கண்ணன் காட்டிய திருட்டு வழி

கண்ணன் காட்டிய திருட்டு வழி

 

1.ஒரு தீமை செய்யும் உணர்வை நாம் நுகர்ந்தாலே
2.அடுத்த கணம் ஈஸ்வரா… என்று உயிரை எண்ண வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் இந்த உணர்வை ஆன்மாவிலிருந்து நாம் தூய்மைப்படுத்த வேண்டும்.

அதற்குப் பின்… யார் எதைச் சொன்னாரோ மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ந்திடும் சக்தி பெற வேண்டும் என்று இந்த உணர்வுகளை அவர்களுக்குப் பாய்ச்ச வேண்டும்.

நமக்குள் இதைப் போன்று மாற்றிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் குழம்பு ருசி இல்லை என்றால் என்ன செய்கிறோம்..? அதிலே பல சரக்குகளைப் போட்டு மீண்டும் அதை ருசியாக மாற்றிக் கொண்டு வருகின்றோம் அல்லவா.

அதைப் போன்று தான் மற்றவர்கள் பட்ட வேதனையை எடுக்கப்படும் போது இரவிலே தூங்கும் போது அதே அறிவு தான் நமக்குள் வருகிறது. ஏனென்றால்
1.யாம் (ஞானகுரு) சொல்லும் தியான முறைப்படி எடுத்தால் அந்தச் சக்தி வாய்ந்த நிலைகள் கொண்டு நீங்கள் உணர முடிகின்றது.
2.இது சாதாரணமாக எல்லோருக்கும் தெரியாது.

இப்படி அதைத் தெரிந்து கொண்டாலும் உடனே ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் உயிரிடம் வேண்ட வேண்டும்.

1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அவனிடம் உணர்வைச் செலுத்தும் போது இது உடலுக்குள் செல்கிறது.
2.எப்போதுமே இந்த உயிரில் எண்ணி உணர்வை இப்படிக் கொண்டு போக வேண்டும்… அதைப் பழக வேண்டும்.

அதாவது வழக்கமாக மூக்கு வழி சுவாசித்து உயிரிலே பட்டு உடலுக்குள்ளே போகும். அப்படி இல்லாதபடி கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி அதன் வழி உடலுக்குள் செலுத்த வேண்டும்

இது தான் கண்ணன் காட்டிய திருட்டு வழி என்பது…!

சாதாரணமாக “எதிரி இருக்கின்றான்” என்று சொன்னவுடனே பார்க்கின்றோம். பார்த்த பின்… எங்கே இடம் இருக்கின்றது என்று ஒளிவதற்கு இடத்தைத் தேடி உணர்வை வெளியிலே செலுத்துகின்றோம்.

அந்த உணர்வு வந்த பிற்பாடு அதற்கு வேண்டிய வேலையைச் செய்கிறோம்.

ஒரு எதிரி நமக்குத் தொந்திரவு செய்கிறான் என்றால் அதைப் பார்க்கின்றோம். அதற்கு யார் “மூலகர்த்தா…?” எப்படி அவனை அடக்குவது…? என்ற எண்ணத்தை எண்ணுகின்றோம்.

அப்போது இந்தக் கண் வழி காட்டுகிறது. பழகியவர்களின் வலு கிடைக்கின்றது. அங்கே போய் இதைப் பற்ற வைத்தால் இவருக்குச் சரியான தண்டனை கிடைக்கின்றது என்று அதைச் செய்கிறோம்.

இந்த உணர்வு இயக்க்கப்பட்டுத் தான் நாம் இதைச் செயல்படுத்துகின்றோம். மனித வாழ்க்கையில் இந்த வழியில் தான் செயல்படுத்துகின்றோம்.

ஆனால் நமது குருநாதர் காட்டிய வழிகளில் தீமையை நீக்க
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா… என்று எண்ணச் சொல்கிறோம்
2.அதே சமயத்தில் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்கச் சக்தியும் கொடுக்கின்றோம்.

நீங்கள் எடுத்துப் பழக வேண்டுமல்லவா…!

இந்த மாதிரிச் சந்தர்ப்பங்கள் வரும் போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று இங்கே வேண்டி அந்த அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா பெறவேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.

இது வலுபெற்ற பின் தீமைகளைப் பிளக்கின்றது. உங்களுக்கு மன பலம் கிடைக்கின்றது..

ஒவ்வொரு நிமிடத்திலும் ஒவ்வொரு விதமான அணுக்கள் நமக்குள் உற்பத்தியாகிக் கொண்டேயிருக்கும். அதைத் தான் பிரம்மா உருவாக்குகின்றான் என்பது.

அதாவது விஷ்ணுவின் மகன் பிரம்மா…
1.உயிரால் (துடிப்பால் ஏற்படும் வெப்பத்தால்) உருவாக்கப்பட்ட அந்த அணு
2.மீண்டும் தன் இனத்தை விருத்தி செய்ய அந்தந்த ஆகாரத்தைக் கேட்கும்.
3.பின் தன் இனத்தை விருத்தி செய்து கொண்டே இருக்கும்.

இந்த உணர்வுகள் எது அதிகமோ சிவத்திற்குள் இருந்து அந்த உணர்வின் செயலாகவே இது மாற்றும். ஆனால் சிவத்திற்குள் அது சக்தியாக இருந்து அந்தச் சக்தியின் செயல் ரூபம் எதுவோ அதன் செயலாகத் தான் இது மாறும்.

அது தான் சக்தி சிவமாகின்றது. சிவத்திற்குள் சக்தியாக இயக்குகின்றது. சக்தி இல்லையேல் சிவம் இல்லை… சிவம் இல்லையேல் சக்தி இல்லை…!

இந்தச் சிவம் உருவாகவில்லை என்றால் சக்தியின் செயல் இல்லை. அதனால் தான் நம் சாஸ்திரங்களில் இது முறைப்படி தெளிவாக்கப்பட்டிருக்கின்றது.

ஞானிகள் தனக்குள் தன்னைக் கண்டுணர்ந்தவர்கள்… உயிருடன் ஒன்றி ஒளியாக ஆனவர்கள். அவர்கள் சென்ற பாதையில் நாம் செல்ல வேண்டும் என்பதற்குத் தான் இதைத் தெளிவாக்குகின்றோம்.

Leave a Reply