மகரிஷிகளின் அருள் சக்திகளை நிகழ்காலத்தில் வளர்த்தால் எதிர்காலத்தில் நீங்கள் அரும்பெரும் ஞானி ஆகலாம்

healing hands

மகரிஷிகளின் அருள் சக்திகளை நிகழ்காலத்தில் வளர்த்தால் எதிர்காலத்தில் நீங்கள் “அரும்பெரும் ஞானி ஆகலாம்”

 

நிகழ்காலத்தில் ஒரு பாம்பு தன் இரைக்காக தவளையின் மீது தன் விஷத்தைப் பாய்ச்சி அதை உணவாக எடுத்துக்கொள்கின்றது.

 

1.ஆனால் தவளையினுடைய நிகழ்காலம் – பாம்பிடமிருந்து தப்பிக்கக் கூடிய எண்ணம்

2.அந்தச் சந்தர்ப்பம் பாம்பின் விஷம் இதற்குள் அதிகமான பின்

3.எதிர்காலம் பாம்பின் நிலைகளாக உருபெறுகின்றது

4.பாம்பின் உடலுக்குள் சென்று தவளை பாம்பாகப் பிறக்கின்றது.

5.ஆக தவளையின் இந்த நிகழ் காலம் அதனுடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றது.

 

இப்பொழுது மனிதனாக இருக்கும் நாம் வேதனைப்படுவோருடைய உணர்வை நாம் கேட்கின்றோம். அந்த வேதனை உணர்வுகள் நமக்குள் ஆகிவிட்டால் அந்த வேதனை வளர்ச்சி ஆகிவிட்டால்…, “வேதனை என்ற உணர்வுக்கு” – நம் எதிர்காலத்தை அமைத்து விடுகின்றது.

 

இதைப் போன்று கடும் தீமைகளில் இருந்து நாம் தப்புதல் வேண்டும்.

 

ஏனென்றால் இன்றைய மனிதனின் வாழ்க்கையில் எத்தனை துயரங்களை எண்ணுகின்றோமோ அவை எல்லாம் எதிர்காலத்தை நிர்ணயித்துவிடும்.

 

நாம் நம்முடைய எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டுமென்றால் அந்த மகரிஷிகளின் ஆற்றலை நாம் பெறுதல் வேண்டும்.

 

1.நமக்குத் துன்பம் வரும்பொழுதெல்லாம் அதை மறக்க

2.மகரிஷிகளின் உணர்வை நாம் பெற வேண்டும் என்று ஏங்கிப் பெற்றால் – இந்த நிகழ்காலம்

3.எதிர் காலத்தில் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நம்மை அழைத்துச் செல்லும்.

 

இதை நீங்கள் பெறும் தகுதிக்கு சிவன்ராத்திரி என்றும் நீங்கள் விழித்திருக்க வேண்டும் என்றும் சொல்வது இதுதான்.

 

1.ஏனென்றால் எத்தகைய தீமையை நாம் கேட்டுணர்ந்தாலும்

2.”அது நமக்குள் உட்புகுந்து” அது நம் எதிர் காலத்தை நிர்ணயித்துவிடக்கூடாது.

3.நிகழ்காலத்தில் அதை வளர்த்திடக் கூடாது.

 

நிகழ்காலத்தில் அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் வளர்த்துக் கொண்டால் எதிர்காலம் நாம் ஒளியின் சரீரமாகப் பெற முடியும்.

 

இதைக் காட்டி உணர்த்துவதற்குத்தான் யானையின் சிரசை மனித உடலில் பொருதி விநாயகரைக் காட்டினார்கள் ஞானிகள்.

 

மிருக நிலையில் சேர்த்துக் கொண்ட நிலைகளில் அதனுடைய நிகழ்காலத்தில் ஒவ்வொரு சரீரத்திலும் காத்துக் கொண்ட உணர்வுகளை வளர்த்து வளர்த்து அதனின் எதிர்காலமாக – இன்று நம்மை மனிதனாக உருவாக்கியது.

 

மனிதனின் வாழ்க்கையில் தீமைகளை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி இன்றும் துருவ நட்சத்திரமாக வீற்றிருக்கும் துருவ மகரிஷியும் அவரைப் பின்பற்றி சென்ற அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் கவர வேண்டும்.

 

1.இந்த நிகழ்காலத்தில் எத்தகைய தீமைகளைக் கண்டுணர்ந்தாலும்

2.அந்தத் தீமையை நீக்க அந்த மகரிஷிகளின் ஆற்றலை நாம் பெற வேண்டும் என்று ஏங்கிப் பெற்றால்

3.நம் நிகழ்காலம் எதிர்காலத்தில் ஞானிகள் அடைந்த எல்லையை அடைய முடியும்.

 

ஏனென்றால் பண்பால் அன்பால் பரிவால் எனக்கு இப்படிச் செய்தார்களே எனக்குத் துரோகம் செய்தார்களே என்று இந்த நிகழ்காலத்தில் நாம் அதிகமாக மற்றவருடைய எண்ணத்தை அதிகரித்து விட்டால் என்ன ஆவோம்?

 

நாம் யார் மேல் பகைமை கொண்டோமோ அந்த உணர்வுகள் நமக்குள் வளரப்பட்டு

1.இதை நிகழ்காலத்தில் வளர்ந்தபின்

2.எதிர்காலம் அந்தப் பகைமை உணர்வுகள் நமக்குள் வந்து

3.அவர் உடலில் புகுந்து

4.இந்தப் பகைமையை தீர்க்கும் உணர்ச்சிகளின் வேதனையை உருவாக்கி அந்த உடலைத்தான் வீழ்த்தும்.

 

பின் அந்த வேதனையை உருவாக்கிய பின் எத்தகைய வேதனையின் உணர்வுகள் அணுக்கள் ஆனதோ அடுத்து தேய்பிறையாக மற்ற மனிதனல்லாத உடலைத்தான் உருவாக்கும்.

 

இதைப்போன்ற நிலைகளில் இருந்து நாம் மீள்வதற்குத்தான் இந்த சிவன்ராத்திரி – நீ விழித்திரு.

1.பல கோடிச் சரீரங்களில் இருந்து நீ தப்பினாய்

2.எக்காரணத்தைக் கொண்டும் தீமைகள் வளராதபடி அருள் உணர்வைச் சேர்க்கும் நிலையில்

3.இனி எப்பொழுதும் நீ விழித்திருத்தல் வேண்டும்.

 

அருள் ஞானியின் உணர்வை ஒவ்வொரு நொடியிலும் நீ நுகர்ந்து இந்த வாழ்க்கையில் வரும் மாசினை நீ துடைக்க வேண்டும் என்பதே ஞானிகள் உரைத்தது.

 

அருள் மகரிஷிகளின் உணர்வை நிகழ்காலத்தில் வளர்த்து எதிர்காலத்தில் நமக்குள் அது உருவாக்கிடல் வேண்டும் என்பதனை நினைவுபடுத்தும் நாள் தான் “சிவன் இராத்திரி”.

Leave a Reply