ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் – 3

Kopuram.jpg

  1. ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள்

நம்முடைய தத்துவங்களும் அதை உணர்த்தும் ஆலயங்களும் சாதாரணமானதல்ல – தீமைகளை அகற்றிடும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளும் இடமே ஆலயம்

ஒரு ரோஜாச் செடியிலிருந்து வெளி வரும் மணம் ஒரு வேப்ப மரத்திலிருந்து வரும் மணத்திற்கு அருகில் வந்தால் அதை நீக்கி விடுகின்றது.

வேப்ப மரத்தின் மணம் ரோஜாச் செடியின் மணத்தை உந்தித் தள்ளிவிடும். அருகில் வரவிடாது.

அதைப் போன்று தான் ஒரு வேதனைப்பட்டவன் உணர்வுக்குள் ஒரு மகிழ்ச்சியான உணர்வைச் சொன்னால் இதை நீக்கிவிடும். மீண்டும் அந்த வேதனைதான் வரும்.

இந்த வேதனையான உணர்வுகள் நமக்குள் வந்துவிட்டால் என்னதான் சொன்னாலும் கூட நல்லதைக் கண்டாலும் விஷத்திற்குள் அதைக் கலந்தது போன்று ஆகிவிடும்.

அந்த வேதனை என்ற நிலை நல்ல சொல்லுக்குள் கலந்து அவர்கள் சிந்தனைகளை இழக்கத்தான் செய்யுமே தவிர சிந்தனையை ஊட்டாது. சிந்திக்கும் திறனை விடாது.

“விஷத்தைக் குடித்தபின் நீங்கள் சிந்திப்பீர்களா..,?” சிந்தனையை முழுவதும் இழக்கச் செய்து ஆளைச் சுருட்டிவிடும்.

ஒரு வேதனையான உணர்வு தனக்குள் வந்தால் வாலி. ஆக, யார் அவரைப் பார்த்தாலும் அவர்களுடைய சம வலுவைப் பெற்றுக் கொள்வான் என்று இயக்கத்தின் வலிமை பெறுகிறான் என்று காரணப் பெயரை வைத்து அன்று தெளிவாகச் சுட்டிக் காட்டினார்கள் ஞானிகள்.

சாதாரண வாழ்க்கையில் இருக்கப்படும் பொழுது இந்தத் துயரத்தையும் துன்பத்தையும் தவறு செய்பவர்களையும் இதையெல்லாம் வாழ்க்கையில் நாம் அறிய வேண்டியதிருக்கின்றது.

அறிந்த அந்த உணர்வுகள் நமக்குள் பதிவானாலும் நுகர்ந்து தீமை என்று விலகிச் செல்கின்றோம்.

தீமை என்று விலகிச் சென்றாலும் அடிக்கடி தீமை என்ற உணர்வுகள் வந்து தீமையை உணர்த்தும் நிலை ஆனாலும் கடைசியில் தீமையையே வளர்க்கும் அணுக்கள் நம் உடலுக்குள் பெருகிவிடுகின்றது.

எதைத் தீமை தீமை தீமை என்று எண்ணுகின்றோமோ அதன் உணர்வுகள் தனக்குள் கணங்களுக்கு அதிபதியாகிவிடுகின்றது. இதைத்தான் சிவனுக்குள் நந்தீஸ்வரா.

அதிகமான நிலைகளில் அதைச் சுவாசித்தால் அதன் கணக்கின் பிரகாரம் உன்னுடைய செயல் வாழ்க்கை எவ்வாறு இருக்கும்? என்று சாஸ்திரங்களில் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

நெற்றிக் கண்ணைத் திறந்தால் சிவன் சுட்டுப் பொசுக்கிவிடுவான் என்று சாஸ்திரங்களில் காட்டப்பட்டுள்ளது.

நமக்குள் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வைப் பதிவாக்கி மீண்டும் கண்ணுக்குள் நினைவுக்குக் கொண்டு வந்து ஈஸ்வரா என்று நெற்றிக் கண்ணான உருவாக்கும் அவனிடம் அந்த அருள் உணர்வை உருவாக்கும்படி வேண்டுதல் வேண்டும்.

மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை காலமறிந்து கருத்தறிந்து செயல்படுதல் வேண்டும், விநாயகருக்கு அங்குசத்தைக் கையில் கொடுத்துள்ளார்கள் ஞானிகள்.

முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கெல்லாம் நாயகனாக மனிதனாக உருவான பின் அந்தக் கடும் அங்குசத்தை வைத்துத் தீமைகளை அடக்கும் வல்லமை பெற்றவன் என்ற இந்த நிலையைத் தெளிவாகச் சாஸ்திரங்களில் காட்டப்பட்டுள்ளது.

ஆகவே, ஒரு நோயாளியைப் பார்க்கும் பொழுது என்ன செய்யவேண்டும்? நமக்குள் பதிவாக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி அதைக் கண்ணின் நினைவுக்குக் கொண்டு வந்து இந்த உணர்வின் நிலையை உயிரான ஈசனிடம் புருவ மத்தியில் ஒன்றுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும், எங்கள் ஜீவான்மா பெறவேண்டும் என்று உடலுக்குள் செலுத்தி இந்த உணர்வின் வலிமை பெறச் செய்தல் வேண்டும்.

அப்படி வலிமை பெறச் செய்யும் பொழுதுதான் நாம் நுகர்ந்தறிந்த தீமையான உணர்வின் தன்மையை இங்கே பிளக்கின்றது “நரசிம்மா”. நம் ஆன்மாவில் பட்ட தீமையின் நிலைகளை இது அப்புறப்படுத்துகின்றது.

இப்படி நம்மை அறியாமல் வேதனைப்படச் செய்யும் “தீமைகளை அகற்றிடும் ஆற்றலை.., வளர்த்துக் கொள்ளும் இடம் தான் ஆலயங்கள்”.

Leave a Reply