வலிமையான ஆயுதம் இராமபானம்

Sri Ram.jpg

வலிமையான ஆயுதம் இராமபானம் 

நமக்குள் வரும் துன்பத்தைப் போக்குவதற்குத்தான் ஆத்ம சுத்தி. யாம் கொடுக்கும் அந்த ஆயுதத்திற்குள் (இராமபானம்) பல இரகசியங்கள் இருக்கின்றது.

அந்த ஆயுதத்தைப் பயன்படுத்தும் நிலைகளுக்குத்தான் இதை உணர்த்துகின்றோம். இராமன் என்பது – நம் உயிருக்குள் உணர்ந்த ஒவ்வொரு குணத்தின் நிலைகள்தான்.., இராமன், பரசுராமன், பலராமன் என்பது.

அம்பு என்று இருந்தாலும்
1.இராமபானத்தைப் பயன்படுத்தும் நிலைகள் கொண்டு – நம் எண்ணங்கள் கொண்டு
2.இந்த எண்ணத்தின் வேகத்தின் நிலைகள் கொண்டு
3.நாம் எந்த எண்ணத்தின் உணர்வைப் பாய்ச்சுகின்றோமோ
4.அந்த அம்பின் தன்மைதான் மற்றதைக் கவர்ந்து அதை இழக்கச் செய்யும்.
5.அந்த எண்ணத்தின் நிலைகள் செயலாவதுதான் ஆஞ்சநேயன்
6.ஆஞ்சநேயன் – வாயு புத்திரன்.., இராமனின் தூதுவன். அதாவது நாம் வெளிப்படுத்தும் எண்ணங்கள் வாயுவாகச் சென்று மற்றொன்றை இயக்கும் நிலை.

இதையெல்லாம் சாஸ்திரத்தில் தெளிவாக அன்று மெய்ஞானிகள் உணர்த்தினாலும் அதற்குள் இருக்கும் நிலையை மெய்ப்பொருளை உணர்வார் இல்லை.

இப்பொழுது யாம் உபதேச வாயிலாகக் கொடுக்கும் எண்ணங்கள் அனைத்துமே இராமபானங்கள்.

மற்றவர்கள் (சீதா சுயம்வரத்தில்) வில்லைத் தூக்க முடியவில்லையென்று சொன்னபோது மெய்யுணர்வின் தன்மையைத் தூக்கும் சக்திக்குத் தக்க கணையை உங்களுக்குள் இயங்கச்செய்து,

1.யாம் கொடுக்கும் ஆத்ம சுத்தி என்ற அந்த ஆயுதத்தை
2.நீங்கள் சரியான விதத்தில் பக்குவப்படுத்திக் கொள்ளலாம்.

யாம் உங்களுக்குள் பதிவு செய்த ஞான வித்தை வளர்க்க மகரிஷிகளின் அருள் ஒளி பெற தியானிப்போம்.

அகஸ்திய மாமகரிஷியின் அருள்சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி இருங்கள். மனதிற்குள் எண்ணி ஏங்கி இருங்கள்.

அகஸ்திய மாமகரிஷியின் அருள்சக்தி எங்கள் ஜீவாத்மா பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களை மூடி உங்கள் உடல் முழுவதற்கும் நினைவைச் செலுத்தி உங்கள் உடலைத் தியானியுங்கள்.

அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியால் எங்கள் உடல் நோய் நீங்க அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி இருங்கள்.

அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியால் உடல் நோய் நீங்கி நாங்கள் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா என்று ஏங்கி இருங்கள்.

1.எங்களுக்கு நல்ல எண்ணமும்
2.எங்களைப் பார்ப்போருக்கு நல்ல எண்ணமும்
3.எங்கள் வழி நல் வழியாகவும்
4.எங்களுக்கு உன்னை என்றும் மறவாத எண்ணமும் கொடு ஈஸ்வரா.

அகஸ்திய மாமகரிஷியின் அருள்சக்தியால் நாங்கள் பார்ப்போர் அனைவரும் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

இவ்வாறு தியானத்தால் எண்ணி எடுக்கும் உணர்வுகள் இராமபானமாக இயங்கி உங்களை மகிழ்ந்து வாழச் செய்யும்.

அதே சமயத்தில் நீங்கள் மற்றவர்களுக்குப் பாய்ச்சும் அருள் உணர்வுகள் ஆஞ்சநேயனாக அவர்களுக்குள் சென்று அவர்களுக்குள் அறியாது சேர்ந்த தீமைகளை அகற்றும் சக்தியாக இணைந்து மகிழ்ச்சியூட்டும் உணர்வாக இயக்கும்.

Leave a Reply