அரியலூர் இரயில் விபத்தில் ஒரு சுக்குநூறாக ஆன பெட்டிக்குள் ஒரு குழந்தை மட்டும் எப்படித் தப்பியது…?

Polaris Big bear Remote power

அரியலூர் இரயில் விபத்தில் ஒரு சுக்குநூறாக ஆன பெட்டிக்குள் ஒரு குழந்தை மட்டும் எப்படித் தப்பியது…? 

அரியலூர் ரயில் விபத்தை எடுத்துக் கொண்டால் பெரிய பெரிய மனிதர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள். அதிலே ஒரு பெட்டி சுக்குநூறாக நொறுங்கிவிட்டது.

ஆனால் அந்தப் பெட்டிக்குள் ஆறு மாதக் குழந்தை ஒன்று பெஞ்சின் மீது காலை நீட்டி அலுங்காது படுத்திருந்தது. அதனுடைய தாய் இறந்துவிட்டது. இந்தக் குழந்தை மட்டும் மிஞ்சி இருக்கின்றது.
1.அந்தக் குழந்தையின் யதார்த்த உணர்வுகளும்…
2.“தாய் கருவில் வளர்ந்த ஆற்றல்மிக்க சக்தி
3.அந்தக் குழந்தையைக் காக்கச் செய்கின்றது.

நான் (ஞானகுரு) பழனிக்குச் செல்வதற்காக திண்டுக்கல் இரயில்வே ஸ்டேசனில் காத்துக் கொண்டிருந்தேன்.

அந்தச் சமயத்தில் ஒரு பெண் கைக் குழந்தையை தன் இடுப்பில் வைத்துக் கொண்டும் இன்னொரு குழந்தையைத் தன்னுடன் அழைத்துக் கொண்டும் இரயில் தண்டவாளத்தைக் கடந்து சென்றது.

எதிர்பாராது இரயில் வந்துவிட்டது.

வந்தாலும் மோதிய வேகத்தில் தண்டவாள மையத்திலே குழந்தை விழுந்துவிடுகின்றது. தாய் சுக்குநூறாகிவிட்டது. அதனுடன் அழைத்துச் சென்ற குழந்தையும் சுக்குநூறாகிவிட்டது.

கையிலிருந்த கைக்குழந்தை எந்த விதமான விபத்தும் இல்லாது விழுந்த அதிர்ச்சியேதான் தவிர இரத்தக் காயம் எதுவுமே இல்லை.

இவையெல்லாம் அறியாத நிலைகள் கொண்ட உணர்வின் தன்மை எதிர்பாராத நிலைகள் வரும் அந்த உணர்வலைகள்தான் அதைக் காக்கின்றது.

அந்தக் குழந்தைக்கு அறியாத நிலைகள் இருப்பினும் இதைப் போன்ற உணர்வின் இயக்கங்கள் தாய் கருவிலே பூர்வ புண்ணியமாக அமைந்த உணர்வுகள் அது.

பல நிலைகளிலும் காத்திட்ட உணர்வுகள் அது கருவிலே விளைந்திருந்தால்தான் இது நடக்கும். இதைத்தான் “பூர்வ புண்ணியம்…” என்று சொல்வது.

அதே சமயத்தில் விபத்து அந்தக் குழந்தைகளுக்கு வருகிறது என்றால் என்ன காரணம்?

வேதனை உணர்வு கொண்டு சிந்தனையற்ற உணர்வுகளைத் தாய் அதிகமாகச் சுவாசித்திருந்தால் இவர்கள் சிந்தனை குறைந்து
1.அந்த வேதனைப்படும் உணர்வால்
2.அவர்களை விபத்துக்கு அழைத்துச் சென்றுவிடுகின்றது.

விபத்தினால் வேதனைப்படும் நிலைகள் வருகின்றது. வேதனையை அனுபவிக்கின்றது.

இதைப் போல ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் அடிக்கடி வேதனை என்ற உணர்வுகள் அதிகரித்துவிட்டால் அதனின் செயலாக்கமாக அந்த உணர்வுகள் நம்மை வேதனைப்படும் செயலுக்கே நம்மை அழைத்துச் செல்லும்.

நமது உயிருடைய வேலை என்ன?

1.நாம் கவர்ந்த உணர்வினை நமக்குள் ஆழப்பதியச் செய்வதும்
2.பதிந்த உணர்வுகள் கவரும் நிலைகள் ஆன்மாவாக மாற்றுவதும்
3.ஆன்மாவிலிருந்து நுகர்ந்தறிந்து இயக்கிக் காட்டுவதும் தான் உயிரின் வேலை.

இயக்கிக் காட்டிய உணர்வின் அலைகள் கண்ணின் புலனறிவிலே படப்படும் பொழுது
1.நேர்முகமாக இருப்பதை அறிந்துவிடுகின்றோம்.
2.மறைமுகமாக சூட்சமத்தில் இருப்பதை அறியமுடிவதில்லை.

சூட்சமமாக இருப்பதை நாம் எப்படி அறிய முடிகின்றது?

அந்த உணர்வின் தன்மையை நாம் சுவாசித்து அதன் வழியில் இந்த உடலை அழைத்துச் செல்வதும் அங்கு நடக்கும் நிகழ்ச்சி “உடலிலே அனுபவித்தபின் தான்… அதை அறிய முடியும்”.

ஆனால் அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நமக்குள் அதிகமாக விளைந்திருந்தால்
1.எதிர் கொண்டு அலைகள் வந்தால்
2.அதை மாற்றி அமைக்கும் சக்தியாக “ரிமோட் கன்ட்ரோல்…” போன்று செயல்படும்.

இன்று ஒரு கம்ப்யூட்டரில் வலு கொண்ட நிலைகளைச் செயல்படுத்தும் போது அடுத்தடுத்து வரும் பல பாஷைகளை உருவாக்கி இந்த பாஷையைத்தான் செயல்படுத்த வேண்டும் என்று எண்ணிச் செயல்படுத்துகின்றார்கள்.

எதெனெதன் எதிர் நிலை கொண்டுள்ளனரோ அந்த உணர்வலைகளை அதிலே பாய்ச்சி இவன் செலுத்திய இயற்கையில் செயல்படுத்திய இயக்கங்களை அது எந்தெந்த நிலையோ அதற்குத்தக்க கடினத்துக்குத் தக்கவாறு பல பாஷைகளையும் ஒரே காலத்தில் பிரித்துக் காட்டுகிறது இன்றைய விஞ்ஞான அறிவு.

இதைப் போல மெய்ஞானிகள் உணர்ந்த உணர்வின் தன்மையை தீமைகளை அகற்றிய உணர்வின் தன்மையை நம் உடலுக்குள் செலுத்திக் கொண்டால்
1.பல தீமையை விளைவிக்கும் நிலைகள் இருந்தாலும்
2.மகரிஷிகளின் உணர்வலைகளின் “அழுத்தத்தின் காரணமாக”
3.மற்றவைகளை ஒடுக்கி அறிந்திடும் உணர்வலைகளாக நமக்குள் வரும்.

அப்பொழுது கண் புலனறிவில் அறிந்திட்ட அந்த உணர்வுகள் நினைவலையாகக் கண்ணில் பாய்ச்சப்பப்டும் பொழுது
1.இதனுடைய உணர்வுகள் எதிர் கொண்டு
2.அது மாற்றான நிலைகளை நமக்குள் எதிர் மறையாகி
3.நமக்குள் உணர்ச்சியைத் தூண்டி
4.நம்மைத் தப்புவிக்கச் செய்யும் நிலைகளை உருவாக்கும்.

ஒரு சமயம் நான் (ஞானகுரு) மங்களூரில் இருக்கும் போழுது புயல் வருகிறது 180 மைல் வேகத்தில் காற்றுவீசும் என்று பத்திரிக்கையிலேயும் ரேடியோவிலும் அறிவித்திருந்தார்கள். கடலுக்கருகில் இருக்கின்றது மங்களூர்.

அந்த நேரத்தில் நான் ஒரு ஓட்டு வீட்டில் படுத்திருந்தேன். அங்கே என் அருகில் இரண்டு பேரும் படுத்திருந்தனர். ஓட்டு வீட்டிற்கு நேராக இரண்டு தென்னை மரம் இருந்தது.

புயல் காற்றில் அந்த மரங்கள் பேய் ஆடுகிற மாதிரி ஆடியது. நான் கட்டிலின் மீது படுத்திருந்தேன். அப்பொழுது என் தலைக்கு நேராக ஒரு இளநீர் அந்தக் காய் வந்து விழுந்தது.

அப்படி விழுவதற்கு முன் என்னை உசுப்புகின்றது.

உடனே எழுந்து உட்கார்ந்தேன். விழுந்த நேரத்தில் வட்ட வடிவமாக எனக்குள் அது விழுகின்றது. காய் என் மேல் விழுந்ததில் காயமில்லை.

எனக்கு அருகில் படுத்திருந்த பம்பாய்க்காரர் இதை அறியவில்லை. அவர் நல்ல தூக்கத்தில் இருந்தார்.

என் மேல் விழுந்ததைப் பார்த்து அவர் மேல் விழுந்துவிடக் கூடாதே என்று அலைகளைப் பாய்ச்சிக் கொண்டு உட்கார்ந்திருக்கின்றேன்.

மறுபடியும் ஒரு காய் வந்து விழுந்தது. அவர் நீண்ட நிலைகளில் படுத்திருப்பதனால் இது சுக்குநூறாகி அவரைச் சுற்றி வந்து மனித உரு மாதிரி விழுந்தது.

இது மங்களூர் திரு. நாராயணசாமி அவர்கள் வீட்டில் நடந்த நிகழ்ச்சி.

அவர் இந்தப் பக்கம் படுத்திருகின்றார். அவருக்கு மேலே வரப்படும் போது தகரம் இருக்கின்றது. அதற்கு மேல் ஒன்றும் இல்லை. நான் படுத்திருக்கின்றேன் என்று சொல்லி அவர் ஒதுங்கிப் படுத்தார்.

மற்றவர்களுக்கு இடம் கிடைக்கட்டும் என்ற நல்ல எண்ணத்தில் குறுகிய இடத்தில் ஒதுங்கிப் படுத்தார். அவருக்கு மேலே அந்தத் தகரம் தான் வேறு ஒன்றுமில்லை.

ஆனால் பம்பாய்க்காரர் நான் படுத்திருக்கின்றேன் என்ற வகையில் துணிந்து படுத்தார்.

இதைப் போன்ற உணர்வின் இயக்கங்கள் “எதனின் அதிர்வுகளில் இருந்தாலும்” அதை அகற்றக் கூடிய சக்தி கொண்டது. சில சில அதிசயங்கள் நடக்கிறதென்றால் அச்சமயத்தில் அவர்களுக்குள் விளைந்த உணர்வுகளே அவர்களைக் காக்கின்றது.

நாம் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி “எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்” என்று தியானிக்க வேண்டும், தவமிருக்க வேண்டும்.
1.இந்த உணர்வுகள் வலுப் பெறும் பொழுது
2.விபத்துக்கள் ஏற்பட்டாலும்
3.அதிலிருந்து “நம்மைக் காத்திடும் சந்தர்ப்பங்கள்” உண்டு.

Leave a Reply