மனிதன் என்ற உயர்ந்த வித்திலிருந்து… எடுக்க வேண்டிய பலன் எது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

self trust and confidance

மனிதன் என்ற உயர்ந்த வித்திலிருந்து… எடுக்க வேண்டிய பலன் எது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இயற்கையில் அமிலத்தின் ஒளி பெற்று மண்டலக் கோள்களின் ஈர்ப்பு வட்டத்தில் பூமியின் நட்சத்திரக் கோள்களின் அமில வளர்ச்சியால் உருவானது தான் இவ்வுயிர் ஆத்மாக்கள்.

அவை வளர்க்கக் கூடிய வளர்ச்சியும்… உருவான அந்தத் தொடர் நிலையின் வழித் தொடரில்தான் வளர்த்துக் கொள்ள முடியுமேயன்றி
1.வளர்ச்சித் தொடருக்கு எதிர்ப்பு நிலை ஏற்படும் பொழுது
2.வளர்ச்சியின் உருமாறக்கூடிய தன்மை தான் வளர்ப்பில் காண முடியும்.

நம் பூமியின் இயற்கைத் தன்மையின் ஜீவ வித்தின் பலன் நிலையே… மனிதனின் உயர் ஞான ஒளி சக்தி பெறக்கூடிய… “தெய்வ நிலை தான்…”

எந்த வித்தின் தொடரிலும்…
1.ஒரு பயிர் வளர்ந்து அதனின் பலன் தந்தாலும்…
2.அந்தத் தொடரின் மகசூல் பலவாகப் பெருகும் பக்குவத்தில்தான் பலவும் நடைபெறுகின்றன.

அத்தொடரின் தொடரில் தான்… ஆதி மனிதனின் உணர்வில் மனித உரு எண்ண வளர்ச்சி ஞானம் கொள்ளும் உயர்வு நிலை…. மனித வித்தின் உணர்வின் உயர் மண்டலமாம் பூமி மண்டலத்தில் உருவான மனிதச் செயல்.

இருந்தாலும் இதிலே மனிதன் வளர்ச்சி கொண்டு வாழும் காலம் மிகக் குறுகியதுதான்.

ஓர் விதையை நாம் விதைத்து… அந்த விதை வளர்ந்து செடியாகி.. மரமாகி… பக்குவம் பெற்றுப் பலனாய் அதனுடைய மகசூல் திரும்பிப் பெறக்கூடிய காலம் நீண்ட நாட்களாகி விடுகின்றது.

அதைப் போன்று தான் இப்பூமியும் வளர்ந்து வந்தது.

அதனுடைய வளர்ச்சியின் பக்குவ முதிர்வு நிலைக்குப் பிறகு… வளர்ச்சியின் பயனாய் மனித உணர்வின் உயர் ஞானம் கொண்டு செயல்பட்ட காலம்தான்… பூமி வித்தின் பலன் கண்ட காலம்…!

கண்ட பலனை… மீண்டும் பயிராக்கினால்தான் பலனின் தொடர் வளர்ந்து கொண்டே இருக்கும்.

ஓர் மரம் பலன் தரும் காலங்கள் முடிந்து… அம்மரத்தின் வளர்ச்சியை ஒத்து… மரத்தின் முதிர்வைக் கொண்டு பட்டுப் போன பிறகு… அம்மரத்தின் விதைகள் பல கோடியாய் வளர வைக்கக் கூடிய பயனை அம்மரம் தருகின்றது.

அப்படித் தந்ததை விரையமாக்காமல் வளர்க்கும் வளர்த் தொடர்ச்சியைப் போன்று தான்
1.இப்பூமியின் வித்தின் தொடரில் விதையான நம் ஆத்மாவும்
2.மீண்டும் பல வித்துக்களை வளர்க்கக்கூடிய விதையாகும் பக்குவத் தொடரில் வளர வேண்டும்.

மனிதனுடைய எண்ணத் தொடர் தன்னைத் தானே தான் உணர்ந்து… இயற்கையின் ஒலி ஒளித் தொடர் கொண்டு உயர் ஞானத்தை அறியும் உண்மைத் தத்துவ ஞானியாய் உயர்ந்திட வேண்டும்.

தன் ஆத்ம உயிரின் ஜீவ காந்த மின் தொடருக்கு…
1.இக்காற்றலையில் கலந்துள்ள மகரிஷிகளின் ஒளி அலைகளை
2.தன் உயர்வின் எண்ணத்தால் நுகர்ந்தெடுக்கும் தியான வழி கொண்டு
3.இஜ்ஜீவ ஒளியின் ஒளி நாதத்தால் மனிதன் தெய்வ நிலை பெற வேண்டும்.

Leave a Reply