என் வினை என்னைப் பிடித்து ஆட்டுகின்றது… என்று சொல்கிறோம் அது எந்த வினை…?

sternum.jpg

என் வினை என்னைப் பிடித்து ஆட்டுகின்றது… என்று சொல்கிறோம் அது எந்த வினை…?

நம் உடலில் வரும் நோய்களை விஞ்ஞான அறிவுப்படி சில மருந்துகளைக் கொடுத்துத் தடுத்து நிறுத்துகின்றோம். ஆனால், நோய் உருவாவதற்குக் காரணமான நிலைகளை முழுமையாக மாற்ற முடியவில்லை.

காரணம் என்ன…?

நாம் உற்றுப் பார்க்கும் உணர்வுகளைக் கண்ணில் உள்ள கருவிழி “ஊழ்வினை” என்ற வித்தாக நம் விலா எலும்புகளில் பதிவாக்கிவிடுகின்றது.

ஊழ்வினை என்றால் இயக்கம்.

உதாரணமாக நமக்கு வேண்டியவர் ஒருவர் வேதனைப்படுகிறார் என்றால் அவரை உற்றுப் பார்க்கின்றோம். அப்பொழுது நாம் நுகர்ந்த உணர்வுகள் கருவிழியால் பதிவாக்கப்பட்டு ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகி விடுகின்றது.

அப்பொழுது அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றோம். அதன் உணர்வுப்படி இயக்கி அவருக்கு உதவியும் செய்கின்றோம்.

ஆனால் அவர் உடலில் விளைந்த வித்தை நமக்குள் பதிவாக்கிய பின் அது என்ன செய்யும்?

அது வலிமையான வித்தாக இருக்கும் பொழுது அவர்கள் பட்ட வேதனையைக் கவர்ந்து அவர்கள் உடலில் நோய்கள் உருவாக்கியது போல நம் உடலிலும் வேதனையை உருவாக்கும் அணுக்கள் பெருகிவிடுகின்றது.

அத்தகையை அணுக்கள் பெருகியபின் நமக்கும் உடல் நலக் குறைவாகின்றது. அப்பொழுது மருந்து கொடுத்து நோயைத் தடுத்துக் கொள்கின்றோம்.

இருந்தாலும் கருவிழியால் கவரப்பட்டு விலா எலும்புகளில் பதிவான ஊழ்வினை என்ற வித்தை அழிக்க முடியாது. நம் உடலில் மானிட்டர் போன்று குருத்தெலும்பு இருக்கின்றது.

நாம் வேதனைப்பட்ட உணர்வை விலா எலும்புகளில் பதிவாக்கும் பொழுது அது இழுக்கும். அப்பொழுது அந்த நேரத்தில் பார்த்தோம் என்றால் “பட…பட…பட…பட..,” என்று துடிக்கும்.

1.ஒரு அதிகமான சந்தோஷம் ஆனாலும் படபடப்பு வரும்.
2.பயமானாலும் அந்த உணர்ச்சிகள் வரும்.
3.எதை ஆசைப்படுகின்றோமோ அது கிடைக்கும் என்று இருந்தால் அந்தப் படபடப்பு வரும்.

இன்றைக்கு தரித்திரமாக இருக்கின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள். “ஒரு இலட்ச ரூபாய்” பரிசு விழுந்தது.., என்று கேள்விப்பட்டால் உங்கள் இருதயத் துடிப்பைப் பார்க்கலாம்.

அந்த ஆசையில் வேகமாக வருகின்றது. அப்பொழுது உங்கள் மனதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இதுவெல்லாம் அந்தந்த நிகழ்ச்சிகளைச் சொன்ன உணர்வைப் பதிவாக்கியபின் அதன் உணர்வைக் கவர்ந்தாலும் உயிருக்குள் பட்டவுடன் சிலருக்கு மயக்கமே வந்துவிடும்.

“இல்லாதவர்களுக்குத் திடீரென்று…, பணம் கிடைக்கின்றது” என்று வந்தபின் அதைத் தாங்கும் இயல்பற்று அந்த இருதயங்களுடைய “நரம்பு மண்டலங்கள்.., சிதைந்து விடுகின்றது”. அல்லது
1.அந்த உணர்ச்சிவசப்பட்டு வேகத் துடிப்பாக எடுக்கும் பொழுது
2.இருதயத்தை இயக்கும் சிறு மூளை பாகங்கள் இதனுடைய அழுத்தம் அதிகமான பின்
3.கடத்திச் செல்லும் நரம்பு மண்டலம் ஒரு சைக்கிள் ட்யூபில் கொஞ்சம் பலவீனமானால் ஒரு பலூன் மாதிரி உப்பி எப்படி வெடித்துவிடுகின்றதோ
4.இதைப் போல் சிறு மூளையில் உள்ள நரம்பு மண்டலங்களில் அது வெடித்துவிடும்.
5.பிறகு வைத்தியமே இல்லை. மரணம் தான்.

இதை போன்று ஆசையின் அளவுகள் பெறும் பொழுதும்.., நமக்குள் வேதனை என்ற உணர்வு வரும் பொழுதும் இந்த மாதிரி ஆகிவிடுகின்றது.

இதையெல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் நாம் யாரும் தவறு செய்யவில்லை.

பண்பும் பரிவும் ஈகையும் கொண்டு பிறருடைய துயரங்களை நாம் கேட்டுணர்ந்து அவர்களுக்கு நாம் உதவி செய்தாலும்1.அவர்களுடைய வலிமையான உணர்வுகள் நம் உடலுக்குள் ஊடுருவி2.நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றிக் கொண்டேயுள்ளது.

நீங்கள் எத்தகையை வைத்தியத்தைச் செய்து உடல் நோயை மாற்றினாலும் பின் இதன் நிலைகளில் நாம் ஊழ்வினை என்ற வித்தை அந்த ஆணிவேரை நாம் மாற்ற முடியாது.

ஊழ்வினை என்ற அந்த வித்தை மாற்றுவதற்குத்தான் உங்களுக்குள் மீண்டும் மீண்டும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டுள்ளோம்.

துருவ நட்சத்திரத்தை எண்ணி ஏங்கி அதிலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும் என்று திரும்பத் திரும்ப நீங்கள் எண்ணினால் உங்கள் விலா எலும்புகளுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகின்றது.

அதனின் வலிமையை நாம் கூட்டிக் கொண்டே வந்தால் அந்த வலிமையால் நமக்குள் முந்திய நிலைகள் இருப்பினும் இப்பொழுது சேர்க்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அதை மாற்றி அமைக்கும் சக்தியாக அதற்கு அருகிலேயே (ஏற்கனவே பதிவான வித்திற்கு) உருவாகும்.

1.துருவ நட்சத்திரத்தின் கணக்குகள் கூடக் கூட ஏற்கனவே உள்ள தீமையின் நிலைகள் சிறுத்துவிடுகின்றது.
2.தீமைகளின் வலிமையைக் குறைத்து நன்மை செய்யும் கணக்காக மாற்றிக் கொள்கின்றோம்.
3.அதாவது தீமை செய்யும் வித்துக்களை நன்மை செய்யக்கூடிய வித்துக்களாக மாற்றுகின்றோம்.

உதாரணமாக குழம்பு வைக்கின்றோம் என்றால் மிளகாய் தனித்துக் காரமாக இருக்கின்றது, அதைப் போன்ற மற்ற பொருள்களும் அதனதன் சுவைகளைக் கொடுக்கின்றது. நாம் தெரிந்து கொள்கின்றோம்.

எல்லாவற்றையும் சமப்படுத்தி அதன் உணர்வுகளைச் சுவையாக மாற்றிக் கொள்கின்றோம்.

வேதனைப்படுகின்றான் கோபப்படுகின்றான் கொதிப்படைகின்றான் சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறான் ஏமாற்றுகின்றான் என்ற உணர்வுகளை எடுத்துக் கொண்டால் நமக்குள் பதிவாகி அதனின் உணர்வின் இயக்கமாக நம்மை மாற்றுகின்றது.

அதை எல்லாம் நாம் மாற்ற வேண்டும். துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக் கலந்து அவைகளை மாற்ற முடியும். அதைச் சுவையாக மாற்றிக் கொள்ள முடியும்.

உங்களால் முடியும், உங்களை நீங்கள் நம்புங்கள்.

Leave a Reply