நம்மிடம் இருக்கும் சக்திகளைப் பற்றி அறிந்திருக்கின்றோமா…?

trust-yourself

நம்மிடம் இருக்கும் சக்திகளைப் பற்றி அறிந்திருக்கின்றோமா…?

இன்றைய உலகில் விஞ்ஞான அறிவு அதிகமாக வளர்ந்திருந்தாலும் அதிகமாக என்ன நடக்கின்றது…? இன்னமும்

  1. சாமி தருவார்,
  2. சாமியார் தருவார்
  3. ஜோசியம் தரும்
  4. ஜாதகம் தரும் என்ற நிலைகளை ஏமாந்து செல்லும் நிலைதான் உள்ளது.

ஜாதகப்படி உனக்குள் இருள் உள்ளது தோஷம் இருக்கிறது என்று சொல்வார்கள். அதைப் போக்குவற்காக வேண்டி யாகத்தைப் பெருக்கித் தவறுகள் செய்வோர் ஏராளம்.

“சாமி, தெய்வம் என்ற பெயரைச் சொல்லி..,” மக்களை ஏமாற்றித் தவறுகள் செய்வோர் பலரும் உண்டு. இதற்குக் காரணம் என்ன?

“நமது ஆசையின் நிமித்தம் தான்..,” ஏமாற்றும் சாமியார்கள் அதிகமாகத் தோன்றுகின்றார்கள். அவர்கள் மக்களை ஏமாற்றுவதும் “நான் ஏமாந்துவிட்டேன்” என்ற நிலையும் வருகின்றது.

ஆனால், “எல்லாச் சக்திகளும் உங்களுக்குள்ளே உண்டு..,” என்பதை நம்பிப் பழகுங்கள்.

இன்று எங்கே எடுத்தாலும் சாமி பெயரையும் தெய்வத்தின் பெயரையும் சொல்லி “ஏதோ அருளைப் பெற்றேன்..,” என்று சொல்லிக் கொண்டு வருவார்கள்.

இதைப் போன்ற தவறுகளைச் செய்தே இன்று உலகம் “நம் ஆசையைக் கண்டு.., அந்த ஆசையில்.., அவர்கள் தங்களுக்கு வேண்டியதை நிறைவேற்றிக் கொள்கின்றனர்”. ஆக அவர்களுக்குள் நாம் அடிமையாகிவிடுகின்றோம்.

ஒரு விட்டில் பூச்சி என்ன செய்கின்றது?

ஒளி இருக்கிறது என்று வருகின்றது. அந்த ஒளியிலே வந்தபின் நெருப்பிலே விழுந்து கருகுகின்றது. இதைப் போன்று தான் நம் வாழ்க்கையின் நிலைகளும்.

1. யாரோ தருவார்
2. சாமியார் தருவார்
3.ஜோதிடம் தரும்
4.மந்திரம் தரும்
5.யாகம் தரும் என்ற நிலைகளில் நாம் செல்கின்றோமே தவிர 6.நம்மை நம்புகின்றோமா என்றால் இல்லை.

அருள் ஞானிகள் காட்டிய அருள் வழிகளை உங்கள் உடலுக்குள் ஏங்கிப் பெற்றுப் பழகுங்கள். உங்கள் அறியாத இருளைப் போக்க இது உதவும்.

“நீங்கள் எதை நுகர்கின்றீர்களோ” அதையே தான் உங்கள் “உயிர்” இயக்கிக் காட்டுகின்றது. இருளைப் போக்குகின்றது. மெய்ப் பொருளைக் காணவும் செய்கின்றது.

இப்பொழுது மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அதைப் பெற்றேன். அதை நீங்களும் பெறவேண்டும் என்றுதான் அவர் காட்டிய அருள் வழியில்

  1. உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்கின்றேன்.
  2. உங்கள் உடலைச் சிவமாக மதிக்கின்றேன்.
  3. உங்கள் உடலை உயர்ந்த குணங்கள் கொண்ட ஒரு ஆலயமாக மதிக்கின்றேன்.
  4. உங்கள் கண்களைக் கண்ணனாக மதிக்கின்றேன்.
  5. உங்கள் சொல்லை இராமனாக மதிக்கின்றேன்.

இராமன் என்றால்.., வேதனை என்ற சொல் வரும் பொழுது வாலியாகின்றது. மகிழ்ச்சி என்ற சொல்லைச் சொல்லும்பொழுது சீதா இராமனாகின்றது.

ஆகவே, “நாம் எதைச் சுவாசிக்க வேண்டும்..,?” என்பதற்குத்தான் உங்களுக்குள் கூறுவது.

ஏனென்றால். இந்தப் பிரபஞ்சத்திற்குள் விஷத் தன்மைகள் எது பரவினாலும் துருவ நட்சத்திரம் அதை ஒளியாக மாற்றிக் கொண்டேயுள்ளது.

அதன் உணர்வை நமக்குள் சேர்த்தால் நமக்குள் இருக்கும் நுகரும் அல்லது ஏற்கனவே இருக்கும் இந்த விஷத் தன்மைகளை மாற்றிக் கொள்ள முடியும்.

உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மையை ஒளியின் தன்மையாக மாற்றிக் கொள்ள முடியும். “அந்த நம்பிக்கை கொள்ளுங்கள்”.

 

Trust yourself

Leave a Reply