வேண்டாதவர்கள் என்று பகைமையானால் நம் நல்ல குணங்களைக் காக்க எப்படித் தியானிக்க வேண்டும்…?

meditation techniques

வேண்டாதவர்கள் என்று பகைமையானால் நம் நல்ல குணங்களைக் காக்க எப்படித் தியானிக்க வேண்டும்…?

 

வெளியிலே பார்க்கும் பொழுது யாராவது வேண்டாதவர்கள் வந்தால் அவர்கள் உணர்வுகள் நமக்குள் பதிவாகி இருந்தால் எனக்கு இப்படிச் செய்தார்களே…! என்று எண்ணினால் போதும்.

இந்த நினைவலைகள் இந்தக் கண்ணின் நினைவாற்றல் அவர் உடலிலே நம் உணர்வு பதிவாகி இருப்பதால் அதைப் போய் உடனே எர்த் (EARTH) ஆகும்.

1.எப்படி ஒரு இராக்கெட்டை விண்ணிலே செலுத்தி
2.அதனுடன் தொடர் கொண்டு அதைத் தரையிலிருந்து இயக்குகின்றனரோ
3.அதைப் போல் நமக்கு வேண்டாதவர்கள் உணர்வுகளை நாம் எண்ணும் பொழுது உடனே அவர்களை இயக்குகின்றது.
4.அவர்களின் செயலாக்கங்களை இடைமறிக்கின்றது… அவருக்கு இடையூறு வருகின்றது.
5.அந்த அணுக்களின் தன்மை அங்கே வளர்ச்சி பெறுகின்றது… அதன் வழி அங்கே தடைப்படுத்துகின்றது.
6.அதே சமயத்தில் நம்முடைய நல்ல காரியங்களுக்கும் தடையாகின்றது.

பகைமை இல்லாது எதுவுமே நடப்பதில்லை…!
1.ஒரு பகைமை என்று வந்து விட்டால்
2.“உஷார்…” தன்மை கொண்டு
3.நல்லதைக் காக்கும் உணர்வை வளர்த்துவிட வேண்டும்.

மாறாக… பகைமை என்ற உணர்வு வந்தால் எனக்கு இப்படி நடக்கின்றதே…! என்ற எண்ணத்தை வளர்த்து விட்டால் அந்த உணர்வின் அணுக்கருக்கள் நமக்குள் விளைந்து நம் உடலில் நோயாக மாறுகின்றது. நம்முடைய எண்ணங்களும் சீர் கெடுகின்றது.

அதை மாற்ற வேண்டும் என்றால் அதிகாலையில் துருவ தியானத்தில் கொடுக்கும் ஆற்றலை நீங்கள் எண்ணி எடுத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை உங்களுக்குள் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

எப்பொழுது நம் மனம் சோர்வடைகின்றதோ அப்பொழுது அந்தச் சோர்வை விடாதபடி தடைப்படுத்த “ஈஸ்வரா…!” என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணிடல் வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் பெருக வேண்டும் எங்கள் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்திலும் அந்தச் சக்தி படர வேண்டும் என்று
1.கண்ணின் நினைவை நாம் உள் செலுத்த வேண்டும்.
2.அது தான் கண்ணன் கருவிலே இருக்கக்கூடிய குழந்தைக்கு உபதேசித்தான்…! என்று சொல்வது.

நாம் நுகர்ந்த உணர்வுகள் அது அணுக்களாக விளைகின்றது. நாம் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது அந்த உணர்வின் தன்மை நுகர்ந்து தான் அணுவின் தன்மை நமக்குள் உருவாகின்றது.

இப்படி அணுவாக உருவாக்கினாலும் அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நாங்கள் பெறவேண்டும் என்று வானை நோக்கி எண்ணி அந்த உணர்வை உயிருடன் ஒன்றி மீண்டும் நம் உடலுக்குள் எங்கள் இரத்த நாளங்களில் அந்த அணுக்கருக்கள் உருவாக வேண்டும் என்று செலுத்துதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் பரவி எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்களும் பெறவேண்டும் என்று
1.வெறும் வாயால்… மந்திரம் சொல்வது போல் சொல்லக் கூடாது
2.உங்கள் நினைவினை வானுக்குக் கொண்டு போய்
3.அங்கிருக்கும் துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டு… அதைக் கவர்ந்து..
4.உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கு அந்தச் சக்தி பெறவேண்டும் என்ற நினைவினை உள் பாய்ச்ச வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் வலுவாக்கிக் கொண்ட பின் அடுத்து என்ன செய்ய வேண்டும்.

மற்றவர்களுக்கும் (பகைமையானவர்கள்) அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்ற உணர்வினை நமக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்படி எடுத்து விட்டால் இந்த நினைவு உடனே அங்கே அவர்களுக்கும் செல்கிறது. அதே சமயத்தில் அந்த உணர்வின் துணை கொண்டு
1.மகரிஷிகளின் உணர்வுகள் இங்கே நமக்குள் வளம் பெறுகின்றது.
2.அப்பொழுது நமக்குள் வரும் அந்த வேண்டாத சக்தி இங்கே தடைப்படுத்துகின்றது.
3.நம் காரியங்கள் நல்லதாகின்றது.

இது எல்லாம் நமக்குள் ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும்.

Leave a Reply