குறை (கூறும்) காணும் உணர்வு நம்மை இயக்கவிடாது தடைப்படுத்தியே ஆக வேண்டும்

குறை (கூறும்) காணும் உணர்வு நம்மை இயக்கவிடாது தடைப்படுத்தியே ஆக வேண்டும்

 

வீட்டில் பையன் மீது பிரியமாக இருக்கின்றோம்… அவன் நல்லவனாக வேண்டும் என்று விரும்புகின்றோம் ஆனால் மற்ற பையன்களோடு சேர்ந்து (வேகமான உணர்வு கொண்டு) விளையாடிக் கொண்டிருக்கின்றான்… அவர்களுடன் சேர்ந்து கொள்கின்றான்.

அவன் நன்றாகப் படித்து முன்னுக்கு வர வேண்டும் என்று விரும்புகின்றோம். ஆனால் அவனோ விளையாட்டுப் புத்தியில் இருக்கின்றான்.

அப்பொழுது அதைப் பார்த்த பின்…
1.“இந்த மாதிரி அவன் சுற்றிக் கொண்டிருக்கிறானே…” என்று சிறிதளவு வேதனைப்படுகின்றீர்கள். அந்த வேதனை என்பது விஷம்.
2.விஷத்தன்மையான பின் சிந்திக்க இடமில்லாது போய் விடுகின்றது.

நாம் தவறு செய்யவில்லை. பிள்ளை நல்ல முறையில் வளர வேண்டும் என்று தான் நாம் விரும்புகின்றோம். அவன் எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொண்டு இந்த மாதிரி இருக்கின்றானே என்று வேதனைப்பட்டால் என்ன ஆகும்…?

விஷம் (வேதனை) முதலிலே கண்ணுக்குத் தான் வருகின்றது. அதே உணர்வு உமிழ் நீராக மாறுகின்றது ஆகாரத்துடன் சேருகின்றது

நம்முடைய ஆசை நல்ல ஆசை தான். ஆனால்
1.மற்றவருடன் சேர்ந்து விளையாடுகின்றான் என்று எண்ணினால் வேதனை கூடுகின்றது
2.அந்த வேதனையோடு அவனிடம் திரும்பச் சொல்லப்படும் பொழுது என்ன ஆகிறது.

அவனுக்கு அவன் செய்யும் தவறு தெரியாது. ஆனால் அவன் உணர்வை நுகர்ந்து ஏண்டா இப்படிச் செய்கின்றாய்…? உன் எதிர்காலம் என்ன ஆகும்…? என்று நாம் பேசுவோம்.

அவன் கண்ணிலே நம்மைக் கூர்ந்து கவனிப்பான்.

ஏனென்றால்
1.”அவன் செய்த தவறை நாம் எடுத்து” இரண்டாவது சமைத்து அவனிடம் சொல்லப்படும் பொழுது
2.நம் உடலிலிருந்து வருவதைப் பார்த்தவுடனே
3.என் அப்பா இப்படித்தான் பேசுவார்…! என்று அவனுக்குப் பார்த்தவுடனே கோபம் வந்துவிடும்.

நாம் சொன்னால் அவன் காது கொடுத்துக் கேட்க மாட்டான். ஆனால் மற்றவர்கள் சொன்னால் காது கொடுத்துக் கேட்பான்.

அடுத்தவர் சொன்னால் கேட்கின்றான் நாம் சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறான் என்று நாம் சொல்வோம்.

காரணம்… “சொன்னபடி கேட்கவில்லை” என்ற அந்த வெறுப்பான உணர்வு கொண்டு நாம் சொல்வது… அவனைக் கேட்க விடாது அது தடுத்து விடுகின்றது. அடுத்து நாம் எதைச் சொன்னாலும் இவன் இப்படித்தான் இருப்பான் என்று சொல்வோம்.

1.மற்றவர் வெறுப்பாக எண்ணுவதில்லை… அந்த உணர்வைச் செலுத்தப்படும் பொழுது அங்கே ஒன்றும் இல்லை.
2.ஆனால் நான் பாசத்தோடு சேர்த்து இப்படிப் பண்ணுகின்றானே என்று எண்ணி எடுத்து வேகமான சொல்லைச் சொல்லும் பொழுது
3.நமக்குள்ளே அதை விளைய வைத்துச் சமைத்து அவன் காதிலே இதைக் கேட்கப்படும் பொழுது
4.அவன் பதிவாக்கி நாம் பேசிய உணர்வை நுகர்ந்து அவன் உயிரிலே பட்டபின் “நம் மீது அவனுக்கு வெறுப்பு தான் வருகின்றது…”.

சில குடும்பங்களில் ஆசையோடு பாசத்தோடு குழந்தைகளை வளர்ப்பார்கள் பையன் நல்லவன் தான் ஆனால் அந்த இடத்தில் இப்படி ஆகிவிடுகிறது.

அதற்குத்தான் ஆலயத்திலே தெய்வத்திற்குத் தங்கத்திலே ஆபரணங்களைப் போட்டுக் காண்பித்துள்ளார்கள்.
1.அந்தத் தங்கம் எப்படி மங்காது இருக்கின்றதோ
2.பையன் சேட்டை செய்வதைப் பார்த்தாலும் நம் மனது மங்காதபடி இருக்க வேண்டும்…
3.அதற்கு உபாயத்தைக் காட்டுகின்றார்கள்.

அப்படி என்றால் அவனுக்கு நாம் எப்படி எண்ண வேண்டும்…?

1.இன்னன்ன வழிகளில் அவன் இப்படி இப்படி இருக்க வேண்டும்
2.அவன் செயல் அனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும்
3.பார்ப்பவர்களை மதிக்கும் பண்புகள் வளர வேண்டும்
4.தெளிவானவனாக அவன் வரவேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

இப்படி எண்ணிய பின் நம் உயிரிலே பட்டு இந்த உணர்ச்சிகள் உடலுக்குள் உமிழ் நீராக ஆகிவிடுகிறது.
1.அவன் செய்த தப்பைப் பார்த்து அந்த வேதனை என்ற உணர்வு நமக்குள் வருவதில்லை.
2.அவனுடைய உணர்வுகளும் நம்மை இயக்குவது இல்லை.

அதற்குப் பின் அவனிடம் திருப்பிச் சொல்லப்படும் பொழுது… “தம்பி நீ இந்த மாதிரிச் செய்கின்றாய்… அதனால் உன்னுடைய உடையெல்லாம் அழுக்காகின்றது நோய் வரக் காரணமாகின்றது… அதனால் நீ பார்த்து நடந்து கொள்…!” என்று விபரத்தைச் சொன்னமென்றால்… அவன் அதைத் தெரிந்து கொள்வதற்கு வழி இருக்கின்றது.

ஆனால் முதலில் நாம் ஆசைப்பட்டோம் வழிகாட்டத் தெரியவில்லை. ஆனால் ஆலயத்திலே ஞானிகள் காட்டிய வழியில் நாம் இதைச் செயல்படுத்தினோம் என்றால் நமக்குள்ளும் வேதனை வருவதில்லை… அவனையும் சரியான பாதையில் கொண்டு செல்ல முடிகின்றது.

பள்ளிகளிலே பார்த்தோம் என்றால் ஆசிரியர்களும் பாடத்தை சொல்லிக் கொடுப்பதில் குறியாக இருப்பார்கள். ஆனால் தன்னிடம் படிப்பவன் சிறிதளவு தவறு செய்து விட்டான் என்றாலும் அவனை மிரட்டுவார்கள்.

அந்த மிரட்டல் பதிவான பின் வாத்தியாரை நினைக்கும்போது அவனுக்கு ஞாபக சக்தி குறைந்துவிடும்
1.ஒரு சிறு தவறுக்கு ஒரு தடவை மிரட்டி இருந்தால்
2.அவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் மறதி வரும்… சொல்லிக் கொடுப்பது எல்லாம் மறந்து விடும்.

ஏனென்றால் இந்த உணர்வுகள் விளைந்து மறுபடியும் இப்படி மாறிக் கொண்டே போகும் இதையெல்லாம் நாம் தூய்மைப்படுத்த வேண்டும் அல்லவா

நமது குருநாதர் காட்டிய வழியில் ஞானிகள் உணர்வை உடனுக்குடன் எடுத்துத் தூய்மைப்படுத்தியே ஆக வேண்டும் அதற்குத்தான் உங்களுக்கு திரும்பத் திரும்ப பல வகைகளிலும் சொல்லி உண்மைகளை எல்லாம் உணர்த்தி வருகின்றேன் (ஞானகுரு).


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply