துவாரகா யுகத்தில் கண்ணன் பிறக்கின்றான் – கண்கள் தோன்றுகிறது

துவாரகா யுகத்தில் கண்ணன் பிறக்கின்றான் – கண்கள் தோன்றுகிறது

 

பார்க்க வேண்டும்… பார்க்க வேண்டும்… என்று பல சரீரங்களில் எடுத்துக் கொண்ட உணர்வுகள் தான்
1.துவாரகா – உடலுக்குள் ஒளிக்கற்றைகள் பெருகி
2.சிறுகச் சிறுக மின் அணுவாக மாறி
3.அதன் உணர்வுகள் அணுக்களாகிக் கற்களாக மாறுகின்றது.

கற்களாகி உறையும் தன்மை வரும் போது “கருவிழி” என்ற உணர்வுகள் அது அணுத் தன்மை அடைந்து நரம்பு மண்டலத்தின் வழி கூடி ஒளிப்படலமாகப் பார்க்கும் தன்மை வருகின்றது.

ஆனால் இந்த ஒளிப் பிளம்பு கருவிழி மறைந்து விட்டால் ஒளிப்படலம் தெரியவே தெரியாது.

ஆனால் பார்க்கும் சக்தியாக அந்த அணுக் கருக்கள் எப்படி உருவானது..? கண்கள் எப்படி உருவானது..?

1.வாசு தேவன் நாம் சுவாசிப்பதை உருவாக்கக் கூடியவன் உயிர்.
2.தேவகி… நாம் பார்க்க வேண்டும் என்ற தேவைக்கு வரும் போது அது வருகிறது.

வாசுதேவனுக்கும் தேவகிக்கும் சிறைச்சாலைக்குள் பிறந்தான் கண்ணன் (கண்கள்) என்று நம் கண்கள் எப்படி உருவானது…? என்று இதைத்தான் நம் சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகிறது.

அதே சமயத்தில் மனித உடல் பெற்ற பின் ஒவ்வொரு நாளும் நாளை என்ன செய்வது…? என்று கற்பனை செய்கின்றோம். அதன் உணர்வின் தன்மை வடிவமைக்கின்றோம். அந்த வடிவமைப்பின் தன்மை தனக்குள் பதிவாகின்றது.

ஆக துவாரகா…! அந்த உணர்ச்சியின் தன்மை என்ன செய்கிறது…?

1.புறத்தால் கண்களானாலும்… அகத்திற்குள் உணர்வின் தன்மை முதலில் படமாக்குகிறது (நாம் எண்ணிப் பார்க்கும் நிலைகள்)
2.படமாக்கிய பின் புறத்தின் தன்மை கொண்டு நாம் எழுதுகின்றோம்.
3.இந்த உடலுக்குள் பதிவாகவில்லை என்றால் எதையும் எழுதவே முடியாது.

ஆகவே உணர்வின் தன்மை பதிவாகும் போது பதிவின் நினைவுகளை நாம் நினைவாக்குகின்றோம். துவாரகா – இந்த உடலுக்குள் சிந்தனை செய்து அந்த உணர்வுகளை எடுத்துத் தான் அடுத்து நாம் செயல்படுத்த வேண்டும்.

இது எல்லாம் நம் வாழ்க்கையில் எது எப்படி இயக்குகிறது என்ற நிலையைத் தெரிந்து கொள்வதற்குத்தான் இதைக் கொடுக்கின்றோம். ஆகவே இதன் உணர்ச்சிகளை நாம் வடிவமைத்து அப்புறம் என்ன செய்கிறோம்…?

புறத்தால் எழுதப்படும் போது அதிலே குறை என்று வரும் போது திருத்துகின்றோம். உள்ளுக்குள் மனதானாலும் பதிவான பின் அதை எழுத்திலே கொண்டு வருகின்றோம். எழுத்து என்று வரும் போது தவறு வந்தால் திருத்திப் பழக வேண்டும்.

இதைப் போல் தான் துவாரகா யுகத்தில் தீமைகளிலிருந்து மீண்டிடும் சக்தியாகத் தன்னுடைய நிலைகள் வருகிறது… கண்களாகின்றது. (சிறைச்சாலைக்குள் இருக்கும் தன் அன்னை தந்தையரைத் தவறிலிருந்து மீட்கக் கண்கள் வருகிறது)

ஒரு படத்தை (சித்திரம்) பார்க்கின்றோம்… பிழை என்ற நிலை வருகிறது. ஒருவன் தவறு செய்கிறான் என்ற நிலைகளில் கண்கள் அதைப் பார்க்கின்றது. ஆனால் அவனின் அந்தத் தவறுகள் நமக்குள் பதிவாகக் கூடாது.

தவறு செய்பவன் உடல் கிரேதா. அவன் செய்யும் தவறை நாம் நுகரும் போது அந்தத் தீமை செய்யும் உணர்வு திரேதா யுகத்தில் நம் உடலுக்குள் செல்கிறது.

அப்போது அந்தந்த உணர்வின் உணர்ச்சிக்கொப்ப வைரஸ் (கிருமி) என்று சொல்கிறோமே அத்தகைய அணுக்கள் உருவாகின்றது.

அந்த அணுக்களின் உணர்வுக்கொப்ப அந்த உணர்ச்சியின் எண்ணங்கள் வருகிறது. அதன் மலத்தின் தன்மை கொண்டு இரத்தத்தில் வருகின்றது. தீமையின் விளைவாக நோயாகிறது.

ஆனால் அதை மாற்றி அமைக்கும் சக்தியாக அருள் மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்து நம் இரத்தத்திலே கலக்கப்படும் போது நம் உடலில் உள்ள உறுப்புகளை அது சீராக்குகிறது. அப்போது அந்த ஞானிகளின் உணர்ச்சியின் எண்ணங்கள் நமக்குள் வரும்.

1.தீமை செய்வோன் அவன் திருந்தி வாழ வேண்டும்
2.தெளிந்து வாழ வேண்டும்
3.தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும்
4.அமைதி பெற வேண்டும் அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று எண்ணி
5.இதன் உணர்வைக் கொண்டு நாம் தெளிவாக்க வேண்டும்.

இதை நீங்கள் உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

ஆகவே கிரேதா திரேதா துவாரகா என்ற நிலையில் நம் உடலுக்குள் நடக்கும் ஒவ்வொரு நிலையையும் வேதங்களில் தெளிவாகக் கூறப்படுகின்றது. அதை நாம் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்.

Leave a Reply