அகஸ்தியன் செயல்பட்ட உணர்வுகள் ஏராளம் ஏராளம்…!”

அகஸ்தியன் செயல்பட்ட உணர்வுகள் ஏராளம் ஏராளம்…!”

 

அகஸ்தியன் தாய் கருவிலே சிசுவாக வளரும் பொழுதே தாயால் நுகரப்பட்ட நஞ்சினை வென்றிடும் உணர்வுகளை அவன் சுவாசிக்க நேர்கிறது… அவன் உடலுக்குள் அது இணைகின்றது.

இன்று விஞ்ஞானிகளும் கருவின் வித்துகளைப் பல உயிரினங்களிலிருந்து எடுத்து அதை மற்ற உடலில் இருக்கக்கூடிய ஜீன்களில் இணைத்துக் கருவுறச் செய்து உருமாறும் நிலைகளில் குணங்களில் மாற்றம் அடையும் செயல்களைச் செயல்படுத்துகின்றனர்.

1.அன்று மெய் ஞானிகள் தன் இனத்தினைப் பெருக்குவதற்காக
2.சொல்லின் தன்மையை செவி வழி ஓதி உணர்ச்சிகளை உணர்த்தப்படும் பொழுது
3.அதில் ஈர்க்கப்பட்ட உணர்வின் அறிவாக ஈர்க்கும் தன்மை கொண்டு
4.ஞானிகள் உடலில் அவர்கள் கண்டுணர்ந்த நினைவினை வானை நோக்கி ஏகி
5.கருவுற்ற தாயை அந்த உணர்வினை நுகரும்படி செய்து கருவில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு அதை உருவாக்கி
6.பெரும் பெரும் சக்தி கொண்ட ஞானிகளாக அக்காலங்களில் உருவாக்கினார்கள்.

இருந்தாலும் அந்தக் கால கட்டங்களில் அவரவர்கள் ஆசை கொண்டு “அரசன்…” என்ற நிலையில் அது மாற்றப்பட்டு மற்றொன்றை அடக்கி ஆளும் தன்மைகளாக மாறி விட்டது.

மற்றவரை அடக்கி ஆளும் பொழுது அவனுக்குள் அது அசுர உணர்வாகத் தோன்றப்பட்டு சாம்ராஜ்ய ஆசைகள் வருவதும் மற்றதை மாற்றி அமைக்கும் சக்தியாக வந்து விட்டது.

இப்படிப் பல பல மாற்றங்கள் ஏற்பட்டு
1.இன்றைய உலகில் விஞ்ஞான அறிவாக அதிகரித்து விட்டது
2.மெய் ஞான உணர்வுகள் அனைத்தும் அழிந்து விட்டது.
3.அஞ்ஞான வாழ்க்கை பெருகிவிட்டது… மனிதனுடைய சிந்தனைகளும் இழக்கும் தன்மை வந்து விட்டது.

இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்றால் பண்டைய காலத்தில் வாழ்ந்த அந்த அகஸ்தியனின் அருள் சக்திகளைப் பெறுதல் வேண்டும்.

1.அகஸ்தியன் கண்டறிந்த உணர்வும் அவனில் விளைந்த உணர்வை நாம் நுகர்ந்து
2.நம் உடலில் உள்ள அணுக்களுக்கு அதைப் பெறச் செய்து
3.அவன் வளர்ச்சி பெற்றது போல நமது வாழ்க்கையில் நாமும் பெற்று
4.அவன் எண்ணும் (எண்ணிய) உணர்வுகளை நமக்குள் எடுத்து
5.நம் உடலில் இருக்கக்கூடிய இரத்த நாளங்களில் அதைப் பெருக்கி அந்த உணர்வின் அணுக்களாக மாற்றி
6.அவன் சிந்தித்த உணர்வுகளை அடிக்கடி நாமும் சிந்தித்து
7அவன் பெற்ற ஞானத்தையும் தீமைகளை அகற்றும் எண்ணங்களையும் நாம் பெற்று
8.அவன் வாழ்க்கையில் தெளிந்த மனம் கொண்டு மற்றவரைத் தெளியச் செய்தது போன்று நாமும் செயல்படுத்த வேண்டும்.

அவனுக்குள் எடுக்கும் உணர்வால் ஒன்றை அறிந்திடும் அறிவாகவும் அனைத்தையும் அரவணைத்துப் பண்பு கொண்டு கொண்டும் வாழ்ந்தவன் தான் அகஸ்தியன்.

அவன் வாழ்ந்து வந்த அக்காலங்களில் கொடூர மிருகங்களை இவன் உற்றுப் பார்த்தால் அது அடிபணிகிறது… இவனை ஒன்றுமே செய்வதில்லை.

காரணம்… இவனிடமிருந்து வெளிப்படும் உணர்வலைகள் அந்த மிருகங்களின் விஷத்தின் தன்மை ஒடுக்கும் பொழுது அதனுடைய உணர்வுகள் சாந்தமாகி விடுகின்றது.

“இவ்வாறு அவன் செயல்பட்ட உணர்வுகள் ஏராளம் ஏராளம்…!”

இளமையில் மூன்று வயது எட்டும் போது அவன் வெளியில் நடந்து செல்லும் பொழுது
1.மற்ற தாவர இனங்களின் மணத்தை நுகர்வதும்
2.அதனின் அறிவைத் தனக்குள் வளர்த்துக் கொள்வதும்
3.தன் எண்ணத்தால் மற்றொன்றை அறியும் ஞானமாக வளர்ச்சி பெறுவதும் போன்ற நிலைகள் வருகிறது.

அதை எல்லாம் நாமும் பெறுதல் வேண்டும். அகஸ்தியன் பிஞ்சு உள்ளத்தில் பெற்ற சக்திகளைப் பெற்று அவனைப் போன்ற மெய் ஞானியாக நாம் ஒவ்வொருவரும் உருவாக வேண்டும்.

Leave a Reply