்லது செய்ய வேண்டுமென்றாலும் இப்படிச் சொல்லுங்கள்.

 

1.அந்த நண்பன் துன்பத்தைச் சொன்னாலும்,

2.அதே சமயம் உங்கள் உணர்ச்சிகள் தூண்டப்பட்டு,

3.மெய்யுணர்வின் தன்மையை உங்களுக்குள் செலுத்தி,

4.“உங்கள் வாக்கு” உங்கள் நண்பனுக்கு அவரது துன்பத்தை நீக்க உங்கள் உணர்வின் சொல் உதவும்.

 

ஆக அவர்கள் மகிழ்ச்சியடையப்படும் பொழுது அந்த மகிழ்ச்சியின் எண்ணம் உங்களுக்கு லாபமாகின்றது.

 

இதைப் போன்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் இதைச் செயல்படுத்த முற்பட வேண்டும்.

 

ஏனென்றால் காலங்கள் குறுகிக் கொண்டிருக்கின்றது. விஷ அலைகள் பரவிக் கொண்டிருக்கின்றது. சிந்திக்கும் நிலை தடுமாறிக் கொண்டே போகின்றது.

 

இதைப் போன்ற விஞ்ஞான உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் இந்த உடலிலிருந்தே, நினைவு இருக்கும் பொழுதே ஒளியாக மாற்றிச் செல்லும் நிலையை நாம் பெறவேண்டும்.

 

ஏனென்றால் இந்தச் சுற்று போய்விட்டால் அடுத்து இந்த பூமியினுடைய நிலைகள் மாறுபடும் நிலைகள் வருகின்றது. அந்த நிலைகளுக்குள் நாம் சிக்குண்டுவிடக் கூடாது.

 

இங்கே நீர்வளமே அதிகமாகும் நிலை வரப் போகின்றது. ஜனங்களுடைய பெருக்கங்கள் அவ்வளவு கூட்டங்கள் கூடும் பொழுது நிலங்களே இருக்காது.

 

நீங்கள் யுத்தமே செய்யவேண்டாம். இன்று ஐந்து வருடக் குழந்தைகளாக இருக்கின்றார்கள் என்றால் (உபதேசம் செய்த வருடம் 1989

1.இனி இருபது வருடம் போகும் பொழுது,

2.இதனுடைய நிலைகளில் யாரோ எவரோ என்றுதான் இருப்போம்.

 

ஜன நெருக்கடியில் நிலங்கள் குறைகின்றது, அதே சமயத்தில் விஞ்ஞான அறிவுகளால் செயல்படுத்தப்பட்ட அனைத்துமே மழை பெய்வதைத் தடுக்கும் நிலையாக வந்துவிட்டது.

 

மழை எல்லா இடங்களிலும் சரியாகப் பெய்யவில்லையென்றல் நமக்கு விவசாயம் இல்லை.

 

விவசாயம் இல்லையென்றால் உணவுக்காக வேண்டி கடந்த காலங்களில் எப்படிக் காட்டுமிராண்டி போல ஒன்றை அடித்து ஒன்றை விழுங்கியது போன்று உலகத்திலேகூட என்ன நடக்கிறது என்று தெரியாது.

 

மனிதனுடைய சத்துக்களைச் சாப்பிட்டால் அது நல்லது என்று அதையும் செய்து கொண்டுள்ளார்கள்.

 

இன்று குழந்தைகளைக் காணவில்லை என்று பார்க்கிறோம். இவையெல்லாம் பார்சலாகின்றது. மேலை நாடுகளில் விஞ்ஞானத்தின் வளர்ச்சி கொண்டிருந்தலும், அங்கே இந்த மாதிரி அசுத்த நிலைகள் “மனிதனை விழுங்கும் நிலைகள்” தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

 

சிறிது காலம் போய்விட்டால் நாம் சிந்திக்கக்கூட நேரமில்லாமல் போய்விடும். இதைப் போன்ற நிலைகள் வருவதற்கு முன்

1.நமக்கு நல்ல நினைவிருக்கும் பொழுதே

2.இந்தப் பூமியிலிருந்தே விண் செல்ல வேண்டும் என்ற நிலையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

 

“ஏனோ தானோ” என்று இல்லாதபடி உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலேயும் மகரிஷிகளின் உணர்வைப் பெறவேண்டும் என்று ஏங்குங்கள்.

 

உங்களுக்குத் துன்பம் வரும் பொழுதெல்லாம் ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள். இது உங்களுக்குள் நல்ல பலனைக் கொடுக்கும்.

Leave a Reply