“நம் வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் வேண்டும்” என்றால் இதை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்

blissful lights

“நம் வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் வேண்டும்” என்றால் இதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்

 

தியானத்தைக் கடைப்பிடித்து வரும் அன்பர்களும் உலகை ஒத்து வரப்படும் பொழுது அரசியல் நிலைகளிலும் சரி மற்ற நிலைகளிலும் சரி பிறர் செயலைக் கண்டு மிகுந்த வேதனைப்படுகின்றனர். ஆனால்

1.தவறு செய்பவர்கள்… திருந்த வேண்டும்… என்ற “வலுவான எண்ணங்களை எண்ணுவதில்லை”.

2.எல்லா உண்மைகளை அறிந்தும் இவர்கள் பிழைகள் செய்கிறார்கள் என்ற

3.”வேதனையைத் தான்” தனக்குள் வளர்க்க முடிகின்றது.

 

1.அவர்கள் மூலத்தை அறிய வேண்டும்

2.மூலக்கூறுகளை அறிய வேண்டும்

3.மூலத்தை அறிந்து அவர்கள் செயல்படவேண்டும் என்று

4.தன் எண்ணத்தை ஓங்கி வளர்க்கின்றனரா? என்றால் “இல்லை…!”

 

காரணம் நாம் சாங்கிய உணர்வுகளை வளர்த்துக் கொண்ட வலுவின் துணை கொண்டே

1.பிறர் செய்யும் செயல்களைக் குறையாக எண்ணி

2.அந்தக் குறைகளையே எண்ணி… அதைப் பேசி… அதை வளர்த்து…

3.நல்லதைப் பலவீனப்படுத்தும்… “வேதனை” என்ற உணர்வையே நமக்குள் வளர்க்க முடிகின்றது.

 

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் உபதேசித்து மெய் உணர்வின் தன்மையைத் தெளிவாகக் காட்டி வருகின்றோம். அதனின் வலுக் கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்று நீங்கள் எண்ணுங்கள்.

 

பிறர் செய்யும் தவறின் உணர்வுகள் நமக்குள் வேதனையாக உட்புகுந்து நமக்குள் விளைவிக்காதபடி பாதுகாக்கும் சக்தியாக உங்களுக்கு ஆத்ம சுத்தியை ஆயுதமாகக் கொடுத்துள்ளோம்.

 

உபதேச வாயிலாகப் பதிந்த உணர்வின் தன்மை கொண்டு மகரிஷிகளை நினைவு கொள்ளும் பொழுது உங்களுக்குள் அறியாது வந்த தீமைகளை அகற்ற முடியும் என்ற தன்னம்பிக்கை கொண்டு வளர்க்கச் செய்து வருகின்றோம்.

 

ஆனாலும் அவரவர்கள் தமக்குள் வளர்த்துக் கொண்ட உணர்வின் வினையே அது வலு பெற்ற நிலைகளாக இயங்கி…, வரும் குறைகளைச் சீர்படுத்தும் நிலை மாறி… “அந்த நிலையிலே சிக்குண்டு” மீளும் வழி இல்லாது தவிப்போர் பலர் உண்டு.

 

1.”ஒரு சிலரே…” இதனின் நிலையை உணர்ந்து அறிந்து

2.தீமைகளை அகற்றிடும் உணர்வின் வலிமை பெற்று

3.தன்னுள் தீமை நாடா நிலையும்

4.தன்னைச் சார்ந்தோருக்கும் தீமைகள் நாடாத நிலையாக

5.”சொல்வாக்காக…” அவர்கள் பதியச் செய்து வருகிறார்கள்.

 

“இப்படி வளர்ந்து கொண்டுள்ள அன்பர்களும் உண்டு”.

 

ஆகவே இதைத் தெரிந்து கொண்டோம். இனி நாம் தெரிய வேண்டியது என்ன? என்பதைத் தெளிந்து “வாழ்க்கையைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்பதற்கே இதைச் சொல்கிறேன்.

 

அன்றாடம் நடக்கும் சம்பவங்களைக் கண்டு நம் வாழ்க்கையில் இருள் சூழும் நிலைகளில்

1.அந்த இருளைப் பிளந்து

2.பொருள் காணும் உணர்வை நமக்குள் வளர்த்து

3.என்றென்றும் மெய்ப் பொருள் கண்டுணரும் நிலையும்

4.இருளைப் பிளந்திடும் உணர்வின் தன்மைகளைப் “பேரருள் பேரொளியாக” வளர்க்க முடியும்.

 

நமக்கு அழியாச் சொத்து அதுதான்.

Leave a Reply