தியானத்தில் நமக்குள் சக்தியைக் கூட்டிக் கொள்ளும் வழி

Group meditation.jpg

தியானத்தில் நமக்குள் சக்தியைக் கூட்டிக் கொள்ளும் வழி

நீங்கள் எல்லோருமே அரும் பெரும் ஞானியாக வேண்டும். தெய்வீகக் குணங்களை எடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு நீங்கள் அந்த அருள் ஞானத்தை ஊட்டுங்கள்.

ஒரு தெளிவான நிலையை உருவாக்குங்கள். இந்த நாடு நலம் பெறவேண்டும் என்று உறுதிப்படுத்துங்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தியை பெறவேண்டும் என்று ஏங்குங்கள். குருவின் அருளால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும் என்ற ஆசையை ஊட்டுங்கள்.

1.அனைவரையும் அந்தச் சக்திகளைப் பெறச் செய்யுங்கள்.
2.அவர்கள் இச்சைப்படட்டும்.
3.அருள் உணர்வுகளை அவர்கள் நுகரட்டும்.
4.அது இச்சா சக்தி.., கிரியா சக்தி.., என்று அந்த ஞான வழியில் வளரட்டும்.

ஆனால், “என்னைத் திட்டினானே… அவனை விடுவதா..,?” என்று இச்சைப்பட்டால் அந்த உணர்வான பிற்பாடு அந்த ஞானத்தின் வழி கொண்டு அவனுக்குத் தொல்லைகளைத்தான் கொடுக்கச் செய்யும்.

ஒருவர் நல்லதாக வேண்டும் என்று துருவ நட்சத்திரத்தை இச்சைப்பட்டு எடுத்துக் கொண்டால் “நல்லதாக வேண்டும்..,” என்று அந்த ஞானத்தின் வழி நம்முடைய உணர்வுகள்.., “உணர்ச்சிகள் அங்கே இயக்கும்”.

நம்மையும் நல்லதாக்கும். அவர்களையும் நல்லதாக்கும்.

இன்று குடும்பத்தில் எடுத்துக் கொண்டோம் என்றால் எல்லா நியாயத்தையும் பேசுவார்கள். கடைசியில் பார்த்தோம் என்றால் அவரவர்கள் சுயநலத்திற்கு வந்துவிடுவார்கள்.

ஆகவே, பொது நலத்தில் சுயநலம் வேண்டும்.

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் எண்ணினால் நீங்களும் நான் நன்றாக இருக்க வேண்டும் என்று மரியாதை செலுத்துகின்றீர்க்ள்.

ஆனால், என்னை நீங்கள் எல்லோரும் மதிக்கின்றீர்கள் என்று சொல்லிக் கொண்டு “நான் பெரியவன்…” என்று அதிகாரம் செய்தால்… எப்படி இருக்கும்?

ஏனென்றால், எல்லோரும் ஒன்றாகச் சேர்த்து நாம் வலுவாக இயக்குகின்றோம். நீங்கள் மதிப்பதால் தான் எல்லோரும் மதிக்கும் நிலை வருகின்றது.

என்னை எல்லோரும் மதிக்கின்றார்கள் என்று எண்ணித் தலை கீழாக நின்று கொண்டு “என்னிடம் தான் சக்தி இருக்கின்றது.., என்று சொன்னால்.., சரியாகுமா..,? ஆகாது.

இந்தச் சக்திகளை உங்களிடமிருந்து தான் நான் பெறுகின்றேன். மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குக் காட்டியது அதுதான்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மெய் ஞானிகளின் அருள் ஞான வித்தை ஊன்றினால் அதை அவர்கள் பருகும் பொழுது நமக்கு அந்தச் சக்தி கிடைக்கும்.

ஆகையினால் தான் உங்களிடம் அருள் ஞானத்தை விளைய வைத்து அந்தப் பேரன்பு கொண்ட நிலையை எனக்குள் எடுக்கும் பொழுது “எனக்கும்.., சக்தி கூடுகின்றது”.

நீங்களும் இதே மாதிரி மற்றவர்களுக்குள் ஞானத்தை விளையச் செய்து சக்தியைக் கூட்டிக் கொள்ளலாம். உங்கள் மனதைப் பண்படுத்தி அருள் ஞானத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் அனைவரும்
தெய்வீக அன்பைப் பெறுவோம்
தெய்வீகச் சக்தியைப் பெறுவோம்
தெய்வீகச் சக்தியை வளர்ப்போம்
தெய்வீக உலகமாக மாற்றுவோம்

Leave a Reply