மனிதனாகப் பிறப்பது மிகவும் அபூர்வம் – பிறந்த பலனை அடையும் வழி

Divine light.jpg

மனிதனாகப் பிறப்பது மிகவும் அபூர்வம் – பிறந்த பலனை அடையும் வழி

மனிதனாகப் பிறப்பது மிகவும் அபூர்வம். இந்த நிலைகளிலே நாம் பெற வேண்டியது ஒளிச் சரீரம்.

மனிதனுடைய ஆசைக்குள்.., நாம் எடுத்துக் கொண்ட உணர்வுக்குள் “சிக்கிவிட்டால்”, அது நம்மை படுபாதாளத்திற்கே இட்டுச் செறுவிடும்.

இன்று நாம் மகிழ்ச்சியாக இருப்போம். நாம் சுவையான லட்டுகளையும் மற்ற பதார்த்தங்களையும் விரும்பிச் சாப்பிடுவோம்.  சாப்பிடும் பொழுது ஆனந்தப்படுவோம்.

ஆனால், உடல் ஏற்றுக் கொள்ளாத நிலைகள் வரப்படும் பொழுது “வயிற்றை வலிக்கிறது..,” என்கிற நிலை பின்னர்தான் தெரியும்.

இன்று உங்களை நான் ஏமாற்றலாம்.

ஆனால், எனக்குள் இருக்கின்ற ஈசனான உயிர் நான் எதை எடுக்கின்றேனோ.., எதைச் சுவாசிக்கின்றேனோ.., அந்த உயிரான ஈசனிடம்தான் அது படுகின்றது. “அதை மாற்ற முடியாது”.

அந்த உணர்ச்சி உடலுக்குள் இயங்குகின்றது. இந்த உணர்வின் சத்து என் உடலுக்குள் அமுதாகச் சுரக்கச் செய்கின்றது.

நான் எடுத்துக் கொண்ட உணர்வின் சத்து என் உடலிலிருந்து அகலாது. “நான் எடுத்துக் கொண்ட நிலைகள்” எனக்குள் அணுவாக திசுவாக உடலாக மாறும்.

ஒருவரை.., “இன்று நான் அவரை என்ன செய்கிறேன்..? பார்…! என்று எண்ணினால் இந்த உணர்வின் தன்மை “அதிவேகமான உணர்வுகளை எடுத்து.., அவனை நான் உதைக்க வேண்டும்..,” என்று சொல்லும்.

1.அதே உணர்வுகள் எனக்குள் சுவாசித்தவுடனே,

2.”எதை ஒழிக்க வேண்டும்..,” என்று சொன்னேனோ

3.அதே உணர்வுகள் எனக்குள் வந்து நோயை உண்டாக்கும்.

இந்த உயிர் இல்லை என்றால் இந்த உடல் ஒன்றும் செய்யாது. அந்த ஈசன் வெளியிலே சென்றுவிட்டால்.., “உடல் நீசமாகும்”.

ஆக, ஈசன் உள் நின்றிருக்கும் பொழுது “எடுக்கும் (சுவாசிக்கும்) உணர்வின் மணமே

1.நம் உடலின் எண்ணம்

2.நம் உடலின் செயல்

3.நம் உடலின் மணம்

4.அந்த மணத்திற்குள் மறைந்த உணர்வே உடலின் அமைப்பு – “அடுத்த பிறவி”.

இது இயற்கையின் நியதி. நாம் இவைகளிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால்.., ஒரே வழி தான்.

1.நமக்குள் இருக்கக்கூடிய உயிரான ஈசனின் துணை கொண்டு

2.மெய்ஞானியின் அருள் ஒளியினுடைய தன்மைகளைச் சரியான நிலைகளிலே யாம் சொல்லும் முறைப்படி இந்தத் தியானங்களை எடுத்து

3.ஆத்ம சுத்தியும் பயிற்சியும் செய்து தீமைகளைத் துடைத்துப் பழக வேண்டும்.

இதைப் போன்று இந்த உணர்வின் ஆற்றலின் தன்மையை நாம் ஒவ்வொரு நிமிடமும் உணர்ந்து நமது குருநாதர் காட்டிய அருள் வழியினுடைய நிலைகளில் செயல்பட வேண்டும். வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அருள் உணர்வுகளை நமக்குள் சேர்க்கச் சேர்க்க நம் உயிரான்மாவில் “மகரிஷிகளின் அருள் மணங்கள் பெருகி” அந்த மணத்திற்கொப்ப மகரிஷிகள் வாழும் எல்லையை அடைய முடியும்.

மனிதன் முழுமை அடையும் வழி இதுதான். மனிதன் அடைய வேண்டிய எல்லை சப்தரிஷி மண்டலம் தான்.

பல கோடிச் சரீரங்களிலிருந்து நம்மை மனிதனாக உருவாக்கிய உயிரான ஈசனுக்குச் செய்யும் சேவை இது தான்.

Leave a Reply