“வைரஸ் காய்ச்சலை” நீக்கச் செய்தார் குருநாதர் – அனுபவம்

“வைரஸ் காய்ச்சலை” நீக்கச் செய்தார் குருநாதர் – அனுபவம் 

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி இருளெல்லாம் வென்று உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாக இருக்கின்றான் “துருவ நட்சத்திரமாக….”

1.அவன் எப்படித் தீமைகளை நீக்கினானோ
2.அந்த ஆற்றல்கள் துருவ நட்சத்திரத்திலிருந்து வருகின்றது.
3.அதை எடுத்துக் “கற்றுக் கொள்ளடா..,” என்றார் நமது குருநாதர்.

அதை எடுத்து எனக்குள் வளர்த்துக் கொண்டே இருக்கின்றேன். எடுத்து வளர்த்தாலும் குருநாதர் எம்மிடம் ஒன்று சொன்னார்.

அதாவது நீ எல்லாம் நல்லதைச் சொல்கிறாய். உன்னைச் சந்திக்க வருபவர்கள் எல்லோரும்
1.“கஷ்டம்…கஷ்டம்…கஷ்டம்…,”
2.“நஷ்டம்…நஷ்டம்…நஷ்டம்…,” என்று சொல்வார்களே
3.நீ அப்பொழுது என்னடா செய்யப் போகிறாய்? என்று கேட்கிறார் குருநாதர்.

உனக்கு இவ்வளவு பெரிய சக்தி கொடுக்கிறேன். ஆனால் இதை நீ எப்படிக் காப்பாற்றப் போகிறாய்?

ஒரு நூறு பேருக்கு நல்லதாக வேண்டும் என்று சொன்னால் அப்பொழுது அவர்களுடைய கஷ்டமான உணர்வுகளை எல்லாம் நீ கவர்ந்தால் என்ன ஆகும்?

இதை எனக்கு அனுபவமாகவே காட்டினார் குரு.

பழனிக்கு அருகில் பாப்பம்பட்டி என்று ஒரு ஊர். அப்பொழுது அந்த ஊர் முழுவதும் “டிங்கி”(டெங்கு) காய்ச்சல் பரவி இருந்தது. அந்த நோயின் விஷத்தன்மையால் மஞ்சளாக வாந்தி எடுப்பார்கள்.

அந்த நேரத்தில் பார்த்தோம் என்றால் மூட்டுக்கு மூட்டு வலி இருக்கும். அவர்களால் நடக்கவும் முடியாது, ஒன்றும் செய்ய முடியாது. இந்த வேதனையை அவர்களால் சகிக்க முடியவில்லை.

இந்த மாதிரி நேரத்தில் தான் குருநாதர் என்ன செய்தார்? அவர்களுக்கெல்லாம் “விபூதியை நீ சொல்லிக் கொடுடா.., ஆசீர்வாதம் செய்து கொடு” என்றார்.

அந்தச் சிறிய கிராமத்தில் உள்ளவர்களுக்குக் கொடுத்தவுடனே எல்லோரும் நன்றாக ஆனது.., நோய் போய்விட்டது.., நல்லதாகிவிட்டது.., என்று சொல்கிறார்கள்.

அதற்கு முதலில் டாக்டர்களிடம் சென்று மாதக்கணக்கில் பார்க்கிறார்கள். ஊசி மருந்து எல்லாம் போட்டும் அவர்களால் முடியவில்லை.

ஆனால் இந்த விபூதியைக் கொடுத்தவுடன் எல்லோருக்கும் வலி குறைந்து விட்டது உடல் நன்றாக ஆனது.

அடுத்து பார்த்தோம் என்றால் இதைக் கேள்விப்பட்டு பக்கத்துக் கிராமத்திலிருந்து ஏராளமான பேர் வருகின்றார்கள். அவர்களுக்கும் கொடுத்தவுடன் நன்றாக ஆனது. இது நடந்த நிகழ்ச்சி.

கடைசியில் என்ன ஆனது?

1.எனக்கே வலி வர ஆரம்பித்துவிட்டது.
2.என்னதான் தடுத்தாலும் அவர்கள் எல்லோரும் சொல்லச் சொல்ல எனக்கு வலி ஆரம்பித்துவிட்டது.

வருபவர்களிடம் அந்த “மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்… எனக்கு உடல் நன்றாக ஆக வேண்டும்…” என்று சொல்லிக் கேளுங்கள் என்று சொன்னேன். ஆனால் அதை அவர்கள் எங்கே கேட்கிறார்கள்?

1.என்னால் நடக்க முடியவில்லை,
2.எழுந்து நிற்க முடியவில்லை என்று தான் கேட்கின்றார்கள்.
3.என் காதில் இது விழுகின்றது.
4.என் கண் அவர்களைப் பார்க்கின்றது.
5.கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலன் சுவாசிக்கின்றது.
6.என் உயிரில் படுகின்றது.

எனக்கு அந்தச் சக்தி வைத்துத் துடைத்துத் துடைத்துப் போக்கிப் பார்த்தேன் முடியவில்லை.

அப்பொழுது குருநாதர் இங்கே பழனியில் இருந்தார்.

“டேய்…! உடனே கிளம்பி வாடா…” என்றார் குருநாதர். நான் உன்னைச் செய்யச் சொன்னது என்ன..? நீ செய்வது என்ன…! என்கிறார்.

அவர்களுக்கெல்லாம் நல்லதாக ஆனது. எனக்கு அந்தக் காய்ச்சல் வந்துவிட்டது. அப்புறம் குருநாதரிடம் புறப்பட்டுச் சென்றேன்.

போனவுடன் அவர் எனக்குச் சிலதுகளைச் சொல்லி மாற்றி மறுபடியும் போடா என்றார். நீ போய்ச் சொல் என்றார். அப்புறம் வந்தவர்களுக்குச் சொல்லி அவர்களுக்கும் நன்றாக ஆனது.

நல்லதாக ஆக வேண்டும் என்றுதான் வருகின்றார்கள். ஆனால், அவர்களை மாற்றிக் கொள்ள முடிகிறதா என்றால் இல்லை. இந்த மாதிரிச் சில நிலைகள் அவர்களுக்கு.

நம் வாழ்க்கையில் இப்படிப் பிறருடைய கஷ்டங்களையும் சிரமங்களையும்… அவர்கள் செய்யும் தவறுகளையும்… பார்க்க நேர்ந்தால் கேட்க நேர்ந்தால் அவைகளைத் தூய்மைப்படுத்தவில்லை என்றால் நமக்குள் நிச்சயம் “தோஷங்களாக” மாறும்.

1.தீமைகள் எப்படி வருகின்றது?
2.தீமைகளை எப்படிப் போக்க வேண்டும்?
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நம்மைக் காத்துக் கொள்வது எப்படி…? என்று மிகவும் தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.

எமக்கு இப்படித்தான் அனுபவபூர்வமாகக் காட்டினார் குருநாதர்.

Leave a Reply