ஆண் ஆணாகவும் பெண் பெண்ணாகவும் தான் மீண்டும் மீண்டும் பிறப்பு எய்துகிறார்களா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

SIVASAKTHI VINAYAGA

ஆண் ஆணாகவும் பெண் பெண்ணாகவும் தான் மீண்டும் மீண்டும் பிறப்பு எய்துகிறார்களா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

தாய் தந்தையரின் அன்பில் உருவாக்கப்பட்டு அறிவின் ஞானமும் நல்லொழுக்க உயர் மகனாக வளர்க்கப்பட்ட தன் மகனுக்கு அவனது வளர்ச்சியின் வம்சம் வளர பெண்மையின் சக்தி கூடி தன் மகனின் வாழ்க்கையின் நிறைவில் தாய் தந்தையர் பூரிப்பு காண்கின்றனர்.

1.பெண்மை எது ஆண்மை எது..?
2.உயர் சக்தியின் தன்மை எது…?
3.படைப்பின் படைப்பில் முன் ஜென்மத் தொடர் அறியும் முறையில் ஆரம்ப வளர்ச்சி முறைதான் வளர்ந்ததா…?
4.பெண்ணாகப் பிறவி எடுத்து முற்பிறவி இப்பிறவி எப்பிறப்பிலும் பெண்ணாகவும்
5.ஆண் ஆணாகவும் தான் பிறவி எடுக்கின்றனரா…?
6.பிறவியின் தொடர் வழிப்படும் முறை என்ன…?

பின்னிப் பின்னி வரும் தொடர் வளர்ச்சி நிலையில் ஆவியாகி பிம்பமாகி மீண்டும் ஆவியாகி பிம்பமாகும் வழித் தொடர்தான் இயற்கையின் நியதி.

ஓர் ஆத்மா பிறப்பெடுத்து அப்பிறவி மாறி ஆவியான நிலையில் அந்த ஆவியின் உணர்வு அமில குணத்தின் ஈர்ப்பு எண்ணம் ஆண் உணர்வுடன் ஆணின் ஈர்ப்பில் அந்த உயிர் ஆவி சிக்குகிறது என்று வைத்துக் கொள்வோம்.

ஆக அந்த ஆண்மைக்குகந்த அமிலத்துடன் கலக்கப் பெற்று அவ்வீர்ப்பின் வித்தாக ஜீவன் கொள்ளும் ஜீவக் கருவிற்கு ஆண் வித்தின் அமில ஈர்ப்பின் வீரிய குணமுடன் பெண்ணின் ஆவி உயிர் சென்றிருந்தாலும் சரி.. அல்லது ஆணின் ஜீவ பிம்பமுடன் உள்ளவரின் உயிர் சென்றிருந்தாலும் சரி…!

அந்த ஆண் மகனின் அவ்வமில வித்தின் ஜீவ சக்தி அதிகமாக வளர்க்கும் அமில வளர்ச்சி உதிரமுடன் உருவாகும் நிலையிருந்தால்
1.முன் ஜென்ம பெண் ஆவி உயிரே
2.இவ் ஆணின் ஈர்ப்பில் சிக்கி
3.ஆண் உயிர் வித்தாக பெண் அமிலச் சேர்க்கையில் ஜீவன் கொள்கின்றது.

வாழ்ந்த நாளில் மகன் மகள் சகோதரன் சகோதரி இப்படிப் பந்தபாசத்தில் உள்ளவரும் எண்ணத்தில் ஒரு நிலையான உணர்வு நிலையில் ஆண் சுவாசமுடன் ஆணின் உடலில் ஏறும் எவ்வுயிர் அணுவாக இருந்தாலும்
1.ஆண் பெண் என்ற நிலை மாறி இவ்வீர்ப்பிற்கு வந்த நிலையில்
2.ஆணின் உதிர அமில ஜீவ சக்தியின் வளர்ச்சிகொப்ப ஆணாகவும் பெண்ணாகவும்
3.ஜீவிதம் கொண்ட பிறப்பெடுக்க முடிகின்றது.

இந்நிலை கொண்டு தான் பெண்ணின் ஈர்ப்பிற்கு வரும் ஆண் பெண் என்ற எவ்வாவி உயிரணுவாக இருந்தாலும் இப்பெண்ணின் ஈர்ப்பின் வீரியம் கொண்ட உணர்வு எண்ணமுடன் அவ்வுடலின் ஈர்ப்பில் சிக்குண்டுள்ள அவ்வாவி உயிர் அணு என்ன செய்யும்…?

பெண் ஆண் என்ற தன் உணர்வு மாறி எந்தத் தாயின் ஈர்ப்பில் வளர்ச்சிக்கு வந்ததோ அதன் நிலையினால் பெண் ஆண் என்ற முந்தைய ஜென்ம முறை
1.ஒவ்வொரு ஜென்ம நிலையிலும் இவ்வீர்ப்பு ஜெனன உணர்வு நாளில்
2.இவ் ஆண் பெண்ணின் உணர்வு ஜீவித ஈர்ப்பு வளர்ச்சி அதிகம் கொண்டவர்களின் அமில நிலைக்கொப்ப
3.பெண் கருவாகவும் ஆண் கருவாகவும் அவதரிக்கும் நாளில்
4.ஆண் பெண்ணின் ஜீவ உயிரணு ஈர்ப்பின் விகித நிலைக்கொப்பத்தான்
5.அஜ்ஜீவன் ஆணாகவும் பெண்ணாகவும் உருவாகின்றது.

முந்தைய கால உணர்வு எண்ணமானது ஆவி உயிரணுவின் நிலையில் உருவாகும் ஜீவ சக்தி கரு வளர்ச்சி நாளில் தான் ஒவ்வொரு ஜென்மக் கருவும் ஆண் பெண் என்ற உருவ நிலை கொள்கின்றது.

ஆணின் உணர்வு எண்ண அமிலமும் பெண்ணின் உணர்வு எண்ண அமிலமும் மாறு கொள்கின்றது. பெண்ணின் உடலில் உருவாகும் ஜீவ சக்திக்கு உயிரணுக்களின் வளர்ச்சியை வளர்க்கும் ஈர்ப்புக் குண ஜீவ சக்தி அதிகமுண்டு.

எவ்வுடலின்… எவ்வமில ஜீவித உணர்வு உயிரணு வளர்க்கும் தன்மை அதிகமுள்ளதோ… அவ்வீர்ப்பின் நிலைக்கொப்ப பெண் ஆண் என்ற உருவ பிம்ப உணர்வு ஜீவ கரு உருவாகின்றது.

மனிதனின் ஜீவ கரு உயிரணுவின் வளர்ச்சித் தன்மை கொண்ட இனத் தாவரங்கள் சில உண்டு. மனிதனின் ஜீவ சக்திக்கு உகந்த சக்தி குணம் மாங்கனிக்கு உண்டு.

மாங்கனியின் கொட்டையை அம்மரத்தின் கனி எவ்வளவு சுவையாக இருந்தாலும் அம்மரத்தின் கொட்டைய நாம் பயிர் செய்தால் அம்மரம் விட்ட கொட்டையில் வளர்த்த மரத்தின் கனியின் சுவையை உண்டு பார்த்தால் “தாய் மரத்தின் கனிச் சுவை சேய் மரத்தின் கனிச் சுவைக்கு இருக்காது…”

தாய் மரத்தின் கொட்டையை எடுத்து வளர்க்க விட்டு அவ்வளர்த்த வித்துச் செடியுடன் தாய் மரத்தின் கிளையை ஒட்டுச் சேர்த்து ஒட்டு மரமாக வளரும் மாங்கனியின் சுவை தாய் மரத்தின் கனியைக் காட்டிலும் சேய் மரத்தின் தாய் மரத்துடன் ஒட்டுச் சேர்த்து வளர்த்த கனியின் சுவை தாய் மரத்தின் சுவையைக் காட்டிலும் நற்சுவையாக இருக்கும்.

ஒன்றின் துணை கொண்டு ஒன்றாக உருவாகும் உணர்வின் எண்ண ஈர்ப்பு நிலைக்கொப்பத்தான் ஆண் பெண் என்ற நிலை உருவாகி வளர்கின்றதப்பா…!

1.வளர்ப்பின் வளர்ப்பாகி…
2.ஆவியாகி பிம்பமாகி ஆவியாகும் செயல் சுழற்சியின்
3.ஈர்ப்பின் உணர்வு உயர் நிலை வளரும் நிலைக்கொப்பத்தான்
4.வளர்ச்சியின் தொடர் வளர்ச்சி… வளரும் ஈர்ப்புத் தன்மை உருவாகின்றது.

Leave a Reply