மனிதச் செயலின் வீரிய உண்மை விஞ்ஞானத்திற்கு இன்று அடிமை ஆகிவிட்டது என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

bIG

மனிதச் செயலின் வீரிய உண்மை விஞ்ஞானத்திற்கு இன்று அடிமை ஆகிவிட்டது என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஆத்திச்சூடியில் ஔவையாரின் அரிச்சுவடியில் “இளமையில் கல்” என்பதன் பொருள் யாது…?

வளரக்கூடிய எண்ண உணர்வில் எதனை அறிவின் வளர்ச்சிக்குப் போதனையாக எதை வளர்க்கின்றோமோ அவ்வினையின் செயலே விதியாகும்.

நற்கதியைப் போதிக்கும் சுருக்கத்தை முன்னோர்கள் ஆறில் வளையாதது அறுபதில் வளையுமா…? என்று பல உண்மைதனை நமக்குப் போதித்தனர்.

காலையிலிருந்து இரவு வரை உணர்வின் எண்ணத்தின் வேகத்தை மனிதனின் செயல் அவரவர்களின் நிலைக்கொப்ப தொழிலாளர்களும் வியாபாரிகளும் மருத்துவம் விஞ்ஞானம் பலதரப்பட்ட செயல் முறை ஒவ்வொன்றிலுமே ஒன்றில் பழக்கப்பட்ட உணர்வின் எண்ண ஓட்ட செயல் முறையின் செயல் வளர்ச்சியே வலுவாக்கும் தன்மையாக உள்ளது.

அந்தந்த தொழிலின் வினைகளின் செயல் விதி என்ற தொடரில்தான் வாழ்க்கை அமைப்பின் ஆத்மாவாகி அவ்வாத்மாவின் மணமே செயலாகும் கதியில் மனித நிலை செயல் கொள்கின்றது.

இச்செயலின் நிலை யாவையுமே மனிதன் இன்று வரை
1.தன் விதியின் செயலைத் தெய்வத்தின் செயலாக
2.தனக்குத் தெய்வம் விதித்த விதி என்று தான் வாழுகின்றானே அன்றி
3.தான் எடுக்கும் எண்ணத்தின் வினைதான் விதியாக அமைகிறது என்றும்
4.எடுத்துக் கொண்டதற்கொப்ப அந்த விதியின் கதியே
5.நற்கதியாகவும் துர்கதியாகவும் வாழும் நிலை அமைகிறது என்பதனை உணரல் வேண்டும்.

இளமைக்கால அறிவின் வளர்ச்சியில் எண்ணத்தின் வினையை எவ்வினையின் செயலுக்குப் பக்குவப்படுத்தி… நம் குழந்தைகளை எப்படி வளர்க்கின்றோமோ அந்த விதியின் கதியின் தொடரில் தான் உணர்வெடுக்கும் எண்ணப்படி செயலாக்கும் முறையையும் வலுவாக்குகின்றோம்.

ஒவ்வொரு சிசுவின் ஆரம்பக்கால ஆத்மத் தொடர் முந்தைய ஜென்மத்தில் அவ்வுயிராத்மா எத்தொடரின் வலுக்கொண்ட ஆத்ம உயிரில் இருந்திருந்தாலும்
1.தாய் கர்ப்பத்தில் ஜீவிதம் கொள்ளும் காலத்தில்
2.உடல் கூறின் அமைப்பு பெறும் வளர்ச்சி நிலையில்
3.தாய் உணர்வின் எண்ண கதியின் ஜீவ ஓட்டத் தொடரில் ஜீவகாந்த சரீர ஒலி எடுக்கும் பொழுது
4.முந்தைய ஜென்ம நிலை யாவும் மறக்கும் நிலை ஆகின்றது.

தாய் எடுக்கும் உணர்வின் ஒலித்தொடர்பின் பிறப்பால்… பிறப்பின் செயலுக்கு எண்ணத்தின் உணர்வின் ஒலியின் அறிவை வளர்க்கும் பக்குவத்தால்… இஜ்ஜென்மத்தின் கதி மாறுகின்றது.

1.தெய்வத்தின் தொடர்பால் தொடர் பட்ட விதியல்ல மனிதனின் நிலை
2.தன் உணர்வின் எண்ணத்தால் ஏற்படுத்திக் கொண்ட செயலின் கதியின் ஓட்டம் தான்
3.இது நாள் வரை நாம் வாழும் வாழ்க்கை நிலை.

இவ்விதியை மதி கொண்ட நற்கதியில் சப்தரிஷிகளின் எண்ணமுடன் கலக்கும் நிலையாக நம் உணர்வின் எண்ண ஜீவகாந்த ஒளி கொண்டு உணர்ந்து பெறும் தொடர்பால் பல உண்மைகளை அறியலாம்… உணரலாம்.

அத்தகைய ஒளி கொண்ட உயர் சக்திகளின் செயலுடன் நம் செயலின் எண்ண ஓட்டம் அமைந்தால் விதியின் கதியே நற்கதியாய் நல் ஒளி பெறும் தன்மையாக அமையும்.

இதைப் பெறவல்ல நிலை எண்ணத்தின் உணர்வு கொண்ட மனிதச் செயலுக்குத்தான் உண்டு.

அதே போல் மண்டலக் கோள்களையும் தாவரங்களையும் ஜீவராசிகளையும் எதனையுமே…
1.தன் உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் ஒலி அலையின் முலாமின் தொடர்
2.இவ்வாத்மாவில் பதிவாக்கிக் கொள்ளும் செயல் மனிதனுக்கு மட்டும்தான் உண்டு.

ஆனால் மனிதச் செயலின் வீரிய உண்மை விஞ்ஞானத்திற்கு இன்று அடிமை ஆகிவிட்டது.

1.மெய் ஞானத்தின் வீரியத்தின் தன்மையோ…
2.அதைச் செயலாக்கும் மாமகரிஷிகளின் வளர்ச்சியால்
3.நாம் ஒவ்வொருவரும் செழுமை அடையலாம்.

Leave a Reply