July 2025 – உபதேசம்

பாக மண்டலத்தில் அமர்ந்து தான் அகஸ்தியன் கண்ட விண்ணுலக இயக்கங்களை நான் அறிய முடிந்தது

 

“ஆதியிலே” உருவான உருவின் (உணர்வின்) தன்மையை அது எப்படி உருவானது…? என்று அகஸ்தியன் கண்டவன். அதை எல்லாம் அவன் பாக மண்டலத்தில் (கர்நாடகா காவிரி ஆறு உருவாகும் இடம்) இருக்கப்படும் பொழுது கண்டது.

உணர்வின் அணுக்களின் இயக்கங்கள் எப்படி…? என்பதை அதாவது
1.ஒரு உணர்வின் தன்மை “எதனின் பாகம்… எதனுடன் இணைந்து கலந்து செல்கின்றது…?” என்பதை அறிகின்றான்
2.அதனால் தான் அந்த இடத்திற்குப் பெயர் “பாக மண்டலம்” என்ற பெயரே வந்தது.

பிரபஞ்சம் எப்படி உருவானது…? தனித்தனித் தன்மையாக (கோள்கள் நட்சத்திரங்கள்) இருந்தாலும் சுழற்சி வட்டத்திற்குள் அது எப்படி இயங்குகின்றது…? கூட்டமைப்பாக பிரபஞ்சம் என்ற நிலையை அது எப்படி அடைகின்றது…? என்பதையும் அகஸ்தியன் அறிகின்றான்.

இதே போன்று தான் நம் உயிரின் தன்மையின் இயக்கமும்…!
1.உடலுக்கு அது சூரியனாக இருக்கின்றது.
2.நம் உடலுக்குள் பல கோடி உணர்வுகள் சேர்த்து இது ஒரு பிரபஞ்சம் ஆகிறது.

நம் சூரியக் குடும்பத்தைப் போல அண்டத்தில் 2000 சூரியக் குடும்பங்கள் உண்டு. அதே போல் பல ஆயிரம் குடும்பங்கள் வளர்ச்சி பெற்றதும் உண்டு. அவை எல்லாம் தனித்தனியாக அகண்ட அண்டமாகச் சுழன்று கொண்டுள்ளது.

சில இடங்களில் பார்த்தோம் என்றால் வான மண்டலத்தில் நட்சத்திரங்கள் அதிகமாக அடர்த்தியாகத் தெரியும். அது எல்லாம் இன்னொரு பிரபஞ்சத்தில் உள்ளதைத்தான் நாம் அவ்வாறு காண முடிகிறது.

இது எல்லாம் “பாக மண்டலத்தில் என்னை அமர வைத்து குருநாதர் காட்டிய நிலைகள்…!”

அது ஒன்றுடன் ஒன்று இணைந்து சுழற்சியாகும் நிலை இங்கிருந்து பார்க்கப்படும் பொழுது வித்தியாசங்களாகத் தெரிய வரும்.

இதையெல்லாம் விஞ்ஞானிகளும் படம் எடுக்கின்றார்கள். எப்படி இருக்கிறது…? என்பதையும் அறிகின்றார்கள். அது எங்கே சுழலுகின்றது…? எங்கெங்கு நகர்ந்து செல்கிறது…? என்பதையும் பார்க்கின்றார்கள்.

எப்போதோ ஓர் காலத்தில் கோள்கள் அனைத்தும் சந்தர்ப்பத்தில் ஒரே நேர்கோட்டில் வரக்கூடிய வாய்ப்பு உண்டு.
1.அப்படி வந்தால் பூமிக்கு அதனுடைய ஈர்ப்பு சக்தி குறைகின்றது.
2.ஒன்று நகர்ந்து ஓடலாம்… அது எப்படிப் போகும்…? என்று சொல்ல முடியாது.
3.ஒரு நொடிக்குள் இது நடக்கும். சூரியனுடைய ஈர்ப்பு சக்தி இல்லை என்றால் டபக்… என்று கீழே இறங்கிவிடும்.

இன்று இருப்பது நாளை இல்லை…! இது போன்று எத்தனையோ மாற்றங்கள் நடந்து கொண்டே தான் உள்ளது.

வான்வீதியில் உருவாகும் மின்னல்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் போது ஏற்படும் இயக்கத்தினால் தான் உயிரணுவிற்குள் துடிப்பு வருகின்றது. இரண்டும் சண்டை இட்டுக் கொண்டே இருக்கும்.

எது…?

ரேவதி நட்சத்திரம் என்பது பெண்பால். கார்த்திகை நட்சத்திரம் என்பது ஆண்பால். ரேவதி நட்சத்திரம் அதைக் கண்டவுடன் அஞ்சி ஓடுகின்றது.

இப்படி இது இரண்டுக்கும் ஒத்துக் கொள்ளவில்லை என்ற நிலை வரும் பொழுது
1.வியாழன் கோளின் கதிரியக்கப் பொறிகள் தாக்கிய உடனே மூன்றும் சேர்த்து ஒன்றாக இணைந்து
2.இரண்டு என்ற நிலை இல்லாது மூன்று என்ற நிலை அடைகின்றது.
3.அப்பொழுது அங்கே துடிப்பு ஏற்படுகின்றது.

அத்தகைய துடிப்பின் ஈர்ப்பினால் அதற்கு அருகில் இருக்கக்கூடியது சிக்கப்படும் பொழுது மற்ற உணர்வுகளைத் தனக்குள் சேர்த்து ஒரு அடர்த்தியின் தன்மை அடைந்து “உயிரணுவின் தோற்றமாகின்றது…”

உயிரணுவின் துடிப்பினால் வெப்பம் (உயிர்) உருவாகிறது. ஆனால் கோள்கள் அனைத்தும் சுழற்சியினால் வெப்பமடைகிறது. அதனால் தான் சூரியனைச் சர்வேஸ்வரன் என்றும் பூமியைப் பரமேஸ்வரன் என்றும் உயிரை ஈஸ்வரன் என்றும் ஞானிகள் காரணப் பெயரிட்டு அழைத்தார்கள்.

உயிர் மற்ற ஜீவணுக்களை உருவாக்கும் சூரியன் அணுக்களை உருவாக்கும். சூரிய பிரபஞ்சத்தில் தான் உயிர் அணுக்கள் துடிப்பின் நிலைகள் கொண்டு உருவாகின்றது.

அந்தத் துடிப்பினால் மற்ற உணர்வோடு சேர்த்து இரண்டும் மோதலான பின் அணுவின் துடிப்புகளாகி அந்த அணுவின் மலம் தான் இந்த உடலாகின்றது.
1.இந்த அணுக்களின் மலத்திற்கு… இந்த உடலைப் பாதுகாக்கத் தான் இன்று எத்தனையோ வேலைகளைச் செய்கின்றோம்.
2.பல கோடி அணுக்களின் மலம் நம் உடல்.
3.இதைத் தான் மும்மலம் மும்மலம் மும்மலம் என்று சொல்வார்கள்.

வெப்பம் காந்தம் விஷம் இந்த மூன்றினால் உருவாகும் அந்த அணுக்களின் மலம் தான் இந்த உடல் என்று தெளிவாக்குகின்றார்கள்.

ஆக…நாம் இந்த உடலை… நமது… எனது… எனக்குச் சொந்தம்…! என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம்… அதைத் தான் சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.
1.ஆனால் நமக்கு சொந்தமானது உயிர் தான்
2.அந்த உயிருடன் ஒன்றும் உணர்வை ஒளியாக மாற்றும் அத்தகைய பருவத்தைத் தான் உங்களுக்கு இப்போது ஏற்படுத்துகின்றோம்.

“தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டுள்ளது போல் தான்” இன்றைய மனிதனின் வாழ்க்கை இந்த உலகிலே உள்ளது

 

பூமிக்கு வெளியிலே அணுகுண்டுகளை வெடித்துப் பரீட்சித்துப் பார்த்ததும்… இராக்கெட்டுகளை அதிகமாக விண்ணிலே செலுத்திக் கொண்டிருப்பதும்… அதன் மூலம் கதிரியக்கங்கள் எல்லாக் கோள்களுக்குள்ளும் அதிகமாகப் பரவி விட்டது.

நட்சத்திரத்திலிருந்து இயற்கையாக வெளிப்படக்கூடிய கதிரியக்கச் சக்திகள் ஒன்றுடன் ஒன்று மோதி மின்னலாக வரும் பொழுது
1.விஞ்ஞானத்தினால் பரவச் செய்துள்ள கதிரியக்கங்களில் இது பட்ட பின் இரு மடங்காகிவிடும்… கோள்களிலும் இது அதிகமாகிவிடும்.
2.இப்படிப்பட்ட அலைகள் இந்தப் பிரபஞ்சத்திற்குள் இப்பொழுது சுழன்று கொண்டுள்ளது… சூரியனுக்கு அருகிலும் வந்துவிட்டது.

உதாரணமாக… இரண்டு மின்சார வயர்கள் ஒன்றுடன் ஒன்று மோதினால் இரண்டு மடங்கு கரண்டுகள் அதிகமாகி அதனுடன் சேர்ந்த பல்புகள்… மற்ற சாதனங்கள் அனைத்தும் ஃப்யூசாகி விடுகின்றது.

சூரியனின் சுழற்சியில் இப்பொழுது மின்சாரம் (இயக்கம்) சீராக இருக்கின்றது. ஆனால் இயற்கையால் உருவாகும் கதிரியக்கமும் மனிதனால் பரவச் செய்த கதிரியக்கமும் மோதிய பின் இரு மடங்கு இயக்கமாகி சூரியனுக்குள் அப்படிச் செல்லும் போது அங்கே இரு மடங்கு மின்சாரம் உற்பத்தி ஆகும்.

அப்போது நம் உயிரின் துடிப்பும் அதிகரிக்கப் போகின்றது. அதனால் நம் உடலில் உள்ள அணுக்களும் வேகமாகத் துடிக்க ஆரம்பிக்கும். இப்படி வேகமானால் சிந்திக்கும் தன்மை இழந்து விடுவோம்.

ஒரு நொடிக்குள் இப்படி நடந்து விட்டால்…
1.மனிதனுக்கு மனிதன் அடித்துக் கொல்லும் நிலை வந்துவிடும்.
2.இந்த உணர்வலைகள் பாய்ந்து காட்டிற்குள் இருக்கக்கூடிய மிருகங்களும் நகரத்திற்குள் வரும் வாய்ப்புகள் உண்டு.
3.ஒரு நாள் முழுவதற்கும் இதனுடைய பாதிப்பு இருந்தால் உலகில் முக்கால்வாசி மக்கள் தன் நினைவை இழந்து… இறந்து விடுவார்கள்.

விஞ்ஞான ரீதியில் எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்று எத்தனையோ கம்ப்யூட்டர்களை உலகெங்கிலும் வைத்துள்ளார்கள். எலக்ட்ரிக்கின் சக்தி இரு மடங்காகும் பொழுது அதனுடன் தொடர்பு கொண்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் அனைத்தும் கருகிவிடும். அதில் இவர்கள் வைத்திருக்கின்ற அளவுகோலும் மாறிவிடும்.

அடுத்த நாட்டை அழிப்பதற்காக பூமிக்குள் எத்தனையோ குண்டுகளைச் சேமித்து வைத்துள்ளார்கள். அதிலே மற்ற மின்னலோ இயற்கையின் சீற்றங்களோ பாதித்து விடாதபடி அதற்குண்டான பாதுகாப்புக் கவசமாகக் கம்ப்யூட்டர்கள் மூலம் இணைத்து வைத்துள்ளார்கள்.

ஒரு மின்னல் பாய்ந்து அந்தக் குண்டுகள் அனைத்தும் வெடித்தால் அருகில் இருக்கக்கூடிய இடமே முழுமையாக அழிந்துவிடும். அதனால் தான் எல்லா இடங்களிலும் அதைக் காப்பதற்காக வேண்டி கம்ப்யூட்டர் மூலம் நுண்ணிய நிலைகளில் இயக்கிச் சீராக வைத்திருக்கின்றார்கள்.

ஆனால் இரு மடங்கு மின்சாரம் உற்பத்தியானால் என்ன ஆகும்…? இவைகள் அனைத்துமே செயல் இழந்துவிடும். கம்ப்யூட்டர்கள் ஃப்யூஸ் ஆகிவிடும்.

ஏனென்றால் இயக்கத் தொடர் அதிகமானவுடன் அதற்குள் இருக்கும் காந்தம் அதிகமாகி… அனைத்தையுமே வேகமாக இயக்கும்படி செய்து கருக்கி விடுகின்றது. அந்தப் பாதுகாப்பு இழந்தால் புதைத்து வைத்த குண்டுகள் வெடிக்கத் தொடங்கும்.

1.நாடு… நகரம்… மக்கள்… நீ… நான்… உன் சொத்து… என் சொத்து… என்று சொன்னாலும் எல்லாமே சிதைவுண்டு போய்விடும்.
2.அந்த அளவிற்குத் தலைக்கு மேல் கத்தியைத் தொங்கவிட்டு கீழே அமர்ந்திருப்பது போன்று
3.”எப்பொழுது கயிறு அறுந்து விழும்…?” என்று சொல்ல முடியாத நிலையில் இப்படிப்பட்ட போர் முறையில்தான் இருக்கின்றோம்.

கடவுளின் அவதாரத்தில் வராக அவதாரம் உயிரின் துடிப்பாகிப் பல உணர்வுகளை மாற்றி அமைத்து உணர்வின் தன்மை எதனையுமே பக்குவப்படுத்தும் மனித நிலை பெற்ற பின் தான் விண்ணுலக ஆற்றலைக் கவர்ந்து தனக்குள் அதை உருவாக்கும் ஆற்றலைப் பெற்றான் மனிதன்.

ஆனால் அது எல்லாம் அரசர்கள் காலத்தில் அஞ்ஞான வாழ்க்கையாகி… இன்று உடலின் இச்சைக்கு என்று வளர்த்துக் கொண்டார்கள் விஞ்ஞானிகள்.

அகஸ்தியனோ நஞ்சினை வென்று உணர்வுகளை ஒளியாக மாற்றிப் பிறவி இல்லாத நிலை அடைந்து (அந்த உயிர்) என்றுமே ஒளியாக இருக்கின்றான் துருவ நட்சத்திரமாக.

அவனைப் பின்பற்றிச் சென்றவர் அனைவரும்… மனிதனின் ஆறாவது அறிவை ஏழாவது நிலை பெற்று ஒளியின் சரீரம் பெற்றது சப்தரிஷி மண்டலம்.

அது தான் சிருஷ்டித்துக் கொண்ட மண்டலம். ஆறவது அறிவைத் தனக்குள் நுகர்ந்து உணர்வினைச் சிருஷ்டித்துக் கொண்டது… சப்தரிஷி… சிருஷ்டி…! காரணப்பெயராக இவ்வாறு வைத்து நாம் தெரிந்து கொள்ளக் காட்டினார்கள்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியையும் சப்தரிஷி மண்டலங்களின் சக்தியையும் நாம் எடுத்து வளர்த்துக் கொண்டால்
2.நடக்கப் போகும் அந்தத் தீமையிலிருந்து நாம் மீள முடியும்.
3.நம் உணர்வுகளை எல்லாம் உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றிய பின்
4.அகண்ட அண்டத்தில் எது வந்தாலும் அதை ஒளியாக மாற்றி மீண்டும் நிலையான சரீரமாக வளர முடியும்.

கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றாகி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி அத்தகைய நிலை பெற்றவர்கள் தான் சப்தரிஷி மண்டலத்தில் இன்றும் உள்ளார்கள்.

ஆனால் தனித்த நிலையில் வளர்ச்சி பெற்றால் முனி…! மற்றொன்றை வீழ்த்திடும் சக்தி கொண்டது. பின் அதுவும் மடிந்து விடும். வளரும் சக்தி இல்லை.. இதற்கு முனி என்று பெயர். தன் வலிமையைக் காட்டும்… மற்றொன்றை முறியடிக்கும்… பின் அதுவும் மடியும்.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் கணவன் மனைவி என்ற நிலையில் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்திகளை எடுத்து…
1.இரு உணர்வும் ஒன்றாக இணைந்து இரு உயிரும் ஒன்றாக இணைத்து உணர்வை ஒளியாக மாற்றிக் கொண்டே வந்தால்
2.உடலை விட்டுச் சென்ற பின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குச் சென்றடைய முடியும்.
3.விஞ்ஞானத்தினால் வரக்கூடிய தீமைகளிலிருந்து தப்பி விண் செல்ல முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யார் நமக்குத் தீங்கு செய்தாலும் அருள் மகரிஷிகளின் உணர்வு பெற வேண்டும் என்று அதை வலுப்படுத்திக் கொள்ளுங்கள். அந்தத் தீங்கின் உணர்வை எடுக்காதீர்கள்.

ஏனென்றால் இப்பொழுது இங்கே உபதேசிக்கும் உணர்வுகளைக் கூர்ந்து கவனிக்கும் பொழுது அது உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகின்றது.

பதிவு செய்த உணர்வின் வலிமை கொண்டு அந்த மகரிஷிகளை நீங்கள் எண்ணும் பொழுது
1.எத்தகைய தீமைகளோ பகைமைகளோ இருப்பினும்
2.இரக்கமற்றுக் கொன்று குவிக்கும் உணர்வுடன் மற்றவர்கள் வந்தாலும்
3.ஒருவனைத் தாக்கிக் கொன்றிட வேண்டும்…! என்ற உணர்வுகள் வருவதை
4.அந்த அசுர குணங்களிலிருந்து நாம் அவசியம் தப்புதல் வேண்டும்.

அதற்காகத்தான் நம் குருநாதர் காட்டிய அருள் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன். பதிவின் நினைவை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்துடன் உங்களை ஒன்றச் செய்யுங்கள்.
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்கள் இரத்தநாளங்களில் கலக்கட்டும்.
3.உங்கள் உடலில் உள்ள பகைமை உணர்வுகள் அனைத்தும் அதனுடைய வலிமை ஒடுங்கட்டும்.

ஆகவே அருள் ஒளியின் உணர்வை உங்களுக்குள் செலுத்துங்கள். அருள் ஞானத்தின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள். அந்த ஞானிகள் வாழ்ந்த வாழ்க்கையை நீங்கள் பெறவேண்டும்.

உங்கள் பார்வையில் இந்த நாட்டில் உள்ள பகைமைகள் அனைத்தும் நீங்க வேண்டும். மனிதன் என்ற தன் நிலையை அடைந்து சகோதர உணர்வுடன் ஒன்றி வாழ்தல் வேண்டும்.

1.நீங்கள் வெளி விடும் மூச்சலைகள் இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள
2.விஞ்ஞானத்தால் வந்த அசுர உணர்வுகளை எல்லாம் அழிக்கட்டும்…!
3.அருள் ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் ஓங்கி வளரட்டும்.

விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் அணுகுண்டுகளைத் தயார் செய்து அதை வெடிக்கச் செய்து மற்றதை அழிக்கச் செய்கின்றான். அதே போல் அதை வைத்து மற்ற இயந்திரங்களையும் துரிதமாக இயக்கச் செய்கின்றான்.

அதாவது குறைந்த எடை கொண்ட கதிரியக்கச் சக்திகளை வைத்து அதிகச் செலவில்லாதபடி இயக்கத்தின் வேகத்தை அதிகமாகக் கூட்டி மற்ற சாதனங்களை இயக்கச் செய்கின்றான்.

அப்படி இயக்கினாலும்…
1.இந்தக் கதிரியக்கங்கள் கசிவாக்கப்படும் பொழுது இயக்க ஓட்டத்தை மிகவும் துரிதமாக்குகின்றது
2.மனிதனின் ஆசைக்குள் அந்தக் கதிர்வீச்சுகளை நுகரப்படும் பொழுது
3.நம்முடைய எண்ணங்கள் துரித நிலைகளில் இயக்கப்படுகின்றது
4.சிறிது தடைப்பட்டால் வெடிக்கும் நிலையே வருகின்றது.

நம் எண்ணங்கள் எதை உற்று நோக்குகின்றோமோ… சீராக வரவில்லை என்றால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் சிதறுண்டு போகும் மனங்களாகத்தான் மாற்றுகின்றது.

ஒன்றின் வீரியத் தன்மைகள் கொண்டு நுகரப்படும் பொழுது…
1.மற்றொன்று நாம் எதிர்பார்க்கும் உணர்வுகள் அது துரித நிலையில் நடக்கவில்லை என்றால்
2.உணர்வின் மோதலால் அது சிதறுண்டு நம் சிந்தனைகள் இழக்கப்படுகின்றது
3.நம்மைத் தவறு செய்பவனாக மாற்றுகின்றது…
4.இந்த விஞ்ஞான அறிவால் வந்த நிலைகள் தான் இது…!

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டுமா இல்லையா..?

ஆனால்… இதை எல்லாம் நான் படித்துப் பேசவில்லை. அந்த உணர்வின் இயக்கத்தைக் குருநாதர் எனக்கு நேரடியாக உணர்த்தியதை உங்களுக்கும் அப்படியே சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

இந்த உலகம் மிகவும் சுருங்கிக் கொண்டு வருகின்றது. இத்தகையை சூழ்நிலையில் அந்த அருள் ஞானிகளின் அருள் வட்டத்திலேயே நாம் ஒன்றி வாழ வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உங்கள் நினைவைப் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அந்த அகஸ்தியரின் பால் செலுத்துங்கள். அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்திட அருள்வாய் ஈஸ்வரா…!

அவரிடம் இருந்து வெளிப்பட்ட அரும் பெரும் சக்தியை நீங்கள் நுகரும் பொழுது உங்கள் உடலுக்குள் அதன் உணர்வின் சக்தியை உணரலாம்.

1.ஆகவே தியானிக்கும் பொழுது
2.அந்த அகஸ்தியரின் அரும் பெரும் சக்தி
3.“மனப்பூர்வமாக எங்கள் இரத்தங்களில் கலக்க வேண்டும்…” என்று ஏங்கிப் பெற வேண்டும்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
1.“ஈஸ்வரா…” என்று சொல்லும் பொழுது
2.உங்கள் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு போக வேண்டும்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்திட அருள்வாய் ஈஸ்வரா…!
1.எங்கள் இரத்தநாளங்களில் கலந்திட என்று சொல்லும் பொழுது இரத்தத்திற்குள் நினைவைச் செலுத்துங்கள்.
2.ஈஸ்வரா என்று சொல்லும் பொழுது உங்கள் புருவ மத்தியில் உயிரிடம் நினைவைக் கொண்டு போங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி என் கணவர் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று மனைவியும் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி என் மனைவி உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கணவனும் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் தாய் தந்தையர் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று குழந்தைகள் (திருமணம் ஆகாதவர்கள்) ஏங்கித் தியானியுங்கள்.

துருவ மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
துருவ மகரிஷியாக ஆன பின் அவர் பெற்ற உணர்வுகள் அவரிடமிருந்து வெளிப்பட்டதை நீங்கள் தியானிக்கும் பொழுது
1.அந்த அரும் பெரும் சக்தி உங்கள் இரத்தநாளங்களில் கலக்கும்.
2.சர்வ பிணிகளையும் போக்கும் அரும் பெரும் சக்தியாக மாறும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

உங்கள் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்.
1.அங்கிருந்து துருவப் பகுதியின் வழியாக வரும் அருள் சக்தியை நுகர்ந்து
2.எங்கள் இரத்தநாளங்களில் கலந்திட வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளையும் துருவ மகரிஷிகளையும் துருவ நட்சத்திரத்தையும் எண்ணி இவ்வாறு தியானிப்பதால்
1.நம் உடலில் நல்ல அணுக்களை உருவாக்க இது உதவும்.
2.அதே சமயத்தில் நம் உடலில் அறியாது சேர்ந்த
3.தீய வினைகள்ளோ சாப வினைகள் பாவ வினைகள் பூர்வ ஜென்ம வினைகள் அனைத்தும் அகலும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் தியானத்தில் அமர்ந்திருக்கும் அனைவரது இரத்த நாளங்களிலும் கலந்து அவர்கள் உடல் முழுவதும் படர்ந்து அவர்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் தியானமிருக்கும் இந்த இல்லம் முழுவதும் படர்ந்து இங்கு குடியிருப்போர் அனைவரும் இந்த வீட்டிற்கு வருவோர் அனைவரும் அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பார்க்கும் அனைவரும் பெற்று… அருள் வழியில் அவர்கள் தெளிந்த மனமும் மகிழ்ந்திடும் உணர்வும் பெற்று.. தெளிந்து… தெரிந்து… வாழும் அருள் ஞான சக்தி பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் தொழில் செய்யும் இடம் முழுவதும் படர்ந்து தொழில் வளம் பெருகி அருள் ஒளி பெருகி அருள் வழியில் தொழில்கள் சீராகி வாடிக்கையாளர்கள் பெருகிட அருள்வாய் ஈஸ்வரா.

இப்பொழுது துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலங்களின் பால் நினைவைச் செலுத்துங்கள்.

சப்தரிஷி மண்டலங்களிண் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

சப்தரிஷி மண்டலங்களின் அருள் சக்தியை இப்படி எடுத்து வலுவாக்கிக் கொண்ட பின் நம்முடைய முன்னோர்களை விண் செலுத்தப் பழக வேண்டும்.

எங்கள் குலங்களின் தெய்வங்களான முன்னோர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் அனைத்தும் சப்தரிஷி மண்டல ஒளி அலையுடன் கலந்து
1.உடல் பெறும் உணர்வுகள் அனைத்தும் அங்கே கரைந்து
2.என்றென்றும் மகிழ்ந்திடும் நிலையாக அழியா பருவம் பெற்ற ஒளியின் சுடராகி
3.பேரானந்தப் பெரு நிலை அடைய வேண்டும் என்று வீட்டிலுள்ளோர் அனைவரும் உந்தித் தள்ளுதல் வேண்டும்.

அந்த ஆன்மாக்கள் எடை இல்லாமல் இருப்பதால் நாம் உடலுடன் ஒரு இயந்திரம் போன்று இருப்பதால் நாம் பாய்ச்சும் அந்த சப்தரிஷி மண்டல உணர்வுகள் அவர்கள் உயிராத்மாவில் இணையப்பட்டு
1.சப்தரிஷி மண்டல ஒளி அலையும் இந்த உயிராத்மாவும் சந்திக்கும் நிலையில்
2.புவி ஈர்ப்பின் பிடிப்பைக் கடக்கச் செய்து நேரே அங்கே சப்தரிஷி மண்டலத்திற்கே அழைத்துச் சென்றுவிடும்…

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி மேகங்களில் படர்ந்து நல்ல மழை பெய்து ஏரி குளங்கள் அனைத்தும் நிரம்பி தாவர இனங்கள் செழித்து வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

எங்கள் சொல்லும் செயலும் புனிதம் பெற அருள்வாய் ஈஸ்வரா எங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்கள் அனைவரையும் அமைதி பெறச் செய்ய அருள்வாய் ஈஸ்வரா…!

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…!

இதைப் போன்ற தியானம் தினசரி நாம் செய்தல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் அதிகரித்துக் கொள்ளுங்கள்

 

அகஸ்தியன் தன் வாழ்க்கையில் நஞ்சினைப் பிளந்து… கணவனும் மனைவியும் இரண்டறக் கலந்து உணர்வினை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக ஆனார்கள்.

1.இந்தக் காற்றிற்குள் எத்தனையோ உணர்வுகள் இருந்தாலும் அதையெல்லாம் பிளந்து விட்டு
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அதை நாம் நுகர்ந்து பழகுதல் வேண்டும்.

உயிரணு பூமிக்குள் வந்த பின் பல கோடிச் சரீரங்களில் தீமைகளைப் பிளந்திடும் உணர்வுகளைப் பெற்று பன்றியின் உடலை அமைத்து அதனின் வலுவின் துணை கொண்டு நாற்றத்தைப் பிளந்து வராக அவதாரமாக… நல்ல உணர்வுகளை நுகர்ந்து… அடுத்து பரசுராம்…! தீமைகளைச் சமப்படுத்தும் நிலைகள் மனிதனாக உருப்பெற்றது.

இந்தப் பிரபஞ்சத்திற்குள் எது இருந்தாலும் சமப்படுத்தி… அதைத் தனக்குகந்ததாக உருவாக்கும் சக்தி பெற்றவன் மனிதன். இப்படிப் பெற்றவன் தான் அகஸ்தியன்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி கணவனும் மனைவியும் இரண்டறக் கலந்து உணர்வினை ஒளியாக மாற்றிக் கொண்டே உள்ளார்கள்… துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய உணர்வுகளை சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றிக் கொண்டே உள்ளது. இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய எத்தகைய விஷத்தையும் ஒடுக்கக்கூடிய சக்தி பெற்றதுதான் துருவ நட்சத்திரம்.

அவ்வாறு வரக்கூடிய அந்த துருவ நட்சத்திரத்தின் ஒளி அலைகளை நம் பூமி துருவத்தின் வழியாகக் கவர்ந்து நமக்கு முன் பரவச் செய்து கொண்டுள்ளது.

அதை நாம் எடுக்கக்கூடிய நேரம் எது…?
1.துருவ நட்சத்திரத்தின் சக்தி பிரபஞ்சத்தில் பரவி வருவதை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி
2.அதை நம் பூமியின் துருவப் பகுதி வழியாகக் கவரும் அந்த அதிகாலை நேரம் தான்.

ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று பல முறை உடலுக்குள் செலுத்த வேண்டும்

இதை உறுதிப்படுத்த… உருவாக்க… உணர்வினை வலுவாக்க… உடலுக்குள் அந்த வலிமையைச் சேர்க்க… தன் மனைவிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்க வேண்டும்… அவர்கள் உடல் முழுவதும் படர வேண்டும் அவருடைய ஜீவான்மாக்கள் பெற வேண்டும்… அருள் ஒளி அவருக்குள் படர வேண்டும். அந்த அருள் ஒளி எனக்குப் பாய்ச்ச வேண்டும் என்று
1.இரு மனமும் ஒன்றுபட வேண்டும்… இரண்டு பேருமே இவ்வாறு எண்ணிக் கலந்து உருவாக்குதல் வேண்டும்.
2.இது தான் ரிஷி… சிருஷ்டிப்பது…! ரிஷி பத்தினி என்று அன்று சொல்வார்கள்.
3.இருவருமே ஒன்றாகச் சேர்த்து அருள் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் முழுமை பெறுகின்றோம்.

இதைத் தான் காவியமாகப் படைத்து நமக்குக் கொடுத்துள்ளார்கள் அன்று ஞானிகள்.

காலையில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துச் சேர்த்துக் கொண்ட பின்… நாங்கள் பார்ப்போருக்கெல்லாம் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என் பார்வை அவர்கள் தீமையை அகற்றிடும் சக்தியாக வர வேண்டும் என்று நாம் நினைவுகளைச் செலுத்த வேண்டும்.

அதே சமயத்தில் இன்று விஞ்ஞான உலகில் வாழ்கிறோம். காற்று மண்டலத்தில் ஏராளமான நச்சுத் தன்மைகள் பரவி உள்ளது. அது நமக்குள் புகாது தடுத்துத் தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவை
2.மீண்டும் மீண்டும் நாம் சுவாசித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

உலகப் போர் என்ற நிலைகளில் அணுகுண்டுகள் வெடிக்கப்பட்டு அதிலிருந்து வெளிப்படக்கூடிய கதிரியக்கங்கள் பிரபஞ்சத்தில் பரவி எல்லாக் கோள்களும் எடுத்து சூரியன் அருகிலே சென்றால் அதற்குள் மோதலாகி “இரு மடங்கு காந்தத்தை” சூரியன் உற்பத்தி செய்யப் போகிறது.

அத்தகைய இயக்கச் சக்தி வரும் போது
1.நம் உயிரின் துடிப்பு அதிகரிக்கும்
2.அணுக்களின் துடிப்பு அதிகரிக்கும்.
3.உணர்வின் தன்மை மடியும் நிலைகள் வந்து விடும்.

அது போன்ற நிலை நம்மைப் பாதிக்காது தடுக்க வராகன் நாற்றத்தைப் பிளந்து நல்லதை மட்டும் எப்படிக் கூர்மையாக நுகர்ந்ததோ… அது போல் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை நமக்குள் பெருக்கி அதை மாற்றிப் பழகுதல் வேண்டும்.

இதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்… இதனுடைய அர்த்தங்களைப் புரிந்து செயல்பட வேண்டுமென்றால் ஆயுள் பத்தாது. குருநாதர் எமக்கு கொடுத்த அருள் உணர்வுகளை…
1.பாக மண்டலத்தில் (கர்நாடகா அகஸ்தியன் அமர்ந்த இடம்) பிரபஞ்சம் எப்படி உருவானது…? என்று
2.அகஸ்தியன் கண்ட உணர்வுகளை நானும் எடுத்து அதைக் கண்டு கொண்டதனால்
3.அந்த உணர்வின் அறிவு எனக்குள்ளும் வந்து குருவின் துணையால் இந்த உண்மைகளை அறிய முடிந்த்து.
4.அகஸ்தியன் கண்டுணர்ந்த உணர்வின் அறிவுதான் எனக்குள்ளும் புகுந்து அதையெல்லாம் அறிய முடிகின்றது.

இதைப் போலத் தான் நீங்களும் அறிந்து உங்களுக்குள் வரும் தீமைகளை அகற்றிடும் சக்தியாக… “அகண்ட அண்டத்தில் நடப்பதை அறிந்துணர்ந்து” அந்த அருள் ஒளியை உங்களுக்குள் விளையை வைத்துப் பிறவி இல்லாத நிலை அடைதல் வேண்டும்.

அதற்குத்தான் திரும்பத் திரும்ப… திரும்பத் திரும்பச் சொல்வது.

முதலிலே சொன்னது போன்று சூரியனுக்குள் இருந்து இரு மடங்கு மின்சாரத்தை உருவாக்கும் சந்தர்ப்பமாக அதிக சக்தி வாய்ந்ததாக இனி வரப்போகின்றது.

நம் உயிர் எலக்ட்ரிக்காக இருக்கின்றது. அந்த உணர்வின் வேகத் துடிப்பு வரும் பொழுது உயிரின் துடிப்பு அதிகமாகின்றது. அந்தத் துடிப்பாகும் பொழுது நமக்குள் உணர்வின் தன்மை அதிகரித்து… நம் நல்ல எண்ணங்கள் அனைத்தும் ஃப்யூஸ் ஆகிவிடும். சிந்திக்கும் தன்மை இழந்து விடுவோம்.

பூமிக்குள் நிலநடுக்கம் ஏற்படுவது போன்று தான் ஒரு நொடிக்குள் இத்தகைய நிகழ்ச்சிகள் நடந்து விடும். எலெக்ட்ரிக் இரு மடங்காகி சிந்தனைகள் இழந்து விட்டால்…
1.மறுபடியும் நல்ல சிந்தனைகளைக் கொண்டு வருவது மிகவும் கடினம்.
2.ஆகவே இப்பொழுது இருந்தே நீங்கள் தயாராகிக் கொள்ளுங்கள்.
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் அதிகரித்துக் கொள்ளுங்கள்.

அதன் உணர்வின் வலிமை கொண்டு எந்த நொடியிலே அந்த விஷத்தன்மையான இரு மடங்கு துடிப்பு அதிகமானாலும் அதைப் பிளந்து உங்கள் இயக்கத்தைச் சமப்படுத்தி கொள்ள இது உதவும்.

ஒரு நொடியானாலும் ஒரு மணி நேரம் ஆனாலும்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி எடுத்து சிந்தனை சிதறாது வைத்திருக்கலாம். உங்களையும் காக்கலாம் எதிர்கால மக்களையும் காக்கலாம்.

இயற்கையின் சீற்றங்கள் வரப்படும் பொழுது…
1.அந்த நேரத்தில் ஞானிகள் எவ்வாறு தன்னைப் பாதுகாத்துக் கொண்டார்களோ
3.அந்த உணர்வை நமக்குள் செலுத்தினால் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

அந்த நிலை நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக… தாய் கருவிலே இருக்கப்படும் பொழுது ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள்
1.”ஒருவருக்குத் திருமணம் ஆகவில்லை…!” என்ற அந்தக் குறைகளைத் தாய் கேட்டுப் பதிவாக்கியிருந்தால்
2.அந்த அதிர்ச்சியான உணர்வலைகள் அந்தக் கருவிலே விளைந்துவிடும்.
3.இது பூர்வ புண்ணியமாக அமைந்து… அதனால் பிற்காலத்தில் அந்தக் குழந்தைக்குத் திருமணத் தடை வருகின்றது.

ஆனால் இப்படித் தடைகள் வந்தாலும் அதை நாம் மாற்றி அமைக்க முடியும்.

என் குழந்தை அருள் ஞானம் பெற வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி என் குழந்தையின் உடலிலே படர வேண்டும். திருமணமாகி எங்கே சென்றாலும் அந்தக் குடும்பத்தில் தொழில் வளம்… செல்வம்.. செல்வாக்கு பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

ஆனால் குழந்தை மீது பாசமாக இருக்கும் பொழுது பிள்ளைக்கு வயதாகின்றதே… திருமணம் ஆகவில்லையே…! என்ற சோர்வும் அதனால் வேதனையும் வரும் பொழுது பாலிலே பாதாமைப் போட்டாலும் பாதாமிற்குள் சிறிது விஷம் பட்டால் என்ன செய்யும்..?

பாதாமிற்குச் சக்தி இழந்து விடும்.

பக்தி மார்க்கங்களில் நாம் சென்றாலும்… நல்லது நடக்கும் பொழுது மகிழ்ச்சி வரும். கொஞ்சம் குறையானால் அந்த குறையைத் தாங்கும் நிலையற்றுப் போய் விடுகின்றது.

வாழ்க்கையில் வரும் குறையை நிவர்த்தி செய்வதற்குத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்தத் தியானத்தை உங்களுக்குச் சொல்கிறோம்.

கடவுளின் அவதாரத்தில் வராக அவதாரத்தைக் காட்டினார்கள் ஞானிகள். பரிணாம வளர்ச்சியில் புழுவிலிருந்து பல கோடிச் சரீரங்கள் எடுத்துக் கொண்ட பின் வராகனகாக வரும் பொழுது சாக்கடையில் உள்ள நாற்றத்தை நீக்கிவிட்டு நல்ல உணர்வை நுகர்கின்றது.

1.அதன் வாழ்க்கையில் அது அறிந்து நுகரவில்லை….!
2.சந்தர்ப்பத்தில் விளைந்து கொண்ட உணர்வை அது நுகர்கின்றது.
3.நுகர்ந்த உணர்வுகள் அதன் உடலிலே சேர்கின்றது.
4.நல்லதை நுகர்ந்த உணர்வோ அந்தப் பன்றி உடலைப் பிளக்கின்றது.
5.பன்றி உடலைப் பிளந்த பின் பரசுராம்… மனிதனாகப் பிறக்கின்றது
6.தீமைகளை நீக்கும் அந்த அருள் சக்தியை மனித உடலில் பெறுகின்றது.
7.ஏனென்றால் சமப்படுத்தும் உணர்வுகளாக அந்த எண்ணங்கள் நமக்குள் தோற்றுவிக்கும்.

இதன் வழிப்படுத்தி மனிதன் வாழக் கற்றுக் கொண்டால் தீமையை அகற்றிக் கொள்ளலாம். இப்படி ஒவ்வொன்றையும் சமப்படுத்தி நாம் வாழ்வோம் என்றால் நமக்குள் அருள் என்ற நிலைகளும்… ஞானிகளின் உணர்வை நமக்குள் வளர்த்துக் கொண்ட பின்.. இனிப் “பிறவியில்லா நிலை..” என்ற நிலையை அடையவும் இது உதவும்.

ஏனென்றால் பற்றின் நிலை கொண்டு எனக்கு வரவில்லையே.. ஒன்றும் எனக்குக் கிடைக்கவில்லையே…! என்ற எண்ணத்திற்குப் போக வேண்டியதில்லை.

இந்த மனித வாழ்க்கையில் குடும்பத்தில் எல்லோரும் நலமாக வேண்டும்…! என்ற பற்றுடன் தான் இருக்க வேண்டுமே தவிர
1.கல்யாணம் நடக்கவில்லையே…! என்ற பற்றைக் கூட்டினால்
2.அந்த உணர்வின் தன்மை முன் நின்று நடத்தச் செய்யும் நல் உணர்வுகளைத் தாழச் செய்யும்.
3.நாம் செய்யக்கூடிய காரியங்களுக்குத் தடையாகும்.

நாம் எதை எண்ணுகின்றோமோ இதை ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றி ஓ..ம் நமச்சிவாய…! என்று உடலாக நம் உயிர் உருவாக்கி விடுகின்றது.

சிவாய நம ஓம்…! நமக்குள் பதிவு செய்த உணர்வுகளே மீண்டும் நமக்குள் அந்த எண்ணங்களாகத் தோற்றுவித்து நம்மைச் சோர்வடையச் செய்யும்.

நம் பெண்ணைப் பார்க்க வருவோருக்கும் இந்தச் சோர்வான உணர்வுகள் படப்படும் பொழுது வருவர்கள்… பார்ப்பார்கள்… போய் விடுவார்கள்…! இதைப் போன்ற நிலையில் நம் மனம் தான் வருவோரை அகற்றுகின்றது

தாயின் கருவின் மூலம் வந்த அந்த உணர்வின் தன்மை நமக்குள் வித்தாக வளர்த்து அந்த உணர்வின் தொடர் வரிசையிலேதான் இந்த வாழ்க்கையில் இப்படி ஒரு தடை வருகின்றது. இதிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும் அல்லவா…!

மேலும் இந்தக் காற்று மண்டலமே இன்று நச்சுத் தன்மை ஆகிவிட்டது. இதிலிருந்து மனிதர்கள் நாம் எப்படி மீள வேண்டும்..? என்பதற்குத்தான் ஆத்ம சுத்தியையும் தியானத்தையும் உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

ஆகவே ஒவ்வொரு நிலையிலும் தியானத்தின் மூலம் அருள் சக்திகளை அதிகமாகக் கூட்டிக் கொண்டு
1.வரும் எந்தக் குறையாக இருந்தாலும் அதை மனதில் இருத்தாதபடி மாற்றிட வேண்டும்.
2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.அருள் ஞானம் பெருக வேண்டும்… அருள் வழியில் வாழ்க்கை நலம் பெறவேண்டும்
4.எங்கள் பார்வை அனைவரையும் நலமாக்க வேண்டும்
5.நாங்கள் பார்ப்போர் எல்லாம் நலம் பெற வேண்டும் என்ற இத்தகைய உணர்வுகளை வளர்த்துக் கொண்டே வந்தால்
6.அருள் உணர்வின் கரு நமக்குள் உருவாகும்… இந்த உணர்வின் அலைகள் நமக்குள் பெருகும்.

அதன் மூலம் நம் சொல் அனைவருக்கும் நலமாகின்றது. நாம் எண்ணிய காரியங்கள் ஜெயிக்கும் தன்மையாக அதன் உணர்வின் இயக்கமும் நமக்குள் தொடர்ந்து வரும்.

நெருப்பைத் தான் தெரிந்து வைத்திருக்கின்றோம்… ஆனால் உயிரைப் பற்றி நாம் தெரிந்து வைத்திருக்கவில்லை

கோவிலுக்குச் சென்று யாகங்கள் செய்து வேள்விகள் செய்தால் ஆண்டவன் காப்பாற்றுவான்…! நீ ஏன் கஷ்டப்படுகின்றாய்…? யாகத்தை வளர்த்தால் தன்னாலே ஆண்டவன் வருகின்றான்…! என்று ஈப்படிச் செய்வதில் தான் நமக்கு நம்பிக்கை இருக்கிறது.

நெருப்பைத் திகு திகு என்று எரியவிட்டு அதிலே பால் நெய் இன்னும் என்னென்னமோ பொருளை எல்லாம் போட்டால் ஆண்டவனுக்கு இந்த வாசனைகள் போய் “எனக்கு வேண்டியதெல்லாம் கிடைக்கும்… அவன் நமக்குக் கொடுப்பா…!” என்ற எண்ணத்திலே தான் நாம் இருக்கின்றோம்.

உதாரணமாக… நெருப்பில் நாம் எந்தப் பொருளைப் போடுகின்றோமோ அந்த மணம் தான் வரும். நறுமணம் உள்ளதை நெருப்பிலே போட்டால்… அதை நுகர்ந்தால் நமக்கு ஆனந்தம் வரும்.

ஆனால் பக்கத்திலே சிறிது தூரத்தில் மிளகாயை அடுப்பிலே போட்டு வறுக்கிறார்கள் என்றால்… அந்தக் காற்று இந்தப் பக்கமாக அடித்தால் அது நம்மை இரும வைத்துவிடும்.

நெருப்பிலே படும் இந்த உணர்வுகள் எதுவோ அதுதான் நம்மை இயக்கும்.

ஆனால் நெருப்பிலே மிளகாயைப் போட்டால் நாம் ஏன் இரும வேண்டும்…?

1.எவ்வளவு பெரிய பக்திமானாக இருந்தாலும்
2.எவ்வளவு சக்திசாலியாக இருந்தாலும்
3.பிறருக்குத் தர்மத்தைச் செய்தாலும்
4.நல்ல உடல் வலிமை பெற்றவராக இருந்தாலும்
5.இந்த நெடி அந்த வலு உள்ளவர்களையும் இயக்கிவிடும்… அவர்களால் அதைத் தாங்க முடியாது.

அப்பொழுது இதை யார் இயக்குவது…? நமது உயிர்…!

அதனால் தான் நாம் அறிந்து கொள்வதற்கு உடலான அரங்கத்திற்குள் நம் உயிரிலே மோதினால் “அரங்கநாதன்…” என்று ஞானிகள் காட்டியுள்ளனர்.
1.எதன் உணர்வுகள் உயிரிலே படுகின்றதோ…
2.உணர்ச்சிகள் நம் உடலிலே பரவப்படும் பொழுது அரங்கநாதனாக மாறுகின்றது.

மிளகாய்த் தூளை நெருப்பில் போட்டால்… நீங்கள் அதை நுகர்ந்தால் உங்களை எது ஆட்சி புரிகின்றது…? அந்த நெடிதான் உங்களை ஆட்சி புரிகின்றது.

இதைப் போன்று தான் நீங்கள் நுகரும் உணர்வுகள் உயிரிலே பட்டால் அரங்கநாதன்… அந்தக் குணத்திற்குத்தக்க நாதங்கள் உருவாகி இந்த உணர்ச்சிகள் இந்த உடலை ஆளுகின்றது… ஆண்டாள்…!

யார் ஆள்வது…? நீங்கள் நுகர்ந்த உணர்ச்சிகள் தான் உங்களை ஆளுகின்றது. இதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே… நாம் எண்ணக்கூடிய உணர்வுகள் உயிரான நெருப்பில் யாகத்தீயாக அந்த அருள் ஞானிகள் உணர்வுளைப் போட வேண்டும்.

நம் உயிர் ஒரு நெருப்பு…!
1.உயர்ந்த ஞானிகள் உணர்வுகளை யாக்க் குண்டமான உயிரான நெருப்பிலே செலுத்தி
2.நம் உணர்வுகளை எல்லாம் புனிதப்படுத்திச் சொல்லின் நிலையாக அதை வெளிப்படுத்தும் பொழுது சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு
3.நமக்குள்ளும் தீமைகள் நீங்குகின்றது நம் சொல்லைக் கேட்பவர்கள் தீமைகளும் நீங்குகின்றது
4.தீமையை நீக்கும் எண்ணங்களாக இந்தக் காற்று மண்டலத்திலே பரவுகின்றது… எல்லோருக்கும் நன்மை செய்யும் சக்திகளாக…!

இதுதான் ஞானிகள் சொன்னது.

இதைப் புத்தகத்தில் எழுதிக் காட்ட முடியாது. நெருப்பு எப்படி வேலை செய்கின்றதோ… அப்படித்தான் நமது உயிரும் வேலை செய்கிறது…! என்று அன்று இப்படித்தான் சொல்லிக் கொடுத்தார்கள்.

உயிரின் நிலைகள் வேலை செய்யும் என்று சொல்லவில்லை… அதற்குப் பதிலாக “நெருப்பு தான் செய்யும்…” என்று நெருப்பிலே பொருளைப் போட்டு ஆண்டவனுக்கு மணமாக அனுப்பி விட்டால் போதும் என்று இப்படி மாற்றி விட்டார்கள்.

ஆனால் அந்த நெருப்பிலே பொருளைப் போட்டால் எப்படி மணங்கள் வெளி வருகின்றதோ அதைப் போன்று தான்
1.நமது உயிரான நெருப்பிலே நாம் எண்ணத்தால் எடுத்து அந்த உயர்ந்த எண்ணங்களைப் பரப்பிச் சொல்லாகச் செயல்படுத்தி
2.உணர்ச்சிகளின் தன்மையாக நம் உடலுக்குள் விளைவிக்க வேண்டும் என்று அன்று சொன்னார்கள்.

இந்த உயிர் என்ற நிலைகளை விட்டு விட்டார்கள்… நெருப்பு தான் எல்லாம் செய்கிறது…! என்று அதைப் பிடித்துக் கொண்டார்கள்.

கல்யாணம் செய்யும் பொழுது எல்லாம் இந்த நெருப்பைப் போட்டு அக்னி சாட்சியாகச் செய்கிறோம் என்பார்கள்.

புதிதாக வீட்டைக் கட்டி அங்கே புகுந்தாலும் இதைப் போன்ற அக்னியைத்தான் அங்கே வளர்க்கின்றார்கள். கோவிலிலும் மற்ற இடங்களிலும் இந்த யாகங்களைத் தான் செய்கின்றார்கள்.

ஆனால் அதனுடைய உட்பொருளே நமது உயிர் ஒரு நெருப்பு அந்த நெருப்பிலே உயர்ந்த உணர்வுகளைப் போட்டு அந்த மணங்களைப் பெருக்கி அதைத் தானும் மற்ற எல்லோரும் பெறும்படியாகத்தான் சாதாரண மக்களுக்கும் புரியும் வண்ணமாகச் சாஸ்திரமாகக் கொடுத்துச் சென்றார்கள்.

1.நெருப்பை மட்டும் தான் இன்று நாம் தெரிந்து வைத்திருக்கின்றோம்
2.ஆனால் உயிரைப் பற்றி நாம் தெரிந்து வைத்திருக்கவில்லை.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் மறைந்த உண்மைகளை எல்லாம் உங்களுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் பற்றுடன் பற்றப்படும் பொழுது “அருளை…” நாம் பற்றுகின்றோம். அதன் வழியே காரியங்கள் நடக்கின்றது… நல்ல முறையில் சித்தியாகின்றது…!

ஆனால் வாழ்க்கையில் குடும்பப் பற்றை அதிகமாகச் சேர்த்து அருள் பற்றைக் குறைக்கப்படும் பொழுது என்ன ஆகும்…?
1.குடும்பப் பற்று வந்தாலே அதிகமான நிலையில் தன் சிந்தனையை இழக்கச் செய்யும்.
2.தன் பிள்ளைகளுக்கு இப்படி ஆக வேண்டும்… அப்படி ஆக வேண்டும்… என்ற உணர்வு வந்துவிட்டாலே போதும்
3.நமக்குள் ஏற்கனவே பதிந்திருந்த பழைய உணர்வுகள் அனைத்தும் முன்னாடி வந்துவிடும்…!
4.அது முன்னாடி வந்துவிட்டாலே “அதைக் காப்பது” என்பதே பெரிய சிரமம்.

ஆகவே வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலேயும் “ஒரு காரியத்தைச் சித்தியாக்க வேண்டும்…” என்றால் நாம் மகரிஷிகளின் அருள் உணர்வு பெற வேண்டும்… வாழ்க்கையில் எல்லாம் தெளிவாக வேண்டும்…! என்ற உணர்வுகளைக் கூட்டிக் கொண்டு வந்தால் சரியாக இருக்கும்.

கூட்டுவதற்கு என்ன செய்ய வேண்டும்..?

1.கண்ணைத் திறந்து விண்ணை நோக்கிப் பார்க்க வேண்டும்
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று நினைவை விண்ணிலே செலுத்தி
3.ஒரு ஐந்து நிமிடமாவது சுவாசிக்க வேண்டும்.

பின்… எது நம் வாழ்க்கையில் குறையாகத் தென்படுகின்றதோ அது நிறைவு பெற வேண்டும்… வாழ்க்கையில் நிறைவு பெற வேண்டும் தொழில் சீராக வேண்டும்… பிள்ளைகளுக்குத் திருமணம் ஆகவேண்டும்… சீக்கிரம் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஆனால் குறித்த காலத்தில் நடக்கவில்லை என்கிற பொழுது பெண்ணுக்கு இவ்வளவு வயதாகிவிட்டது… திருமணம் ஆகவில்லையே…! என்ற ஏக்கம் வருகின்றது… சோர்வடைகின்றோம்.

சீக்கிரம் நடக்க வேண்டும் என்ற எண்ணம் “வலுவாக” இருந்தால் இந்தச் சோர்வே வராது.

அப்படி எண்ணவில்லை என்றால் விஷத் தன்மைகள் அதிகமாகி…
1.இந்தப் புவியின் பற்று கூடி… உடலின் பற்று அதிகரித்து விடுகின்றது.
2.அருள் ஞானிகளின் பற்று தணிகின்றது.

ஆனால் அருள் ஞானிகளின் பற்றைக் கூட்டினால் தான்
1.வாழ்க்கையில் வரக்கூடிய மற்ற பற்று
2.அது எதுவாக இருந்தாலும் வெல்ல முடியும்…! (முக்கியமானது)

ஆக.. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் நாம் எடுக்கும் உணர்வுகள் வேகமாக இருக்கப்படும் பொழுது நலமாகின்றது அதிலே கொஞ்சம் தளர்ச்சி அடைந்தால் விஷத்தின் தன்மைகளைக் கூட்டிவிடுகின்றது.

இப்படி… இந்த மனிதனின் “வாழ்க்கையின் எண்ணங்கள்” கூடினால் அருள் ஞானத்தை இழக்கும் சக்தி தான் வருகின்றது.

அதே சமயத்தில் வீட்டில் வயதான தாய் நோயாக இருக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது அவர்கள் நலம் பெறவேண்டும் என்று வீட்டில் உள்ள பிள்ளைகள் எண்ணுகின்றோம்.

நம்பிக்கையுடன் மகரிஷிகளின் உணர்வுகளைத் தாய்க்குப் பாய்ச்சப்படும் பொழுது அருள் உணர்வின் தன்மை அங்கே உருவாக்கப்படுகின்றது.

நலம் பெற வேண்டும் என்று பாய்ச்சப்படும் உணர்வுகளால்
1.தாய்க்குள் வேதனை என்ற உணர்வுகள் வளராது
2.அருள் ஒளி பெறுவோம்..! என்ற உணர்வுகள் தாயிற்கு வளரத் தொடர்கின்றது.

அவ்வப்பொழுது தெளிவாகின்றது… தெளிந்த மனமும் தாய்க்கு வருகின்றது. நலம் பெறும் எண்ணத்தில் எல்லோரும் இருக்கும் பொழுது பிள்ளைகள் எண்ணும் உணர்வுகளால்.. ஒளியின் தன்மையைப் பெறும் தகுதியைத் தாய் பெறுகின்றது.

1.அப்பொழுது உடல் பற்று வராது… அருள் பற்று அங்கே வருகின்றது.
2.அந்த அருள் பற்று அங்கே வரப்படும் பொழுதுதான்…
3.தாய் வேதனையற்ற நிலைகள் கொண்டு வேதனை என்ற எண்ணமே எடுக்காது
4.அருள் ஒளி பெற வேண்டுமென்ற அனைவரது கூட்டு ஐக்கிய உணர்வுகளும் கிடைக்கின்றது.

ஏனென்றால் தாயின் உணர்வு தான் பிள்ளைகளாகிய உங்கள் உடல். பின் கடைசியில் உடலை விட்டுப் பிரிந்த பின் தாய் சூட்சம நிலை அடைகின்றது.

இவ்வாறு தொடர்ச்சியாக எடுத்து வளர்த்துக் கொண்ட அருள் உணர்வின் தன்மை கொண்டு அவர்களை விண் வெளி செலுத்தி உடல் பெறும் உணர்வுகளைக் கரைக்கும் தன்மை வருகின்றது.
1.அருள் ஒளி கூடுகின்றது…
2.தாயின் ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து ஒளியாகின்றது.

அவர்கள் அங்கே இணைந்த பின்… சப்தரிஷி மண்டலத்தின் ஒளி எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் படர வேண்டும்.. எங்கள் குழந்தைகளுக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும்…! என்ற இந்த உணர்வினைக் கூட்டுதல் வேண்டும்.

அருள் வழியில் வாழ வேண்டிய முறைகள் இது…!

துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வை நுகர்ந்து நுகர்ந்து “அதையே முன்னிலைப்படுத்த வேண்டும்”

 

ஒரு குழம்பை வைக்கிறோம் என்றால் பல சரக்குகளை அதனுடன் இணைக்கின்றோம். அதிலே
1.உப்பு அதிகரித்தால் கைப்பின் நிலையே வரும்.
2.இனிப்பின் சத்தைக் கலந்து விட்டால் இனிப்பின் நிலையே வரும்.
3.காரத்தை அதிகரித்து விட்டால் காரத்தின் உணர்வின் செயலாகவே அது உள்ளடங்கும்.

இதை போலத்தான் மனிதனுக்குள் வளர்த்துக் கொண்ட குணங்கள் பல பல இருப்பினும் ஒரு குழம்பிற்குள் கூட்டாக வைப்பது போல… உயர்ந்த குணங்கள் கொண்டு மனிதன் இருப்பினும்… இரக்க உணர்வு கொண்டு பிறருடைய துயரைக் கேட்டறிந்து நன்மைகள் செய்தாலும்… அந்த இரக்கத்தால் ஈர்த்துக் கொண்ட வேதனை உணர்வுகள் உடலுக்குள் சிறுகச் சிறுகக் கலந்து விடுகிறது.

குழம்பிற்குள் நஞ்சைக் கலந்து உணவாக உட்கொண்டால் எப்படி மயக்கப்படும் நிலை வருகிறதோ அது போல நல்ல உணர்வின் சத்துக்கள் நமக்குள் இருப்பினும்
1.வேதனையான உணர்வுகளை நம் ஆன்மாவிலே கலக்கப்படும் பொழுது
2.நம்மை அறியாமலே அடிக்கடி வேதனை என்று சொல்லே வரும்… வேதனை என்ற நினைவே வரும்.
3.அதைக் கொண்டு வாழ்க்கையை பலவீனப்படுத்தச் செய்யும்
4.எதையுமே சரியாகச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

வேதனையை எடுத்தோம் என்றால் அது உமிழ் நீராக மாற்றப்பட்டு நம் உணவுடன் கலக்கப்பட்டு அந்த வேதனையே உணவுடன் கலந்து இரத்தங்களாக மாறுகின்றது. வேதனை என்பது நஞ்சு.

பல பொருள்களைப் போட்டு அதனுடன் எந்த வாசனையான பொருளை இணைக்கின்றோமோ அந்த வாசனையின் தன்மையாகவே “சுவை” இருக்கும்.

இதைப் போலத் தான் நம் உடலுக்குள் உயர்ந்த குணங்கள் இருப்பினும்
1.வேதனையை எடுக்க எடுக்க நஞ்சு கலந்த உணர்வின் தன்மை உணவுடன் கலக்கப்பட்டு உணர்வின் சுவையை மாற்றி விடுகின்றது.
2.அதிலே கலந்து அது ரசமாக மாற்றப்படும் பொழுது அது இரத்தமாக மாறுகின்றது.

அந்த இரத்தத்தினை உடலில் உள்ள வால்வுகள் இழுத்து உடலுக்குள் பரவச் செய்யும். அல்லது அதை வடிகட்டும் நிலையில் கொண்டு கிட்னி கல்லீரல் இவைகளுக்கு எடுத்து அனுப்பும்.

இரத்தமாக மாறியதை அனுப்பும் பொழுது
1.முதல் வால்விலே இந்த நஞ்சின் தன்மை தாக்கிய பின் வீக்கமடைந்து விடுகின்றது.
2.உருவான இந்த இரத்தத்தை ஈர்க்கும் தன்மையும் அது இழந்து விடுகின்றது… பின் எரிச்சல் வருகின்றது.

அடுத்த பிஸ்டன் இந்த இரத்தத்தை உடலுக்குள் இழுப்பதற்கு முன்னால் இது இழுத்தவுடன் அதனுடைய தொடர் வரிசைக்குக் கிடைக்கவில்லை என்றால் “அங்கே பளீர்ர்… என்று மின்னும்…”

காரணம் அந்த இரத்தத்தை உறிஞ்சினால் இதற்கு வலு இருக்காது விஷம் கலந்த நிலைகள் கொண்டால் அந்த நஞ்சினால் மயக்கம் வரும்.

விஷத்தின் தன்மை அதிகரிக்கும் பொழுது வால்விலே வீக்கம் ஏற்பட்டு இரத்தம் அதிகமாக அதன் வழி புகும் நிலை இழக்கப்படுகின்றது. அப்பொழுது எரிச்சலாகிறது.
1.ஒரு பக்கம் எரிச்சலாகும்
2.மறு பக்கம் பளீர்ர்… என்று மின்னும்.

ஆனாலும் திருப்பி எடுக்கும் நிலைகள் கொண்டு இரத்தம் வரவில்லை என்றால் வாய்வின் தன்மை பளீர்ர்… என்று ஊடுருவிச் சென்று ஆகாரம் இல்லாத நிலைகளாக மற்றதை இயக்கச் செய்யும். அப்பொழுது அங்கே வலி அதிகமாகும்.

மருத்துவரிடம் சென்றால் இது ஹார்ட் அட்டாக் என்று சொல்வார்கள்.
1.விஷத்தின் தன்மை அதிகரித்து விட்டால் நாடியின் துடிப்புகளும் குறையும்.
2.நாடியின் துடிப்பு ஒரு நொடிக்கு இவ்வளவு இருக்க வேண்டும் என்றால் அடிக்கடி வேதனைப்படுவோருக்கு அது குறையாக இருக்கும்.
3.மருத்துவரும் இதை உறுதிப்படுத்தி அதற்கு வேண்டிய உதவிக் கருவிகளை மாற்ற வேண்டும் என்பார்.
4.அதை வைத்து இந்தத் துடிப்பைச் சீர்படுத்தினால் தான் வாழ முடியும்… இல்லையென்றால் இருதயம் நின்று விடும் என்பார்.

விஞ்ஞான அறிவுப்படி அதைச் செய்தோம் என்றால் அதன் வழி வாழலாம் சிறிது காலம்.

ஆனால் மெய் ஞானிகள் காட்டிய முறைப்படி யாம் சொல்லும் இந்தக் கூட்டுத் தியானங்களின் மூலம் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகள் உணர்வை எடுத்து என்ற இந்த இயக்கத்தின் தொடரை நாம் ஈர்ப்போம் என்றால்
1.அந்த மகரிஷிகளின் உணர்வின் சத்து ஆகாரத்துடன் கலந்து
2.இரத்தத்தில் உள்ள நஞ்சினைக் குறைக்கச் செய்யும்… நாடித் துடிப்பின் வேகத்தைக் கூட்டச் செய்யும்.

ஹார்ட் அட்டாக் வருவதன் காரணமே… மற்றவர்கள் பட்ட வேதனையை… அவர்களுக்குள் துடிப்பு குறைந்த நிலையை நுகர்ந்தது.. அந்த நஞ்சான உணர்வுகள் நம் இரத்தத்திலே கலந்தது… இருதயத்தின் வால்வுகள் அதனால் சீராக இயங்க முடியவில்லை.

இந்த உணர்வின் சத்து உடல் முழுவதும் பரப்பப்படும் பொழுது மற்ற உறுப்புகளும் செயலற்றதாக ஆகிவிடுகின்றது.

மற்றவருடைய வேதனைகளைக் கேட்டு உபகாரம் செய்தாலும் அந்த வேதனையான உணர்வுகளை உயிர் இயக்கி அதை உணர்த்தினாலும்… உணர்த்திய உணர்வின் சத்து உணவுடன் உமிழ் நீராகச் சுரக்கப்பட்டு… இந்த அமிலத்தின் சத்து இரத்தத்துடன் கலக்கப்படும் பொழுது வால்வுகள் சீர் கெடுகின்றது.

இருதயத்திற்குள் சென்ற இதே இரத்தம் கிட்னிக்கு வந்தால் சிறுகச் சிறுக அதையும் சீராக இயக்க விடாது தடுத்து விடுகிறது. இரத்தத்தில் வரும் தீமைகளை அகற்றும் தன்மையை கிட்னி இழந்து விடுகின்றது.

இதைப் போல பல நிலைகள் வருவதைத் தடுக்க வேண்டும் என்பதற்குத் தான் கூட்டுத் தியானங்கள் மூலம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

மற்றவர்கள் துன்பப்படுவதைப் பார்க்க நேர்ந்தால்… அடுத்த கணம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதை அவ்வப்போது உடனுக்குடன் நுகர்ந்து பழக வேண்டும்.

உடனுக்குடன் கவரும் அந்தத் திறன் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக…
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர் உடலில் விளைய வைத்த உணர்வுகளை எனக்குள் பதிவு செய்து இது எவ்வாறு இயக்குகிறது…? என்று
2.உணர்த்திய உணர்வவினை எனக்கு உபதேசித்த முறையிலேயே உங்களுக்கும் அதைக் கொடுக்கின்றேன்.

கேட்டறிந்த உணர்வுகள் பதிவாகி… மீண்டும் நீங்கள் நினைவு கொள்ளும் பொழுது அந்த உணர்வின் ஆற்றல் மகரிஷிகளின் உணர்வுகளைப் பெறச் செய்கின்றது.

அதை நுகர்ந்தால் நோய்களை உருவாக்கும் அத்தகைய சக்திகளை மாற்றி விடுகின்றது அதற்குத்தான் இதை எல்லாம் உங்களுக்குச் சொல்கின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்றைய கால கட்டத்தில்… நாம் செய்யும் தியானத்திற்குப் புதிய அன்பர்கள் வந்தால்… உதாரணமாக அவர்களுக்கு நோய் என்று சொன்னால் கூட்டுத் தியானங்களில் கலந்து கொள்ளச் செய்யுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துத் தியானமிருந்த பின் அவர்களுக்கு உடல் நோயோ குடும்பத்தில் கஷ்டமோ இருப்பினும்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் குடும்பத்தில் படர வேண்டும்
2.குடும்பத்தில் நல்ல ஒற்றுமை ஏற்பட வேண்டும்
3.அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும்
4.குடும்பத்தில் அனைவரும் உடல் நலத்துடன் வாழ வேண்டும் என்று
5.கூட்டுத் தியானத்தில் அனைவரையும் சொல்லச் செய்து இந்த வாக்கினைப் பரவச் செய்யுங்கள்.

இது பதிந்து அவர்கள் மீண்டும் அந்த அருள் சக்திகளை எடுக்கத் தொடங்கினால் அவர்கள் சிரமங்களும் நீங்கும். அப்பொழுது அவர்களுக்கு ஒரு நம்பிக்கையும் ஏற்படும்.

நீங்கள் கொடுக்கக்கூடிய அருள் வாக்கு அவர்களுக்கு நல்ல முறையில் விளைந்து மகிழ்ந்த நிலைகள் பெறுவார்கள்.

யாராவது கோபமாகவோ வெறுப்பாகவோ பேசினால் உடனே ஆத்ம சுத்தி செய்து விட்டு அவர்கள் அறியாமை நீங்க வேண்டும்… மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழும் அந்தச் சக்திகளைப் பெற வேண்டும்… அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழக்கூடிய நிலையும்… நல்ல பண்பும் அன்பும் பெருகக்கூடிய சக்தி பரவும்…! என்று சொல்லிப் பழக்கப்படுத்தச் சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு நாளும் இதே மாதிரி செய்து வந்தோம் என்றால் நமக்குள் அந்தச் சக்தி நாம் எதை எண்ணுகின்றோமோ ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய…! என்று நம் உடலுக்குள் அந்தச் சக்தி வளர்ந்து கொண்டே இருக்கும். அந்த அணுக்களும் பெருகிக் கொண்டே இருக்கும்.

ஆனால் குறைகளை அதிக நேரம் கேட்டுக் குறைகளைக் கேட்க ஆரம்பித்தால் அவர்கள் வரிசையாகச் சொல்லிக் கொண்டே வருவார்கள்.

அப்படிச் சொன்னால்…
1.எங்கள் குடும்பத்தில் இந்தக் குறை இருக்கிறது… அது நீங்க வேண்டும்…! என்று சொல்லி அப்படிக் கேட்கச் சொல்லிப் பழக்குங்கள்.
2.எங்கள் உடலில் இந்த நோய் இருக்கின்றது… அது நீங்கி என் உடல் நலமாக வேண்டும்…! என்று சொல்லச் சொல்லுங்கள்.
3.இருப்பதைச் சொல்லி விட்டு… அது நீங்க வேண்டும்… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்…! என்ற உணர்வை ஏங்கிப் பெறச் செய்யுங்கள்.

ஏனென்றால் எது இருக்கிறது என்று தெரிய வேண்டும் அல்லவா…! சரவாங்கி நோய் இருக்கிறது… கை கால் மூட்டுகள் வலிக்கிறது… மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் மூட்டு வலி நீங்க வேண்டும். என் உடல் நலமாக வேண்டும்…! என்று எண்ணி இதை ஒரு பழக்கமாக்க வேண்டும்.

எங்கள் குடும்பத்தில் இந்த மாதிரிச் சிக்கல் இருக்கின்றது மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பத்தில் படர்ந்து சிக்கல் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட வேண்டும் எங்கள் தொழில் வளம் பெற வேண்டும் என்று சொல்லிக் கேட்க வைக்க வேண்டும்.

1.இப்படி நல்ல எண்ணங்களை உருவாக்கி
2.அவ்வாறு எண்ணிய நல்ல சக்திகளை அவர்கள் பெற்று உடல் நலம் பெறச் செய்ய வேண்டும்.

ஈரேழு பதினாலு லோகம் எது…? அதை வென்றவர்கள் யார்…?

 

ஆரம்ப நிலைகள் விண்ணிலே உயிரணுவாகத் தோன்றினாலும்… அப்படித் தோன்றிய நிலைகள்
1.பலவாறு அணுவின் தன்மை ஒன்றை ஒன்று விழுங்கி அணுத் தன்மை வளர்ந்து அதன் வழிகளிலே கோளாகி…
2.கோளாகி ஆற்றல் பெற்று நட்சத்திரமாகி நட்சத்திரங்கள் சூரியனாகி அதனின்று விளைந்து ஒரு பிரபஞ்சமாகி
3.பிரபஞ்சத்திற்குள் ஒரு கோளாகி அந்தக் கோளுக்குள் மற்ற அனைத்தும் வடிக்கச் செய்து பூமியான நிலைகள் கொண்டு அதிலே உயிரணுக்கள் தோன்றி
4.மற்ற கல்லும் மண்ணும் மற்ற நிலைகள் ஆவியாக மாறி தாவர இனச் சத்துக்களாக மாறி
5.தாவர இனச் சத்துகளின் ஆவிகளைச் சுவாசித்து உயிரணுக்கள் அதை உட்கொண்டு வடித்து
6.அணுத் திசுக்களாக உயிரினங்களின் தோற்றங்களாகி மனிதனாக வளர்ச்சி பெற்று வந்துள்ளோம்.

ஒரு அணுவின் தன்மை வளர்ச்சியில் சூரியனாக எப்படி ஆனதோ அதே போன்று பிரபஞ்சத்திற்குள் தோன்றிய உயிரணுவின் துடிப்பு மற்ற உணர்வின் சத்தை எடுத்து மனிதனாக வளர்ச்சி பெற்று வரும் பொழுது “எதையுமே அடக்கி ஆளும் சக்தி மனிதனுக்கு உண்டு…”

ஆரம்ப நிலையில் அணுவின் தன்மை பெற்ற நாம் மனிதனாக வளர்ச்சி பெற்று வந்தாலும் சூரியனாக வளர்ச்சி பெற்று வந்தாலும் “சூரியனையே அடக்கியாளும் சக்தி மனிதனுக்கு உண்டு…”

அத்தகைய ஆற்றலின் தன்மை…
1.எல்லாவற்றிலும் அது வடித்து உணர்வின் ரசத்தின் தன்மையை அது வடிகட்டிய நிலைகள் கொண்டு மனிதனாக உருப்பெற்றான்.
2.அவ்வாறு உருப் பெற்றதன் நிலைகள் தன் எண்ணத்தை சூரியனிடத்திலே பாய்ச்சி இவனுடைய உணர்வுகளை அங்கே இயக்கச் செய்து
3.சூரியனையே திசை திருப்பவும் கோள்களைத் திசை திருப்பவும் கூடிய ஆற்றல்கள் பெற்றவர்கள் அன்றைய மெய் ஞானிகள்.

அவ்வாறு பெற்றவர்தான் அகஸ்திய மாமகரிஷி…!

மனித உருவாகும் பொழுது தான் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக மனித உடல் பெற்றாலும் இந்த வினைக்கு நாயகனாக மனித உடலிலிருந்து வெளிப்பட்டது தான் ஆறாவது அறிவு.

சூரியனிலிருக்கக் கூடிய நிறங்கள் ஆறு அதைப் போன்று மனிதனுக்குள் அறிவு ஆறு.
1.சூரியனுடைய ஆறாவது அறிவு ஆறு நிறங்கள் ஏழாவது ஒளி.
2.மனிதனுக்கு அறிவு ஆறு ஏழாவது அறிந்துணர்ந்து செயல்படும் தன்மை.
3.பிரபஞ்சத்திற்குள் வரக்கூடிய விஷத்தின் ஆற்றலைச் சூரியன் ஒளியாக மாற்றும்… ஒளியாகக் காட்டும்.
4.ஆனால் மனிதன் இருளுக்குள் மறைந்த பொருளை அறிந்துணர்ந்து செயல்படும் ஆற்றல் பெற்றவன்… இருளை ஒளியாக மாற்றும் திறன் பெற்றவன்.

இருளான சரீரத்திற்குள் நின்று உயிர் உணர்வுகளை வளர்க்கச் செய்த இந்தத் தசைகளை (உடலை)
1.மீண்டும் இன்னொரு தசைகளின் (உடல்) தன்மை பெறுவதற்குப் பதில்
2.சூரியன் எப்படிப் பிரகாசிக்கின்றதோ இதைப் போன்று தன் உணர்வை ஒளியாக மாற்றி உயிராத்மாவை ஒளியாக மாற்றி விண் செல்வது…

இது தான் கடைசி நிலை.

சூரியப் பிரபஞ்சத்திற்குள் தோன்றிய எத்தகைய சக்தியின் நிலைகளையும் வென்று “அதை ஒளியாக மாற்றி விண் செல்ல முடியும்…” என்ற நிலையை அன்றைய அகஸ்திய மாமகரிஷி நமக்கெல்லாம் உணர்த்திச் சென்றுள்ளார்.

அவன் தென்கோடியிலே தோன்றியவன் தான். தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று நாம் அவனைத் தான் போற்றிக் கொண்டிருக்கிறோம்.
1.அவன் வழி வந்த மக்கள் தான் நாம் அனைவருமே.
2.அவன் சென்ற எல்லையினை நாமும் அடைய வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் பெற்ற அந்தச் சக்தி எமக்குள் ஞான வித்தாக வளர்த்த அந்த உணர்வின் சக்தியை உங்களுக்குள் நினைவைக் கூர்ந்து கேட்கும்படி செய்து அருள் ஞான வித்தாக உங்களுக்குள் பதிவு செய்து கொண்டே வருகின்றோம்.

அந்த வித்தினை வளர்க்க நாம் தியானிக்க வேண்டும். எந்த வித்தின் தன்மை அவர் பெற்றாரோ அந்த நினைவைக் கொண்டு நீங்கள் ஏங்கி அந்த வித்தினை வளர்க்கும் தன்மை தான் யாம் சொல்லும் இந்தத் தியானம்.

இந்தத் தியானத்தின் நினைவு கொண்டு உங்களுக்குள் வளர்த்து…
1.அருள் ஞானச் சத்தாக உங்களுக்குள் விளைய வைத்து
2.அருள் ஒளியின் சுடராக உங்கள் எண்ணங்கள் சென்று
3.அந்த உணர்வின் நிலையை உடலின் உணர்வின் ஒளியாக மாற்றிட
4.இது உங்களுக்குள் உபயோகமாக இருக்கும்.

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று சொல்லும் பொழுதெல்லாம் ஜீவ அணுவாக இருந்து நமது உயிர் தனக்குள் சேர்த்துக் கொண்ட அனைத்திற்கும் உயிரே குருவாக இருக்கின்றது என்று எண்ண வேண்டும்.

நமது குரு அண்டசராசரத்தைத் தனக்குள் கண்டுணர்ந்தார். தீமைகளை அகற்றிடும் உணர்வின் தன்மை கொண்டு
1.அருள் ஞான வித்தாக நமக்குள் தெளித்த உணர்வுகள்…
2.அவரின் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்யப்படும்போது
3.அந்தக் குருவை நீங்கள் நினைவில் கொண்டால்
4.அவர் பெற்ற உணர்வின் சக்தியும் அவரின்று வெளிப்பட்ட உணர்வையும் அது உங்களுக்குள் இயக்கப்பட்டு
5.அவர் அருள் ஞானம் பெற்ற அருள் வழியில் அது குருவாக உங்களுக்குள் நின்று
6.வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி மெய்ப் பொருளைக் காணும் உணர்வின் குருவாக உங்களுக்குள் அமைந்து
7.அருள் வழியாக உங்களுக்குள் சேர்த்து இருளை அகற்றிடும் உணர்வாக விளைந்து
8.அதன் வழி இன்று குரு அமர்ந்திருக்கும் சப்தரிஷி மண்டலத்துடன் நம்மை அழைத்துச் சென்று..
9.நம்மை அரவணைத்துப் பிறவியில்லா நிலைகளை அடையச் செய்யும்…!

ஆகவே நாம் அந்தக் குரு வழியில் செல்வோம்.

இந்த வாழ்க்கையில் என்னைத் துன்பப்படுத்தினார்…! என்ற உணர்வினை நமக்குள் வளர்த்துக் கொண்டால் அது ஓ… என்று ஜீவ அணுவாகி விடுகின்றது. அந்த துன்பப்படுத்தும் உணர்வை நமக்குள் அதிகமாக வளர்த்தால் அது குருவாகின்றது.

அது குருவானால் இந்த உடலைத் துன்பப்படுத்தி எவர் துன்பப்படுத்தினாரோ அவர் உடலுக்குள் அழைத்துச் சென்று அதன் குரு வழி கொண்டு அவனுள் நம்மைச் சேர்த்துவிடும். இருள் சூழ்ந்த நிலைகளை நமக்குள் உருவாக்கிவிடும். ஆகவே
1.நாம் எண்ணியது எதுவோ…
2.நாம் எதன் வழி செயல்படுகின்றோமோ
3.அதுவே நமக்குள் குருவாகின்றது.

ஏனென்றால் நாம் எண்ணியது அனைத்திற்கும் உணர்வின் தன்மை நமது உயிரே குருவாக இருக்கின்றது.

ஆனால் நமது குரு அண்டசராசரத்தையும் தனக்குள் வளர்த்து நஞ்சினை வென்றிடும் உணர்வினைத் தனக்குள் பெற்று அதனின் அருள் ஞான வித்தாக எனக்குள் பதிவு செய்தார். அதை வளர்த்துக் கொண்டேன்.

அவர் காட்டிய வழியில்… நீங்களும் அந்த அருள் ஞானச் சக்தி பெற வேண்டும் என்று… அருள் ஞான வித்தை உங்களுக்குள் இதனை உபதேசமாகக் கொடுக்கின்றோம்.

இந்த உயிர் எப்படி மனிதனானதோ மனிதனானபின் ஒளிச் சரீரம் எப்படிப் பெற்றேன்…? என்று குரு கண்ட உணர்வின் தன்மையை அந்த அருள் ஞான வித்தை உங்களுக்குள் ஊன்றுகின்றோம்.

உயிர் உடலை வளர்த்ததையும் உணர்வின் தன்மை பெற்றதையும் இதனின் தன்மை உங்களுக்குள் பதிவு செய்ததை
1.மீண்டும் நினைவு கொண்டு அந்தக் குருவினைக் கண்டால்
2.அவர் ஒளிச் சரீரம் பெற்ற நிலையில் நம்மை அங்கே அழைத்துச் செல்லும்.
3.அவர் அரவணைப்பில் வைத்துக் கொள்ளும்…
4.இன்னோரு உடல் பெறா நிலையை உருவாக்கும்.

நம் உயிர் குரு என்றாலும்…
1.நம் குருநாதர் பெயரும் ஈசன் தான்
2.நம் உயிர் பெயரும் ஈசன் தான்…!

ஆகவே இந்த இரு உணர்வும் ஒன்றி…
1.உயிர் உருவாக்குவது போன்று நம் குருநாதர் உருவாக்கி
2.அது ஜீவ அணுக்களாக மாற்றும் திறன் பெற்றதனால்
3.ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்று சொல்லும் பொழுதெல்லாம்
4..நம் உயிரையும்
5.நம் குருநாதர் காட்டிய அந்த ஈசனான நிலையையும்
6.இரண்டு தரம் நினைவில் கொண்டு வாருங்கள்.

இந்த நினைவின் அடிப்படையில் நாம் எண்ணும்போது குரு பெற்ற அருளை நாம் முழுமையாகப் பெறுகின்றோம்…!

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…!

பார்த்தது வேடிக்கை என்றாலும்… நம்மை அறியாமலே அது நோய்க்குக் காரணமாகின்றது

 

நாம் தவறே செய்ய வேண்டியதில்லை. கோப உணர்வு கொண்டு ஒருவன் மற்றவனைத் தாக்குகிறான் என்றால் அதைக் கண்ணுற்றுப் பார்க்க நேர்ந்தால் அவன் உடலிலே விளைந்த தாக்கும் உணர்வுகள் அந்தக் கார உணர்ச்சிகள் வெளிப்படுவதை அவன் உடலிலிருந்து வெளி வந்த அந்த உணர்வலைகளைக் கண் நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.

1.உற்றுப் பார்த்த இந்த உணர்வின் சத்தைக் கண்கள் ஊழ்வினையாக நமக்குள் பதிவு செய்கின்றது.
2.பதிந்த உணர்வுகளை நாம் ஈர்க்கப்படும் பொழுது உடலுக்கு முன் ஆன்மாவாக மாற்றுகின்றது.
3.ஆன்மாவிலிருந்து சுவாசித்து உயிருக்குள் படும் பொழுது எரிச்சலும் வேதனையும் வருகிறது.

நல்ல குணம் கொண்டு பார்ப்பதனால் இத்தகைய நிலை ஏற்படுகின்றது.

உதாரணமாக ஒரு “சப்” என்று இருக்கும் பொருளுக்குள் காரத்தை இணைத்து விட்டால் “காரத்தின் சுவையே” முன்னாடி வரும்.

இதை போலத் தான் தவறு செய்வோரை உற்றுப் பார்த்து வேகமாக “இப்படிச் செய்கிறானே…” என்று அந்தக் கொடூர உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது இந்த உணர்வை நம் கண் கவர்ந்து உடலுக்குள் பதிவு செய்ததை உடலுக்குள் விளையும் தன்மையாக மாற்றி விடுகின்றது.

நாம் எண்ணிய உணர்வுகள் அது ஆன்மாவாக வருகின்றது… சுவாசித்த பின் உயிரிலே ஒன்றுகின்றது. நல்ல குணங்களுடன் அது கலக்கப்படும் பொழுது அவன் செய்த தவறின் உணர்வாக உடலுக்குள் வேகமாக இயங்குகின்றது.

1.கோபமான அந்த உணர்வலைகள் நம் சாப்பிட்ட உணவுடன் கலந்து இரத்தமாக மாறுகின்றது.
2.இப்படி அந்த வேகமான நிலைகள் இரத்தமாக மாறி வரும் பொழுது இருதய வால்வுகளில் எரிச்சலும் வேதனையும் வருகின்றது.
3.எரிச்சலான உணர்வுகள் உடலுக்குள் வடிகட்டப்படும் பொழுது உடலெல்லாம் எரிச்சலும்
4.நம் சொல்லிலே எரிச்சலும்… எந்த ஒரு பொருளைப் பார்த்தாலும் எரிச்சலும் நமக்குள் உருவாகத் தொடங்குகிறது.

நம்மைப் பார்ப்போர் ஆன்மாவில் இது பட்ட பின் நம்மை அறியாமலே அவர்களும் எரிந்து விழுவார்கள்… நம்மை வெறுப்பார்கள். ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

சண்டையிடுவதை வேடிக்கை பார்த்தோம். அந்த உணர்வின் தன்மை நம் இரத்தத்துடன் கலக்கப்படும் பொழுது “இரத்தக் கொதிப்பை உருவாக்கும் செல்கள்” அதிகமாக விளைந்து விடுகின்றது. நாம் மகிழ்ந்து உணர்ந்த உணர்வுகள் இனிப்பு… இதிலே கலக்காது பிரிந்து சென்று விடுகின்றது.

இனிமை கொண்ட நண்பர்களிடத்திலே பழகினால் அடிக்கடி அங்கே கோபப்படும் பொழுது “இவன் கோபக்காரன்…” என்று அவர் நம்மிடமிருந்து விலகுவது போல
1.சுவை மிக்க உணர்வை உருவாக்கி அந்தச் சுவையை அறிவிக்கும் உணர்வுகள் இரத்தத்தில் கலந்திருப்பினும்
2.காரத்தின் நிலைகள் எல்லை கடந்து சென்ற பின் இந்தச் சுவையான நிலைகள் பிரிந்து விடுகின்றது.
3.அதனால் ஜீரணிக்கும் சக்தி இழக்கப்பட்டுச் சர்க்கரைச் சத்தாக விளைந்து விடுகின்றது. இவ்வாறு
4.சர்க்கரைச் சத்து வரும் பொழுது இரத்தத்தில் அது அதிகரிக்க நம் உடல் உறுப்புகள் அனைத்தும் சோர்வடையச் செய்கின்றது.

அதே சமயம் இறுகிய உணர்வு கொண்ட இந்தக் காரத்தின் உணர்ச்சிகள் சிறு மூளையில் தாக்கப்படும் பொழுது கண்கள் சிவப்பதும்… இரத்தக் கொதிப்பு ஆவதும் இது இரண்டுமே எதிர்மறையாகும் பொழுது “மயக்கங்கள்” வருகின்றது.

மனிதனுடைய சிந்தனைகள் குறைக்கப்படுகின்றது… மனிதன் கீழே விழுந்து விடுகின்றான்.

சர்க்கரைச் சத்தும் இரத்தக் கொதிப்பும் இரண்டும் வந்தாலும் சர்க்கரைச் சத்திற்கு மருந்து கொடுத்தால் இரத்தக் கொதிப்பிற்கு ஒத்துக் கொள்ளாது. இரத்தக் கொதிப்பிற்கு மருந்து கொடுத்தால் சர்க்கரைச் சத்திற்கு ஒத்துக் கொள்ளாது.

நெகட்டிவ் பாசிட்டிவ் என்ற நிலைகளில் இயங்கும் பொழுது
1.சுவாசப் பையிலே சளிகள் உருவாகத் தொடங்கும்… மூச்சு இறைக்கவும் தொடங்குகிறது.
2.உடலுக்குள் வரும் உமிழ் நீர்களை இலகுவாக்கி அதனின் தன்மை குறைக்கும் நிலைகளில் ஜீரணிக்கும் சக்தியையும் இழக்கச் செய்கின்றது.

கோபத்தை அதிகரிக்கப்படும் பொழுது நம் உடலில் உள்ள பித்த சுரப்பிகள் அதிகமாக அந்தப் பித்தத்தைச் சுரக்கின்றது. எவ்வளவு கடினமான பொருளைச் சாப்பிட்டாலும் பித்த சுரப்பி இயங்கி சாப்பிட்ட ஆகாரத்தை ஜீரணிக்கின்றது.

ஆனால் கார உணர்வுகள் அதிகமாகும் பொழுது பித்த சுரப்பியின் இயக்கம் அதிகரித்து வேகமாகப் பீய்ச்சப்படும் பொழுது பசியும் அதிகரிக்கும். பசியினால் அதிகமாகச் சாப்பிடச் சாப்பிட பித்த சுரபி அதிகமாகச் சுரக்கச் சுரக்க விஷத்தின் தன்மை அதிகரித்து உடலில் உறுப்பின் இயக்கங்கள் குறைய நேர்கின்றது.

சீராக இயக்க வேண்டும் என்ற நிலை வரும் பொழுது சர்க்கரையின் தன்மை அதிகமாக இருப்பதால் அதற்கொத்த செயலைச் செயல்படத் தொடங்குகிறது. இரத்தக் கொதிப்பு அதிகரிக்கும் பொழுது இதனுடைய செயல் அதிகரிக்கிறது. உறுப்புகள் சோர்வடைகிறது.

அதே சமயத்தில் சிந்திக்கும் போது அதிகக் கோபமும் சுவையான பொருள்களை உட்கொள்ள முடியாத நிலையும் வரும்.

1.சர்க்கரைச் சத்து அதிகரிக்கப்படும் பொழுது செவ்வணுக்கள் வளராதபடி
2.நுகர்ந்த உணர்வுகள் மலங்களாகக் கழிக்கப்படும் பொழுது இரத்தத்தை நீராக மாற்றும் நிலை ஆகிவிடுகிறது.
3.இதனால் மற்ற உடலின் எஞ்சிய பாகங்கள் செயலற்றதாகிக் கிருமிகள் உருவாகித் தசைகள் அனைத்தும் அழுகும் நிலை ஏற்படுகின்றது.
4.விஷங்கள் அதிகரிக்கப்படும் பொழுது வேதனை அதிகரிக்கின்றது… உறுப்புகள் பலவீனம் அடைகின்றது.

இதற்கு மத்தியில் காரத்தின் நிலையும் உச்சகட்டம் அடையப்படும் பொழுது காரத்துடன் விஷத்தின் தன்மையும் கலந்து விட்டால் சிறு மூளையின் பாகம் தாக்கப்படும் பொழுது நரம்புகளைச் சுண்ட வைத்து விடும்..

ஒரு மிளகாயை வாயிலே போட்டால் ஆ…! என்று அலறுகின்றோம்… வாயிலே உமிழ் நீர் காணாது போய் விடுகின்றது. இது போன்று நஞ்சின் தன்மை சிறு மூளையில் தாக்கப்படும் பொழுது “நரம்பியல்களை” அது முடக்கி விடுகின்றது.

உதாரணமாக கார்களில் பிரேக் இடுவதற்காக பிரேக் ஆயில் கொண்டு அழுத்தி அதன் மூலமாக இயந்திரத்தை இயக்கி அதை நிறுத்துவார்கள். இது போன்று தான்
1.நம் நரம்புகளுக்குள் உருவாகும் ஆசிட்டின் தன்மையின் இயக்கங்கள்
2.நாம் எண்ணப்படும் பொழுது அதிலிருக்கக்கூடிய காந்தப்புலனின் தன்மைகள் ஊடுருவி
3.கை கால்களை மடக்குவதும் அங்கங்களை இயக்குவதும் செயலாக்குவதும் இதன் வழி தான்.

தீமையான உணர்வுகளால் (கார உணர்ச்சிகளால்) சிறு மூளை தாக்கப்பட்ட பின் இரத்தக் கொதிப்பின் அழுத்தம் அதிகரிக்க அங்கே இயங்கிக் கொண்டிருக்கும் நுண்ணிய அலைகள் செயலற்றதாகி விடுகிறது.
1.அதற்குள் அனுப்பும் ஆசிட் அதனுடைய செயலை இழந்துவிட்டால் கை கால் அங்கங்கள் சுருங்கி விடும். ஆனால் நாம் தவறு செய்யவில்லை.
2.சந்தர்ப்பத்தால் சண்டையிட்டதை வேடிக்கையாக பார்த்து நுகர்ந்தோம் அதனுடைய வளர்ச்சி தான் இந்த நிலைக்கு வந்து விடுகின்றது,

இதைப் போன்ற நிலையிலிருந்து விடுபட வேண்டும் என்றால் ஒவ்வொரு நிமிடமும் மகரிஷிகளின் அருள் சக்திகளை நம் உடலுக்குள் இணைத்துக் கொண்டே வர வேண்டும்.

காரணம் அந்த மகரிஷிகள் எத்தகைய நஞ்சினையும் தன் உணர்வின் வலுவால் சக்தி வாய்ந்த நிலைகள் கொண்டு அதை அடக்கி ஒளியாக மாற்றிச் சென்றவர்கள்.

அப்படி விண் சென்ற மகரிஷிகள் எத்தனையோ பேர் உண்டு…!
1.அவர்கள் பெற்ற சக்திகளை நாம் பெற்றோம் என்றால்
2.நமக்குள் வரும் இத்தகைய தீமைகளை மாற்றி அமைக்க முடியும்… நோய் வராது தடுத்துக் கொள்ள முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தொழில் செய்கின்றோம்… செல்வத்தைச் சம்பாரிக்கின்றோம். செல்வம் வந்தால் மகிழ்ச்சி பெற முடியும்…! என்கின்றோம். ஆனால் அந்த செல்வத்தின் தன்மை வளர்ந்ந்து வந்தாலும் கடைசியில் என்ன ஆகின்றது…?

என் பையன் இப்படிச் செய்கின்றானே… நம் சொத்தைக் காப்பானா…? எல்லோருக்கும் தாராளமாகக் கொடுத்து உதவி செய்தேன்… வாங்கிச் சென்றவர்கள் திரும்பக் கொடுக்கவில்லையே…! என்று இப்படி எத்தனையோ எண்ணங்களை எண்ணி அதனால் வேதனைப்படுகின்றோம்.

1.இவ்வாறு வேதனைப்படும் பொழுது அது நோயாக வருகின்றது.
2.நோயாக வரும்போது செல்வம் அதிகமாக இருப்பினும் வேதனைதான் அதிகமாகின்றது.

வேதனையோடு நாம் இருக்கும் நேரத்தில் நாம் எண்ணியபடி நம் பிள்ளையோ… மனைவியோ… மக்களோ… அல்லது உற்றார் உறவினரோ.. எண்ணவில்லை என்றால் அவர்களைப் பற்றிய வேதனையைத்தான் நாம் அதிகமாக எண்ணுகின்றோம்.
1.செல்வத்தைச் சம்பாதித்தோம்…
2.நாம் எந்த மகிழ்ச்சியைக் கொண்டோம்…?

செல்வத்தைச் சம்பாதித்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று வளர்ந்து வந்த நிலையில் மற்றவருக்கு உதவி செய்தாலும்… அந்த உதவியால் அவர்கள் நல்லவராக ஆகவில்லை என்றால் அவர்களைக் கண்டு நாம் வேதனையைத்தான் படுகின்றோம்.

இப்படித்தான் செல்வம் ஒரு பக்கம் இருப்பினும்
1.செல்வத்தால் வேதனை என்ற நிலை அதிகரித்துக் கடைசியில்
2.பூமியின் பற்றை அதிகமாக வளர்த்து கொள்கின்றோம்.

அது நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை… தெளிந்த குணங்களை… நாளுக்கு நாள் மறையச் செய்கின்றது. இதைப் போன்று வரும் நிலைகளில் இருந்து நாம் எப்படி மீளுவது…? எந்த வகையில் மீளுவது…?

நம் வாழ்க்கையில் சந்திக்கும் சந்தர்ப்பத்தால் நம்மை அறியாது பல பல தீய வினைகள் நமக்குள் சேர்ந்திருந்தாலும் அந்தத் தீய வினைகளைத் துடைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நாம் எவ்வளவு உயர்ந்தவராக இருப்பினும்
1.வேதனைப்படுவோரைப் பார்க்காமல் இருக்க முடியாது…
2.வேதனைப்படுவோரின் சொல்லைக் கேட்காமல் இருக்க முடியாது.
3.ஒருவர் குற்றம் செய்கின்றார் என்றால் குற்றம் செய்வதைப் பார்க்காமல் இருக்க முடியாது.

குற்றத்தைப் பார்த்தாலும் குற்றத்தைச் செய்தபின் அதிலே நேர்முகமாகப் பாதிக்கப்பட்டவர்களை அவர்கள் வேதனைப்படுவதைப் பார்த்தால் தெரியும்.
1.அறிவால் அதை எல்லாம் அறிகின்றோம்…
2.அறிந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகி விடுகின்றது.

ஆகவே நாம் எத்தகைய நிலைகள் பட்டாலும்… பார்த்தாலும்,,, அறியும் உணர்வுகள் கொண்டு அறிந்து கொண்டாலும்…
1.எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளும் அறிவு நமக்கு இருந்தாலும் (கார்த்திகேயா)
2.தீமை என்று அறிந்ததை நீக்கிடும் “அந்த அறிவு வேண்டும்…” (இது தான் மிக முக்கியமானது..!)

“என் மீது பற்று இருந்தால் தான்” இந்த உபதேசக் கருத்துக்கள் உங்களுக்குள் பதிவாகும்

 

ஞானிகள் சென்ற அவர்களுடைய அருள் வழிப் பாதைகளை உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று எண்ணுகின்றேன். அந்த எண்ணத்திற்கு வலு கொடுக்க…
1.குருநாதர் அவர் கண்டறிந்த உணர்வை எனக்குள் பல உணர்வுகளைப் பதிவு செய்துள்ளார்.
2.அவர் உடலுக்குள் விளைய வைத்ததை எண்ணத்தின் செயலாக என்னிடம் சொல்கின்றார்
3.அதை நான் உற்று நோக்கும் பொழுது அந்த உணர்வின் சத்து
4.அவர் உடலில் இருந்து வரக்கூடிய ஒலியை என் செவிப்புலன் ஈர்த்தாலும்
5.அந்த உணர்வின் சத்து எனக்குள் ஊழ்வினையாக பதிவாகி விடுகிறது.

ஊழ்வினை என்றால் என்ன…?

ஒரு மரம் விளைந்து அதனின் வித்தாகும் பொழுது அந்த வித்தை எடுத்து நிலத்திலே நாம் அதைப் பதியச் செய்யும் பொழுது அந்த வித்து என்ன செய்யும்…/

எந்த மரத்திலிருந்து எந்த உணர்வின் சத்தை வித்தாக வளர்த்துக் கொண்டதோ அந்த வித்தின் உணர்வின் இயக்கமாக பூமியின் துணை கொண்டு இங்கே படர்ந்து இருக்கும் அந்த அலைகளைக் கவர்கின்றது.

உதாரணமாக வேப்ப மரத்தில் வித்து உருவாகிறது என்று வைத்துக் கொள்வோம். வேப்ப மரத்திலிருந்து வெளிப்படும் அந்தக் கசப்பின் உணர்வலைகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் படரச் செய்கிறது.

வேப்ப மரத்தின் வித்தை மண்ணிலே பதியச் செய்யும் பொழுது காற்றிலே பரவிப் படர்ந்திருக்கும் தன் தாய் மரத்தின் உணர்வின் சத்துக்களை… சூரியனின் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து வைத்திருப்பதைப் புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு
1.அந்தச் சக்தியைக் கவர்ந்து உணவாக எடுத்துத் தனக்குள் விளைய வைத்து
2.வேப்ப மரமாக வளர்ந்து… “அதனின் வித்தாகவே” மீண்டும் விளைகின்றது.

இது தான் ஊழ்வினை என்ற வித்தின் இயக்கம்…!

இதைப் போலத் தான் குருநாதர் அவருக்குள் விளைய வைத்த உணர்வின் சத்தை எமக்கு உபதேசிக்கும் பொழுது… செவி வழி நான் கேட்டறிந்த உணர்வுகள் உணர்ச்சிகளாக உந்தப்பட்டு..
1.அந்த உணர்வின் ஆற்றலை நினைவு கொண்டு நான் மீண்டும் கூர்ந்து அதை எண்ணும் பொழுது அதைக் கவரும் நிலை ஏற்படுகின்றது.
2.கவர்ந்த உணர்வுகள் என் நினைவுடன் இணைக்கப்பட்டு ஒரு கருவின் தன்மையாக ஊழ்வினையாக வித்தாக எனக்குள் பதிவாகின்றது.

அதாவது… அவர் உபதேசித்த உணர்வின் தன்மையைக் கூர்மையாகக் கவனித்து அதுவே எனக்குள் பதிவாகி அது மீண்டும் என் நினைவுக்கு வரும் போது அவர் உடலில் விளைந்த தீமைகளைக் கண்டறிந்த மெய்ப் பொருளைக் கண்டுணர்ந்த உணர்வுகள் எனக்குள் வருகிறது.

மெய் உணர்வைத் தனக்குள் வளர்த்துத் தீமைகளை அகற்றி… உயிருடன் ஒன்றும் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றி… இன்றும் விண்ணுலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர். அவர் தற்காலத்தில் தான் விண் சென்றவர்… சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்தவர்.

அவர் உடலிலே விளைந்த உணர்வின் எண்ணங்களை உங்களுக்குள் இப்பொழுது உபதேசிக்கப்படும் பொழுது கேட்டுணர்ந்தவர் அனைவருக்குள்ளும் ஊழ் வினையாகப் பதிவாகின்றது.

பதிந்ததை மீண்டும் எண்ணும் பொழுது…
1.குருநாதர் காட்டிய அருள் வழியின் உணர்வுகள் இங்கே படர்ந்திருப்பதை
2.அவரின் நினைவு கொண்டு அவருக்குள் விளைந்த உணர்வுகளை நாம் அனைவரும் கண்டுணர முடிகின்றது… கவர முடிகின்றது.
3.நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் விளையத் தொடங்குகிறது.
4.அதன் மூலம் அவர் கண்ட அனைத்தையும் நாமும் அறிய முடிகிறது.

விண்ணுலக ஆற்றலை எடுத்து நஞ்சினை வென்று உயிரோடு ஒன்றி ஒளியின் சரீரமாக விண்ணிலே இருக்கும் குருவின் ஆற்றல் நமக்குள்ளும் வளரும் தன்மை இப்பொழுது உருவாகின்றது.

அதைப் பெறுவதற்குத் தான் உங்களுக்குள் விளக்கமாக இப்பொழுது சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

உதாரணமாக… வேப்ப மரத்தின் வித்து மீண்டும் தன் தாய் மரத்தின் சத்தைக் கவர்ந்து “தன் இனமாகவே” வளர்த்துக் கொள்கின்றது. இதைப் போன்று தான்
1.சாமி மீது உங்களுக்குப் பற்று இருந்தால்
2.இப்பொழுது சொல்லக்கூடிய உபதேசக் கருத்துக்கள் அனைத்துமே உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகும்.

ஆனால் மற்றவர்களிடம் சென்று அவரின் (அந்த குருவின்) உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து வைத்திருந்தால் அவர் மந்திரங்களையோ அல்லது மற்ற எதைச் சொன்னாரோ அவர் உபதேசித்த உணர்வுகள் உங்களுக்குள் ஆழமாகப் பதிந்து விட்டால் அது வலுக் கொண்டதாக இருக்கும்.

நான் இப்பொழுது உபதேசிக்கும் உணர்வுகள் உங்களுக்குள் எட்டாது. அவரின் வலு அதிகமாக இருக்கப்படும் பொழுது நான் சொல்வதை ஒதுக்கிவிடும்.

1.என் மீது பற்று கொண்ட நிலையில் இருக்கப்படும் பொழுது தான்
2.நான் உபதேசிக்கும் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்ய முடியும்… நுகர முடியும்… வளர்த்துக் கொள்ள முடியும்.
3.நம் குருநாதர் உணர்ந்த பேருண்மைகளையும் நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.

இதை எல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆயிரம் தான் சொல்லுங்கள்…! மீண்டும் ஜாதகத்தை தேடி இன்னும் நல்ல நேரம் வருகின்றதா…? கெட்ட நேரம் வருகின்றதா…? என்ற நிலைகளைத்தான் தேடிச் செல்ல முடியும்.

நல்ல நேரமாக உங்களால் மாற்ற முடியாது…!
1.ஏனென்றால் இந்த உடலுக்கென்று நல்ல நேரத்தைத் தேடி அலைவீர்கள்.
2.பதிந்த உணர்வுகள் உங்களுக்குள் ஆசையைத் தூண்டிக் கொண்டிருக்கும்.
3.அது நிறைவேறவில்லை என்றால் வேதனைகள் கூடிக் கொண்டிருக்கும்
4.தன்னை அழித்திடும் உணர்வே விளைந்து கொண்டிருக்கும்
5.அதனின் நிலைகள் மனித உருவைச் சீர்குலைத்துவிடும் நிலைகளாகத் தான் வரும்.

மனிதனாகப் பிறந்து அறிந்திடும் அறிவு ஆறாக இருப்பினும் அடுத்து ஏழாவது நிலைகளைப் பெறவில்லை என்றால் மனிதன் தேய்பிறைக்குத் தான் செல்ல நேரும்.

ஆகவே அறிந்திடும் அறிவின் துணை கொண்டு இருளைப் போக்க வேண்டுமே தவிர இருளைச் சேர்த்திடுதல் கூடாது.

மனிதன் நாம் ஆறாவது அறிவைக் கொண்ட பின் பொருளைக் காணுகின்றோம் பொருளைக் கண்டபின் அதற்குள் மறைந்திருக்கும் இருளை நீக்கிவிட வேண்டும்.

நம் உடல் நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்துள்ள நஞ்சினைப் பிளக்கின்றது. நல்ல உணர்வை உடலாக மாற்றுகின்றது. அந்த நல்ல உணர்வின் தன்மை கொண்டு அறிந்திடும் அறிவு வருகின்றது.

1.அந்த அறிந்திடும் அறிவு கொண்டு நாம் நுகர்ந்திட்ட உணர்வுக்குள் இருக்கும் இருளைப் பிளந்திடல் வேண்டும்.
2.இருளை நீக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிடும் நிலைகள் பெற வேண்டும்
3.இது தான் நம் ஞானிகள் காட்டிய அறநெறிகள்.

அதனை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்று தான் இதைச் சொல்கின்றேன்.

செடிகளுக்கு ஒவ்வொரு குணங்கள் உண்டு. ஒவ்வொரு செடிக்கும் ஒவ்வொரு உணர்வுகள் உண்டு. அத்தகைய பல கோடித் தாவர இனங்களின் சத்தை உணவாக உட்கொண்டு அந்த உணவின் சத்தே உடலாக ஆனது உயிர் ஜீவ அணுக்களாக உருவாக்கியது. அதனின் மலமே உடலாக உருவானது.

ஆக… இந்த உடலுக்குள் இருக்கும் உணர்வுகளில் வாடிய குணங்கள் எத்தனையோ உண்டு… வாடிய உணர்வுகள் பலவும் உண்டு

அருள் ஞானியின் உணர்வின் நிலைகளை நினைவு கொண்டு… அவருடன் நிலை கொண்டு… அதனை எடுத்து ஒன்றுடன் ஒன்று இணைத்திடும் உணர்வின் தன்மையாகத் தான் இந்த உபதேசமே யாம் (ஞானகுரு) கொடுக்கின்றோம்.

விவசாயத்தில் (AGRICULTURE) வாடிய பயிரை வளமாக வளர்க்க… எவ்வாறு பல அணுக்களின் வீரியச் சத்து கொண்ட உணர்வினை இணைத்துப் புதுப் புது வித்துகளை உருவாக்குகின்றனரோ… இதைப்போலத்தான்
1.அந்த அருள் ஞானியின் உணர்வின் தன்மையை
2.மகரிஷிகள் உணர்த்திக் காட்டிய நிலைகளை
3.மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் கொடுத்த உணர்வின் துணை கொண்டு உரமாகக் கொடுக்கின்றோம்.

நம் குருநாதர் ஈஸ்வரபட்டர் பேரண்டத்தின் நிலைகளை அறிந்து… அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்து தீமைகளைப் பிளந்து… தீமைகளைப் பிளந்திடும் உணர்வுகளைத் தன்னுள் விளைய வைத்தார். விளைந்த உணர்வு கொண்டு உயிரோடு ஒன்றி இன்றும் ஒளியாக இருக்கின்றார்.

1.ஒளியாக நிலை கொண்டிருக்கும் ஈஸ்வராய குருதேவரின் உணர்வுகளை நினைவு கொண்டு
2.உங்களுடன் இணைத்து… இணைத்து… இணைத்து…
3.அந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் உரமாக இணைப்பதே என்னுடைய வேலை…!

நாம் அனைவரும் செய்ய வேண்டிய குரு சேவை… அருள் சேவை…!

 

உங்களுக்கு யாம் அடிக்கடி உபதேசித்த அருள் சக்திக்கு வலுக்கூட்டும் நிலையாக
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்ற உணர்வுகளைத் தூண்டி
2.அனைவரும் ஒன்று சேர்த்துத் தியானிக்கும்படி செய்து
3.என் குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்கள் அனைவரது உயிரையும் ஈசனாக மதித்து
4.ஈசனால் கட்டப்பட்ட உடல்களை ஆலயத்தை மதித்து
5.உங்கள் உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்கள் அனைத்தையும் தெய்வமாக மதித்து
6.உங்களை அறியாது உட்புகுந்த தீமைகள் நீங்க வேண்டும்
7.மனிதனாகக் காத்திட்ட அந்த அருள் தெய்வங்களான நற்குணங்கள் உங்களுக்குள் நிலைத்திருக்க வேண்டும் என்று
8.உங்களை நான் தியானிக்கின்றேன்… “என் குரு வழிப்படி…”

இப்போது உபதேசித்த உணர்வின் துணை கொண்டு நீங்கள் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கும்போது நம் முன் படர்ந்திருக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளை…
1.பிறவா நிலை அடைந்த அவர்களின் உணர்வைக் கவர முடியாதபடி சக்தி வாய்ந்த நிலைகளாக இருந்தாலும்
2.நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்களை நினைவுக்குக் கொண்டு வந்து அதே நினைவின் வலுக் கொண்டு
3.நம் முன் படர்ந்திருக்கும் அந்த அரும்பெரும் சக்தியை அனைவரும் சேர்த்துக் கவர்ந்து
4.நம் உடலின் ஈர்ப்பு வட்டத்தில் சுழலச் செய்து
5.நம் ஆன்மாவில் இருக்கும் தீமைகளை அகற்றும் உணர்வாக கலக்கச் செய்து… அதன் உணர்வைச் சுவாசிக்கும்படி செய்து
6.அதை எப்பொழுதும் பெறும் நிலையாக உடலுக்குள் ஞான வித்தாக உங்களுக்குள் இப்போது ஊன்றப்படுகின்றது.

அவ்வாறு ஊன்றிய பின்… அனைவரும் மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் தியானத்தில் அமர்ந்த அனைவருக்கும் மகரிஷிகள் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எல்லோரும் ஒருங்கிணைந்த நிலையில் எண்ணி ஏங்கி அந்த அலைகளைப் பாய்ச்ச வேண்டும்.

அவரவர் உடலுக்குள் வெறுப்பு கோபம் குரோதம் என்ற எத்தனையோ உணர்வுகள் இருந்தாலும் நாம் அனைவரும் சேர்ந்து மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற இந்த உணர்வின் எண்ணத்தை ஓங்கி வளர்த்து அனைவருக்கும் அந்த மகரிஷிகள் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று
1.தனக்கென்று கேளாது அனைவருக்கும் அது பெற வேண்டும் என்று இந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் போது
2.சூரியன் காந்த சக்தியால் இது கவரப்பட்டுச் சக்தி வாய்ந்த உணர்வின் அலைகளாகப் படர்வதை
3.உங்கள் செவிப்புலனுக்குள் உணர்ச்சிகளை உந்தச் செய்து
4.அதனின் துணை கொண்டு உங்கள் கண் புலனறிவு அதைக் கவர்ந்து
5.எல்லோரும் அதைப் பெறும் தகுதியாக ஏற்படுத்துகின்றோம்.

ஏனென்றால் உங்களுடைய அனைவருடைய அருள் துணை கொண்டு இவ்வாறு செயல்படுத்தும் போது ஒவ்வொரு மனிதனுக்கும் இது சக்தி வாய்ந்ததாக இது மாறுகின்றது. அதனைப் பெறச் செய்வதற்குத் தான் கூட்டுத் தியானமாக அமைத்துக் கொடுத்துள்ளோம்.

மீண்டும் ஞாபகப்படுத்துகின்றோம்…!

யாரையெல்லாம் யாம் சந்தித்தோமோ… உபதேசம் கேட்ட அந்த அனைவருக்கும் எமது குரு அருளால் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று உங்கள் உயிரை ஈசனாக மதித்து உங்கள் உடலை அவன் கட்டிய கோட்டையாக மதித்து உங்களை வளர்த்திட்ட அருள் குணங்களைத் தெய்வங்களாக எண்ணி அந்தச் சக்தி பெற நான் தியானிக்கின்றேன்.

அதே போல் நீங்களும் உங்கள் உயிரை ஈசனாக மதித்து உங்களிடம் இருக்கும் அருள் குணங்களைக் காத்திடும் நிலையாக அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கித் தியானித்தால்
1.உங்களை ஆண்டு கொண்டிருக்கும் ஆண்டவனான…
2.நீங்கள் எண்ணியதை உயர்த்தும் அந்த உயிரான ஈசனுடைய அருளைப் பெறுகின்றீர்கள்.

அதே சமயம் அவன் கட்டிய ஆலயமான இந்த உடலைப் பரிசுத்தமாக்க… நஞ்சினை நீக்கி ஒளிச் சுடராக மாற்றும் ஆலயமாக உருவாக்கிட… அவனுடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நீங்கள் நிலைத்திருக்க… உங்கள் ஆறாவது அறிவு உறுதுணையாக இருக்கும்.
1.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவேன் என்று தியானியுங்கள்.
2.என்னை அறியாது வந்த இருளைப் போக்குவேன் என்று நினைவு கொள்ளுங்கள்.

உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து உடலை ஆலயமாக மதித்து நற்குணங்களை எல்லாம் தெய்வங்களாக மதித்து உங்கள் வாழ்க்கையில் இவ்வாறு தியானிப்பீர்கள் என்றால் அருள் ஞானிகள் சுழற்றிய அந்த உணர்வுடன் உங்கள் எண்ண அலைகள் சுழன்று அறியாது வந்த தீமைகளை ரிமோட் கண்ட்ரோல் போன்று நீக்க முடியும்.

ரிமோட் கண்ட்ரோல் என்றால்…
1.விஞ்ஞான அறிவால் ஓரு சுவிட்சைத் தட்டி மேலே பறக்கும் விமானத்தையும் ராக்கெட்டையும் இங்கிருந்து இயக்குவது போல
2.ஞானிகளை எண்ணியவுடன் நம் நினைவுகள் அவர்கள் பால் சென்று அவர்களின் உணர்வினைக் கவர்ந்து
3.தீமையை நீக்கிடும் அந்த அரும்பெரும் சக்தியாகத் தனக்குள் விளைந்து
4.இந்த உடலே தீமைகளை அழித்திடும் நிலையாக ஒளியின் சுடராக மாற்றிடும் நிலையாக எல்லோரும் பெற முடியும்.

உங்களை நம்புங்கள்…! உயிரைக் கடவுளாக மதியுங்கள்…! உடலை ஆலயமாக மதியுங்கள்…! திரும்பத் திரும்பச் சொல்கின்றேன்.

ஏன்… உங்களால் நல்லதைப் பெற முடியும் என்று “உங்களை நீங்கள் நம்ப முடியாதா…?” சற்று சிந்தித்துப் பாருங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தொழிலைச் செய்து சொத்தைச் சேர்க்கலாம் என்று விரும்புகிறோம். இருந்தாலும் அது எல்லாம் அழியக்கூடிய சொத்து தான்… காரணம் நம் உடலே அழியக்கூடியது தான்.

உடலால் செல்வத்தைச் சம்பாதித்தாலும் “அது இந்த வாழ்க்கைக்கு தான் உதவும்…!” ஆனால் அதையும் சீராகப் பார்க்கவில்லை என்றால் அந்தச் செல்வத்தையும் நம்மால் காக்க முடியாது.

சொத்தைச் சம்பாதித்து வைத்திருப்போம். ஆனால் சந்தர்ப்பத்தால் நோயாகி வேதனை வேதனை என்று வந்தால்
1.அப்படி வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்திலே
2.சம்பாதித்த சொத்தை எல்லாம் கையிலே கொடுத்தால் “இது எதற்கப்பா…?” என்று கேட்பார்கள்.

சம்பாரித்த சொத்து அவர்களுடையது தான். அதை விரிவாக்கி அங்கே இவ்வளவு இருக்கின்றது… இங்கே இவ்வளவு இருக்கிறது… இதை எல்லாம் என்ன செய்யலாம்…? எப்படி செய்ய வேண்டும்…? என்று கேட்டால்
1.எங்கேயாவது தொலைந்து போங்கள்…!
2.என்னிடம் ஏனப்பா சொல்கிறீர்கள்…?

இந்த உணர்வின் தன்மை வந்துவிடுகிறது.

சம்பாதித்து வைத்திருந்தாலும் வேதனையாக இருக்கும் பொழுது இந்த சொத்தைப் பற்றிச் சொல்லும் போது என்ன ஆகிறது…?

எங்கேயாவது கொண்டு விடுங்கள்…! என்ற நிலை தான் வரும்.

சொத்தைச் சம்பாதித்து வளர்த்துக் கொண்டிருக்கும் போது உடலிலே நோயான பின் “எனக்கு இப்படி வந்து விட்டதே…!” என்று வேதனையில் உடலின் பற்று தான் வருகின்றது… அதனால் நஞ்சாகி விடுகின்றது.

உடலின் பற்று வரும் பொழுது யார் மேல் நம் நினைவுகள் பற்று அதிகமாக வருகின்றதோ… இந்த உணர்வின் தன்மை வந்தபின் அதைப் பற்றிக் கொள்கின்றோம்… அந்த உடலை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றோம்… அங்கே சென்றுவிடும்.

இந்த உடலுக்குள் வரும் பொழுது என்ன செய்கின்றோம்…?
1.இந்த உடலிலே விளைந்தது சாகாக்கலையாக உருவாகி
2.ஆசையை அங்கே தூண்டி அதன் வழியில் அந்த உடலையும் மடியச் செய்யும்

அதன் உணர்வு பேயாக அந்த உணர்வுகள் வளர்ச்சியாகி பூத கணையாக விளைகின்றது… அது தான் பூதங்கள்…! இத்தகைய உணர்வின் தன்மை விளைய வைத்த பின் எதனை அடக்கி அதற்குள் வளர்ந்ததோ அது அந்த உணர்வின் தன்மை வந்த பின் உயிரினங்கள் எதனின் வளர்ச்சி பெற்றதோ அங்கே கொண்டு போய் அதுவாக உருவாகி அதனின் செயலாகவே உருவாக்கிவிடும்.

புலியோ நரியோ பாம்போ இவையெல்லாம் தன் இரையத் தேடி இரக்க்கமற்றுக் கொன்று சாப்பிடுகிறது. மற்ற உயிரினங்களை இரக்கத்துடன் பார்ப்பதில்லை. அதைக் கொடூரமாகத் தாக்கி உணவாக எடுக்கிறது.

இந்த மனித வாழ்க்கையில் இப்படிப்பட்ட நிலைகளைச் செய்பவர் எவரோ அந்த எல்லைக்குத் தான் இந்த உயிர் அழைத்துச் செல்லும். அதனால்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொன்னது.

ஆக… பிறர் படும் வேதனையை நாம் எடுத்து விளைய வைத்துக் கொண்டால் இத்தகைய நிலை வந்து விடுகிறது.

நம் குழந்தை மீது நமக்குப் பற்று இருக்கின்றது. குழந்தை வேதனைப்பட்டால் பாசத்தால் நாமும் அதைக் கண்டு வேதனைப்படுகின்றோம்.

ஆனால் எனக்கு பிடிக்காதவர்கள் ஏதாவது வேதனைப்பட்டார்கள் என்றால் வெறுப்பால்… “அவனுக்கு அப்படித்தான் வேண்டும்…” என்று அதை ரசிக்கின்றோம்.

நம் பையன் சரியாக வரவில்லை என்றால் அவனை எண்ணி வேதனைப்படுகின்றோம். ஆனால் பிடிக்காதவர் என்றால் “நினைத்தேன்… அவனுக்கு அப்படித்தான் வேண்டும்… அப்படித்தான் நடக்கும்…!” என்று இந்த விஷத்தை நமக்குள் எடுத்துக் கொள்கின்றோம்.
1.ஏனென்றால் எது அதிகமோ அதனின் உணர்வின் வளர்ச்சியைத் தான் நமக்குள் காட்டும்
2.அந்த உணர்வின் செயலாக்கம் தான் நமக்குள் உருவாகும்.

கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…!

ஆகவே அதனின் உணர்வின் செயலாகவே அதனின் அறிவாகவே நம்முடைய இயக்கமும் நம் பார்வை எதுவோ இந்த உணர்வின் தன்மை கொண்டு தான் கூர்மை அவதாரம்.

எதைச் சிருஷ்டித்து இந்த உணர்வின் தன்மை தனக்குள் எடுக்கின்றோமோ அப்படிப்பட்ட அவதார புருஷனாக இது மாற்றி விடுகின்றது.

ஆனால் தீமையை நீக்க வேண்டும் என்ற உணர்வை எடுத்து ஒளியாக ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டால் கல்கியின் அவதாரம்.

எது மற்றவருக்குள் தீமையாக உருவாக்கியதோ அந்த இருளில் இருந்து விலக வேண்டும்… பொருள் காணும் நிலைகள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

1.வெறுமனே சொன்னால் அவர்கள் உணர்வு தான் நமக்குள் புகுந்து விடும்
2.ஈஸ்வரா என்று உயிரிடம் சொல்லி அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று
3.கேட்டறிந்த உணர்வின் தன்மையை ஆன்மாவிலிருந்து முதலில் பிளக்க வேண்டும்… நரசிம்மா…!

இப்படி… அந்த அருள் ஞானிகளின் உணர்வின் தன்மையை முதலில் நமக்குள் சேர்க்க வேண்டும். தீமைகளைப் பிளந்து ஒளியாக மாற்றி… நஞ்சினை வென்றிடும் நிலையாக…
1.மற்றவருக்கு வழிகாட்டும் உணர்வின் தன்மையாக
2.இதைத்தான் நாம் கொண்டு வர வேண்டும்.

இந்த மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நாம் எதைத் தியானிக்கின்றோம்…?

 

ஆலயங்களுக்குச் செல்வோர் இன்று பெரும்பகுதியானவர்கள் எப்படி வணங்குகின்றார்கள்…?

1.என் பையனை நான் கஷ்டப்பட்டு வளர்த்தேன்… அவன் இப்பொழுது என்னை எதிர்க்கின்றானே…!
2.எனக்கும் மனைவிக்கும் மக்களுக்கும் ஒத்துக் கொள்ளாத நிலைகளில் வேதனைகளை நீ அனுபவிக்கச் செய்கின்றாயா…?
3.எத்தனை காலம் தான் நீ என்னை சோதிக்கின்றாய்…? என்று தீமையைத்தான் அங்கே எடுக்கின்றோம்.

கையிலே விஷத்தைத் தடவி அப்படியே அடுத்த பொருளை எடுப்பது போன்று தான் செயல்படுகின்றோம்.

ஆனால் ஞானிகள் காட்டியதோ… ஆலயத்திற்குள் காட்டப்பட்டுள்ள தெய்வ குணங்களை எண்ணித் தியானித்து… அந்தச் சக்தியைத் திரும்பத் திரும்ப எண்ணி நமக்குள் வளர்த்துக் கொள்ளும் நிலைதான்… அதாவது நல்லதை வளர்ப்பது தான் “தியானம்…”

ஒருவன் நம்மை ஏசி விட்டாலோ… பையன் மீது பற்று இருந்து அவன் தவறு செய்கின்றான் என்று ஒரு முறை ஆழமாகப் பதிவு செய்து விட்டாலோ… இப்படிச் செய்கின்றானே… இப்படிச் செய்கின்றானே… இப்படிச் செய்கின்றானே…! என்று “தியானிக்கின்றோம்…”

1.அதனின் உணர்வு நமக்குள் அவனை வெறுக்கும் நிலையாக அந்த வெறுப்பு வளர்ந்து…
2.நம் சொல்லைக் கேட்போருக்கு நம்மை வெறுக்கும் நிலையும்…
3.அதே வெறுக்கும் நிலை வியாபாரத்தில் ஒரு சொல்லைச் சொல்லும் பொழுது என்னைப் பார்க்கும் போது வெறுப்பாகி…
4.நம் வியாபாரமும் மந்தமாகி விடுகிறது.

இது மட்டுமல்ல…! வாழ்க்கையில் எங்கே சென்றாலும் சலிப்பு சஞ்சலம் வெறுப்பு போன்ற உணர்வுகளை அடிக்கடி எண்ணினோம் என்றால் “இதெல்லாம் தியானம் தான்…”

இந்தத் தியானத்தின் பலன் நாம் தொழில் செய்யும் இடங்களிலேயும் வெறுப்பான உணர்வுகள் பதிவாகி அதையே மீண்டும் எண்ணி… இவனும் இப்படிச் செய்கின்றான்… அவனும் இப்படிச் செய்கின்றான்… எல்லோரும் மோசமானவர்கள்…! என்று “இதைத் தியானிக்கிறோம்…”

மனிதனின் ஆறாவது அறிவு கொண்டு கருணைக் கிழங்கை வேக வைத்து விஷத்தை நீக்கி சுவை மிக்கதாகப் படைக்கின்றோம். இதே போல தங்க நகை செய்யும் போது செம்பும் வெள்ளியையும் வைத்து அழகான ஆபரணமாகச் செய்தாலும்… பின் மீண்டும் அதை அழித்துப் புதிய நகை செய்ய வேண்டும் என்றால் திரவகத்தினை ஊற்றி அதனுடன் கலந்த செம்பையும் வெள்ளியையும் ஆவியாக்கி நீக்கிவிட்டுச் சுத்தமான நிலையில் மீண்டும் நகையைச் செய்கின்றோம்.

இதைப் போன்று தான்…
1.இந்த மனித வாழ்க்கையில் துன்பப்படுவோருக்கு நாம் நன்மைகள் செய்தாலும்
2.நம்மை அறியாமல் பிற உணர்வுகள் நம் உடலுக்குள் சென்று அது துரிதமாக இயக்கி வேதனைப்படுகின்றார்கள் என்பதை உணர்த்தினாலும்
3.அதைத் துடைக்காது விட்டு விட்டால் நம் நல்ல குணங்களை மறைத்து விடுகின்றது.

இப்படி மீண்டும் மீண்டும் நல்ல குணங்களை மறைக்கும் செயலாக அந்தத் தீமைகளைத் துடைக்காது சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு வேதனை போன்ற உணர்வுகளை அடுக்கடுக்காகச் சேர்த்துக் கொண்டே வந்தால் நல்ல உணர்வுகளை எல்லாம் நாம் செயலற்றதாக மாற்றி விடுகின்றோம்.

நல்ல குணங்களால் உருவாக்கப்பட்ட இந்தச் சரீரத்தைப் பாழ்படுத்தி நம் எண்ணத்தையும் சொல்லையும் மற்றவர்கள் கேட்கப்படும் போது அங்கேயும் பாழ்படுத்திக் கொள்ளும் நிலையாக உருவாகி விடுகிறது.

1.ஆகவே இந்த மனித வாழ்க்கையில் நாம் எதை ஒவ்வொரு நாளும் தியானிக்கின்றோம்…?
2.சங்கடத்தையும் சலிப்பையும் கோபத்தையும் வெறுப்பையும் வேதனையும் தான் நாம் தியானிக்கின்றோம்.

இதிலிருந்து விடுபட வேண்டும் அல்லவா…!

ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி விநாயகரைப் பார்க்கப்படும் போதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இதைத் தியானித்து… எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி கிடைக்க வேண்டும்… அவர் அறியாத இருள்கள் நீங்க வேண்டும் மெய்ப்பொருள் கண்டறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று எண்ணினால்… கீதையிலே சொன்னது போன்று நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்…!

1.பிறர் நலம் பெற வேண்டும் என்று நாம் எண்ணிய உணர்வுகள் நமக்குள் விளைந்து
2.விளைந்த அந்த உணர்வின் சொல் கேட்போர் உணர்வுகளிலும் தீமைகளை அகற்றி விடுகின்றது.

நமது வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்…? நாம் எடுக்கும் தியானம் எப்படி இருக்க வேண்டும்…? என்பதற்குத்தான் ஆலயங்கள்.

நல்லது செய்யும் பொழுது மறைந்த நிலையில் தீமைகள் நமக்குள் உள் சென்று நல்ல குணங்களை இயக்கத் தடைப்படுத்திக் கொண்டிருக்கும் அந்தத் தடைகளை நீக்க..
1.அருள் ஞானிகளின் உணர்வைத் தியானித்து உள் செலுத்தித் தீமையை அகற்றிடும் நிலையாக
2.ஆறாவது அறிவால் இயற்கையில் விளைந்த நஞ்சினை நீக்கி நல்ல உணர்வினை அதற்குள் சேர்ப்பித்து சுவை மிக்கதாகப் படைப்பது போல
3.எது நல்ல குணமோ அதை நம் வாழ்க்கையில் மீண்டும் சுவைமிக்கதாக மாற்றும் நிலையாகத் தான் ஆலயங்கள் அமைக்கப்பட்டது.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்த நன்மையின் நிலைகளைக் காத்திடவும் அந்த நன்மைகள் உங்கள் உடலைக் காத்திடவும் பிறருக்கு நன்மை செய்த அவர்களைக் காத்திடவும் அருள் ஞானிகள் உணர்வை நீங்கள் பெற்று உங்களை அறியாத வந்த தீமைகளை நீக்க ஒரு “ரிமோட் கண்ட்ரோல்…!”

அதாவது… ஒரு வேப்பமரம் தன்னுடைய கசப்பான மணத்தின் தன்மை கொண்டு அதனுடைய வலுவால் தன் அருகிலே மற்ற நறுமணங்கள் வந்தாலும் அதை வர விடுவதில்லை. இதே போன்று தான் ரோஜாச் செடி மற்ற மணங்களைத் தன் அருகிலே வர விடுவதில்லை.

இதைப் போல… கோபம் கொண்டவர்கள் சாந்தமாக ஒருவர் பேசினால் அவர்களைக் கண்டாலே எரிச்சல் வரும். சாந்தமானவர்களுக்கு கோபமாகப் பேசுபவர்கள் செயலைப் பார்த்தபின் அவர்களுக்கு அந்த வேதனை வருகின்றது.

ஆனால் தாவர இனங்கள் அனைத்தும் மற்ற மணங்களைத் தன் அருகிலே வரவிடாதபடி ஒதுக்கி விடுகின்றது. மனிதர்களோ
1.அதே மணத்தைக் கொண்ட எண்ணங்களை “நாம் நுகர்ந்து தான்” அறிய முடிகின்றது.
2.ஆனால் “தாவரங்கள் நுகராது” தன் வலுவால் மணத்தால் ஒதுக்குகின்றது.

அதே தாவர இனச் சத்து மனிதனுக்குள் வரும் பொழுது நினைவின் ஆற்றலால் நுகர்ந்து… பின் இதை வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளி விடுகின்றது. ஆனால் உள் சென்று தான் வெளி செல்கின்றது.

உயிரினங்களுக்கும் தாவர இனங்களுக்கும் உண்டான வித்தியாசம் இது தான்…!

இந்த மனித வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்ற… தங்கத்திலே திரவகத்தை ஊற்றுவது போல மகரிஷிகள் உணர்வை நமக்குள் நுகர்ந்து… தீமைகள் புகாது காத்திடும் நிலையே அருள் ஞானிகள் காட்டிய தெய்வப் பண்புகள்.

எத்தகைய துயரம் ஏற்பட்டாலும் “ஈஸ்வரா…!” என்று உங்கள் உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்னை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்… மெய்ப்பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று தியானித்தால் இந்த உணர்வு உங்களுக்குள் விளைகின்றது.

நான் சொன்ன இந்த முறைப்படி தியானித்தால் அந்தச் சக்தி உங்களுக்குக் கிடைக்கும்….! (ஞானகுரு)

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கோவிலுக்குச் செல்வோர் சிலர் வழக்கத்தில் என்ன செய்கிறார்கள்…?

தாய் தன் பிள்ளை மேல் மிகுந்த பாசமாக இருக்கும். கோவிலுக்குள் போனவுடனே… “ஆண்டவனே என் பிள்ளை இப்படிச் செய்கின்றானே…? நான் பிள்ளையைக் கஷ்டபட்டு வளர்த்தேனே… ஊரெல்லாம் அவனை இப்படிச் பேசுகிறதே…! அவன் என்றைக்குத் தான் திருந்துவானோ…?

பையன் தன் சொன்னபடி கேட்கவில்லை என்றால் விநாயகனிடம் போய் “ஊரெல்லாம் பேசுகிறதே… திமிராகப் பேசிக் கொண்டிருக்கின்றானே… என்றைக்குத் தான் திருந்துவானோ…? நீ என்றைக்குத் தான் பார்க்கப் போகின்றாயோ…? என்று இத்தகைய இந்த வினைகளைத் தான் சேர்த்துக் கொள்கின்றோம்.

நல்ல ஒழுக்கங்களை எப்படி நமக்குள் வினையாகச் சேர்க்க வேண்டும் என்று ஞானிகள் காட்டியிருந்தாலும் இந்த நிலைகள் இப்படித்தான் இருக்கின்றது.

முதியவர்களை எடுத்துக் கொண்டால் தெய்வத்தின் மேல் நல்ல பக்தி இருந்தாலும்.. தெய்வத்தின்மேல் நல்ல ஒழுக்கம் நம்பிக்கை இருந்தாலும்… ஞானிகள் காட்டிய வழிப்படி
1.நாம் தெய்வமாக வேண்டும் என்று சொல்லியிருந்தாலும்
2.அந்தத் தெய்வமாக யாரும் ஆகுவதில்லை.

நாம் எண்ணிய எண்ணங்கள் எதுவோ சுவாசித்தது எதுவோ… அதை எல்லாம் நம் உயிர் “ஓ…” என்று ஜீவனாக்கி அந்த உணர்வின் சத்தை “ம்…” என்று உடலாக்கி… நினைவின் ஆற்றலை தெய்வமாக நமக்குள் இயங்க வைக்கின்றது. அதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தத் தியானத்தில் இருப்பவர்கள் நீங்கள் பிறருக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். தியானமும் செய்கின்றார்கள்… ஆனால் அங்கே கோவிலுக்கும் போகின்றார்கள்…! என்று இப்படிச் சொல்லாதீர்கள்.

கோவிலுக்குப் போக வேண்டும். ஞானிகள் காட்டிய அருள் வழியை மற்றவர்களைக் கடைப்பிடிக்க வைக்க வேண்டும். ஏனென்றால் கோவில் நம்மைப் புனிதப்படுத்தக் கூடிய இடம்தான். அதனால் அதை முறைப்படுத்திக் காட்ட வேண்டும். ஆகவே யாம் சொல்லக்கூடியதை நினைவுபடுத்துங்கள்

நீங்கள் செய்வதைக் கண்டால் மற்றவர்களும் என்ன..? என்று பார்ப்பார்கள்.

கோவிலுக்குச் சென்றால் இந்த மாதிரி கும்பிடச் சொன்னார்… குருநாதர். ஆகவே இவ்வாறு கும்பிட்டால் நாம் தெய்வமாக மாறுவோம்…! என்று நீங்கள் சொல்லுங்கள் இது தான் பக்தி.
1.நல்லதைப் போற்ற வேண்டும்…
2,எல்லாரும் போற்றும் நிலைக்கு வளர வேண்டும்…
3.எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்று
4.விநாயகரை வணங்கும் போதெல்லாம் இப்படி எண்ணுதல் வேண்டும்.

கடை வைத்திருக்கின்றோம் என்றால் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அதே சமயத்தில் நம் பிள்ளைகளிடம் சொல்லும் பொழுது.. விநாயகரிடம் போய்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.
2.எங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லப்பா…!
3.இது போல் நீ வேண்டிக் கொண்டு வந்தால் உனக்கு நன்றாக இருக்கும் என்று நாம் போதிக்க வேண்டும்.

இது பக்தி… இதையே நீங்கள் திரும்பத் திரும்ப எண்ணினால் அது தான் தியானம். நாம் அந்த உயர்ந்த எண்ணங்களைத் திருப்பி எண்ணும்போது நூறு முறை சொல்ல வேண்டும்

ஏனென்றால் இதை எல்லாம் குருநாதரிடம் அடிபட்டு உதைபட்டுத்தான் நான் (ஞானகுரு) தெரிந்து கொண்டேன். அடி உதை எதுவும் இல்லாமல்… சொல்லால் நீங்கள் இருந்த இடத்திலிருந்தே தெரிந்து கொள்கின்றீர்கள்.

இதை நீங்கள் சீராகத் தெரிந்து கொண்டால் உங்களுக்கு நல்லது நடக்கும் பக்தி கொண்டு கோவிலுக்குச் செல்வது நல்லது தான். ஆனால் கோவிலுக்குப் போனால் எப்படிச் சாமி கும்பிட வேண்டும்…? என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

எங்கள் வீடு நன்றாக இருக்க வேண்டும். எங்கள் வீட்டில் உள்ளோர் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்த ஆலயத்திற்கு வருவோர் குடும்பங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஆகவே கோவிலுக்குச் சென்று விநாயகரை வணங்கும்போதெல்லாம்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் பெற வேண்டும்
3.எங்கள் ஜீவாத்மா ஜீவ அணுக்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இதை வினையாகச் சேருங்கள்.
4.இதைக் கணங்களுக்கு அதிபதியாக ஆக்குங்கள்.
5.இதையே பக்தியாகக் கொண்டு வாருங்கள்.
6.இதையே தியானியுங்கள்…. இந்தத் தியானமே உங்களுக்குக் கைகொடுக்கும்.

அந்த நிலை பெறுங்கள்… எமது அருளாசிகள்…!

எமது உபதேசங்களைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று மீண்டும் ஞாபகப்படுத்துகின்றோம்

 

மனிதனாக இருக்கும் நாம் பிறர் செய்யும் தவறை நாம் நல்ல உணர்வு கொண்டு பார்க்கப்படும் பொழுது இது இணைந்து… அவர் செய்யும் தவறின் உணர்வுகள் நமக்குள் இயங்கி… நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றி நல்ல உடலையும் செயலற்றதாக நலியச் செய்து அதிலிருந்து தோன்றும் எண்ணத்தையே நலியச் செய்து விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நீங்கள் மீண்டிட வேண்டும் என்பதற்குத்தான் எமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வரபட்டர்… காட்டிய அருள் வழியினை உங்களுக்கு உபதேசிக்கின்றோம்.
1.விண்ணின் ஆற்றலை அருள் ஞானிகள் எவ்வாறு பெற்றனர்…?
2.அந்த உணர்வின் ஆற்றலை அவர்களுக்குள் எப்படிப் பெருக்கினார்கள்…?
3.அதை எப்படிப் பருகினார்கள்…? தனக்குள் எப்படி விளைய வைத்தனர்…?
4.இன்றும் விண்ணிலே எப்படி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்…?
5.அவர்களின் உணர்வை நீ நுகரும் பொழுது உன்னை அறியாது வந்த தீமைகளை எப்படி நீக்க வேண்டும்…? என்று எனக்கு உபதேசித்தார்.

அவர் சொன்ன வழிகளில் அதைக் கவர்ந்த நிலைகள் கொண்டு தான் தீமையை அகற்றிடும் நிலையாக இங்கே எம்மிடம் வருவோருக்கு
1.”உங்களுக்கு நோய் இல்லை…” என்று நான் சொல்லும் பொழுது
2.அந்த வாக்கினை ஏற்று இனி நோய் இல்லை என்று நீங்கள் திரும்ப எண்ணும் பொழுது அந்த நோய் குறைகின்றது.

ஆகவே இதை நீங்கள் எண்ணி இந்த உணர்வினை எடுத்துக் கொள்ளும் பொழுது உயிரிலே ஜீவன் பெற்று இந்த உணர்வினைக் கவரும் நிலை வருகின்றது.

விஞ்ஞான அறிவால் ஆண்டென்னாவிற்குச் சக்தி கொடுப்பதற்காக அதனுடன் சில வீரியக் கருவிகளைப் பொருத்துகின்றார்கள். அதன் துணை கொண்டு தான் பல பல ஆற்றல்கள எடுக்கின்றார்கள்.

அதைப் போல
1.அருள் ஞானிகள் உணர்வின் சத்தை உங்கள் நல்ல குணத்துடன் இணையச் செய்வதற்குத் தான் இந்த உபதேசம்.
2.அதன் வழி வாழ்க்கையில் உங்களை அறியாது வரும் தீமைகளிலிருந்து இந்த உணர்வின் துணை கொண்டு மீட்டிக் கொள்ள முடியும்.

தாவர இனங்கள் வாடி நலிந்திருப்பதை அதற்குள் உரச் சத்தை இணைத்து அதை ஏற்றுக் கொண்ட பின் தன்னிச்சையாகக் காற்றிலிருந்து அதன் சக்தியை எடுத்துச் செழித்தோங்கி வளர்ந்து வீரிய வித்தாக அது உருவாக்கிக் கொடுக்கின்றது.

இதைப் போன்று தான் மனித வாழ்க்கையில் உயர்ந்த குணங்கள் கொண்ட நாம்… சந்தர்ப்பசத்தால் நலியும் நிலை வரும் பொழுது அதை மாற்றிட அருள் ஞானிகளின் ஆற்றல்மிக்க சக்தியை “நீங்கள் எண்ணியவுடன் இந்த உபதேசம் மூலமாகக் கிடைக்கப் பெறச் செய்கின்றோம்.

ஏனென்றால் இந்த வாழ்க்கையில் நாம் சந்தித்தோர் வெளிப்படுத்தும் உணர்வுகளைக் கேட்டு…
1.”திருடன் திருடன்” என்று சொல்லி விட்டால் அந்த உணர்வுகள் நமக்குள் பாய்ந்து நம்மையும் திருட வைத்துவிடும்.
2.இவன் “பொய் சொல்கின்றான் பொய் சொல்கின்றான்” என்று திரும்பத் திரும்பச் சொன்னால்
3.அவனைக் காட்டிலும் நாம் பன்மடங்கு பொய் சொல்லும் நிலையே வந்துவிடும்.
4.இவன் “ஏமாற்றுகிறான் ஏமாற்றுகிறான்” என்று எண்ணி மற்றவரிடம் இதைப் பற்றிச் சொல்லிக் கொண்டேயிருந்தால்
5.அந்த ஏமாற்றும் உணவுகள் நமக்குள் விளைந்து இந்த வாழ்க்கையில் நாமும் ஏமாற்றும் நிலை அடைந்து விடுகின்றோம்.
6.அவன் செய்தான் நாம் ஏன் செய்யக்கூடாது…? என்ற நிலைகள் இதனின் நிலைகள் நமக்குள் வந்துவிடும்.

நம் வாழ்க்கையில் எதனைச் செய்கின்றோமோ இது தான் தியானம் என்பது. மற்றதை எண்ணித் திரும்பத் திரும்பச் சொன்னால் அதையே தியானிக்கிறோம்… அது விளைகின்றது.

அதைப் போல்… இப்பொழுது மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களுக்குள் பெறும்படி உணர்ச்சிகளைத் தூண்டுகின்றோம்.
1.மகரிஷிகளின் அருள் சக்தியை நான் பெறுவேன்
2.எனக்குள் தீமைகள் விளையாது தடுப்பேன்.
3.நான் பார்ப்பது அனைத்தும் நலம் பெறும் என்று அடிக்கடி எண்ணி எடுத்தால்… அதையே சொன்னால் இது தான் தியானம்.

அடிக்கடி அந்த அருள் ஞானிகளின் சத்தை நமக்குள் கிடைக்கச் செய்து அதனின் உணர்வை ஓங்கி வளர்க்க வேண்டும்.

இப்பொழுது ஒருவன் வேதனைப்படுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனைப் பார்க்கின்றோம்… அந்த வேதனையை நுகர்ந்தறிகின்றோம்… வேதனைப்படுகின்றான் என்று எண்ணுகின்றோம்… வேதனையிலிருந்து காத்து விடுகின்றோம்.

இருப்பினும் அவன் பட்ட வேதனை நமக்குள் வந்ததை நீக்க வழி வேண்டும் அல்லவா…!

அதற்குத்தான் இப்பொழுது அந்த அருள் ஞானிகளின் உணர்வை உங்கள் நல்ல குணங்களுடன் அடிக்கடி இணைத்துக் கொண்டே வருகின்றோம்.

இந்த உணர்வின் துணை கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று நீங்கள் எண்ணும் பொழுது
1.அவன் பட்ட வேதனையான உணர்வுகள் நம் ஆன்மாவிலே கலந்து விடாது
2.நம் உடலில் உள்ள ஜீவான்மாக்களில் கலக்காது
3.உயிருடன் இணைந்து மீண்டும் தொடர்ந்து செயல்படாது இதைத் தடுக்க முடியும்.

ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கும் பொழுது அந்த உணர்வின் சத்து உங்கள் ஆன்மாவிலே கலந்து தீமைகளை நீக்கி தீமையை நீக்கிடும் சக்தியாக உங்கள் நல்ல உணர்வுகளுடன் அது இணைந்து அதனின் உணர்வுகளைச் சுவாசிக்கப்படும் பொழுது “ஓ…” என்று ஜீவனாகி “உங்கள் உடலை ஒளிச் சரீரமாக உருவாக்க இது உதவும்…!

அதற்கே இந்த உபதேசத்தின் வாயிலாகச் சக்தி கொடுக்கின்றோம்.

சக்தி வாய்ந்த ஆண்டென்னாவை வைத்துத் தொலை தூரத்தில் இருக்கும் அலைகளை எப்படி இழுக்கின்றோமோ இதைப் போன்று அருள் ஞானிகளின் ஆற்றல் மிக்க சக்திகளை சக்தி வாய்ந்ததாக உங்களுக்குள் இணைக்கப்படும் பொழுது இதனை நீங்கள் நினைக்கும் பொழுது
1.உங்கள் கண்ணான ஆண்டென்னா வீரிய நிலை அடைந்து
2.சூட்சமமாக மறைந்திருக்கும் அருள் ஞானிகளின் ஆற்றல்மிக்க சக்திகளை நுகர்ந்து உங்கள் ஆன்மாவாக மாற்றி
3.உடலுக்குள் அந்த சக்தியினை வளரச் செய்வதற்குத் தான் இதை உபதேசிப்பது.

ஆண்டனாவிற்கு அதனுடன் இணை சேர்த்த இயந்திரங்கள் இல்லை என்றால் அதற்குத் தொலை தூரத்தில் இருக்கக்கூடிய அலைகளை இழுக்கும் திறன் இல்லை.

இதைப் போன்று தான் விண்ணிலிருந்து வரக்கூடிய ஆற்றல் மிக்க சக்திகளை நீங்கள் கவர்வதற்கு உங்களுக்குள் “அந்தத் தகுதியினை” ஏற்படுத்துகின்றோம்.

ஏனென்றால்…
1.அந்த மகரிஷிகள் உடல் பற்றை விடுத்துப் பிறவி இல்லாத நிலை அடைந்தவர்கள்… மிக மிகச் சக்தி வாய்ந்த நிலைகளைப் பெற்றவர்கள்.
2.அவர்கள் எண்ணங்களைத் தொட வேண்டும் என்றால் நமக்கு அந்தச் சக்தி வேண்டும்.
3.அந்தச் சக்தியினைப் பெறச் செய்வதற்குத் தான் இதைப் பதிவாக்குகின்றோம்.

எண்ணங்களைக் கூர்மையாக்கி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று “இந்த உபதேசங்களை யார் ஒருவர் கூர்ந்து கேட்டு இதைப் பதிவாக்குகின்றார்களோ” அவர்களுக்கு இந்தச் சக்தி எளிதில் கிடைக்கும்.

மான் புலியைக் கண்டபின் அதனிடமிருந்து தப்பிக்க வலிமையாக எண்ணுவது போன்று தீமைகளிலிருந்து விடுபட அருள் ஞானிகளின் சக்திகளைப் பெற வேண்டும் என்று “கூர்மையாக நினைவைச் செலுத்தினால்… வலுவாக நினைவைச் செலுத்தினால்” இப்பொழுது உபதேசிக்கும் பொழுது அருள் சக்தியாக உங்களுக்குள் அது இணை சேர்கின்றது.

அப்படி இணைந்த நிலைகள் கொண்டு அந்த ஆற்றலை வலுப்பெறச் செய்வதற்கு நாம் தியானிப்போம். எல்லோரும் கூட்டாக எண்ணித் தியானிக்கப்படும் பொழுது அதனின் வலுக் கொண்டு மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற முடியும்.

ஆகவே… பிறருடைய வேதனையான உணர்வுகளைக் கண்டுணர்ந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… என்று திரும்பத் திரும்ப எண்ணி அந்த சக்திகளைச் சேர்க்கப்படும் பொழுது தீமையை விளைவிக்கும் நிலைகள் தடுக்கப்படுகிறது.

அடுத்து… மகரிஷிகளின் அருள் சக்தி அவர்களும் பெற வேண்டும் என்று நாம் எண்ணி
1.நம் கண் புலனறிவால் அந்த உணர்வின் ஆற்றல்களை அவர்களுக்குப் பாய்ச்சப்படும் பொழுது
2.இந்த உணர்வுகள் அவர் உடலுக்குள் ஊடுருவி அவர்கள் வேதனையைத் தணிக்க உதவும்.
3.அதே சமயத்தில் அவர்கள் வேதனை நமக்குள் வளராது தடுக்க முடியும்

இதைச் செயல்படுத்துவதற்குத் தான் “நீ விநாயகனை வணங்காமல் ஆலயத்திற்குள் சென்றால் பலன் ஏதும் இல்லை…!” என்று தெளிவாக எடுத்துக் காட்டி உள்ளார்கள் ஞானிகள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தியானம் செய்யும் அன்பர்களுக்குள் கொஞ்சம் குறையாக வந்து விட்டால் குறையை வளர்த்துக் கொள்ளத்தான் முடியுமே தவிர “மகரிஷிகள் உணர்வை எடுக்க முடியாது…”

1.கூட்டமைப்பாக இருக்கும் ஸ்தாபனத்தைக் காக்க வேண்டும் என்ற நிலை வரும் ஆனால் குறைகள் தான் வளரும்…
2.மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்பது முதலில் வராது.

தன்னுடைய நிலைகள் முன்னணியில் எது போகும்…?

எதன் வளர்ச்சி வந்ததோ நம்மை அறியாமலே ஸ்தாபனத்தின் உணர்வுகள் குரு கொடுத்த உணர்வுகளை பெறாதபடி தடுக்கும் நிலை தான் வருமே தவிர இதை வளர்க்க முடியாது. காப்பதாக நினைப்போம்… அதைக் காக்க முடியாது.

காப்பதாக நினைத்துக் கொண்ட பற்று என்ன செய்யும்…?
1.உயர வேண்டும் என்று ஆசை இருக்கும்
2.ஆனால் காக்க வேண்டும் என்ற நிலை இருக்காது
3.நம்மை அறியாமலே காக்கும் நிலைகள் தவறிவிடும்.

காக்க வேண்டும் என்ற எண்ணம் வலுவாக இருக்கும் ஆனால் அந்தப் பற்றின் தன்மை என்ன செய்யும்…? அறியாதபடி “பிழைகளாக” வந்துவிடும்.

எப்படி…?

நான் (ஞானகுரு) ஸ்பின்னிங் மில்லுக்குள் இயந்திரம் எவ்வாறு ஓடுகின்றது என்று பார்ப்பதற்குச் செல்கிறேன். அப்பொழுது என்ன நடந்தது…?

வழியில் இருந்த சாக்கடையைத்தான் நான் கவனித்தேன் தலைக்கு மேல் உயர்ந்த இடத்தில் இருக்கும் கம்பியை நான் பார்க்க முடியவில்லை.

ஆனால் உங்களுக்கு நான் எல்லாவற்றையும் உபதேசிக்கின்றேன் அதே சமயத்தில் அந்த அவசர காலம் அதில் மோதுகின்றது மோதும் பொழுது மண்டையில் இடித்து விட்டது.
1.தவறிப் போய் இடித்து இருந்தால் ஆள் அவுட் ஆயிருக்கும் (நான் இறந்திருப்பேன்). அந்த மாதிரியான இடத்தில் தான் மோதி இருக்கின்றது.
2.ஆகவே… தவறுகள் யார் எதைச் செய்தாலும் அந்த சந்தர்ப்பங்கள் நம்மை எப்படி இயக்குகின்றது…?
3.அதை நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் செல்லும் பாதைகளில் அது போன்ற சந்தர்ப்பங்கள் வரும் பொழுது அந்தத் தீமை நம்மை இயக்கி விடாதபடி அந்த நேரத்தில் “நம்மைப் பாதுகாக்கும் உணர்வை முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும்…”

ஒரு சந்தர்ப்பம் இப்படி நடந்து விட்டது என்றால் உடனே
1.ஈஸ்வரா…! என்று அந்த உணர்வை நுகர வேண்டும். உயிரை எண்ணி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து அதை நாம் தடைப்படுத்திப் பழக வேண்டும்.

உதாராணமாக சமையலே செய்கின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பிலே வைத்திருக்கின்றோம்… அதிலே வேறு ஒரு பொருள் தவறி விழுந்து விட்டால் என்ன ஆகும்…? ஒரு பல்லியே விழுந்து விட்டால் சமைத்த பொருள் அனைத்தும் விஷமாக மாறிவிடும்.

நல்ல குழம்பை வைக்கின்றோம் அதிலே கசப்பை அதிகமாகப் போட்டு விட்டால் குழம்பின் ருசி கேட்டுவிடும் அதை நாம் மாற்ற வேண்டும் அல்லவா…?

இதைப் போன்று நாம் நல்ல செயல்கள் செயல்படும் பொழுது
1.பிறிதொரு தீமையின் உணர்வுகள் நமக்குள் “வந்தே தீரும்…!”
2.அப்படி வரும் பொழுது அதை நீக்கிப் பழகுதல் வேண்டும்.

அதை நீக்குவதற்கு வழி…?

அதற்குத் தான் “குரு வழி” என்ற நிலையில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உடனுக்குடன் தீமைகளைத் தடைப்படுத்த வேண்டும் என்று திரும்பத் திரும்ப உங்களுக்குச் சொல்வது…!

இதை இராமாயணத்தில் தெளிவாகவே காட்டுகின்றார்கள். இராமன் குகை மீது இருக்கும் பாறையைத் தட்டி வாலி வெளியே வர முடியாதபடி பாதையை மூடி விடுகின்றான். வாலி செயல் இழந்து விடுகிறான்.

குகை மேல் என்கிற பொழுது…
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து இங்கே நம் புருவ மத்தியில் வைத்து மூடி விட்டால்
2.தீமை உள்ளே புகுவதற்கு வாய்ப்பு இல்லை… புறத்தால் தடுக்கப்படுகிறது.

உடலுக்குள் வாலி என்ற (தீமை செய்யும்) உணர்வுகள் அதிகமாகி விட்டால் இரண்யன் நம் நல்ல குணங்களைக் கொன்றுவிடும் ஆகவே தான் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறச் செய்து அதை நிறுத்த வேண்டும் என்று சொல்வது.

எல்லோருக்கும் நன்மை செய்யும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை “சுக்ரீவன்” என்று காரணப் பெயராக வைக்கிறார்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

புலி தன் குட்டிகளுடன் இன்பத்தைக் காணுகின்றது அதே சமயத்தில் மற்ற உயிரினங்களைத் துன்புறுத்தி இம்சித்துத்தான் தன் உணவை உட்கொண்டு வாழுகின்றது.

தன் குட்டியைக் கண்டு மகிழ்ந்து வாழுகின்றது ஆனால் மற்றொன்றை இம்சிக்கும் பொழுது அது இரையாக்கி ரசித்து வாழ்கின்றது இருந்தாலும் தன் இரையை எடுத்து ரசித்து உட்கொள்ளும் பொழுது
1.தனது இனம் அருகே வந்தாலும் கூட வெறுக்கின்றது.
2.பசியின் உந்துதல் வேகம் அதிகமாகும் பொழுது குட்டியாக இருந்தாலும் கூட விரட்டுகின்றது..

இரை உட்கொள்ளும் போது பார்க்கலாம். அதனுடைய குட்டி இரையைத் தன் பக்கம் அதிகமாக இழுத்தால் போதும். குட்டிக்குப் பாலை அரவணைத்துக் கொடுக்கும். ஆனால் அதே சமயத்தில் இரையை இப்படி இழுக்கும் பொழுது உடனே விர்ர்ர்…” என்று ஒரு தட்டு தட்டும்.

ஏனென்றால் தன்னுடைய வாழ்க்கை என்று நிலை வரும் பொழுது தன் இனமாக இருந்தாலும் தனக்கு இரை கிடைப்பதைத் தடை செய்யப்படும் பொழுது இந்த நிலை ஆகிவிடுகிறது.

மனிதன் நாம் நம்முடைய குழந்தைகளை வளர்த்தாலும் கூட நாம் சொன்னபடி குழந்தை கேட்கவில்லை என்றால் என்ன வருகிறது…?
1.அவன் மீது வெறுப்பான உணர்வுகளைப் பதிவு செய்துவிட்டால்
2.”இவன் இப்படித்தான் இருப்பான்…” என்ற உணர்வை எடுத்துக் கொள்கின்றோம்

அது ஒரு தரம் பதிவாகிவிட்டால் பல காலம் அவன் மீது பேரன்பை வளர்த்து வைத்திருந்தாலும் ஒரு தரம் எடுத்துக் கொண்ட இந்த உணர்வு முன்னணியில் வந்து விடுகின்றது.

அப்பொழுது அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் வெறுப்பான எண்ணங்களே வருகின்றது… அது வளர்ச்சியாகும். ஆனால்
1.அவனை நல்லவனாக மாற்றும் நிலைகள் நமக்குள் மாறி விடுகின்றது.
2.நமக்குள் அவன் மீது இருக்கும் பற்றைத்தான் மாற்றும்.
3.ஆனால் அவன் மீது வைத்திருக்கும் பற்றில் தீமையிலிருந்து அவனை மாற்றி நல்வழிக்குக் கொண்டு வரும் எண்ணம் வராது.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறது அல்லவா…!

இது எல்லாம் இந்த உணர்வின் இயக்கங்களில் “தீமையின் வேகங்கள் ஜாஸ்தி…” ஆக இது போன்ற நிலைகளை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும் என்றால் இரவிலே புலன் அடங்கி நாம் தூங்கும் நேரத்தில் ஆத்ம சுத்தி செய்து தூய்மைப்படுத்தி ஆக வேண்டும்.

தினசரி காலையிலிருந்து இரவு வரை நாம் எத்தனையோ தடவை ஆத்ம சுத்தி செய்தாலும் தூங்கப் போகும் நேரத்தில் குறைந்தபட்சம் ஐந்து நிமிடமாவது
1.நம் நினைவை துருவ மகரிஷிகளுடன் ஒன்றச் செய்து
2.துருவ நட்சத்திரத்துடன் இணையச் செய்து
3.சப்தரிஷி மண்டலங்களுடன் இணையச் செய்து
4.அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று நமக்குள் வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.
5.அதாவது தீமையான உணர்வுகளுக்கு ஆகாரம் கிடைக்காதபடி
6.அந்த மகரிஷிகள் உணர்வுகளை நாம் பற்றும்படி செய்தல் வேண்டும்

இது தான் ஆத்ம சுத்தி செய்வதில் உள்ள “முக்கியமான மூலக்கூறு…”

மகாபாரதத்தில் காட்டப்படுள்ள வியூகத்தின் தத்துவம்

 

ஒரு தவளை மற்ற வண்டுகளை உணவாக விழுங்குகின்றது. வண்டுகளுக்குச் சிறகுகள் உண்டு.

தவளையின் வாயிலே சிக்கும் பொழுது ஒரு வண்டு தப்பித்துச் சென்று விட்டால்
1.அந்த வேதனையான உணர்வுகளை அந்த வண்டு சுவாசித்து
2.இந்த உணர்வின் தன்மை கொண்டு தாக்கிச் செல்லும் உணர்வின் வேகங்கள் கூடி வண்டின் உயிரான்மாவிற்குள் இது விளைந்து
3.வேதனையினால் அதிகமான விஷத்தன்மை சுரக்கப்பட்டு அது உயிராத்மாவில் சேர்ந்து
4.அடுத்து அது தன்னைத் தற்காத்துக் கொள்ளும் “ஒரு தேளாக” அது ரூபம் பெறுகின்றது.

ஆனால் அதே சமயம் வண்டுகள் தவளையின் வாயிலே சிக்கி அதை உணவாக உட்கொள்ளும் போது… வண்டுகளுக்கு எப்படிச் சிறகுகள் முளைத்திருந்ததோ இதைப் போன்ற உணர்வின் பொறிகள் தவளையினுடைய தசைகளுக்குள் சேர்கின்றது.

வண்டின் உயிரான்மா தவளையின் ஈர்ப்புக்குள் செல்கின்றது. அதனின் உணர்வைத் தனக்குள் எடுத்து அதனுடைய சக்தியை எடுத்து “வண்டு தவளையாகப் பிறக்கின்றது…”

இப்படிப் பல தவளைகளை விழுங்க எண்ணிய பாம்போ தன் விஷத்தின் தன்மையைக் கொட்டி அதைப் பலவீனப்படுத்தி அதற்குள் விஷத்தின் தன்மை சுரந்து அதைத் தனது ஆகாரமாகச் சேர்த்து அதைத் தன் உயிரான்மாவாக மாற்றிக் கொள்கின்றது.

எத்தனை விதமான வண்டுகளை அந்தத் தவளைகள் புசித்ததோ இதற்குள் சேர்த்துக் கொண்ட அதனுடைய உயிராத்மாக்கள் அதனுடைய உணர்வின் நிலையில் கொண்டு பாம்பின் தசைகளுக்குள் போய்ச் சேருகின்றது.

1.தவளையின் உயிரான்மா பாம்பாகப் பிறக்கின்றது.
2.பாம்பிற்குள் உணவாகச் சென்ற தவளையின் தசைகள் – வண்டின் சிறகுகள் முளைத்து செல்களாக அது வளர்த்துக் கொண்ட நிலைகள்
3.அந்தப் பாம்பு இறந்த பின் அடுத்து “பருந்தாகப் பிறக்கின்றது…”

பருந்தாக வரப்படும் பொழுது… முதலிலே பாம்பு தவளைக்குள் தன் விஷத்தை எப்படிச் செலுத்தியதோ இதைப் போல
1.அந்த உணர்வின் நிலைகள் கொண்டு… பருந்திற்குள் இருக்கும் இந்த விஷத்தினைக் கண்டாலே பாம்பு நடுங்குகின்றது..
2.ஏனென்றால் அந்த விஷத்தின் நுண்ணிய அலைகளாக வந்த பின்
3.தன்னைப் பருந்து கொத்தி விடும் என்று எதிர் நிலைகள் கொண்டு அதைக் கண்டாலே பாம்பு நகர்ந்து அப்பால் சென்றுவிடுகிறது.

இயற்கையின் நிலைகள் கொண்டு இப்படிப் பல பல வேதனைகளை அனுபவித்து இந்த உயிருடன் ஒன்றியே நாம் மனிதனாக வந்திருக்கின்றோம்.

எத்தனையோ போர் முறைகளைச் செய்து மகாபாரதத்தில் வியூகத்தின் தத்துவத்தினைத் தனக்குள் அமைத்து… ஒவ்வொரு உடலுக்குள்ளும் ஒன்றுக்குள் ஒன்று கலவைகள் மாறி மாறி… அதற்குத் தக்க உடலின் ரூபம் பெறுகின்றது.

உதாரணமாக புலி மானைத் தாக்குகிறது என்றால் மான் சாந்தமானது… புலியின் வேகமோ கடினமானது. மானை விழுங்க வேண்டும் என்று எண்ணி அதன் வலு கொண்டு புலி தாக்குகிறது. மானோ அதனிடமிருந்து விடுபட எண்ணுகின்றது.

இருந்தாலும் புலி மானை அடித்துக் கொல்கிறது. அப்போது மானின் உயிரான்மா அந்தப் புலியின் உடலுக்குள் சென்ற பின் புலியின் உடலைப் பெறும் தகுதி பெறுகின்றது.

1.ஏனென்றால் பெரும் வியூகத்திற்குள் ஊடுருவி…
2.“அதன் வலுவையே தான் கண்டான்…” என்று மகாபாரதத்தில் தத்துவங்கள் உண்டு.
3.எந்த வியூகத்திற்குள் சென்றாலும் இந்த உணர்வின் வேகத் தொடர்கள் கவர்ந்து அதனின் உடலாகப் பெறுகின்றது.

மானின் சக்தியோ சாந்தம் புலியின் உடலுக்குள் கலக்கப்படும் பொழுது அது பலவீனம் அடைகிறது வீரியத் தன்மையும் குறைகின்றது. இப்படிப் பல மான்களை உணவாக உட்கொண்ட புலி அடுத்து… தாவர இன்ங்களை உட்கொள்ளும் “காண்டாமிருகமாகப் பிறக்கின்றது..”

உதாரணமாக மாவுடன் காரத்தைக் கலக்கின்றோம் என்றால் அதனுடைய செயலை இழந்து மாவுடன் சேர்த்து காரம் சுவை மிக்கதாக வருகின்றது. ஆக…
1.சுவையற்ற நிலைகள் இருப்பதைச் சுவையான உணர்ச்சிகளைத் தூண்டும் உணர்வு பெறும் நிலையாக
2.இப்படித்தான் உருமாறி உருமாறி “மனிதனாக வந்தோம்” என்பதை மகாபாரதம் தெளிவாக்குகின்றது.

இன்று மனிதனாக இருக்கும் நாம் அடுத்து எந்த வியூகத்திற்குள் செல்ல வேண்டும்…? என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அற்புத சித்துகளை எல்லாம் உங்களுக்கு நான் (ஞானகுரு) கற்பித்துக் கொடுக்கலாம். அந்த மாதிரிக் கொடுத்தவர் யாரும் கரை சேர்ந்ததில்லை.. நல்ல நிலையிலும் இல்லை…!

அவரவர்கள் ராஜாவாக… தனிக்காட்டு ராஜாவாக “நான் சர்வத்தையும் அறிந்து கொண்டேன்…!” என்ற நிலைக்குப் போய் விடுகின்றார்கள்.

ஆகவே அந்த அற்புதங்கள் நமக்குத் தேவை இல்லை. நமக்குள் இருக்கும் அற்புதம் எதுவாக இருக்க வேண்டும்…?

1.நமது பார்வை பிறருடைய தீமைகளை நீக்க வேண்டும்
2.நமது பார்வை அவர்களுக்குள் அருள் ஞானத்தைத் தோற்றுவிக்க வேண்டும்.
3.நம்மைப் பார்ப்போர் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற்று மனம் மகிழ வேண்டும் என்ற
4.இத்தகைய நிலையை நாம் பெறுவோம் என்றால் அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்.

என்னைப் பார்ப்போர் மனம் மகிழ வேண்டுமென்றால்… நாம் படுகின்ற வேதனையைப் பார்த்து அவர்கள் மகிழ்ச்சி பெறுவதல்ல.
1.நம் சொல்லால்
2.நம் பேச்சால்
3.நம் செயலால்
4.நம் பார்வையால்
5.அவர்கள் அதைப் பார்த்து… “நான் நல்லதானேன்…!” என்று அந்த மகிழ்ச்சி அங்கிருந்து வர வேண்டும்.

ஆகவே… உங்கள் பார்வை பிறருடைய தீமையை நீக்கும் சக்தியாக வர வேண்டும். உங்களுடைய உணர்வின் தன்மை “தூய்மைப்படுத்தும் சக்தியின் ஆன்மாவாக” மாற்ற வேண்டும். தூய்மையான நிலைகள் கொண்டு தீமையைத் தனக்குள் வராமல் ஒளியாக மாற்ற வேண்டும்.

நம் பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திரங்களும் மற்ற பிற மண்டலங்களில் இருந்து வரக்கூடிய நிலைகளை (பெரும் பெரும் பாறைகளை) நொறுக்கி அதனுடைய நிலைகள் துகள்களாகப் பால்வெளி மண்டலங்களாக மாற்றுகின்றது. அதைத் தூசியாக மாற்றி மற்ற கோள்கள் எடுக்கின்றது.

அதிலிருந்து வெளிப்படும் சக்திகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து துகள்களாக மாறுகின்றது பின் அதன் ஓட்டத்தில் தூசிகளாக மாறுகின்றது. அதனின் தன்மை தனக்குள் கவர்ந்து “ஒளிச் சுடராக” மாற்றுகின்றது.

இதைப் போல் தான்
1.மாமகரிஷிகளின் அருள் உணர்வை உங்களுக்குள் பால்வெளி மண்டலங்களாக மாற்றி
2.உங்களுக்குள் இருக்கும் எண்ணிலடங்காத குணங்களில் இதை இணைத்து இணைத்துக் கொடுத்துக் கொண்டே வருகின்றோம்.

உங்கள் வாழ்க்கையில் வரும் எத்தகைய நஞ்சுகளையும் அதனின் தன்மைகளைத் தூய்மைப்படுத்திக் கொண்டே… அதன் உணர்வின் தன்மை பெற வேண்டுமென்ற இந்த நோக்கத்துடன் தான் இதை உபதேசிக்கின்றோம்.

1.நமது குருநாதர் காட்டிய அருள் வழிகள் உங்களிலே இயங்கி
2.தீமையை அகற்றித் தூய்மை பெறும் உணர்வின் தன்மைகள் உங்களிலே விளைந்து
3.இந்த உடலை விட்டு அகன்றால் “என்றும் தூய்மையின் நிலைகள் பெற முடியும்…!” என்ற
4.தன்னம்பிக்கை உங்களுக்கு வரவேண்டும்…! என்பதற்குத்தான் இதைச் செய்வது.

“மகரிஷிகளின் அருளைப் பெற வேண்டும்” என்று வெறும் வாயிலே சொல்ல வேண்டாம்… அதனால் பலனில்லை

 

குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல் மூலாதாரத்தைத் தட்டியெழுப்பிச் சக்தியைப் பெறலாம் என்று செய்கின்றார்கள். ஆக்ஞை இட்டு… பரவுலகத்தை மேலே உச்சிக்குக் கொண்டு போய்… இதன் வழி கொண்டு மோட்ச லோகத்திற்குக் கொண்டு போ…! என்று சொல்கின்றார்கள்.

ஆக… மூலாதாரம்,..! இந்த உடல் முழுவதற்கும் கீழே இழுக்கப்பட்டு,…இந்த உணர்வுகள் சமைக்கப்பட்டு… இந்த உணர்வின் தன்மை இரத்த நாளங்களில் இருந்து பிரிக்கப்படுகின்றது என்று இவர்களின் அனுமானம். “மூலாதாரம் கீழே இருக்கின்றது” என்று கொண்டு போகின்றார்கள்.

ஆனால் மூலம் என்றால் என்ன…? என்றே தெரியாதபடி இருக்கின்றார்கள்.

1.மூலம் என்பது உயிர்.
2.ஆதாரம் என்பது நமக்குள் இருக்கக்கூடிய உணர்வு.
3.அதில் மெய் ஒளியைக் காணும் ஆதாரத்தைத் தட்டியெழுப்பி
4.அந்த உணர்வின் சக்தியை நாம் சுவாசித்து
5.அந்த உணர்வைப் பெருக்கச் செய்வதுதான் “மூலாதாரத்தைத் தட்டியெழுப்புவது” என்று ஞானிகள் சொன்னது.

ஆனால் இவர்கள் என்ன செய்கின்றார்கள்…!

மூலாதாரத்தைத் தட்டியெழுப்பி என்று நினைவை எங்கெங்கோ செலுத்தி “மூலம்… பூரம்… மணிப்பூரம்…” என்று சொல்லி எதை எதையோ இவர்கள் சிருஷ்டித்துக் கொண்டு இவர்களும் அறியாத நிலையில் எடுத்துக் கொண்டு மற்றவர்களையும் அறியவிடாது செய்து விடுகின்றனர்.

“பூரம்” என்ற நிலைகளில் அந்த இடத்திற்குக் கொண்டு செல்லும் பொழுது “தாமரை” இங்கே இருதயத்திற்குள் நினைக்கும்போது பொழுது ஹார்ட் அட்டாக் வந்து நெஞ்சு வலித்தது என்பார்கள்.

நான் சிந்தனையுடைய நிலைகளை எடுத்தேன்… ஏதோ ஒரு பிரம்மத்தில் போய்ச் சேர்ந்தது… எனக்குப் பித்துப் பிடித்தது என்றும் சிலருடைய நிலைகள் சொல்வார்கள்.

ஆனால் அவர்கள் சொன்ன பூரம் ஆதாரம் இவைகளைத் தட்டியெழுப்பினால் நிச்சயம் அந்த உணர்வின் தன்மை அந்தந்த இடங்களைப் பாதிக்கச் செய்யும்,

குண்டலினி யோகம் செய்தவருடைய நிலைகள் எல்லாம் HEART WEAK… அந்த உணர்வின் தன்மை இருதயம் பலவீனமாக இருப்பதைப் பார்க்கலாம்.

இதையெல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால் சில பேர் குண்டலினி யோகா… அதற்காக இங்கே தொட்டுக் காட்டுகின்றேன் என்று புத்தகங்களைப் படித்துக் கொண்டு தெரியாத நிலையில் செயல்படுத்துகின்றார்கள்.

அதன் விளைவு ஹார்ட் அட்டாக்… பிரமை பிடித்து ஞாபக சக்தி குறைந்து விட்டது… என்றெல்லாம் வரும்.

இந்தப் பயிற்சியை மேற் கொண்டோம்… அதனால் எங்களுக்கு இப்படி ஆனது என்று இது போன்று என்னிடம் ஒரு ஆறேழு பேர் வந்து சொன்னார்கள்.

இயற்கையின் தன்மை நாம் சுவாசிக்கும் பொழுது
1.வடிகட்டும் உணர்வின் தன்மை “சுவாசம்”
2.நமக்குள் உணர்வின் தன்மையை… செல்களைத் தட்டியெழுப்பி
3.நம் மூச்சின் தன்மையை உடலாக்குவது தான்…
4.அந்த உணர்வின் சக்தியை வடிப்பது தான்… இந்த இயற்கை.
5.அந்த இயற்கையுடன் ஒன்றிய நிலைகளில் நாம் செல்வது தான் சக்தியைக் கூட்டிக் கொள்ளும் வழி.

ஒரு தென்னை மரம் மற்ற மரங்களால் வெயில் மறைக்கப்பட்டு அதனால் தனக்குக் காந்த சக்தி குறைவாக இருந்தால் என்ன செய்யும்…? வளைந்து நெளிந்து அந்தச் சூரியனின் காந்த சக்தியை எடுத்துத் தனக்குள் விளைவித்துக் கொள்ளும்.

அதைப் போல் தான் மனிதன் அந்த மெய் ஞானியின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்றால் அதற்குத் தக்கவாறு நாம் எண்ணி ஏங்கி எடுத்தல் வேண்டும்.

ஒரு ட்யூப் லைட்டில் (TUBE LIGHT) அதற்குத் தக்க மின்சாரத்தின் அளவுகோல் சரியாக வைக்கும் பொழுது சரியான நிலைகளில் எரிகின்றது… குறைந்தாலோ எரிவதில்லை.

இதைப் போன்று தான்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்றால் அதற்குத்தக்க காந்த சக்தி இருந்தால் தான் காற்றிலிருந்து நாம் எடுக்க முடியும்.
2.”மகரிஷிகளின் அருளைப் பெற வேண்டும்” என்று வெறும் வாயிலே சொல்ல வேண்டாம்… அதனால் பலனில்லை.
3.அந்த உணர்வின் ஆற்றல்மிக்க இந்தச் சக்திக்கு யாம் உபதேசித்தாலும் அந்தக் காந்தத்தின் சக்தியைக் கூட்டினால் தான் அதை எடுக்க முடியும்.

நாள் முழுவதற்கும் நாம் உழைக்கின்றோம். ஒரு பத்து நிமிடமாவது இந்தச் சக்திகளை எடுத்து உங்கள் ஆன்மாவைச் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

1.“ஈஸ்வரா” என்று நம் உயிரிடம் எண்ணத்தைச் செலுத்திப் பழக வேண்டும்.
2.கண்ணின் நினைவை அங்கே புருவ மத்திக்குக் கொண்டு போக வேண்டும்.
3.மகரிஷிகளின் உணர்வைக் கண்ணின் நினைவிற்குக் கொண்டு வந்து உயிருடன் இணைக்க வேண்டும்.
4.அடுத்து மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலிலுள்ள அணுக்களில் இணைக்க வேண்டும்.

இப்படி நம் உடலை உருவாக்கிய எல்லா அணுக்களுக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்ப்பிப்பது தான் “குண்டலினி யோகா…”

அந்த உணர்வின் தன்மை வலுப்பெறும் பொழுது எத்தகையை தீமையாக இருந்தாலும் அதைப் பிளக்கின்றது… நமக்குள் ஆற்றல்கள் பெருகுகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தங்க ஆபரணங்களை நீங்கள் அணிந்திருந்தால் அந்த ஆபரணங்களை எண்ணி… நம்மைப் போன்றே மற்றவருக்கும் இது கிடைக்க வேண்டும்…! என்று எண்ணுங்கள்.

1.அந்தத் தங்கத்தைப் போன்ற நல்ல மனம் எங்களுக்குள் வளர வேண்டும்.
2.எங்களைச் சார்ந்தோர்… எங்களைப் பார்ப்போர் அனைவருக்கும் “தங்கத்தைப் போன்ற மங்காத மனம்” கிடைக்க வேண்டும்.
3.வாழ்க்கையில் தங்கத்தைப் போன்ற பளிச்சென்ற மங்காத நிலைகள் எல்லோரது மனதும் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

ஏனென்றால் வெறும் நகையாக மட்டும் தங்கத்தை அணிந்து கொண்டிருப்பதற்கு அல்ல…!

தெய்வங்களுக்குத் தங்கத்தை மாலைகளாகப் போட்டு பல விதமான ஆபரணங்களாக அணிந்து பார்க்கின்றோம் அல்லவா…! அந்தத் தங்கம் எவ்வாறு மங்காது இருக்கின்றதோ… இதைப் போன்று நமது எண்ணங்கள் மங்காது அனைவருடைய அரவணைப்புடன் இருக்க வேண்டும்.

காரணம்… குடும்பத்திற்குள் எல்லோருடனும் நாம் மகிழ்ச்சியாக இருப்பினும் அந்த மகிழ்ச்சிக்குள் சிறிது குறை ஏற்பட்டால் உடனே அவர்கள் மேல் கோபமோ ஆத்திரமோ வேதனையோ ஏற்பட்டு நமக்குள் இருக்கும் நல்ல எண்ணங்கள் மறையத் தொடங்குகின்றது.

அப்பொழுது நம் நல்ல எண்ணங்கள் மறையாது இந்தத் தங்கத்தைப் போன்று மங்காது பாதுகாத்திடல் வேண்டும்.

அவர்களுடைய குறை உணர்வுகள் நமக்குள் வந்ததைத் துடைத்துவிட்டு “பளிச்…” என்ற நிலையில் அவர்களுடைய உணர்வும் தெளிந்திட வேண்டுமென்ற எண்ணத்தை நாம் எடுத்து நமக்குள் வளர்த்திட வேண்டும்.

ஏனென்றால் தியானம் என்றாலே இது தான்…! நமக்காக மட்டுமல்ல…!

சூரியன் எவ்வாறு பிற கோள்களின் நிலைகளைத் தனக்குள் நுகர்ந்து அதிலுள்ள தீமைகளைக் கழித்துவிட்டு ஒளியின் நிலையாக அது உருப்பெற்று வளர்ந்து கொண்டே இருக்கின்றதோ இந்தப் பிரபஞ்சத்தையே ஒளிமயமாக்கின்றதோ… இதைப் போல நமது எண்ணங்கள் எப்போதுமே அந்தப் பிரகாச நிலைகள் கொண்டு இருத்தல் வேண்டும்.

பிறர் மேல் இருக்கும் குறையோ… குற்றமோ… வெறுப்போ,,, நாம் நுகர்ந்து அறியப்படும்போது… அது நமக்குள் வளராது…
1.அந்த மகரிஷிகளின் உணர்வு கொண்டு பளிச்சிடச் செய்து
2.”தங்கம் கருகாது” எப்படி அதனுடைய உணர்வு என்றுமே ஒளி வீசுவது போல்
3.நம் ஒவ்வொருவருடைய மனதையும் தங்கத்தைப் போன்று மங்காத நிலை பெறச் செய்து
4.நாம் எதிலே ஈடுபட்டாலும் நம் உணர்வுகள் மங்காத நிலைகள் பெறச் செய்ய வேண்டும்.

இதை நாம் வழிப்படுத்த வேண்டும்.

பிறிதொரு ஆன்மா இல்லாத மனித உடலே இல்லை…!

 

“சரியான நேரத்தில் நீங்கள் எனக்கு உதவி செய்திருக்கின்றீர்கள்” என்று நம் மூலமாக அந்த உதவியைப் பெற்றவர் என்ன செய்வார்…?
1.வேறு யாரும் உதவி செய்யவில்லை… இந்த மனிதர் தான் எனக்கு உதவி செய்தார்…! என்று கடைசியிலே அவர் எண்ணினால் போதும்.
2.அந்த ஆன்மா நேராக நம் உடலில் புகுந்து விடும்… அவர் உடலில் ஏற்பட்ட தொல்லைகளை எல்லாம் இங்கே செயல்படுத்தும்.

ஒரு வயதான கிழவியாக இருந்தது. அவர்கள் வீட்டில் யாரும் அவருக்கு உதவி செய்யவில்லை. ஆனால் பெரியம்மா என்ற நிலையில் நாம் சந்தர்ப்பத்தில் உதவி செய்தோம் என்றால்… “இறக்கப்படும்போது அந்த அம்மாவிற்கு நம் நினைவு தான் வரும்…”

அதற்கு முன்னாடி உதவி செய்திருக்க மாட்டோம். கடைசியிலே அது இறப்பதற்கு ஒரு நான்கு நாளைக்கு இந்த உதவி செய்திருந்தால் போதும்…! மற்ற நிலைகளை எல்லாம் மறந்து இது அந்த அம்மாவின் முன்னணியில் வந்து விடும். அது எந்தெந்த வேதனைப்பட்டதோ அதெல்லாம் நமக்குள் வந்து இயக்கத் தொடங்கும்.

இப்படிப் பல நிலைகள். ஏனென்றால் ஒரு மனிதன் இறந்து பின் அவன் இன்னொரு உடலுக்குள் வந்தால் மனிதனாக உருப் பெறும் கருவாக உருவாவதில்லை.

அந்த உடலுக்குள் சென்று அவனை உருக்குலையச் செய்து அவனைச் சின்னாபின்னமாக்கி இந்த உடலிலே விஷத்தைக் கலந்து… ஒரு மிருகம் எப்படி விஷமான சத்து கொண்ட தன் உடலைப் பாதுகாத்துக் கொள்கின்றதோ அது போன்று மனித சிந்தனைகள் ஒவ்வொன்றாகக் குறைந்து மனித நிலை அற்ற பிற்பாடு மிருகத்தின் ஈர்ப்புக்குள் செல்கிறது.

உதாரணமாக பாம்பு மனிதனைக் கடித்து விட்டால் மனிதருடைய நினைவு இழக்கப்பட்டு பாம்பினுடைய ஈர்ப்பிற்குள் சென்று பாம்பாகத்தான் பிறக்க நேரும்.

ஆனால் அதே சமயத்தில் “கொசு கடிக்கிறதே…” என்று கொசுவை நாம் அடிக்கிறோம் என்றால் அது நம் உடலுக்குள் வந்து கொசு மனிதனாகப் பிறக்கும் சந்தர்ப்பம் உருவாகின்றது.

இப்படி எத்தனையோ மாற்றங்கள் ஏற்படுகின்றது. இது போன்று தான் ஒன்றுக்குள் ஒன்று எடுத்துக் கொண்ட உணர்வுக்குள் ஏப்படி எல்லாம் மாறி வருகிறது என்ற நிலையை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இதிலிருந்து எப்படி நாம் தப்புவது…?

ஒரு சிலர் அடுத்தவரின் ஏச்சையும் பேச்சையும் பொறுக்க முடியாமல் “பேயாகச் சென்றாலும் நான் உன்னை விடமாட்டேன்…! என்று பேசுவார்கள். எனக்கு இப்படிச் செய்தார்களே பாவிகள்…! என்று இந்த உணர்வுகளை வளர்க்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் இங்கே வந்து விடுகிறது.

குடும்பத்திற்குள்ளோ மற்றதற்குள்ளோ எதைச் செய்தாலும் இந்த உணர்வுடன் இறந்தபின் அதே உணர்வின் ஒலி கொண்டு இங்கே வந்துவிடுகிறது. அதற்குத் தான்… நீ செய்த தொல்லைகளுக்குப் பேயாகப் போ என்று ரிஷி சாபமிடுவதாகக் காட்டுகின்றார்.

பேயின் தன்மை அடைந்தபின்… ஐயனே எனக்கு வேறு வழி இல்லையா…? என்று தன் விமோசனத்திற்குக் என்று கேட்கப்படும் பொழுது “உயர்ந்த நிலைகள் கொண்ட ஒரு மனிதனை நீ தீண்ட எண்ணுவாய்… அவன் நிழல் பட்டு மீண்டும் மனித நிலையை அடைவாய்…!” என்று ரிஷி சொல்வார்.

நாம் நல்லதைச் செய்து கொண்டிருந்தாலும் அந்த நன்மை செய்த நிலைகள் கொண்டு இன்னொரு ஆன்மா இந்த உடலுக்குள் வந்து இந்த உணர்வின் தன்மை இயக்கமாகின்றது.

அதாவது பாலிற்குள் விஷம் பட்டால் எப்படி அதனுடைய நிலைக்கு இட்டுச் செல்கின்றதோ இதைப் போன்று “நாம் உதவி செய்த நிலைகள்…”
1.வேதனையான இயக்கத்தால் இந்த உடலுக்குள் வந்துவிட்டால்… அது அதனின் நிலையையே இங்கே உருவாக்குகின்றது.
2.நம்முடைய உணர்வும் அதனுடைய உணர்வும் இரண்டும் கலந்து உயிரிலே படும்போது “இரண்டு எண்ணங்கள்” வருகின்றது.

பேய் பிடித்தவரைப் பாருங்கள். நல்லா இருப்போம் என்று நினைப்போம்… ஆனால் என்னை எங்கேயோ இழுக்கிறதே… என்னை எதுவும் செய்ய விட மாட்டேன் என்கிறதே… கை கால்கள் குடைகின்றதே… இடுப்பு எல்லாம் வலிக்கின்றதே… என்னைத் தூக்கு போடச் சொல்கின்றதே… என்னை எங்கேயோ ஓடச் செய்கின்றதே என்று பேசுவதெல்லாம்
1.தன் நினைவுகள் நல்லதாக இருந்தாலும் அந்த உணர்வுகள் இவ்வாறு இயக்குகின்றது.
2.நாம் தவறு செய்யாமலேயே இப்படி நடக்கின்றது.
3.இன்னொரு ஆன்மாவின் உணர்வின் தன்மை இவ்வாறு இயக்குகின்றது.
4.அதை நமக்குள் அடக்க வேண்டும். அதற்கு நமக்குச் சக்தி வேண்டும்.

அந்தச் சக்தி உங்களுக்குக் கிடைப்பதற்குத் தான் அந்த மெய்ஞானிகள் அருள் வாக்குகளை உங்களுக்குள் இந்த உபதேச வாயிலாகப் பதிவு செய்கின்றோம்.

ஒன்றும் தெரியாத மூடனிடத்தில் (என்னிடத்தில்) அந்த மெய் ஞானிகள் உணர்வை ஊட்டி அந்த வித்தினை வளர்க்கும் முறையைக் காட்டினார் “எனது குருநாதர் ஈஸ்வரபட்டர்…”

அவர் காட்டிய அந்த உணர்வின் ஓளியை… அவர் தனக்குள் வளர்த்துக் கொண்ட அந்த ஒளியான வித்தைத்தான் இப்போது உபதேசமாகக் கொடுத்து உங்கள் உடலுக்குள் விதைக்கின்றோம்.

அதன் மூலம் காற்றிலே மிதந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உங்களுக்குள் வளர்க்கச் செய்வதற்கே இந்த நிலை.

ஆகவே உங்களை நீங்கள் நம்புங்கள்.

உங்களுக்கு எப்பொழுதெல்லாம் துன்பங்கள் வருகின்றதோ அந்த நேரத்தில் எல்லாம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதை அடக்குங்கள். அதன் மூலம் உங்கள் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்ற முடியும்… இருளான நிலையிலிருந்து விடுபட முடியும்.

அத்தகைய சந்தர்ப்பத்தை… அந்த நிகழ்ச்சியை ஏற்படுத்துவதற்குத் தான் உங்களுக்கு இந்தத் தியான பயிற்சியைக் கொடுக்கின்றோம்… பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நெற்றியில் திலகம் வைத்தாலும் அந்தத் திலகத்தின் தன்மை எதுவாக
இருக்க வேண்டும்…? என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் குறித்துக் கொள்ளுங்கள்

வீட்டில் எந்தக் குறையாக இருந்தாலும் அதை மாற்றிவிட்டு
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.எனக்குள் மன பலம் பெற வேண்டும்… மன வளம் பெற வேண்டும்.
3.எங்கள் குடும்பத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ்ந்திடும் நிலைகள் வேண்டும்.
4.குடும்பத்தில் யாராவது நோய்வாய்ப் பட்டிருந்தாலும் அவர்கள் மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்.
5.அவர்கள் நோய்கள் நீங்க வேண்டும்… அவர்கள் அறியாத இருள் நீங்க வேண்டும் என்று
6.விரலால் தொட்டு அந்தத் திலகம் இடுவதற்கு முன் இந்த நினைவலைகள எண்ணுங்கள்.
7.நீங்கள் எண்ணிய அந்த உணர்வின் நிலைகள் உங்கள் உடலுக்குள் அலை அலையாகப் பரவிப் படர்கின்றது.

இந்த எண்ணத்துடன் திலகத்தை இடுங்கள்.

அதைப் போல யார் யாரெல்லாம் நலம் பெற வேண்டுமோ திலகம் இடும் பொழுது எண்ணி அவர்களை எல்லாம் நலம் பெறச் செய்யுங்கள்

யார் யாரெல்லாம் நம் மேல் வெறுப்பு அடைந்தனரோ… அந்த வெறுப்பை அகற்ற அவர்களுக்கும் தெளிந்த மணங்கள் வர வேண்டும்…! என்று எண்ணத்தை எண்ணி நீங்கள் திலகமிடுங்கள்

ஏனென்றால் “தொட்டுக் காட்டுவது” (பொட்டில்) என்று சொல்லும் பொழுது
1.பிறர் தொட்டுக் காட்டுகிறார்… என்றால்
2.அவருடைய எண்ணங்களைத் தொட்டுக் காட்டும் பொழுது
3.அவருடைய நிலைகளைத் தான் நமக்குள் நாம் எண்ணிச் சுழலச் செய்கின்றோம்.

ஆகையால் அதைப் போன்று இல்லாது நீங்கள் உயர்ந்த எண்ணங்களை எண்ணி “அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்” என்று ஐம்பது முறையாவது எண்ணி அந்த உணர்வுகளை வெளிப்படுத்துங்கள்.

உங்கள் குடும்பத்தில் யார் யாருக்கெல்லாம் எந்தெந்த வகையில் அவர்கள் நன்மை பெற வேண்டுமோ அவர்களுக்கு எல்லாம் எண்ணத்தால் எண்ணிப் “புருவ மத்தியில்” திலகத்தை வையுங்கள்.

அப்போது இந்த உணர்வுகள் அங்கு ஆழப் பதியும்… நினைவலைகளாகத் தெளிவாக வரும்…. உங்கள் சிந்தனைகள் சீர்குலையாது. வெறுப்பின் அலைகள் உங்களுக்குள் புகாது அதைத் தடுக்க இந்த முறைப்படி நீங்கள் திலகமிட வேண்டும்.

இன்று நீங்கள் உடைக்குத்தக்க பல அணிகலன்கள் அணிகின்றீர்கள். அது எத்தனையோ ஃபேஷனாக இன்று வந்துவிட்டது.

ஆக… நாம் எப்படி ஒருவருடைய நிலைகளை மகிழ்ந்திடும் நிலைகள் செய்கின்றோமோ அதைப் போல “நம் எண்ணங்களை உயர்ந்ததாக்கி” அதையே நாம் ஆபரணங்களாக அமைக்க வேண்டும்.

என்னைப் பார்க்கும் ஒவ்வொருவரும்… எப்போதும் மகிழ்ச்சி பெற வேண்டும்…! என்று இந்த முறையைச் சிறிது காலம் சொல்லிப் பாருங்கள். அது உங்களுக்குள் தெளிவான நிலைகளாக வரும்.

இப்படி அந்த ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி நாம் செயல்படுத்துதல் வேண்டும். இவ்வாறு செயல்படுத்தினால் நமது பற்று அந்த மகரிஷியின் பால் செல்கின்றது. அந்த மகரிஷியின் உணர்வு ஓங்கி வளருகின்றது.

அத்தகைய பற்றின் தன்மை
1.அந்த மகரிஷிகளின் சக்திகள் கணக்கு எந்த அளவுக்குக் கூடுகின்றதோ
2.அதன் வழிப்படி நாம் பிறவியில்லா நிலை அடைகின்றோம்.

அதே சமயம் நம் குடும்பத்தில் வரும் எத்தகைய தீமையும் நம்மை அணுகாது பார்த்துக் கொள்ளுகின்றோம். நம் நினைவின் ஆற்றல் விண்ணை நோக்கிச் செல்லுகின்றது.

விண்ணை நோக்கி செல்லும் நிலையை நமக்குள் ஆழமாகப் பதிவு செய்ய வேண்டும். ஏனென்றால்
1.“சித்திர புத்திரன்” கணக்கின் பிரகாரம் தான் உடலுக்குப் பின் அடுத்த நிலை என்பது போல்
2.எந்த விண்ணின் பற்றை நாம் அதிகமாகக் கூட்டுகின்றோமோ
3.அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் நாம் அனைவரும் ஐக்கியமாகின்றோம்.

அரசு அன்று கேட்கும்… தெய்வமோ நின்று கேட்கும்…!

 

உதாரணமாக நம் பையன் நன்றாகப் படிக்க வேண்டும் என்று எண்ணுகின்றோம். பாடப் புத்தகங்களையும் வாங்கிக் கொடுக்கின்றோம். அழகான துணிமணிகளையும் கொடுக்கின்றோம்.

அவன் நல்ல நிலையில் தெளிவாக வளர்ந்து வர வேண்டும் என்று இத்தனையும் ஆசை கொண்டு செயல்படுத்துகின்றோம். இவ்வாறு நினைக்கும் போது மூஷிகவாகனா.

அந்த உணர்வுகளைச் சுவாசித்து குழந்தைகக்கு வேண்டியதைப் பக்குவப்படுத்தி அவனைச் சீராட்டுகின்றோம் தாலாட்டுகின்றோம். ஆனால் இந்த மகிழ்ச்சி என்ன ஆகின்றது…?

பையனோ அவனுடைய உணர்வுக்கொப்ப அந்தப் புத்தகத்தில் இருக்கக்கூடிய பக்கங்களைக் கிழித்து விட்டு விளையாண்டு கொண்டிருக்கின்றான்.

நாம் எண்ணியபடி அவன் வரவில்லை என்ற நிலையில் அதைப் பார்த்த உடனே “இப்படி நஷ்டம் ஆக்கிவிட்டானே…” என்று வேதனைப்படுகின்றோம்.

தேள் நம்மைக் கொட்டி விட்டால் சிந்தனை வருமா…? அந்தப் பொருள் வீணாகிவிட்டதே…! என்ற நிலையைச் சிந்தித்த உடனே விஷமான நிலைகள் கொண்டு கடுகடுப்பாகின்றது.
1.சிந்திக்கும் செயல் இழந்து… இருள் சூழ்ந்த நிலைகள் கொண்டு “இப்படிச் செய்து விட்டயாடா…?” என்று ஆத்திரம் வருகிறது.
2.நாம் எதைக் கொண்டு அவனைப் பக்குவப்படுத்த வேண்டும் என்று விரும்பினோமோ… அவனையே அழிக்கும் நிலைகள் வருகின்றது.

அது தான் மூஷிகவாகனா…! வேதனையும் எரிச்சலும் இரண்டும் சேர்த்து எனக்குள் சுவாசிக்கும் பொழுது கோபம் வருகின்றது காளி…!

அந்தக் காளி என்ன செய்கின்றது…? நாம் பார்க்கும் பொழுது தவறு செய்தால் துர்மார்க்கனை அழிக்கும் நிலை வருகின்றது.

அவன் செய்யும் சேட்டையை உணர்ந்து “அவன் எதைச் செய்தானோ அதைப் பார்க்கும் பொழுது அதுவாகி” அந்த உணர்வின் தன்மை கொண்டு அவன் செயலையே அழிக்கும் நிலைகளுக்கு நம்மை இட்டுச் செல்கின்றது.

அது தான் “ஓ…ம்”
1.அவன் செய்த பிழையான உணர்வுகள் அங்கே இருள்… அவனுக்குள் எடுத்த உணர்வுகள் வெளி வருகின்றது.
2.அவனைப் பார்த்து நாம் அதை எடுக்கப்படும் போது ஓம் நமச்சிவாய… அந்த உணர்வின் சத்து நமதாக இங்கே பிரணவமாகிறது.

அவன் எடுத்துக் கொண்ட உணர்வின் சத்து அங்கே இருக்கின்றது. அந்த உணர்வைச் சுவாசிக்கும் பொழுது
1.“அவனை உதைக்க வேண்டும்” என்ற நிலைகளில் அவன் செயல் என்னை இழுத்துச் செல்கின்றது.
2.அது தான் ஓம் நமச்சிவாய… சிவாயநம ஓம்… அதாவது நமதாக மாறி நம்மிடமிருந்து அதே உணர்வின் இயக்கமாக அங்கே திரும்பச் செல்கிறது.

நீ எதை நினைக்கின்றாயோ அதுவாக நீ ஆகின்றாய் என்ற நிலையும் இதைப் போன்ற உணர்வின் தன்மை அது எப்படி இயக்குகிறது…? என்ற தத்துவத்தைத் தான் நம் சாஸ்திரங்கள் கூறுகின்றது.

ஓம் நமச்சிவாய சிவாயநம ஓம் என்று சொல்வோருக்கு அபாயம் ஒன்றும் இல்லை என்று எண்ணினால் சரியாகிவிடுமா…?
1.அவன் கொடுத்த தத்துவத்தை அவன் காட்டிய சிவத்தை எதுவாக ஆக்க வேண்டும்…?”
2.எந்த உணர்வின் தன்மையாக உனக்குள் பெருக்க வேண்டும்…?
3.இயற்கையின் நீதிகளின் தன்மைகள் வளர்வதற்கு என்ன வழி…? என்று அன்று மெய் ஞானி உணர்த்தினான்.

அதைத் தான் அங்கே பார்க்கப்படும் பொழுது அரசு அன்று கேட்கும் தெய்வம் நின்று கேட்கும்…! நான் எடுத்துக் கொண்ட உணர்வுகள் எனக்குள் நல்ல குணங்களாக வளர்ந்து இருந்தாலும் அவன் செயலைப் பார்க்கும் பொழுது
1.நான் சுவாசித்த நிலைகளால் எனக்குள் இருக்கக்கூடிய குணங்கள் அனைத்தும் அடங்கி
2.வேதனையையும் கோபத்தையும் ஊட்டும் நிலையாக இது எனக்குள் ஆட்சிக்கு வருகின்றது.
3.கணங்களுக்கு அதிபதி கணபதி அவனைத் தாக்கும் நிலைகளுக்கு நான் வந்து விடுகின்றேன்… உதைக்கின்றேன்
4.நான் வாங்கி கொடுத்த புத்தகத்தைக் கிழித்து விட்டயாடா பாவி…! என்று அவன் அழுதாலும் இரக்கமற்று அடிக்கின்றோம்.

காளிக்கு முன்னாடி என்ன இருக்கின்றது…? புலி…! அவன் உணர்வைச் சுவாசித்து அதன் வழியில் காளியின் ரூபமாக என்னை அழைத்துச் சென்று புலியைப் போன்று தாக்கும் நிலைகளை உருவாக்குகின்றது.

புலி எப்படி மற்ற உயிரினங்களை இரக்கமற்றுக் கொல்கின்றதோ அவனை அடித்து விட்டோம். இருந்தாலும் சுவாசித்த உணர்வுகள் என் உயிரிலே பட்டு அந்த உணர்வின் சத்தினை எனக்குள் வடித்து என் நல்ல உணர்வுடன் கலக்கப்படும் பொழுது
1.எனக்குள் இருக்கக்கூடிய நல்ல குணத்தை அழிக்கச் செய்து விடுகின்றது… அந்தச் சக்தி…”
2.அரசு அன்று கேட்கும் தெய்வம் நின்று கேட்கும்…!
3.எனக்குள் உருவான அந்தக் காளியான சக்தி நல்ல குணங்களுக்குள் ஊடுருவி இரத்தக் கொதிப்பாக மாறி
4.வேதனை கொண்ட கடுகடுப்பும் வியாதியாகத் தோற்றுவிக்கும் நிலையாக உருப் பெறுகின்றது.

அதனால் தான் அரசு அன்று கேட்கும் தெய்வம் நின்று கேட்கும் என்று சொல்வது. அவனை அடித்த உணர்வுகள் திரும்பத் திரும்ப அதைச் சொல்லப்படும் பொழுது இந்த உணர்வின் தன்மையே இயக்கமாகிறது.

ஒரு ரேடியோவிற்குள் எப்படி அந்தப் பேசிய அலைகளை மீண்டும் நினைவு கூறும் பொழுது அதனின் அலைவரிசையைத் தொகுப்பாக வைத்துத் திருப்பி வைக்கப்படும் போது அந்த உணர்வின் நினைவலைகளை ஊட்டி நாம் அதன் மூலமாகக் கேட்பது போன்று
1.நமக்குள் இருக்கக்கூடிய காந்தப்புலனின் சக்தி வேகத் துடிப்பு கொண்டு அவனை அடிக்க வேண்டும் என்று எண்ணி எதைச் செயல்படுத்தினேனோ
2.அந்த உணர்வின் காந்தப்புலன்கள் கவர்ந்து நாம் மீண்டும் வேகமாக இழுக்கும் பொழுது
3.அந்த உணர்வலைகள் சுழன்று நின்று… என்னைச் சுற்றி நிற்கின்றது… அதுவே இயக்குகின்றது,

உதாரணமாக ஓசோன் திரை இந்தப் பூமிக்கு பாதுகாப்பாக எப்படி அமைந்ததோ… அதாவது விண்வெளியில் தோன்றும் விஷத்தின் அணுக்கள் பூமிக்குள் நுழையப்படும் பொழுது அது வெளிச் செல்லும் போது மீண்டும் காந்தப் புலன்கள் கவர்ந்து இதன் சுழற்சி வட்டத்தில் அந்த விஷத்தின் தன்மையைக் கவர்ந்து… மீண்டும் தனக்குள் வரும் விஷத்தைத் தனக்குள் அடுக்கடுக்காகச் சேர்த்து… இந்தப் பூமிக்குள் விஷம் வராதபடி அது ஆற்றல்மிக்க நிலையாக ஓசோன் திரையாக அது எப்படி வளர்கின்றதோ இதைப் போன்று
1.நாம் எடுத்த ஆத்திரத்தின் நிலைகள்… வேகமாக எடுத்துக் கொண்ட அந்த உணர்வுகள்
2.ஓசோன் திரை போன்று ஆத்திரத்தை தூண்டும் உணர்வின் நிலைகளாக எனக்குள் ஆன்மாவாகக் “குவித்துக் கொள்கிறது…”

யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே…! அடுத்து… நான் ஒரு வியாபாரத்திற்குச் செல்கின்றேன். வாங்க வருபவரிடம் பொருளை எடுத்துக் கொடுக்கின்றேன்.

இந்த உணர்வின் தன்மை கொண்டு எடுத்துக் கொடுக்கப்படும் பொழுது நான் எடுத்துக் கொண்ட உணர்வின் (ஆத்திரமான) ஒலிகள் அங்கே அவர் செவிகளில் பட்டு இதே உணர்வுகள் அங்கே உந்தும் பொழுது “அவர் என்னைப் பார்க்கின்றார்…”

பாலுக்குள் காரத்தைக் கலந்து விட்டால் அது எப்படிச் சுவையற்றதாக மாற்றுகின்றதோ அதைப் போல அந்த ஆத்திரமான உணர்வுகள் அவருடைய சுவாசத்திற்குள் சென்று
1.நான் எப்படி என் பையனை வெறுத்துத் தாக்கினேனோ இதே உணர்வுகள் கண்ணின் புலனறிவுகளிலே பட்டு அங்கே பாய்ச்சப்பட்டு
2.எடுத்துக் கொடுக்கும் பொருளை சொல்லாகச் சொல்லப்படும் பொழுது இந்த உணர்வுகள் அவருக்குள் உணர்ச்சிகளாக இயக்கப்பட்டு
3.கையிலே எடுத்துக் கொடுக்கும் பொருளை வெறுக்கச் செய்கின்றது.

தன் இனத்தின் தன்மை… தான் பாதுகாக்கும் நிலையாகத் தான் செய்த நிலையை உருப்பெறும்… உருவாக்கும் சக்தியாக… அங்கே உருவாகின்றது.

இதைத்தான் யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே. இவனை அடித்து விட்டேன் என்று எண்ணினாலும் இந்த உணர்வின் சத்து நாம் செயலாக்கப்படும் பொழுது இது முன்னணியில் வந்து விடுகின்றது.

அதைத் தான் இயற்கையின் நிலை அது எவ்வாறு இயக்குகிறது…? என்று அன்று காட்டினார்கள் ஞானிகள்.

ஞானிகள் காட்டிய அந்த உண்மைகளை எல்லாம் நாம் தெளிந்து தெரிந்து தெளிவான நிலைகள் கொண்டு அருள் உணர்வுகளைச் சுவாசித்து… நல்லது செய்யக்கூடிய பண்புகளாக நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குடும்பத்தில் குறைபாடுகள் வந்தால் அந்தக் குறைகள் வருவதற்கு நாம் காரணம் அல்ல. நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மை அது இயக்குவது தான். அதை மாற்றி அமைக்க ஆத்ம சுத்தி செய்து குடும்பத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

1.குடும்பத்தில் ஏற்படும் அந்த நிகழ்வுக்குக் காரணம் இன்று மட்டும் அல்ல
2.தாய் கருவிலிருந்தே சில நிலைகள் வந்து கொண்டிருக்கிறது

அது மட்டுமல்ல…! ரோட்டிலே செல்லும் பொழுது நாம் பார்க்கின்றோம்… ஒருவருக்கு ஒருவர் சாபம் விடுகின்றார்கள்… அதை நாம் கேட்டிருப்போம்… நமக்குள் பதிவாகி இருக்கும். அதனாலும் குடும்பத்தில் தீமைகள் வரும். நாம் தவறு செய்து அந்த நிலைகள் வரவில்லை.

1.இந்த மாதிரி சாப அலைகள் எத்தனையோ வகைகளில் எத்தனையோ விதமாக நமக்குள் பதிவாகியுள்ளது
2.அதெல்லாம் மிகவும் சக்தி வாய்ந்தது.

உதாரணமாக ஒரு கேமராவிலே படம் எடுக்கின்றார்கள் என்றால் யாராவது குறுக்கே வந்தால் அந்தப் படம் ஆடும். அதுவும் பதிவாகும். அதே போன்று நாடாவில் ஒலிப்பதிவு செய்கிறார்கள் என்றால் குறுக்கே யாராவது சப்தம் போட்டால் அதுவும் பதிவாகத்தான் செய்யும்.

இது போன்று நமக்குள் ஊழ்வினை என்ற நிலையில் நாம் எண்ணும் அந்த எண்ணங்களுடன் சேர்த்து மற்றதும் (தீமைகளோ குறைகளோ) பதிவாகத் தான் செய்யும்.

அந்த நேரத்தில் நாம் எண்ணும் பொழுது சில உணர்வுகள் ஊடுருவி நமக்குள் வருவதும் தெரிய வரும். அதே சமயத்தில் அது நம் போகும் காரியங்களுக்குத் தடைப்படுத்தும் உணர்வாக வந்து விடும்.

1.தடைப்படுத்தும் உணர்வோ சாபமிடும் நிலையோ நாம் நுகர்ந்த பின்
2.அடுத்து நாம் ஒரு நல்ல காரியத்திற்குச் செல்கிறோம் என்றால்
3.அங்கே அவர்கள் பேசுவதைக் கேட்டாலும் இதுவும் சேர்ந்து அதனுடன் ஜாயிண்ட் ஆகும்
4.எப்படியெல்லாம் கெட்டுப் போக வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்களோ இந்த வேலையெல்லாம் நமக்குள் நடக்கும்

இது எல்லாம் உணர்வின் ஒலி அலைகள் நமக்குள் வரும் பொழுது உயிரிலே பட்டு அதற்குத் தக்கவாறு இந்த மன(ண)மாகி நமக்கே மீண்டும் எதிரியாக வரும்.

இதைத் துடைப்பது யார்…?

இயற்கையின் நிலைகளில் பரிணாம வளர்ச்சி அடைந்தவர்கள் நாம். அதுதான் “பலராம்” – பலருடைய எண்ணங்களை அறியும் சக்தி. அந்த எண்ணங்கள் இயக்கவில்லை… நமக்குள் உண்மைகளை உணர்த்துகின்றது.

அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…? நரசிம்மா…!

எப்பொழுது தீமை என்று உணர்கின்றமோ அது நமக்குள் புகாதபடி பிளக்க வேண்டும் தீமைகளைப் பிளக்க வேண்டும் என்றால்
1.இங்கே புருவ மத்தியிலே… உயிர் வழி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உள்ளுக்குள் அனுப்ப வேண்டும்.
2.தீமை உள்ளே போகாதபடி இது பிளந்து தள்ளிக் கொண்டே இருக்கும்
3.இதுதான் ஆத்ம சக்தி என்பது.

இது எல்லாம் காவியத் தொகுப்புகளில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதன் வழியில் நாம் செய்து பழக வேண்டும். சிறிது நாளைக்குச் செய்து பழகி விட்டால் தன்னிச்சையாக (AUTOMATIC) வந்துவிடும்.

முந்திய பழக்கத்தில் நாம் இருக்கப்படும் பொழுது… யாராவது ஏதாவது சொல்லிவிட்டால் அந்த எண்ணத்திலேயே தான் இருப்போம் ஆத்ம சுத்தி செய்ய முயற்சி செய்யும் பொழுது “இடைவெளியில் அதைத் தடுக்கும்… அதைக் கூட நீங்கள் கவனித்துப் பார்க்கலாம்…!”

ஆனால் சிறிது காலம் யாம் (ஞானகுரு) சொன்ன முறைப்படி ஆத்ம சுத்தி செய்து பழகிக் கொண்டால்
1.உடனே அந்த உணர்வுகள் ஆத்ம சக்தி செய்யும்படி செய்து
2.தீமையைப் பிளக்க வேண்டும் என்ற உணர்ச்சிகள் உங்களுக்குள் தோன்றும்.

அழுக்குத் தண்ணீரில் நன்னீரை ஊற்றும் பொழுது அந்த அழுக்குகள் எப்படிக் குறைகின்றதோ… அதை ஊற்ற ஊற்ற நல்ல தண்ணீரின் அடர்த்தி கூடுகிறதோ…
1.அந்த அந்த ஞானிகள் உணர்வுகளை நமக்குள் போடப் போட அது பெருகும்
2.அது முழுமை அடைந்து விட்டால் “தன்னிலை அடைந்து விட்டது என்று பொருள்…”

செய்து பாருங்கள்.

தீமையை நீக்கும் சக்திகளைக் குருவான உயிரிடம் வேண்டுவது தான் “குருக்ஷேத்திரப் போர் என்பது…!”

 

குருக்ஷேத்திரம் என்பது நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் குருவான (உயிர்) நிலைகள் கொண்டு அது வளர்த்துக் கொண்ட நிலைகளில்
1.நாம் எதை எடுக்கின்றோமோ அந்த நிலைகொப்ப ஞானத்தை உருவாக்கி
2.அவன் உபதேசிக்கும் உணர்வின் நிலைகள் தான் குருவுடன் அணுகி
3.நமக்கு எப்பொழுது துன்பம் வருகின்றதோ அவனை நினைக்கும் போது அந்த ஆற்றல்மிக்க சக்தியை நமக்குள் உருப் பெறச் செய்கின்றது.

இது கீதா உபதேசத்தின் நிலைகள் கொண்டு அன்று கண்ணன் சொன்னது.

நாம் கண்ணிலே பார்க்கப்படும் பொழுது பிறர் செய்யும் தவறை உணர்கின்றோம். அப்படி உணர்த்திய நிலைகள் கொண்டு அவன் நிலைகளிலேயே என்னை இயக்குகின்றது.

ஆகவே என் நிலையைக் காக்க வேண்டும் என்றால் அவன் உணர்வுகள் என் உடலுக்குள் சென்று தீய விளைவுகளாக உருவாக்காதபடி தடைப்படுத்த வேண்டும்.

அப்படித் தடைப்படுத்தும் நிலைகளுக்குத் தான் கீதா உபதேசத்தை அன்று வியாசகர் காட்டினார்.
1.ஓ…ம் இந்த உணர்வின் உணர்ச்சி ஓங்கார நாதம் வானை நோக்கி ஓதுகின்றான்.
2.இந்த உடலுக்குள் இருக்கக்கூடிய பல எண்ண அலைகளை அடக்கி ஓம் என்ற நாதத்தில் உயிரில் சுருதியை ஏற்றி
3.இந்த உடலுக்குள் குருவான உணர்வின் தன்மை கொண்டு விண்ணிலே ஏகி அந்த ஓ…ம் என்ற ஓங்காரத்தைச் செலுத்தி
4.மனித உடலுக்குள் சிற்றலைகளை அமுக்கி உணர்வின் எண்ணத்தை ஓங்கிச் செலுத்தி
5.மெய் உணர்வை ஊட்டிய மகரிஷியின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும் என்று விண்ணை நோக்கி ஏகி
6.அந்த மெய் ஒளியை எனக்குள் சேர்ப்பேன்…! என்ற இந்த உணர்வின் தன்மை கொண்டு
7.எங்கே என்னைத் தாக்க வேண்டும் என்று எண்ணினார்களோ அந்த எண்ணத்தை அங்கேயே வீழ்த்த வேண்டும்.

அம்பைக் கொண்டு அல்ல. புறத்தால் காட்டப்பட்ட அம்பை எய்து அந்த உடலை வீழ்த்துவது அல்ல.

உடலை வீழ்த்த வேண்டும் என்று… அந்த உடலுக்குள் நின்று இந்த உணர்வு இயக்கியதை அங்கே வீழ்த்தி “அவனை நல்லவனாக்க வேண்டும்…” இதைத்தான் குரு எனக்கு உபதேசித்தார்.

குருவே எதிரிகளின் பக்கம் இருந்து அந்த விஷத்திற்குள் சிக்கிய பின் அந்த உணர்வின் சக்திகளை எப்படி நீக்குவது…?

குருவிற்குள் தன்னை அறியாது வந்தாலும் அந்தக் குருவின் நிலையை அவர் அறியாது நுகர்ந்த உணர்வு இயக்கும் நிலைகள் தான்.
1.பாசத்த்தின் வலையில் நாம் சிக்கப்படும் பொழுது குரு என்ற நிலையில் மரியாதை… சகோதரர் என்று மரியாதை…
2.ஆனால் அவர்கள் செய்வதோ தவறு.
3.எனக்குள் இருக்கக்கூடிய வலிமை கொண்டு அவரை வீழ்த்தி விட்டால்… “நான் யாருக்காக வேண்டி வாழ்கிறேன்…!” என்ற
4.இந்த உணர்வின் சோகங்கள் இங்கே தூண்டும் பொழுது தீயதை வளர விடும் நிலையும் நல்லதைக் காக்கும் திறன் இழக்கின்றது.

மனித வாழ்க்கையில் எடுத்துக் கொண்ட இந்தப் பாசத்தின் நிலைகள் எல்லை கடந்து செல்லும் பொழுது நம்மால் அதை வீழ்த்த முடியவில்லை… பலமிழந்த நிலையில் அது நம்மையே வீழ்த்தி விடுகின்றது.

அர்ஜுனன் என்பது சகல வல்லமையும் கொண்ட உணர்வின் நிலைகள் தான். தன் உயிரான நிலைகள் கீதை உபதேசிக்கப்படும் பொழுது
1.நீ எங்கே எடுத்தாலும் என்னிடம் தான் நீ வருகின்றாய்.
2.எதை நினைத்தாலும் அந்தக் கண்ணின் வழி கொண்டு தான் அறிய முடியும்.
3.நீ எதைச் சேர்த்தாலும் அதனின் உணர்வு கொண்டு தான் இந்த உடலில் விளைகின்றது.
4.நீ எதை நினைக்கின்றாயோ அதன் நிலையில் கொண்டு அதுவாகின்றாய்.
5.யார் எதைச் செய்தாலும் என்னிடமே வந்து சேர்வாய்… என் நிலையை நீ அறிவாய் என்று
6.இந்தக் கண்ணின் உபதேசம் கண்ணனின் நிலைகள் கொண்டு நினைவுகள் என்ன ஆகின்றது…? என்று அங்கே காட்டுகின்றார் வியாசகர்

கண்ணன் வெண்ணையைத் திருடுகின்றான் என்ற நிலையில் அவர் அறியாத நிலைகள் அங்கு நுகர்ந்த தீமையான உணர்வின் சத்து இயக்குகின்றது.

அது இந்த உடலை ஆட்டிப்படைக்காதபடி கண்ணின் நிலையை அவனுடன் ஒன்றி கண்ணா…! என்று நாம் எண்ணி… கண்ணின் நிலைகள் உயிரோடு ஒன்றி நம் நினைவை விண்ணிலே செலுத்தி… அந்த மெய் ஒளியின் தொடரை ஈர்க்கும் நிலையாக அதை நமக்குள் ஊட்டிக் கொண்டிருக்கும் குருவான உயிரிடம் வேண்டுவது தான் “குருக்ஷேத்திரப் போர் என்பது…!”

தீமையான உணர்வைச் சுவாசித்து உயிரான குருவிடம் பட்டுத் தான் அதை அறிய முடிகின்றது. இருந்தாலும் அந்தத் தீமையான உணர்வுகள் உடலுக்குள் செல்லாதபடி
1.அருள் உணர்வுகளைப் பெருக்க ஈஸ்வரா என்று உயிரிடம் ஏங்கி… அந்த மெய் உணர்வின் ஆற்றல் மிக்க சக்தியைக் கூட்டப்படும் பொழுது
2.அந்த உணர்வின் தன்மை தான் எனக்குள் வலுக்கூட்டி என் நினைவின் எண்ண அலைகளை உயிரோடு ஒன்றி ஒளியாக்கும் தன்மைகள்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

காட்டிற்குள் குருநாதர் அழைத்துச் சென்றார் பல அனுபவங்களைக் கொடுத்தார்… நான் பெற்றேன். அது எப்படி…? என்ன…? என்று அறிந்து கொள்ளும்படி செய்தார்.

ஒவ்வொரு நிமிடத்திலும் எத்தனையோ வேதனைகளை நான் அனுபவிக்க நேர்ந்தது. வேதனையை நுகர்ந்த பின்
1.என் உடலுக்குள் எப்படி எல்லாம் மாற்றங்கள் ஏற்படுகிறது…?
2.உடலுக்குள் எப்படி எல்லாம் மாறுபடுகின்றது…? என்று அதையெல்லாம் காண்பிப்பார்.

அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டே இருந்தாலும் திடீரென்று சில நேரங்களில் வயிற்றால் போய்விடும்… ஒன்றுமே செய்ய முடியாது.

சாமி எனக்குக் கிரக்கமாக வருகின்றது என்பேன்.

1.நீ இதையெல்லாம் பார்த்தாய் அல்லவா… நுகர்ந்தாய் அல்லவா
2.அது உன் உடலுக்குள் சென்ற பின் மற்ற அணுக்களை எல்லாம் அடக்கி
3.உன் உறுப்புகளைச் சீராக இயக்க விடாதபடி எப்படி இயக்குகிறது…? பார்…!

ஆனால் நீ தவறு செய்யவில்லை.

1.நீ நன்றாகத்தானே சுவாசித்துக் கொண்டிருந்தாய்
2.நீ ஆகாரம் ஒன்றும் சாப்பிடவில்லை.
3.சாப்பிடவில்லை என்றாலும் இது எப்படி வயிற்றால் போகின்றது…?

இப்படித்தான் பல வகைகளிலும் என்னைச் சிரமப்படுத்தி அதை அறிந்து கொள்வதற்குச் சூழ்நிலைகளை உருவாக்கினார்.

அதே போன்று உங்களுக்கும் இத்தகைய சூழ்நிலைகளை உருவாக்கலாமா…? சொல்லுங்கள் பார்க்கலாம்…!

சாதாரணமான நிலைகள் நீங்கள் நுகர்ந்த உணர்வு உங்களுக்குள் சென்ற பின் “சாமி எங்களை ரொம்பச் சோதிக்கின்றார்…!” என்று எண்ணுவீர்கள்.

ஏனென்றால் சாமி சொன்னதைக் கேட்டு அதன் வழி நடந்து வரும் பொழுது சாமியை நினைப்பார்கள்.
1.சாமி சொன்னார் என்று நான் பொறுமையாக இருந்து கொண்டிருக்கின்றேன்
2.ஆனால் என்னை எப்படி எல்லாம் பேசுகின்றார்கள்…?
3.என்னால் பொறுக்க முடியவில்லை… என்னால் தாங்க முடியவில்லை நான் எப்படி இப்படியே பொறுமையாக இருப்பது..? என்று
3.நான் சொன்ன உயர்ந்த கருத்துக்களை விட்டு விடுகின்றார்கள்… பிறர் உணர்வை எடுத்துக் கொள்கின்றார்கள்.
4.நான் சொன்னதை நிறுத்திவிட்டு அதைத் தான் வளர்க்க முடிகிறது.

சந்தர்ப்பங்கள் இப்படி எல்லாம் இயக்குகின்றது. இதை எல்லாம் மாற்றிப் பழக வேண்டும்.

சில குடும்பங்களில் எல்லோரும் சேர்ந்து சாப்பிடும் பொழுது ஒருவருக்கொருவர் கவலையாக… சங்கடமாக… பேசிக்கொள்வார்கள்… சஞ்சலமாகப் பேசுவார்கள்.

சாப்பிடும் போது இப்படிக் கவலையாகப் பேசுவது எல்லாம் என்ன ஆகும் என்றால் அவர்கள் பட்ட வேதனை எல்லாம் அந்த உணவோடு சேர்த்து உடலில் அணுக்களாக உருவாகும்.

1.ஒருவர் சொல்வதை எல்லோரும் உ..ம் கொடுத்துக் கேட்பார்கள்.
2.இது வளர்ந்த பின் சாப்பிடும் பொழுதெல்லாம் அந்த எண்ணங்கள் மீண்டும் வந்து கொண்டே இருக்கும்
3.அந்த அணுக்கள் வளர்ச்சி அடைவதற்கு இதுவே ஏதுவாக மாறிவிடுகின்றது.

ஆனால் சந்தோஷமாகச் செய்து அந்த மகிழ்ச்சியான உணர்வு கொண்டு சாப்பிட்டுப் பாருங்கள். எல்லாமே சந்தோஷமாக இருக்கும்.

ஆனால் சாப்பிடும் போது வேதனையாகச் சொல்லிப் பாருங்கள். அது எத்தகைய வேதனைகளை உருவாக்குகிறது…? என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அதனால் பல நோய்கள் வரக் காரணமாகின்றது.

தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

வேதனையாக இருக்கிறது… முடியவில்லை…! என்று சொல்வதற்குப் பதில் “மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்” என்று சொல்லுங்கள்

 

மனித வாழ்க்கையில் வரக்கூடிய எத்தகைய இன்னல்களாக இருந்தாலும் யாம் சொல்லும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை இணைத்து… நமக்குள் பரிசுத்த நிலைகளை ஊட்டி… மகிழ்ச்சியூட்டும் உணர்வாக நமக்குள் கூட்டி… உணர்வின் எண்ண அலைகளை ஒளியாகக் கூட்டி… இந்த உணர்வின் சக்திகள் உயிருடன் ஒளியாக மாறி வெளியில் சென்ற பின்… எந்தத் தீங்கும் நேராதவண்ணம் தீமையான உணர்வுகளை மாய்த்துத் தனக்குள் ஒளியின் சுடராக என்றும் பதினாறு என்ற நிலையை அடைய முடியும்.

ஆகையினால் யாம் லேசாகச் சொல்கிறோம் என்று யாரும் எண்ண வேண்டாம்.

யாம் கொடுக்கும் நல் வாக்கினை எண்ணி “அதைப் பெற வேண்டும்” என்று ஏங்கி இருந்தீர்கள் என்றால் ஆற்றல்மிக்க சக்திகள் உங்களுக்குள் ஊடுருவி உங்களுக்குள் நன்மைகளை வளர்த்து தீமைகளை விலக்கி ஒளியின் சுடராகப் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.

எல்லாமே வாக்கு தான்…! ஜோதிடம் ஜாதகம் பார்க்கப்படும் பொழுது
1.“கேட்ட நேரம் வருகிறது… ஏழரை நாட்டான் சனி பிடித்திருக்கிறது” என்று அவர்கள் சொன்ன வாக்கினை மனதினிலே ஏற்றி
2.அதன் உணர்வை உருக்கொண்டு உங்கள் வாழ்க்கையை நசித்துக் கொள்கின்றீர்கள் அல்லவா…!

ஆனால் சாதாரண ஒலியின் தன்மை தான் அது.

அவன் சொன்ன வாக்கை மீட்டுவதற்கு “உபசாந்திகளைச் செய்… யாகத்தைச் செய்தால் மீள்வாய்… இந்த ஆலயத்திற்குச் சென்றால் மீள்வாய்…” என்று பல பொருள்களைச் செலவழிக்கச் சொல்வார்கள்.

அதை போல் அல்ல யாம் சொல்வது…!
1.நீங்கள் ஒவ்வொருவரும் யாம் சொன்ன முறைப்படி
2.மெய் ஒளியின் சுடரை எடுத்து ஒளியின் சுடராக உங்களுக்குள் வளரச் செய்யுங்கள்.

இந்த மனித வாழ்க்கைக்குத் தான் சொன்ன குறைகளை மாற்றி அமைப்பதற்குச் செய்யப்பட்ட நிலைகள் தான்
1.ஜாதகங்களையும் சாஸ்திரங்களையும் சொல்லி நீ இதைச் செய்ய வேண்டும் என்று சொல்கின்றார்கள்.
2.ஆனால் “விதிப்படி நடக்கும்…!” என்று இருக்கப்படும் பொழுது கேள்விகளை நடத்தினால் எப்படி மாறும்…?

ஆனால் அதை எப்படி எதன் வழிகளில் நடத்த வேண்டும்…?

நம் உணர்வின் தன்மை ஒளியாக… ஞானிகளின் அருள் வித்தாக நமக்குள் மாற்றி அமைத்தால் தான்… “இந்த வேள்வியை நடத்தினால்தான் மாற்ற முடியுமே தவிர… புற கேள்விகளைச் செய்து அல்ல…!”

அவன் சொன்ன நிலைகளை நாம் எடுப்பது போல மெய் ஞானியின் அருள் வித்தை உங்களுக்குள் வளர்த்து மெய் ஒளியுடன் நீங்கள் செல்ல
1.அன்று ஆதிசங்கரர் சொன்ன அருள் தத்துவத்தை உங்களுக்குள் ஏற்று
2.மெய் ஒளியாக நல்ல உணர்வினை இயக்கக் கூடிய சக்தியாக தனக்குள் துவைதமாக்கி
3.உணர்வின் மன ஒலியாக அத்வைதமாக இயக்கி
4.அத்வைதத்தின் தத்துவமாக என்றும் நம்முடைய பேச்சு மூச்சம் உலகைச் சிருஷ்டிக்கும் சக்தியாக
5.இருளை நீக்கி ஒளியின் சுடராகப் பெறும் தகுதியை நீங்கள் பெற முடியும்.

இது ஆதிசங்கரர் சொன்ன உண்மை நிலைகள்…! அதன் வழியில் நீங்கள் பெற வேண்டும் என்று அந்த ஆசையின் நிலைகள் கொண்டு இதைச் சொல்கின்றேன்.

ஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் கூட்டுத் தியானமும் ஆத்ம சுத்தி என்ற நிலையும் கடைப்பிடித்து உடலிலே எந்த நோயாக இருந்தாலும்… வயிற்று வலியாக இருந்தாலும்…
1,மகரிஷிகளின் அருள் சக்தி அந்த வலி இருக்கும் இடங்களிலே படர்ந்து
2.அந்த வலிகள் நீங்கி நலம் பெற வேண்டும் என்று ஒரு 15 நிமிடம் எண்ணுங்கள்.

கேன்சர் நோய் வந்து விட்டது… உங்களால் முடியவில்லை என்று எண்ண வேண்டாம் முடியவில்லை என்கிற பொழுது… “வேதனை… வேதனை…” என்று எண்ணுவது போல “அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்” என்று எண்ண வேண்டும்.

உடலில் எங்கே கேன்சர் இருக்கின்றதோ அங்கே நினைவைச் செலுத்தி மகரிஷிகளின் அருள் சக்தியால் அந்த வேதனை நீங்கி மகரிஷிகளின் அருள் ஒளி ஆங்கே படர்ந்து மகிழ்ச்சியூட்டும் உணர்வாக எனக்குள் விளைய வேண்டும் என்று… கண்ணைத் திறந்து வானை நோக்கி ஏகி பின் கண்களை மூடி அந்த இடத்திலே நினைவினைச் செலுத்த வேண்டும்.

கண்களை மூடி… கண்களைத் திறந்து இவ்வாறு சிறிது நேரம் செய்ய வேண்டும்.

1.நாள் முழுவதற்கும் ஐயோ வலிக்கிறதே…” என்று வேதனையாகச் சொல்வதற்குப் பதில்
2.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வைப் பெற வேண்டும் என்று சொல்லுங்கள்.

இந்த வாக்கின் சுடரின் தன்மை உங்களுக்குள் அந்த மெய் ஒளியினை உணர்த்த… அந்தத் தீய நிலைகளை மாற்ற… அதனின் தன்மை கொண்டு “நன்மை பயக்கும் நிலையை” நாம் பெற முடியும்.

நாம் எடுத்துக் கொண்ட நினைவு தான் சுவாசமாகி… அந்தச் சுவாசத்தின் உணர்வு தான் நமக்குள் இயக்கமாகி… அந்த உணர்வின் சக்தி உறைந்து நமக்குள் விளைந்து பரிணாம வளர்ச்சியில் வந்திருக்கின்றோம்.

1.தீமைகளிலிருந்து மீட்டிட ஞானிகள் காட்டிய அருள் வழியினைக் கடைப்பிடித்து அதைப் பெற வேண்டும் என்று பிராத்திக்கின்றேன்.
2.ஒரு நாளைக்கு ஆயிரம் முறை கூட அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணலாம்.

பத்திரிகையைப் பார்க்கின்றோம் டிவியைப் பார்க்கின்றோம். அதில் எத்தனையோ உணர்வுகளைத் தெரிந்து கொள்கின்றோம். அடுத்த கணமே ஆத்ம சுத்தி செய்து எங்கள் பேச்சும் மூச்சும் உலக நன்மைக்குப் பயன்பட வேண்டும் எங்கள் சொல்லும் செயலும் புனிதம் பெற வேண்டும் நாளை நடப்பது அனைத்தும் நல்லவையாக நடக்க வேண்டும் என்று எண்ண அலைகளைப் பரப்ப வேண்டும்.

அப்போது அந்தச் சங்கட உணர்வுகள் உங்களுக்குள் சேராது தடுக்க முடியும்.

நோயாளியைப் பார்த்தாலும் ஆத்ம சுத்தி செய்துவிட்டு உங்களுக்கு “இனி நோய் இல்லை நலம் பெறுவீர்கள்…” என்று நல்ல வாக்கினைச் சொல்லுங்கள்.

உணவு உட்கொள்ளும் பொழுதெல்லாம் ஆத்ம சுத்தி செய்து அந்த அருள் உணர்வுடன் உணவை உட்கொள்ளுங்கள். அருள் உணர்வுகள் உமிழ் நீராகக் கலந்து நன்மை பயக்கும் சக்தியாக மாறும்.

இந்த வாழ்க்கையில் நல்லது என்று பார்க்கும் போது… தீமை என்ற நிலைகளை உணர்த்துகின்றது. அதைத் தெரிந்து தான் நாம் விலகிச் செல்கின்றோம்.
1.விலகிச் சென்றாலும் அந்த உணர்வின் சத்து உடலுக்குள் சென்று நோயாக மாறிவிடுகின்றது.
2.அதை அவ்வப்போது தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அப்படி இல்லாதபடி கடவுள் செய்வார் யாரோ செய்வார் எவரோ செய்வார் ஜாதகம் செய்யும் நல்ல நேரம் செய்யும் என்று அப்படி எண்ண வேண்டியது இல்லை.

1.நல்ல நேரம் எது என்றால்…? “நல்ல உணர்வுகளைச் சேர்க்கும் நேரமே நல்ல நேரம் ஆகின்றது…”
2.மனிதனுக்கு நேரமும் காலமும் ஜாதகமும் ஜோதிடமும் கிடையாது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று மனிதனாக இருக்கின்றோம்… இந்தச் சூரியக் குடும்பம் அழிந்துவிட்டால் அணுக்களாகத் தான் செல்வோம்… பிரபஞ்சத்தில் மிதப்போம். பின்
1.ஏதாவது ஒரு கோளுக்குள் இழுத்துக் கொண்டு போகும்
2.அங்கே அதற்குண்டான உணவு (சத்து) இருந்தால் புழுவாக பூச்சியாக அல்லது கிருமியாக வளர வேண்டி இருக்கும்
3.விஷத்தன்மையாகத்தான் மாற்றிக் கொண்டிருக்கும்.

தாவர இனங்கள் அழிந்து விட்டால் அதை விட்டு வெளியே சென்று விடும். மற்ற கோளுக்குள் செல்கின்றது. ஆனால் எந்தப் பிரபஞ்சத்திற்குள் செல்லும்…? என்று சொல்ல முடியாது.

எல்லாமே அகண்ட நிலையிலிருந்து வளர்ந்தது தான். ஆனால் சூரியன் செயலிழந்தால் பூமி நகர்ந்து ஓடிப் போய்விடும். இதிலிருந்து தப்புவதற்குத் தான் நம் குருநாதர் காட்டிய வழியில் இத்தனை வேலையும் செய்கின்றோம்.

காரணம் இன்று நம் பிரபஞ்சத்தைச் சேர்ந்த நட்சத்திரங்கள் தனக்கென்று தனித்துத் தனித்துச் சூரிய குடும்பங்களாக உருவாகிக் கொண்டிருக்கின்றது.

ஒரு குடும்பத்தில் பிள்ளைகள் வளர்ச்சி அடைந்தால் அவர்களுக்குத் திருமணம் ஆகி தனக்கென்று ஒரு குடும்பம் உருவாவது போல்
1.நட்சத்திரங்கள் தன் வளர்ச்சியில் சூரியனாகும் போது பிரிந்து சென்று விடும்.
2.பிரிந்து செல்லச் செல்ல நாளுக்கு நாள் நம் சூரியனும் செயல் இழக்கும்
3.சூரியனின் ஈர்ப்பில் உள்ள பூமி கரைந்து ஓடும்
4.இதில் உள்ள உயிரணுக்கள் மற்ற உயிரணுக்களுக்குக் குருவாக அமையும்.

பல கோடி ஆண்டுகளுக்கு முன் வியாழன் கோளில் இது போன்றுதான் பிரிக்கப்பட்டு நம் பிரபஞ்சத்திற்கு அது குருவாக வந்தது. அதிலே இன்னும் உயிரணுக்களின் தன்மைகள் நிறைய மாற்றங்கள் உண்டு. ஆனால் இப்போது உயிரினங்கள் அங்கே இல்லை.

அதிலிருந்து வரக்கூடிய உயிரணுக்கள் தான் சிறுகச் சிறுக பிரபஞ்சத்திற்குள் வந்து உயிரணுவாக மாறும் தகுதி கிடைக்கின்றது.
1.வியாழனில் கதிரியக்கப் பொறிகள் ஏற்படுவதால் தான் உயிரணுக்களே உண்டாகிறது.
2.அந்தக் கரு சேர்ந்த பிற்பாடு தான் உயிரணுக்களுக்கு மூலமாகிறது
3.இல்லை என்றால் உயிரணுக்கள் தோற்றமே இல்லை
(சில இதுகள் அதில் இருக்கின்றது… சுருக்கமாக உங்களுக்குச் சொல்லிப் பதிவு செய்கிறேன்).

ஆகவே… அண்டத்தில் இருக்கும் உணர்வுகள் அனைத்தும் நம் உடலான இந்தப் பிண்டத்திற்குள் இருக்கின்றது. மகரிஷிகளின் அருளாற்றலைப் பெற்று உயிருடன் ஒன்றி… நுகரும் உணர்வுகளை எல்லாம் ஒளியின் சுடராக நாம் மாற்றி விட்டால்
1.அகண்ட அண்டத்தில் எங்கு வேண்டுமென்றாலும் நாம் செல்ல முடியும்
2.”என்றும் பதினாறு” என்று இந்த வளர்ச்சி… வேகா நிலை அடைகின்றது… எதிலுமே நம் உயிரான்மா வேகாது.

நம் 2000 சூரியக் குடும்பத்தையும் முதலிலே வட்டமிடும். பின் இதைக் கடந்து மற்ற 1000, 2000, 3000 என்ற சூரியக் குடும்பங்களின் கூட்டமைப்பிற்குள் செல்லும்.

ஆரம்பத்தில் இருண்ட உலகமாக இருந்து அதிலிருந்து வளர்ச்சி பெற்று ஒளியின் சிகரமாக அண்டம் வளர்ந்தது,,, எத்தனையோ கோடி வருஷங்களாக வளர்ந்தது.

எல்லாமே ஒளியாக மாறி விட்டால் அதற்கப்புறம் “மனித இனங்களை ஒவ்வொன்றாகச் சீக்கிரமாக ஒளியாக மாற்றும் நிலை வரும்…” ஒளியின் சுடராக ஒளிக்குள் எல்லாமே இது மாறும். எப்படி எத்தனையோ ஆண்டுகள் வளர்ச்சியின் பாதையிலே வந்து கொண்டிருக்கிறது.

ஆதிமூலம் என்ற உயிர் “மனிதரான பின் முழு முதல் கடவுள்…!” இதை ஞானிகள் நமக்கு தெளிவாக்கி உள்ளனர். உலகில் உள்ள அனைத்துமே அடக்கி ஆளும் சக்தி பெற்றது
1.பிரபஞ்சத்தில் இருப்பதை அடக்கி ஆளும் தன்மையைப் பெற்று ஒளியின் சரீரமாக ஆகிவிட்டால் முழுமை பெறுகின்றது
2.மற்ற அகண்ட அண்டத்திலிருந்து வரும் எதையுமே தனக்குக் கீழ் கொண்டு வர முடியும்

அப்படி ஆனது தான் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலமும்…!

ஆறாவது நிலையிலிருக்கும் நாம் பத்தாவது நிலையை அடைதல் வேண்டும்

 

மிளகாயை மற்ற பொருள்களுடன் இணைத்து அதை எப்படிச் சுவையாக்குகின்றோமோ இதைப் போல
1.சர்வத்தையும் சுவையாக மாற்றிய அந்த அருள் ஞானிகள் அருள் வாக்கின் உணர்வை நாம் சுவாசித்து
2.நாம் கேட்டறிந்த பிறர் சொன்ன வேதனையான உணர்வுகளுக்குள் அதைக் கலந்த உடனே அந்த விஷம் தணிந்து
3.குழம்பைச் சுவையாக ஆக்குவது போல நம் உடலுக்குள்ளும் சுவையாக ஆக்க முடியும்.

நம் உடலோ விஷத்தை மலமாக நீக்கிவிட்டு நல்ல உணர்வின் தன்மை உடலாக எப்படிச் சேர்த்ததோ இந்த உணர்வின் நிலைகள் கொண்டு ஞானியின் அருள் வித்தைத் தனக்குள் செலுத்தி இந்த உணர்வின் எண்ண அலையாக தனக்குள் வளர்த்து “ஆறை ஏழாவதாக ஆக்கப்படும் பொழுது சப்தரிஷி…!”

நாம் எடுக்கும் இந்த உணர்வுகள்
1.அந்த நாதத்தின் தன்மை தனக்குள் உணர்வாக வடிக்கப்பட்டு
2.அதை ரிஷியாக்குவது… சிருஷ்டிப்பது… அதுதான் ரிஷி…!

இப்படித்தான் ஞானிகள் பெற்றார்கள். அந்த ஏழாவதைத் தனக்குள் எட்டாவதாக விளையச் செய்ய வேண்டும்.

ஒரு மரம் எப்படி நல்ல உணர்வை எடுத்துத் தன் உணர்வாக எடுத்துக் கொள்கின்றதோ இதைப் போல
1.நமக்குள் தீமை நமக்குள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.அந்த உணர்வின் ஆற்றல் என் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எனக்குள் இருக்கும் ஜீவாத்மா பெற வேண்டும் என்று இப்படிக் கலக்கச் செய்யும் பொழுது
4.இந்த வாழ்க்கையில் நம்மை அறியாமலே வரும் இடையூறுகள் வேதனையை ஊட்டும் அந்த உணர்வுக்குள் கலந்து கலந்து கலந்து கலந்து
5.அந்த செல்களை மாற்றிவிட்டால் வித்தாக அது விளைகின்றது.

உதாரணமாக வேப்பமரம் தன் கசப்பை மட்டும் தான் அது எடுத்துக் கொள்கிறது… மற்றதைத் தள்ளி விடுகின்றது. ஒரு ரோஜாச் செடி அதனுடைய நறுமணத்தை மட்டும் எடுத்துக் கொள்கின்றது. கசப்பைத் தன்னை அணுக விடாதபடி தடுத்துக் கொள்கிறது.

இதைப் போன்று தான் எட்டாவது… எட்டுக் கோளின் சக்தியின் தன்மையை நமக்குள் உணர்வின் சத்தாக எட்டாவதாக ஒளியின் சுடராக வளரும் பொழுது
1.யாராவது கெடுதலாக எண்ணிக் கொண்டு நம்மிடம் வந்தால் அந்த உணர்ச்சிகள் உந்தி என்னை இயக்காத வண்ணம் பாதுகாக்கும்.
2.இவ்வாறு செய்த இந்த உணர்வின் தன்மையை உயிருடன் ஒன்றி ஒளியாக மாறும் பொழுது ஒன்பதாவது நிலை… இது காயத்ரி.
3.எனக்குள் தீமை அணுகாது நிலையை உருப் பெறச் செய்யும் நிலை வரும் பொழுது… உடலை விட்டுச் செல்லும் பொழுது தசமி பத்தாவது நிலை.

இந்த உடலில் எட்டாவது நிலையாக இருந்து வெளி வந்தது போல
1.வெளியிலே இன்னொரு உடலுடன் இருக்கக்கூடிய ஆன்மா என்னைக் கவர வந்தால்
2.அது தன்னை அணுகாது விரட்டி விட்டு ஒளியின் சுடராகத் தனக்குள் ஆக்கித் தான் விண் செல்வதே கல்கி.

விண்ணிலிருந்து வரக்கூடிய ஆற்றல்மிக்க சக்தியை… இந்த உடலுக்குள் எப்படி எட்டோ அதைப்போல மற்ற எட்டுக் கோளின் சக்தியை ஒளியின் சுடராக மாற்றுவது பதினெட்டு.

இங்கே எட்டு உடலுக்குள் எட்டு வெளியே வரக்கூடிய எட்டுக் கோளின் ஆற்றலின் உணர்வுகள் தாக்காதபடி ஈரெட்டு பதினாறு.
1.இங்கேயும் எட்டாக விளைந்து
2.எட்டாகத் தான் வெளியே சென்றாலும் உணர்வின் ஒளியாக மாறும் பொழுது ஈரெட்டு பதினாறு… என்றும் பதினாறு
3.துருவ மகரிஷியைத் தான் மார்க்கண்டேயன் என்று காட்டப்பட்டது.

அகஸ்தியன் துருவத்தைக் கண்டுணர்ந்து துருவத்தின் ஆற்றலைத் தனக்குள் படைத்து ஒளியின் சுடராக இன்றும் மனிதனுக்கு உணர்வின் எண்ண ஒளியாகக் காட்டிக் கொண்டிருப்பது தான் அந்தத் துருவ நட்சத்திரம்.

அந்தத் துருவத்தின் நிலைகளைத் தான் கதைகளாக எழுதி இந்த உணர்வினை எட்டும் நிலைகளில் அதைத் தனக்குள் சிருஷ்டிக்கும் அந்த என்றும் பதினாறு… ஒளியின் தொடராக… ஒளியின் சுடராகப் பெற்றதை மார்க்கண்டேயன் கதையாகத் துருவ மகரிஷியினைக் குழந்தையாகக் காட்டி… அது வளர்த்துக் கொண்ட நிலையை… அகஸ்தியனின் வாழ்க்கை நிலைகளைச் சித்தரித்துக் காட்ட மார்க்கண்டேயனைக் காட்டினார்கள்.

இது எல்லாம் மெய் உணர்வுகள்…! ஆனால் நான் படிக்காதவன்… எந்தப் புத்தகத்தையும் படித்து விட்டு இதைச் சொல்லவில்லை. ஞானிகளுடைய உணர்வுகளைக் கவர்ந்து… உணர்ந்து… அதைத்தான் வெளிப்படுத்துகின்றேன்.

1.குருநாதர் எனக்குக் காட்டிய அருள் உணர்வுகளை அந்த வித்தினை உங்களுக்குள் பரவச் செய்யும் பொழுது
2.இதை நீங்கள் நினைவு கூர்ந்து எடுத்தால் உங்களைக் காக்க உங்கள் எண்ணம் உதவும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் பரிவு பண்பு அன்பு கொண்டவர்களாக இருக்கின்றோம். ரோட்டிலே நாம் செல்லும் போது ஒருவர் “ஐயா பசிக்கிறது…” என்று சொல்கின்றார். அந்த வேதனையை நாம் நுகர்கின்றோம். இரக்க உணர்வு கொண்டு அவருக்கு உதவியும் செய்கின்றோம்.

எந்த வேதனை கொண்டு அந்தச் சோக குரலிலே அவர் வெளிப்படுத்தினாரோ சோக உணர்ச்சியைத் தூண்டும் அணுவாக நம் உடலில் விளையத் தொடங்குகிறது… இது சிவமாகின்றது.

இன்னொரு பக்கம் கோபமாக ஒருவர் உதைக்க வேண்டும் என்று எண்ணுகின்றார் அதை நாம் கண்களில் பார்க்கின்றோம்.. “ஓம் நமச்சிவாய…” நம் உடலில் இது இணைகின்றது. அடுத்தாற்போல்
1.வீட்டில் நம் குழந்தை ஏதாவது சொன்னபடி கேட்கவில்லை என்றால்
2.இந்த உணர்ச்சிகள் தூண்டி அவனை உதைக்கும்படி செய்கிறது.

இப்படி நம் வாழ்க்கையில் ஒவ்வொன்றும் சேர்த்துச் சேர்த்து சிவமாகின்றது (உடலாக்கப்படுகிறது). ஆனால் மனிதனாக ஆன நிலைகள் பரசுராம்…!

ரோட்டிலே வேதனைப்படுகின்றார் என்று தான் உதவி செய்தோம். ஆனால் அதைத் தூய்மைப்படுத்த வேண்டும் அல்லவா.

ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரிடம் வேண்ட வேண்டும்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
2.அந்த வேதனைப்பட்ட உணர்வுடன் இதைச் சேர்த்து அதைத் தணித்தல் வேண்டும்
3.துருவ நட்சத்திரத்தின் அணுவாக மாற்றுதல் வேண்டும்.. இதை உடலாக மாற்ற வேண்டும்.

சொல்து அர்த்தமாகிறதல்லவா….!

ஆக அது போன்ற சந்தர்ப்பங்களில் நம் நினைவுகள் எப்படி இருக்க வேண்டும்…?

மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் அவர்கள் வேதனையில் இருந்து விடுபட வேண்டும் என்று “இந்த உணர்வின் ஒலியைப் பரப்புதல் வேண்டும்…” (இது முக்கியம்)

வேதனைப்படுகிறார் என்று உணவு கொடுத்தாலும் அது எவ்வளவு நேரத்திற்கு உதவியாக இருக்கும். அன்று ஒரு நேரம் தான் அது பசி அடங்கும் அடுத்து அவனுக்கு நாம் நிவர்த்தி செய்ய முடியுமா…? முடியாது.

ஆகவே அவருக்கு அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று
1.அவருடைய வேதனை உங்களுக்குள் வராதபடி தடுத்துக் கொள்ள வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவாய்… உன் எதிர்காலம் சிறந்து இருக்கும்… நீ நன்றாக வாழ்வாய் என்ற
3.இந்த ஞான வித்தை அங்கே போட்டு விட வேண்டும்.
4.அவனுக்கு அந்த எண்ணம் வந்து அதை எண்ணினால் அவனுக்கு அது கிடைக்கும்.
4.எண்ணவில்லை என்றால் அவனுக்கு அது கிடைக்காது… ஆனால் இந்த வித்தை நாம் அங்கே ஊன்ற வேண்டும்.

இதே போன்றுதான் நண்பர்களுக்குள் ஒருவருக்கொருவர் பழகி வரும் பொழுது நண்பர் நோய்வாய்ப்பட்டு விடுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். உடனே நாம் என்ன செய்கின்றோம்…? என்ன…? ஏது…? என்று விசாரிக்கின்றோம்.

உயிரிலே பட்டபின் நாம் சோர்வடைந்து விடுகின்றோம். அப்போது சோர்வடைச் செய்யும் அணுவாக உடலில் விளைந்து விடுகின்றது. மனித உடலில் விளைந்தது அவர்கள் எத்தனை வேதனைப்பட்டார்களோ அதை எடுத்து நமக்குள் மீண்டும் விளையத் தொடங்குகிறது.

விளையாதபடி தடுக்க வேண்டும் என்றால் அவருடைய நோயைப் பற்றி விசாரித்த அடுத்த கணமே ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்ட வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று இதை இணைத்துக் கொண்டு வர வேண்டும்.

ஒரு இரண்டு நிமிடமாவது இவ்வாறு எண்ணிப் பழகுதல் வேண்டும் செய்து முடிந்த பின் நண்பனுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்… அவர் உடல் நலம் பெற வேண்டும்… என்று எண்ணிவிட்டு “நீ நலம் பெறுவாய்…” என்று வாக்கினை அங்கே பதிவு செய்ய வேண்டும்.

இப்படிச் செய்யப்படும் பொழுது அருள் உணர்வு கலந்து வலிமை பெற்றதாக நமக்குள் சேர்கின்றது. அதை நீங்கள் எடுப்பதற்கு இந்த உபதேசத்தின் வாயிலாக உயர்ந்த சக்தியைக் கொடுக்கின்றோம்.

திட்டியவனைத் திருப்பி எண்ணும் பொழுது பதட்டமும் கோபமும் வருகிறது. அதே போன்று அந்த அருள் ஞானிகள் சக்தியைப் பெறுவதற்கு உங்களுக்குள் இப்போது பதிவாக்குகின்றேன் (ஞானகுரு).
1.திருப்பி நீங்கள் அதை நினைவாக்கும் பொழுது கண்ணுக்கு வருகின்றது
2.அந்த ஞானிகள் உணர்வின் தன்மையை நீங்கள் எடுக்கின்றீர்கள்.
3.எடுத்து உங்கள் குணங்களுக்குள் இதனைக் கலந்து பழகுதல் வேண்டும்
4.அப்படிக் கலந்து பழகினால் தான் வரும் தீமைகளை அடக்க முடியும்.
5.இதை உங்கள் உடலாக… சிவமாக ஆக்க வேண்டும்.

நோயைப் பற்றி விசாரித்துத் தனித்த நிலையில் எடுத்துக் கொண்ட பின் அதற்கப்புறம் வீட்டிற்குச் சென்று நண்பர் நன்றாக வேண்டும் என்று நினைத்தோம் என்றால் அது சரியாக வராது.

ஏனென்றால்
1.முதலில் கேட்டுப் பதிவானது உடலில் அணுவாக விளையத் தொடங்கும்
2.இரண்டாவது… அதை சரி பண்ணிக் கொண்டு வர முடியாது.

ஒரு செடி விளையப்படும் பொழுது அந்தச் செடியுடன் உரத்தை இணைத்து விட்டால் நன்றாக இருக்கும். அது போல் தீமை நமக்குள் வளராதபடி தடுக்க வேண்டும் என்றால் அவ்வப்போது ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

அது தான் வாழ்க்கையே தியானம் என்று சொல்வது…!

துருவ நட்சத்திரத்தினைப் பற்றுடன் பற்றும் பொழுது தீமைகள் நமக்குள் உருவாகாதபடி உடனுக்குடன் தடுக்கப்படுகிறது.

எத்தகைய சந்தர்ப்பமாக இருந்தாலும் அதிலே முதலில் நாம் கேட்டது அல்லது பார்த்தது தவறிப் போய் உடலுக்குள் அணுவாக உருவாகும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.
1.ஆனால் அது விளைவதற்கு முன் ஒரு இரண்டு நிமிடமாவது
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வினைச் சேர்த்து அதை மாற்றிக் கொண்டு வர வேண்டும்.

இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

வளர்ச்சிக்குக் காந்த சக்தி மிகவும் அத்தியாவசியம்

 

உதாரணமாக ஒரு டேப்பின் நாடாவிலே நாம் பதிவு செய்யும் பொழுது அதற்குள் காந்தப்புலன் இருக்க வேண்டும். நாம் எடுக்கும் உணர்வை அது ஈர்க்கும் ஆற்றல் இருந்தால் தான் அதிலே பதிவாகும்.
1.அந்தக் காந்தப்புலனுக்குள் மற்ற உணர்வின் சத்தைக் கலக்கப்படும் பொழுதுதான் உணர்வின் எண்ண அலைகளை அதற்குள் பதிவு செய்கின்றது.
2.காந்தம் இல்லை என்றால் ஈர்க்கும் திறன் இழக்கின்றது.

ஒரு குளவி புழுவைத் தன் விஷத்தால் கொட்டுகின்றது. குளவிக்குள் இருக்கும் விஷத்தின் அமிலத்தை அது கொட்டும் பொழுது “புழுவிற்குள் இருக்கக்கூடிய காந்தப்புலன்” அதைக் கவர்ந்து கொள்கின்றது.
1.விஷத்தின் துடிப்பின் நிலைகள் கொண்டு
2.புழுவிற்குள் இருக்கக்கூடிய காந்தப்புலன் துடிக்கும் நிலையான இயக்கத்தின் தன்மை கொண்டு வருகின்றது.

ஒரு மத்தாப்பை நாம் நெருப்பை இட்டுக் கொளுத்தினோம் என்றால் அதில் சேர்த்துக் கொண்ட உணர்வின் பொறிகளுக்கொப்ப ரூபங்கள் பல பல நிலைகளாக மாறுகிறது.

அதைப் போன்று… பொதுவாக உயிரினங்கள் தாவர இனத்தை மணமாக எடுத்துக் கொண்டாலும் அந்த மணத்தின் சத்தின் தன்மையை…
1.தனக்குள் நுகர்ந்த சத்தை… உணர்வை… ஒலி ஒளியாக உயிரினங்கள் வளர்க்கும் நிலைகள் கொண்டு
2.தான் எடுத்துக் கொண்ட உணர்வின் சத்துக்கொப்ப விஷத்தன்மையாக வளர்க்கப்பட்டு
3.அந்த விஷத்தைத் தான் குளவி புழுவின் மீது கொட்டுகிறது.

அப்பொழுது புழுவின் உடலில் இருக்கும் காந்த செல்கள் அந்த உணர்வுகளைக் கவர்ந்து அந்த உணர்வுக்கொப்ப “உயிரின் ஓட்டத்தால் காந்தப் புலனின் இயக்கத் தொடர்கள் வரிசைகளில் இயங்கப்படும் பொழுது” இந்த உணர்வுக்கொப்ப உணர்வின் இயக்கங்கள் அந்த உடலில் இருக்கும் உறுப்புகளை அதனை அமைக்கின்றது.

ஆகவே எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்பத் தான் ஒவ்வொரு செயலின் தன்மையும் அமைகின்றது.

இதனால் தான் குளவி புழுவை எடுத்து அதற்குள் நஞ்சைப் பாய்ச்சும் போது அதனுடைய துடிப்பைத் தாங்காது “நினைவலைகளைக் குளவியின் பால் செலுத்துகின்றது புழு…”

குளவி தனக்குள் சுரக்கும் உமிழ் நீரை மண்ணிலே கொட்டி மண்ணைப் பிசைகின்றது. அதற்குள் தன்னுடைய சப்தத்தை டைங்…டைங்…டைங்… டும்…டும்…டும்… என்ற நிலைகளிலே இந்த உணர்வின் நாதங்களைப் பதியச் செய்து குளவி தன்னுடைய நினைவலைகளை… தன்னுடைய ஒலிகளைப் பரப்பச் செய்கின்றது.

கல்லானாலும் சரி… மணலானாலும் சரி… அது அது தனது காந்தப்புலனின் நிலைகள் கொண்டுதான் தன் உணர்வின் சத்து எதனுடன் எது கலந்ததோ அது தனக்குள் இட்டு பூமியின் காந்தப்புலனுடன் ஐக்கியமாகி அந்த ஐக்கியத்தின் தொடர் கொண்டு அது வளர்கின்றது.

அதைப் போல மண்ணுக்குள் அது தனித்திருந்தாலும் குளவி தனக்குள் எடுத்துக் கொண்ட தாவர இனச் சத்தைத் தன் உடலாக மாற்றினாலும்
1.உணர்வின் ஒளி ஒலி என்ற நிலைகள் கொண்டு அது வடித்து
2.உணர்வின் நாத ஒலிகளாகச் சுரக்கச் செய்யும் இந்த உணர்வின் தன்மையை தன் உணர்வின் தன்மை எதுவோ
3.தன் எண்ணத்தின் நிலைகள் கொண்டு இந்த மண்ணிற்குள் பதிவு செய்து உருட்டுகின்றது.

உருட்டப்பட்ட இந்த மண்ணால் கூடு கட்டும் பொழுது அந்த கூட்டிற்குள்ளும் தன் நாத சுரப்பியின் தன்மையை அது இயக்கச் செய்கின்றது.

நாம் எதையாவது தட்டியவுடனே அதிர்வுகள் எப்படி ஏற்படுகின்றதோ… இதைப் போன்று நாதத்தின் தன்மையை சுருதியால் தட்டிய உடனே அது உருப் பெறும் சக்தியாக “அந்தக் கூட்டைக் கட்டுகின்றது…”

பின் புழுவைக் குளவி தூக்கி வருகின்றது. அது எடை கூட இருந்தாலும் அதைப் பலவீனப்படுத்துவதற்காக ஒரு கொட்டு கொட்டுகின்றது. அதனுடைய துடிப்பைச் சாந்தப்படுத்தித் தன் உணர்வின் நிலைகள் கொண்டு தன் சக்திக்கு மீறிய புழுவையும் தூக்கிக் கொண்டு வந்து கூட்டுக்குள் வைக்கின்றது.

கூட்டிற்குள் வைத்த பின் மீண்டும் தன் விஷத்தின் தன்மையை அதன் உடலில் பாய்ச்சுகின்றது. புழுவின் மேல் தோல் சருகுபோன்று ஆகின்றது அந்தச் சருகிற்குள் புழுவின் தசைகள்… தசைகளை உருவாக்கிய அணுக்கள் இதற்குள் சிக்கிக் கொள்கின்றது.

1.புழுவின் இயக்கத்திற்கு உயிரான துடிப்பின் இயக்கம்
2.அதற்குள் இருக்கக்கூடிய காந்தம்… அது வெப்பம் ஏற்படுத்தும் நிலைகள்… அது இயக்கச் சக்தி
3.இந்த விஷத்தின் தன்மை கொண்டு வரும் பொழுது இந்த செல்களின் துடிப்பு கொண்டு உயிரின் துடிப்பு அதிகமாகின்றது.

அதிகமான துடிப்பு ஏற்படும் போது கூட்டிக்குள் தான் எடுத்துக் கொண்ட உணர்வின் நிலைகள் மோதுகின்றது. அந்த மோதலின் தன்மை கொண்டு இயக்கச் சக்தியினைத் தொடர்ந்து
1.புறநிலையில் பறக்கும் காந்தப் புலனின் சக்தியைத் தனக்குள் எடுத்து உயிரின் ஊட்டச்சத்திற்கு தனக்குள் இயக்கச் சக்தியைச் சமநிலைப்படுத்தி
2.அது எடுத்துக் கொண்ட உணர்வின் நிலையைத் தனக்குள் வெப்பமாக எடுத்துக் கொண்டு
3.புழுவின் உடலை உருவாக்கிய ஆற்றல்மிக்க காந்தப்புலனின் செல்களில் குளவியின் சத்தான விஷத் தன்மைகள் பட்டதனால்
4.புழுவின் தசைகள் இந்த உணர்வின் நிலைகள் கொண்டு ஆவியாக மாறி
5.ஆவியின் தன்மை மீண்டும் உயிரின் காந்த ஈர்ப்பிற்குள் வந்து இது உறைந்து
6.அந்த உணர்வின் பொறிகளுக்கொப்ப செல்கள் விளைந்து குளவியின் ரூபம் பெறுகின்றது.

இப்படிக் குளவியாக ரூபம் பெற்றபின் தாய்க் குளவிக்கு எப்படி உமிழ் நீர் சுரந்ததோ அதைப் போன்று இதற்குள்ளும் உமிழ் நீர் சுரக்கின்றது. அதனின் துணை கொண்டு அடைப்பட்டிருந்த மண் கூட்டினை இளக வைத்து… குடைந்து… துவாரமிட்டு… தன்னிச்சையாக குளவியாக வெளியே வருகின்றது.

ஆனால் இதற்கு யார் சொல்லிக் கொடுத்தது…? யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை.

அந்தத் தாய்க் குளவி எதைச் செய்ததோ மீண்டும் இந்தக் குளவி அதையே செய்யத் தொடங்குகிறது. “அதற்குள் இருக்கக்கூடிய உணர்வின் இயக்கம் தன் நினைவலைகளை இயக்கி அவ்வாறு அதைச் செய்யச் செய்கின்றது…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒருவருக்கு நன்மைகளைச் செய்கின்றோம்… அதனால் நாம் சந்தோஷப்படுகின்றோம். ஆனால் நம்மிடம் உதவி பெற்ற அந்த மனிதனோ அவருடைய சந்தர்ப்ப பேதத்தால் தவறு செய்கின்றார் அல்லது வேதனைப்படும்படியாக ஒரு செயலைச் செய்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்

வேதனை என்பதே விஷம். விஷத்தை உட்கொண்டால் எப்படி மயங்கச் செய்யுமோ இருளடையச் செய்கின்றதோ சிந்திக்கும் தன்மையையும் இழக்கச் செய்கின்றதோ இதைப் போன்று நாம் வேதனையான உணர்வுகளை நுகர்ந்தால் சிந்தனை குறைகின்றது… நம் சொல்லின் தன்மையும் மறைந்து விடுகின்றது.
1.மறைந்த பின் எவ்வளவு தான் நல்ல உபதேசங்களைக் கொடுத்தாலும்
2.சரியான வழியைச் சொன்னாலும் கேட்க மாட்டார்கள்.

பாலில் விஷம் பட்டால் குடிப்போரை அது மயங்கச் செய்யும். நல்ல பாலை அதிலே அதிகமாக ஊற்றும் பொழுது அந்த விஷத்தின் தன்மை குறையும்.

அதாவது ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் பட்டால் அந்தக் குடத்தில் உள்ள பால் அனைத்தும் வீணாகி விடுகிறது. அந்தப் பால் முழுவதுமே விஷம் ஆக்கிரமித்துக் கொள்கின்றது.
1.ஆயிரம் குடம் நல்ல பாலை அதிலே ஊற்றினால் விஷம் சிறுத்து விடுகிறது
2.அந்த விஷம் பாலிற்கே வீரிய சக்தி கொடுக்கின்றது

அது போல் ஆயிரம் நல்ல குணங்களை நாம் எடுத்தால் தான் ஒரு தடவை வேதனைப்பட்ட நிலைகளை நல்லதாக்க முடியும்.

இல்லை என்றால் வேதனை தாங்காது… தாங்குமோ…? அதற்குண்டான மனமில்லை. வேதனையே ஆக்கிரமிக்கும் சக்தியாக மாறுகின்றது வேதனை என்ற விஷத்தை நுகரப்படும் பொழுது கண்களைப் பார்த்தால் கரு நீலமாகத் தெரியும்… ஒளி மங்கியே தெரியும்.

இத்தகைய வேதனைப்பட்டு விட்டால் ஒரு புத்தகத்தையோ அல்லது ஒரு கணக்கையோ பார்த்துப் படிக்க வேண்டும் என்று
1.அந்த எழுத்துக்களைப் பார்த்தாலும் அந்த எழுத்துக்கள் சீராகத் தெரியாது
2.அதைப் படித்தாலும் சிந்திக்கும் தன்மை இழந்து தப்புத் தப்பாகத் தான் படிக்க வேண்டி வரும்.

இதை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்…?

அதிகாலை துருவ தியானத்தில் எடுத்துப் பழகிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் வலிமைப்படுத்த வேண்டும்

ஆக… ஒருவருக்கு நாம் பல உதவிகளைச் செய்தாலும் அவர் தவறான வழியில் செயல்படும்பொழுது அதைக் கண்டு நாம் வேதனைப்படுகின்றோம்.

சந்தர்ப்பம் அதை நுகரப்படும் பொழுது வேதனை உருவாக்கும் அணுவாக உடலில் உருவாகின்றது அந்த வேதனையான அணு உருவாவதற்கு முன்
1.பிறர் படும் வேதனைகளைப் பார்த்த உடனே
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஈஸ்வரா என்று
3.புருவ மத்தியில் இடைமறித்து உயிருடன் ஒன்ற வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஈஸ்வரா என்று சிறிது நேரம் அதை ஈர்க்க வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… ஜீவான்மா பெற வேண்டும் என்று நினைவின் ஆற்றலை உடலுக்குள் செலுத்த வேண்டும்.

அப்படிச் செலுத்திய பின்… நம்மை வேதனைப்படும்படி யார் செய்தார்களோ அவர்களை அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும் பொருள் காணும் சக்தி பெற வேண்டும் தெளிந்த மனம் அவர்கள் பெற வேண்டும் என்று
1.நாம் அவனைப் பற்றி எண்ணி வேதனைப்பட்ட உணர்வை
2.இவ்வழியில் நமக்குள் இணைத்து அந்த அணுவாக நமக்குள் மாற்ற வேண்டும்.

ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய… நமது உயிர் “ஓ” என்ற ஜீவ அணுவாக மாற்றுகின்றது ஆனால் உற்றுப் பார்த்து வேதனை என்ற உணர்வு வந்தவுடனே விஷத்தின் தன்மை அதிகம்.

ஆனால் அந்த விஷத்தை முறிக்கும் வல்லமை பெற்றது நட்சத்திரத்தின் ஆற்றல்.

உதாரணமாக விஷத்தின் தன்மை ஒரு மனிதனுக்குள் சாடி விட்டால் எருமை மாட்டின் சாணத்தைக் கரைத்து அதன் மீது இரண்டு கால் பாதங்களை வைத்தால் உடலுக்குள் சென்ற விஷத்தை முறித்து விடுகின்றது.

ஏனென்றால் எருமை மாட்டிற்கு விஷத் தன்மை ஜாஸ்தி. விஷத்தைத் தன் உடலாக ஆக்கிக் கொண்டு நல்லதை அதனுடைய சாணமாக மாற்றுகிறது.

இது எல்லாம் வைத்தியர்கள் தான் கொடுக்கும் மருந்துகளில் பேதிக்கோ மற்ற நிலைகள் அதிகமாகச் சேர்த்துவிட்டால் இந்த நிலை ஆகிவிடும்
1.அப்பொழுது எருமை மாட்டுச் சாணத்தை கரைத்து அதில் சிறிது நேரம் பாதத்தை வைக்கும்படி செய்வார்கள்… அதை முறித்து விடும்.
2.உள்ளுக்குள் சாப்பிட வேண்டியதில்லை… பாதத்தில் வைக்கப்படும் பொழுது அதை முறிக்கும் ஆற்றல் வருகிறது
3.எருமை மாட்டு சாணத்திற்கு விஷத்தை முறிக்கக் கூடிய சக்தி உண்டு
4.நஞ்சினை மாற்றிடும் சக்தியாக அதனுடைய சாணம் வெளிப்படுகிறது

வேதனைப்படும் உணர்வுகளை நாம் எப்போது நுகர்கின்றோமோ அல்லது செவிகளில் கேட்கின்றோமோ அந்த உணர்வின் உணர்ச்சிகள் உந்தி கண்கள் உற்று நோக்கும்… அதே வேதனை உணர்வை நுகரச் செய்யும்

உயிரிலே பட்டு அந்த உணர்வுகள் உடல் முழுவதும் சுழலத் தொடங்கும். உடல் முழுவதும் அந்த வேதனை சுழலப்படும் பொழுது உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களின் அணுக்களிலும் இது சாடி விடுகின்றது.

விஷம் ஊடுருவி எதிலும் கலந்துவிடும்
1.நல்ல குணங்களை அதற்குப்பின் என்னதான் எண்ணி எடுத்தாலும் இந்த விஷம் அந்த நல்ல குணங்களை அடக்கிவிடும்.
2.நீங்கள் எவ்வளவு சொன்னாலும் சரி வேதனைப்படும்படி ஒரு சொல்லைச் சொல்லி விட்டால்
3.அடுத்தாற்போல் “அவர் சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டும்… விட்டு விடுங்கள்… என்று சொன்னால் நீங்கள் கேட்பீர்களா…!
4.உங்களுக்கு என்ன தெரியும்…? என்பீர்கள்.

இது எல்லாம் இயற்கையின் நியதிப் பிரகாரம் இந்த உணர்வின் செயலாக்கங்கள் இப்படித் தான் இயக்கும். அதை எல்லாம் மாற்றி அமைக்கும் வல்லமை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் இத்தனை விளக்கங்களையும் சொல்கிறோம்.

பெரும்பகுதியான மகரிஷிகள் சீடர்களின் உந்து விசையால் தான் விண் சென்றுள்ளார்கள்

 

குடும்பத்தில் உடலை விட்டுப் பிரிந்து சென்றவர்களைக் குலதெய்வங்களாக எண்ணிக் கூட்டு குடும்ப தியானங்கள் செய்து… சப்தரிஷி மண்டலத்துடன் அவர்கள் இணைய வேண்டும் என்று அடிக்கடி இவ்வாறு எண்ணி விண் செலுத்தும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

1.உங்கள் புலனறிவுகளை ஆற்றல்மிக்க சக்தியாக மாற்றுவதற்குத் தான்
2.பௌர்ணமி அன்று உங்களை விண்ணை நோக்கி எண்ணச் செய்து இந்த ஆற்றல் பெறும்படி செய்கின்றோம்.

உங்கள் உயிரை ஈசனாக எண்ணி அந்த உயர்ந்த ஆற்றல்களைப் பெற வேண்டும் என்று குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உங்கள் உயிரை நான் பிரார்த்தித்து
1.விண்ணில் எட்டாத் தூரத்தில் இருக்கும் சப்தரிஷி மண்டலத்துடன் உங்கள் எண்ண அலைகள் கலக்க வேண்டும் என்று
2.இந்த உணர்வினை உந்தப்படும் போது உங்கள் புலனறிவுகள் விண்ணை நோக்கி ஏகுகின்றது.

அப்போது… மனிதனாகி உணர்வினை ஒளியாக மாற்றி விண்ணின் ஆற்றலைப் பெற்ற அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பால் “உங்கள் எண்ணங்கள் ஊடுருவிப் பாய்கின்றது…”

அவ்வாறு எட்டிப் பாயப்படும் பொழுது அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் பெற வேண்டும் என்ற இந்த நினைவினைக் கூட்டி நமக்குள் பழக்கப்படுத்த வேண்டும்.

இப்படிப் பழக்கப்படுத்தினால் உடலை விட்டுப் பிரிந்து சென்ற மூதாதையர்களின் உயிரான்மாக்களை விண் செலுத்தச் செய்து அங்கே இணையச் செய்யும் பொழுது… இன்னொரு உடல் பெறும் நிலைகளை மாய்த்துவிட்டு ஒளியின் சரீரமாக மாறிச் சப்தரிஷி மண்டல சுழற்சி வட்டத்துடன் அவர்கள் சுழல்வார்கள்.

அவ்வாறு சுழலச் செய்த பின் மீண்டும் அடிக்கடி இந்த நினைவினைக் கூட்டி விண்ணை நோக்கி எண்ணும் பொழுது நம் உடலுக்குள் அந்த ஆற்றல்மிக்க சக்தியைப் பெருக்கி
1.அதே உணர்வின் எண்ண நிலைகள் மிதக்கும் நிலையாக புவியின் ஈர்ப்பிலிருந்து மிதக்கப்படும் பொழுது
2.நாம் அனைவரும் ஒன்று சேர்த்த உணர்வின் தன்மை கொண்டு சப்தரிஷி மண்டலத்தை எண்ணி
3.அவ்வாறு ஏங்கிய உணர்வின் எண்ணங்களை “உந்து விசையாக உந்தி”
4.உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மக்களை அந்தத் தருணத்திலேயே நாம் அனைவரும் சேர்ந்து விண்ணுக்குச் செலுத்த வேண்டும்.

அப்படி விண்ணுக்குச் செலுத்தினால்தான் அந்த ஆத்மா அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்.

எந்த ஞானியானாலும் எந்த மகரிஷியானாலும் தன் உடலுக்குள் ஆற்றல்மிக்க சக்திகளைப் பெருக்கினாலும் அந்த உணர்வின் ஆற்றலாக மற்றவருடைய உள்ளங்களிலே அதைப் பதிவு செய்து… அவர்கள் தீமைகளை நீக்கி மகிழ்ச்சியூட்டும் உணர்வின் எண்ண வலுவை அங்கே பெருக்கச் செய்து… மெய் வழியின் உணர்வுகளை வளர்க்கச் செய்து… “அதன் வழி தான் விண் சென்றார்கள்…”

1.போகனோ அகஸ்தியனோ வியாசகரோ வான்மீகியோ இது போன்ற மெய்ஞானிகளோ
2.மனித உள்ளங்களில் தீமைகளை நீக்கிடும் உணர்வின் ஆற்றலைப் பெருக்கச் செய்து வளர்த்துக் கொண்டு
3.அவர்கள் வெளியிலே செல்லும் பொழுது சீடனின் தன்மை கொண்டு விண்ணிலே உந்தித் தள்ளி
4.அந்த உணர்வினைப் பெறும் தகுதியை ஏற்படுத்திவிட்டுச் சென்றார்கள்.

அவர் வழியிலே தான் நாமும் அங்கே சென்றடைய முடியும். ஆகவே அவர்கள் காட்டிய நல்வழியிலே நாமும் செயல்படுவோம்… விண் செல்வோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வைரம் எவ்வாறு நஞ்சின் தன்மை எதுவாக இருப்பினும் அது ஒளியாக மின்னுகின்றது. நஞ்சின் தன்மை இதற்குள் உயிர் ஊட்டுகின்றது.

ஒரு பாம்பினம் தன் நஞ்சினைப் பாய்ச்சியே மற்ற உயிரினங்களை உணவாக உட்கொள்கின்றது. அதன் வழியில் நஞ்சினைப் பெருக்கிய பின் அந்த நஞ்சே வைரக் கல்லாக… நாகரத்தினமாக மாறுகின்றது.

இதைப் போன்று தான் வாழ்வில் எத்தகைய நஞ்சுகள் வந்தாலும் அதை எல்லாம் அடக்கி ஒளியாக மாற்றியவர்கள் அருள் ஞானிகள்.

அந்த நஞ்சினை அடக்கிய அருள் ஞானியின் உணர்வைப் பெறும் நிலையாக..
1.கூர்மையாக விண்ணை நோக்கி நாம் ஏங்கி
2.அந்த ஞானிகளின் உணர்வின் சத்தைப் புத்திரனாக்கி
3.அதனுடைய நிலைகள் பெற வேண்டுமென்ற பாசத்தின் உணர்வுடன் உந்தி… அதைக் கயிறாக மாற்றி…
4.உயிருடன் ஒன்றி அந்த அருள் ஞானி உணர்வுடன் நாம் சேர்ந்தே இருந்தோம் என்றால் நல்லது.

அப்படி இல்லாமல் ஒரு வேண்டாதவரைப் பார்த்து அவருக்கு அப்படித்தான் வேண்டும்… வேண்டும்…! என்று அவர் படும் வேதனையைக் கண்டு ரசித்தால்… இந்தப் பாசம் என்ன செய்யும்…?

இது அப்படியே கயிறாக மாறும். அவர் எத்தனை வேதனைப்படுகின்றாரோ அதெலெல்லாம் இங்கே சிருஷ்டியாகத் தொடங்கும். இது உங்களுக்கு தெரியாது… யாருக்கும் தெரியாது.

பாருங்கள்…. நான் பேசிக் கொண்டே இருக்கின்றேன்.. அயோக்கியத்தனம் செய்கின்றான் என்பார்கள். ஆக…
1.தான் சொல்வதைச் சொல்லி விட்டு “அவன் அயோக்கியத்தனம் செய்கிறான்..
2.இப்படி இருந்தால் என்னங்க செய்வது…?” என்று அடுத்தவரிடம் நியாயத்தைப் பேசுவார்கள்.

இப்படி இங்கே அந்த உணர்வுகளை நுகர்ந்து ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டேயிருக்கும்.

எப்படிப் பாம்பினம் தனக்குள் விஷத் தன்மையைக் கூட்டிக் கொள்கின்றதோ அதைப் போல் இந்த அணுக்கள் உடலில் விளைந்து அதன் துணை கொண்டு அடுத்துப் பாம்பாக நிச்சயம் பிறக்கச் செய்துவிடும் உயிர்.

ஆனால் இதனை அடக்கிய அருள் ஞானிகள் உணர்வின் மீது நாம் இச்சைப்பட்டு அதன் உணர்வின் தன்மையை நாமெடுத்தால் நஞ்சை அடக்கிடும் உணர்வு கொண்டு உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலை கொள்ளும்.

ஏனென்றால் இந்த மனிதனின் வாழ்க்கையில் தண்டனைக்குரியது எது…? என்று தெரிந்து கொள்ளுங்கள்.
1.ஒருத்தர் மேல் வெறுப்பாகும் பொழுது அது எந்த அளவுகோலுக்கு அதிகரிக்கின்றதோ அவர் படும் துயரமெல்லாம் தனக்குள் வரும்.
2.பாசத்தால் அன்பால் பரிவால் இப்படி வேதனைப்படுகின்றானே…” என்று அடிக்கடி எண்ணினால்
3.அதன் கணக்கின் பிரகாரம் அதுவே தண்டனையாகக் கிடைக்கும்.
4.எடுத்துக் கொண்ட அந்த நஞ்சான உணர்வு கொண்டு அடுத்த உடலைப் பெறுவோம்.

புலி இரக்கமற்று மற்றதை அரக்கத்தனமாகக் கொன்று விழுங்குகின்றது. இதைப் போல தன் வலுவின் தன்மை கொண்டு மற்றவரைப் பழி தீர்க்கும் உணர்வாகச் செயல்பட்டால் அதன் கணக்கு அதிகமாகக் கூடி விட்டால் அடுத்து புலியாகப் பிறப்பாய்…! சித்திர புத்திரன் கணக்குப் போட்டு இவ்வாறு காண்பிக்கின்றான்…! என்று நம் சாஸ்திரங்கள் தெளிவாக்குகின்றது.

அடுப்பிலே பாத்திரத்தை வைத்து… அதிலே எந்தப் பொருளை அதிகமாகக் கூட்டிச் சமைக்கின்றோமோ… அதனின் சுவையாகத் தான் மாறும். அதைப் போன்று தான் நம் உடலிலும் நிகழ்கின்றது.

மதத்தின் அடிப்படையில் காட்டிய உணர்வை எடுக்கப்படும் பொழுது நல்ல நேரம்… கெட்ட நேரம்..! என்று. எழுதி வைத்ததைக் கேட்டறியப்படும்போது “உனக்கு இப்பொழுது “ஏழரை நாட்டுச் சனி பிடித்திருக்கின்றது…!” என்றால் அதை மனதிலே பதிய வைத்துக் கொள்கின்றோம்.

அதன்படி எண்ணி… அதையே சிருஷ்டித்து… காலங்களையும் நேரங்களையும் நமக்குள் சிருஷ்டித்துக் கொள்கின்றோம். கெட்ட நேரம் என்று பதிவாக்கி… அந்தக் கெட்டதையே உருவாக்கி விடுகின்றோம். (கேட்டால் என்னுடைய நேரம் கெட்ட நேரம்… என்று சொல்லி அதையே ஏற்றுக் கோள்வோம்)

இப்படி அவன் கொடுத்த காலத்தை நமக்குள் சிருஷ்டிப்பது போல்
1.தீமையை அகற்றிடும் உணர்வை… தீமைகளை அகற்றிய மகரிஷிகளின் உணர்வை
2.நமக்குள் இணைத்திடும் பழக்கம் வந்து விட்டால்
3.எந்த நேரமானாலும்… தீமையில்லாத உலகை நாம் சிருஷ்டித்து விடலாம்.

ஏனென்றால் இனி வரும் எதிர்காலத்தில் எத்தகைய தீமை வந்தாலும் அது நமக்குள் வளராது தடுக்க வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டுமென்று விண்ணை நோக்கி ஏகி… அதன் மேல் பாசத்தைச் செலுத்தி… அதையே வளர்த்திடல் வேண்டும்….!

எதை நமக்குள் காயத்ரி ஆக்க வேண்டும்…?

 

1.கண்ணுக்கு முன் பரவிக் கிடப்பது பரமாத்மா…!
2.அதிலிருந்து நாம் எண்ணி எடுப்பது ஆத்மா
3.அந்த உணர்வுகள் எனக்குள் விளைவது ஜீவாத்மா
4.விளைந்த உணர்வுகள் எதனெதன் உணர்வுகள் எனக்குள் இணைத்து எதைக் காக்க வேண்டும் என்று எண்ணினேனோ
5.இந்த உணர்வின் ஆற்றலுடைய நிலைகள் என் உயிருடன் சேர்த்து நினைவுடன் இயக்கக்கூடிய ஆற்றலாக
6.ஒரே இயக்கமாக வருவது காயத்ரி நான்காவது – உயிராத்மா.

நாம் எண்ணிய உணர்வுகள் அனைத்தும் தனக்குள் அது சிருஷ்டிக்கப்படுகின்றது.

இறைவா என்று சொல்லும் பொழுது எதை இறையாக்க வேண்டும்…? எதை நாம் காயத்ரி ஆக்க வேண்டும்…?

காயத்ரி என்றால் உயர்ந்த எண்ணங்களை எண்ணி எடுக்க வேண்டும். பரமாத்மா ஆத்மா ஜீவாத்மா உயிராத்மா காயத்ரி. நாம் விளைவித்த உணர்வின் தன்மையை இயக்கிக் காட்டுவது தான் காயத்ரி.

சூட்சமத்தில் நடக்கக்கூடிய நிலைகள் சூரியனைப் பற்றியது.
1.உயிருடன் இணைந்து இயக்கும் நிலையில் சூரியனுடைய நிலைகள் உயிரின் தன்மையாக மாற்றி
2.மற்றதனுடன் கலந்து இயக்கும் நிலைகள் காயத்ரி… ஆக உருப்பெறும் சக்தியாக மாறுகின்றது
3.மனிதனுடைய எண்ண உணர்வுக்குள் ஒன்றுக்குள் பட்ட உடனே காயத்ரி.

ஆனால் அழிக்கும் உணர்வாக காயத்ரி ஆக மாற்றப்படும் பொழுது அந்த உணர்வின் தன்மை அதர்வண வேதத்தில் தத்துவத்தை அப்படி மாற்றி விட்டார்கள்

அழிக்கும் உணர்வைத் காயத்ரியாக்கி மந்திர ஒலியாகத் தனக்குள் சிருஷ்டித்து அந்த உணர்வின் அலையாகத் தனக்குள் இயக்கி மந்திரம் என்ற நிலையில் கொண்டு சென்று விட்டார்கள்.

காயத்ரி மந்திரம் பெரும்பகுதி எதற்கு உதவுகின்றது…? அதர்வண வேதத்திற்குப் பயன்படுகிறது. அதர்வண வேதத்தில் சிருஷ்டிக்கும் தன்மை உணர்வின் எண்ண அலைகளைப் பரப்பச் செய்து அதனின் நிலைகள் கொண்டு கவர்வது தான்… உண்மையை அவர்கள் உணராதவர்கள் அல்ல.

ஆனால் மனித வாழ்க்கை பிரதானம் என்கிற பொழுது நமக்குள் படைக்கும் தன்மை இங்கே எதிலே படைத்து பக்தியில் நாம் எங்கே செல்கிறோம்…? என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

1.பக்தி என்பது நல்லது தான்
2.அதிலே நல்லதைக் காக்கும் திறன் இல்லை என்கிற பொழுது மெய் வழியை இழந்து விட்டு
3.இருள் சூழும் நிலையில் சிக்கி அதிலே தான் செல்ல வேண்டி வரும்.

இதிலிருந்து விடுபடுவதற்கு உங்களை நீங்கள் நம்ப வேண்டும். உயிரைக் கடவுளாக மதிக்க வேண்டும். நமக்குள் எண்ணியதை அவன் ஈசன் படைத்து விடுவான்… பிரமமாக இருந்து நமக்குள் சிருஷ்டிப்பவன் அவன் தான்.

ஆகவே நாம் எந்த உணர்வினைச் சுவாசிக்க வேண்டும்…? பிரம்மத்தின் சக்தியாக எதைத் தனக்குள் வளர்க்க வேண்டும்…? என்ற நிலையை நிலைப்படுத்தி காற்றிலே படர்ந்திருக்கும் மகரிஷிகள் உணர்வுகளை எடுக்கும் திறனுக்கு நாம் வர வேண்டும்.

உணவை எடுத்து நாம் சாப்பிடுவதற்குக் கைகள் வேண்டும் கைக்குண்டான வலுப்பெற வேண்டும். வெறுமனே பார்த்து அல்லது எண்ணி அதைச் செயல்படுத்த முடியாது.

1.காற்றுக்குள் படர்ந்து இருக்கும் ஆற்றல்மிக்க சக்திகளை
2.ஞானிகளின் ஆற்றல்மிக்க வித்துக்களை நமக்குள் பெருக்கித் தான் அதைக் கவர்ந்து எடுத்துக் கொள்ள முடியும்.

வேப்பமரம் தன் உணர்வின் ஆற்றல் வலுக் கொண்டு இருக்கும் போது தான் அந்தக் கசப்பான உணர்வை… மற்ற உணர்வுகள் படர்ந்திருந்தாலும்… தனக்குள் அந்தக் கசப்பினைப் பிரித்து அதனின் உணர்வின் சத்தாக விளைய வைத்துக் கொள்கின்றது.

ரோஜாச் செடியை எடுத்துக் கொண்டால் தன்னுடைய சத்தின் தன்மை இந்த காற்றுக்குள் படர்ந்து இருந்தாலும் அந்த விஷத்திற்குள் இருந்து தான் நறுமணத்தின் தன்மை கவர்ந்து வளர்த்து அந்த நறுமணத்தினை நமக்கு ஊட்டுகின்றது.

இதைப் போன்று நமக்குள் ஆயிரக்கணக்கான குணங்கள் இருந்தாலும் வேதனை ஊட்டும் உணர்வின் தன்மை வரும் பொழுது வேதனையைச் சுவாசித்து உடல் நலியும் தன்மையும் நோயையும் வரவழைத்துக் கொள்கின்றோம். நறுமணத்தின் நல்ல குணங்களைச் சுவாசிக்கும் வலுவை நாம் இழந்து விடுகின்றோம்.

ஆகவே அந்த நறுமணத்தின் நிலைகள் ஆற்றல் மிக்கதாக ஓங்கச் செய்வதற்கு மெய் ஞானிகள் ஆற்றலை நமக்குள் சேர்க்கப் பழக வேண்டும்.

நாம் இதை உணர்ந்து
1.உயிரான ஈசனுக்குள் அதை இணைக்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் பிரம்மமாகி பிரணவமாகி
2.அந்தப் பிரணவத்தின் தத்துவம் நமக்குள் இயக்கமாகி
3.அந்த உணர்வின் சக்தியாக ஒளியின் சரீரமாக ஒளியின் சுடராக என்றும் நிலையான நிலைகள் பெருக்க முடிகின்றது.

இதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அது நிரந்தரமான ஒளியின் சுடரை நாம் பெற வேண்டும். பொருளை அறியும் உணர்வாகப் பெருக்கிக் கொள்ள முடியும்.

ஆகவே விநாயகர் தத்துவத்தில் காட்டப்பட்டது போன்று மிருக உடலிலிருந்து என்று மனிதனாகத் தோன்றினானோ அவன் முழு முதல் கடவுள் – சிருஷ்டிக்கும் தன்மை.

எப்பொழுது மனித உடலில் பெற்றோமோ இயற்கையில் விளைந்ததை நிறுத்திவிட்டு கொழுக்கட்டையாக சுவை மிக்கதாக நாம் சமைத்து சாப்பிடுகிறோம். விநாயகர் சதுர்த்தி என்று அதை நினைவுபடுத்துகின்றார்கள்.

மிருக நிலையில் இருந்து மனிதனாகத் தோன்றிய பின் தனக்கு வேண்டியதைப் படைத்து
1.தனக்குள் சுவை மிக்க வளர்த்துக் கொள்ளும் நிலைபெற்றவன் நீ மனிதா
2.முழு முதல் கடவுள் நீ… சிருஷ்டிக்கும் நிலைகள் பெற்ற மனிதன் நீ என்று உணர்த்தினார்கள்.

மூஷிகவாகனா…! எக்குணத்தின் தன்மை சுவாசிக்கின்றோமோ இந்த உடலைச் சுமந்து சென்று அந்த வினைகளாக உருவாக்கும். எதை நினைக்கின்றோமோ நம்மை உருவாக்கும் உயிர் அதை வழிநடத்திச் செல்கின்றது

திருட வேண்டும் என்று நினைத்தால் கண்கள் திருடச் செல்ல வழி செய்கின்றது. திருடனுக்குத் தப்பிக்க வேண்டும் என்ற உணர்வுகளையும் இதே கண் வழிகாட்டுகின்றது.

நீ எதை நினைக்கின்றாயோ நீ அதுவாகின்றாய். ஆகவே நீ எங்கே சென்றாலும் என்னை விட்டு நீ பிரிய முடியாது.

நீ திருடச் சென்றாலும் எனக்குள் தெரியும்… பிறருக்கு நன்மை செய்தாலும் எனக்குத் தெரியும்…! எடுத்துக் கொண்ட நிணைவை அதன் வழியைக் காட்டி அதன் வழியே நீ செல்வாய்… அதனின் வழியில் நீ அடுத்த உடலைப் பெறுவாய்…! என்ற
1.கீதையின் மகத்துவத்தை மெய் வழியினை ஒளியின் சுடரை வியாசகர் காட்டி இருக்கிறார் என்றால்
2.அந்த உண்மையின் தத்துவத்தை நீங்கள் பெற வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அவரவர்கள் அம்மா அப்பாவை மனதில் எண்ணி… அம்மா அப்பா அருளால் நமது குரு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால்… அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
1.உங்கள் உடலுக்குள் இருக்கக்கூடிய அனைத்து அணுக்களையும் “ஒன்றாகச் சேர்த்து”
2.உங்கள் கண்ணின் வழி பெற வேண்டும் என்ற ஏக்கத்தின் உணர்வை
3.துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி ஏங்கி இருங்கள்.

அதைப் பெற வேண்டும் என்ற இச்சைப் பட வேண்டும். அந்த உணர்வை உங்களுள் கிரியையாக்கி… ஞானத்தின் வழி உங்கள் வாழ்க்கையை வாழ இது உதவும்.

1.உங்கள் உடலுக்குள் உணர்வுகள் அனைத்தும் ஒன்றாகத் திரட்டி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கி
3.கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது அந்த கண்ணின் ஈர்ப்பிற்கே வரும்….!

அந்தச் சக்திவாய்ந்த நிலைகள் ஈர்ப்புக்கு வரும்போது உங்கள் கண் “கனமாக” இருக்கும் வெகு தொலைவில் இருந்து வரக்கூடிய உணர்வை… எண்ணி ஏங்கும்போது…! அது நம் பூமியில் படர்ந்து வருவதை எளிதில் பெற முடியும்.

யாம் (ஞானகுரு) பதிவாக்கிய அந்த உணர்வின் தன்மை பெறச் செய்யும்போது.. அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறும் நோக்கத்துடன் ஏங்கித் தியானியுங்கள் ஒரு இரண்டு நிமிடம்.

இப்பொழுது அந்தச் சக்திகள் உங்கள் கண்ணுக்கே வரும்.
1.கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்துங்கள்.
2.கண்ணை மூடுங்கள்….!

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்களை இயக்கி கொண்டிருக்கும் “உயிரான ஈசனிடம்” இந்த உணர்வைச் செலுத்துங்கள்.

இவ்வாறு செலுத்துவதனால் உங்கள் உடலுக்குள் சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் வெறுப்பு வேதனை போன்ற வேண்டாத உணர்வு கொண்ட அணுக்கள் இருந்தால்
1.அவைகளுக்கெல்லாம் ஆகாரம் செல்லாதபடி
2.உங்கள் இரத்தத்தில் மாசுபடும் நிலை வராதபடி தடுக்க இது உதவும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உங்கள் புருவ மத்தியில் வீற்றிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானியுங்கள்.

புருவ மத்தியில் ஈர்க்கும் சக்தி வரப்படும்போது இப்பொழுது கனமாக இருக்கும். சிலருக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஒளி அலைகள் உங்கள் புருவத்தில் மோதும்போது ஒளிக் கற்றைகள் தெரிய வரும்.

எனக்கு குருநாதர் எப்படிச் செய்தாரோ அதன் வழிப்படியே உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி உங்களுக்கும் அந்த அரும்பெரும் சக்தி பெற வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன். அதன் வழியிலேயே நீங்கள் கவருங்கள்.

இப்பொழுது..
1.உயிர் வழி… துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிலிருந்து வரும் பேரருளை அது கவருகின்றது
2.உங்கள் உயிரின் தன்மை அது வலுப் பெறுகின்றது.
3.தீமைகள் புகாது தடைப்படுகின்றது.

உங்கள் மனதில் அமைதி கிடைக்கும்…!

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் இரத்த நாளங்களில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டுமென்று கண்ணின் நினைவை உங்கள் இரத்த நாளங்களில் செலுத்தி ஏங்கித் தியானிக்கவும்.

வேதனை வெறுப்பு சலிப்பு சஞ்சலம் நல்லவை எல்லாம் கேட்டறிந்தாலும் இந்த உணர்வுகள் இயக்கணுவாக… உங்கள் இரத்ததில் வந்தவுடனே ஜீவணுவாக மாறுகின்றது.

உங்கள் கண்ணின் நினைவினை அந்த ஜீவணுக்களுக்குப் பெற வேண்டும் என்று எண்ணும்போது இந்த துருவ நட்சத்திரத்தின் சக்தியை அந்த உடலில் உள்ள ஜீவணுக்களும் அதைப் பெறுகின்றது.

“ஜீவான்மா…!” இன்னொரு உடலில் விளைந்தது ஆன்மா…! நீங்கள் பாசத்தோடு பண்போடு பிறருக்கு உதவி செய்தாலும் அந்த உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மா அவர் உடலில் விளைய வைத்த அந்த வேதனை விஷத் தன்மை கொண்டு உங்கள் உடலுக்குள் வருகின்றது.

ஆக… அந்த ஆன்மாவுக்கு அது மாற்ற முடியாது…. மாற்றத் தெரியாது.

விஷமாக இருப்பதனால் இந்த இரத்தத்தில் இருந்து இரத்தத்தையே மீண்டும் மாசுப்படுத்தி அதனால் வந்த ஜீவணுக்களுக்கு ஆகாரம் கொடுத்து அதை வளர்க்கும் அதன் உணர்வே உங்கள் செயலில் வரும்.

இதைப் போன்ற நிலைகளை மாற்றி அமைக்கத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் இரத்த நாளங்களில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டுமென்று கண்ணின் நினைவை உங்கள் இரத்த நாளங்களில் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

இப்போது உங்கள் உடலில் புது உணர்ச்சி அந்த இரத்த நாளங்களில் வரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தங்களில் கலந்து.,.. எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்

1.உங்கள் உடலில் உள்ள அந்த அணுக்கள் அந்தச் சக்தி பெற
2.அந்த அணுக்களை எண்ணி நான் (ஞானகுரு) ஏங்கித் தியானிக்கின்றேன்.

நீங்களும் அதே போல் எண்ணி ஏங்கும் பொழுது உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறும் சந்தர்ப்பமும்…
2.அதைக் கவரும் சக்தியும்
3.அது வளரும் வாய்ப்பும் கிடைக்கின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் இரத்த நாளங்களில் கலந்து உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் எல்லாம் உற்சாகம் அடையும். உங்கள் உடலைச் சுற்றி “ஒரு வெளிச்சம் வரும்…!”

குரு காட்டிய அருள் வழிப்படி “அந்தக் கரண்டின் தொடர்வரிசையில்” நாம் செல்ல வேண்டும்

 

மனித உடல் பெற்ற பின் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்து வரும் நஞ்சினை மலமாக மாற்றிவிட்டு உணர்வின் தன்மை உயர்ந்த உணர்வின் சக்தியாக மாற்றக்கூடிய ஆற்றல் ஒவ்வொரு உடலிலும் சிறுகச் சிறுக வளர்ச்சி பெற்று மனிதன் தீயதை நீக்கி ஒளியின் சரீரமாகப் பெறும் தகுதி பெறுகின்றான்.

இதனைக் கடவுளின் பத்து அவதாரங்கள் வராக அவதாரத்தில் தத்துவத்தைக் கொடுத்துள்ளார்கள். ஏனென்றால் பன்றித் தலையை போட்டுத் தெய்வமாகக் காட்டப்பட்டு கும்பிடச் சொல்கிறார்கள் என்றால் “அதில் உள்ள உட்பொருளை” நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
1.இயற்கையின் பரிணாம வளர்ச்சியில் எப்படி வளர்ச்சி பெற்று வந்தோம்…?
2.ஒவ்வொரு சரீரத்திலும் எப்படி எல்லாம் ஆற்றல்களைப் பெற்று வந்தோம்…? என்று மெய் உணர்வுகளைத் தான் காட்டி இருந்தார்கள்.

ஆனால் அந்த மெய் வழிகளை நாம் காலத்தால் அறிய முடியாது போய் விட்டது. ஆனால் அதை எல்லாம்
1.இப்பொழுது நான் அதைப் பேசுகிறேன் என்றால் அதற்குண்டான தகுதி பெற்றவன் அல்ல.
2.மெய்ஞானியான மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவரின் உணர்வால் மெய் உணர்வலைகளை யாம் காண முடிந்தது.

இருந்தாலும் அதையெல்லாம் அறிந்து கொள்ள அவர் எனக்குப் பல இம்சைகளைக் கொடுத்தார். அந்த இம்சைகளை எல்லாம் மாற்றுவதற்கு மெய்ஞானியின் அருள் ஒளியினை எப்படிப் பெற வேண்டும்…? என்று உபதேசித்து உணர்த்தினார்.

1.துன்பங்களைக் கொடுத்து அந்தத் துன்பங்களை மாற்ற மெய் ஒளியினைப் பெறும் தகுதியை ஏற்படுத்தினார்.
2.ஆனால் உங்களுக்கோ… துன்பம் ஏற்படும் போது அந்தத் துன்பத்தை நீக்க மெய் ஒளி பெறும் மார்க்கத்தைக் காட்டுகின்றோம்.

ஆகவே இதை அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.

எனக்கு துன்பங்களைச் செயற்கையில் உண்டாக்கித் தான் அந்தத் தீய நிலைகளை நீக்குவதற்கு ஆற்றல்மிக்க சக்திகளைப் பெறும் தகுதியை குருநாதர் ஏற்படுத்தினார்.. எனக்குள் அது வளர்ந்தது.

அது போன்று உங்களுக்குள்ளும் அந்தச் சக்தி வளர வேண்டும் என்பதே எம்முடைய ஆசை.

குருநாதர் காட்டிய அந்த அருள் வழி கொண்டு துன்பங்களை நீக்கி அந்த உயர்ந்த ஆற்றல்களை நான் பெற்றது போன்று உங்களை அறியாது வரக் கூடிய துன்பங்களை நீக்க “உங்கள் எண்ணங்களை வளர்த்துக் கொண்டால்” துன்பத்தை நீக்கிவிட்டு இன்பத்தின் நிலைகளை வளர்க்க முடியும்.

என்றும் பேரின்ப நிலையாக பெருவீடான நிலைகள் பெற முடியும் என்பதை உங்களுக்குள் இப்பொழுது தெளிவாகக் கொடுக்கின்றோம். ஆனால் லேசாகச் சொல்கின்றோம் என்று இதை விட்டு விடாதீர்கள்.

விவசாய ஆபீஸில் எவ்வளவு நாளோ பக்குவப்படுத்தி நமக்குக் கொடுத்த வித்தினை அவர்கள் சொன்ன முறைப்படி அதை விதைத்து நீரை ஊற்றினால் இவ்வளவு பலன் தரும் என்று சொல்வது போல்
1.குருநாதரிடம் 12 வருட காலம் அவர் எனக்குள் பதிவு செய்த
2.அதன் மூலம் வளர்த்துக் கொண்ட அருள் வித்தைத் தான் உங்களுக்குள் அருள் வாக்காகப் பதிவு செய்கின்றோம்.

யாம் பதிவு செய்த வாக்குகளுக்குள் உங்களுடைய நினைவலைகளைச் செலுத்திக் கூட்டி காற்றிலிருந்து அந்த ஆற்றல் மிக்க மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துப் பெருக்கி அதை வளர்த்துக் கொள்ளும் முறைதான் யாம் கொடுக்கக் கூடிய தியானப் பயிற்சி. ஞானிகள் சென்ற வழியும் அது தான்…!

ஆனால் சாமியிடம் சென்றால் தலைவலி போகும் மேல் வலி போகும் வயிற்று வலி போகும் என்றால் அது வளர்ச்சிக்கு வர முடியாது.
1.சாமி சொன்ன வழிகளில் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துத் தனக்குள் வளர்த்துக் கொண்டால்
2.வலிகள் நீங்கும் என்ற உணர்வை நீங்கள் எடுத்துக் கொள்ளும் பொழுது அது தன்னாலே போகும்.
3.அந்த வழியில் செல்லும் பொழுது இருள் நிற்காது. அந்த இருளை நீக்கிடும் ஒளியின் தன்மை பெற வேண்டும்.

ஆனால் பாத்திரங்களிலே ஓட்டை உடைசலை அப்போதைக்கப்போது ஒட்டி அடைப்பது போன்று… இந்தச் சாமி செய்யும் அந்தச் சாமியார் ஏதாவது செய்வார் என்று சென்றால் அது எல்லாமே கழன்றுவிடும்.

அந்த மாதிரி இல்லாதபடி மெய் ஒளியின் தன்மை உங்களுக்குள் வளர வேண்டும். அந்த ஆற்றல்மிக்க சக்திகளை நீங்கள் பெற வேண்டும். உங்களுக்குள் அந்த சக்தி ஓங்கி வளர வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

நம்மைப் போன்ற பூமியிலே வாழ்ந்த மனிதர்கள் தான் ரிஷித் தன்மையை அடைந்து சப்தரிஷி மண்டலங்களாக வாழ்கின்றார்கள். அவருடைய உணர்வுகளைத் தான் பதிவு செய்கின்றோம்.

ஒவ்வொரு நேரத்திற்கும் ஒவ்வொரு உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். அனைத்தும் தெரிந்து விட்டேன் என்ற நிலை வந்தால் தான் என்ற நிலை வளர்ந்து விடும். அது போன்று இல்லாதபடி உங்கள் அனைவருக்கும் பதிவு செய்கின்றேன்.

ஒன்றிலிருந்து ஒன்றை எடுத்து ஒன்றுக்குள் இணைத்து அதனின் துணையுடன் வளர்க்கப்படும் பொழுது தான் “விண்ணின் ஆற்றலை நீங்கள் வளர்த்துக் கொள்ளும் நிலை வருமே தவிர”
1.சாமி இவ்வளவு பெரிய ஆற்றல் பெற்று இருந்தாலும்
2.அது எல்லாம் எனக்குள் ஜீரணிக்கும் அந்த “குரு பலம்” கொண்டது தான்.

அதே போன்றுதான் நீங்கள் எந்தக் கரண்டுடன் தொடர்பு கொள்கின்றீர்களோ அதன் நிலைகள் தான் வளர்ச்சி இருக்கும். ட்ரான்ஸ்பாரம் மாறி இருக்கும் போது வேறு லைனில் இணைத்தோம் என்றால் அதற்குத் தகுந்தாற் போல் நம்மையும் திசை மாற்றிவிடும்.

ஆகையினால் மெய் ஒளியின் தன்மை கொண்டு அந்தக் கரண்ட் எத்தகைய லைட்டை நாம் போடுகின்றோமோ அதற்கு தகுந்த மாதிரி கரண்டை உற்பத்தி செய்ய முடியும். நமக்குள் எந்த வலுவோ அதை நாம் பெற முடியும்.
1.குரு காட்டிய அருள் வழிப்படி “அந்தக் கரண்டின் தொடர்வரிசையில் நாம் செல்லும் பொழுது தான்”
2.அதை நாம் பெறக்கூடிய தகுதி பெறுகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் பெருக்கி வலு சேர்த்துக் கொண்ட பின் நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் நாம் இணைக்க வேண்டும்.

அவருடைய உணர்வுகள் நமக்குள் பதிவு உண்டு. நாம் எடுத்துக் கொண்ட ஞானிகள் உணர்வின் தன்மை கொண்டு அங்கே செல்ல வேண்டும் என்று
1.அவர்களை உந்திச் செலுத்தும் பொழுது
2.நேராகச் சப்தரிஷி மண்டலம் போய்ச் சேர்கின்றது.

சப்தரிஷிகள் என்பவர்கள் உடல் பெறும் உணர்வுகளை அவர்கள் கரைத்தவர்கள். அங்கே சென்றவுடன் நம் முன்னோர்கள் மீண்டும் உடல் பெறும் அந்த உணர்வுகளைச் சுட்டுப் பொசுக்கி விடுகின்றது… உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து விடுகின்றது

கரைத்த பின் அறிவாக இருக்கும் அந்த ஒளி நிலைத்து நிற்கின்றது. அந்தச் சப்தரிஷி மண்டல ஒளி வட்டத்தில் அவர்கள் சுழலத் தொடங்குகின்றார்கள்.

அதே போன்று குடும்பத்தில் யார் உடலை விட்டுப் பிரிகின்றார்களோ கணவன் இறந்தால் கணவனை முதலில் அனுப்புகின்றோம்… மனைவி இறந்தால் மனைவியை முதலில் அனுப்புகின்றோம்.

சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து கணவன் முதலில் ஒளியாக ஆன பிற்பாடு மனைவி இங்கே இருக்கும் பொழுது
1.அதே உணர்வுடன் கணவன் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று
2.அடிக்கடி இதை எண்ணப்படும் பொழுது அடுத்து மனைவி உடலை விட்டுச் சென்றாலும் அங்கே சென்று விடும்.
3.அதாவது அந்த உணர்வை எண்ணினாலே “ஆட்டோமேட்டிக்காக மனைவியின் ஆன்மா அங்கே சென்றடைந்து விடும்…”

நாம் எல்லோரும் சேர்ந்து அந்த உணர்வை நமக்குள் பெருக்குவதற்குத் தான் இப்போது கூட்டாக உங்களுக்குப் பயிற்சி கொடுக்கின்றோம். செய்கிறோம்.
1.இந்தப் பதிவு இல்லை என்றால்
2.அங்கே நாம் யாரையும் அனுப்ப முடியாது.

மனைவி முதலில் பிரிந்தால் மனைவியின் ஆன்மாவைக் கணவன் உந்தி அங்கே சப்தரிஷி மண்டலத்தில் செலுத்திய பின் கணவன் இங்கே எண்ணியவுடன் “ஆட்டோமேட்டிக்காக கணவனின் ஆன்மாவும் அங்கே சென்று விடுகின்றது…”

யார் பிரிந்தாலும் முதலில் அவர்களை அங்கே அனுப்பி வைத்து விடுகின்றோம். உடல் பெறும் உணர்வுகளை அங்கே கரைத்து விடுகின்றோம்.
1.அங்கு இணைந்த பின் அவர்கள் உணர்வு இங்கே இருக்கின்றது.
2.அந்த ஒளியின் உணர்வை இங்கிருந்து நாம் பெருக்குகின்றோம்.
3.பெருக்கிக் கொண்டால் வேறு ஒன்றும் செய்ய வேண்டியதில்லை
4.உடலை விட்டுப் பிரிந்து சென்றால் சப்தரிஷி மண்டலம் தான் நாம் செல்வோம்.

நண்பர்களுக்குள் நன்மை செய்தான் என்று பாசமாக இருக்கின்றனர். ஆனால் சந்தர்ப்பத்தில் உடலை விட்டுப் பிரிய நேர்ந்தால்…
1.பாசத்தால் எண்ணி “நண்பா நான் போகின்றேன்…” என்று எண்ணினால் நண்பனுடைய உடலுக்குள் தான் அந்த ஆன்மா செல்லும்.
2.அந்த நண்பனும் நேற்று வரை என்னிடம் பேசிக் கொண்டிருந்தானே… “இப்போது போய் விட்டானா…” என்று எண்ணும் பொழுது அந்த உடலுக்குள் தான் செல்லும்.

சொல்வது அர்த்தமாகிறது அல்லவா…!

ஆகவே… இதற்கு முன்பு மூதாதையர்களை விண் செலுத்தும் அந்தப் பழக்கத்தை நாம் விட்டு விட்டோம். இப்போது மீண்டும் அந்த ஞானிகள் கண்ட வழியினை “உங்களுக்குள் தொடரும்படி செய்கின்றோம்…”

மனிதனான பின் பிறவி இல்லா நிலை அடைந்தவர்கள் அக்காலத்தில் விண் சென்றவர்கள் தான் “முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள்” என்று சொல்வது. சப்தரிஷி மண்டலத்திற்குள் கண்ணுக்குப் புலப்படாது ஒளியாக எண்ணிலடங்காதோர் உள்ளார்கள்.

அவர்கள் பல கோடி ஆண்டுகள் ஆகித்தான் ஒளியின் சரீரமாக உள்ளார்கள் “என்றும் பதினாறு” என்று வாழுகின்றார்கள்.
1.இந்தச் சூரியக் குடும்பம் அழிந்தாலும் அவர்கள் பிற சூரிய குடும்பத்தில் இருந்து ஆற்றல்களைப் பெற்றதனால்
2.அதிலே நஞ்சாக வரும் உணர்வுகளை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றவர்கள்.
3.என்றும் பதினாறு என்று அகண்ட நிலையில் எங்கும் செல்லும் திறன் பெற்றவர்கள்
4.ஒரு எல்லையில் இருந்து தனக்குள் உருவாக்கிக் கொண்டவர்கள்.

எந்த எல்லையில் இருக்கின்றார்களோ… துருவத்தை எல்லையாக வைத்து சூரியனைச் சுற்றி மற்ற கோள்கள் வருவது போன்றது துருவ நட்சத்திரத்தினுடைய வட்டத்தில் அவர்கள் சுழன்று வருகின்றார்கள் சப்தரிஷி மண்டலங்களாக…! மனிதனாகப் பிறந்து வாழ்ந்தவர்கள் தனித்தன்மை கொண்டு வாய்ந்தவர்கள் தான் அகண்ட அண்டம் பேரண்டம் எத்தனையோ நிலைகள் கொண்டது.

அதிலே எத்தனையோ கோடி ஆண்டுகள் வரப்படும் பொழுது அணுவாகி கோளாகி நட்சத்திரமாகி சூரியனான பின் நட்சத்திரமாகிக் கோளின் தன்மை அடைந்தது பலர்.

இந்தக் குடும்பங்கள் அழிந்தாலும் அதற்குள் எத்தனை நிலையில் உள்ளது

ஒரு சூரிய குடும்பமே எத்தனை கோடி மைல்கள் எல்லை விஸ்தீரணம் கொண்டது. அதே போன்று அடுத்த சூரியக் குடும்பத்தை எடுத்தாலும் அது எத்தனையோ கோடி மைல்களுக்கு அப்பால் உள்ளது.

நாம் இந்த 2000 சூரியக் குடும்ப வட்டத்தில் தான் வாழுகின்றோம். ஒன்றுடன் ஒன்று துணை கொண்டு தான் சுழலுகின்றது. இது வேறு 2000 சூரியக் குடும்பத்திலிருந்து வரக்கூடிய சக்தியை எடுத்துத் தான் வாழுகின்றது.

இப்படி ஒவ்வொன்றிலும்
1.மனிதனாக உருப்பெற்றவன் ஒளியாக மாறிய பின் தனித்தன்மை வாய்ந்ததாகச் செல்லுகின்றது
2.இதற்கும் அதற்கும் சம்பந்தமில்லாது செல்கின்றது… துருவத்தின் எல்லையில் தான் வாழ்கின்றார்கள்.

ஆகவே என்றும் 16 என்ற அந்த நிலையை நாம் அடைய வேண்டும் இல்லை என்றால் மீண்டும் தேய்பிறை தான்.

ஆகவே யாராக இருந்தாலும் நாம் பலருடைய ஆன்மாக்களை விண்ணுக்குச் செலுத்துகின்றோம்… மூதாதையர்களை அனுப்புகின்றோம்.
1.இவ்வாறு செய்து கொண்ட பின் நாம் இந்த உடலை விட்டுச் சென்றால்
2.யாருடைய தயவும் நமக்குத் தேவையில்லை நாம் அங்கேதான் செல்கின்றோம்.

தியானத்தில் அடிக்கடி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… மூதாதையர்களின் உயிரான்மாக்கள் அங்கே இணைய வேண்டும் என்று இந்த உணர்வை நாம் வளர்க்க வளர்க்க
1.உடலை விட்டு நாம் சென்றால் அங்கே தான் உயிர் நம்மை அழைத்துச் செல்லுமே தவிர
2.புவியின் ஈர்ப்புக்குள் இருக்காது…!

இதை நாம் ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும். ஏனென்றால் ஒரு தொடர்பு வேண்டும். எல்லோரும் சேர்ந்து ஆன்மாக்களை அங்கே அனுப்புகின்றோம்.
1.எல்லோரும் சேர்ந்து சப்தரிஷி மண்டலத்துடன் ஐக்கியம் ஆகும் பொழுது
2.நம் குருநாதர் காட்டியபடி ஒளியின் கூட்டமைப்பாகின்றது.

கால் வலியும் அதனின் பின் விளைவுகளும்

 

வேதனையான உணர்வை அதிகமாக எடுத்தால் அந்த உணர்வுகள் நம் இரத்த நாளங்களில் கலக்கின்றது.
1.புவியின் ஈர்ப்பில் நடந்து செல்லப்படும் பொழுது
2.நமது கால் பாதங்களிலும் முழங்கால் கீழ் உள்ள பாகங்களிலும் வேதனை உணர்வுகள் அதிகமாகப் பரவுகின்றது.

இதன் உணர்வுகள் கீழ்பாகங்களில் உறையும் தன்மை ஏற்பட்டால்
1.நாளடைவில் நாம் அமைதியாக உட்கார்ந்து இருக்கும் பொழுதோ படுத்திருக்கும் பொழுதோ
2.இதனின் உணர்வுகள் நமது இரத்தத்திலே கலந்து “மிகக் கடினமாக உறையும் தன்மை கொண்ட நிலையாகி விடுகின்றது…”

இப்படிப்பட்ட துகள்கள் இரத்தத்தில் கலந்து கொண்டால் ஆங்காங்கு இரத்த நாளங்களில் நுண்ணிய பாதை இருக்கும் பாகங்களில் இது உறைந்து நின்றால் அந்தந்த பாகங்களில் உள்ள உறுப்புகளை சீராக இயங்க விடாதபடி தடுக்கும்.

அந்த உறுப்புகளில் உள்ள நல்ல அணுக்களுக்கு உணவு போய்ச் சேராது தடைப்படுத்துவதனால் அந்த உறுப்புகளை உருவாக்கும் அணுக்கள் பலவீனம் அடைகின்றது. இதனால் அந்த உறுப்பின் தசைகள் குறைவடைகிறது.

இது போன்ற பிணிகளுக்கு விஞ்ஞான அறிவு கொண்டு எத்தனையோ மருந்துகளைக் கொடுத்து பக்குவங்களைச் செய்து இரத்த நாளங்களில் உள்ள அடைப்பை நீக்குகின்றார்கள். விஷம் கலந்த உணவின் உணர்ச்சிகளை இரத்தத்தில் கலக்கச் செய்கின்றனர்.
1.இதன் உணர்வுகள் ஊடுருவி அந்த விஷத் துகள்களை உடைத்தாலும்
2.இயற்கையில் செயல்படுத்தப்பட்ட விஷத்தின் இயக்கங்கள் உடல் முழுவதும் ஊடுருவிச் செல்கின்றது.
3.இரத்தத்தில் உள்ள உணர்வுகளைக் கவர்கின்றது.

ஆக விஷ உணர்வுகள் கொண்டு விஷத் துகள்களைக் கரைத்து விடலாம்.
1.”கரைத்த உணர்வுகள்” இரத்தத்தில் கலக்கின்றது.
2.கலந்த உணர்வோ நமது இருதய பாகங்களுக்குச் செல்லப்படும் பொழுது “அங்கே வலி ஏற்படுகின்றது…”

இங்கே வடிகட்ட முடியாத நிலைகளில் அவை நமது சிறு மூளை பாகம் செல்லும் பொழுது கண்களிலும் இதைப் போன்று உணர்ச்சிகள் தடைப்பட்டு கண்களில் ஈர்க்கும் தன்மை குறைந்து அங்கே அழுத்தம் அதிகமாக உருவாகும் பொழுது நமது கருவிழியில் திரைப்படமாகக் காட்டும் அந்தக் கல்லுக்கு அருகில் இருக்கக்கூடிய உணர்வுகளை இது மறைத்து விடுவதனால் “கண்களிலும் பார்வைக் குறைவு ஏற்படுகின்றது…”

ஏனென்றால் இந்த வாழ்க்கையில் விஷத்தின் தன்மையை அதிகமாக நுகர்ந்ததனால்… புவியின் ஈர்ப்பில் நாம் இருப்பதனால் உடலுக்கு வேளை இல்லாமல் அமைதியாக உட்கார்ந்து இருக்கும் பொழுது “வேதனையினால் உருவான விஷத்துகள்கள்” கீழ் நோக்கி வந்து நமது காலின் கீழ் பாகங்களில் உறைகின்றது.

இதைப் போன்ற நிலைகள் நம் இரத்தங்களில் கலந்து இருதயத்திற்கும் சிந்திக்கும் ஆற்றல் கொண்ட நுண்ணிய பாகங்களுக்கும் சென்றால் அங்கே அழுத்தம் அதிகரித்து அதனுடைய பாகங்களும் அடைப்படுகின்றது.

சிந்தித்துச் செயல்படக்கூடிய மனிதராக இருப்பின் இந்த உணர்ச்சிகள் தேங்கி வரும் பொழுது நுண்ணிய அலைகளைச் சீக்கிரம் கிரகித்து அறியும் தன்மையும் இழக்கப்படுகின்றது.

நமது உடலில் பிற உறுப்புகளை இயக்கும் நுண்ணிய பாகங்களுக்கு ஆணையிடும் சிறுமூளை பாகத்தில் சிறு மூளை பாகத்தில் தடை ஏற்படும் போது நமது இயக்க உறுப்புகள் மிகவும் பலவீனமடைந்து விடுகின்றன.
1.அதனால் அந்த உறுப்புகளில் உள்ள நல்ல அணுக்களுக்குச் சீராக உணவு கிடைக்காது அந்த உறுப்பும் பலம் இழந்து விடுகின்றது.
2.இதனால் உடல் நலியத் தொடங்குகின்றது.
3.விஷத்தின் ஆக்கிரமிப்பு அதிகமானால் நமது சிறுநீரகம் இரத்தத்தைச் சுத்திகரிக்கும் பணியை நிறுத்தி விடுகின்றது.

இதையெல்லாம் மாற்ற வேண்டும் அல்லவா…!

உதாரணமாக நாம் ஒரு புலியைப் பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் புலியை நுகர்ந்து பார்த்த பின் அதனின் வலிமையைக் கண்டபின் அச்ச உணர்வுகள் நமக்குள் தோன்றுகின்றது.

ஏனென்றால் புலி மிகவும் கொடூரமானது. அதன் உருவத்தைப் பார்த்தால் புலியிடமிருந்து வரும் உணர்வுகளை நுகர்ந்தால் ஓம் நமச்சிவாய. அதாவது நாம் நுகர்ந்த உணர்வுகள் நமது இரத்தத்தில் கலந்து மனிதனாக உருவாக்கிய உணர்வுகளுக்குள் இது பதிவாகி நமது உடலில் நடுக்கத்தின் உணர்வு வரப்படும் பொழுது நமது உறுப்புகளின் இயக்கங்கள் மாறுபடுகின்றது.

1.இந்த நடுக்க உணர்வுகளால் கல்லீரல் வடிகட்டும் தன்மை இழந்து விடுகின்றது.
2.அது சமயம் நுரையீரலும் சீராக இயக்குவதில்லை.
3.இயக்க நிலைகள் பதட்டம் அடைவதால் இரத்தத்தில் உள்ள கழிவைப் பிரிக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.

இப்படி நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் சீராக இயக்க முடியாத நிலை வருகின்றது.

அதே சமயம் பித்த சுரப்பியில் இத்தகைய விஷத்தன்மை அதிகமாகும் பொழுது பித்த சுரபியின் வளர்ச்சியும் அதிகமாகிறது. பித்தத்தின் தன்மை அதிகரித்தால் அதனுடைய இயக்கமும் அதிகமாகின்றது.
1.அந்த பித்தம் உடல் முழுவதும் பரவி மற்ற அணுக்களையும் நடுங்கச் செய்து பலவீனமடையச் செய்கின்றது.
2.நம்மிடத்தில் சிந்திககும் ஆற்றலைக் குறைக்கின்றது… தலை சுற்றலும் வருகின்றது.
3.ஏனென்றால் பயத்தால் நுகர்ந்த உணர்வுகள் கொண்டு அதற்குத் தக்க அணுக்களை நமக்குள் சேமித்து அதனின் உணர்வை வளர்க்கின்றது.

இப்படி பித்தத்தை நமக்குள் அதிகப்படுத்திப் பழகிவிட்டால் அதிகமான பித்தத்தைச் சுரக்கும் அடுத்த உடலை உருவாக்கி அதன் உணர்வுகளையும் ஜீரணிக்கும் சக்தி கொண்டதாக மாற்றுகின்றது.

இது போன்ற நிலைகளை எப்படி மாற்றுவது…?

அதற்குத்தான் ஆத்ம சுத்தி என்று மிகச் சக்தி வாய்ந்த ஆயுதத்தைக் கொடுக்கின்றோம். எப்பொழுது தீமை என்று வருகின்றதோ துன்பம் வருகின்றதோ அடுத்த கணமே
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்
3.எங்கள் உடலில் உள்ள எல்லா உறுப்புகளிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர்ந்து
4.அந்த உறுப்புகளை உருவாக்கிய் அணுக்கள் துருவ நட்சத்திரத்தினுடைய பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
5.இப்படி ஒரு இரண்டு நிமிடம் அந்த உயர்ந்த சக்தியை எல்லா அணுக்களிலும் பெறச் செய்தோம் என்றால்
6.சந்தர்ப்பத்தால் நுகர்ந்த அந்த நஞ்சான உணர்வுகளை நமக்குள் ஜீவன் பெற விடாதபடி தடைப்படுத்துகின்றது.

தீமையிலிருந்து நாம் விடுபடுகின்றோம். இதை நாம் அவசியம் செய்து பழக வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

போகருடைய தாயை ஒரு விஷம் கொண்ட பாம்பு தீண்டி விடுகின்றது. காளிங்கராயன் என்பவரை போகர் அப்போது அணுகுகின்றார்.

தன் தாயைக் காக்க வேண்டும் என்ற நிலையில் அவரிடம் பல பச்சிலை மூலிகைகளை அறிந்து அதை வைத்துத் தன் தாயை எழுப்புகின்றார். விஷத்தின் தன்மை எவ்வாறு ஒடுக்குவது…? என்று அவரிடம் பழகித் தெரிந்து கொள்கின்றார்.

விஷத்தை ஒடுக்கும் உணர்வினைத் தனக்குள் அதன் உணர்வின் அறிவாக தெளிந்த நிலையில் கொண்டு வருகின்றார். போகர். அதன் வரிசையில் தான் பல ஆற்றல்கள் அவருக்குள் பெருகத் தொடங்கியது.

1.நட்சத்திரங்கள் கோள்கள் இயக்கங்களையும் அறிகின்றான்… வான மண்டலத்தையும் அறியத் தொடங்குகின்றான்.
2.இதையெல்லாம் அறிந்த பின் அவன் இன்னொரு கூட்டிற்குள் (உடலுக்குள்) செல்லவில்லை
3.ஒளியின் தன்மையைப் பெருக்குகின்றான்…
4.ஒளியின் தன்மை ஆனாலும் “உந்தித் தள்ளி… விண்ணுக்கு அவனை அனுப்பும் வழி இல்லை…”
5.ஏனென்றால் அதற்குண்டான முகப்பு வரவேண்டும்… இருந்தாலும் அந்த ஒளி அலைகள் வருகின்றது.

குருநாதர் போகரைப் பற்றிச் சொல்லும் பொழுது அவன் பெரிய திருடன்… வானத்தையே திருடி இருக்கின்றான்…! ஆனால் விண்ணுக்குப் போகும் வழியைத் திருடத் தெரியவில்லை…! நீயும் ஒரு திருடன் ஏன்று என்னிடம் (ஞானகுரு) சொல்கின்றார்.

அப்பொழுதுதான் இந்த உணர்வின் தன்மை எடுத்து
1.போகருக்கு நீ அந்த விண் செல்லும் பாதையின் உணர்வைச் செலுத்து
2.அந்த உயர்ந்த உணர்வுகளை… நினைவுகளை எடு
3.அவருடன் தொடர்பு கொள்… அந்த உணர்வின் துணை கொண்டு இந்த முகப்பைக் கூட்டு.
4.ஒளி நிலை பெற வேண்டும் என்று அந்த அருள் ஒளியை அவரிடம் இருந்து நீ பெறு
5.ஏனென்றால் உயர்ந்த சக்தி பெற்றவர்.. அந்த உணர்வின் துணை கொண்டு விண்ணுக்குச் செலுத்து…! என்றார் குருநாதர்..

இப்படித்தான் இராமலிங்க அடிகள்… காந்தியடிகள்… விவேகானந்தர் என்று இது போன்று ஏனைய எத்தனையோ மகான்களை விண் செலுத்தும்படி செய்தார் குருநாதர். “ஒன்று இரண்டு அல்ல…”

ஒவ்வொருவரும் தத்துவங்களைத் தனக்குள் வளர்த்துக் கொண்டாலும்
1.”விண் செல்லும் பாதையை… அந்த முகப்பின் தன்மை…” எவ்வாறு அவர்களுக்குச் சேர்க்க வேண்டும்…?
2.ஆன்மாக்களை எவ்வாறு விண் செலுத்த வேண்டும்…? என்று தெளிவாகக் கூறினார்.

இந்தப் பழக்கத்தை எல்லாம் ஏற்பபடுத்திய பின்பு தான் அவருக்கும் “தனக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும்” என்று குருநாதர் இந்த வேலையைச் செய்தார்.

ஏனென்றால்
1.அவர் (ஈஸ்வரபட்டர்) எத்தனையோ உடல்களைத் தாவியவர் தான்
2.தகுந்த உடல்கள் பெறவில்லை… அதற்குத் தகுந்த உணர்வுகள் கிடைக்கவில்லை
3.அவரவர்கள் இச்சைக்குத் தான் செல்கின்றார்கள்.
4.(குரு தன்மை அடைவதற்கு இப்படி எத்தனையோ நிலைகள் இருக்கின்றது).

அண்டத்தின் சக்தி இந்தப் பிண்டத்திற்குள் எப்படி இருக்கின்றதோ அதைப் பெறக்கூடிய தகுதியாகத் தான் முருகன் சிலையை வைத்தான் போகன். அது யாருக்கும் தெரியாது.

போகன் சிலையை மாற்ற வேண்டும்… வைக்க வேண்டும்… என்று பல பேர் வந்து கேட்டார்கள். அந்த மாதிரிச் செய்ய முடியாது. ஏதாவது மீறித் தொட்டீர்கள் என்றால் குடும்பம் எல்லாம் நாஸ்தி ஆகிவிடும்… தொடும் குடும்பம் எல்லாம் நாஸ்தியாகிவிடும் என்று சொன்னேன்.

உயர்ந்த சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் சிலையை வைத்தான் போகன்.

ஆனால் தனித்த நிலைகள் கொண்டு சுயநலத்திற்காக வியாபாரத்திற்காக அந்தச் சிலையைப் பயன்படுத்தினால் அவன் யாரும் உருப்பட மாட்டான். ஏமாற்றும் நிலைகள் கொண்ட எவனும் இங்கே உருப்படியாக மாட்டான்.

மற்ற கோவில்களில் செய்வது வேறு… அங்கிருக்கக்கூடிய சிலைகள் வேறு. பழனி முருகன் சிலை அப்படிக் கிடையாது. அத்தனை பெரிய அணையை போகன் இங்கே போட்டு வைத்திருக்கின்றார்.

தவறு செய்ய முடியாது… தவறு செய்தான் என்றால் நொறுங்கிப் போவான். உணர்வின் தன்மை விஷமாகிவிடும். விஷத்தை உட்கொண்டால் எப்படி நினைவிழக்கச் செய்யுமோ… புழுவாக பூச்சியாக பாம்பாகத் தான் அடுத்து பிறக்க நேரும்.

அடிக்கடி ஆத்ம சுத்தி செய்தால் கிடைக்கும் நன்மை

 

1.அம்மா அப்பா அருளால் குரு அருளால் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒரு நிமிடம் தியானிக்க வேண்டும்
2.மகரிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஒரு நிமிடம் தியானிக்க வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து இரத்த நாளங்களில் கலந்து உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று ஒரு நிமிடம் தியானிக்க வேண்டும்
4.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் படர்ந்து அந்த உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒரு நிமிடம் தியானிக்க வேண்டும்

இதற்குப் பெயர் ஆத்ம சக்தி என்பது.

அடிக்கடி ஆத்ம சுத்தி செய்வதால் பெறும் நன்மை:-
இப்படி நாம் அடிக்கடி செய்து வந்தோம் என்றால் நாம் எண்ணி எடுத்த அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றது… அலைகளாக மாற்றுகின்றது.
1.நாம் பரப்பிய அந்த அலைகளை
2.மீண்டும் நாமே எடுத்துப் பெருக்கிக் கொள்ள இது உதவும்.

ஒருவரிடம் சண்டை போட்டால் “என்னை இப்படிப் பேசினான்… பேசினான்…” என்று எண்ணப்படும் பொழுது அந்த உணர்வலைகள் ஒலிபரப்பாகின்றது… சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகிறது.

மீண்டும் சண்டையிட்டவனை நாம் எண்ணும் போது சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்த அந்த அலைகள் குவிந்து
1.எங்கே போனாலும் சண்டை வரும்… பேசினாலும் சண்டை… நம்மைப் பார்த்தாலே மற்றவருக்கு வெறுப்பு வரும்.
2.இதைப் போல் அடிக்கடி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறக்கூடிய வாய்ப்பாக நமக்கு நாமே உருவாக்கிக் கொள்ள முடியும்.

உடலில் உள்ள ஆன்மாவைப் புனிதப்படுத்தும் முறை:-
ஒரு சிலர் உடலிலே ஆவி புகுந்து விட்டது பேய் பிடித்து விட்டது அருளாடுகிறது என்று சொல்வார்கள்
1.இது எல்லாம் எந்தெந்த குணங்களிலே ஓங்கி எடுத்துக் கொண்டோமோ இன்னொரு ஆத்மா வெளியில் இருப்பது இங்கே வந்துவிடுகிறது.
2.காரணம் மனிதன் இன்னொரு உடலுக்குள் வந்து தான் மீண்டும் மனிதனாகப் பிறக்க வேண்டும்.

ஆனால் எந்த குணத்தின் உணர்வுடன் அவன் இறக்கின்றானோ அதே உணர்வு கொண்டு ஒரு மனிதன் ஏங்கி இருந்தால் அந்த உடலில் ஈர்க்கப்பட்டு விடும். எந்த நிலையில் ஆன்மா நோயாகி உடலை விட்டுப் பிரிந்ததோ புகுந்த உடலில் அதே நோயை உருவாக்கி அவனையும் வீழ்த்தும்.

தற்கொலை செய்து உயிர் பிரிந்திருந்தால் அடுத்த உடலுக்குள் சென்றால் அங்கேயும் தற்கொலை செய்ய வைக்கும். பக்தியின் நிலைகளில் “முருகன் எனக்கு இப்படிச் செய்தானே” என்ற வேதனையான எண்ணத்துடன் பிரிந்திருந்தால் அதே பக்தி கொண்டு யாராவது எண்ணினால் அந்த உடலில் சென்று “முருகன் இப்படிச் செய்கின்றானே” என்று ஆட்டிப்படைத்து அங்கேயும் நோயாக்கி அவனையும் வீழ்த்தும்… அடுத்து மனிதனாகப் பிறப்பதில்லை.

1.அத்தகைய ஆன்மாக்கள் நமக்குள் சரியான நிலையில் கட்டுப்பட்டால் தான்
2.இந்த மனித வாழ்க்கையில் நாமும் நல்லதை எடுக்க முடியும்.

ஆனால் பேயை ஓட்டுகின்றேன் என்று யார் செயல்படுத்தினாலும் உடலுக்குள் புகுந்த அந்த ஆவியை வெளியேற்ற முடியாது.
1.நாம் எடுக்கக்கூடிய அந்த நல்ல உணர்வின் சத்தை… அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை… அதற்கும் உணவாக ஊட்டி
2.அந்த ஆன்மாவை நமக்குள் நல்லதாக மாற்றினால் ஒழிய யாரும் மாற்றவே முடியாது.

அப்படி யாரும் மாற்றியதாகச் சொன்னால் ஒரு போக்கிரியான ஆவியை வைத்து அடக்கலாம். ஆனால் அந்த போக்கிரியான ஆன்மாவும் மந்திரத்தால் செருகப்பட்டால் அந்த ஆவி முதலில் புகுந்ததை அடக்கிவிடும்.

ஆனால் இது இயங்கத் தொடங்கி போக்கிரியான உணர்வுகளை இங்கே உருவாக்கும் உடலுக்குள் கை கால் குடைச்சல் அதிகமாகும் அதனால் விளையக்கூடிய உடல் வலிகள் எந்த டாக்டரிடம் சென்றாலும் அது நிவர்த்தி ஆகாது.

இது போன்ற மீண்டும் மீண்டும் தீமையின் நிலைகளுக்கு மரணமடையும் நிலைகளுக்குத் தான் செல்ல முடியுமே தவிர நல்லதை நீங்கள் காண முடியாது.

ஆகையினால் நீங்கள் உங்களை நீங்கள் நம்ப வேண்டும். காற்றுக்குள் மகரிஷிகளின் அருள் சக்தி பரவி உள்ளது. அதை எடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
1.நம்மையறியாது கெட்டது நமக்குள் வந்து எப்படி ஆட்டிப்படைப்பதை மாற்றி அமைக்க
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து அந்தத் துன்பத்தை அகற்ற
3.”நம் எண்ணம் தான்” உதவுமே தவிர மற்ற யாரும் காப்பாற்ற முடியாது.
4.நீங்கள் எடுத்துக் கொண்ட “அந்த எண்ணத்தை” உங்கள் உயிர்தான் சிருஷ்டிக்கின்றது
5.சிருஷ்டித்த உணர்வு தான் உங்களுக்குள் விளைகின்றது… உங்களை இயக்குகிறது.

நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ உயிர் பிரம்மமாக இருந்து அந்த குணத்தினைச் சிருஷ்டிக்கின்றது. அந்தச் சக்தியின் உடலாக இயக்குகின்றது ஆகவே… நீங்கள் எண்ணியதை நடத்திக் கொடுப்பது உங்கள் உயிர் என்பதை மறந்து விடாதீர்கள்.

கீதையில் சொன்னது போல் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…! என்று அந்த உணர்வின் சக்தியாகத்தான் “நாம் எண்ணுவது நமக்குள் விளையும்…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மனிதனாக உருவாக்கப் பங்கு கொண்டது 1008 குணங்கள். அந்த 1008 குணங்களைத் தான் ஞானிகள் ஆலயத்தில் தெய்வங்களாகக் காட்டுகின்றார்கள். சிலையாக உருவாக்கி வைத்தது ஞானிகள்… அது துவைதம்.

அந்தச் சிலைக்கு வைர கிரீடத்தை வைக்கின்றான்.. தங்க ஆபரணத்தைப் போடுகின்றான்… மலர் மாலைகளை அணிகின்றான். ஔஷதங்கள் சுவையாக உருவாக்கப்பட்டு தெய்வத்திற்கு உணவாகப் படைக்கின்றான்.

இயற்கையில் விளைந்த கனியும் அங்கே வைக்கின்றான். இயற்கையில் விளைந்ததும் செயற்கையில் விளைந்ததும் என்ற உணர்வைக் காட்டுவதற்காக…!

நமக்குள் நல்ல குணங்கள் எப்படி வளர்ந்தது…? ஒன்றுடன் ஒன்று இணைந்து உணர்வின் தன்மை பெற்ற நிலையை ஒன்றுடன் இணைத்து நாம் எதைச் செய்ய வேண்டும்…? என்பதற்காகச் சிலையை உருவாக்கினான்…!

பதார்த்தங்களையும் வைத்தான்… திரையிட்டு மறைத்தான்.
1.தீப ஆராதனையைக் காட்டித் தன்னை அறியும்படி செய்தான்
2.தனக்குள் மறைந்திருக்கும் இந்த உணர்வைத் திறந்து பார்க்கப்படும் பொழுது உணர்வுகள் எப்படி…? என்பதை அறியம்படி செய்தான்

இது தான் ஆலயம்.

திரையைத் திறந்தபின் அங்கிருக்கக்கூடிய பொருள்கள் அனைத்தும் தெரிகிறது. எதனால்…? வெளிச்சத்தால்…!

கார்த்திகேயா என்ற நிலையில் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு உணர்வை நுகர்ந்தறியும் தன்மை பெற்றவன் மனிதன். எதனெதன் குணங்களைத் தனக்குள் எடுத்து… உருவாக்கும் தன்மை எப்படிப் பெற வேண்டும் என்பது ஆறாவது அறிவு… ஆக படைக்கத் தெரிந்து கொண்டவன்.

விண்ணின் உணர்வுகளை நுகரப்படும் பொழுது இனிமையின் உணர்வை வளர்க்கின்றது. தீமையின் நிலைகளை அகற்றிடும் சக்தி பெறுகின்றது என்பதற்காகச் சிலையை உருவாக்கி வைத்தனர்.

தீபத்தை அங்கே காட்டப்படும் பொழுது பொருளறிந்து செயல்படும் இச்சக்தி நான் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உயிரிடம் நாம் வேண்ட வேண்டும்.

இந்த ஆலயம் வருவார் அனைவரும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா. நாங்கள் பார்ப்போர் குடும்பமெல்லாம் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும். அருள் ஒளியின் சுடராக அந்தக் குடும்பங்களில் வளர வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.
1.ஏனென்றால் நமக்குள் பல குடும்பங்கள் உண்டு
2.பலருடைய எண்ணங்கள் நமக்குள் குடும்பமாக வாழ்கிறது
3.கோபப்படுவோர் உணர்வை நுகர்ந்தால் நமக்குள் கோபத்தின் அணுக்கள் வளர்கின்றது
4.நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களுடன் அது போர் செய்கின்றது
5.ஆகவே அதை மாற்றி நட்பின் தன்மை அடைவதற்கு இந்த ஞானிகள் உணர்வை நாம் இப்படி எடுத்தல் வேண்டும்.

ஏனென்றால் நுகரும் உணர்வுகள் அணுவாக மாறுகின்றது… அணுவின் இயக்கமாக நம்மை மாற்றுகின்றது. எதனின் வலு அங்கு வருகின்றதோ அதனின் இயக்கமாக நம்மை இயக்குகின்றது. இதை நாம் அறிந்து கொள்வதற்குத் தான் கோவிலிலே இப்படிக் காட்டியுள்ளார்கள்

அந்த ஆலயம் வருவோர்… நாம் பார்ப்போர் குடும்பங்கள்… நாம் தொழில் செய்யும் இடங்களில் பணிபுரிவோர்… எல்லோருமே பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

உதாரணமாக நாம் தொழில் செய்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். நம்மிடம் வேலை செய்யும் ஒருவனுக்கு வீட்டிலே சங்கடமாக இருக்கின்றது.
1.சங்கட உணர்வுடன் இங்கே வந்து வேலையைச் செய்யும் பொழுது…
2.தவறாகச் செய்து விடுகின்றான்… உற்பத்தி ஆகும் பொருள் நஷ்டமாகி விடுகின்றது

அல்லது அவன் வேலைக்கு வரும் பொழுது ஒருவன் ரோட்டிலே எதிர்பாராது கீழே விழுந்து விடுகின்றான். அவனை உற்று நோக்கி இருந்தால் அந்த இரக்க மனம் கொண்டு அந்த வேதனையை எடுத்துக் கொள்கின்றான்.

அவன் நல்ல குணத்துடன் இந்த விஷம் கலந்து விடுகின்றது. அப்போது இருளடைந்து விடுகின்றது. இருளான உணர்வுகள் கலந்து இங்கே வேலையில் அமர்ந்து வேலை செய்யப்படும் பொழுது பொருளறிந்து செயல்படும் திறன் இழக்கப்படுகிறது… உற்பத்தி குறைந்து விடுகிறது.

அப்போது நாம் என்ன செய்ய வேண்டும்…?

நம்மிடம் வேலை செய்யும் அந்த தொழிலாளி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… பொருளறிந்து செயல்படும் திறன் அவன் பெற வேண்டும் என்ற உணர்வை நாம் பாய்ச்சினால் “அடுத்து அவன் தவறில்லாதபடி வேலையை நிதானித்துச் செய்வான்…”

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வினை அனைவருக்கும் நாம் வேண்டிடல் வேண்டும்… அதை வளர்த்திடல் வேண்டும். அதற்குத் தான் ஆலயத்தில் இந்த மார்க்கத்தைக் காட்டினார்கள்.

சிலையைப் பார்க்கும் பொழுது துவைதம். ஸ்தல புராணமாக வடித்து நற்குணங்களை அங்கே விவரித்துக் காட்டியுள்ளார்கள்.
1.அந்தத் தெய்வ குணத்தையும் தெய்வீக நிலைகளையும் நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறுதல் வேண்டும்
2.இந்த ஆலயம் வருபவர் எல்லோரும் தெய்வகுணம் பெற வேண்டும் தெய்வ நிலைகளும் பெற வேண்டும்
3.நாங்கள் பார்ப்போர் குடும்பம் எல்லாம் தெய்வ குணமும் தெய்வீகப் பண்புகளும் பெற வேண்டும்
4.நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் எல்லாம் தெய்வ குணங்கள் பெற வேண்டும்…
5.தெய்வ சக்தி அங்கு வளர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
6.நமக்குள் இல்லாதவர்கள் யாரும் இல்லை… எல்லோருமே நமக்குள் இருக்கின்றார்கள். “
7.எல்லோருக்கும் அந்த உயர்ந்த சக்தி கிடைக்கும்படி செய்ய வேண்டும் “மறைமுகமாக…”

ஏனென்றால் ஒரு வேதனைப்படுவனுடைய உணர்வுகள் “மறைமுகமாக” நமக்குள் வந்து தான் விஷத்தின் தன்மையாக மாறி… நம்மை அறியாமலே வேதனைப்படும் செயலாக அமைத்து விடுகின்றது. மற்றவரிடம் அதைச் சொல்லப்படும் போது அது எல்லோரையும் வேதனைக்குள்ளாக்குகிறது.

இதை மாற்ற வேண்டும் என்பதற்குத் தான் கல்யாணராமா…! பகைமைகளையும் வேதனைகளையும் அகற்றும்படி ஆலயத்தில் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

கூட்டுத் தியானம் மிக மிக அவசியம்… ஏன்…?

 

எல்லோரும் சேர்ந்து கூட்டாகத் தியானிக்கப்படும் பொழுது அந்தச் சக்தியை எல்லோருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்.

வீட்டிலே கவலை சஞ்சலம் மேல் வலி இடுப்பு வலி இது போன்று எத்தனையோ நிலைகளைச் சந்திக்க நேர்கின்றது. இருந்தாலும்…
1.கூட்டுத் தியானத்திலே மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஒரே ஏக்க அலையுடன் நாம் தியானிக்கிறோம்.

ஓம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லி… மகரிஷிகளின் அருள் சக்தி தியானத்தில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணி எடுக்கின்றோம். மகரிஷிகளின் அருள் சக்தியால் எல்லோரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று எல்லோரும் ஒன்று போல் சொல்கின்றோம்.

இது அனைத்தையுமே காந்தப்புலன்கள் கவர்ந்து கொள்ளும்.
1.ஒவ்வொருத்தருடைய உடலில் இருக்கக்கூடிய துன்ப நிலைகளை மறந்து
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒன்று போல் எடுத்து ஏக்க உணர்வுடன் பதிவு செய்யப்படும் பொழுது
3.எப்படிப் பல விதமான சத்துகள் உடைய செடிகள் பல குணங்கள் ஒன்றுடன் ஒன்று சேர்த்து அது உயர்ந்த மரம் செடிகளாக விளைகின்றதோ
4.பல விதமான பொருள்களைச் சேர்த்துக் குழம்பை ருசியாகச் சமைத்து மகிழ்ச்சியாக உணவாக உட்கொள்வது போன்று
5.கூட்டு தியானத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் இதைப் போன்று சொல்லி
6.ஒருவருக்கொருவர் இந்த உணர்வினைப் பாய்ச்சப்படும் பொழுது எல்லோருடைய உணர்வின் மணமும் ஒன்று சேர்கின்றது.

காரம், புளிப்பு இனிப்பு துவர்ப்பு அனைத்தும் சேர்த்து ருசியாகுவது போன்று இந்த வாழ்க்கையில் எந்த நிமிடத்திலும் எந்த நேரத்திலும் கூட்டுத் தியானங்கள் இருந்து மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்த உணர்வினை கலந்து எடுத்துக் கொண்டால் நம் வாழ்க்கையில் சுவை மிக்க நிலைகளாக உருவாக்க இது உதவும்.

அந்த சந்தர்ப்ப நிகழ்ச்சியை ஏற்படுத்தத் தான் இந்தக் கூட்டு தியானம். கூட்டுத் தியானம் இருப்பதே அதற்குத்தான்.

1.பல சங்கடமான எண்ணங்கள் இருந்தாலும் அது அனைத்தும் ஒன்று சேர்த்து
2.எல்லோரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று ஒரே உணர்வுடன் ஒலியை எழுப்பப்படும் பொழுது இந்த உணர்வுகள் ஆழமாகப் பதிவாகிவிடுகிறது.
3.பதிவு செய்து அந்த எண்ணத்தை நமக்குள் வலுப்படுத்துவதற்குத் தான் இந்தத் தியானம்.

கூட்டு தியானம் இருந்து பழகிக் கொண்டவர்கள் உடலை விட்டு உயிரான்மா பிரிந்தாலும் கூட… அந்த உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று எல்லோரும் சேர்ந்து நாம் கூட்டு ஐக்கியமாக இருந்து விண் செலுத்தப்படும் பொழுது மீண்டும் இந்த உடல் என்ற கூட்டிற்குள் செல்லாதபடி தடுத்து… ஒளிச் சரீரம் பெறும் நிலைக்கு “நாம் உந்தித் தள்ளலாம்…”

அதற்குத் தான் கூட்டுத் தியானங்களில் சப்தரிஷி மண்டலத்தினை நினைவுபடுத்தி அந்த உணர்வுடன் உங்களை இணைக்கின்றோம்.

சிறு துளி பெரு வெள்ளம். அந்த ஆற்றல் மிக்க சக்தியை நாம் எடுத்து கூட்டு தியானங்களில் ஒரே நிலையில் இருந்து… உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று உந்தி தள்ளி அங்கே இணைக்க முடியும். அப்போது அவர்கள் ஒளிச் சரீரம் பெறுகின்றார்கள்.

1.கடும் தவம் இருந்தோ வரம் வாங்கியோ எடுப்பதற்குப் பதிலாக
2.இராக்கெட்டை உந்து விசை கொண்டு விண்ணிலே ஏவி அங்கிருக்கக் கூடிய ஆற்றல்மிக்க சக்திகளை அறிந்துணர்வது போல
3.அந்தந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூட்டு தியானத்தின் மூலமாக
4.உடலை விட்டு பிரிந்த உயிரான்மா இன்னொரு உடல் பெறாதபடி ஒளிச் சரீரம் பெறும் தகுதிக்கு அங்கே உந்திச் செலுத்தலாம்.

அப்படி அல்லாதபடி கடும் ஜெபம் இருந்து நான் தனித்து விண்ணுக்குப் போவேன் என்றால் அது முடியாது. ரிஷித்தன்மை பெற்றவர்களும் இதைப் போன்று மக்கள் மத்தியிலே விண் செல்லும் மார்க்கத்தை அங்கே ஊட்டி அவ்வாறு தான் அவர்கள் விண் சென்றார்கள்.

இந்த தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் யாராவது உடலை விட்டுப் பிரிந்தால் அந்த ஆன்மாக்களை நாம் உந்தி விண் செலுத்தி விடுகின்றோம். நாம் இந்தப் பூமிக்குள் இருந்தால் மீண்டும் உடலுக்குள் தான் வர வேண்டி வரும்.

அதிலிருந்து தப்புவதற்குண்டான வழியைத்தான் இங்கே உபதேசிக்கின்றோம். “இது ஞானிகள் கண்ட அறவழி…”

மந்திரத்தைச் சொல்லி சொர்க்கலோகம் போகலாம் என்றால் அந்த மந்திரத்தால் அடுத்தவன் கையிலே சிக்கித் தவிக்க வேண்டி வரும். அப்படிப் போக வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் அப்படி நீங்கள் செல்லலாம்.

இல்லை… கூட்டுத் தியானம் இருந்து யாம் என் சொல்லும் முறைப்படி விண்ணுக்கும் செல்லலாம். ஏனென்றால் மனிதனாகப் பிறப்பது மிகவும் அபூர்வம்.
1.இந்த உடல் வாழ்க்கையில் வரக்கூடிய துன்பங்களைக் கழற்றி எறிந்து விட்டு
2.அந்த உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்றால் அது உங்கள் மனதைப் பொறுத்துத் தான் உள்ளது.

ஆக அந்த மெய் வழி பெற வேண்டும் என்று ஏங்கும்போது உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய இடையூறுகள் நீங்கும். அதற்குண்டான சக்திகளைத் தான் மீண்டும் மீண்டும் உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.
1.சாமி ஏதோ சொல்கிறார் என்று அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.
2.இப்பொழுது நாம் உங்களைத் தேடி வந்து தான் இதைக் கொடுக்கின்றோம்.

நீங்கள் இருந்த இடத்திலிருந்தே அந்த சக்தியைப் பெற முடியும் என்ற வாக்கினையும் பதிவு செய்கின்றோம்… பயன்படுத்திக் கொள்ளுங்கள்…!

அதே சமயத்தில் இப்பொழுது நன்றாக இருக்கின்றோம்… திடீரென்று உடலை விட்டுப் பிரிய நேர்ந்தால் “அய்யய்யோ இறந்து விட்டாரே… இப்படி ஆகிவிட்டதே…!” என்று யாரும் எண்ண வேண்டியதில்லை.

தியானத்தில் கலந்து கொண்ட அன்பர்கள் அனைவரும் சேர்ந்து அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று விண் செலுத்தினால்
1.ஜிர்…ர்ர்… என்று அந்த ஆன்மா மேலே போய்விடும்
2.அதற்கு இந்த ஒற்றுமை (கூட்டுத் தியானம்) அவசியம் தேவை.

அதைச் செய்வதை விடுத்து விட்டு அழுகிய சரீரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து “இங்கே புதைக்கலாமா…? அங்கே புதைக்கலாமா…? சமாதி கட்டி அழகுபடுத்தலாமா…?” என்று யோசனை செய்து கொண்டிருந்தால் இந்த புவியின் பற்றுக்குள் தான் வர வேண்டி வரும்.

1.இந்த நாய் எப்படியோ போகின்றது… அது பூராம் குப்பை… என்று தூக்கி எறிந்து விட்டு
2.உயிராத்மா அங்கே சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் நிலையான நிலைகள் பெற வேண்டும் என்று
3.அங்கே கொண்டு போய் விண்ணிலே செலுத்த வேண்டும்.

இந்த உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்…! உடலிலிருந்து தான் உயிராத்மா அழியா ஒளி உடல் பெற முடியும். ஏனென்றால் இந்த உடல் அழியக்கூடிய சமாச்சாரம் தான்.

உயிராத்மா மெய் ஒளி பெற வேண்டும்… அது தான் முக்கியம்…!

மண்ணிலிருந்து பெற்ற சக்தி தான் இந்த உடல். அது மண்ணுடனே மண்ணாக மக்கட்டும். மண்ணிற்குள் இருந்து எடுத்த சத்தை உயிர் ஒளியாக மாற்றிய பின் விண்ணுலகம் செல்ல வேண்டும்

எல்லோரும் அந்த ஒளியின் சரீரம் பெறுவதற்குத் தான் இந்த உபதேசம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் உயிருடைய வேலை அது நெருப்பிற்குச் சமம் தான். அதிலே எப்பொருளைப் போட்டு நாம் கலக்கின்றோமோ அதிலே வேக வைத்த பொருளின் மணம்… சுவை… வருவது போல
1.நம் உயிரின் தன்மை நாம் நுகர்ந்தது எதுவோ
2.அதனின் உயிர் அணுக்களாக மாற்றி அது படைத்துவிடுகின்றது.

எதனின் உணர்வின் தன்மையோ அதை நாம் கண்ணால் பார்க்கும்போது உணர்வால் நுகரும் தன்மை வருகின்றது. எதனின் உணர்வைத் தனக்குள் எடுக்கின்றோமோ அந்த உணர்வின் நிலையாக உடலின் அமைப்பு வருகின்றது.

நாம் எதனின் நிலைகளை உற்று நோக்கி… அந்த உணர்வின் தன்மை பெற வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் சத்தை நமக்குள் பதிவாக்கி அதனின் கணக்கின் பிரகாரமே அடுத்த நிலை.

ஆகவ… அந்த மெய்ஞானியின் உணர்வு கொண்டு
1.நாம் என்றும் பிறவியில்லா நிலை என்னும் நிலையை
2.அவன் அருளுடன்… அவன் உணர்வை நமக்குள் புகுத்தி… அவனுடன் இணைந்து இருப்பதே மேல்…!

அவனுடன் இணைந்து இருக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்…?

உங்கள் வாழ்க்கையில் வரும் எத்தனையோ இடையூறுக்கு மத்தியில் அந்த மகரிஷிகளின் உணர்வை இணைத்து இணைத்து அந்த அருள் ஞானிகளின் உணர்வை யாம் கொடுக்கின்றோம்.

தாவர இனங்களுக்கு ஊட்டம் கொடுக்கும் பொழுது முதலில் ஒரு முறை கொடுக்கின்றோம். ஒரு முறை எடுத்துக் கொண்ட பின் அடுத்த முறை தாவர இனத்தைப் புதுப்பிக்கின்றோம்.

அப்படி… அதற்குத் தக்கவாறு அதனுடன் இணைத்துக் கொண்டு தான் புது வித்தின் தன்மையாக மாற்ற முடியும்.
1.ஏனென்றால் ஒரு வித்தின் தன்மை எடுத்த பின் நேரடியாக அதை மாற்றிக் கொண்டு வர முடியாது.
2.அதனைப் பல முறைகள் கொண்டு சிறுகச் சிறுக இணைத்து இணைத்து
3.அதை மாற்றுப் பொருளாக உருவாக்கி உருவாக்கி இதை சீராக ஒன்றிணைக்கும் நிலைகள் கொண்டுதான் மாற்ற முடியும்.

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால்…
1.நமக்குள் வேதனைப்படும் உணர்வுகள் ஏராளம் ஏராளம்.
2.பகைமையான உணர்வுகளை வளர்த்துக் கொண்ட வித்துகள் ஏராளம் ஏராளம்.
3.தன்னைக் காக்க தான் எடுத்துக் கொண்ட கோபத்தின் தன்மை ஏராளம் ஏராளம்.

இதைப்போல நமக்குள் வித்துகள் அதிகமாக பெருக்கி இருக்கும் வேளையில்… இவை அனைத்தும் ஒருக்கிணைந்து….. இதையெல்லாம் இணைத்து… அரவணைத்து… அதை அடக்கி…
1.உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிய… அருள் ஞானியின் உணர்வின் தன்மை கொண்டுதான்..
2.உங்களில் இணைந்து வரும் குணத்துடன் இணைத்து இணைத்து
3.அந்த உணர்வின் தன்மை இரண்டு முறை மூன்று முறை இதைப் போன்று பிணைத்து
4.இந்த உணர்வின் தன்மை உங்கள் குணத்துடன் ஒன்றச் செய்து
5.நினைவு கொண்டு நீங்கள் பெறும் ஆற்றல் பெற அந்தத் தகுதியைப் பெறச் செய்ய வேண்டும் (எம்முடைய வேலை)

அது அல்லாது செய்தோம் என்றால் வெறும் பாடப் புத்தகங்களை படித்துவிட்டு ஆகா…! நன்றாக இருக்கிறது என்ற நிலைகள் கொண்டு தூக்கி எறிவது போன்று ஆகிவிடும். அடுத்த நினைவுகள் வராது…!

ஆகையினால்… எந்த மெய் ஞானிகளின் உணர்வின் தன்மையை உங்களுக்குள் பதிவு செய்கின்றோமோ அந்தப் பதிவின் நினைவாற்றல் உங்களுக்குள் ஓங்கி வளர வேண்டும்

இதைப் படிப்பவர் அனைவரும் இதை மனதில் பதிவு செய்யுங்கள்….!

உங்களுக்கு எது சொந்தம்…? அருள் மகரிஷிகளின் உணர்வை உங்களுக்குள் பெருக்குங்கள். இந்த வாழ்க்கையில் அதைச் சொந்தமாக்குங்கள்.

1.அதே சமயத்தில் இந்த வாழ்க்கையில் வந்த பிறருடைய குறைகளைச சொந்தமாக்க வேண்டாம்.
2.அந்தச் சொந்தத்தை நீங்கள் கொண்டாடவும் வேண்டாம்.

அந்தச் சொந்தத்தைக் கொண்டாடி விட்டால் பகைமை உணர்வு கொண்டு எந்தக் கூட்டத்திற்குச் சென்றாலும். அதனின் இனப் பெருக்கமாக மாறிவிடும்.

நமக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்தும் எதனை எடுக்கின்றோமோ உணர்வின் செல்களாகத் தான் பெருகும்.

மான் அதனின் கூட்டமைப்பாக வாழ்கின்றது. அதே சமயம் மற்ற மான்களின் குணங்களுக்கொப்ப வகை வகையான மான்கள் வருகின்றது. பல வகைகள் இருந்தாலும் அதனதன் கூட்டம் அதோடு சேர்ந்து விடுகின்றது.

இதைப் போலத்தான் இந்த உடலுக்குள் எந்தக் குணத்தின் பெருக்கத்தை அதிகமாகக் கொண்டாருகின்றோமோ நம் உடலுக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்தும் அந்த உணர்வின் தன்மையாக மாறிவிடும்.

அப்படி மாறினால்… அதனுடைய கூட்டமைப்பான நிலைகள் கொண்டு அதனுடைய கூட்டமைப்பு எங்கே வாழுகின்றதோ…
1.அங்கே நம் உயிரான்மா சென்று
2.அந்தக் கூட்டமைப்புக்குள் சுற்றி
3.அதனின் உணர்வுக்குள் நுழைந்து
4.அந்த உணர்வின் ஆற்றலாக உடலை மாற்றிவிடும்.

ஆகவே இதையெல்லாம் தெரிந்தே சொல்கின்றேன். பாடப் புத்தகத்தைப் படித்து விட்டு உங்களிடம் பாடவில்லை.. எனக்குக் கூடுவிட்டு கூடு பாயும் வித்தைகளையும் சொல்லிக் கொடுத்தார் குருநாதர்.

ஏனென்றால் குருநாதர் எம்மை மாட்டுக்குள்ளும் புகுரச் செய்தார்… பாம்புக்குள்ளும் போகச் சொன்னார்… யானைக்குள்ளும் போகச் சொன்னார்… அதை எவ்வாறெல்லாம் பெற வேண்டுமென்று…!

இதை எல்லாம் உங்களிடம் எளிதில் சொல்லவில்லை…! முன்னாடி சொல்லியிருக்க மாட்டேன்…!

வித்தை எல்லாம் தெரிந்து கொண்டு தான் அதற்குள் போகின்றேன். அப்பொழுது அந்த உணர்வின் தன்மை பெருகி விட்டால் ஆன்மாவின் தன்மை எப்படி ஆகும்…?
1.அதற்கு முன்னாடியே குருநாதர் என்னை கைவல்யம் செய்து
2.எப்பொழுதுமே கைப் பிடித்து வைத்திருந்தார்.

ஆகவே இதைப்போல அந்த உணர்வை இயக்கச் செய்து உணர்வின் தன்மை கவர்ந்து கொண்ட பின் இந்த உணர்வின் ஆன்மா இந்த உடலை விட்டுச் சென்ற பின்
1.அதிலே எது பெருகுகின்றது…?
2.எதனின் உடலில் ஆன்மாவை அழைக்கின்றது…?
3.மனித உடலில் பெருகிய பின் அந்த உடலுக்குள் போய் எப்படி இயக்குகின்றது..?
4.மீண்டும் நீ வெளிவர வேண்டும் என்றால் என்ன செய்வது…?

மனிதனின் உடலில் இது உருவாக்கப்படும் பொழுது இந்த உணர்வின் தன்மை கொண்டு அடுத்த பிறவி எப்படி வருகின்றது…? என்று தெளிவாக்கினார் குருநாதர்

இதுதான் கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எத்தனையோ நிலைகளில் இன்று இருந்தாலும் இந்தச் சரீரத்தை விட்டு ஆன்மா பிரிந்து சென்று விட்டால் நம் அழகையும் அல்லது நாம் போற்றித் துதித்த தருமத்தையும் யாராவது சிந்தித்துப் பார்க்கின்றார்களா…?

நேரமாகிவிட்டது… சடலம் அழுகிவிடும்… சீக்கிரம் கொண்டு போங்கள்…! என்று தான் சொல்கின்றார்கள்.

அங்கே எரிக்கும் இடத்தில் என்ன செய்கின்றனர்…? நெருப்பிலே இட்டு எரிக்கும் பொழுது நம்முடைய நிலைகள் என்னவாக இருக்கின்றது…! என்று பார்க்கலாம்.

அதே சமயம் புதை குழியில் உடலைப் போடும்போது அதை எவ்வளவு தூரம் அசுத்தப்படுத்துகின்றோம்…? நம்மைச் சேர்ந்த சொந்தக்காரர்கள் தூக்கிப் போடுகின்றார்களா…? என்றால் இல்லை…!

யாரையாவது வைத்துத் தூக்கி போடுங்கள்…! என்று தான் போடுகின்றோம். அது அதற்கென்று இனங்களைப் பிரிக்கப்பட்டு “அவர்கள் அதற்குதான்…!” என்கின்றார்கள்.

ஏனென்றால் இவர்களை அது சாடிவிடுமாம்…!

ஆனால் இறந்தவர்களின் சொத்து தேவை… வீடு வாசல் பணம் எல்லாம் தேவ…!. ஆகவே இப்படித்தான் நமது உணர்வு வருகின்றது.

1.இந்த உடலை “நமக்குச் சொந்தம்…!” என்று ஆக்க வேண்டாம்
2.இந்த உடலில் சொந்தம் கொண்டாடி அதிலே அறியாது வளர்த்துக் கொண்ட தீய வினை சாப வினைகள நீக்கி
3.உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றி அதிலே நிலை கொள்ள வேண்டும்.

என்றுமே நிலையான சரீரம் நமக்கு வேண்டுமென்றால் நம் பற்று எதிலே வேண்டும்…?

மகரிஷிகளின் அருள் உணர்வில் நமக்குப் பற்று வேண்டும். அந்தப் பற்றினை வளர்த்துக் கொண்டால் அதன் கணக்கின் பிரகாரம் அங்கே மகரிஷிகள் வாழும் எல்லைக்குச் செல்கின்றோம்.

இல்லை என்றால்… சாப அலையில் தீய அலையில் சிக்கியவர்கள்… நஞ்சு கொண்டு ஒருவரை ஒருவர் அழித்திட வேண்டும் என்ற இந்த எண்ணம் கொண்ட உணர்வுகள் வளர்ந்து… தாவர இனத்தை புசித்து வாழும் உடல் நிலை மாறி… மற்ற உயிரினங்களைக் கொன்று புசிக்கும் உடலாக வரும்.

அப்படிக் கொன்று மற்றொன்றின் உடலுக்குள் புகுந்து…
1.இப்படி பல நிலைகள் மாறி மாறிப் பல நரக லோகத்தைச் சந்தித்த பின்…
2.அந்தத் தண்டனைகளை எல்லாம் அனுபவித்த பின் தான்
3.மீண்டும் மனிதனாக வர முடியும்.

சாதரணமாக மனிதனின் கையில் சிக்கி அத்தகைய உயிரினங்கள் சாகாது தன் பசிக்காக ஏங்கி இருக்கும் மிருகங்களின் வாயிலே சிக்கித் தான் அங்கே அழியும்.

ஒரு புலி இதை அடித்துக் கொல்கிறதென்றால் அப்பொழுது புலியாகப் பிறக்கும் நிலை வருகின்றது. ஒரு பாம்பினத்தில் சிக்கித் தவிக்கிறது என்றால் அடுத்த பிறப்பில் அந்த உயிர் பாம்பாகதான் பிறக்கும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்பதற்குத்தான் உங்களுக்கு இந்த உண்மைகளை எல்லாம் உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.

1.எமக்கு குருநாதர் அந்த விண்ணுலக ஆற்றலையும்
2.மண்ணுலக நிலையில் உணர்வின் பெருக்கமும் உணர்வின் மாற்றங்களும்
3.உணர்வுக்கொப்ப உடலின் மாற்றங்களும் உணர்வுக்கொப்ப ரூபங்களும்
4.அதனுடைய குணங்களும் அதனுடைய நிறங்களும் எவ்வாறு மாறுகிறது என்ற நிலையைத் தெளிவாக எடுத்துக் காட்டினார்.

அவர் காட்டிய அந்த அரும் பெரும் சக்திகளை… உங்கள் வாழ்க்கையில் வந்த நிலைகளும்… உலக அரசின் நிலைகளும்… மதத்தின் அடிப்படையில் வந்த குணங்களும்… நீங்கள் வளர்ந்து வந்த நிலைகளும் அவைகளுடன் இணைத்தே உபதேசிக்கின்றோம் .

மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர் அருளிய நிலைகளை
1.அந்த அண்டத்தில் இருக்கும் நிலைகளை
2.பிண்டத்துக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் உங்கள் உணர்வோடு இணைத்து
3.அந்த உணர்வின் தன்மை கொண்டு மெய் வழி காணும் மெய் ஒளி பெறும் நிலைகளுக்கு உங்களை உருவாக்குவதுதான் என்னுடைய வேலை.

குருநாதர் என்னை எப்படி உருவாக்கினாரோ அதைப்போல உங்களையும் உருவாக்க வேண்டும் என்பதற்குத்தான் அந்த மகரிஷியின் உணர்வுகளை உங்களுக்குள் பெருக்கச் செய்கின்றோம்.

உபதேசத்தைக் கேட்டுவிட்டு “சாமி நன்றாகக் கதை சொல்கிறார்” என்று எண்ணினால் அது உங்கள் இஷ்டம்…!

 

இன்றைய விஞ்ஞான உலகம் எதிலே இருக்கின்றது…? காற்று மண்டலம் விஷமாகி விட்டது. புழு பூச்சியைக் கொல்வதற்காக உணவுப் பயிர்களில் விஷத்தைத் தூவுகின்றார்கள். ஆக சாப்பிடும் உணவிலே விஷம்…. உணர்விற்குள் விஷம்.
1.விஷம் கலந்து விட்டால் சிந்தனை இல்லை… ஆனால் அதைத்தான் கலந்து உணவாகச் சாப்பிடுகின்றோம்.
2.சிந்திக்கும் திறனை இழந்து கொண்டே வருகின்றோம்.

உடலில் ஏதாவது வலி எடுக்கிறதா…? காய்ச்சல் அடிக்கின்றதா…? உடனே ஒரு இன்ஜெக்ஷன். அந்த ஒரு டோஸ் போட்டதும் நின்று விடும்… நிற்கவில்லை என்றால் இன்னொரு டோஸ் சேர்த்துக் கொடுப்பார்கள். எல்லாம் நின்று விடுகின்றது.

பின் விளைவாக… உடலுக்குள் இனிப்புச் சத்தை எல்லாம் மாற்றி விடுகின்றது. காய்ச்சலுக்கு ஊசி போட்டேன் அடுத்தாற்போல் சர்க்கரைச் சத்து வந்துவிட்டது.

அதே போல் காய்ச்சல் என்று சொல்லி இன்னும் நான்கு டோஸ் போட்டோம் என்றால் சிறுநீரகங்கள் பழுதடைந்து விடுகிறது. நம் இரத்தங்களில் உப்புச் சத்து வந்து விடுகின்றது.

தலை வலிக்கு என்று மாத்திரை சாப்பிடுவார்கள்.
1.எப்பொழுதெல்லாம் தலை வலிக்கிறதோ அப்பொழுதெல்லாம் மிட்டாய் சாப்பிடுவது போல் மாத்திரையைச் சாப்பிடுவார்கள்… தலைவலி நின்றுவிடும்…
2.கூடிய சீக்கிரம் கிட்னியில் விஷத்தினைப் பிரிக்கும் நிலையினை அந்த வலுவை இழந்து விடுகின்றது… கிட்னி சரியாக வேலை செய்யாது.

இப்படிப்பட்ட விஞ்ஞான உலகில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். யாரையும் யாம் குறையாகச் சொல்லவில்லை.
1.ஏனென்றால் அவசரத்திற்கு… இந்தத் தலைவலி நீங்கினால் போதும் என்று விரும்புகிறோம்.
2.ஆனால் சிறுகச் சிறுக நம் சிறுநீரகங்கள் பாதிப்படைவது நமக்குத் தெரிவதில்லை.
3.கடைசியில் இலட்சக்கணக்கில் அதற்குச் செலவழிக்க வேண்டி வருகின்றது.

இது மட்டுமல்ல அறியாத நிலையில் இருந்தால் மயக்க மருந்தோ மாத்திரையோ கொடுத்து ஆளை அபேஸ் செய்து ஆஸ்பத்திரியில் நம் உடலில் இருக்கக்கூடிய முக்கியமான உறுப்புகள் கண்கள் சிறுநீரகங்கள் இதையெல்லாம் திருடி விடுகின்றார்கள். அது வியாபாரம் ஆகின்றது… விஞ்ஞான உலகம் அப்படி இருக்கின்றது.

பண வசதி படைத்தவனுக்கு இந்தக் கண்கள் மற்ற உறுப்புகள் எல்லாம் பயன்படுகிறது. குழந்தைகள் காணாமல் போய்விட்டது என்று கேள்விப்படுகின்றோம்.கடத்திக் கொண்டு போய் என்ன செய்கின்றார்கள்…? குழந்தைகளின் மூளையை எடுத்து வடிகட்டி மருந்தாகத் தயார் செய்கிறார்கள்.

பண வசதி உள்ளவர்கள் வயதானவர்கள் 75 வயதாகி விட்டது… உடல் சுருங்குகின்றது உணர்வுகள் சுருங்குகின்றது.
1.சிறு குழந்தைகளிடம் இருக்கக்கூடிய மூளைகள் மூலமாக உருவாக்கிய சத்துக்களை ஊசியாக அவர்களுக்கு செலுத்தப்பட்டவுடன்
2.அவர்கள் வயசுப் பிள்ளையாக மாறிவிடுகின்றார்கள்.
3.குழந்தைகள் சாக வேண்டும் ஆனால் அவர்கள் வயதுப் பிள்ளையாக வாழ வேண்டும் என்று
4.இன்றைய விஞ்ஞானத்தில் இது நடந்து கொண்டிருக்கின்றது.

விஞ்ஞான வழியில் போக வேண்டும் என்றால் அப்படிப் போகலாம். இந்த உலகம் பூராம் விஷத்தன்மை பாயும் நேரத்தில் மெய் ஞானிகள் காட்டிய வழியில் சென்றால் தப்பிக்கலாம்.

காடு மேடலாம் விஷத்தன்மை பரவி விட்டது. மேலை நாடுகளில் எல்லாம் தழைத் பாம்புகளை அது போன்ற சத்துள்ளவைகளை ஆடு மாடு போன்ற மற்ற தான் வளர்க்கும் உயிரினங்களுக்குக் கொடுத்து நன்றாக வளர்த்து அந்த மாமிசங்களை இவர்கள் உட்கொள்கின்றார்கள்.

அதே மாதிரி மனிதர்கள் உறுப்புகளை எடுத்து வியாபாரம் செய்வது… மனிதன் தனியாகச் சென்றால் அவனுக்கு உதவி செய்வது போன்று அழைத்துச் சென்று அவனையே அறுத்து வேக வைத்துச் சாப்பிட வேண்டியது. அப்படிப்பட்ட காலம் வந்துவிட்டது.

நான் விளையாட்டுக்குச் சொல்லவில்லை. அப்படிப்பட்ட நிலை உலகிலே உருவாகி விட்டது…!

சில இடங்களிலே நாங்கள் அனாதைக் குழந்தைகளுக்கு உதவி செய்கிறோம் என்று வளர்ப்பார்கள். கடைசியில் எங்களுக்குக் குழந்தை வேண்டும் (தத்துக்கு) என்று சொல்லி மேலை நாடுகளுக்கு அழைத்துச் சென்று விடுவார்கள்.

வேண்டிய உறுப்புகளை மட்டும் எடுத்துவிட்டுக் கப்பலில் சென்று மற்றதைத் தூக்கிக் கடலிலே வீசி விடுகின்றார்கள்.

இதெல்லாம் இன்று நடந்து கொண்டிருப்பது…
1.மனிதன் மிருகம் ஆகிவிட்டான்…
2.இந்த உலகத்தில் தான் இன்று வாழ்கின்றோம்
3.உலகத்தில் மாற்றத்தினுடைய நிலையில் நெருங்கி விட்டது.

இதிலிருந்து நீங்கள் உங்களை காப்பாற்றிக் கொள்ள என்ன செய்யப் போகின்றீர்கள்…?

மந்திரத்தினால் யந்திரத்தினால் நன்றாக வேண்டும் என்று எண்ணினால் அந்த வழியில் செல்லுங்கள். இல்லை என்றால் இப்பொழுது யாம் உபதேசிப்பது போன்று அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி அந்த ஆற்றல் மிக்க சக்திகளை வளர்த்து உங்களை நீங்கள் காத்துக் கொள்ளலாம்.

உங்களுடைய இஷ்டம் தான் அது…!

1.குருநாதர் காட்டிய அருள் வழியில் அனைத்தையும் நான் கண்டேன். பார்த்தேன் உண்மையைச் சொல்கின்றேன்.
2.நீங்கள் அனைவரும் நன்றாக வாழ வேண்டும் என்று உயர்ந்த சக்திகளைக் கொடுக்கிறோம்.
3.அதை எடுக்க வேண்டும் என்றாலும் எடுக்கலாம்…
4.இல்லை… “சாமி நன்றாகக் கதை சொல்கின்றார்” என்று நினைத்துக் கொண்டு போனாலும் போகலாம்.
5.”பழைய நிலைகளிலிருந்து மாறாதபடி… அப்படியே இருக்கலாம்…”

இது எல்லாம் உங்களுடைய இஷ்டம் தான்.

நல்ல நிலைகள் பெற வேண்டும் என்று உபதேசிக்கின்றேன். திட்டியவர்களைப் பற்றி எண்ணியவுடன் அல்லது காதிலே கேட்டவுடன் அவர்களை உடனே தாக்க வேண்டும் என்று எப்படி அந்த வேகங்கள் வருகின்றதோ அதே போன்றுதான்
1.நன்றாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணினால்
2.உங்கள் துன்பங்களை அகற்றிவிட்டு நோய்களை அகற்றிவிட்டு உங்களை மகிழ்ந்து வாழச் செய்யும்.
3.அந்த நிலைக்கு வர வேண்டும் என்றால் யாம் சொன்னதை எடுத்துக் கொள்ளலாம். “அது உங்கள் இஷ்டம்…”

இன்று வாழ்கின்றோம்… செத்த பிற்பாடு யாருக்கு என்ன தெரியப் போகிறது என்று நீங்கள் நினைக்கலாம்.

ஆனால் இறந்த பின் உடலுக்குள் “பேயாக ஆடுவதையும்” தீயிலே குதித்து இறந்து விட்டது என்றால் அடுத்த உடலுக்குள் சென்று “அய்யய்யோ அய்யய்யோ எரிகிறது” என்று அலறிக் கிடப்பதையும் பார்க்கலாம்.

இறந்த பிற்பாடு இந்த ஆன்மாக்கள் அடுத்த உடலில் புகுந்து விட்டால் இப்படித்தான் வேலை செய்யும்.

மருந்து குடித்து இறந்ததென்றால் அந்த ஆன்மா ஒரு உடலுக்குள் சென்றால்… அது மருந்தைக் குடிக்கும் போது “தொண்டை எல்லாம் எப்படி மண்ணையைப் பிடித்து இறுக்கியதோ” இந்த உடலில் அதே மாதிரி இயக்கும்.

ஆக… இறந்த பிற்பாடு எங்கே செல்கிறோம்…? என்றால் இன்னொரு உடலுக்குள் சென்று அவனை வீழ்த்தி விட்டு அந்த விஷத்தின் தன்மை கொண்ட அடுத்த உடல் பெறுவதற்கு… மிருக இனங்களாகச் செல்வதற்குத் தயாராகி விடுகின்றது.

இப்படித்தான்… “நாம் செத்த பின் சொர்க்கலோகம் போகிறோம்…” என்று சொல்வது.

ஆகையினால் இந்த உண்மை நிலை எல்லாம் நீங்கள் உணர்ந்து கொண்ட பின் மெய் வழியின் தன்மை பெற வேண்டும் என்றால் இது போன்ற தியானங்களின் மூலம் அந்த ஞானிகள் அருள் சக்திகளை நீங்கள் எடுக்க முடியும்.

அவர்கள் எல்லாம் பத்தாவது நிலையான கல்கி நிலையை அடைந்தவர்கள். அந்த உயர்ந்த எண்ணங்களை எடுக்க வேண்டும் என்றால் அதற்குத் திறன் வேண்டும். “அதற்கு வேண்டிய மின்சாரம் தேவை…”

எமது குருநாதர் விண்ணிலிருந்து வரக்கூடிய ஆற்றல்களை உடலுடன் வாழும் பொழுது அவர் எடுத்துக் கொண்டதை அது எப்படி…? என்று எமக்கு உபதேசித்தார்.
1.மெய் ஒளியின் தன்மையைப் பெருக்கும் நிலையும் மனித உணர்வுகள் அண்டாத நிலையும்
2.அந்த விண்ணுலக ஆற்றலை எடுத்து அதை வளர்த்துக் கொள்ளும் முறையையும்
3.மெய் ஞானிகள் அருள் சக்திகளை எடுக்கும் தகுதியையும் எனக்கு ஏற்படுத்தினார்.

12 வருட காலம் அனுபவமாகப் பெற்றேன். அதைத் தான் சொல்லாக இப்பொழுது வெளிப்படுத்துகின்றேன். இதை நீங்கள் பதிவு செய்து கொள்ளுங்கள் நினைவு கொண்டால் ஆத்ம சுத்தியின் மூலமாக அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற முடியும்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று நீங்கள் எண்ணினீர்கள் என்றால் நமக்குள் வரக்கூடிய தீமைகளை அகற்ற முடிகின்றது.

கருணைக்கிழங்கினை வேக வைத்து விஷத்தை நீக்கிப் பல சுவை மிக்க பொருள்களைப் போட்டு அதை உணவாக உட்கொண்டு மகிழ்ச்சி அடைவது போன்று
1.எப்படிப்பட்ட சங்கடங்கள் வந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை உடலுக்குள் புகுத்தி
2.அந்த ஆற்றலைத் தனக்குள் சேர்த்து உடலுக்குள் தீமை வராதபடி தடுக்க இது உதவும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கண்ணன் துகிலை உறிந்தான்… யார்…? கிருஷ்ணன்…! குளிக்கும் பெண்களின் சேலைகளை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு வேடிக்கை பார்த்தான் என்று காவியங்கள் சொல்கின்றது.

அதனின் உட்பொருள் என்ன…?

1.நம் கண்கள் ஒன்றை உற்றுப் பார்க்கின்றது… அந்த உணர்வைப் பதிவாக்குகின்றது
2.கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ அந்த எண்ணத்தின் அலைகள் வரப்படும் பொழுது
3.தனக்குள் அந்த உணர்வுடன் மோதும் பொழுது (அங்கே என்ன நடக்கிறது என்பதை) அவர் திருட்டுத்தனம் செய்கின்றார்…? என்று
4.அதற்குள் அவர் உணர்வின் தன்மையை இழுக்கின்றது… அதாவது துகிலை உறிகின்றான்.
5.இந்த உணர்வின் தன்மை கொண்டு உள்ளே மறைத்த நிலைகள் செயல்படுவதை
6.உள் நின்று அந்த உணர்வை இழுத்துத் தனக்குள் அறிகின்றது – நம் கண்கள்.

இதைக் காட்டுவதற்குத் தான் உருவமாகக் காட்டி “கண்ணன் துகிலை உறிந்தான்…” என்று கருத்தினைப் பதிவு செய்கின்றார்கள்.

கண்ணன் வெண்ணையைத் திருடுகின்றான் என்றும் சொல்வார்கள். அதாவது ஒவ்வொரு உணர்வின் தன்மையையும் (அதற்குள் இருக்கும் வலிமையை) “தீமையை நீக்கும்” உள் இருக்கும் உணர்வை அறிகின்றது.

உதாரணமாக ஜாதகம் ஜோதிடம் பார்ப்பவரிடம் சென்று நல்லது கெட்டது பார்க்கப் போனால் தெரியும்… ஏனென்றால் அவர்கள் கண்களைத் தான் உற்றுப் பார்ப்பார்கள்.

நீங்கள் அவரைப் பார்க்காதபடி தலையை மட்டும் கொஞ்சம் குனிந்து கொண்டே இருந்தால் போதும். அவரால் ஒன்றும் சொல்ல முடியாது… பேச முடியாது.

அவர்கள் அதே எண்ணத்தில் (பழக்கத்தில்) இருக்கும் பொழுது
1.நம் கண்களை நேர் கொண்டு பார்த்த பின் உணர்வின் தன்மை மோதும் போது
2.இப்படி இருந்தது அல்லவா…! என்று நடந்ததைச் சொல்வான்.
3.அறியாமலே நாம் தலையாட்டத் தொடங்குவோம்
4.அதை பிடித்துக் கணக்கு போட்டுக் கொண்டே சொல்வான்.

அதற்குத் தகுந்த மாதிரி அவன் சொல்லச் சொல்ல… நாம் ஆமாம்… ஆமாம்… ஆமாம்…! என்று சொல்லிக் கொண்டே வருவோம் வரிசையில் அவன் சொல்லிக் கொண்டு போவான்.

ஜாதகம் ஜோதிடம் சொல்பவர் எல்லாம் இப்படித்தான் அவர்கள் வெளிப்படுத்துவார்கள் ஆனால் ஜோதிடமும் ஜாதகமும் மனிதனுக்கு இல்லை.

ஏனென்றால் அவன் தான் நமக்குள் அதைப் பதிவு செய்கின்றான். எப்படி…?

உங்கள் குழந்தை இந்த நேரத்திலே பிறந்திருக்கின்றது. இந்த நேரத்திலே இந்த நட்சத்திரத்திற்கு மிருகம் தான் பிறக்கும். ஆகையினால் அந்த குணத்தின் தன்மையாக உங்கள் குழந்தை இருப்பான்… அசுர செயல்களைச் செயல்படுத்துவான் என்று இவன் “கால்குலேஷன்” போடுவான்.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

ஏழரை நாட்டுச் சனி பிடித்திருக்கின்றது… குடும்பத்திற்கு ஆகாது…! மிருகங்களை எப்படிக் கட்டுப்படுத்த முடியாதோ அது போல் குழந்தை அவன் உணர்ச்சிப்படியே செல்வான். அவன் பிறந்ததிலிருந்து “உங்கள் குடும்பத்திற்கு சனியன்” என்று வரிசையில் சொல்லிக் கொண்டு போவான்.

ஆனால் குழந்தை ஒன்றும் தவறு செய்யவில்லையே…!

குழந்தை பிறந்த ஜாதகத்தை… அந்தச் சட்டத்தை இவன் எழுதுகிறான். நீங்கள் நம்பிக்கையுடன் செல்லும் பொழுது இதை எடுத்து உருவாக்கி வைத்து விடுகின்றான்.

அடுத்து நாம் என்ன செய்கின்றோம்…?

இந்த உணர்வுடன் நாம் தொழில் செய்யும் இடங்களுக்குச் சென்றால் நம்மிடம் பொருளை வாங்கிச் சென்றவன் பணத்தைத் திரும்பக் கொடுப்பானா…! கொடுக்க மாட்டானா…? என்று எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்து விடுகின்றது.

இந்த உணர்வுகள் வந்த பின் சந்தேக உணர்வு அவனுக்குள் ஆனபின் அவன் கொடுக்கவே மாட்டான். இங்கே எண்ணிய எண்ணம் அங்கே செயலாகிறது.

1.ஆக… அந்த ஜாதகக் குறிப்புப் பிரகாரம் அவன் சொன்னது நமக்குள் பதிவாகி அது கடவுளாக இயங்க ஆரம்பித்து விடுகிறது.
2.அவன் தான் (ஜோதிடம் சொல்பவன்) சிருஷ்டிக்கின்றான்… எண்ணத்தால் நமக்குள் இப்படி உருவாகிவிடுகிறது.

ஆனால் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குழந்தை பெற்று “அவன் இப்படித்தான் இருக்க வேண்டும்… நற்பண்புகள் நற்குணங்களுடன் வாழ வேண்டும்…” என்று கருவில் இருந்தே இப்படி வளர்த்துப் பாருங்கள்.

குடும்பத்தில் எவ்வளவு தரித்திரம் இருந்தாலும் அது நீங்கிவிடும். அத்தகைய சக்தி பெற்ற வல்லமை பெற்றவனாக அவன் மாறுவான். நீங்கள் இதைத்தான் உருவாக்க வேண்டும்.

ஆனால் இன்று வழக்கத்தில் நாம் எப்படி இருக்கின்றோம்…?

குடும்பத்தில் கர்ப்பம் என்று இருந்தாலும் கூட ஆயிரம் சண்டைகள் போடுவோம்.
1.இதெல்லாம் கர்ப்பிணிப் பெண்ணுக்குள் பதிவான பின் குழந்தை உருவாகிப் பிறந்த பின்
2.அவன் அதே குணத்துடன் எல்லோருடன் சண்டை இழுத்துக் கொண்டிருப்பான்.
3.ஊரில் இல்லாத வம்பை எல்லாம் இழுத்துக் கொண்டு வருவான்.

காரணம்… சண்டையிட்ட உணர்வுகள் தாய்க்கு ஊழ்வினையாகப் பதிவானது. கருவிலே விளையும் குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்து விடுகின்றது.

குழந்தை உருவாகும் பொழுதே மகரிஷிகள் சக்தி என் குழந்தை பெற வேண்டும். அந்த அருள் ஞானம் பெற வேண்டும்… உலக ஞானம் பெற வேண்டும்… தீமைகளை அகற்றிடும் அந்தச் சக்தி பெற வேண்டும்… நஞ்சை வென்றிடும் உணர்வுகள் பெற வேண்டும்… என்று தாயும் சரி குடும்பத்தில் உள்ள அனைவரும் சரி இப்படிச் சொல்லிப் பாருங்கள்.
1.ஞானிகளுடைய உணர்வுகளை எடுத்து
2.அருள் ஞானக் குழந்தைகளை வளர்த்துப் பாருங்கள்

அக்கால அரசர்கள் வல்லமை பெற்ற குழந்தைகளை இப்படித் தான் உருவாக்கினார்கள்… ஆனால் மக்கள் யாரும் செய்யவில்லை.

அரச குடும்பத்தில் கர்ப்பம் ஆகிவிட்டார்கள் என்று தெரிந்தாலே கர்ப்பிணித் தாய்க்கு பலவிதமான விஷங்களையும் பலவிதமான போதனைகளையும் கொடுத்து… அந்தக் கருவிலேயே விஷமான உணர்வுகளை ஏற்றி… எந்த விஷமும் பாதிக்காத அளவிற்குத் தன் நாட்டினுடைய பெருமைகளைச் சொல்லி சக்தி வாய்ந்த குழந்தைகளை அன்று உருவாக்கினார்கள்.

விஷத்தின் ஆற்றலால் தான் (எல்லாமே) வலிமை பெற்றது. அந்த உணர்வைக் கொடுத்துக் கொடுத்து அந்த விஷத்தை ஏற்றி வைத்துத் தாயினுடைய இரத்தத்தின் வழி குழந்தைக்கு அது போய்ச் சேரும்படி செய்தார்கள். மிருகத்துக்கு ஒத்த வலு அந்தக் குழந்தைக்கு வருகின்றது

அதே சமயத்தில் பல போதனைகளையும் சேர்த்துக் கொடுப்பார்கள்.

நாட்டினுடைய நன்மை பெருமைகள்… எதிரிகளைப் பற்றிய உண்மைகள்… எதிரிகளை எப்படி வீழ்த்த வேண்டும்…? இராஜதந்திரங்களை எப்படிச் செயல்படுத்த வேண்டும்…? என்று கதையைச் சொல்லிக் கொண்டே வருவார்கள்.

இந்த கர்ப்பிணி அதை கேட்டுக் கொண்டே இருக்கும். அரச குழந்தைகளை இப்படித்தான் அன்று உருவாக்கினார்கள். ஆனால் மக்களிடம் சொன்னால் யார் கேட்கின்றார்கள்…?

அன்று அரசர்கள் எப்படி உருவாக்கினார்களோ அது போன்று
1.அந்த ஞானிகள் காட்டிய வழியில் மெய் ஞானிகளை
2.உலகைக் காத்திடும் சக்திகளை நாம் உருவாக்க வேண்டும்… உருவாக்க முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எம்முடைய உபதேசங்களை எல்லோரும் கேட்கின்றீர்கள் ஆனால் அடுத்தாற்போல் குறைகளைத் தான் வளர்த்துக் கொள்கின்றீர்கள். அதை எல்லாம் முதலிலே நீக்கிப் பழக வேண்டும்… மாற்றி அமைக்க வேண்டும்

மணிக்கணக்காக யாம் (ஞானகுரு) உபதேசிப்பதன் நோக்கமே அந்த ஞானிகள் உணர்வை நீங்கள் பெற்று நன்மை பெறும் சக்தியாக உங்களுக்குள் மாற்றுவதற்குத் தான்.
1.யாம் பதிவு செய்ததை மீண்டும் நீங்கள் எண்ணினால் அது உங்களைக் காக்கும் சக்தியாக வருகின்றது
2.தீமையிலிருந்து விடுபடவும் செய்கின்றது… தீமை அகற்றும் சக்தி பெறுகின்றீர்கள்

அதற்குத்தான் மணிக்கணக்கில் பேசுவது.

ஆனால் மணிக்கணக்கில் வேதனைப்படும் உணர்வுகளை நீங்கள் எடுத்து விடுகின்றீர்கள். குருநாதர் எம்மைக் காட்டிற்குள் அழைத்துச் செல்லும் பொழுது பல வேதனையான நிலைகளைச் சந்திக்கும்படி செய்கின்றார்.
1.அதை எப்படி மாற்றுவது…? என்ற நிலையில் மாற்றுவதற்குண்டான உபாயத்தைக் காட்டினார்
2.அவர் சொன்ன முறைப்படி செய்து எனக்குள் வந்த வேதனைகளை மாற்றி அதிலிருந்து மீண்டேன்
3.அதைத்தான் உங்களுக்கும் இப்பொழுது வாக்காகக் கொடுக்கின்றேன்

இதற்கு முன் இதை எல்லாம் அதிகமாக வெளிப்படுத்தியதில்லை இங்கே தான் வெளிப்படுத்துகின்றேன். ஏனென்றால்
1.எங்கெங்கு… யார் யார்… ஏங்கி இதைப் பெற வேண்டும் என்று விரும்புகிறார்களோ அங்கெல்லாம் இந்த உணர்வுகள்
2.உங்களுடைய ஏக்கம் தான் அருள் உணர்வுகளை என்னை வெளிப்படுத்தும்படி செய்கின்றது
3.நானாக இப்படிப் பேச (உபதேசம்) முடியாது.

ஏக்கத்தின் உணர்வு கொண்டு அந்தத் தொடர் வரப்படும் பொழுது… அந்த உணர்வுக்கொப்பத்தான் நான் பேச முடியும். அப்படி அல்லாதபடி… நானாக எடுத்துச் சொல்வது என்றால் அது வராது.

உணர்வின் தன்மை மோதலாகும் பொழுது.. மின்னல் ஒரு நட்சத்திரத்திற்கு ஒரு நட்சத்திரம் மோதும் பொழுது அந்த உணர்வுகள் பிளந்து அதனுடைய அலைகள் படர்கின்றது.

இதைப் போன்று தான்
1.நீங்கள் ஏங்கும் பொழுது அந்த உணர்வை நுகர்ந்துதான் நான் பேசுகின்றேன்
2.தீமைகள் எப்படி இயக்குகின்றது… அதிலிருந்து எப்படி விடுபட வேண்டும் என்று
3.அந்த அருள் ஞானி உணர்வுகளை உங்களுக்குள் பாய்ச்சித் தீமையைப் பிளக்கும் உணர்வுகளை நுகரச் செய்து
4.அந்த அருள் உணர்வை உங்களுக்குள் உருவாக்கும்படி செய்கின்றேன்.

அந்த உணர்வின் எண்ணங்களை உங்களுக்குள் உருவாக்கி தீமைகளையும் பகைமைகளையும் உங்களுக்குள் வராதபடி தடுக்கும் சக்தியாக “கல்யாணராமனாக” நீங்கள் மாற வேண்டும் என்பதுதான் என்னுடைய உபதேசத்தின் நோக்கம்.

இதனைப் பின்பற்றி நீங்கள் வளர்ந்து வந்தீர்கள் என்றால் எனக்கு மிகுந்த சந்தோஷம். ஆனால் என்னிடம் கேட்டுவிட்டு அந்தப் பக்கம் காற்றிலே விட்டு விட்டுச் செல்வதாக இருந்தால்
1.சாமி சொன்னார் என்று சாதாரணமாகத் தான் தெரியும்
2.சாமி எனக்கு என்ன செய்தார்…? என்று தான் பேசுவீர்கள்.

குருநாதர் எனக்குக் காட்டிய பேருண்மைகளை அவர் எனக்கு கொடுத்ததைக் காட்டிலும் பன்மடங்கு உங்களுக்குக் கொடுத்திருக்கின்றேன் இதற்கு மேல் நான் என்ன உதவி செய்ய வேண்டும்…?

1.நீங்கள் எல்லாம் அருள் ஞானத்தைப் பெற வேண்டும்
2.என்னைச் சந்தித்தவர்கள் நலமும் வளமும் பெற வேண்டும் என்று
3.சதா உங்கள் உயிரை எண்ணி நான் தியானம் இருக்கின்றேன்

அந்த உணர்வினை நீங்கள் தான் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். ஞானிகள் உணர்வை யாம் கொடுத்தால் அதை நுகரும் பருவத்தை நீங்கள் இழந்து விடக்கூடாது. நல்ல சாப்பாடு போட்டால் அதை நீங்கள் உட்கொள்ள வேண்டும் அல்லவா…!

ஒரு விவசாயம் செய்யும் இடத்தில் உயர்ந்த வித்தினைக் கொடுக்கின்றார்கள். அதைச் சீராக விதைத்தால் நல்ல பலன் கிடைக்கும். ஆனால் அப்படி விதைக்காதபடி மண்ணிலே வீசிவிட்டுச் சென்றால் எது எப்படி முளைக்கும்…?

எறும்போ பூச்சியோ மற்ற பறவைகளோ அந்த விதைகளைத் தின்றுவிடும்… அது எப்படி முளைக்கும்…?

அதே சமயத்தில் விதைத்தது சீராக முளைத்து வந்தாலும் அந்தந்தக் கால பருவத்திற்கு அதைப் பண்படுத்தும் நிலைகளையும் நீங்கள் செயல்படுத்த வேண்டும்.

அது போன்று தான்
1.நாம் கொடுத்த உபதேச வாயிலாகக் கொடுக்கும் பதிவை நீங்கள் மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து
2.அருள் ஞானத்தை பெருக்க வேண்டும் என்று அந்த அருள் உணர்வுகளைக் கூட்டினால்
3.அறியாது வந்த இருளைப் போக்கும்… அருள் வழி வாழவும் முடியும்
4.பிறவி இல்லா நிலையும் நீங்கள் அடைய முடியும்.

இது உங்கள் கையில் தான் இருக்கின்றது…!

தாயை மறந்தால்… எந்த ஒரு நல்லதையும் நம்மால் பெற முடியாது…!

 

நம்மை மனிதனாக உருவாக்கியது யார்…? அம்மா அப்பா தான்… அவர்கள் தான் கடவுள். ஒன்றும் அறியாத வயதிலிருந்து விவரம் தெரியும் வரை நம்மைக் காத்தது நம்முடைய தாய் தந்தையர் தான். அவர்கள் தான் நமக்குத் தெய்வங்கள்.

பல தீமைகளிலிருந்து விடுபட்டு என் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்று ஞானத்தை ஊட்டி “நம்மைக் காத்த தெய்வம் நம் தாய் தான்…” இது நல்லதப்பா… இது கெட்டதப்பா… உன் வாழ்க்கையில் இப்படி இருக்க வேண்டும்…! என்று சொன்ன “குருவும் தாய் தந்தையர் தான்…”

இதை எல்லாம் மறந்து விட்டு
1.ஆயிரம் சாமியார்களைத் தேடினாலும் சரி
2.ஆயிரம் கடவுளைத் தேடினாலும் சரி
3.நம்மை மனிதனாக உருவாக்கிய தெய்வமான தாயை மறந்து விட்டால்
4.நம்மைக் காப்பாற்றிய அந்தத் தெய்வத்தை மறந்து விட்டால்
5.நமக்கு நல்ல வழிகளைக் காட்டிய குருவை மறந்து விட்டால்
6.எங்கு சென்றாலும் நல்லதை ஒன்றும் எடுக்க முடியாது.

இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

தாய் தந்தையர் சொத்தைச் சம்பாதித்த பின்பு இன்று அனாதை இல்லங்களில் இருக்கின்றார்கள். அங்கே இருந்தாலும் கூட பென்ஷன் வாங்கச் சென்றால்… “உனக்கு எதற்கு இவ்வளவு காசு…? இத்தனை ரூபாய் பத்தாதா…?” என்று அதையும் தட்டிப் பறிப்பதற்குத் தான் இன்றைய குழந்தைகள் இருக்கின்றது.

இது போல் இன்று நிறைய நாம் கேள்விப்படுகிறோம்.

உழைத்தேன்… பிள்ளைகளை வளர்த்தேன்… படிக்க வைத்தேன்…! என்று தாய் தந்தையர் இருந்தாலும்… குழந்தைகளோ…
1.நான் ஆடம்பரமாக வாழ வேண்டும்
2.உனக்கு எதற்குப் பணம்…? என் பிள்ளைகளுக்குத் தேவை…! என்று பிடுங்கிச் செல்கிறார்கள்.
3.இது மட்டுமல்ல தாய் தந்தையரை உதைப்பவர்களும் இருக்கிறார்கள்.

தகப்பன் சம்பாதித்து விட்டு எல்லாப் பிள்ளைகளுக்கும் கொடுத்த பிற்பாடு மூன்று லட்சம் கையிலே பணம் வைத்திருக்கின்றார்கள்.

மூன்று இலட்சத்திற்கு உனக்கு என்ன வேலை…? உனக்கு மாதம் வேண்டிய பணத்தை நாங்கள் கொடுத்து விடுகின்றோம் அந்த மூன்று லட்சம் ரூபாய் எங்களிடம் கொடு… கொடுக்க வேண்டியது தானே…! என்று கேட்கின்றார்கள்
1.ஆனால் பணத்தைக் கொடுத்த பின் அடுத்து சோறு போடுவார்களா…?
2.இது எல்லாம் இன்றைய காலத்தில் கொடுமையிலும் கொடுமை.

அரக்க உணர்வுகள் தாய் தந்தையரை மறக்கச் செய்து விட்டது.

யாம் சொன்ன முறைப்படி தாய் தந்தையரை மதித்துச் செயல்படுத்தினால் காட்டிற்குள் சென்றால் ஒரு புலியே தாக்க வருகிறது என்றாலும் “அம்மா…” என்று உங்கள் தாயை அழைத்தால் போதும். அந்தப் புலி தாக்காது.

தெருவிலே நாய் விரட்டி வந்தாலும் “அய்யய்யோ… அய்யய்யோ…! முருகா…! என்று சொன்னாலும் கூட லபக் என்று பிடிக்கும். ஆனால் “அம்மா…!” என்று அழைத்துப் பாருங்கள். அந்த நாய் உங்களைக் கடிக்கிறதா..? என்று பார்க்கலாம்… கடிக்காது.

யானையே தாக்க வந்தாலும் சரி அந்தத் தாயின் பாச உணர்வு நம் உடலில் இருக்கின்றது. “அம்மா” என்று எண்ணிணால் அந்த அலைகள் குவிந்து நம்மைக் காக்கச் செய்யும்.

சந்தர்ப்பத்தில் தொழிலே பெரும் சங்கடங்கள் வருகிறது என்றால் சாமியார்களை நினைப்பதைக் காட்டிலும்
1.யாம் சொன்ன முறைப்படி உங்கள் தாயை வணங்கி… அம்மா…! என்று ஏங்கி
2.இந்தச் சிக்கலிலிருந்து விடுபடக்கூடிய வலிமையும் எனக்கு அந்தச் சிந்திக்கும் ஆற்றலும் வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.
3.அந்தத் தாயினுடைய உணர்வு உங்களுக்கு எப்படி வேலை செய்கிறது…? என்று தெரிந்து கொள்ளலாம்.

ஞானிகள் நம் தாயைப் பேணிக் காக்கும் முறைகளைக் காட்டியுள்ளார்கள். எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் தாய் தந்தையினுடைய அருளால் அந்தத் தெய்வ குணத்தைப் பெற வேண்டும் என்று காட்டியுள்ளார்கள்.

ஆனால் இன்று இதையெல்லாம் மறந்து இருக்கின்றோம். தாய் தந்தையர் “கோவிலுக்கு வா…” என்று கூப்பிட்டால் “உனக்குப் பைத்தியம்… நீ போ…” என்று சொல்லக்கூடிய காலமாக இருக்கின்றது.

அரக்க உணர்வுகளாக வளர்ந்து தாயையே இரக்கமற்றுக் கொல்லும் தன்மைகளும்… துன்புறுத்தும் நிலைகளும் இன்று கண்களிலே நாம் பார்க்கும் படியாக நடந்து கொண்டிருக்கின்றது.

ஆனால் தாய் தன் குழந்தையைக் கர்ப்பத்தில் வளர்க்கப்படும் பொழுது எத்தனையோ இன்னல் படுகின்றது… வேதனைப்படுகின்றது. பிறந்த பிற்பாடு அவனை ஆளாக்குவதற்கு எவ்வளவோ சிரமப்படுகின்றது. அவனைக் காக்க வேண்டும் என்று அல்லும் பகலும் எத்தனையோ முயற்சிகள் எடுக்கின்றது. அவனுடைய கல்விக்கும் எத்தனையோ சிரமப்பட்டுக் கடனை வாங்கியாவது அவனை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்று செயல்படுத்துகின்றது.

ஆனால் கற்றபின் குழந்தையினுடைய செயல்களைப் பார்க்கப்படும் பொழுது எத்தனையோ தவறான செயல்களை அவர்கள் செயல் படுத்துகின்றார்கள். இது எல்லாம் ஞானிகள் காட்டிய வழிகளை இன்று தவற விட்டதால் ஏற்படுவது தான்… அதனால் நாம் படக்கூடிய வேதனைகள் ஏராளம்.

ஆகையினால்
1.என் அம்மாவைப் பற்றி நான் எண்ணினாலே எனக்கு (ஞானகுரு) அழுகை வந்து விடும்.
2.காரணம் என் தாய் என்னைக் காத்த நிலைகள் கொண்டுதான் இந்த ஞானத்தையே நான் பெற முடிந்தது….
3.உங்களுக்கு இதைப் போதிக்கவும் முடிகின்றது.
4.தாயின் உணர்வுகளைச் சேர்த்துக் கொண்டதனால் இந்தப் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

என் அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லை என்றால் ஒரு பெண் பிள்ளை போன்று நான் தான் சமைத்துக் கொடுப்பேன்… எல்லா உதவிகளும் செய்வேன்.

என் பாட்டிக்கும் (தாயின் மாமியார்) என் தாய்க்கும் சண்டை வரும். என் பாட்டி கண்டபடி பேசும். அதனால் ஒரு சமயம் கோபித்துக் கொண்டு போய் என் தாய் கிணற்றில் விழுந்து விட்டது.

நானும் உடனே கிணற்றில் குதித்து என் தாயைத் தூக்கி வந்தேன். எனக்கு வயது அப்போது எட்டு இருக்கும் என் தாயும் நானும் அதிலிருந்து பிரிந்து இருப்பதே இல்லை…. ஏதாவது வேதனைப்பட்டால் மீண்டும் கிணற்றில் விழுந்து விடுமே என்று..!

ஏனென்றால் தாயினுடைய பாசத்தை என் தாய் எனக்கு உணர்த்தியது. அந்த உணர்வின் தன்மை கொண்டு வரப்படும் பொழுது
1.ஒவ்வொருவரும் நீங்கள் உங்கள் தாயை வணங்கினாலே போதுமானது.
2.கடவுளை எங்கேயும் தேட வேண்டியதில்லை… நம் தாய் தான் கடவுள்.

நம்மைத் தெய்வமாக இருந்து காப்பாற்றியது தாய் தான். குருவாக வழிகாட்டுவதும் தாய் தான். ஆகையினால் இதையெல்லாம் நீங்கள் மனதில் வைத்துச் செயல்படுங்கள்.

விஞ்ஞான வாழ்க்கையில் அஞ்ஞான வாழ்க்கையாக போய்க் கொண்டிருக்கும் நிலையில் மெய் ஞானிகள் காட்டிய அருள் உணர்வு கொண்டு தாயினுடைய பேரன்பைப் பெற முற்படுங்கள். அதை உங்களுக்குள் சேர்த்துக் கொள்ளுங்கள்.

எந்த நிலை வந்தாலும் என் தாய் தந்தையின் அருளால் என் செயல் நன்றாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து செயல்படுத்திப் பாருங்கள்.
1.எந்தச் சிக்கல் வந்தாலும் அதை நிவர்த்திக்கக் கூடிய நல்ல உபாயம் வேண்டும் என்று தாயை எண்ணுங்கள்.
2.எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்…! தாய் நம்மைப் பேணிக் காத்த உணர்வுகள் இயக்கி நமக்கு ஞானத்தை ஊட்டும் தப்பிக்கும் மார்க்கத்தையும் காட்டும்.
3.யாராவது இடைஞ்சல் செய்ய வந்தால் தாயின் உணர்வு வந்து நமக்கு ஊக்கம் கொடுத்து அவர்கள் நம்மைத் தாக்காது தடுக்கவும் செய்யும்.
4.எத்தகைய தாக்கக் கூடிய நிலைகள் வந்தாலும் தாயை எண்ணினால் அதை மறைக்கக் கூடிய சக்தி உண்டு.

ஆக அதைப்போன்று தாய் தந்தையரும் தங்கள் குழந்தைகளுக்கு ஞானத்தை ஊட்ட வேண்டும். கோவிலுக்குச் சென்றாலும் பையன் சொன்னபடி கேட்கவில்லை என்று வேதனையைத் தான் வளர்த்து விடுகின்றோம்.

இதைப் போன்ற நிலைகளில் எல்லாம் மாறி… இனி வரக்கூடிய காலங்களில் இருந்து மீட்டுவதற்கு இந்த முறைகளை நாம் செயல்படுத்த வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அகஸ்தியன் காட்டில் விளையும் தாவர இனங்களை எல்லாம் நுகர்ந்தறிந்தான். அதன் இயக்கங்கள் எவ்வாறு…? என்று அவன் அறிந்த உணர்வைத்தான் நானும் நுகர்ந்து உனக்குள் சொல்ல முடிகின்றது என்றார் ஈஸ்வரபட்டர்.

அவன் முதலிலே துன்பப்பட்டான்… உணர்ந்தான்… அவனுக்குள் விளைந்தது. அதை எல்லாம்… எனது சந்தர்ப்பம் நுகரும் அறிவு வந்தது. அறிந்த உணர்வுகள் கொண்டு அது எனக்குள் வலுப்பெறும் தன்மையும் வந்தது.

அகஸ்தியன் துருவனாகும்போது வானை உற்று நோக்கி துருவத்தின் ஆற்றலை அறியத் தொடங்குகின்றான். 27 நட்சத்திரங்களின் ஒளிக்கற்றைகள் எப்படித் துருவத்தை நோக்கி வருகிறது…? என்று அதன் உணர்வின் அறிவாக அவன் அறிந்து கொள்கின்றான்.

திருமணம் செய்யும்போது அதை எல்லாம் தன் மனைவிக்குப் போதித்தான். அந்த உணர்வின் வலுவைத் தன் மனைவிக்கும் செருகேற்றி “இருவரும் சமம்” என்ற உணர்வுகள் பெற்றனர்.

அந்த நட்சத்திரங்களிலிருந்து வரும் உணர்வினை இருவருமே நுகர்ந்து இரு உயிரையும்… இரு உணர்வையும்… ஒன்றாக்கிக் கொண்டனர்.

1.நட்சத்திரங்களின் தாக்குதலால் உயிரணு தோன்றியது போன்று
2.பல பல நட்சத்திரங்கள் வெளிப்படும் உணர்வினை இருவருமே உற்று நோக்கி
3.அந்த ஒளிக் கற்றைகளைக் கணவன் பெற வேண்டுமென்று மனைவியும்…
4.மனைவி பெற வேண்டுமென்று கணவனும்… இருவருமே எண்ணுகின்றனர்.

இப்படி அந்த நட்சத்திரங்களிலிருந்து வரும் விஷத் தன்மைகளை அடக்கிப் பழகிய
1.அவர்கள் இருவர் உணர்வுகளும் ஒன்றாக்கப் படும்போது
2.அத்தகைய அணுத்தன்மை உருவாகும் கருவாக அவர்களுக்குள் உருவாகி
3.அந்த உணர்வுகள் இருவர் உடல்களிலும் அணுக்களாக விளைகின்றது.

அத்தகைய அணுக்கள் உருவான பின் அந்த நட்சத்திரங்களிலிருந்து வரும் சிதைவுகளை உற்று நோக்கினால் அந்த ஒளி அலைகளைக் கவர்ந்து அதை உணவாக எடுத்துக் கொள்ளும் நிலை அகஸ்தியனுக்கும் அவர் மனைவிக்கும் வருகின்றது.

நட்சத்திரங்களின் சக்தியால் உயிர் துடிப்பின் நிலை பெற்றது. அதே உயிரின் தன்மை கொண்டு… 27 நட்சத்திரங்களின் சக்திகளைச் சமப்படுத்தி ஒன்றென இணைத்துக் கொண்டனர்.

27 நட்சத்திரங்களின் ஒளிகளைச் சூரியன் தனக்குள் பாதரசங்களை எடுத்து உலகையே ஒளிக்கற்றையாகச் சூரியன் எப்படி மாற்றுகின்றதோ… இதைப் போன்று
1.27 நட்சத்திரங்களின் உணர்வின் அணு செல்கள் விளைந்து
2.உயிருடன் ஒன்றி ஒளியின் அணு தன்மையாகப் பெற்றது தான் இந்தத் துருவ நட்சத்திரம்.

அகண்ட அண்டமும் இந்தப் பிண்டத்திற்குள் எப்படி வந்தது…? என்று அந்த அகஸ்தியன் அறின்றான்…!

கடல் வாழ் நிலைகள் சனிக் கோளின் சக்தியால் புயலால் ஈர்க்கப்பட்டு அதன் உணர்வுகள் மேகங்களில் பரவப்பட்டுப் பரவிய பின் கடல் வாழ் உயிரினங்கள் தரை வாழ் உயிரினங்களின் நிலைகளாகச். சிறு சிறு சங்குகள் நத்தைகளை நீர் நிலைகளில் பார்க்கலாம். (புயல் காலங்களில் பெய்யும் மழை நீரில் நம் வீடுகளிலேயே பார்க்கலாம்)

கடல் வாழ் நத்தைகளைப் போன்று நிலங்களில் உள்ள மற்ற குளம் குட்டைகளிலும் பார்க்கலாம்…. நத்தைகளும் வருகின்றது தவளைகளும் வருகின்றது நீர்ப் பாம்புகளும் தரை வாழ் பாம்புகளும் நீரில் கலக்காத பாம்பினங்களும் உருவாகின்றது

அதனதன் உணர்வுக்கொப்ப அதனுடைய வாழ்க்கையின் தன்மை அமைகின்றது என்பதனை… “இவன் தன்னை அறிகின்றான் அந்த அகஸ்தியன்….!”

விஷத்தின் தன்மை ஒடுக்கியபின்…
1.வான் வீதியில் தோன்றிய உயிர் முதலில் கடல் வாழ் நிலைகள் பெற்று
2.பின் அதிலிருந்து சனிக்கோளால் கவரப்பட்டு
3.அதன் உணர்வின் தன்மை மேகங்களில் படரப்பட்டு
4.அதன் வழிகள் கொண்டு தரை வாழ் நிலைகளாகப் புழு பூச்சிகளிலிருந்து
5.தரை வாழ் மனிதனாக நாம் எப்படி விளைந்தோம்…? என்ற உண்மையினை உணர்ந்து
6.நட்சத்திரங்களின் உணர்வால் உயிர் எவ்வாறு ஆனது…? என்ற நிலையும் அகஸ்தியன் அறிந்துணருகின்றான்.

தன் உடலில் உள்ள அணுக்களில்…
1.நட்சத்திரத்தின் உணர்வுகள் அது ஒவ்வொன்றையும் மின் கற்றைகளைச் சேர்த்து… தனக்குள் இணைத்து…
2.உயிருடன் ஒன்றி… ஒரே ஒளித் தன்மையாக.. கணவனும் மனைவியும் இதைக் கருவுற்று
3.கருவின் நிலையாக அந்த ஒளியின் அணுவாக உருவாக்கி…
4.அவர்கள் இருவரும் எதை உற்று நோக்கினார்களோ
5.அந்தத் துருவப் பகுதியை எல்லையாக வைத்து அவர்கள் இரு உயிரும் ஒன்றி வாழுகின்றது…. துருவ நட்சத்திரமாக…!

அவன் பெற்ற ஒளி சக்தியை எடுப்பதே துருவ தியானத்தின் நோக்கம்..!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று எலெக்ட்ரானிக் கடிகாரத்தின் மூலம் மணிகளைக் காட்டுகின்றார்கள். “அதில் உள்ள எலக்ட்ரானிக்” அதன் குறித்த நிலைகள் வரப்படும்போது அது வந்தவுடனே மணிகளையும் தேதிகளையும் மாற்றி மாற்றிக் காட்டுகின்றது.

1.ஆனால் அதில் சிறிது நீர் பட்டுவிட்டால் எல்லாம் மறைந்து விடுகின்றது.
2.எதிர்மறையான உணர்வுகளை அங்கே பதியச் செய்யும்போது அது தாறுமாறாக வேலை செய்துவிடும்.
3.அதில் உள்ள பேட்டரி சார்ஜ் கம்மியாகி விட்டாலோ தப்பான கணக்கைக் கொடுக்கின்றது.

இதைப் போலத்தான் நம் உயிரின் இயக்கமும்…!

நாம் எண்ணும் சோர்வு சங்கடம் வேதனை போன்ற எண்ண அலைகள் அதிகமாகச் சேர்த்த பின்…
1.நமது உயிர் அந்த உணர்வின் தன்மைகளை இயக்கப்படும்போது
2.இயக்கத்தின் துடிப்பு கம்மியாகின்றது.

அப்படிக் கம்மியாகும்போது உடலின் சுருக்க… அந்த உணர்வுகள் குறையத் தொடங்கி விடுகின்றது. அந்த நேரத்தில் சீரான நிலைகளிலே கணக்கைப் பார்க்க முடியாது. நம்முடைய சொல்லும் சீராகச் சொல்ல முடியாது.

ஏனென்றால் நமது உயிர் “எலெக்ட்ரிக்காக” இருந்து… நுகரும் உணர்வுகளை “எலக்ட்ரானிக்காக (உணர்ச்சிகளாக)” அது உற்பத்தி செய்து கொண்டே இருக்கும்.

1.அதில் எந்த உணர்வின் தன்மை அதிகரிக்கின்றதோ
2.அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் மாற்றி மாற்றிக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.
3.அந்த உணர்வுகளில் மாற்றங்கள் எதுவோ கண் விழி கொண்டு கலர்கள் மாறும்.
4.வெளி வரும் சொற்கள் கொண்டு உணர்ச்சிகள் மாறும்.
5.அந்த உணர்வின் சத்து கொண்டு உடலில் நிறங்கள் மாறும்.

இந்தத் தியான வழியில் சீராக இருந்தால் நீங்கள் ஒருத்தரைப் பார்த்தவுடனே ஜோசியம் சொல்லி விடலாம். ஆனால் இதைத் தெரிந்து நீங்கள் ஜோசியம் சொல்லத் தொடங்கி விடாதீர்கள்.

ஏனென்றால் இதை “அங்கக்கலை…!” என்று சொல்வார்கள். பார்த்து ஒரு சொல்லைச் சொல்லி விட்டால் எலலா உண்மைகளும் வெளியில் வரும்.

உங்களிடம் நான் (ஞானகுரு) சில நேரம் கேள்விகளையும் கேட்பேன். அப்பொழுது பதிலாக உங்களிடம் இருந்து என்னென்ன வருகின்றது…? என்றும் பார்ப்பேன்.

அதைத் தெரிந்து கொண்ட பின் உங்களுக்கு என்ன நல்ல மாற்றங்களைக் கொடுப்பது…? என்ற நிலையில் சிலதுகளை இணைத்துக் கொடுப்பேன்.

அதாவது உங்கள் சொல்லுக்குள் வேறு ஏதாவது நாம் மாற்றிச் சொல்லும் பொழுது… இந்த உணர்வு வந்தவுடன் உங்களுக்குள் இருப்பதை எல்லாம் கக்கிக் கொண்டே இருப்பீர்கள்.

இந்த அலைகளை தொடர்ந்தவுடன் எந்த அருள் உணர்வை எதை எதை இணைத்து உங்களுக்குள் கலக்க வேண்டும் என்று சொல்லி யாம் கொடுக்கின்றோம்..
1.தமாஷாகச் சொல்வது போல் இருக்கும்…
2.ஆனால் அதற்குள் ரொம்ப விஷயம் இருக்கும்.

அதாவது உங்களுக்கு எந்த அறிவைக் கொடுக்க வேண்டும்…? என்ற வகையில் கொடுக்கின்றோம். ஆகையினால் இது “குரு வழி…!”

பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் படிக்கின்றார்கள் என்றால் வாத்தியாருக்கு ஒருத்தர் மேல் வெறுப்பாகி விட்டது என்றால் அந்த வெறுப்பின் தன்மையினால் அவர் பாடத்தைக் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லுவார்.

வாத்தியார் அழுத்தமாகச் சொன்னவுடன் அந்த மாணவனுக்குப் பயத்தின் உணர்வு வந்தது…! என்றால் வாத்தியார் என்ன சொன்னாலும் இங்கே அவனுக்குள் பதிவாகாது. ஏனென்றால் அந்த உணர்வின் இயக்கத்தின் நிலைகள்.

1.அதே சமயத்தில் பார்வையின் நிலைகள் என்னவாகும்…? இருட்டாகும்… கலர் கறுப்பாகும்.
2.எந்த நல்லதையும் பார்க்க முடியாது.
3.இருள் சூழ்ந்த நிலையாகும். உடலுக்குள் அது நஞ்சாகும்.

ஏனென்றால் நல்ல பொருளுக்குள் நஞ்சு கலந்தால் எப்படியோ அது போல் நல்ல சிந்தனை வராது. விஷத்தின் தன்மை கொண்ட உணர்வாக மாறிவிடும்.

அச்சமயம் பதிவு செய்த நிலைகள் அது சீராக வராது. சொல்வது அர்த்தமாகின்றதல்லவா…!

இது எல்லாம் நமக்குள் மோதும் எதிர்மறையான இயக்கங்களால் வரும் போது ஏற்படும் நிலைகள் தான்…!

முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள்

 

இராமனுக்குத் திருமணமாகும் பொழுது “முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்களும் வந்து ஆசீர்வதித்தார்கள்…” அந்த இராமன் யார்…? சீதாராமன்…! “சந்தோஷத்தை ஊட்டும் உணர்வுகள்…”

1.உங்கள் உடலுக்குள் பல பகைமையான உணர்வுகள் இருந்தாலும்
2.சந்தோஷமான வார்த்தையை எடுத்துத் தியானத்தில் எல்லோரும் சொல்லப்படும் பொழுது
3.மகிழச் செய்யும் உணர்வின் இயக்கமாக வருகின்றது.

ஒவ்வொரு உடலிலும் எண்ணிலடங்காத குணங்கள் உண்டு. நாம் எத்தனை பேர் கூட்டுத் தியானத்தில் இருக்கின்றோம்…? இத்தனை பேருடைய உணர்வின் ஒலிகள் படரப்படும் பொழுது வீட்டில் எப்படி இருக்கும்…?

எல்லோரும் சேர்ந்து வீட்டிற்குள் அருள் உணர்வுகளைப் படரச் செய்யப்படும் பொழுது… செவிகளில் கேட்டு இந்த உணர்வுகளை நுகர்ந்தால் நம் உடல் எப்படி இருக்கும்…?

இது எல்லாம்… ஞானிகள் சொன்ன அந்த மார்க்கத்தினை நாம் கடைப்பிடித்தல் வேண்டும்.

இன்று இந்த உலகமே விஷமாக மாறிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் தீமை புகாது வலிமையை நாம் பெறுதல் வேண்டும். ஒவ்வொரு நிமிடமும் நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதல் வேண்டும்.

1.இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளைத் தூக்கி எறிய வேண்டுமென்றால் அதற்குண்டான சக்தி பெற வேண்டும்.
2.அந்த அருள் சக்தியைப் பெறுவதற்குத் தான் உங்களுக்கு இந்தத் தியானப் பயிற்சியை கொடுப்பது.
3.எதாவது ஆயுதம் இல்லாது ஒன்றும் செய்ய முடியாது.

இந்த மனித வாழ்க்கையில் வரும் வேதனை வெறுப்பு போன்றவைகளுக்கு வலிமை ஜாஸ்தி. அதை நீக்குவதற்கு உங்கள் நல்ல குணங்களால் முடிகிறதா…? அவையெல்லாம் அலறும்.

ஆனால் இத்தகைய விஷத்தை வென்று உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றியது துருவ நட்சத்திரம். அதை எடுத்து உங்கள் உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களுக்கும் சேர்த்துப் பழகி விட்டால் அந்த உணர்வுகள் வளர வளர
1.தீமையான உணர்வுகள் அணுகாது அதைத் தூக்கி எறியும் மன வலிமையும்
2.அந்த உணர்வினைப் பற்றுடன் பற்றி உங்களுக்குள் நல்ல உணர்வுகளை வளர்க்கும் சந்தர்ப்பமும் உருவாகின்றது.
3.இந்த வாழ்க்கைக்குப் பின் உடலை விட்டுப் பிரிந்து சென்றால் பிறவி இல்லா நிலை அடைகின்றோம்.

சொல்வது அர்த்தம் ஆகிறது அல்லவா…!

மற்றவர்கள் சிரமப்பட்டாலும் அது உங்கள் செவிகளில் பட்டாலும் அதை மாற்றி அமைத்து
1.சிந்தித்துச் செயல்படும் நிலையாக உங்களுடைய சொல் அவர்களுக்குச் சந்தோஷத்தை ஊட்டும் பொழுது
2.”இன்னார் சொன்னார் நன்றாக இருந்தது…” என்று அவர்கள் அந்த மகிழ்ச்சி பெறக்கூடிய செயலுக்கு நீங்கள் ஒவ்வொருவரும் வளர வேண்டும்.

அது தான் உண்மையான தியானம்.

ஒவ்வொரு உயிரும் கடவுள்… ஒவ்வொரு உடலும் கோவில்… பல கோடி உடல்களில் சேர்த்து மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்கள் “அவை தான் நமக்குத் தெய்வம்…!”

எனக்கு குருநாதர் எப்படி வழிகாட்டிக் கொடுத்தார்…?

உயிர் கடவுளாக இருக்கின்றது அந்த உடல் கோவிலாக இருக்கின்றது
1.இந்த உடலில் தெய்வங்கள் இருக்கின்றது
2.அந்தத் தெய்வத்திற்கு சேவை செய்ய நான் கொடுத்த அருள் சக்தியை அவர்களை நுகரச் செய்து
3.அந்த ஆலயத்தைச் சுத்தப்படுத்தி உயர்ந்த குணங்களைத் தெளிவாக்க “நீ பிரார்த்தனை செய்” என்றார்.

அந்தச் சேவையைத் தான் நான் செய்து கொண்டிருக்கின்றேன். குரு வழியில் யாம் சேவை செய்யும் பொழுது உங்களுக்கு அந்தச் சந்தோஷம் வருகிறது. அப்பொழுது எனக்குச் சந்தோசமான சாப்பாடு கிடைக்கின்றது. எனக்குக் கொஞ்சம் பூரிப்பு வருகின்றது.

ஆகவே வாழ்க்கையில் வரும் சங்கடங்களை நீக்கி… மற்றவருடைய தீமைகளைப் போக்கச் செய்யும் அந்த ஆற்றல்மிக்க நிலைகளை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும்.

அதைப் பெறச் செய்வதற்குத் தான் யாம் உபதேசிப்பது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒருத்தர் உடலில் ஆவி (ஆன்மா) இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். தியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்போர் நாம் அவரிடம் பேசினால் அங்கே போகாதே… போகாதே…! என்று மற்றவர்களிடமும் சொல்லும்.

நாம் அவரிடம் பேசினால் போதும்… நம் உணர்வுகள் பட்டவுடனே… போகாதீர்கள்… போகாதீர்கள்…! என்று சொல்லும். காரணம்… அதற்கு ஆகாது.

அதே உணர்வை நாம் கேட்டோம் என்றால்…
1.மகரிஷிகளின் அருள் சக்தி அது பெற வேண்டும்
2.அது இருள் நீங்க வேண்டும்
3.பொருள் காணும் உணர்வு வளர வேண்டும் என்று எண்ணி
4.ஒரு பத்து தடவை செய்துவிட்டு உங்கள் பார்வையைச் செலுத்துங்கள்.

அப்புறம் தன்னாலே மயங்கி விழுந்தாலும் விழும்…. போய் விடும்….! ஏனென்றால் சில சாப அலைகள் ஒருவருக்கொருவர் பாய்ந்த உணர்வுகள் இப்படி வந்து விடுகின்றது.

அந்த மகரிஷிகள் தனக்குள் கோடி… கோடி… கோடி…! என்று பல கோடி உணர்வுகளைத் தனக்குள் ஒளியாக மாற்றியவர்கள். ஆகவே அந்த மகரிஷியின் உணர்வை நமக்குள் எடுத்து இதை அவருக்குள் புகுத்த வேண்டும்.

அப்படிப் புகுத்தினோம் என்றால் அவர்கள் உணர்வு நீங்கும். “புகுத்த வேண்டும்” என்ற உணர்வுகள் நமக்குள் வலுப் பெறும். இந்த அலைகள் படரும். நம் நினைவு அங்கே மகரிஷிகள் பால் போகும்.

ஆகவே… எதை எடுத்தாலும்… நாம் அந்த விண்ணின் பற்றிற்கே வருகின்றோம்…!

இல்லையென்றால் நம் வாழ்க்கையில் இப்படி இருக்கின்றார்களே…! என்ற இந்த நிலைதான் இங்கே வரும். இதை மாற்ற வேண்டும்.

ஆகவே…
1.அந்த விண்ணின் பற்றுடன் ஒவ்வொரு நிமிடத்திலேயும் இதைப்போல எண்ணி ஆத்ம சுத்தி செய்து
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று
3.இந்த நினைவினை எடுத்து இங்கே கொண்டு வர வேண்டும்.

அதாவது… இங்கே பேசிக் கொண்டிருக்கிற மாதிரி இருக்கும். ஆனால் நினைவை அங்கே கொண்டு போக வேண்டும்.

எங்கே…?

பயிற்சி:-
1.கண்ணின் நினைவினை விண்ணிலிருந்து சிந்தனையை எடுத்துப் பாருங்கள்.
2.அவர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கின்ற மாதிரி இருக்கும்
3.செவிகள் கேட்கும்…. இரண்டும் கலக்கும்…. அதை உணர்த்தாது…. வந்தாலும் அது நம்மை இயக்காது.
4.சரி…! என்று எதிர் பதில் சொல்லச் செய்யும்.

அவர்கள் பேச்சை நீங்கள் கேட்கும்போது நேராக மட்டும் அவர்களைக் கண்ணுற்று மட்டும் பார்க்காதீர்கள். (இது முக்கியம்)

சொல்வதை மட்டும் கேட்டுக் கொண்டே இருங்கள். அப்பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதனுடன் இணைத்தீர்கள் என்றால்
1.அது உங்களை இயக்காதபடி அப்புறம் உங்கள் சொல்லால் சொல்லும்போது அது இயங்கும்.
2.அவர்களை இயக்கி மாற்றிவிடும்….!

ஏனென்றால் இந்தப் பதிவுகள் நமக்கு அதிகம் தேவைப்படும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மின்னல்கள் கடலில் தாக்கப்படும்போது மணலாகின்றது. கடல் ஓரங்களில் அது மறைந்து விடுகின்றது. அந்த மணலுக்குள் இருப்பதைத்தான் யுரேனியமாகப் பிரித்து எடுக்கின்றான் விஞ்ஞானி.

அதிலே பல பல நட்சத்திரங்கள் எதிர் நிலை கொண்டு கலந்திருப்பதை… அது எதிர்மறையாக எப்படி வெடித்ததோ (மின்னலாக) அதைப் போல எதிர் மறை கொண்ட உணர்வின் தன்மையைச் சேர்த்து… அதைத் தனித்துப் பிரித்து.. மீண்டும் எதிர்மறையாக மாற்றப்படும்போது வெடிக்கும் தன்மைக்கு (அணுக் கதிரியக்கம்) வைக்கின்றான்.

அது வெடித்தால்… எந்த மின்னலின் தன்மை அந்த நட்சத்திரங்கள் உணர்வுகள் கொண்டு ஊடுருவி…
1.அது இரண்டும் மோதும்போது இரும்பானாலும் உலோகமானாலும் அதைக் கருக்கிவிட்டு
2.தன் இனத்தின் தன்மையைப் பிரித்து விடுகின்றது.

இப்படி அதனுடைய வீரிய உணர்வுகள் அணு குண்டை வெடித்தால் நம் உடலில் இருக்கக்கூடிய அதே நட்சத்திரத்தின் உணர்வைத் தாக்கித் தன் இனத்தைப் பெருக்கி “இந்த உடலையே அழித்துவிடும்…!”

இப்படி வெடிக்கப்பட்ட கதிரியக்கங்களின் தன்மை அதிகரித்து சூரியன் பக்கம் போகும்போது… அதனின் எதிர்மறையான நிலைகள்
1.எலக்ட்ரிக்கை உருவாக்கிக் கொண்டிருக்கும் சூரியனின் இயக்கத்திற்குள் செல்லும்போது
2.எதிர்மறையான நிலைகள் அங்கே அதிகரிக்கும்
3.அப்பொழுது இரு மடங்கான கரண்ட் உற்பத்தியாகும்.

உதாரணமாக இரண்டு கரண்ட் வயர் ஒன்றுடன் ஒன்று மோதினால் என்ன ஆகும்…? எரிந்து அப்படியே கருகிவிடும்.

அதாவது சூரியனின் காந்தப்புலன் 27 நட்சத்திரங்களின் உணர்வைக் கவர்ந்து அது ஒன்றோடு ஒன்று மோதும் போது எப்படிச் செயல்படுகின்றதோ இதைப் போலத்தான்
1.இந்த உணர்வின் தன்மை பாய்ச்சப்படும்போது (அணுக் கதிரியக்கங்களை)
2.அதன் அலைவரிசையில் மோதப்படும்போது இங்கிருக்கும் பொருளைக் கருக்கிவிட்டு
3.செயலற்ற நிலைகளாக்கி மற்ற எல்லாவற்றையும் கவர்ந்து கொள்கின்றது.

இந்த உணர்வின் தன்மை கூடி ஆவி மண்டலங்களாக மாறும்போது இதனைச் சூரியன் எடுத்துச் செல்லுகின்றது. போகும் பாதையில் பல கோள்கள் எடுக்கின்றது.

அதிலிருந்து வடித்து மீண்டும் சூரியனுக்கு வரப்படும்போது இதே தீமையின் விளைவுகள் வரப் போகின்றது. இரண்டு வயர் மோதினால் எப்படி எர்த் (EARH) ஆகின்றதோ அதைப்போல
1.அந்த அதிர்வின் தன்மை ஆனபின் நம் உயிரின் துடிப்பு அதிகரித்துவிடும்
2.அந்தத் துடிப்புக்கு ஈடுகட்டும் நிலை நம் உடல் அணுக்களுக்கு இல்லை
3.அந்த உணர்வுகள் எல்லாம் செயலிழந்து விடும். (FUSE)

ஒரு பல்பிற்குள் மின்சாரம் அதிகமாகி விட்டால் அது எப்படி அதனுடைய இயக்கங்களை ஒளி காட்டுவதை இழந்துவிடுகின்றதோ (FUSE) அதைப்போல மனித அறிவின் தன்மையை இழக்கச் செய்துவிடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் மீள்வது எவ்வாறு…?

இன்று விஞ்ஞான அறிவால் அஞ்ஞான வாழ்க்கை வாழ்ந்து கொண்டுள்ள நிலையில்… எத்தனை கடவுளை வணங்கினாலும்… எத்தனை பக்தி கொண்டிருந்தாலும்… என்ன ஆகும்..?

நல்ல ஒழுக்கங்களை எல்லாம் கடைப்பிடிக்கலாம். இருந்தாலும் இத்தகைய தீமை என்ற நிலைகள் நடந்தால் எல்லாமே பாழடைகின்றது.

ஆகவே… அந்தத் தீமை என்ற உணர்வை நமக்குள் வளராது தடுக்க வேண்டுமென்றால்
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்தே ஆக வேண்டும்
2.அதை எடுத்தால் நீங்கள் உங்களைக் காக்கலாம்… பிறவியில்லா நிலை அடையலாம்.
3.உங்களை நம்பிப் பழக வேண்டும்.

இந்தச் சாமியார் செய்வார்… அந்தச் சாமியார் செய்வார்… அந்தக் கடவுள் செய்வார்… இந்தக் கடவுள் செய்வார்…! என்ற நிலையை விடுத்துவிடுங்கள்

உங்கள் உயிரே ஈசனாக இருக்கின்றான்… ஆண்டவனாக இருக்கின்றான்… கர்த்தராக இருக்கின்றான்…. கடவுளாக இருக்கின்றான்…! ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயரை வைத்துதான் இந்த உயிரை அழைக்கின்றனர்.

அந்த உயிர் இயக்கும் தன்மை வரப்படும்போதுதான் பல வண்ணங்களில் பல நிலைகளில் பேசி அதைக் கடவுள் என்று சொல்கின்றனர்.

நாம் நுகரும் உணர்வுகள் நம் உடலுக்குள் சென்று அதாவது…
1.உள் நின்று இயக்குவதைக் கடவுள் என்றும்
2.அந்த உணர்வின் தன்மை மீண்டும் இயக்கித் தன் இனத்தை உருவாக்கும் பொழுது ஈசன் என்றும்
3.அது இயக்கும் தன்மை மீண்டும் உருவாக்கும் போது பிரம்மன் என்றும்
4.அந்த உணர்வின் தன்மை உடலாக்கும்போது சிவன் என்றும்
5.இப்படித் தெளிவான நிலைகளை நம் சாஸ்திரங்களில் காட்டப்பட்டுள்ளது.

நம் உடலுக்குள் இயக்கும் நிலையே கடவுள். உள் நின்று இயக்கும் உணர்வுகள் எதுவோ அதன் வழி தான் செயல்படுகின்றது என்ற உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.

எந்த நேரமும் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் சக்திகளை நீங்கள் பெற முடியும். அதைப் பெற்று “உயிரின் துடிப்பைச் சீராக்க முடியும்…!”

இந்த உலகை அறிய விரும்பி பூமிக்குள் வந்தாலும்… நீ பட்டது போதும் தாயே மகாலட்சுமி…!

 

1.மனிதனின் உயிர் என்ற நிலை வரப்படும் பொழுது “மகாவிஷ்ணு” சர்வத்தையும் எடுத்து வருகின்றது.
2.உயிரில் உள்ள காந்தம் எத்தனையோ விதமான உணர்வுகளை நமக்குள் சேர்த்தது “மகாலட்சுமி…”
3.நம் உடலிலே எல்லா வகையான உணர்வுகளையும் வளர்த்து வைத்திருக்கின்றது.

சீதாவை ராவணன் கடத்திச் சென்று விடுகின்றான் இராமன் எத்தனையோ போர்களைச் செய்து சீதாவை மீட்டி வருகின்றான். மீட்டி வந்த பிற்பாடு மக்கள் என்ன சொல்கிறார்கள்…?

அசுரனிடத்தில் இவ்வளவு நாள் இருந்ததால் மக்கள் சீதாவினுடைய புனிதத் தன்மையை சந்தேகப்படுகிறார்கள் என்று சொல்லி அக்கினிப் பிரவேசம் செய்ய வேண்டும் என்று கூறுகின்றார்கள்.

அதன் வழி அக்கினிப் பிரவேசம் செய்து சீதா வருகின்றது. வந்தபின் சமுதாயம் ஏற்றுக் கொள்கிறது. இராமனும் சீதாவும் அரண்மனைக்குச் செல்கின்றார்கள்.

ஆனால் சிறிது காலத்திலேயே சீதா கர்ப்பம் ஆகின்றது. இதைத் தெரிந்து கொண்ட பின் மக்கள் என்ன சொல்கிறார்கள். சீதா ராவணனிடம் சிறைப்பட்டிருந்ததால் அவன் மோசமானவன்…! ஆகவே இது அவனுக்கு உருவான கரு தான் என்று மக்கள் கருதுகின்றார்கள்.

இது இராமனின் செவிகளுக்கும் செல்கின்றது. தன் சகோதரன் லட்சுமணனைக் கூப்பிட்டு “சீதாவைக் காட்டிற்குள் சென்று விட்டு விட்டு வந்துவிடு… ஒன்றும் சொல்லாதே…!” என்கிறான்.

தன் மனைவி கர்ப்பிணி என்றும் தெரிகின்றது… இருந்தாலும் அவ்வாறு சொல்கின்றான்.

அசுர உணர்வுகள் கொண்டு வாழும் மிருகத்தின் மத்தியிலே கர்ப்பிணியை விட்டுச் சென்றால் என்ன ஆகும்…? உணவுக்கோ பாதுகாப்புக்கோ ஒருவரும் இல்லை என்றால் அதனுடைய நிலை என்ன ஆகும்…?

அப்போது அங்கே அந்தக் காட்டிற்குள் வரக்கூடிய ஒரு பெண் “இது கர்ப்பிணியாக இருக்கின்றது… அனாதையாக இருக்கின்றது… இது யார்…? என்றும் தெரியவில்லை… இருப்பினும் வான்மீகி மகரிஷி அங்கே தவம் இருக்கின்றார்… இந்தப் பெண்ணை அங்கே அழைத்துச் சென்று அடைக்கலம் செய்யலாம்…? என்று கூட்டிச் செல்கின்றது.

வான்மீகி சீதாவைப் பார்த்தபின் உண்மையை உணர்கின்றார். சரி இங்கேயே இருக்கட்டும் என்று சொல்கின்றார்.

இயற்கையில் இராமனைப் பற்றிய உண்மை நிலைகளையும் தசரதச் சக்கரவர்த்தியின் நிலையையும் உலக நிலைகளையும் எப்படி இருக்கின்றது…? என்ற நிலையைக் கருவிலே உருப்பெற்ற குழந்தைக்குக் கர்ப்பிணியிடம் செவி வழி சொல்லி அதை நுகரச் செய்து அதன் வழி ரத்தத்தில் கலந்து கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு ஞானத்தை ஊட்டுகின்றான் வான்மீகி.

1.இராமனுடைய செயல்கள் எப்படி…?
2.உலக மக்களின் செயல்கள் எப்படி…?
3.ராவணனுடைய செயல்கள் எப்படி…? என்று
4.இந்த உண்மைகள் அனைத்தையுமே சீதாவிற்குக் கதையாகச் சொல்லப்படும் பொழுது
5.கர்ப்பிணி காது வழி கேட்டு கண் வழி கவர்ந்து மூக்கு வழி நுகர்ந்து
6.அந்த உணர்வுகள் ரத்தத்துடன் கலந்து கருவிலிருக்கும் குழந்தைக்கு இந்த ஞானத்தை ஊட்டுகின்றது.

இதில் “எத்தனையோ அற்புதமான உண்மைகள்” இருக்கின்றது…!

அதற்குப் பின் குழந்தைகள் பிறக்கின்றது லவ குசா என்று இரட்டைக் குழந்தைகளாகக் காரணப் பெயராக வைக்கின்றார்கள். அதாவது…
1.கவர்ந்து கொண்ட உணர்வுகள் எதிரொலியாக எப்படிச் செல்கின்றது…?
2.எதைக் கவர்ந்து உருவானதோ அந்த உணர்வின் தன்மை வெளிப்படுத்தி அந்த உணர்வின் தன்மை எப்படிச் செயல்படுத்தும்…? என்பதற்காக
3.இரட்டைக் குழந்தைகள் பிறந்தது என்று காவியப்படி கொண்டு வருகின்றார்கள்.

ஆனால் சீதா இல்லாததால் இங்கே இராமன் ஆட்சி செய்யும் இடத்தில் பல இன்னல்கள் சூழப்பட்டு விடுகிறது. அதிலிருந்து மீட்கத் தன் தந்தை செய்த அஸ்வமேத யாகத்தை மீண்டும் செய்ய வேண்டும் என்று இராமன் சொல்கிறார்.

ஆகவே அரசைக் காக்க வேண்டும் என்று அந்த யாகத்தைச் செய்ய முற்படுகின்றார்கள். தேதியைக் குறித்து அந்த நாளிலே அதைச் செயல்படுத்த வேண்டும் என்று ஆயத்தம் செய்கின்றார்கள்.

வான்மீகி இதைத் தெரிந்து கொள்கிறார். நாளை அந்த யாகம் தொடங்க இருக்கிறது என்றால் அங்கே மற்ற எல்லோரும் கூடியிருப்பார்கள் என்ற நிலையில்
1.லவ குசாவை அழைத்து “நீங்கள் அங்கே செல்லுங்கள்…”
2.அங்கே சென்று தன் சரித்திரத்தை நான் எப்படிப் பிறந்தேன்…? எப்படி வளர்ந்தேன்…?
3.இதற்கு மூலம் யார்…? என்ற தத்துவத்தை எடுத்து ஓதும்படிச் சொல்லி அனுப்புகின்றார்.

அதன்படி யாகம் தொடங்கும் வேளையில் அந்த குழந்தைகள் இதையெல்லாம் பாடல்களாகப் பாடி வெளிப்படுத்துகின்றார்கள்.

இந்தப் பாடல்களைக் கேட்ட இராமன்… என்னுடைய சுய சரிதம் எனக்கும் சீதாவுக்கும் மட்டும் தான் தெரியும் அப்படி இருக்கும் பொழுது இந்தக் குழந்தைகள் அதைப் பாடுகிறார்கள் என்றால் “இவர்கள் யாராக இருக்கும்…?” என்ற வகையில் அவர்களை அணுகி… உங்களுடைய தாயார் யார்…? எங்கே இருக்கின்றார்கள்…? என்று இராமன் கேட்கின்றார்.

அவர்கள் ஒன்றும் சொல்லாமல் சீதா இருக்கும் வான்மீகி ஆசிரமத்திற்கு இராமனை அழைத்துச் செல்கின்றார்கள். இராமனும் உற்றுப் பார்த்து உண்மையை உணர்ந்து கொள்கின்றான். நாட்டு மக்களும் உணர்கின்றார்கள்.

ஏனென்றால் அவர்களும் யாகசாலையில் இந்த பாடல்களைக் கேட்டதால் உலக மக்கள் புரிந்து கொண்டனர். “இனி நாம் சேர்ந்து வாழலாம்” என்று இராமன் சீதாவை அரண்மனைக்கு அழைக்கின்றான்.

அப்பொழுது தான் பூமாதேவி சீதாவிடம் “நீ பட்டது போதும் தாயே…!” என்று சொல்கிறது.

உயிரின் இயக்கம் ஈசன்… அதிலே ஏற்படும் வெப்பம் விஷ்ணு… ஈர்க்கும் காந்தம் லட்சுமி.
1.இந்த உடலுக்குள் எத்தனையோ வகையான உணர்வுகளைச் சேர்த்து வைத்தது உலகை அறியும்படிச் செய்தது.
2.நாம் உலகை அறிந்து கொள்ளும் நிலைக்காக எடுத்துச் சேர்த்தது.

மகாலட்சுமி நீ உலகை அறிய விரும்பினாய். அந்தச் சுவையின் தன்மை வரும் பொழுது நீ மகாலட்சுமியாக இருந்தாலும் “இந்த உடலில் பட்டது போதும்…”

சுவை சீதா என்ற நிலையே பூமியிலிருந்து தான் அது உருவாகக் காரணமானது.
1.பூமியிலிருந்து விளையப்பட்ட சுவைதான் உடலாக விளைந்தது
2.நீ பட்டது போதும் தாயே…! என்று பூமி பிளந்து “சீதா என்ற இந்த உடல் மண்ணுடன் மண்ணாக ஐக்கியமாகின்றது…”

சீதா உயிரை நோக்கி விஷ்ணுவை நோக்கித் தவமிருந்தது விஷ்ணுவை நோக்கித் தவமிருந்ததால்
1.அதனுடன் ஐக்கியமாகி சந்தோச உணர்வுடன் இணையப்படும் பொழுது
2.உடல் பிரிந்தபின் உடலில் வரும் இருளை நீக்கிவிட்டு உயிரோடு ஒன்றி அவனுடன் அவனாக ஐக்கியமானது.

ஏனென்றால் ஒளி இருக்கும் உயிர் தான் எல்லாவற்றையும் அறிவித்தது “அந்த விஷ்ணு…” ஆகவே தான் கண்ட அந்த உணர்வின் சுவையை ஒளியின் சுடராகக் காட்டியது.

விஷ்ணுவை நோக்கித் தவமிருந்ததனால் அங்கே போய் உயிருடன் ஒன்றி ஐக்கியமாகின்றது. அப்படி என்றால் என்ன அர்த்தம்…?
1.உடலில் வந்ததை எல்லாம் நீக்கிவிட்டு
2.உயிருடன் ஒன்றி இனிப் பிறவியில்லா நிலை அடைவது.

ராவணனும் அரக்க உணர்வை எடுத்து அவனும் விஷ்ணுவை நோக்கித்தான் தவமிருக்கின்றான். (சீதாவோ) லட்சுமி விஷ்ணுவுடன் இணைந்து இயக்கி வந்தாலும் சீதா என்ற சுவையால் உடலாக ஆனாலும்
1.எத்தனையோ வேதனைகள் இருந்தாலும் விஷ்ணுவின் இயக்கத்துடன் நின்று
2.துயரத்தைத் தாங்கிக் கொண்டு அவனின் இயக்கமாகத்தான் இருந்தது.

துயரம் என்ற உணர்வுகள் மண்ணிலே தோன்றியது. ஆகையினால் மண்ணுடன் இந்தச் சடலம் போய் விடுகின்றது
1.அதிலே சேர்த்த உணர்வின் ஒளி உயிருடன் இருந்து இருளை நீக்கி ஒளி என்ற உணர்வைப் பெறுகின்றது…
2.பிறவியில்லா நிலை அடைவது தான் மனிதனின் எல்லை…! என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது இராமாயணக் காவியம்…!

நாம் புரிந்து கொண்டோமா…?

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உபதேசம் எல்லாம் கேட்போம்…! கேட்டுக் கொண்டிருக்கும்போது அந்த உயர்ந்த நிலைகளில் நாம் இருக்கின்றோம்…! என்கிற பொழுது என்ன அவர் பெரிய சாமியா…? என்று (ஞானகுருவை) யாராவது சொன்னால் உடனே அந்த உயர்ந்ததை விட்டுவிடுவோம்.

சாமிக்கு என்னய்யா தெரியும்…? என்று சொன்னால் உடனே கோபம் பொத்துக் கொண்டு வந்துவிடும். ஆனால் சமாளிக்கக்கூடிய திறன் வராது. அவர்களுடைய உணர்வுகள் நம்மை மாற்றிவிடுகிறது.

அப்பொழுது என்ன செய்ய வேண்டும்…?

ஞானிகள் கொடுத்த உணர்வின் வலுக் கொண்டு…
1.அவர் அறியாமை நீங்க வேண்டும் என்று “மௌனம் சாதித்து…”
2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி அவர் பெற வேண்டும்.
3.உண்மையை நிச்சயம் அவர் உணர்வார்… உணரும் பருவம் வரும் என்ற
4.இந்த உணர்வை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த உணர்வின் பலனை நீ சிக்கிரம் உணர்வாய்… பாரப்பா…! என்று இந்த உணர்வை அங்கே பதிவு செய்யுங்கள்.

அப்புறம் அப்படி…இப்படி.. என்பார்…! திரும்பித் திரும்பிப் பார்ப்பார்…! இந்த உணர்வுகள் உள்ளே போனவுடனே அவருக்குள் இருக்கக்கூடிய துன்பங்களை நிச்சயம் உணர்த்திக் காட்டும்.

1.நீ புரிந்து கொள்வாய்… புரிந்து கொள்ளக்கூடிய காலம் வரும்
2.நீ நிச்சயம் புரிவாய்… உன்னை நீ அறிவாய்
3.இந்த உலக இருளைப் போக்குவாய்…
4.உண்மை நிலையை நீ அறிவாய் என்று மட்டும் நீங்கள் சொல்லிவிடுங்கள்.

அப்படி இல்லாமல் அவரிடம் கடைசியில் எங்கள் சாமியைப் பற்றி இப்படிச் சொல்கிறாயா…? இரு நான் உன்னைப் பார்க்கின்றேன்…! என்று சொன்னால் அவர் உணர்வு தான் உங்களைப் பார்க்கும்.

இதை எல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். ஏனென்றால் அந்த உணர்வின் சக்தியை நாம் அறிந்திடல் வேண்டும்.

இதே மாதிரி வேறு சில நிலைகளையும் சொல்வார்கள். ஆனால் பற்று இருக்கும். நான்கு பேர் அப்படிச் சொன்னவுடனே அவர்கள் கோபம் குறைகளை எல்லாம் எடுத்துக் கொள்வார்கள்.

கடைசியில் நாம் போகும் பாதையை விட்டுவிட்டு என்ன சொல்வார்கள்..?

செ…! எங்கே பார்த்தாலும் அவன் இப்படிப் பேசுகிறான்.. இவன் இந்த மாதிரிப் பேசுகின்றான் என்று அந்தச் சண்டைகளை எல்லாம் கொண்டு வந்து வீட்டிலே விடுவார்கள்… தொழிலிலேயும் விடுவார்கள்.

அப்புறம் நல்ல சிந்தனை செய்யும் நம் நிலையே மாறி நமக்கு நாமே தண்டனைக் கொடுக்கும் நிலை ஆகிவிடும்.

நம் உடல் உணவாக உட்கொண்ட உணவில் கலந்துள்ள நஞ்சினை மலமாக மாற்றி… நல்ல உணர்வை உடலாக மாற்றுகின்றது ஆறாவது அறிவின் மணம் கொண்டு…!

அத்தகைய தீமைகளை அகற்றிடும் நிலைகள் கொண்ட நாம் கேள்விப்பட்ட தீமையான நஞ்சினை நீக்கி… நல்ல உணர்வினைப் படைத்திடும் ஆற்றலைத் தான் நமக்குள் பெருக்க வேண்டும்.

அப்படிப் படைக்க வேண்டும் என்றால்…
1.அந்த மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து உங்களுக்குள் இணைத்திட வேண்டும் என்பதற்குத்தான்
2.பல வட்டங்களை எழுப்பி இங்கே உபதேசிக்கின்றோம்.

உங்கள் உணர்வின் நினைவாற்றலை விண்ணிலே செலுத்தச் செய்து… அந்த மகரிஷிகளின் பால் இணைத்து உங்களுக்குள் அதைப் பெறும் தகுதியை தாவர இனங்களுக்கு உரம் கொடுப்பது போல் ஏற்படுத்துகின்றோம்.

ஆனால் நீங்கள் அதை நினைவு கொள்ள வேண்டும்

1.பிறருடைய குறைகள் எது வந்தாலும் அதை எண்ணத்தால் பதிவு செய்யக் கூடாது.
2.வந்தால்… உடனே அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்ற நினைவினை
3.அங்கே அதிகமாக்கி அந்தச் சித்திர புத்திரன் கணக்கைக் கூட்ட வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு வீணையை ஏழாக வாசிக்கின்றோம். ஒன்றோடு ஒன்று இணையாக வாசிக்கும்போது அது இனிமையாக இருக்கின்றது. அதிலே சுருதியைச் சீராக இயக்கவில்லை என்றால்… அதைக் கேட்டாலே வெறுப்பாகத்தான் வருகின்றது.

இதைப் போலத்தான் சொல்லின் “நயம்” மாறினால் வெறுப்பின் தன்மை ஊட்டுகின்றது.

ஒரு சிலரைப் பாருங்கள்…! பேசும் பொழுது வெறுத்துச் சொல்வார்கள்…! நியாயத்தைச் சொல்வார்கள்.. ஆனால் சும்மா வள…வள… என்று பேசிக் கொண்டிருப்பார்கள்.
1.அதையே திரும்பத் திரும்பச் சொல்வார்கள்
2.சொன்னவுடன் அவர்களைப் பார்த்தவுடனே அடுத்தாற்படி வெறுப்பு வரும்.

அதே சமயத்தில் அவர்கள் உள்ளடக்கி என்ன சொல்வார்கள்….?

தன்னை நியாயவாதியாக நல்லவர்களாகக் காட்ட எண்ணுவார்கள்… உள்ளுக்குள்ளே எல்லாம் வெறுப்பாக இருக்கும்…. சொல்களில் நயம் மாறும்…!

சொல்வது அரத்தமாகின்றதல்லவா…?

“இது அப்படி இருக்கின்றது… அது இப்படி இருக்கின்றது…” என்று சொல்லிக் கொண்டே போவார்கள். அப்படிப்பட்ட உணர்வு பட்டவுடனே அந்த நயம் மாறும்.
1.அவர்களிடம் அந்த உணர்வின் குணம் மாறும்
2.முகத்திலே…. கண்ணிலே எல்லாம் மாறும்… சொல்லிலும் பார்க்கலாம்…
3.நம்மை ஏமாற்றுகின்றார்கள் என்று தெரிந்துவிடும்.

உள்ளடக்கி எத்தனையோ தீங்கு செய்கின்றார்கள். மற்றவர்களை எல்லாம் தீங்காகச் சொல்லிக் கொண்டு இருப்பார்கள். தன்னை நல்லவர்களாகச் சொல்வார்கள்.

இதைக் கேட்டாலே நமக்கு வெறுப்பு வரும்…!

திரும்பத் திரும்ப இடைஞ்சல் பண்ண வேண்டுமென்று அவர்கள் சொல்லும் பொழுதெல்லாம்… அந்த உணர்வுக்குத் தக்கவாறு மணம்… அவர்களுடைய முகம்… அவர்களுடைய கண்ணும் மாறும்

கேட்கும்போது டக்கு… டக்கு… டக்கு… என்று நமக்கு உணர்வுகள் ஒவ்வொன்றாக மாறும்.

ஏனென்றால் அவர்களுடைய நினைவலைகளில் எதைக் கலக்கின்றார்களோ… இதனுடன் கலந்து வரப்படும்போது அந்தக் கலர் மாறும் எதிலே கொண்டு போய்விட்டாலும் இந்தச் சுவை வெளிப்படுத்தியே விடும்.

ஏனென்றால் மனிதனுக்கு இந்த உணர்வுகள் தன்மை…!

1.ஆனால் திரும்பத் திரும்ப நல்லவர்களாகச் சொல்லக்கூடிய நிலைகள் வேறு…!
2.அவர்கள் உண்மையிலே நல்லதாகச் சொல்வார்கள்.
3.அந்த நல்லதைத் அதை திரும்பத் திரும்பச் சொல்லும்போது பார்த்தால்
4.நமக்குள் அந்த மகிழ்ச்சியின் தன்மையே ஊட்டிக் கொண்டு இருக்கும்.

முந்தி எல்லாம் ஒரு மனிதனைப் பார்த்தவுடனே கோபமாக இருக்கும்போது எந்தக் கலரில் வருகின்றது…? வேதனைப்படும்போது அந்த உடலில் இருந்து உற்பத்தியாகும் கலர்கள் எப்படி மாறுகிறது…? என்று காண்பிப்பேன்.

அதுவெல்லாம் இந்த கண்ணிலே எப்படி வருகின்றது…? இந்த அலைகள் எப்படி உற்பத்தியாகின்றது…..? நாம் சுவாசிக்கும்போது இந்த உணர்வுகள் பட்டபின்…
1.நல்லதை எல்லாம் விலக்கி விட்டுவிடுகின்றது.
2.இந்த உணர்வுகள் அது சராமாரியாகப் போகின்றது…
3.உள்ளுக்குள் சுற்றி வரப்போகும் போது மற்ற எதற்கும் இடம் கொடுக்காது.
4.அப்பொழுது கை கால் எல்லாம் இந்த அலைகள் பாயும்
5.ஆன்மாவிலே இதுதான் பெருகும்…. மற்றதெல்லாம் உள்ளுக்குள் அடங்கிவிடும்.

இத்தகைய நிலை ஆனால் அடிக்கடி வேதனையாகும்…! இதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே விளக்கமாகச் சொல்கிறேன்.

தினசரி தியானம் எடுத்து முடித்த பிற்பாடு நாம் செய்ய வேண்டியது

 

சங்கடமோ சலிப்போ கோபமோ குரோதமோ தொழிலில் சோர்வோ இது எல்லாம் வரும் பொழுது அது நம்மை இயக்காமல் தடைப்படுத்துவதற்கு
1.அம்மா அப்பாவை நினைத்து மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரை ஒரு நிமிடம் எண்ணிவிட்டு
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா என்று கண்ணிலே ஏங்க வேண்டும்.

அடுத்து… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் ரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஒரு நிமிடம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

அப்படிச் செலுத்தி விட்டால் அந்தச் சங்கடமோ பிறருடைய கோபமோ பிறருடைய நோயோ அது எல்லாம் நமக்குள் வராதபடி சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.

1.எங்கள் தொழில் சீராக நடக்க வேண்டும்…
2.நாங்கள் பார்க்கும் குடும்பங்கள் எல்லாம் நலமும் வளமும் பெற வேண்டும்
3.நன்மை செய்யக்கூடிய எண்ணங்கள் எல்லோருக்குள்ளும் வளர வேண்டும் என்று எண்ண வேண்டும்.
4.இதைப் போன்று வாழ்க்கையில் நம் ஆன்மாவை ஒவ்வொரு நொடிப் பொழுதும் தூய்மைப்படுத்திக் கொண்டே வர வேண்டும்.

எண்ணியவுடன் அந்தச் சக்தி கிடைக்கும்படியாகத் தான் யாம் பதிவு செய்திருக்கின்றோம்.

நம்மைத் திட்டியவனை திட்டினான் திட்டினான் என்று எண்ணும் பொழுது அவனுடைய நினைவு எப்படித் தொடர்ந்து வருகின்றதோ… துரோகம் செய்தான் பாவி என்று அவனை எண்ணினால் நம் காரியங்கள் எப்படி அன்று கெடுகின்றதோ அவனுக்கும் கெடுகின்றதோ அதைப் போல்
1.நீங்கள் எப்போது அருள் சக்திகளை எண்ணினாலும்
2.உங்கள் எண்ணத்தால் அந்த சக்திகளை நீங்கள் எளிதில் கவர முடியும்… உங்கள் எண்ணம் உதவி செய்யும்.

தீமை செய்வோரைப் பார்த்து “இப்படிச் செய்கின்றார்களே…!” என்று நாம் எண்ண வேண்டியது இல்லை… எண்ணக் கூடாது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலில் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் அவருடைய அறியாத தீமைகளிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும்… பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று இப்படித் தான் நாம் எண்ணி வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் தீமை செய்வோரைப் பார்த்து இப்படிச் செய்கின்றானே என்று எண்ணினோம் என்றால் அவன் உணர்வு நமக்குள் வந்து விடுகின்றது. நம் வாழ்க்கையை அது கெடுக்கின்றது.

ஆகவே அப்படி அது நமக்குள் வராதபடி இந்த முறைப்படி சீர்படுத்திக் கொள்ள வேண்டும். எத்தகைய நிலைகள் வந்தாலும் இது போன்று கடைப்பிடிக்க வேண்டும். அப்படிச் செய்து வந்தால் பிறருடைய தீமை நமக்குள் புகாது.

இருவர் சண்டை இட்டு கொண்டிருந்தாலும் கூட இதைப் போன்று உடனே ஆத்ம சுத்தி செய்துவிட்டு அவர்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும்… பகைமைகள் அகல வேண்டும் என்று சொல்லிவிட்டு வந்தால் போதுமானது.

அதை விடுத்து விட்டு
1.ஏன் இப்படிச் சண்டை இடுகிறார்கள்…? என்று அதை அழுத்தமாக எண்ணினால்
2.அவருடைய உணர்வுகள் நமக்குள் வந்து நமக்குள்ளும் சண்டையிடும் உணர்வை வளர்த்துவிடும்.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா.

இப்படித்தான் நம்மை அறியாமல் எத்தனையோ தீமைகள் வந்து சேருகின்றது. அதை மாற்றுவதற்குத் தான் உங்களுக்கு அடிக்கடி இது போன்ற பயிற்சிகளைக் கொடுப்பது. உங்கள் வாழ்க்கையையே தியானமாகக் கொண்டு வர முடியும்.

கையிலோ உடலிலோ அழுக்குப்பட்டால் உடனே தூய்மைப்படுத்துகின்றோம் அல்லவா. விஷமான பொருளோ அசிங்கமான பொருளோ நம் மீது பட்டால் உடனடியாக அதை நாம் தூய்மைப்படுத்துகிறோம் அல்லவா.

இதே மாதிரித் தான் உடனுக்குடன் உங்கள் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதற்கு இந்தச் சக்தியைக் கொடுக்கின்றோம். கொடுத்ததைச் சரியாக நீங்கள் பயன்படுத்திக் கொண்டீர்கள் என்றால் ஜோசியமோ ஜாதகமோ மந்திரம் எந்திரம் எந்த மாயமும் தேவையில்லை.

1.யாம் சொல்லிக் கொடுக்கக்கூடிய முறைப்படி செய்தால்
2.உங்களாலேயே அதை மாற்றிக் கொள்ள முடியும்… எல்லாக் காரியங்களும் நல்லபடியாக நடக்கும்.

உங்கள் வியாபாரத்திலும் இது போன்ற அருள் உணர்வுகளைப் பாய்ச்சி உங்கள் வாடிக்கையாளர்களுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர்களுக்குப் பொருளைக் கொடுத்தால் வியாபராமும் சீராகும்.

எங்கள் வீட்டிற்கு வருவோர் அனைவரும் நலம் நலம் பெற வேண்டும் நாங்கள் பார்க்கும் அனைவரும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.

எந்தத் துறையாக இருந்தாலும் இதே போன்று அருள் உணர்வைப் பாய்ச்சி அங்கே இனைக்கும்படி செய்து
1.அனைவருக்கும் இதைக் கிடைக்கும்படி செய்து வந்தால் எல்லாமே மகிழ்ச்சியூட்டும் நிலையாக வளரும்.
2.இது உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.

இதன் வழி நீங்கள் கடைப்பிடிக்கப்படும் பொழுது இதைச் செய்து பார்க்கும் பொழுது
1.அதில் ஏதாவது தடைகள் ஏற்பட்டால் என்னிடம் கேளுங்கள்
2.அதற்கு என்ன வழி…? என்று நிச்சயமாக வழி காட்ட முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக பள்ளிகளில் பாடங்கள் படிக்கின்றார்கள் குழந்தைகள். நல்ல மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்ற ஏக்கமும் இருக்கின்றது.

ஆனால் பாடங்கள் தான் நினைத்தபடி வரவில்லை என்று
1.“எனக்கு ஞாபகம் இல்லையே…!” என்ற உணர்வினை
2.ஆழமாகப் பதிவு செய்து கொண்டால் அந்த உணர்வு “ஒரு வித்தாக” மாறுகின்றது.
3.பதிவாகவில்லை… பதிவாகவில்லை… பதிவாகவில்லை…! என்ற இந்த ராகம் தான் வரும்.

மீண்டும் எப்படிப் படித்தாலும் இதனுடன் கலந்து அந்த உணர்வு வரப்படும்போது… தன் நினைவை இந்த அலையுடன் கலந்து “நினைவற்றதாக மாற்றுகின்றது…”

அதை மாற்ற வேண்டும் என்றால் எந்த முறையைக் கையாள வேண்டும்…?

1.தன் தாயை எண்ண வேண்டும்…!
2.தாய் அன்பு கொண்டு நமக்குள் பதிவு செய்த அந்த தாயின் அன்புள்ளம் எனக்குள் பெருக வேண்டும்
3.அவர்கள் எனக்கு எந்த ஆசிர்வாதம் கொடுத்தாரோ அந்த ஆசியின் வழிப்படி கல்வியில் சிறந்தவனாக வர வேண்டும்
4.என் அன்னையின் அருள் என்றும் எனக்கு உறு துணையாக இருக்க வேண்டும்.
5.கல்வியில் நான் உயர்ந்திருக்க வேண்டும் என்று இப்படி எண்ணினால்
6.சந்தர்ப்பத்தால் வந்த தீமைகளை நிச்சயம் அகற்ற முடியும்.

ஏனென்றால் தாய் எப்போதுமே தன் குழந்தைகள் எல்லோரும் உயர்ந்த நிலைகள் பெற வேண்டுமென்ற எண்ணத்தைத் தனக்குள் உருவாக்கி “ஊழ் வினை என்ற வித்தாக” நமக்குள் போட்டுள்ளது.

ஆனால் அதை நினைவு கொண்டு யாரும் எடுப்பதில்லை.

குழந்தைகள்… தன்னைத் திட்டியவர்களையும்… விளையாட்டுத்தனமாகப் பிறர் பேசும் தீமைகளையும்… தீமையான செயல்களையும் பதிவு செய்து… அதன் உணர்வின் நினைவாக அந்த எண்ணங்களைப் பெருக்கிக் கொள்வார்கள்.

பின்… இவர்கள் பாட நிலைகள் அனைத்தும் மறைந்து விடுகின்றது.

ரோட்டிலே செல்லப்படும்போது ஒருவன் தீங்கான செயல்களைச் செய்கின்றான். இந்தக் குழந்தையோ நல்ல குழந்தை… ஆனால் உயர்ந்த ஞானம் பெற்ற குழந்தை.

ஆனால் தீங்கான செயலைச் செயல்படுத்துவோரின் தாக்கும் உணர்ச்சியின் வேகம் வரப்படும்போது அன்பும் பரிவும் கொண்ட இந்தக் குழந்தை அதைப் பார்த்தபின் பயமும் பதட்டமும் அதற்கு வந்து விடுகின்றது. இது பதிவாகி விடுகின்றது.

அதற்கு அடுத்து… பள்ளிக்குச் சென்றபின் அதே பதட்ட நிலையில் இருக்கின்றது. அந்தச் சந்தர்ப்பத்திலிருந்து…
1.பாட நிலைகளைத் கவரும் போதெல்லாம்
2.அது இதனுடன் மோதும் போது… பய உணர்ச்சிகள் தோன்றி
3.நல்ல நினைவாற்றல் வராது சென்று விடுகின்றது… ஞாபக சக்தி குறைகின்றது.

அந்த ஞாபக சக்தி கூட வேண்டுமென்றால்… நான் (ஞானகுரு) உங்களுக்குள் உபதேசித்த உணர்வின் தன்மையையும் அம்மா அப்பா அருளாசியையும் நாங்கள் பெற வேண்டும் என்று குழந்தை எண்ணுதல் வேண்டும்.

தாய் அன்புள்ளம் கொண்டு… தனது குழந்தை கல்வியில் உயர்ந்த நிலை பெற வேண்டும்… உயர்ந்த ஞானம் பெற வேண்டும்…! என்று எண்ணி அது உடலில் உருவாகிய அருள் ஞானத்தைக் குழந்தை மேல் பாய்ச்சி வைத்துள்ளது.

தன் குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டும்… என்ற எண்ணத்தை ஊட்டி அதை அவர்கள் வெளிப்படுத்திப் பதிவு செய்த நிலைகளும் குழந்தையிடம் உள்ளது.

ஆகவே குழந்தைகள் ஒரு அச்சுறுத்தும் உணர்வுகளைக் கேட்க நேர்ந்தால் உடனே…
1.ஈஸ்வரா…! என்று எண்ணியதை உருவாக்கும் உயிரைப் புருவ மத்தியில் நினைவில் கொண்டு
2.அம்மா அப்பா அருளால் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று
3.தன் அம்மாவை நினைத்தால்… இந்தச் சக்தியை எளிதில் பெற முடியும்

பெற்று விட்டால் யாரைக் கண்டு அஞ்சினோமோ அந்த உணர்வினை “தாய் அன்பும்… அதன் வழியில் யாம் உபதேசிக்கும் அருள் ஞானமும் கலந்து…” அச்சுறுத்தும் உணர்வுகள் விளையாது அதை அடக்கும்.

இது தான் கல்யாணராமன் என்பது.

இந்த வாழ்க்கையில் எத்தகைய கொடிய நிலைகள் பெற்றாலும் மேலே சொன்ன முறைப்படி நினைத்து அம்மா அப்பா அருளால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இணைத்து விட்டால்
1.தீமையின் செயலாக்கங்களை அது அடக்கி… அச்சுறுத்தும் உணர்வுகளை அடக்கி…
2.அந்த ஞானியின் உணர்வின் துணை கொண்டு மெய்ப் பொருள் காணும் அந்த வலிமையான நிலைகள் பெறச் செய்யும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு சமயம் காட்டிற்குள் செல்லும் போது (ஞானகுரு) ஒரு சிறு பூச்சி ஒன்று என்னைக் கடிக்கின்றது. அது கடித்தபின் எனக்கு மயக்கமே வருகின்றது.

குருநாதர் அதை விட்டுக் கடிக்கச் செய்கின்றார். என் உடல் முழுவதும் நஞ்சு பாய்கின்றது. அந்த விஷம் ஓடும்போது உடலில் ஒரு கருக்கல் போல்… அது இரத்த நாளங்களில் பட்டபின் இரத்த நாளங்களே கருப்பாகின்றது.

அப்பொழுது அதனின் உணர்வுகள் எவ்வாறு…? என்று எனக்குக் குருநாதர் காட்டுகின்றார்.

நீ இவ்வளவு பெரிய மனிதனாக ஆகியுள்ளாய். ஆனால் இதற்கு முன்னாடி இதைப் போன்ற பூச்சியாகவும் இருந்தாய். அந்தப் பூச்சியின் நிலைகளில் இருந்து தான் மீண்டாய்.

இப்பொழுது மீண்டும் அதே பூச்சி உன்னைக் கடிக்கும்போது உன் உணர்வின் நினைவாற்றல் அங்கே செல்கின்றது…?

அதனுடைய விஷம் படர்வதைப் பார். உன் கவன நரம்புகளைத் தாக்குவதைப் பார்… அங்கே தாக்குவதற்கு முன் நீ சிந்தித்துப் பார். ஆனால் இது உன் கவன நரம்பில் தாக்கிவிட்டால் உனது நினைவுகள் மறைந்துவிடும். நீ எங்கே செல்வாய்…? என்ற உணர்த்திக் காட்டுகின்றார்.

அந்த உணர்வலைகள் எனக்குள் படர்வதையும் என் நினைவாற்றல் முழுவதும்..
1.இந்தப் பூச்சி கடித்துவிட்டதே…
2.நான் மடிந்துவிடுவேனே…
3.இந்த உடலை விட்டுப் போய்விடுவேனே…! என்று
4.இந்த உணர்வுகள் தான் தோன்றுகின்றதே தவிர
5.தன்னைக் காக்கும் உணர்வுகள் வரவில்லை.

பரிணாம வளர்ச்சியில் பல கோடிச் சரீரங்களில் பூச்சியாக புழுவாக இருக்கப்படும்போது இன்று பார்க்கின்றோம். ஒரு பட்சி ஈயை விழுங்குகின்றது அதனைத் தன் இரையாக்கி கொள்கின்றது. ஆனால் ஈயின் உயிரோ பலியாகின்றது.

அதே சமயத்தில் பல்லியை ஒரு தேள் கொட்டுகின்றது. விஷத்தைப் பாய்ச்சுகின்றது. அது தசைகளை உணவாக உட்கொள்கின்றது.

இது போன்று பல கோடிச் சரீரங்களில் நீ எத்தனை இம்சைப் பட்டிருப்பாய்…? என்றார் குருநாதர்.

அதிலிருந்தெல்லாம் மீண்டிடும் நிலைகள் பெற்ற நீ.. மீண்டிடும் சக்தி பெற்றபின் உன்னால் ஏன் முடிவதில்லை…! ஒரு சிறு விஷம் கொண்ட அணு தான் இது…! ஆனால் கடித்தபின் அதனுடைய வலிமை உனக்கு எவ்வளவு பெரிய வேதனையாகின்றது.

உயர்ந்த ஞானங்கள் பெற்று உயர்ந்த நிலைகள் பெற்றதனால் அடுத்து விஷத்தை முறிக்கும் ஒரு மருந்தினை இதனுடன் இடப்படும்போது உனக்குள் அதைத் தடைப்படுத்துகின்றது.

ஆனாலும் அந்த விஷப் பூச்சி உன்னை கடித்ததல்லவா…!
1.அது கடித்தது உனக்குள் ஒரு வித்தாக ஊழ்வினையாகப் பதிவாகி விடுகின்றது.
2.மருந்தைக் கொண்டு புண்ணை ஆற்றிவிடலாம்…. இன்று நீ தப்பிவிட்டாய்.
3.ஆனாலும் இந்த விஷ அணுக்கள் ஊழ்வினையாகப் பதிவான பின் வித்தாகின்றது.

முதலிலே நீ நுகர்ந்த உணர்வுகள் ஓ… என்று இந்த உடலிலே அணுவாக மாறுகின்றது. மருந்தைக் கொடுத்து விஷத்தை நீக்கி நான் உன்னைக் காப்பாற்றுகின்றேன்.

1.கடித்த உணர்வின் தன்மை உன் எலும்புக்குள் அந்த விஷம் வித்தாக ஊன்றிவிடுகின்றது.
2.நீ நுகர்ந்ததோ ஓ என்று ஜீவ அணுவாக மாறுகின்றது
3.அந்த அணுவின் மலம் உன் உடலாக மாறுகின்றது.

நான் மருந்து கொடுத்து விட்டேன்… விஷத்தையும் முறித்துவிட்டேன்…! இதை நீ தெளிவாகத் தெரிந்து கொண்டாய்..
1.ஆனால் விஷத்தை உருவாக்கும் அந்த வித்து
2.உன் உடலுக்குள் ஊழ்வினையாக ஊன்றியுள்ளது.
3.இதை அடக்க முடியாது.

நிலத்திலே களைகளைப் பிடுங்குவது போல் மருந்தால் அந்த அணுக்களைக் கொன்றாலும் மீண்டும் அதை நினைவுபடுத்தினால் அந்த அணுக்கள் வளரத் தான் செய்யும். இதை நீ தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால்… இது போல் ஒவ்வொன்றும் தன் நினைவிற்கு வரவேண்டும்.

இந்தச் சந்தர்ப்பம் விஷம் என்று நீ அறிந்தது. இந்த உணர்வின் தன்மை பதிவானால் தான் அதே இனத்தின் தன்மை மீண்டும் வரப்படும்போது
1.இது தன் இனம் என்று கவர்ந்து… சுவாசித்து… உயிரிலே பட்டு…
2.இன்ன விஷம் கொண்டது என்பதனை நீ தெரிந்து கொள்ள உதவும்
3.மீண்டும் அத்தகைய விஷத்திலிருந்து தப்பித்துக் கொள்ள உதவும்.

இத்தகைய அறிவில்லை என்றால் உனக்கு நினைவில்லை என்று எனக்குத் தெளிவாக உணர்த்துகின்றார் குருநாதர்.

மரண பயம் எதிலே வருகின்றது…?

 

சகோதர தத்துவம் நமக்குள் எதிலே இருக்க வேண்டும்…?
1.நீங்கள் நலமாக இருக்க வேண்டும் என்று நான் எண்ணினால் எனக்குள் அந்தச் சகோதர தத்துவம் வளர்கின்றது.
2.உங்கள் குடும்பம் வளம் பெற வேண்டும் என்று எண்ணினால் எனக்குள் இருக்கும்
3.நல்ல குணமும் எதிர் குணங்களும் நலம் பெறுகின்றது.
4.ஏனென்றால் எனக்குள் எல்லாமே அந்த அணுக்கள் ஒரு குடும்பமாகத் தான் வாழ்கின்றது
5.”நீங்கள்… நான்…” எல்லோரும் சேர்த்து இந்த உடலில் ஒரு குடும்பமாக வாழ்கின்றது.
6.ஒரு உலகமாக வாழும்… ஒரு ஊராக வளர்கின்றது.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் யார் பிரிந்து இருக்கின்றோம்…? யாரும் யாரை விட்டுப் பிரிந்து இல்லை. ஒரு வேளை சாபமிட்டால் அங்கே இருவருடைய உணர்வும் ஒன்றாகி விடுகின்றது.

நட்பாகின்றது அல்லது பகைமையாகி விடுகின்றது. பகைமை உணர்வுகள் நமக்குள் வந்து விட்டால் பகைமையைப் பெருக்கத் தொடங்கி விடுகின்றது. நட்பின் தன்மை வரப்படும் பொழுது அந்த நட்பே நமக்குள் பெருகுகின்றது.

பகைமை உணர்வுகள் நமக்குள் வளரும் பொழுது தான்… ஐயோ மேல் வலிக்கின்றது தலை வலிக்கின்றது உடல் வலிக்கின்றது முதுகு வலிக்கின்றது இடுப்பு வலிக்கின்றது என்று வருகின்றது.

இந்த உணர்வுகள் வர வர
1.நாம் கோபப்பட்டால் தான் அதற்குச் சாப்பாடு கிடைக்கும்.
2.அல்லது என்னை இப்படிப் பேசினார்களே என்று வேதனைப்பட்டால் அந்த வேதனையான அணுக்களுக்குச் சாப்பாடு கிடைக்கின்றது.

நீங்கள் சும்மா இருந்து பாருங்கள் இனம் புரியாதபடி வேதனைகள் வரும்… அறியாத கோபம் வரும்… நமக்குள் பகைவர்களை உருவாக்கிக் கொள்ளலாம்.

அந்த நேரத்திலே பகைமை உருவாக்கப்படும் பொழுது புறத்திலேயும் பகைவர்களை உருவாக்கி விடுகிறது. அப்பொழுது “மரண பயம்” என்ற நிலை வருகின்றது.

மரண பயம் எதிலே வருகின்றது…? மனிதனை உருவாக்கிய நல்ல அணுக்களுக்கு…
1.நமக்கு ஏதும் கிடைக்காமல் போய்விடுமோ…?
2.நம் ஆசை நிறைவேறாமல் போய்விடுமா…?
3.அதல பாதாளத்திற்குப் போய் விடுவோமா…?
4.நம் குடும்பம் சிரமப்பட்டுவிடுமோ…? என்றெல்லாம் எண்ணும் பொழுது மரண பயம் வந்து விடுகின்றது.

மரண பயம் வந்து விட்டால் மனிதனைக் காக்கும் நிலை இழக்கப்படுகின்றது. பயத்தால் துடிப்பு நிலை அதிகரிக்கிறது…! எதை எண்ணுகின்றோமோ அதனின் வளர்ச்சி இங்கே வருகின்றது.

ஒவ்வொரு குணங்களுக்குள்ளும் மரண பயம் பட்டால் அது மடிந்து விடுகின்றது… செயலாக்கங்களை இழந்து விடுகின்றது.

ஒருவரிடம் விஷயத்தைச் சொல்லி விடுங்கள். உடனே அந்த நல்ல குணங்களுக்கு நாம் சொன்னது தப்பாகி விட்டதோ…! என்று பட…பட… என்று இங்கே துடிப்பாகும். நல்ல குணங்கள் மடியும் தருணம் வந்து விடுகின்றது.

என்ன சொல்வாரோ…! ஏது சொல்வாரோ…? இந்த உணர்வுகள் வரப்படும் பொழுது இந்த உணர்வுகள் அதிகரித்து விட்டால் மடிந்து விடுகின்றது. இந்த உணர்வின் தன்மை வரப்படும் பொழுது நம் நல்ல குணங்களைக் காண முடியுமா…?
1.நல்ல குணங்கள் மடிந்து மரண பயத்தை ஊட்டுகின்றது.
2.மனிதனையே மரணமடையச் செய்யும் நிலை உருவாக்கி விடுகின்றது.
3.இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்.
4.மகரிஷிகளின் அருளை நாம் பெறுதல் வேண்டும்
5.மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் வாழ்க்கையில் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்.

எமது அருளாசிகள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எவ்வாறு பெற வேண்டும்…? என்று யாம் (ஞானகுரு) தொடர்ந்து உணர்த்தினாலும்… பக்தி கொண்டவர்கள் சிலர்… முனித் தன்மை கொண்ட பாடல்களைப் பாடிப் பழகிக் கொண்டால் அந்தப் பாடலின் உணர்வுகளே அவர்களுக்கு முன்னாடி வரும்.

1.அது முன் வரப்படும் பொழுது
2.இங்கே கொடுக்கப்படும் அருள் ஞான இணைப்பை அது இணைக்க விடாது தடுக்கும்.

முனித் தன்மை கொண்ட பக்தி மார்க்கங்களிலும்… மதத்தின் அடிப்படையால் அவர்கள் கவிப் புலமையால் எடுத்துக் கொண்ட உணர்வின் நிலைகளையும் மற்ற பாடலுடன் பதிவு செய்து கொண்டால் அந்தப் புலமைகள் கொண்ட புலவர்கள் பால் எடுத்துக் கொண்ட உணர்வே முன் நிற்கும்.

இங்கே உபதேசிக்கும் பொழுது அது முன் எழுந்து நின்றுவிடும்.

இந்தப் புவியின் பற்றை அற்ற அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை இணைக்கத் தொடங்கினாலும் அவர்களுக்கெல்லாம் இணைப்பது மிகவும் கடினம்.

அந்த வகையில்… பக்தியின் புலமையில் அதிகமாக எடுத்துக் கொண்டோரின் நிலைகளிலும் ஒரு சிலரே மீள்வர். நூற்றுக்கு ஒரு பத்துப் பேர் தேறுவதே மிகக் கடினம்.

காரணம்… அவர்கள் மதத்தின் நிலைகள் கொண்டு ஞானிகள் என்ற நிலைகளும் புலமைகள் பாடியும்… பரிணாம வளர்ச்சியில் வளர்ந்த உயிரினங்களின் உணர்ச்சியைப் பற்றிப் புலமைகள் பேசினாலும் “அந்தப் புலமைகளே முன் வந்து எழும்…”

ஆனால் மூலத்தை இவர்கள் அறியார். மூலமற்ற நிலைகள் கொண்டு வாதிக்கும் நிலையே தான் அவர்களுக்குள் அதிகமாக விளையும்.
1.வாதிடும் திறமைகள் உண்டு.
2.ஆனால் மெய் ஒளி பெறும் உணர்வினை ஏற்றுக் கொள்ளும் மனப் பண்பு வராது.

வாதிடும் திறமைகள் ஆகப் படும் பொழுது அந்த முனித் தன்மை என்ற நிலையே இங்கே அடையும். இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் அனைவரும் விடுபட வேண்டும்.

ஏனென்றால் இந்த முனித் தன்மை கொண்டோரிடம் வாக்குவாதத் தன்மை அதிகமாகி விட்டால்… “சாமி நமக்குன் இவ்வளவு சொல்லி இருக்கின்றாரே…!” என்ற நிலைகளைக் கலந்து…
1.எதிர் மறையான பொறிகள் – ஒரு கல்லுடன் உராயப்படும் பொழுது பொறிகள் எழும்புவது போல்
2.நமக்குள் வெறுப்பும் வேதனையும் அதிகமாகத் தொடர்ந்து விடும்.

இதனால் நமக்குள் உறைந்திடும் உணர்வு கொண்டு கலவைகளில் சில மாற்றங்கள் ஏற்படுத்துவது போல் நம் உயர்ந்த குணத்திலேயும் மாற்றம் ஏற்படும் நிலையே வந்துவிடுகின்றது.

ஏனென்றால் பல நிறங்கள் தனித் தன்மையாக அவை இருப்பினும் அதனுடன் மற்ற நிறத்தை இணைக்கப்படும் பொழுது… நீங்கள் என்ன தான் வாயிலே சொன்னாலும்… சொல்லச் சொல்ல… அவர்கள் வெறுக்க வெறுக்க… அந்த மாற்றுப் பொருளாகச் சொல்வார்கள்.

அப்பொழுது உங்கள் உணர்வுகளும் அதைப் போல மாறுபட்டு நாம் போகும் பாதைக்கே ஒரு தடை விதிக்கும் நிலையாக வந்துவிடும்.

“இதிலே மிகவும் கவனம் தேவை…!”

காரணம் அதைப் போன்ற நிலைகள் வந்தாலும் உங்களுக்குக் காட்டிய அருள் வழி கொண்டு யாம் கொடுத்த…
1.அந்தச் சப்தரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும்…! என்று எண்ணத்தால் எண்ணி
2.அதைப் பல முறை எடுத்துத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
3.அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
4.அவர்கள் மெய்ப் பொருள் காணும் நிலைகள் பெறுதல் வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அவர்கள் உண்மையை உணர வேண்டும்.. நிச்சயம் உணர்வார்கள்…! என்ற எண்ணம் மட்டும் இருந்தால் போதும்.

”அருள் ஞானக் குழந்தை எனக்குள் உருவாகின்றது…!” என்று நாம் எண்ணுதல் வேண்டும்

 

1.இந்த வாழ்க்கையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது எது…? தெளிய வேண்டியது எது..?
2.நாம் அறிய வேண்டியது என்ன…? நாம் சேர்க்க வேண்டியது என்ன…?

இன்றைய செயல் நாளைய சரீரமாக நாம் அனைவரும் ஒளிச் சரீரம் பெற வேண்டும். முந்தைய செயல் இன்றைய மனித சரீரம் இன்றைய செயல் நாளைய சரீரம்.

ஆக… பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும்…. ஒளியின் சரீரமாக நாம் மாற்றி அமைக்க வேண்டும். எல்லோருக்கும் அந்த அருள் ஞானத்தைப் பெறச் செய்ய வேண்டும்.

1.இன்று உடலில் இருக்கக்கூடிய நோயை எல்லாம் மறந்து விடுங்கள்.
2.எப்படி இருந்தாலும் இந்த உடல் இருக்கப் போவதில்லை என்று உறுதியாகத் தெரிகின்றது.
3.இந்த உடலுக்காக ஏன் கட்டி அழுக வேண்டும்…?
4.இந்த உடலை விட்டு விடலாம்… அடுத்து ஒளியின் உடலாக நாம் பெற வேண்டும்.

கர்ப்பமுற்றிருக்கும் தாய் தன் குழந்தைக்காக எத்தனையோ வேதனைப்படுகின்றது. ஆனால் குழந்தை பிறக்க வேண்டும் என்று மகிழ்ச்சியுடன் இருக்கின்றது.

அருள் ஒளியின் உணர்வுகளைத் தனக்குள் இணைக்கப்படும் பொழுது நாம் எப்படிச் செயல்பட வேண்டும்…?

தன் உடலில் வரக்கூடிய சுமைகளை கர்ப்பிணி எவ்வாறு எண்ணுகின்றதோ அதைப் போன்று
1.அருள் ஒளியை நான் வளர்க்கின்றேன்
2.அருள் ஞானத்தைப் பெறப் போகின்றேன்.
3.அருள் வழியினை நான் பின்பற்றுகின்றேன் என்ற இந்த உணர்வில் மகிழ்ச்சி பெற வேண்டும்.

குழந்தையின் மேல் உள்ள ஆசையில் கர்ப்பிணித்தாய் என்ன செய்கின்றது…?

தன் கணவனையும் பார்க்க வேண்டும்… குடும்பத்தையும் பார்க்க வேண்டும்… தன்னையும் பார்க்க வேண்டும்… வீட்டு வேலையும் செய்ய வேண்டும்…! இத்தனை வேலைகளையும் அது செய்து கொண்டிருக்கின்றது. ஆக மொத்தம் தன் இனமாகக் குழந்தையை வளர்க்க வேண்டும் என்று எண்ணுகின்றது.

அருள் ஞானிகள் என்ன செய்கின்றார்கள்…?

இருளை அகற்றிடும் உணர்வின் தன்மையை ஒளியாகப் பெற்று “எல்லோரும் மகிழ்ந்து வாழ வேண்டும்” என்று எண்ணுகின்றார்கள். அதை நாமும் நமக்குள் உருவாக்க வேண்டும்.

கர்ப்பிணி தனக்கு வரக்கூடிய தீமைகளை அது எப்படி எண்ணுவதில்லையோ குழந்தை மீது பற்று கொண்டு தன் குழந்தையை எண்ணிக் கொண்டிருக்கின்றதோ எத்தனையோ அவஸ்தைகள் வந்தாலும் அதை எண்ணாமல் குழந்தையை வளர்க்கும் உணர்வையே தனக்குள் பெருக்கிக் கொள்கின்றது.

அந்தக் கர்ப்பிணியைப் போன்று
1.நாம் அருள் ஒளியின் உணர்வுகளை நமக்குள் சுமந்து
2.நமக்குள் வரக்கூடிய நஞ்சினை வளர்த்திடாது
3.நான் அருள் வழியில் வளர்கின்றேன்
4.அருள் ஒளி எனக்குள் உருவாகின்றது
5.அருள் ஞான அணுக்கள் எனக்குள் உருவாகின்றது
6.”அருள் ஞானக் குழந்தை எனக்குள் உருவாகின்றது…!” என்று இப்படி நாம் எண்ணுதல் வேண்டும்.

ஏனென்றால் இது போன்று உருவானது தான் அந்தத் துருவ நட்சத்திரம். ரிஷியின் மகன் நாரதன்…! அது ஒளியின் கருவாக ஒளியின் சரீரமாக உருவாக்கும் நிலை பெற்றது.

மனிதன் என்ற நிலை அடைந்த பின் இருளை அகற்றும் உணர்வின் தன்மை நாரதனாக அமைகின்றது ஆகவே அந்த அருள் ஒளியை நமக்குள் கூட்டினால் தனக்குள் உண்மைகளை உணர்த்தும் அறிவின் தெளிவாக நமக்குள் ஊட்டும்.

இருளை அகற்றியவன் அவன் அந்த அருள் ஒளியை நமக்குள் கூட்டப்படும் பொழுது இருள் சூழ்ந்த நிலைகளை மாற்றி விட்டு உயிருடன் ஒன்றிய நிலைகளாக நம் எண்ணங்களுக்குள் வலு சேர்த்து தீமைகளிலிருந்து விடுபடச் செய்யும். ஆகவே அந்த அருள் ஒளியைக் கூட்டும் நிலையை உருவாக்குங்கள்.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா. இதை ஒவ்வொருவரும் நீங்கள் பெற வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.
1.அருள் ஞானச் சுடராக அருள் ஒளி பெற்று அனைவரையும் அதைப் பெறச் செய்யக்கூடிய சக்தியாக நீங்கள் வளர வேண்டும்.
2.அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்திலே நீங்கள் என்றும் இணைந்து வாழ வேண்டும்.
3.அருள் ஞானச் செல்வம் பெற்று அருள் வழியில் வாழ்க்கை நடந்து
4.அருள் சொல்களைச் சொல்லி அந்தத் தெய்வீகப் பண்புகள் உங்களுக்குள் வளர வேண்டும் என்று பிரார்த்தித்து இதை நிறைவு செய்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அதாவது இந்த விண்வெளியில் எத்தனையோ வகையான நட்சத்திரங்கள் இருக்கின்றது. அந்த நட்சத்திரத்திற்குள் இந்தத் தூசி (துகள்கள்) வருவதற்கு… ஒளிகள்… நிறங்கள் கவர்வதற்கு எத்தனை கோடி அண்டங்களிலிருந்து சக்தி கிடைக்கிறது தெரியுமா…? என்பார்.

ஒரு நட்சத்திரம் ஒளியைக் கொடுப்பதற்கு எத்தனையோ கோடி நட்சத்திரங்களின் அந்தச் சக்தி சேர்த்துத் தான் வருகின்றது.
1.இந்த நட்சத்திரம்… இது கோடி…!
2.அது கோடி… கோடி… கோடி…

அதிலிருந்து கோடியாக வரப்படப்போகும் போது இந்தத் தாவர இனங்களில் அது ஒவ்வொன்றும் காரமாக வருவதற்கு எத்தனை காரம்…? தெரியுமா..?

உடனே “மிளகாய் கோடி… கோடி… கோடி…” என்பார்.

இந்தக் காரம்… கோடிக்குள் கோடியாக எப்படி உண்டானது…? அந்தக் கோடியின் உணர்வுகள் காரத்தின் ருசியாக வருவது போல்..
1.நமக்குள் இதே மாதிரியான எண்ணங்கள் பல சேர்த்து
2.அது கோபத்தின் உணர்ச்சிகளாக உருவாகும்.

கோபத்தின் உணர்ச்சிகள் உடலுக்குள் வளரப்படும்போது இந்த உணர்வின் பொறிகள் எப்படி நோயாக மாறுகின்றது…? என்று இப்படிக் கேள்வி எழுப்புகின்றார் குருநாதர்.

இப்படிக் கோடி… கோடி… கோடி… என்று அன்று பூராம் எனக்குச் சோறு அந்த அடி தான்…! (குருநாதர் கோடி கோடி என்று சொல்லி அடிப்பார்)

ஏனென்றால் இதையெல்லாம் நீங்கள் தெரிந்து கொள்வதற்குத்தான் சொல்கிறோம். என்னமோ… சாமி லேசாக உங்களிடம் வந்து சொல்கின்றேன் என்று இல்லாதபடி உங்களுக்குள் குருநாதர் காட்டிய உணர்வலைகளை உணர்த்திக் கொண்டே வருகின்றோம்.

நமது வாழ்க்கையில் நாம் தவறு செய்யாமலே நம்மை கோபக்காரனாக ஆக்கி விடுகிறது…. வேதனைப்படுவோனாக ஆக்கி விடுகிறது… தாய் தந்தையை மறக்கச் செய்து விடுகின்றது….!

1.தாய் தந்தை நம்மை நன்றாக வளர்க்க வேண்டுமென்று எண்ணினாலும் இடைப்பட்ட உணர்வுகள் தடுக்கின்றது.
2.தன் தாய்க்கும் தன் மனைவிக்கும் ஆகாது என்கிற நிலை வரும்போது இந்த உணர்வை இழுக்கின்றது
3.இதைப் பிளந்து தள்ள வேண்டுமென்றாலும் முடிவதில்லை.

சில குடும்பங்களில் இப்படி எல்லாம் இருக்கிறது. அதே சமயத்தில் தாய்க்கும் மகனுக்கும் ஆகவில்லை. தாய் தான் கடவுள் என்கின்றோம் தாய் தான் தெய்வம் என்கின்றோம் தாய் தான் குரு என்கிறோம்.

ஆனால் யாம் சொன்னதற்கும் இதற்கும் புறம்பாகப் போகின்றது. காரணம்… ஒரு உடலில் ஒரு உணர்வின் தன்மையை அந்தக் குணத்தின் வித்தினை விளைய வைத்தால் அது பல கோடி ஆகின்றது.

ஒரு உணர்வின் தன்மையை எடுத்துக் கொண்டு மற்ற உணர்வோடு அதைச் சேர்க்கப்படும்போது இங்கே மனிதன் என்ற தன்மையே பிரிக்கப்படும். இந்தப் பிரிவிலிருந்து மீள்வதற்கு முடியவில்லை.

மிளகாயை இணைத்து விட்டால் காரம்… காரம் தான்…! என்று சொல்லும். அதற்குப் பக்கத்தில் இஞ்சியை எடுத்துக் கொண்டால் அதையும் காரம்… காரம்… என்று தான் சொல்லும்.

ஏனென்றால் இந்த உணர்வு அதைத் தான் சொல்லும். காரத்திற்குள் இஞ்சி மிளகு எல்லாம் ஒன்றாகுவது போல் இந்தக் கோப குணங்களிலே நியாயங்களையும் பேசும்.

ஆனால் அந்தக் கோபங்கள் என்ன செய்யும்…? என்றால் தன் இருப்பிடத்தை வலுப்படுத்திக் கொண்டே இருக்கும். அதைப் போக்க வேண்டும் என்பதற்குத் தான் இப்பொழுது சொல்வது.

காரணம் இதையெல்லாம் குருநாதர் என்னிடம் இருக்கக்கூடிய வெறுப்புகளை எல்லாம் வெளியே கொண்டு வந்து குருநாதர் என்னை அடித்து அந்த விண்ணுலக ஆற்றலைக் காட்டினார்.

அப்பொழுது “தெரியவில்லை…” என்று நான் சொன்னால் அதற்கு ஒரு அடி விழும் திடீரென்று…!

உன்னைப் பேய் பிடித்து ஆட்டுகின்றது…! என்பார்.

பேய் என்றால் என்ன….?

1.ஒரு மனிதனின் உடலில் விளைந்த உணர்வுகள்
2.அவனை ஆட்டிப்படைத்த அதே செயல்
3.அவன் எந்த உடலை அழிக்க எண்ணினானோ
4.தன் உடலையோ அல்லது மற்றவர் உடலையோ அழிக்க வேண்டும் என்ற ஆணவம் கொண்ட உணர்வுகள் அங்கே விளைந்தது.
5.அந்தக் கார உணர்ச்சிகளுடைய உணர்வுகளை நீ வேடிக்கையாகப் பார்க்கின்றாய்
6.தர்மத்தை நீ கடைபிடிக்கின்றாய்… ஆனாலும் அவனைப் பார்த்த அந்தப் பேய் குணம்
7.உன்னில் வந்து உனக்குள்ளும் அதைப் படைத்துவிடுகின்றது.

உனக்குள் அதைப் படைத்தபின் உன்னுடைய நியாயம் இந்தக் கோபத்தைக் கொண்டே அதை நீக்க வேண்டும் என்று சொல்கின்றது.

உதாரணமாக நாம் சொல்லிப் பார்க்கின்றோம்… கேட்கவில்லை…! தப்பாகச் சொன்னால் இன்றைக்கு இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தான் வருகின்றது.

நம் நல்ல குணத்தை மாற்றிவிட்டு “இரு நான் பார்த்துவிடுகின்றேன்…” என்று வருகிறது. இதுதான் ஓம் நமச் சிவாய சிவாய நம ஓம். நம் உணர்வின் செயல்கள் இப்படி எல்லாம் வந்து சேர்ந்து விடுகின்றது

இதைப் போன்ற நிலை எல்லாம் மாற்றிட வேண்டும் என்பதற்குத்தான் உங்களைத் தெளிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குடிப் பழக்கம் உள்ளவரை நீங்கள் அணுகி அவரிடம் இரண்டு மூன்று தடவை பேசிப் பாருங்கள். அந்த உணர்வின் அணுக்கள் ஆகிவிடும். அப்புறம் அந்த நினைவு நமக்குள் வரும்.

அந்த நினைவு வந்தபின் கொஞ்சம் குடித்துப் பாரப்பா…! என்று அவர் சொன்னால் அந்தப் பழக்கம் நமக்கும் வந்துவிடும்.
1.அப்புறம் ஒரு தரம் குடித்து விட்டால் அந்த அணுக்களுக்கு அது குடித்துத் தான் ஆக வேண்டும்.
2.குடிக்கவில்லை என்றால் இது விடாது…. அங்கே இழுத்துக் கொண்டே போகும்.

அப்புறம் என்ன செய்யும்…?

அந்த உணர்வின் தன்மை ஆனபின் நாம் சிந்திக்கும் நிலையே மறக்கும். இதனின் உணர்வு பட்டபின் இதைப் போல குடித்துக் கொண்டிருந்தால்
1.கடைசியில் நாம் இறந்துவிட்டால்
2.ஆன்மா அந்தக் குடியின் மணத்துடன் இருப்போர் உடலுக்குள் தான் போகும்.

குடிப்போர் உடலுக்குள் புகுந்து விட்டால்… குடிக்காமல் இருக்க வேண்டும் என்று அவர் எவ்வளவு தான் எண்ணினாலும் இது விடாது. அது குடிக்க வைத்துக் கொண்டே இருக்கும்.
1.ஏனென்றால் அதற்கு உணவு தேவை
2.அப்புறம் குடித்துக் கொண்டே இருக்கச் சொல்லும்.

அதர்வண வேதத்தில் இந்தப் போதை மருந்தைக் கொடுத்துதான் மாமிசத்தையும் கொடுத்து… இந்த உணர்வின் தன்மை நினைவிழக்கச் செய்வார்கள். பின் தீயில் இட்டுப் பொசுக்கி அதிலே எடுக்கும் மந்திரத்தைச் சொல்லி இந்த உணர்வினைக் கவர்ந்து இழுப்பார்கள்.

அதாவது அந்த அதர்வண வேதப்படி… மனிதன் உணர்வுக்குள் மந்திரங்களை ஓதி அதனின் தன்மை கொண்டு உருவாக்கி அவனின் நினைவை இழக்கச் செய்து இந்த மதுவை அவருக்குள் கொடுத்து இது சிறுகச் சிறுக இந்த எண்ணத்தை அங்கே அது பதியச் செய்வார்கள்.

மது குடித்தவர்களைப் பாருங்கள்… அது எதாவது யார் மேலயாவது கோபம் வந்தால் சரி. அதிலேயே தான் நிற்கும்.
1.யாரை நினைத்துக் குடித்தார்களோ…
2.இன்றைக்கு அவரை இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும் என்று சொன்னால்
3.அந்த இரண்டில் ஒன்று பார்க்கச் சொல்லும்.

அப்புறம் அந்தச் சண்டையில் சமரசத்திற்கு ஆயிரம் பேர் சொன்னாலும் கேட்காது.

இதைப்போல அன்று மந்திரத்தில் இந்த மதுவினைச் செருகி மந்திரத்தை ஏற்று… இந்த உணர்வின் தன்மை செருகாக்கிய பின் அது கேட்டுணர்ந்தபின்
1.இந்த மனிதன் இறந்தான் என்றால்
2அதே மந்திரத்தைச் சொல்லி மதுவையும் வைத்தால் அந்த ஆன்மா இவர் கைவல்யம் ஆகும்.

இப்படி அந்த மது அருந்ததுவோரின் உணர்வுகள் எல்லாம் மந்திரக்காரன் கையில் சிக்கி அது என்னென்ன எண்ணங்களுக்குப் பயன்படுத்துகின்றாரோ அதற்குப் பயன்படும்.

நாம் சாதாரணமாக நினைக்கின்றோம். ஆனால் இந்த மதுவின் வேலைகள்… அந்த அதர்வண வேதத்தில் இது அதிகமாகப் பயன்படுத்தியது.

ஏனென்றால் அதர்வண என்ற நிலைகளில்
1.தீமையை விளைவிக்கும் விஷத்தின் தன்மை கொண்டு
2.ஒரு மனிதனுக்குள் இருந்து எடுத்து
3.அந்த நல்ல குணத்தை அழித்துவிட்டுத் தன் எண்ணத்தைப் புகுத்தி
4.அதனின் உணர்வின் தன்மை கொண்டு அந்த மனிதன் இறந்தபின்
5.இந்த மந்திரத்தைச் சொன்னான் என்றால் இந்த ஆன்மா அங்கே கைவல்யம்.

மதுவின் தன்மை வைத்து அந்த உணர்வின் தன்மை கவரப்படும்போது தன் இச்சைக்கு அது வரும்.

அந்த அதர்வண வேதத்தில் இந்த மந்திரம் ஓதுவோர் அனைவரும் மதுவை வைத்திருப்பார்கள்… மாமிசத்தை வைத்திருப்பார்கள்.

அதை வைத்துத்தான் இந்த மந்திரங்கள் ஓதி மற்ற ஆவிகளை அவர்கள் கைப்பிடிப்பார்கள். இத்தகைய நிலையை மனிதனைக் கைவல்யப்படுத்தி விட்டால் அவன் ஆட்டிப் படைக்கும் படைப்பாகப் போய்விடும்.

ஆகவே உங்களை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்…! என்பதற்கே இதைச் சொல்கின்றேன்.

இந்த வாழ்க்கையில் எங்கே போகப் போகின்றோம்…? என்ற எண்ணத்தில்
1.இருக்கும்வரை… “தன்னை மறந்து கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு…”
2.அவர்கள் செய்தார்கள்… இவர்கள் தப்பு செய்தார்கள்…! என்று எண்ணத்தில் குடித்தால்
3.இந்த உடலை விட்டுச் சென்றபின் அடுத்த கணம் மந்திரவாதி கையில் நேரடியாகப் போய்ச் சேரும்.

இல்லையென்றால் இன்னொரு உடலுக்குள் சென்று அந்தக் குடிப் பழக்கம் உள்ளவர் உடலில் சென்று இன்னும் கொஞ்சம் குடிக்கச் செய்யும். அந்த இரண்டும் ஒன்றாகி விட்டால் இந்த உடலைவிட்டுச் சென்றபின் மீண்டும் அதே மந்திரவாதி கையில் சிக்கும்.

ஒன்றை ஆயிரமாகப் பெருக்கி அந்த உணர்வின் எண்ணத்தைப் பெருக்கிவிட்டால் அது அதர்வண என்று பொருள்

ஆகவே எதனின் மதுவை வைத்து இதை செய்கின்றார்களோ இன்னொரு ஆன்மாவைக் கைவல்யப்படுத்துகின்றான்.

ஆகவே இது போன்ற நிலைகளில் சிக்குண்டு தவிப்பதிலிருந்து நாம் மாறுதல் வேண்டும்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply