இறக்கும் போது எந்த நினைவு கொண்டு உடலை விட்டுப் பிரிய வேண்டும்…?

Bhisma

இறக்கும் போது எந்த நினைவு கொண்டு” உத்தராயணத்தில் தான் உடலை விட்டுப் பிரிய வேண்டும்…?

  1. பீஷ்மர் – உயிர்

பீஷ்மர் தனக்குத் திருமணம் வேண்டாம் தன் தந்தைக்குச் சுகமான நிலைகள் வரட்டும் என்று சத்தியம் செய்து அதைக் கடைசி வரையிலும் காத்தவர்.

சகல வல்லமை பெற்ற.., “அவனும் தப்ப முடியவில்லை” என்று எவ்வளவு தெளிவாக ஞானத்தின் நிலைகளைப் போதிக்கின்றனர்.

இந்த உயிரான குரு மனிதனின் நிலைகளில் எத்தனையோ பகைமைகளைக் கொண்டு வந்தது.

“நான்.., எனது..,” என்ற அகந்தை கொள்ளும் போது பிறரைத் துன்பப்படுத்தித் துன்பத்தின் நிலைகளை நுகர நேருகின்றது.

கௌரவர்களுடைய நிலைகள் அவர்களுடைய தன்மையை இயக்குவதற்குச் சகலகலா வித்தைகளைக் கற்றுக் கொண்டவர்கள்.

இந்தக் கௌரவம் பிறர் வேதனைப்படுவதைக் கண்டு ரசிக்கும் தன்மை வரப்படும் பொழுது இந்த உடலை அமைத்த உயிரான குருவிற்கு “நம்மை அறியாமலேயே.., தீங்கு செய்கின்றோம்”.

இதன் தன்மை கொண்டுதான் “உத்தராயணம் வரும் வரை..,” இதை அனுபவித்தே ஆக வேண்டும் என்கிறார் பீஷ்மர். அந்தக் காலம் வரும்போது தான் ஜீவன் போகவேண்டும்.

அது வரையிலும், நான் செய்த தன்மைக்கு எவருடன் உறுதுணையாக இருந்தேனோ அந்த உறுதுணையால் விளைந்த வேதனையை என்னில் நீக்குவதற்கு அர்ச்சுனனுக்குத் தெரியும்.

அந்த உணர்வின் தன்மை கொண்டு எனக்கு நோவில்லாமல் செய்பவன் அவனே. “அவனைப்பற்றி நான் எண்ணும்பொழுது.., தீமைகள் அகலும் நிலை கிடைக்கும்” என்கிறார் பீஷ்மர்.

  1. பேடியால்தான் பீஷ்மர் வீழ்ச்சி அடைகின்றார் – விளக்கம்

சத்தியத்திற்காக வாழ்ந்த தன் தாத்தாவை.., “நான் எப்படிக் கொல்வது…!” என்று அர்ச்சுனன் எண்ணுகின்றான்.

அதே சமயத்தில் அவரை விட்டுவிட்டால் உன்னுடைய நல்ல குணங்கள் மடிந்துவிடுமே என்று கண்ணன் சொல்கின்றார். பீஷ்மரைக் கொல்வதற்குண்டான உபாயத்தையும் கண்ணன் சொல்கின்றார்.

“பேடி” என்ற நிலைகளை அவர் என்றைக்கும் தாக்குவதில்லை.  பேடி என்ற நிலை வந்தால் தன்னைத் தாழ்த்திக் கொள்வார்.

அதை மறைமுகமாக வைத்துக் கொள். ஆனால், “உன் வலிமையைப் பற்றி” அவர் சிந்திப்பார். உன்னைத் தாக்கமாட்டார்.

போர்க்களத்தில் அப்படிப் பேடியை பீஷ்மருக்கு முன் கொண்டு வந்ததும் எதிர்ப்பு இல்லை என்கின்ற பொழுது அர்ச்சுனன் தாக்கிவிடுகின்றார்.

பீஷ்மர் திருப்பப்படும் பொழுதுதான் அவர் விழ்ச்சி அடைகின்றார். வீழ்ச்சி அடைந்தபின் தன் உணர்வுக்குத் தக்கவாறு வேதனை (அம்புப் படுக்கையில்) அனுபவிக்கின்றார்.

சாதாரணமாக ஒருவர் நம்மைக் காட்டிலும் வலுவானவர் என்ற நிலைகள் இருக்கும்போது.., “நம்மை அவர் தாக்கி விடுவார்..,” என்று உஷாராக இருப்போம்.

1.ஒருவன் பேடியாக (இரண்டுங்கெட்டானாக) இருக்கும்போது2.“அவன் பயத்தால் நம்முடன் வந்தால்..,3.இவன் என்ன செய்துவிடுவான்..,?4.“இவன் நம்மை ஒன்றும் செய்யமாட்டான்…!” என்று அசட்டையாக இருந்தால்5அவன் (தான்) எளிதில் நம்மைத் தாக்கிவிடுவான்.6.இந்த உணர்வைத் தெளிவாகக் காட்டுகின்றது மகாபாரதம்.

பேடியைப் போன்று நடிப்பவர் உணர்வுகளில் சூட்சுமத் தன்மைகளும் உண்டு. “அவனுள் தாக்கும் உணர்வுகளே இருக்கும்..,” என்றும் மனித வாழ்க்கையில் “பேடி.., என்று ஒதுக்கப்பட்டால்.., அதன் உணர்வுகள் என்ன செய்யும்?” என்றும் காட்டப்பட்டது.

ஒருவன் ஒன்றும் செய்ய மாட்டான். இவனிடம்.., என்ன சக்தி இருக்கின்றது? என்று நினைத்தால் அவன்தான் எளிதில் தாக்கும் நிலையாக வரும்.

வல்லமை கொண்டவன் பேடியை எதிர்க்க மாட்டான். “இவனுக்கென்ன..,?” என்ற நிலைகளில் ஒதுக்கப்படும் பொழுது இந்த உணர்வு வருகின்றது.

அப்பொழுதுதான் “குருவை மதிக்கின்றான்”.

பேடியால் தாக்கப்பட்ட உணர்வும் தான் தீமையின் சார்புடைய நிலைகளில் இருக்கப்படும் பொழுது “அதிலிருந்து” அர்ச்சுனன் எவ்வாறு காத்தான்? என்று மகாபாரதத்தில் காட்டப்பட்டது,

  1. துருவத்தின் நினைவு கொண்டுதான் (துருவ நட்சத்திரம்) உடலைவிட்டுப் பிரியவேண்டும்

அர்ச்சுனன் அவனுடைய உணர்வுகள் நீதியின் தன்மை வரப்படும் பொழுது.., “நீதிக்குள்.., எத்தனை சிக்கல் சிக்குகின்றான்..,?” என்று காட்டுகின்றனர்.

உணர்வுகள் இயக்கத்தால் அவன் உயிரின் தன்மையில் அவன் உணர்வுகள் எப்படி மாறுகின்றது என்ற நிலையையும் மகாபாரதத்தில் தெளிவாக்குகின்றனர்.

“உத்தராயணத்தில் நான் உடலை விட்டு போகவேண்டும்” என்று பீஷ்மர் கேட்டது போல் அருள் ஒளி பெற்ற அருள் ஞானியின் உணர்வின் நினைவு கொண்டு இந்த உடலை விட்டுச் சென்றபின் “பிறவியில்லா நிலை அடைவதே கடைசி நிலை” என்று வியாசர் மிகவும் தெளிவாகக் கூறியுள்ளார்.

அவர் கூறிய கூற்றை அவரவர் சுயநலங்களுக்காகக் காட்டப்பட்டு தங்கள் சுயநலங்களுக்கு ஒப்பத்தான் நூல்களை வடிவமைத்துவிட்டார்கள். அதைப் படித்தவர்கள் எல்லாம் இந்த வாழ்க்கைக்குத் தவறு செய்தே வாழ்கின்றனர்.

இந்தத் தவறிலிருந்து அனைவரும் உண்மையின் உணர்வை உணர்ந்து துருவனின் நிலையை நாம் நுகர்ந்து துருவ மகரிஷியின் உணர்வை நாம் நுகர்ந்து இந்த மனித உடலுக்குப்பின் பிறவியில்லா நிலையை அடைவோம்.

விஞ்ஞானத்தில் வரும் பேரழிவால் எந்த நிமிடத்திலும் நாம் உடலை விட்டுப் பிரியலாம்.

ஆனால் அந்த உத்தராயணம் அந்த துருவத்தின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் நினைவு கொண்டு இந்த உடலை விட்டுப் பிரிந்தால் “அந்த அகஸ்தியனுடன் ஏகாந்த நிலைகளில் வாழலாம்”.

இதைத்தான்.., மகாபாரதத்தில் “தான் செய்த தவறுகள் இருப்பினும்.., என்னுடைய நிலைகள் அர்ச்சுனனுக்குத் தெரியும்..,” என்று கூறப்பட்டது.

  1. அர்ச்சுனனுக்குக் கண்ணால் காட்டப்பட்டு
  2. தீமையினுடைய உணர்வுகளை அகற்றும் வலிமையான நிலைகள்
  3. தன்னைக் காக்கும் உணர்வுகள் அவனுக்குத் தெரியும்
  4. அதன்வழி கொண்டு என்னுடைய ஆன்மா எப்படி இருக்க வேண்டும்? என்று அவனுக்குத் தெரியும் என்று மகாபாரதத்தில் வியாசரால் கூறப்பட்டது.

Leave a Reply