நாஸ்டர்டாமஸ் வெளிப்படுத்தியுள்ள குறிப்புகளில் தென்னாட்டைப் பற்றிய சாராம்சம்

நாஸ்டர்டாமஸ் வெளிப்படுத்தியுள்ள குறிப்புகளில் தென்னாட்டைப் பற்றிய சாராம்சம்

 

சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன் பிரெஞ்சு நாட்டைச் செர்ந்த தத்துவ ஞானியான நாஸ்டர்டாமஸ் இந்தப் பூமியில் நடக்கப் போகும் சில மாற்றங்களை அன்றே குறிப்பிட்டிருந்தார்.
1.காரணம்… மெய் வழியைக் காணும் ஒரு ஆன்மா அவரிடத்தில் சென்று
2.அவருக்குள் இருந்து வெளிப்படுத்திய நிலைகள் தான் அது.

நம் பூமியின் இயக்கங்களையும் அதனின் உணர்வின் அலைகள் எங்கே மோதுகின்றது… எங்கே இணைகிறது…? ஒவ்வொரு நாட்டின் இயக்கங்கள் எப்படி ஆகின்றது…? உலக மாற்றம் எப்படி ஆகின்றது…? மதத்தின் தன்மைகள் எப்படி உருவாகின்றது…? என்ற நிலையைத் தெளிவாகக் கூறியுள்ளார்.

அவர் எல்லாவற்றையும் கூறியிருந்தாலும் இங்கே படித்த வர்க்கங்கள் அதை எடுத்து வைத்துக் கொண்டாலும் அதை மீட்டி உண்மையின் உணர்வை உணர்வதற்கில்லை. விஞ்ஞான அறிவில் தான் எண்ணத்தைச் செலுத்துகின்றார்கள்.

பிற்காலத்தில் விஞ்ஞான அறிவுகள் வளரப்படும்போது…
1.அதனால் இன்னென்ன நாடுகள் அழியும்…
2.இன்னென்ன மதங்கள் அழியும்…
3.இன்னென்ன இனங்கள் அழியும்… என்று நாஸ்டர்டாமஸ் அன்றே சொல்லியிருக்கின்றார்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தென்னாட்டிலே அன்று தோன்றிய அகஸ்தியன் தான் பெற்ற மெய் உணர்வின் நிலைகளை எந்நாட்டவர்க்கும் பெறும்படியாகப் பரப்பிச் சென்றுள்ளார்.

“தன்னை அறிதல்” என்ற நிலைகள் கொண்டு உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும் பொழுது அதனுடைய செயலாக்கம் எப்படி உயர்கிறது…? என்று நிலைகளையும் அகஸ்தியன் தெளிவாக்கிக் காட்டியுள்ளார்.

அவர் வெளிப்படுத்திய உணர்வுகள் தான் உலகம் முழுவதற்கும் பரவியது. ஒளியின் சுடராகத் துருவ நட்சத்திரமாக அகஸ்தியர் இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்.

ஆக… பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அவருக்குள் விளைந்த உணர்வுகளை யாரெல்லாம் உண்மையின் உணர்வுகளை அறிய வேண்டும் என்று எண்ணி ஏங்குகிறார்களோ அவர்களுக்குள் அது ஈர்க்கப்பட்டு உணர்வின் அறிவாக மனிதனை வாழச் செய்கின்றது.

உலகத்தின் தன்மையில் விஷத் தன்மைகள் படர்ந்தாலும் தென்னாட்டில் தான் அதை மீட்டிடும் வளர்ச்சியின் தன்மை இருக்கின்றது என்று நாஸ்டர்டாமஸ் வெளியிட்ட குறிப்புகளில் உணர்த்திச் சென்றுள்ளார்.

துருவ நட்சத்திரத்தைப் பின்பற்றிச் சென்றவர்கள் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்கின்றார்கள் என்ற நிலையையும் நாஸ்டர்டாமஸ் தெளிவாகக் கொடுத்துள்ளார். ஆனால் இந்த அறிவின் தன்மையை உணர்வதற்குக் கல்வி அறிவால் முடியாது.

ஆகவே
1.அத்தகைய அருள் ஞானி தென்னாட்டிலே தான் தோன்றுகின்றான்.
2.தீமைகளில் இருந்து மீட்டுவதற்கு உலகைக் காக்கும் சித்தனாக வருகின்றான்.

நஞ்சு கொண்ட நிலைகள் இன்று வளர்ந்தாலும் அது அழிந்தே தீரும். தவறான நிலைகள் செய்து கொண்டு இந்த உடலிலே இருப்பினும் கற்றுணர்ந்த உணர்வுகள் ஒரு நாள் அழித்தே தீரும்.

அதே சமயத்தில் அருள் ஒளி என்ற உணர்வின் தன்மை தனக்குள் வரும்போது தீமை என்ற நிலைகளை நீக்கியே தீரும். தீமையற்ற உணர்வாக உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாறத்தான் செய்யும்.

ஆனால் தீமையின் உணர்வுகள் வரும் பொழுது ஒளி பெறும் உணர்வுகளை அழிக்கும்… நல்ல அணுக்களை அழித்தே தீரும்.
1.பின் அசுர உணர்வுகள் கொண்டு தீமையின் நிலைகளே உருபெறும் என்ற நிலைகளை
2.பல பல குறிப்புகளாக அன்றைய பாஷையிலே நாஸ்டர்டாமஸ் எழுதி இருந்தாலும்
3.அதனுடைய விளக்க உரைகளக் கொண்டு வருவதற்குச் சில காலம் ஆகும்.

எது எப்படி இருந்தாலும்… தென்னாட்டிலே வாழ்ந்த அகஸ்தியனின் கரு உணர்வுகள் இங்கே வீரியம் பெறுகின்றது. கருவிலே வளரும் சிசுக்களுக்கு உயர்வு பெறுகிறது.

அந்த உணர்வின் ஞானம் நிச்சயம் வெளிப்படும்…!.

Leave a Reply