உயிரின் இயக்கச் சக்தியைக் கூட்டி நோயை நீக்கும் முறை

Third eye Meditation.jpg

உயிரின் இயக்கச் சக்தியைக் கூட்டி நோயை நீக்கும் முறை 

நோய் வந்தவர்கள் என்ன செய்கின்றார்கள்? நோயை எண்ணி “ஐயோ.., எனக்கு இப்படி ஆகிவிட்டதே” என்று அதையே ஜெபிக்கின்றார்கள்.

அதாவது நாம் பலவீனமடையும்போது எதில் பலவீனம் அடைகின்றோமோ அதில் விஷமான உணர்வுகள் ஊடுருவுகின்றன.

விஷத்தை மாய்க்கக்கூடிய சக்தி ஒவ்வொருவருக்கும் உண்டு. நெருப்பு எந்த அளவிற்கு இருக்கின்றதோ அந்த அளவிற்குச் சமைக்க முடிகின்றது.

1.நாம் பலவீனமான உணர்வுகளைச் சுவாசிக்கும்போது
2.உயிரின் நிலைகளிலும் உடல் உறுப்புகளின் சில பகுதிகளிலும் காந்தத் தன்மை குறைகின்றது.
3.இதனால் நம்மிடத்தில் மின் (கரண்ட்) உற்பத்தி குறைகின்றது.

வீடுகளில் மின்சாரம் குறைவாக வந்தால் ட்யூப் லைட் “மினுக்.., மினுக்..” என்று விட்டு விட்டு எரியும். அதைப் போன்று நம்மிடத்தில் நினைவின் சக்தி குறையும்போது பலவீனமான நிலைகளில் விஷமான உணர்வுகள் ஊடுருவுகின்றன.

நம்மிடத்தில் விஷமான உணர்வுகள் ஊடுருவும்போது நமக்குள் உணவை ஜீரணிக்க முடியாத நிலை ஏற்படுகின்றது.

சூரியன் தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு பிற விஷ ஆற்றலின் தன்மை தன்னிடம் நெருங்க விடாதபடி தடுத்து  தன் உணர்வின் ஆற்றலைப் பிரபஞ்சம் முழுவதும் பரவச் செய்கின்றது.

இதைப் போன்று துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை தம்மிடத்தில் சேர்த்து அதன் உணர்வின் ஆற்றலைத் தம்மிடத்தில் பெருக்கி பிற துன்பம் வேதனை சஞ்சலம் போன்ற விஷ உணர்வுகள் தம்மிடம் வராதபடி தடுத்து அருள் உணர்வின் மணத்தைத் தங்களிடமிருந்து வெளிப்படுத்தியவர்கள் அருள்ஞானிகள்.

நீங்கள் தினமும் 10 நிமிடமாவது தியானம் செய்யுங்கள். “மனிதரால் முடியாதது… எதுவுமே இல்லை”.

துருவ நட்சத்திரத்தை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும்.

ஈஸ்வரா என்று சொல்லும்போது உங்கள் கண்ணின் நினைவைப் புருவமத்தியில் செலுத்தி உயிரான ஈசனை எண்ண வேண்டும்.

யாம் உங்களுக்குக் கொடுத்துள்ள ஆத்ம சுத்தி என்ற ஆயுத்த்தைப் பயன்படுத்தி உங்களிடத்தில் வரும் தீமைகளை உடனுக்குடன் துடைத்துப் பழகுங்கள்.

1.துன்பங்கள் வரும்பொழுதெல்லாம்
2.துருவ நட்சத்திரத்தின் அருள் சக்திகளை உங்கள் உடலுக்குள் திணியுங்கள்.

உங்களையறியாது துயரப்படுத்திக் கொண்டிருக்கும் உணர்வுகளை மாய்த்துவிட்டு மகிழ்ச்சியின் எண்ணங்களை உங்களுக்குள் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்… வலிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.

உயிரின் துடிப்பிற்குள் ஏற்படும் வெப்பம்தான் நம் உடலை இயக்குகின்றது. “அந்த வெப்பம்” இல்லையென்றால் நமக்குள் இயக்கமில்லை.

ஆனால் வெப்பமும் கதிரியக்கமும் ஒன்றுடன் ஒன்று மோதும் போது ஒன்று மற்றொன்றை வெல்லப் பார்க்கின்றது. கதிரிக்கயம் ஒன்றினுள் ஊடுருவி ஒன்றை வெல்லும் சக்தி பெற்றது. வெப்பமோ ஒன்றைக் கருக்கும் தன்மை பெற்றது.

கதிரியக்கச் சக்தி வெப்பத்தைத் தாக்கியவுடன் வெப்பம் அதிகமாக ஆகின்றது. இதன் தொடர் கொண்டு வெப்பத்தின் நிலைகள் கதிரியக்கத்தை அடக்கப் பார்க்கின்றது.

இதன் போர் முறைதான் “நம் உயிரின் துடிப்பு”.

இவைகளின் போரினால் தோன்றும் வெப்பம்தான் நமக்குள் இருக்கக்கூடிய காந்த அலைகளை இயக்கி கரண்டை (மின் ஆற்றலை) உற்பத்தி செய்கின்றது.

1.நம் உடலிலுள்ள ஒவ்வொரு அணுவையும் இயக்குவது
2.நமது உயிரின் மின் ஆற்றல்தான்.

இந்த இயற்கையின் நியதிகளை பேருண்மைகளை நம் ஆறாவது அறிவால் அறிந்து கொண்டபின் உடலை விட்டுச் செல்லும் நம் உயிரான்மா விண்ணில் அழியா ஒளிச் சரீரம் பெறவேண்டும்.

இதுதான் “முழு முதற் கடவுள்” என்பது.

ஆகவே உங்கள் உடலுக்குள் நின்று ஆட்சிபுரியும் அவனை உயிரை ஈசனைக் கடவுள் என்று எண்ணுங்கள். உடலை அவன் வீற்றிருக்கும் ஆலயம் என்று மதியுங்கள்.

உயிர் நமக்குள் ஒளியாக நின்று ஆட்சி புரிகின்றது. உயிரைப் போன்றே உயிரில் ஒன்றும் உணர்வனைத்தும் ஒளியாக மாற்றி “விண் செல்வோம்” என்று நமக்குள் உறுதிப்படுத்தி அந்த உறுதியின் அடிப்படையில் நாம் தியானிப்போம் தவமிருப்போம்.

Leave a Reply