“வேதனை” என்ற நஞ்சை நீக்கக்கூடிய ஒரே சக்தி துருவ நட்சத்திரம்

Gnanaguru - Venugopalswami

“வேதனை” என்ற நஞ்சை நீக்கக்கூடிய ஒரே சக்தி துருவ நட்சத்திரம்

விஞ்ஞானிகள் மனித உடலுக்குள் இயங்காத பழுதான உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி மாற்று உறுப்புகளைப் பொருத்துகின்றார்கள். நம்மைக் காக்கின்றார்கள்.

மாற்று உறுப்புகளைப் பொருத்தினாலும் அவைகள் தொடர்ந்து சீராக இயங்க வேண்டுமென்றால் பல உணவுக் கட்டுப்பாடுகளையும். மற்ற மருந்துகளையும் கொடுப்பார்கள்.

தண்ணீர் இவ்வள்வுதான் குடிக்க வேண்டும், அதைச் சாப்பிடக் கூடாது, இதைச் சாப்பிடக்கூடாது. எங்கே சென்றாலும் இந்தக் கட்டுப்பாடுகளை எல்லாம் நீங்கள் பின்பற்ற வேண்டும் என்றும் சொல்வார்கள்.

அந்தக் கட்டுப்பாடுகளை நாம் பின்பற்றவில்லை என்றால் அந்த உறுப்பு கழன்று விடும், இயக்கம் மாறிவிடும். பின் வேதனையைத்தான் அனுபவிக்க வேண்டும்.

“எவ்வளவு நாள்…” இதைப் போன்ற நிலையில் வாழ முடியும்? சந்தோஷம் நீடித்து இருக்கின்றதா…! காசையும் செலவழித்துச் சிறிது நாள் வாழ்வதற்குள் எவ்வளவோ வேதனைகளைச் சந்திக்க நேர்கின்றது.

ஆனால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் உடலில் உள்ள உறுப்புகளுக்குள் செலுத்தி உறுப்புகளிலுள்ள தீமைகளை நீக்க முடியும்.

அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்களைத் துருவ நட்சத்திரத்தின் பேரொளியைப் பெறச் செய்து அதை உற்சாகப்படுத்தி நல்ல உறுப்பாக மாற்றிக் கொள்ள முடியும்.

1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர்ந்து
2.சுவாசித்த அந்த உணர்வலைகளை
3.கண்ணின் நினைவு கொண்டு உள் முகமாக உடலுக்குள் செலுத்தி
4.நேரடியாக எந்த உறுப்போ அங்கேயே செலுத்த முடியும்.

அந்த உறுப்பை உருவாகிய அணுக்களில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று இணைத்தால் உடலை உருவாக்கிய அந்த நல்ல அணுக்கள் அனைத்தும் வலு பெற்று உறுப்பைச் சீராக இயங்கச் செய்யும்.

அந்த ஆற்றலைப் பெற துருவ தியானத்தைப் பழகிக் கொள்ள வேண்டும்.

1.நம் பூமியின் வட துருவப் பகுதி வழியாக வந்து கொண்டிருக்கும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியான
3.“அருள் ஞானப் பொக்கிஷத்தை” நமக்குள் கவரும் அந்த அதிகாலை நேரமே “துருவ தியானம்”.

துருவ தியானத்தை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் இந்த உடலை விட்டு எப்பொழுது பிரிந்தாலும் உயிர் நேராக அந்தத் துருவ நட்சத்திரத்திலேயே “உங்களைக் கொண்டு போய் நிறுத்தும்”.

Leave a Reply