
அண்டத்திலே உணவு இல்லாது எந்தச் சக்தியும் ஜீவிப்பதில்லை… செயல்படுவதில்லை – ஈஸ்வரபட்டர்
இந்த உலகமே…
1.இக்காற்றுடன் பால்வெளி மண்டலத்திலுள்ள அமில சக்தியையும்
2.பூமியின் மேல் மட்டத்தில் இப்பூமி சுழலும் வேகத்தில் அதன் ஈர்ப்பில் சூரியனிலிருந்து வெளிப்படும் அமில சக்தியையும்
3.மற்ற மண்டலங்களின் சக்தியையும் தன் சுவாசமுடன் உணவாய் ஈர்த்து
4.அதன் சக்தியைத் தன் மண்டலத்திற்கு வேண்டிய அமிலத்தைச் சேமித்துத்தான்
5.பூமியின் கழிவான உஷ்ண அலைகள் வெளிப்பட்டுப் பல நிலைகள் ஏற்படுகின்றன.
மனித உடலுக்கு நாம் உண்ணும் உணவு அமிலமாய் ஆவி நிலை கொண்டு நம் உடம்பிலுள்ள இரத்த நாளங்களில் அச்சக்தி மோதி இவ் ஆவியான அமில உணவே உதிரமாய் (இரத்தம்) உருப்பெற்று நம் உடலிலுள்ள அனைத்துப் பாகங்களின் செயலுக்கும் செல்கிறது.
1.அந்த உதிரமே பல அணுக்களாய் அவற்றிலிருந்து எடுக்கும் சக்தியைக் கொண்டுதான்
2.நம் உடலிலுள்ள ஒவ்வோர் உறுப்பும் அததற்கு வேண்டிய அமில உணவை உண்டு
3.எலும்பாகவும் மயிர்க்கால்களாகவும் நகங்களாகவும் வளர்ந்து கொண்டே உள்ளது.
எலும்பின் வளர்ச்சி வளர்ந்து கொண்டே இருந்தால், நம் உருவ அமைப்பும் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும் அல்லவா..? ஆனால் குறிப்பிட்ட கால வயதுக்கு பிறகு இவ்வளர்ச்சியின் நிலை மாறு கொள்கின்றது.
குழந்தையின் எலும்பின் உறுதித் தன்மைக்கும் வளர வளர முதியோர்களான பிறகு உள்ள எலும்பின் உறுதிக்கும் மாற்றம் உள்ளது. எப்படி யானையின் தந்தம் வயதான பிறகு அதனுடைய உறுதி கூடுகின்றதோ அந்த நிலை போன்றுதான் எலும்பின் வளர்ச்சி நிலையும்.
குறிப்பிட்ட வயது வரம்பிற்குப் பிறகு உடல் வளர்ச்சி மாற்றம் கொள்ளும் நாளிலிருந்து வெளி வளர்ச்சிக்கு மேல் நம் (மனிதனின்) உள் உறுப்புகளில் ஏற்படும் வளர்ச்சியில் மாற்றங்கள் உண்டு.
1.நாம் உண்ணும் உணவிலிருந்து சுரக்கும்
2.அமில சக்தியின் ஆவி நிலைதான் நம் உணவிற்கு சக்தி தரும் நிலை.
நம் பழக்க வழக்கப்படி நம் உணவை உட்கொண்டு பழகினோமோ அதே அமில சக்தியின் வளர்ச்சியின் நிலை கொண்ட நிலையைத்தான் நம் உடல் ஏற்கிறது.
முசுக்கொட்டைத் தளையை மட்டும் உட் கொண்டிடும் பட்டுப்புழுவின் உடலிலிருந்து அது எடுத்த ஆவியின் அமிலத்தினால் தான் பட்டை எடுக்க முடியும். அந்தப் பட்டுப் புழு முசுக்கொட்டைத் தளையைத் தவிர வேறு உணவை உண்டால் அதன் நிலையில் இப்பட்டை நாம் எடுத்திட முடிந்திடாது.
1.அதைப் போல்தான் ஒவ்வொன்றின் நிலைக்கும் செயல் நிலை நடக்கின்றது.
2.மனிதனின் நிலையும் அதுவே…!
3.மற்ற எல்லா மண்டலங்களின் நிலையும் அதுவே.
4.உணவில்லாமல் எச்சக்தியும் செயல்படுவதில்லை.
ஒன்று உண்டு அது வெளிப்படுத்தும் கழிவிலிருந்து தான் மற்றொன்றின் வளர்ச்சி ஏற்படுகின்றது.
மனித உடல் என்ற கோளத்திலேயே பல உயிரணுக்கள் வாழ்கின்றன. அவை அவை உண்டு வெளிப்படுத்தும் அமிலத்திலிருந்துதான் மற்ற நிலைகள் ஏற்படுகின்றன.
1.நாம் உண்ணும் உணவு ஆவியாய்… அமிலமாய்… உதிர சக்தி பெறுகின்றது
2.அவ்வாவி ஆன பிறகு நாம் உண்ட உணவின் தன்மை அதன் சக்கை மலமாய் வெளிப்படுகின்றது.
அந்த ஆவி அமில உதிர சக்திதான் அதில் வளரும் உயிர் அணுக்களின் நிலையைக் கொண்டு நம் உடம்பிலுள்ள மயிர்க்கால்கள் வளர்ச்சி பெறுகின்றன. ஒவ்வொரு முடியும் வளர்வதற்கே அவ்வுயிரணுக்களின் நிலையிருந்தால்தான் வளர்ந்திடும்.
இந்த நிலையை வைத்துத்தான்…
1.நம் ஆத்மாவுடன் நம் உயிர் மட்டுமல்ல
2.பல கோடி உயிரணுக்கள் உயிர் பெற்று வாழ்கின்றன என்று உணர்த்தினேன்,
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.