பிறருடைய உணர்வுகள் நம்மை இயக்காது தடுக்க என்ன செய்ய வேண்டும்…?

lord eswara shiva

பிறருடைய உணர்வுகள் நம்மை இயக்காது தடுக்க என்ன செய்ய வேண்டும்…? 

தொழிலுக்குப் போய்விட்டு வரும் கணவர் வீட்டில் வந்து “கஷ்டம்” என்று சொல்லும் பொழுது “இப்படி.., வேதனையுடன் கஷ்டத்துடன் இருக்கிறாரே…? என்று மனைவி எண்ணினால் என்றால்
1.அவருடன் பிரியமாக இருக்கும் பொழுது
2.இந்த உணர்வுகள் அவருடைய உடலைச் சுற்றி அமைந்து
3.அவர் சிந்தனையைக் குறைந்துவிடும்
4.சிந்தனை குறைந்துவிட்டால் கோபமாகப் பேசும் நிலை ஏற்படும்.
5.சொல்ல வேண்டிய சொல்லை விட்டுவிட்டு வெறுப்பின் உணர்வைச் சொல்லத் தொடங்கி விடுவார்கள்.

ஆகவே, தொழிலில் பல நிலைகளைப் பார்த்துவிட்டு அந்தச் சோர்வோடு ஆண்கள் வீட்டிற்குள் வந்தால் பெண்கள் என்ன செய்யவேண்டும்?

குறிப்பறிந்து மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று ஆத்மசுத்தி செய்துவிட்டு
1.மகரிஷிகளின் அருள்சக்தி கணவர் உடல் முழுவதும் படரவேண்டும்
2.மகரிஷிகளின் அருள்சக்தியால் மனபலம் பெற்று மனவளம் பெறவேண்டும்
3.அவர் பார்ப்பதெல்லாம் நல்லவையாக இருக்க வேண்டும் என்று பெண்கள் தியானித்துப் பழக வேண்டும்.

அதே மாதிரி கணவர் தொழிலுக்குப் போகிறார் என்றால் “அங்கே சென்று சங்கடப்படுகின்றாரே..,” என்று எண்ணவே கூடாது.

கணவர் தொழிலுக்குச் சென்றுவிட்டால் முதலில் சொன்ன பிரகாரம் மனைவி ஆத்மசுத்தி செய்து துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பின், கணவன் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். அவர் பார்ப்பதெல்லாம் நலம் பெறவேண்டும். அவரைப் பார்ப்பவர்களுக்கு நல்ல எண்ணம் வரவேண்டும், அவர் செயல் எல்லாம் புனிதம் பெறவேண்டும். அவர் சொல் கேட்பவர்கள் அனவரும் நல்லவராக வேண்டும் என்று இங்கே இருந்து எண்ண வேண்டும்.

அதைப் போன்று உதாரணமாக சிநேகிதருக்குள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்கிறோம். அமெரிக்காவில் இருக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

இந்த மாதிரிச் சண்டை போட்டான். பாவி.., அவன் உருப்படுவானா…? என்று சொன்னால் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது அங்கே புரை ஏறுகிறது.

தொழில் செய்யும் பொழுது புரை ஓடியதென்றால் பார்க்கும் கணக்கில் தவறாக விட்டுவிடுவார்கள். அதே சமயத்தில் நாம் எண்ணும் பொழுது நம் கணக்கும் தப்பாகப் போய்விடும். ஏனென்றால் இதே உணர்வு தான்
1.நம்மையும் இயக்குகிறது
2.அவர்களையும் இயக்குகின்றது.

ஆகையினால், இந்த மாதிரி நினைவுகள் எப்பொழுது வந்தாலும், “ஈஸ்வரா…” என்று சொல்லித் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

1.நண்பர் அவரை அறியாமல் சேர்ந்த இருள்கள் அகல வேண்டும்
2.அவர் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் என்று எண்ணிவிட்டால் நமக்குள் அந்த வெறுப்பின் உணர்வுகள் வராது
3.நம் மீது அவர் வெறுப்பாக  இருந்த உணர்வுகள் நம்மைச் சாடாது
4.வெறுப்பின் நினைவு வரும்பொழுதெல்லாம் அந்த உணர்வை இப்படி மாற்றிப் பழகவேண்டும்.

காரணம் நம் உடலில் விளைந்த அந்த வெறுப்பான அணுக்கள் கோபித்துச் சொன்ன உணர்வுகள் அதாவது.., அந்த உணர்ச்சிகள் உந்தித்தான்.., “ஆகாரத்திற்கு அது ஏங்குகிறது”.

அப்பொழுது அந்த உணர்ச்சிகள் உந்தப்படும் பொழுது, அந்த நிலை வருகிறது. அந்த மாதிரி நேரங்களில் எல்லாம் இவ்வாறு மாற்றிப் பழக வேண்டும்.

இவ்வாறு செய்துகொண்டு வந்தோம் என்றால் நமது வாழ்க்கையில் “தனுஷ்கோடி”. உணர்வுகள் “எல்லாவற்றையும்” சேர்த்துக்கொண்டு வருகின்றோம். கடைசி நிமிடம் வரையிலும் தீமைகளை நமக்குள் போகாதபடி பாதுகாப்பது அது தான்.

தீமைகளை அகற்றக்கூடிய வல்லமை துருவ நட்சத்திரத்துக்கு உண்டு. நமது வாழ்க்கையில் எந்தெந்த குணங்கள் வருகிறதோ தீய குணங்களை தீய செயல்களைப் பார்க்கும் பொழுது இந்த மாதிரி
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சுவாசித்தோம் என்றால்,
2.அதைத் தணித்து நமக்குள் சக்தி வாய்ந்ததாக மாற்றும்.

இதைப் போன்று உடலுக்குள் வரும் இந்த உணர்வுகளை எல்லாம் உயிர் இருக்கும் பொழுது ஒளியாக மாற்றிவிட்டோம் என்றால் உடலை விட்டு நாம் வெளியில் செல்லும்பொழுது
1.துருவ நட்சத்திரத்தின் பற்று அதிகமாகின்றது
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்புக்குள் செல்கின்றோம்.

“தொக்கியுள்ள..,” உணர்வையெல்லாம் அங்கே கரைத்து விடுகின்றது. உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாகின்றது.

இதுதான் ஞானிகள் காட்டிய அருள் வழிகள்.

Leave a Reply