தியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்போருக்கு உடலுக்குப் பின் எங்கே போகிறோம் என்று தெரியும்… அடுத்தவருக்கும் உணர்த்தும்

தியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்போருக்கு உடலுக்குப் பின் எங்கே போகிறோம் என்று தெரியும்… அடுத்தவருக்கும் உணர்த்தும்

 

இந்த உலகம் முழுவதற்குமே விஷத் தன்மை பரவிக் கொண்டிருக்கின்றது. அதிலிருந்து நாம் ஒவ்வொருவருமே மீள வேண்டும்.

சாக்கடைக்குள்
1.எப்படிப் பன்றி நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வை நுகர்ந்ததோ
2.இதைப் போல் அதன் உணர்வை நுகர்ந்து மனிதனானதோ
3.மனிதனாக ஆன பின் இருளை வென்று உணர்வின் தன்மை ஒளியாக ஆனானோ
4.அதன் உணர்வை (துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம்) உங்களைப் பெறச் செய்கின்றோம்.

அதை உங்களைப் பெறச் செய்து அந்த உணர்வினை வலுவாக்கச் செய்கின்றோம். அந்த வலுக் கொண்ட பின் வராகன் எப்படி நாற்றத்தைப் பிளந்ததோ காற்று மண்டல விஷத் தன்மையைப் பிரித்து உடலுக்குப் பின் நீங்கள் அங்கே அந்தச் சப்தரிஷி மண்டலம் சென்றடைய முடியும்.

இந்த உடலிலே ஒவ்வொரு நிமிடமும் அதைப் பெற்றால்
1.அந்தக் கடைசிக் காலத் தன்மைகள் உங்களுக்குத் தெரியும்
2.அந்தத் தெரிந்த நிலைகள் கொண்டு எங்கே போகிறோம்…? என்ற நிலையும் தெரியும்.
3.வெளியிலே சென்ற பின் இந்த உணர்வுகள் எங்கே பதிவாகி இருக்கிறதோ அந்த விண் சென்ற நினைவை நிச்சயம் ஊட்டும்.

நாம் போன பிற்பாடு இது யாருக்குத் தெரியும்… இங்கே எவருக்குத் தெரியும் என்ற வகையில் சிலர் நினைக்கலாம்…!

இதெல்லாம் அந்த உணர்வின் இயக்கங்களை அறியும் பருவம் உண்டு. நான் (ஞானகுரு) எல்லாவற்றையும் அறிந்து கொண்டு தான் இருக்கின்றேன். நீங்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்கிறேன்.

ஆக நாம் நினைவைக் கூட்டினால் தானே…!

வசிஷ்டர் – நாம் எதைப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டு எண்ணுகின்றோமோ நமக்குள் அது பிரம்மமாகின்றது. நம் எண்ணங்கள் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு பெற வேண்டும் என்றும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற வேண்டும் என்றும் ஒவ்வொரு நொடியும் விரும்பினால் அது வசிஷ்டர்.

அந்த உணர்வின் சக்தியை நமக்குள் பெறப்படும் போது அது பிரம்மமாகின்றது. பிரம்மகுருவின் மனைவி யார்…? அருந்ததி. அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம்முடன் இணையச் செய்யப்படும் போது தீமைகளை அகற்றும் சக்தியைப் பெறுகின்றோம்.

1.இந்த மனித வாழ்க்கையில் எத்தனை சங்கடங்கள் வந்தாலும்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைச் சேர்த்தீர்கள் என்றால் அது மறக்கும்
3.தீமைகள் சிறுக்கும்… சிந்தனைகள் வலுப் பெறும்… சிந்தித்துச் செயல்படும் தன்மை வரும்.

வராகன் எப்படித் தீமையை நீக்கியதோ அதே போல் ஒவ்வொரு சமயத்திலும் உங்களுக்குக் கொடுக்கும் சக்தியை நீங்கள் சீரான நிலைகளில் பயன்படுத்தினால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெருக்க முடியும். நஞ்சை நீக்க முடியும்.

இதை எல்லாம் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும். வாழ்க்கையே தியானமாக்கச் சொல்வதற்கு இதற்குத் தான்…!

Leave a Reply