தியானத்தின் மூலம் நாம் பெறக்கூடிய பாசுபத அஸ்திரம்…!

Lord shiva and arjuna

தியானத்தின் மூலம் நாம் பெறக்கூடிய பாசுபத அஸ்திரம்…! 

கார்த்திகை நட்சத்திரம் சூரியனைப் போன்று தனக்கென்று உபகோள்களை அமைத்து ஒரு பிரபஞ்சமாக மாறி வருகின்றது. நம் பிரபஞ்சத்திலுள்ள 27 நட்சத்திரங்களும் 27 பிரபஞ்சங்களாக மாறிவிட்டால் நமது சூரியனுக்கு உணவில்லாது போய்விடும்.

ஏற்கனவே இந்த நிலையாகி விட்டது.

நம் பிரபஞ்சத்தில் முன்னிலையில் இருப்பது கார்த்திகை நட்சத்திரம்.

கார்த்திகை நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க உணர்வலைகளே மனிதனின் ஆறாவது அறிவான அறிந்துணர்ந்து செயல்படும் தன்மைக்கு காரணம்.

அறிந்திடும் உணர்வுகள் ஒளியான உணர்வின் அலைகள் மற்ற அணுக்களுடன் கலக்கப்படும் பொழுது
1.அணுவின் இயக்கத் தொடரை அறிந்திடும் செயல்
2.”ஒலியின் நாதங்களாக” எழுப்பச் செய்து அந்த உணர்வின் தன்மை கொண்டு
3.மற்றவர்களுக்கு நுகரச் செய்யும் உணரச் செய்யும்
4.உணர்த்திடும் உணர்வின் ஒளி அலைகளைப் பெற்றது கார்த்திகை நட்சத்திரம்.

அதனின் செயலாக்கத்தை அது உமிழாது தனக்குள் அடக்கிக் கொண்டால் நம் பிரபஞ்சமான சூரியனுக்குள் உணர்வின் தன்மை ஒலியாகி எதிர் நிலையின் தன்மை நாம் கண்டுணரும் நிலைகள் மறைக்கப்படும் நிலைகள் வந்துவிடும்.

அப்படி ஆகும்போது மனிதனின் சிந்தனைகள் குறைவுற்று மிருக உணர்வுகளின் தன்மைகள் அதிகமாகி பூமி சீர்கெடும் நிலை உருவாகிவிடும்.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து நம்மை மீட்டுக் கொள்ள அன்று கண்ணன் (கண்கள்) காட்டிய நிலைகள் கொண்டு அந்த மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணி எடுத்தே ஆக வேண்டும்.

1.நம் நினைவுகளை விண்ணிலே கூர்மையாகச் செலுத்தி
2.“நரசிம்ம அவதாரமாக” தீய நிலைகள் நமது உடலுக்குள் வராதபடி அதைப் பிளந்து
3.அந்த மகரிஷிகளின் ஆற்றல்மிக்க உணர்வுகளை நமக்குள் சேர்த்து
4.அதைப் பருகிடும் நிலையாக நாம் சுவாசிக்கும் நிலைகள்,
5.அந்த ஆற்றல்மிக்க நிலையாகப் பெறச் செய்வதே யாம் சொல்லும் தியானம்.

மகாபாரதக் காவியத்தில் கண்ணன் சொல்லுகின்றான்.
1.சிவனான இந்த உடலுக்கு
2.அந்த ரிஷியின் தவக்கோலத்தில் இருந்து பெற்ற
3.”தவத்தின் பலனால் தான்” உனக்குள் இருக்கக்கூடிய தீமைகளை நீக்க முடியும் என்று
4.”விண்ணை நோக்கி ஏகும் முறையை” அர்ச்சுனனுக்குத் தெளிவாக எடுத்துரைத்தான்.

“சிறு துளி பெருவெள்ளம்” என்பது போல ஞானிகளின் உணர்வின் ஆற்றல்மிக்க எண்ணத்தின் தன்மை “ஒரு வித்தாக” உங்களுக்குள் வலுப் பெறும் சத்தாக ஊழ்வினையாகப் பதிவாக்கப்படுகின்றது.

இதனின் துணை கொண்டு “எண்ணும்பொழுது” நீங்கள் அந்தச் சக்திகளைப் பெற முடியும்.

ஒரு நூலால் இழுக்க முடியாத ஒரு பொருளை பல நூல்களை ஒன்றாகச் சேர்த்து கயிறாக்கி இழுக்கின்றோம். அது போன்று
1.எல்லாருடைய  எண்ணங்களும் ஒருமித்த நிலைகள் கொண்டு
2.“மகரிஷிகள் அருள் ஒளி அனைவரும் பெற வேண்டும்” என்ற ஏக்க உணர்வுடன் தியானித்தால்
3.சுலப நிலைகளில் உங்களுக்குள் அது இணையும்.

அவ்வாறு எண்ணி எடுத்து நீங்கள் ஒவ்வொருவரும் இடும் முச்சலைகள் அழுத்தமான நிலைகளில் பரவி நம்மைக் காக்கலாம் நம்மைச் சார்ந்தவர்களையும் காக்கலாம்.

இந்தப் பிரபஞ்சத்திலுள்ள சூரியன் செயலிழந்தாலும் “நாம் என்றுமே அழியா ஒளியின் சரீரமாக” துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ முடியும்.

Leave a Reply