“குரு வழியில்…” மின்னலின் ஆற்றலைப் பெற வேண்டிய முறை

“குரு வழியில்…” மின்னலின் ஆற்றலைப் பெற வேண்டிய முறை

 

உதாரணமாக ஒரு மின்னல் பாய்கிறது என்றால் அப்போது ஒளிக்கற்றைகள் பலவாறு பல திசைகளிலும் பரவுகின்றது. அந்த மின்னல் தாக்கும் இடத்தை விடுத்து விட்டு
1.ஒளிக்கற்றைகள் பரவுவதை நாம் நுகர்ந்தால் நம் உடலுக்குள் ஒளிகள் பெருகிப் பெருகி
2.இந்த மின்னலையே தாங்கிப் பார்க்கும் நிலையும்
3.நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களை ஒளிக்கதிராக மாற்றும் நிலையும் பெற முடியும்.

ஏனென்றால் மின்னல் மற்றதைக் கருக்கி விட்டு ஒளியாக எப்படிப் பிரகாசிக்கின்றதோ அதைப் போன்று
1.தன் வாழ்க்கையில் ஒளியாகச் சேர்த்துக் கொண்டவன் தான்
2.அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரமாக ஆனது.
3.துருவ நட்சத்திரமாக ஆன பின் அது கதிரியக்கப் பொறிகளை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது
4.அகஸ்தியன் பெற்ற அதே உணர்வுகளை நாமும் பெறுதல் வேண்டும்.
5.அவன் வழியில் நாம் பெற்றோம் என்றால் இந்த உடலுக்குப் பின் நமக்கு இன்னொரு உடல் இல்லை.

இந்த உடலிலேயே உணர்வினை ஒளியாக மாற்றி என்றும் நிலையான அழியா ஒளிச் சரீரம் பெற்று ஏகாந்த நிலைகள் கொண்டு அகண்ட அண்டத்தில் எதிரியே இல்லாத நிலைகள் கொண்டு “வேகா நிலை” என்ற நிலை அடைகின்றோம்.

இத்தகைய அருள் ஒளி பெறும் மார்க்கத்தை “நம் குரு காட்டிய அருள் வழியில்…” ஆறாவது அறிவின் துணை கொண்டு நம் உடலுக்குள் உருவாக்குவோம்..

சதம் இல்லாத இந்த உடலுக்கு நாம் பற்றை வைக்க வேண்டியதில்லை. உடல் தேவை… ஆனாலும்
1.உடலுக்குள் தீமைகள் பற்றிடாது அருள் ஞானத்தை உள்ளே புகுத்தி
2.அதைப் பற்றுடன் பற்றித் தீமைகளை பற்றதாக மாற்றிட வேண்டும்.

எவரொருவர் இந்த வாழ்க்கை வாழுகின்றனரோ அவரே அருள் ஞானத்தின் வழி கொண்டு பிறவி இல்லா நிலை அடைவர். அவ்வழி பெறச் செய்வதற்கே குரு காட்டிய அருள் வழியில் “கூட்டமைப்பாக அமைக்கின்றோம்…”

உங்கள் எண்ணங்களை ஒருக்கிணையச் செய்து துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்து வாழ்க்கையில் வரும் எத்தகைய நஞ்சினையும் நீக்கிடும் வலிமை பெறுங்கள்.
1.எத்தகைய துன்பம் வந்தாலும் அதனில் சிக்கிச் சோர்வடையாது
2.அதனை மாற்றிடும் வலுக் கொண்டு
3.அருள் வாழ்க்கை வாழ்ந்து அருள் ஒளியைப் பெருக்கிப் பிறவி இல்லா நிலை அடையுங்கள்.

Leave a Reply