உலகிலேயே “ஞானத்தை வளர்க்கும் பெரும் சக்தியாக” தமிழ்நாடு உயர்ந்த நிலை பெறும்

Agastiya rishi.png

உலகிலேயே “ஞானத்தை வளர்க்கும் பெரும் சக்தியாக” தமிழ்நாடு உயர்ந்த நிலை பெறும்

உங்கள் நண்பருக்கோ உறவினர்களுக்கோ நோய் என்று கேள்விப்பட்டால்.., “ஐயோ.., உனக்கு இப்படி ஆகிவிட்டதா…? என்று வேதனைப்படாதீர்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஏங்குங்கள். உங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று உடலுக்குள் செலுத்துங்கள்.

அந்த நோயால் வேதனைப்படுபவர் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படரவேண்டும். அவர் நோயிலிருந்து விடுபட வேண்டும். அந்த அருள் சக்திகளைப் பெறும் ஆற்றல் அவருக்குள் வரவேண்டும். அருள் வழியில் அவர் நலமாக வேண்டும் என்ற இந்த உணர்வைப் பெறச் செய்யுங்கள்.

ஒருவருக்குக் கடுமையான தலைவலியே வருகின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள். துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துக் கொண்டு.., “ஒரு மரத்தில் அவர்களைக் கையை வைக்கச் சொல்லி.., உங்கள் தலைவலி நீங்கிப் போகும்..” என்று சொல்லுங்கள்.

தலைவலி நீங்குகின்றதா இல்லையா…? என்று பாருங்கள்.

நீங்கள் ஒவ்வொருவரும் “தீமையை நீக்கக்கூடிய.., சக்திவான்களாக” மாறவேண்டும்.

நான் (ஞானகுரு) சொன்னால் உங்கள் தீமைகள் போகின்றது. ஏன் நீங்கள் சொன்னால் மற்றவர்கள் தீமைகள் போகக் கூடாதா..,? நான் தான் செய்ய வேண்டுமா…?

நாம் அனைவருமே ஞானிகளாக உருவானால் “உலகிலேயே ஞானத்தை வளர்க்கும் பெரும் சக்தியாக.., நமது தமிழ்நாடு.., அந்த உயர்ந்த நிலையாகப் பெறும்”.

உலகைக் காக்கும் அந்த “அகஸ்தியன்” பெற்ற உணர்வை நாம் மீண்டும் வளர்த்து உலகில் உள்ள மக்களுக்குத் தெளிவான உணர்வுகளை ஊட்டும் நிலைகளை நாம் பெறுதல் வேண்டும்.

விஞ்ஞான நிலைகளால் இன்று இந்த உலகமே திசை திரும்பும் நிலைகள் வந்து கொண்டு வருகின்றது.

முன்பு ஒரு காலத்தில் இந்தப் பூமி ஒரு பக்கம் உறைபனியாக நீள வடிவாக வரப்படும் பொழுது தலை கீழாகக் கவிழும் தன்மை வந்தது.

அப்பொழுது அகஸ்தியன் தன் சக்தியினால் அந்த இடத்தைத் திருப்பி அது வரக்கூடிய திசையை மாற்றி அதன் உணர்வை உறையும் இடமாக்கி இதைக் கரைக்கச் செய்து கடலாக மாற்றி இன்றும் பூமியில் அவன் மாற்றி வைத்த நிலைகள் தான் நாமும் வாழ்கின்றோம்.

அன்று இந்தப் பூமி கவிழாது சமப்படுத்தியவன் அந்த அகஸ்தியனே. அதனால் தான் பின் வந்த ஞானியர்கள் அகஸ்தியனைக் கூழையாகப் போட்டுக் காண்பித்திருப்பார்கள்.

1.அகஸ்தியன் உடல் வலிமையைக் காட்டவில்லை.
2.அவன் தன் “எண்ணத்தின் உணர்வின் ஆற்றலால்”
3.அகண்ட அண்டத்தையும் “எட்டிப் பிடிக்கும்..,” ஆற்றல் கொண்டவன் என்றும்
4.மிகவும் சக்தி வாய்ந்தவன் என்பதற்கே கூழையாகக் காட்டினார்கள்.

இப்பொழுது விஞ்ஞான அறிவால் உலகமே நச்சுத் தன்மை பரவிக் கொண்டிருக்கும் நிலையில் மனிதனின் சிந்தனை குறைந்து உருக்குலையும் நேரம் வரும் இந்த நிலையில் அந்த அகஸ்தியன் துருவ நட்சத்திரமான அந்த ஆற்றலின் துணை கொண்டு இந்தப் பூமியில் மக்களை மாற்றியமைத்துக் கொண்டிருக்கும் தீமைகளிலிருந்து விடுபடச் செய்தல் வேண்டும்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற நிலைகளில் அன்று தென்னாட்டிலே தோன்றிய அகஸ்தியனின் ஆற்றலை எந்நாட்டவரும் பெறும்படி நாம் செய்ய முடியும்.

அப்பொழுது இந்தப் பூமியும் பரிசுத்தமாகின்றது. நம் ஆன்மாவும் தூய்மையாகின்றது. இந்தக் குறுகிய காலத்தில் நாம் இந்த வளர்ச்சி பெறமுடியும்.

1.இந்தப் பூமியையும் நம் உயிராத்மாவையும்
2.அந்த அகஸ்தியன் துணை கொண்டு
3.அவன் சென்ற வழியில் நாமும் சென்று
4.இந்த உடலுக்குப் பின் அனைவரும் ஒளியின் உடலாகப் பெறும் சக்தியை நாம் பெறுவோம்.

Leave a Reply