ஒவ்வொரு நொடியிலும் நாம் சுவாசிக்கும் உணர்வு உமிழ் நீராக (திரவகமாக) ஆகாரத்துடன் கலக்கிறது

ஒவ்வொரு நொடியிலும் நாம் சுவாசிக்கும் உணர்வு உமிழ் நீராக (திரவகமாக) ஆகாரத்துடன் கலக்கிறது

 

1.உணர்வுகள் நுகரப்படும் பொழுது உமிழ் நீர்கள் எப்படிச் சுரக்கிறது என்று
2.காட்டிற்குள் அழைத்துச் சென்று என்னை வைத்தே தங்கத்தைச் செய்யும்படி
3.உமிழ் நீர்களை வைத்து அதை உருவாக்கும்படி செய்து காட்டினார் குருநாதர்.

வேறு ஒன்றும் வேண்டியது இல்லை.

மாங்காயைச் சாப்பிட்டு இருக்கின்றீர்களா…? வெயில் காலங்களில்…! எப்படி இருக்கின்றது…?

இப்பொழுது உமிழ் நீர் (எச்சில்) உங்களுக்குள் எப்படிச் சுரக்கின்றது…? லேசாக அந்தப் புளிப்பு கலந்து உமிழ் நீர் ஊறுகிறதல்லவா…!.

“மாங்காய்…” என்ற சொல்லை நான் சொன்னவுடன்
1.அந்த உணர்வை நீங்கள் நுகரப்படும் பொழுது உமிழ் நீராக எப்படி மாறுகின்றதோ
2.இதே மாதிரித் தான் நம்முடைய எண்ணங்கள் நாம் நுகரக்கூடியது அனைத்தும் உமிழ் நீராக மாறும்.
3.(இது நமக்குள் ஒவ்வொரு நொடியிலும் நடந்து கொண்டிருப்பது).

உணவை உட்கொண்ட பின் சங்கடம் சலிப்பு வெறுப்பு இது போன்று எண்ணிப் பாருங்கள். சரியான ஜீரண சக்தியாக வராது அஜீரணமாகி… விஷத்தன்மைகளாக மாறும்.

ஆகையினால் தான் பேசும் பொழுது “உயர்ந்த ஞானத்துடன் பேச வேண்டும்” என்று சொல்வது. அவ்வாறு செய்து வந்தீர்கள் என்றால் நல்ல சக்தியாக உங்களுக்குள் சேரும்.

அவன் அப்படிச் செய்தான் இவன் இப்படிச் செய்தான் அதைச் செய்தான் இதைச் செய்தான் என்று வேதனையும் சோர்வையும் கலந்து
1.அந்த உணர்வோடு உணவு உட்கொண்டீர்கள் என்றால்
2.உடலுக்குள் எதிரியான அணுக்கள் உற்பத்தியாகி நோயாக உருவாக்கும்.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

நாம் சாப்பிடும் ஆகாரத்துடன் சுவாசிக்கும் உணர்வின் உமிழ் நீர்கள் சேர்கின்றது. இந்த உமிழ் நீர் எதுவோ அதற்குத் தகுந்த சாப்பிட்ட ஆகாரத்தை மாற்றுகின்றது.

இது ஒரு திரவகத்தைப் போன்று தான்..

கடினமான நிலைகள்… வேதனை சலிப்பு அந்த உணர்வோடு இருந்து பாருங்கள். நீங்கள் சாப்பிட்ட ஆகாரத்தைச் சரியாக ஜீரணிக்காது

1.நாம் நுகரும் உணர்வுகள் நமக்குள் எப்படி அது உமிழ் நீராக… அந்த உணர்வின் சத்தாக…
2.அதற்குண்டான கருவின் தன்மையாக… அணுக்களாக உடலுக்குள் எப்படி உருப்பெறுகின்றது…?
3.அதனுடைய இயக்கங்கள் எப்படி எல்லாம் நம்மை மாற்றுகிறது…? என்பதை
4.நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதை உணர்த்துகின்றேன்.

Leave a Reply