பறக்கும் யுகம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Kalki Flying state

பறக்கும் யுகம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

காட்சி:
நீரே பெரும் கடலாகத் தெரிந்தது. அதைப் பார்த்ததும் கடல் தான் பூமிக்கு முதல் நிலையா…? என்ற எண்ணம் தோன்றியது.

அந்த எண்ணத்திற்கு “இல்லை…!” என்ற சொல் ஒலித்தது. பிறகு வரிசையாக ஒலி ஒளி நீர் செடி கொடி புழு பூச்சிகள் தெரிந்து கடைசியில் மனித உருவமும் தெரிந்தது.

பிறகு இது எதுவும் நம் பூமிக்கு முதல் நிலையல்ல…! என்ற சொல் ஒலித்தது.

வானத்தில் கறுத்த மண் போன்ற… மண் என்பது கரியை இடித்த சாம்பல் போன்ற கறுப்பான சில மணங்கள் உருள்வதைப் போன்றும்… அதுவே கட்டியாகிச் சிறு சிறு வெண்மையான மின்னும் மணல்களைப் போன்றும்… கறுப்பு மணலிலிருந்து வெள்ளை மணல் தெரிந்தது.

அதன் பிறகு பல வண்ணங்கள் கொண்ட மண்கள் மண் வடிவம் போன்றும்… வெள்ளி தங்கம் போன்ற பல உலோக வண்ணங்கள் மாறி மாறித் தெரிந்தது.

அதன் பின் பச்சையான படிவக் கற்களும் அதற்கு உள் ஊடுருவலில் ஒளியான வைரப் படிமனின் ஒளியும் அப்படித் தெரிந்த படிவங்களிலிருந்து – அந்தந்தப் படிமன் வண்ண உலோகத்திலிருந்து ஆவியாக மேலே செல்வது போன்றும்… அந்தந்த ஆவி சுழல் ஒலியும்… அதிலிருந்து ஒளியும்… பிறகு அந்த ஒளி கடல் நீரின் மேல் மோதுவதைப் போன்றும்… அந்த நீரிலிருந்து பல திரவ வண்ண நீர்கள் தனித் தனியாக அந்தந்த இடங்களில் தெரிகின்றன.

பின்… பாதரசத் திரவமும் சில இடங்களில் பழுப்பு வண்ணம் போன்ற ஒரே திடமாக பூமியின் ஈர்ப்பில் கொதிப்பதைப் போன்றும் மாறி மாறித் தெரிகின்றது.

மனித எண்ண உணர்வு… (சரீரத்தின் சுவை) அறு சுவையை உணர்ந்து இச்சரீரச் சமைப்பின் சுவை ஏழாகி ஆத்ம வளர்ச்சிக்கு உரம் தருகின்றது.

“சூரியனின் சத்தை…” மற்றக் கோளங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி வெளிப்படுத்துவதை இந்தப் பூமி எடுத்து வளரும் வழிக்கு சூரியனின் அமிலச் சத்தை பூமி தனக்குகந்த சத்தாகப் பெறத் தன்னைத் தானே ஒலி கொண்டு ஒளி பெற்று எடுத்துக் கொள்கிறது.

பூமி வளர்த்த ஜீவ வளர்ப்புகளான உலோகங்களாகி… அத்திடத்திலிருந்து ஆவி மீண்டும் வெளிப்பட்டு…
ஆவி…
திடம்…
உராய்வு… என்று
மீண்டும் மீண்டும் ஆகித் தான் எல்லாமே வளர்ந்தது.

இப்படி… பூமி தான் பெற்ற வழித் தொடரிலிருந்தே வளர் தொடர் கொண்ட கனி வளங்களை (உலோகங்கள்) வளர்த்து
1.பல உன்னத உலோகங்களின் திரவக வளர்ப்பில் உயர் நிலை வளர்ப்பாகப் பல கோடி கோடி ஆண்டுகளாக வளர்த்து
2.அத்தொடரின் சத்தில் சத்தாக… உயர்ந்த சத்து குணம் கொண்ட மனித உருவங்கள் வளர்ந்து
3.எண்ணம் உணர்வு சுவை ஞானம் என்ற சக்தி பெறப் பெற்ற இந்த மனிதச் சரீரம் ஒவ்வொன்றிலுமே
4.ஆறாவது அறிவு கொண்ட மனித சக்தியின் உன்னதச் செயலை
5.ஏழாவது உயர் ஞான வளர்ச்சிக்கு வலுக் கூட்டினால்
6.கல்கி யுகம் என்ற பறக்கும் யுகத்தை நாம் உருவாக்க முடியும்.

Leave a Reply