கோழியை (கோடி) அறுத்துக் சாப்பிடுடா…! என்பார் குருநாதர் (கோழி என்று உச்சரித்தால் தெலுங்கில் “கோடி” என்று பொருள்)

cosmic power of gurudevar

கோழியை (கோடி) அறுத்துக் சாப்பிடுடா…! என்பார் குருநாதர் (கோழி என்று உச்சரித்தால் தெலுங்கில் “கோடி” என்று பொருள்)

 

கோடி… கோடி… கோடி.. என்கின்றபோது எங்கேயோ தோன்றிய நிலைகள் பேரண்டத்தில் இருந்த உணர்வுகளும் “கோடிக் கோடியாக…” மாறுகின்றது.

பல கோடிக்குள் மற்றதின் அணுக்கள் சேர்த்து
1.இன்று நாம் மனிதனாக வருவதற்குக் கோடியில்… கோடி
2.எத்தனையோ கோடியில் கோடி… கோடியில் கோடி… கோடியில் கோடி…!

இப்பொழுது எண்ணம் கொண்டு பேசுகிறோம் என்றால் இதைப் போல் வான் வீதியில் இருக்கக்கூடிய உணர்வுகள் தான் இங்கே (அந்தப் பேச்சாக) வருகின்றது.

இப்படி மனிதனுக்குள் அது பட்டபின் இதனின் நிலை தனக்குள் மாறுகின்றது என்பதனை உணர்வதற்குத்தான்
1.எனக்கு (ஞானகுரு) அடியைக் கொடுத்து
2.அடித்த அடியில் என்னைப் பிரமைப் பிடித்த மாதிரி ஆக்கி
3.அந்த வேகத்தில் விண்ணை நோக்கி ஏகச் சொன்னார் குருநாதர் (ஈஸ்வரபட்டர்)

அவர் என்னை நேரடியாக அடித்தார். உங்களுக்கு நான் சொல் அடி கொடுக்கின்றேன். இந்த உபதேசத்தின் உணர்வின் தன்மை உங்களுக்குள் ஆழமாகப் பதிந்தபின் இது சீதாராமா ஆக… அம்புகளாகப் பாய்கின்றது. இந்தச் சொல் உங்கள் உணர்வுகளைத் தூண்டுகின்றது.

கோடியில் கோடி… என்ற நிலைகளில் விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் எடுத்து அந்த உணர்வை ஒளியாக மாற்றிய குருநாதர்…
1.அவர் கண்டுணர்ந்த உணர்வை “அடி” (உதைத்து) மூலம் எனக்குக் கொடுத்து
2.உணர்வின் தன்மை என்னை அங்கே ஒன்றச் செய்து
3.விண்ணுலக உணர்வின் அளவுகோலை அறியும்படிச் செய்தார்.

அவர் அடிக்கும் அடி மூலம் எப்படி அவருடைய சக்தி உறைகின்றதோ இதைப் போன்றுதான் அந்த உணர்வின் தன்மை விண்ணின் ஆற்றலும்… அது உருவாகும் மாற்றமும்… மண்ணுலகில் வரப்படும்போது கோடிக் கோடிக் கோடி… என்ற நிலையில் வருவதைக் காட்டுகின்றார்.

இங்கே நீ இந்த கோழியை அறுத்துச் சாப்பிடுகிறாய். கோழியைச் சாப்பிட்டவுடன் நீயும் கோழியாகப் பிறப்பாய். ஆகவே… அந்தக் கோடியை நீ சாப்பிட்டால்… இந்தக் கோடியினுடைய நிலைகளை நீ வெல்வாய்…! என்பார்.

(ஞானகுரு தெலுங்கு பேசுபவர். தமிழில் கோழி என்று சொன்னால் அது தெலுங்கில் கோடி…! தமிழில் கோடி என்று சொன்னால் அது தெலுங்கில் கோழி..! இதை வைத்தே ஞானகுருவும் ஈஸ்வரபட்டரும் சொல் தொடரில் சூட்சமமாக இயற்கை உண்மைகளைப் பேசுகிறார்கள்)

நான் (ஞானகுரு) கோழி என்று சொல்லும்போது நீ இந்தக் கோழியை நீ அறுத்தாய் என்றால் நீ அடுத்தாற்படி கோழியாகப் பிறப்பாய். அப்படியென்று சொல்லிவிட்டு அந்தக் கோழி… “அந்தக் கோடிடா…!” என்பார்.

“அந்தக் கோடி…!” என்றால்…
1.சப்தரிஷி மண்டலங்களில் உள்ள பல கோடி உணர்வுகள்
2.கோடிக் கோடிக் கோடி… என்ற நிலைகளில் தீமையை அகற்றிய நிலைகள் கொண்டு
3.உயிருடன் ஒன்றி ஒளியாக இருக்கும் அந்தக் கோழிடா..
4.அதை அறுத்துச் சாப்பிடுடா…! என்கின்றார்.

குருநாதர் சும்மா சாதாரணமாகப் புரிய வைக்கவில்லை… இவ்வளவு தெளிவாகக் கொடுக்கின்றார்.

சாதாரண நிலைகள் உணவாக உட்கொள்ளும் நிலைகள் இருந்தாலும் அதை நீ… எதை… எப்படி உருவாக்க வேண்டும்…? என்ற நிலைகளை
1.நான் தெரிந்தோ தெரியாமலோ கேள்வி கேட்டாலும்
2.அந்த கேள்விக்குள்ளேயே கேள்வியைக் கேட்டு
3.கேள்வியின் உணர்வைக் கொண்டே பதிலையும் கொடுப்பார்.

அது எவ்வாறு இயக்குகின்றது…? நீயா…? அல்லது நானா…? ஆக நீ பேசுவது நீயா…? நான் பேசுவது நானா…? ஆக நான் என்பதற்கு எதுவாகின்றது…? என்பார் ஈஸ்வரபட்டர்.

எடுத்துக் கொண்ட உணர்வு உயிருடன் இயக்கத்தைக் கொண்டு வரும்போதுதான் “நான்…” இங்கே மைக்கிலே (MIC) பேசிய உணர்வின் தன்மை கொண்டு கரண்ட்டில் இயக்கப்படும்போது அந்தச் சொல்லின் தன்மையை அது இயக்கும்.

நம் உயிரின் ஓட்ட நிலைகளும் இதே போன்று தான். உணர்வுகள் எதுவோ அதைத் தான் உயிர் இயக்கும் என்ற இந்த நிலைகளையும்… மெய் ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையை அது எவ்வாறு…? என்ற நிலைகளையும்… பூமிக்குள் மண்ணாவதற்கும்… கல்லாவதற்கும்… வைரம் ஆவதற்கும்… “மூலம்” பல கோடி நிலைகளை இது விழுங்கியதுதான்…!

அந்த உணர்வின் தன்மை விளைந்து அதிலே தாவர இனங்களாக விளைந்து மனிதனுக்குள் எண்ணமாக வருவது என்றால் அது கோடி தான்… கோடி என்று இல்லாதபடி வேறு எதுவும் இல்லை.

இந்தக் கோழிக்கும் கோடிக்கும் வித்தியாசம் சொல்லின் தொடர்கள் எதுவாக இருப்பினும் அது பாஷையின் முறை கொண்டு அது வேறாக மாறினாலும் நான் கோடி என்கின்றேன் நீ கோழி என்கின்றாய் என்பார் குருநாதர்.

இதைப் போல விண்ணின் ஆற்றலை என்னை நேரடியாகவே நுகரும்படி செய்கிறார் குருநாதர்.
1.என் உடல் இங்கே இருக்கும்
2.குரு என்னை உதைத்ததும் அந்த உதைத்தத்ன் உணர்வுகள் அவரோடு ஒன்றும்
3.ஒன்றிய உணர்வுகளை அங்கே விண்வெளியில் பரப்பச் செய்வார்.
4.அந்தப் பரவிய உணர்வுகள் அங்கே அடையும்.
5.அடைந்த உணர்வுகள் என்னை அடித்த உணர்வுகள் கொண்டு இங்கே இழுக்கும்.
6.அப்படி இழுத்த உணர்வு கொண்டு தான் எனக்குள் விண்ணுலகை அறிவித்தார் ஈஸ்வரபட்டர்.

நீ யார்…? எப்படி வந்தாய்…? எந்தெந்த வழியில் எல்லாம் வந்தாய்…? என்று குருநாதர் கேட்டுவிட்டு கனவு காணுவது போல் காட்டுகின்றார்.

அணுவாகத் தோன்றி உயிரணுவாக (நீ) உன் உயிரே உண்டானது என்ற நிலைகளையும்… விண்ணிலே உயிர்கள் உண்டாகுவதற்கும் இதிலேயும்… பல கோடிக் கோடிக் கோடி… என்ற நிலைகளைப் பார்த்தால் “உயிரின் துடிப்பு” ஒன்றாக இருக்கும்.

எத்தனை கோடி உணர்வுகள் கலந்து.. உயிரின் துடிப்பிற்குள் இணைந்து… அது இயக்கமாக உருவாகின்றது…? என்ற நிலைகளும் ஒரு அணுவின் தன்மை மற்ற கோள்களின் நிலைகள் கலந்து வரப்படும்போது இந்த உணர்வின் தன்மை கோடி… கோடி… கோடி… கோடி… கோடி…

அந்தக் காரத்தின் உணர்வின் தன்மை எவ்வாறு ஆனது…? எத்தனை கோடி சேர்ந்து கசப்பாக மாறுகின்றது….? இதைப்போல சுவையின் உணர்வும் மணத்தின் நிலைகள் எது இணைந்ததோ அது மணமாக எப்படி மாற்றுகின்றது…? இவையெல்லாம் சேர்த்துத் தான் கோடி…கோடி…கோடி..! என்பது.

Leave a Reply